பின்பற்றுபவர்கள்

14 நவம்பர், 2008

உயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் !

இல்லாத ஒன்று தமிழர்களை / இந்தியர்களைப் பிரித்துப் போட்டு எத்தனை பாடாய் படுத்துகிறது. சாதியைத் தான் சொல்கிறேன். உடலில் எந்த பாகம் சாதியைக் குறிக்கிறது என்று யாரவது சொல்ல முடியுமா ? அப்படி ஒரு பாகம் இல்லாததாலேயே எங்கள் சாதி இதுதான் என்று காட்ட வெளி அடையளமாக 8 ஆம் நம்பர் நூலை வாங்கி குறுக்காகச் சுற்றிக் கொள்கிறது ஒரு கும்பல். பெரியார் ஏன் அவற்றை அறுக்கச் சொன்னார், அறுப்பது தேவைதானா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள், ஊருக்குள் அனைவரும் அமைதியாக வாழ ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் 'என் மனைவி ஒழுக்கமானவள்' என்று எழுதிவைத்தக் கதைதான் சாதி.

பார்பனரை மட்டுமே சாதிவெறியாக சித்தரிக்கும் முற்போக்கு வாதிகள் (வாந்தி முன்னால் வருவதால் முற்போக்கு, பேதி பின்னால் வருவதால் பிற்போக்கு என்று சொல்லலாம் போல) தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் எப்போதாவது கண்டிப்பது உண்டா என்று பார்த்தால் மிக மிகக் குறைவுதான். இத்தனைக்கும் வெளிப்படையான கலவரங்களை பார்பனர்கள் நடத்துவது கிடையாது, பஸ் எரிப்புகளை பார்பனர்கள் நடத்துவது கிடையாது. ஆனால் இவையெல்லாம் நடக்கும் போது அதை நேரிடையாக கண்டிக்காமல் 'பார்பனர்களின் வருண அடுக்கு முறைதான்' இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது போலவும் அதுவும் அரை மணி நேரத்திற்கு முன்பு வந்த கடைசி செய்தி வழியாக அறிந்து கொண்டது போலவும் மூன்று பக்கத்திற்கு மனுவிலிருந்து தொடங்கி ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் வரையில் கொண்டு வந்து முடிப்பார்கள். ஐயா இவையெல்லாம் கடைக்கோடி தமிழனுக்கும் தெரிந்து நாறிப் போன வரலாறு, இதையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தால் தேவன் திருந்திடுவானா ? நினைத்துப் பாருங்கள்.

இவைதான் காரணம் என்பது ஏற்கனவே தெரிநத்து தானே. கிரிமி எப்படி தோன்றியது என்கிற ஆராய்ச்சியைவிட நோய்கண்டவர்களை குணப்படுத்துங்கள் ஐயா. எய்ட்ஸ் குரங்கிலிருந்து வந்தது என்று சொல்வது எய்ட்ஸ்க்கான தீர்வு அல்ல. மாற்று மருந்து அதுதான் தீர்வு. சமூகம் கெட்டு நாற்றமடிப்பதை இன்னும் எத்தனை காலத்துக்கு பார்பன சதி என்றும்...வருண அடுக்கைச் சுட்டிக் காட்டி பேசுவதையும் வைத்து மறைத்துவிட முடியுமா ? ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களில் பெரிய ஈடுபாடு வைத்து குண்டுவைக்கப் போகும் அளவுக்கு தமிழகத்தில் வெறியுடன் இருப்பவர்களில் பார்பனர்கள் யாரும் இல்லை என்பதை நம்புங்கள்.

சாதி வெறி எடுத்து சமூகத்தை சீர்கெடுக்கும் அனைத்து சாதிகளையும் அதே சாதிப் பெயரை வைத்தே சாடுங்கள். 'பார்பன பண்ணாடையே' என்று எழுதத் துணிபவர்கள் எவருமே 'தேவர் சாதி வெறியர்களே நிறுத்துங்கள், 'வன்னிய சாதிவெறியர்களே நிறுத்துக்கங்க...' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுத முன்வராதை நினைக்கும் போது முற்போக்கு என்ற பேச்செல்லாம் ஒவ்வாமையால் வந்த வாந்தியோ என்றே நினைக்கத்தோன்றுகிறது. சாதி வெறிகளையெல்லாம் 'பார்ப்பனியம்' என்ற சொல்லில் அடக்கியது தவிர்த்து சாதிமறுப்புப் போராட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணும்.

இதோ இன்றைக்கு சட்டக்கல்லூரியில் தேவர் சாதி மாணவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் ஆளுக்கு நான்கு கட்டுரைகளை எழுதுவதுடன் இவர்களது சாதிமறுப்பும் முடிந்து போகிறது.

அந்த கொடூர மாணவர்கள் நடத்தியது வெறும் தாக்குதலோ, கொலைவெறி மட்டுமேயன்று, சாதிமேலாண்மையை அழிக்கவே முடியாது என்ற அறைகூவல் தான். மாணவர்கள் இடையேயிலும் இத்தகைய சாதிவெறி அதுவும் சாதிவெறியால் கூனிக் குறுகிமேலெழுந்த அண்ணல் அம்பேத்கார் என்னும் மாமேதையின் பெயரிலான கல்லூரியில் இத்தகைய கொடுமை. இவையெல்லாம் வெறும் மாணவர்களுக்கிடையேயான சண்டை மாட்டும் தானா ? புறையோடிப்போன சாதித் திமிரால் சிலிர்த்த மயிரில் ஒன்று தான் அது. இன்னும் கோரப்பற்களும், கூரிய நகங்களும், ரத்தம் குடிக்கத் துடிக்கும் நாக்கும் கண்டு கொள்ளப்படமலேயே இருக்கிறது. ஆனால் முற்போக்காளர்களின் கண்களில் தெரிவதும் வெறும் உச்சிக் குடுமி மட்டும்தான்.

சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள். சாதிவெறியால் அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அந்தந்த சாதிசங்களிடம் அதற்குண்டான ஈட்டுத்தொகைகள் வசூலிக்கப்பட்டால் எவனாவது துணிந்து பேருந்தை கொளுத்துவானா ?

40 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

//சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள்//

வழி மொழிகிறேன்!

நையாண்டி நைனா சொன்னது…

இதுவரைக்கும் பழம் பெருமை பேசி... பேசி... ஜாதி மத வேறுபாடுகள் இல்லாது இந்த நாட்டுக்காக உழைத்த தலைவர்களையும் வெறும் ஜா(டி)திக்குள் அடைக்கும் அறிவு கெட்ட செயல் ஓய வேண்டும்...

வால்பையன் சொன்னது…

இதை தான் நானும் ரொம்ப நாளாக கூவி கொண்டிருக்கிறேன்.

பார்பனீயத்தை எதிர்க்க ஆரம்பித்து நல்லது தான். ஆனால் இன்று பார்பனியத்திலிருந்து பெரும்பாலான பார்பனர்கள் விலகிவிட்டார்கள் என்பது தான் உண்மை.

இன்று சாதி வெறி பிடித்து திரியும் வெறியர்களே உண்மையான பார்பனர்கள்.

த்மொழகத்தில் சில நாட்களாக சாதி கலவரம் அதிகமாகி கொண்டிருக்கிறது,
இதன் பின்னால் இருக்கும் சக்திகளை கூண்டோடு அறுக்க வேண்டும். முடியாவிட்டால் ராஜினாமா பண்ணிவிட்டு தூங்கலாம்.

தருமி சொன்னது…

//சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள்//

நானும் வழி மொழிகிறேன்!


இதைப் பற்றிய என் பதிவுகள்:
http://dharumi.blogspot.com/2006/08/174-if-i-were.html


http://dharumi.blogspot.com/2006/12/194-lets-hit-nail.html

உறையூர்காரன் சொன்னது…

கோவி,

உங்களது உணர்வுகளில் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். தேவர் ஜெயந்தியை சட்டக் கல்லூரியில் அதுவும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டு கொண்டாடவேண்டிய அவசியம் என்னவென்றுதான் புரியவில்லை. பிரச்சினையின் மூலக் காரணம் அதுதான்.

உங்கள் கூற்றுப்படி பார்ப்பனர்களிடம் இப்போதல்லாம் சாதிவெறி (வெளிப்படையாக) காணப்படுவதில்லை. அவர்கள் வெளிப்படையான மதவெறிக்கு மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. தமிகத்தில் RSS இயக்கத்தில் சேர்ந்து குண்டு வைப்பவன் யாரும் பார்ப்பனன் இல்லைதான். ஆனால் அவர்கள் பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் இராம கோபாலன்கள், இல. கணேசன்கள் யார்?. மாலேகான் குண்டுவெடிப்பில் நேரடியாக ஈடுபட்ட பிரக்யா சிங், ராம்ஜி ஆகியவர்கள் பார்ப்பனர்கள் இல்லைதான். ஆனால் அதற்கு பின்னால் இருந்தவர்கள் என்று கைது செய்யப்பட்டிருக்கும் சிரிகாந்து புரோகித், குல்கர்னி, உபாத்யா, தயானந்த் பாண்டே ஆகியோர் பார்ப்பனர்கள்தானே!

தேவர், பிள்ளை, வன்னியர், கவுண்டர் ஆகிய சாதியினரின் சாதிவெறி கண்டிக்கப்படவேண்டியது போலவே பார்ப்பனர்கள் மதவெறியும் கண்டிக்கப்படவேண்டியதுதான். சாதிவெறியால் பாதிக்கப்படும் அப்பாவி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மதவெறியால் பாதிக்கப்படும் அப்பாவி இஸ்லாமியர்/கிறிஸ்தவர்களுக்கும் வலி என்பது ஒன்றுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said...
கோவி,

உங்களது உணர்வுகளில் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன்.
//

உறையூர்காரன்,

இந்த பதிவில் பார்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அவர்களை மட்டுமே குறைசொல்வது மட்டுமே சாதிமறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மதவெறிபற்றி பேசும் போது அதுபற்றி பேசுவோம்.

தமிழ் ஓவியா சொன்னது…

//'பார்பன பண்ணாடையே' என்று எழுதத் துணிபவர்கள் எவருமே 'தேவர் சாதி வெறியர்களே நிறுத்துங்கள், 'வன்னிய சாதிவெறியர்களே நிறுத்துக்கங்க...' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுத முன்வராதை நினைக்கும் போது முற்போக்கு என்ற பேச்செல்லாம் ஒவ்வாமையால் வந்த வாந்தியோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.//

சாதிவெறியர்கள் யாராயிருந்தாலும் அவர்களை தயவு தாட்சணியமின்றி கண்டித்துவந்திருக்கிறது பெரியார்
இயக்கம்.

இம்மானுவேல்சேகரன் படுகொலை செய்யப்பட்ட போது தேவரை கைது செய்யச் சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே.

தாழ்த்தப்பட்டவர்களும் பிறபடுத்தப்பட்டவர்களும் ஒற்றுமையாக இருந்து பொது எதிரியை முறியடிக்க வேண்டும்.

இது குறித்து பெரியாரின் கருத்து உற்று நோக்கக் கூடியது. பெரியாரின் கருத்தை அப்படியே தருகிறேன். ஊண்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

"மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல; பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல.

இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றி இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ, அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், லட்சியங்களைக் கடைப்பிடித்தார்.

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்...

நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள்.

ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும்.

இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.

இப்படிப்பட்ட நாம், இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.

உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு.

அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்:

‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல' என்றும்! இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும்.

நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை.

இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.

பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை.

ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள்.

அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை - அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம்.

அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

--------------புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.


படியுங்கள்,சிந்தியுங்கள்.

நன்றி.

Dr.Rudhran சொன்னது…

பார்ப்பணர் என பிறப்பால் ஆனவர்கல் பலர் எனக்கு மிக நெருக்கம். ஆனால் ‍
பார்ப்பணீய வெறியால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
i am not comfortable in typing this tamilish style. what i want to say is..devar mudaliar pillai and any or all who use those cheap suffixes are all equally horrible. but brahmins by their silent scorn and sadistic approach to communal clashes are certainly more treacherous.

VIKNESHWARAN சொன்னது…

அந்த வீடியோவில் நடந்ததை பார்க்கையில் மனம் ஒரு கனம் கனத்து போனது...

ஜாதி ஒருபுரம் இருந்தாலும்... கூடவே மனித நேயமும் செத்துபோய்டுமா கோவியாரே... நாகரிகம் அடையாத ஆதிகால மனிதன் கூட தான் வேட்டையாட விரும்பும் மிருகத்தை அந்த அடி அடிக்க மாட்டான் போல...

balachandar muruganantham சொன்னது…

நெஞ்சு பொருக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;

கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!

காக்க மறந்த காவலர்களே! --உங்கள்
மனிதாபிமானம் எங்கு போனது! காற்றிலா?
அஞ்சி யஞ்சிக் கடமையை மறந்தீர்கள் --ஒரு
நிமிடம் நீங்கள் நினைத்திருந்தால் எல்லாம்
தலை கீழாகி மாறியிருக்குமே! --மாணவன்
கட்டையின் முன் உங்களது லத்தி செல்லுமா!
நெஞ்சு பொருக்கு தில்லையே --கடமை
செய்ய தவறிய காவலர்களை நினைந்துவிட்டால்.

விழியில் பார்த்தேன். நெஞ்சம் பதரியது --ஒரு
நொடி, இருந்தாலும் என்ன பயன்? பயந்து
நடுங்கி வேடிக்கை பார்த்தவர்களும் --இந்த
சமுதாயத்தில் இருக்கின்றனரே! அஞ்சி யஞ்சி
வாழ்பவர். வாழ்ந்து கொண்டே இருப்பர்.
அதர்மம் தலைவிரித்து ஆடட்டும் -- தமிழ்
நாட்டில் சாதி என்று ஒழியோமோ?...தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!

பெயரில்லா சொன்னது…

test

பெயரில்லா சொன்னது…

என்று ஒருவன் தான் இந்த சாதி என்று சொல்ல வெட்கப்படுகிறானோ அன்று தான் சாதி வெறி முற்றிலும் ஒழியும். ஆனால் அது நிகழவே சாத்தியமில்லாத ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

சாதியின் அடிப்படையில் இடஒதிக்கீடு அன்ற கேவலமான இரு விடயம் என்று இந்த நாட்டை விட்டு நாம் ஒழிக்கிறோமோ அன்று தான் மேற்கூரிய விடயம் சாத்தியமாகும். ஆனால் இங்கு எவருக்கும் சாதி அடிப்படையிலான இடஒதிக்கீட்டை ஒழித்திட துணிவு இல்லை.. அதற்கு காரணம், ஓட்டு வங்கி..

இன்று செல்வி ஜெயலலித்தாவும், தளபதி ஸ்டாலினும், அண்ணாச்சி சரத்குமாரும்.. ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னுக்கு படையெடுக்க காரணம் ஓட்டு வங்கி தானே??

அதே ஓட்டு வங்கி தானே மரம் வெட்டி பிளைப்பு நடத்தியரோயும், காடுவெட்டிகளும் இன்றுள்ள நிலைக்கு காரணம்??

என்று இந்த ஓட்டு வங்கி பாலிடிக்ஸ் ஒழிகிறதோ அன்று தான் மேற் கூரியவை
நடக்கும்..

ஓட்டு வங்கி பாலிடிக்ஸை எப்படி ஒழிப்பது???
முதலில் ஓட்டு விகிதம் அதிகரிக்க வேண்டும்.. அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. ஓட்டு போடாதவர் குடும்பத்திற்கு மின்சாரம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அனைத்தும் ரத்து செய்யவேண்டும்.. நாட்டின் மேல் அக்கறை இல்லாதவருக்கு இல்லாத குடும்பத்துக்கு இவை எல்லாம் தேவையே இல்லை..
இன்று நாட்டைப் பற்றி வாய்கிழிய பேசும் / எழுதும் பெரும்பாலோர் (வலைப்பதிவர்கள் உட்பட) கடந்த தேர்தலில் ஓட்டு போட்டீர்களா?? அலுவலகத்தில் விடுப்பு இல்லை.. நான் வேறு ஊரில் இருக்கிறேன், எனக்கு ஓட்டு என் ஊரில் உள்ளது, அங்கு செல்லவே 2 நாள் ஆகும். அலுவலகத்தில் லீவு தரமாட்டார்கள்.. இது தானே உங்கள் சால்சாப்பு?? ஒரு நாள் கூத்து தீபாவளிக்கு 90நாட்கள் முன் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவில்லையா நீங்கள்?? 5 ஆண்டு உங்கள் தலைஎழுத்தையே நிர்ணயிக்கப் போகும் தேர்தல் பற்றி உங்களுக்கு கவலை இல்லை.. பின்னர் அது சரி இல்லை.. இது குத்தம் என்று குறை கூற உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது???

2 நாட்களுக்கு முன் சென்னையிலும், நேற்று மதுரை/திருச்சியிலும் அரங்கேறிய வன்முறை களியாட்டங்கள் அனைத்தும் உன்கூட்டியே திட்டமிடபட்டவையே என்று இன்று அலறும் ஊடகங்களும் செய்தி தரும் காவல்துறையும் அன்று என்ன கிளித்துக்கொடிருந்தது??

சாதி ஒழிய வேண்டுமென்றால் ஓட்டு வங்கி பாலிடிக்ஸ் ஒழிய வேண்டும்.. அதற்கு அனைவரும் ஓட்டு போட முன்வர வேண்டும்.. இல்லையேல் எந்த கொம்பனாலும் ஒரு மயி__ புடு__ முடியாது..

Dharan சொன்னது…

//சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள்.//

முதல் செருப்பை பதிவுலகின் மூத்தவர் மீது வீசலாமா???.

நீங்கள் வழக்கம் போல் எல்லாருக்கும் நல்லவர் என்கிற வகையில் இந்த பின்னூட்டத்தை அனுமதிக்காவிட்டால், உங்களின் பதிவிற்கான நோக்கத்திற்கு அர்த்தமேயில்லை.


//சாதி வெறி எடுத்து சமூகத்தை சீர்கெடுக்கும் அனைத்து சாதிகளையும் அதே சாதிப் பெயரை வைத்தே சாடுங்கள். 'பார்பன பண்ணாடையே' என்று எழுதத் துணிபவர்கள் எவருமே 'தேவர் சாதி வெறியர்களே நிறுத்துங்கள், 'வன்னிய சாதிவெறியர்களே நிறுத்துக்கங்க...' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுத முன்வராதை நினைக்கும் போது//

இதையெல்லாம் எழுதி 1 வருடமாகப்போவது.

http://manamaay.blogspot.com/2008/01/blog-post_10.html

இப்போ ஏண்டா எழுதல என்று கேட்டால், ஒரு புண்ணாக்கும் பிரயோசனமும் இல்லை என்பதினால்.

குடிமகன் சொன்னது…

//பார்ப்பணர் என பிறப்பால் ஆனவர்கல் பலர் எனக்கு மிக நெருக்கம். ஆனால் ‍
பார்ப்பணீய வெறியால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
i am not comfortable in typing this tamilish style. what i want to say is..devar mudaliar pillai and any or all who use those cheap suffixes are all equally horrible. but brahmins by their silent scorn and sadistic approach to communal clashes are certainly more treacherous. //

இதை நான் 100% ஆமோதிக்கிறேன் ..

தேவர் ..வன்னியர் ஜாதி வெறி என்பது ..வெறும் உணர்ச்சி வசப்படுதல் மட்டுமே...ஒரு கன்னத்தில் அறைந்தால் ..திருப்பி ஒரு அறை விட்டு அன்றே கணக்கை முடித்து விடுவது..

ஆனால் பார்ப்பணீய வெறி என்பது ஒரு கன்னத்தில் அறைந்தால் அன்று ஒன்றும் செய்யாமல்...அவன் வம்சத்தையே வளர விடாமல் அழிப்பது ...

உணர்ச்சி போராட்டத்தை ....ஆதிக்க வெறியோடு ..ஒன்று படுத்தி பாக்காதீங்க ..

ILA சொன்னது…

//புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.//
1959க்கும் 2008க்கும் நெறைய வித்தியாசம் இருக்குங்க. அந்தக் கருத்துக்கள் காலத்துக்கு ஏத்த மாதிரி மாற்றப் படவேண்டியவை.

Jeeves சொன்னது…

//சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள். சாதிவெறியால் அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அந்தந்த சாதிசங்களிடம் அதற்குண்டான ஈட்டுத்தொகைகள் வசூலிக்கப்பட்டால் எவனாவது துணிந்து பேருந்தை கொளுத்துவானா ?//

அண்ணே கனவு நல்லா காண்கிறீங்க. நினைவாக அரசியல் வியாதிகள் விடாதுண்ணே

//பார்பனரை மட்டுமே சாதிவெறியாக சித்தரிக்கும் முற்போக்கு வாதிகள் (வாந்தி முன்னால் வருவதால் முற்போக்கு, பேதி பின்னால் வருவதால் பிற்போக்கு என்று சொல்லலாம் போல) தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் எப்போதாவது கண்டிப்பது உண்டா என்று பார்த்தால் மிக மிகக் குறைவுதான்//

காரணம் உண்டுண்ணே, இவங்க எல்லாருமே எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், கூடவே எண்ணிக்கையில் அதிகம். மேற்சொன்ன மாதிரி திட்டி போட்டாங்கண்ணா அம்புட்டுதேன் அறுத்திடுவானுங்க.

இது தான் நிதர்சனம்.

இரண்டாயிரம் வருஷம் மூனாயிரம்னு பழிய மத்தவங்க மேல தூக்கிப் போடத்தான் நம்மாளுகளுக்குத் தெரியுமேத் தவிர வேற ஒரு மட்டையும் புடுங்க மாட்டாய்ங்க.

உண்மையைச் சொல்லனும்னா இவனுங்களைத் தூண்டி விடறதே சாதி எதிர்ப்புன்னு அடிச்சிகிடுதானுங்களே அவனுங்களாய்த்தான் இருக்கும். இல்லாட்டா இவங்களோட அடுத்த வேலைக்கு என்ன செய்யப் போறதுன்னு தெரியாம திண்டாடுவாய்ங்க. இவங்களைப் பத்தி ஏற்கனவே ஒரு பாட்டு உண்டுண்ணே

" இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி "

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!
//

பாரதி பிறந்தாலும் வேலைக்கு ஆகாது, ஏனென்றால் பார்பன சங்க வரவேற்பு அறையில் பாரதி படம் தான் இருக்கிறது.

மக்கள் தலைவர்களையெல்லாம் சாதி பிரதிநிதி ஆக்கிட்டாங்க, அண்ணா முதலியார் சங்கத்தலைவர், வாஉசி வெள்ளாள சங்க தலைவர் :(

TBCD சொன்னது…

வர வர இணைய உலகின் ஞானியாக மாறிக்கிட்டு இருக்கீங்க..

அவர்கள் முதலில் ஏற்படுத்திய/பலபடுத்திய/திடப்படுத்திய சாதி பிரச்சனை இன்னும் உயிரை வாங்கிக்கொண்டு இருக்கு...அதை நாம் கவணிக்கலாம் என்றால், அதற்குள் அடுத்த தலைமுறைக்கு "மதவெறியயை" ஊட்டி வளர்க்கிறார்கள்..

ஒன்றை விட்டுவிட்டு, மற்றொன்றை நாம் கவணிக்க முடியாது..

எண்ணிக்கையில் சொற்பளவில் இருந்துக்கொண்டு "சோ"மாதிரிகள் இட்லிவடை சுட்டுப் போட்டு, கருத்துச்சிதைவு ஏற்படுத்துவதும், குழப்ப மாமன்னர் இதழ் தூண்டிவிடுவதும் எதேச்சையானது என்று நீங்கள் நினைக்க மாட்டீங்க.

இரண்டும் ஒரே வேரில் வந்த இரு வேறு பிரச்சனைகள்...

Jeeves சொன்னது…

//சாதி ஒழிய வேண்டுமென்றால் ஓட்டு வங்கி பாலிடிக்ஸ் ஒழிய வேண்டும்.. அதற்கு அனைவரும் ஓட்டு போட முன்வர வேண்டும்.. இல்லையேல் எந்த கொம்பனாலும் ஒரு மயி__ புடு__ முடியாது..//


சரிங்கண்ணே.. வாரோம். ஆனா தேர்தல்ல நிக்கிறதுல யாரு நல்லவய்னு காமிய்ங்க

ஜோதிபாரதி சொன்னது…

வலையுலக ஞானி கீதங்களை இசைக்க வேண்டும்!

ஈயத்தைக் அல்லவா காய்ச்சி ஊற்றி இருக்கிறீர்கள்.

உடன்படுகிறேன் ஒரு பாதிக்கு மட்டும்.

நீங்கள் காய்ச்சி ஊற்றிய ஈயம் இரண்டு வகைப்படும்.

ஒன்று வெள்ளீயம், இன்னொன்று காரீயம்.

வெள்ளீயம் அரிவாளை வெள்ளி போல் தீட்டிக் கொண்டு வரும்.

காரீயம், உங்களுக்குத் தெரியாததா, தன் காரியம் தான்.

முதலாவது தருவதோ ரத்தக்களறி, உயிரிழப்பு.

இரண்டாவது மிஞ்சி மிஞ்சிப் போனால் வயிற்றில் அடிக்கும், பாதையை மறைத்துக் கொண்டு வழிவிடாது, முன்னேறவும் விடாது.

முதலாவதில் உள்ளது இரண்டாவதில் கிடையாது, இரண்டாவதில் உள்ளது முதலாவதில் கிடையாது.

எனது பின்னூட்டம் கொஞ்சம் குழப்பமாக இருந்தால் சொல்லுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன். விவாதிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD 2:00 AM, November 15, 2008
வர வர இணைய உலகின் ஞானியாக மாறிக்கிட்டு இருக்கீங்க..//

உனக்கு ஏன் எம்மேல இவ்வளவு பிரியம் ? :)

//அவர்கள் முதலில் ஏற்படுத்திய/பலபடுத்திய/திடப்படுத்திய சாதி பிரச்சனை இன்னும் உயிரை வாங்கிக்கொண்டு இருக்கு...அதை நாம் கவணிக்கலாம் என்றால், அதற்குள் அடுத்த தலைமுறைக்கு "மதவெறியயை" ஊட்டி வளர்க்கிறார்கள்..//

மதவெறிக்கு பலியாகுபவன் எவனுமே பாப்பான் இல்லை என்று உண்மையை எடுத்துச் சொல்லுங்க, திருந்துவாங்க

//ஒன்றை விட்டுவிட்டு, மற்றொன்றை நாம் கவணிக்க முடியாது..//

நோய்கான காரணம் அறிந்து கொள்வதைவிட நோயைக் குணப்படுத்தனும், அதன் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி கண்டுபிடித்து முற்றிலுமே பிறருக்கும் அண்டாமல் ஒழித்துவிடலாம்

//எண்ணிக்கையில் சொற்பளவில் இருந்துக்கொண்டு "சோ"மாதிரிகள் இட்லிவடை சுட்டுப் போட்டு, கருத்துச்சிதைவு ஏற்படுத்துவதும், குழப்ப மாமன்னர் இதழ் தூண்டிவிடுவதும் எதேச்சையானது என்று நீங்கள் நினைக்க மாட்டீங்க.//

சோமாதிரிகள் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கே :)

//இரண்டும் ஒரே வேரில் வந்த இரு வேறு பிரச்சனைகள்...//

குணப்படத்த முடியும் என்பதை குணப்படுத்துவோம், புறையோடையவர்கள் பற்றி கவலை வேண்டாம்

thenali சொன்னது…

பிற்படுத்தப்பட்ட சமூகங்களே தற்போது சாதி கொடுமையினை தாங்கி நடத்துபவை. பெரியார் பார்பனரை மட்டும் குறி வைத்து தாக்கினார்.அதில் ஒரளவு வெற்றியும் பெற்றார். ஆனால் இவ்வியக்கம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாததின் விளைவுதான் இது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடு (மட்டும்)ரத்து செய்யப்பட்டு கலப்பு மணம் புரிவோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். ஆனால் பாழப்போன தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோர் ஒருபோதும் இதனை அனுமதிக்க போவதில்லை.

ஜோதிபாரதி சொன்னது…

//பார்பனரை மட்டுமே சாதிவெறியாக சித்தரிக்கும் முற்போக்கு வாதிகள் (வாந்தி முன்னால் வருவதால் முற்போக்கு, பேதி பின்னால் வருவதால் பிற்போக்கு என்று சொல்லலாம் போல) தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் எப்போதாவது கண்டிப்பது உண்டா என்று பார்த்தால் மிக மிகக் குறைவுதான்//

இப்பதான் நிலவுக்கு நம்மாட்கள் சந்திராயன் விட்டிருக்கிறார்கள்.
எப்பொழுது மனிதனை இறக்குகிறார்களோ, அப்பொழுது முதல் ஆளாக நாமெல்லாம் போய் உட்கார்ந்து கொண்டு சாதி வெறியர்களை தாக்கு தாக்குன்னு தாக்கி எழுதலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முதலாவதில் உள்ளது இரண்டாவதில் கிடையாது, இரண்டாவதில் உள்ளது முதலாவதில் கிடையாது.//

பாரதி,

தங்கள் சாதிக்காரனையே எங்கும் உள்ளே நுழைக்க வேண்டும் என்பதாகத்தான் சமுதாய எண்ணங்கள் இருக்கு. பாப்பான் மட்டுமே அதைச் செய்யல

//எனது பின்னூட்டம் கொஞ்சம் குழப்பமாக இருந்தால் சொல்லுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன். விவாதிக்கலாம்.//

கண்டிப்பாக நாளைக்கு விரிவாக பேசுவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மையைச் சொல்லனும்னா இவனுங்களைத் தூண்டி விடறதே சாதி எதிர்ப்புன்னு அடிச்சிகிடுதானுங்களே அவனுங்களாய்த்தான் இருக்கும். இல்லாட்டா இவங்களோட அடுத்த வேலைக்கு என்ன செய்யப் போறதுன்னு தெரியாம திண்டாடுவாய்ங்க. இவங்களைப் பத்தி ஏற்கனவே ஒரு பாட்டு உண்டுண்ணே//

ஜீவ்ஸ், சாதிமறுப்பாளர்கள் எல்லோரையும் அப்படி குற்றம் சொல்லிவிட முடியாது. திகவில் இருக்கும் சிலர் கூட சாதிவெறியர்களாக இருக்கிறார்கள் என்று நண்பர் ஒருவர் நொந்தபடிச் சொன்னார். ஆக சாதிவெறியர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள், ஒட்டுமொத்தமாக எல்லா சாதிமறுப்பாளர்களும் அப்படி இல்லை.

தலித்துகள் மதம் மாறுகிறார்கள், மாற்றப்படுகிறார்கள் என்று கிறித்துவர்களின் வழிபாட்டு தலங்களை உடைப்பவர்கள், தலித்துகளுக்கான இந்து ஆலய நுழைவு அனுமதி கொடுக்கிறார்களா ? பேச்சளவில் மட்டுமே யோக்கியமாக இருப்பவர்கள் எங்கும் உண்டு, சதிமறுப்பாளர்களிலும் தன்னுடைய சாதிக்கு ஆதரவாளராக இருப்பவர்களும் சிலர் உண்டு. என்ன செய்வது அரைகுறை ஞானம் தான் அவர்களது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்பதான் நிலவுக்கு நம்மாட்கள் சந்திராயன் விட்டிருக்கிறார்கள்.
எப்பொழுது மனிதனை இறக்குகிறார்களோ, அப்பொழுது முதல் ஆளாக நாமெல்லாம் போய் உட்கார்ந்து கொண்டு சாதி வெறியர்களை தாக்கு தாக்குன்னு தாக்கி எழுதலாம். //

பாரதிம்

அங்கு ஆட்டோவோ, வீச்சரிவாளோ, சைக்கிள் செயினோ, பெட்ரோல் குண்டுகளோ வராது என்பதால் தானே சொல்றிங்க :)

T.V.Radhakrishnan சொன்னது…

///நோய்கண்டவர்களை குணப்படுத்துங்கள் ஐயா///

வழி மொழிகிறேன்!

ஜோதிபாரதி சொன்னது…

//தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் //

மூன்று சாதிப் பெயரைச் சேர்த்துப் போட்டது எல்லாம் பாதுகாப்புக்குத் தான் என்று நினைக்கிறேன். சாதிகளை கடுமையாகச் சாடுவாதால் இன்னு சாதி வெறி வளரத்தான் செய்கிறது. பெரியார் இந்து மதத்தைச் சாடியது போல், யாரும் தான் இருக்கும் சாதியை பகிரங்கமாக சாட முடியாத நிலை இன்று இருக்கிறது. அதைவிட யாரும் அந்த விச பரிட்சையை செய்ய முற்படுவதுமில்லை, விரும்புவதுமில்லை. தன்னை முற்போக்கு வாதிகளாக காட்டிக் கொள்பவர்கள், தொண்ணூறு சதம் பேர் சாதி வெறியர்களாகவே இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
காவல் துறையினரின் கையாலாகாதத் தனம் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையைக் கையாளத் தெரியாதவர்களுக்கு கமிஷனர், உதவிக் கமிஷனர் போன்ற பதவிகளுக்கு ஏன் வருகிறார்கள். தெனாலியில் கமல் பயப்படுவது மாதிரி, எல்லாவற்றுக்கும் பயப்பட்டால், காவல் துறை எதற்கு? தனது கைகள் கட்டப் பட்டதாக உணர்ந்தால் காவல்துறையினர் அந்த இடத்திற்கே சென்றிருக்கக் கூடாது.
காவல் துறை உள்ளே புகுந்து கலவரத்தைக் கட்டுப் படுத்தினால், எதிர்க் கட்சி மற்றும் வழக்கறிஞர்களால் திரிக்கப் படும் என்பது உண்மை. இது போன்ற விடயங்களை லாவகமாகக் கையாளுவதற்குத் தானே கமிஷனர் போன்ற தலைமைத்துவப் பதவிகள். ஒரு கல்லூரியில் நடந்த சண்டையையே தடுக்காமல் விட்ட காவல் துறை, மிகப்பெரிய சாதிக்கலவரம்,மதக் கலவரம் போன்றவற்றை எப்படித் தடுக்க முடியும்?
சட்டக் கல்லூரி என்றால் எந்த சட்ட திட்டங்களும் கிடையாதா? நிர்வாகம் மாணவர்களை தங்கள் பிடிக்குள் வைக்க வேண்டும். தனியார் செக்கியூரிட்டிக்கு ஏற்பாடு செய்து, அதற்கான பணத்தை மாதா மாதம் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கலாம். மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மூன்று சாதிப் பெயரைச் சேர்த்துப் போட்டது எல்லாம் பாதுகாப்புக்குத் தான் என்று நினைக்கிறேன். //

அப்படியா ?

சென்றவாரம் யாதவர்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.

தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?

சேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா ?

அவ்வப்போது தனித்தனியாகவும் எழுதிவருகிறேன் என்றே நினைக்கிறேன்.

SurveySan சொன்னது…

TBCD,

//ஒன்றை விட்டுவிட்டு, மற்றொன்றை நாம் கவணிக்க முடியாது..///

;))))) kizhinjudhu ponga!

பொடியன்-|-SanJai சொன்னது…

ரொம்ப பாதுகாப்பா எழுதி இருக்கிங்க.. இதோட சேர்த்து இன்னும் சில சாதிகளையும் குறிபிட்டிருக்க வேண்டும். சாதிகள் பேர் சொல்லித் தெரியும் எல்லா சாதியினருமே சாதி வெறியை தூண்டுகிறார்கள்.ஏன் மூன்று சாதியை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்? மற்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? மறுபடியும் சேலம் பதிவயும் யாதவர் பதிவையும் காட்ட வேண்டாம். நான் சொல்வது புரியும் என நினைக்கிறென்.

எனக்கு இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லா சாதி சாக்கடைகளின் மீதும் சம அளவு கோவம் இருக்கு.. சாதியை அடிபப்டையாக வைத்து சில கயவர்கர்கள் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று பிரித்து சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் சாதி வெறியில் இந்த பேதம் இல்லை.. எல்லோரும் வெறி பிடித்தவர்களாகவே அலைகிறார்கள். அதனால் எல்லா சாதிகளையும் குறிபிட்டிருக்க வேண்டும்.

பொடியன்-|-SanJai சொன்னது…

////சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள்//

எனக்கும் ஆசையா தான் இருக்கு. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan 7:32 PM, November 14, 2008
//சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள்.//

முதல் செருப்பை பதிவுலகின் மூத்தவர் மீது வீசலாமா???.//

அடுத்தவரைத் தாழ்த்த 'நான் உன்னிலும் உயர்ந்தவன் என்ற பொருளில் எவர் சாதிப் பெருமை' பேசினாலும் அவர்கள் தூற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

//நீங்கள் வழக்கம் போல் எல்லாருக்கும் நல்லவர் என்கிற வகையில் இந்த பின்னூட்டத்தை அனுமதிக்காவிட்டால், உங்களின் பதிவிற்கான நோக்கத்திற்கு அர்த்தமேயில்லை.
//

இதற்கு மறுப்பு தெரிவிக்கிறேன், எனக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை. கொள்கைக்கு என்று செயலாற்றுபவர்களுக்கே சப்பைக் கட்டுகள் தேவைப்படும், எனக்கு அல்ல, நல்லவற்றைப் போற்றவும், அல்லாதவற்றைத் தூற்றவும் யாருடைய அனுமதியும், பாராட்டும் எனக்கு தேவையற்றது என்று நினைத்தே எழுதுகிறேன். உங்களால் அப்படி எழுத முடியாமல் போனால் நான் காரணம் இல்லை, வீரமணி ஐயா மீது பற்றுதலும் உண்டு விமர்சனமும் உண்டு, இரண்டையும் என்னால் வெளிப்படையாக பேசமுடியும். கொள்கைக்காக நாக்கை மடித்துக் கொள்வது என்னால் முடியாது.

நான் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// பொடியன்-|-SanJai said...
ரொம்ப பாதுகாப்பா எழுதி இருக்கிங்க.. இதோட சேர்த்து இன்னும் சில சாதிகளையும் குறிபிட்டிருக்க வேண்டும். சாதிகள் பேர் சொல்லித் தெரியும் எல்லா சாதியினருமே சாதி வெறியை தூண்டுகிறார்கள்.ஏன் மூன்று சாதியை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்? மற்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? மறுபடியும் சேலம் பதிவயும் யாதவர் பதிவையும் காட்ட வேண்டாம். நான் சொல்வது புரியும் என நினைக்கிறென்.

எனக்கு இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லா சாதி சாக்கடைகளின் மீதும் சம அளவு கோவம் இருக்கு.. சாதியை அடிபப்டையாக வைத்து சில கயவர்கர்கள் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று பிரித்து சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் சாதி வெறியில் இந்த பேதம் இல்லை.. எல்லோரும் வெறி பிடித்தவர்களாகவே அலைகிறார்கள். அதனால் எல்லா சாதிகளையும் குறிபிட்டிருக்க வேண்டும்.
//

நீங்கள் குறிப்பிடுவது புரிகிறது, தலித்துகளில் சாதிவெறியர்கள் இல்லாமல் இல்லை, பள்ளர் பறையர் என்று அவர்களுக்குள் வெறி அடித்து வெட்டிக் கொள்வதும் கூட வெளிப்படையானது, அதுபற்றியும் எழுதி இருக்கிறேன். வன்னியர் மற்றும் நாடார்களைப் பார்த்து முன்னேறுங்கள், அவர்களெல்லாம் தீண்டாமைக் கொடுமையிலிருந்து அவர்களாகாவே மீண்டார்கள் என்றும் எழுதி இருக்கிறேன்.

சாதிவெறியில் பேதமில்லை என்றாலும் ஆதிக்க சாதிகளே சாதிவெறியில் வெற்றிபெறுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
TBCD,

//ஒன்றை விட்டுவிட்டு, மற்றொன்றை நாம் கவணிக்க முடியாது..///

;))))) kizhinjudhu ponga!
//

சர்வேசன், உங்களுக்கு தேவையானதை மட்டும் பிடித்து கட்டம் கட்டிக் கேட்பது போன்றது தான் அவர் சொல்வதும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Radhakrishnan said...


வழி மொழிகிறேன்!
//

வாங்க, இலவச சிகிச்சை முகாம் சேர்ந்து நடத்துவோம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr.Rudhran said...
பார்ப்பணர் என பிறப்பால் ஆனவர்கல் பலர் எனக்கு மிக நெருக்கம். ஆனால் ‍
பார்ப்பணீய வெறியால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
i am not comfortable in typing this tamilish style. what i want to say is..devar mudaliar pillai and any or all who use those cheap suffixes are all equally horrible. but brahmins by their silent scorn and sadistic approach to communal clashes are certainly more treacherous.
//

ருத்ரன் ஐயா,

நீங்கள் சொல்வது சரிதான் ! கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//thenali said...
பிற்படுத்தப்பட்ட சமூகங்களே தற்போது சாதி கொடுமையினை தாங்கி நடத்துபவை. பெரியார் பார்பனரை மட்டும் குறி வைத்து தாக்கினார்.//

பெரியார் அவ்வாறு செய்ததற்குக் காரணம், அப்போது பார்பன ஆதிக்கம் மிகுதியாக இருந்தது.

//அதில் ஒரளவு வெற்றியும் பெற்றார். ஆனால் இவ்வியக்கம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாததின் விளைவுதான் இது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடு (மட்டும்)ரத்து செய்யப்பட்டு கலப்பு மணம் புரிவோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். ஆனால் பாழப்போன தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோர் ஒருபோதும் இதனை அனுமதிக்க போவதில்லை.
//

சரிதான்.

லக்கிலுக் சொன்னது…

டாக்டர் ருத்ரன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்!

அரவிந்த் குறிப்பிடுவதைபோல நீங்கள் இன்னொரு ஞாநியாக மாறவில்லை. ஞாநியையே மிஞ்சுகிறீர்கள் :-)

வருண் சொன்னது…

நல்ல பதிவு, கோவி! :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்