பின்பற்றுபவர்கள்

26 நவம்பர், 2008

மூடநம்பிக்கையை விதைக்கும் பேய்கள் வெற்றியடைந்து வருவது எவ்வாறு ?

"எல்லாம் அவன் செயல்" , "எங்கும் நிறைந்திருப்பான் இறைவன்" என்ற இந்த இரு சொற்களும் மூடநம்பிக்கைகளுக்கு எப்போதும் உரம் போட்டு வளர்ப்பதாகும். இதுபோல் வரட்டு வேதாந்தம் பேசுபவர்கள் எவரும் ஏழையின் ஏழ்மையையோ விரட்டியோ, அவர்களுக்கு நல்லறிவோ கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அது எப்போதும் நடந்தது இல்லை. காலம் காலமாக மூடநம்பிக்கைகள் பட்டு போகாமல் இருக்க இந்த இரு வாக்கியங்களே தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.

"எல்லாம் அவன் செயல்" என்று சொல்லிவிட்டு கவுந்து படுத்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் பசிபோய்விடுமா ? "எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான்" என்றால் கொலைகாரன் அறிவாளை ஓங்கும் போது எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் தூங்கிக் கொண்டு இருக்கிறானா ? என்றே கேட்கத் தோன்றுகிறது.

மதநம்பிக்கைகளை கேள்வி கேட்காமல் இருப்பதற்காக புகுத்தப்பட்டதே இந்த இருசொற்களும். எல்லாம் அவன் செயலென்றால் ஏழ்மையும் வறுமையுமாக ஒருபக்கம், இன்னொரு பக்கம் உணவு தானியங்கள் மிதமிஞ்சி குப்பையில் கொட்டுவதெல்லாம் அவனுடைய செயலே என்று ஒப்புக் கொள்வீர்களா ? என்று கேட்டால் அதையும் சில மூடர்கள் 'ஆமாம்' என்றே சிலர் துணிந்து சொல்கிறார்கள்' இவற்றில் எள்ளளவும் உண்மை எதேனும் இருக்கிறதா ?

உழைப்பைச் சுரண்டி உண்டு வாழும் மதவாதிகள் பக்தி, இறை நம்பிக்கை என்ற கதையாடலில் இவ்விரு சொற்களை நுழைத்து, கூடவே இறையச்சம் கொள் என்ற பயத்தையும் ஏற்படுத்தி, மூடநம்பிக்கைகள் குறித்து ஏன் என்ற கேள்வியை எழுப்பவிடாமல் செய்வது தான் காலம் தோறும் நடக்கிறது.

'எல்லாம் அவன் செயல்' என்றால் நீதிமன்றம் எதற்கு ? தண்டனைகள் எதற்கு ? கோவிலில் சொத்தை கொள்ளையடிப்பவனும் அவனே ? சிலை திருடனும் அவனே, போலி சாமியாரும் அவனே, உண்டியலை உடைப்பவனும் அவனே ? எங்கும் நிறைந்திருப்பவன் அவன் என்றால் கோவில்கள் எதற்கு ? அப்படியே எழுப்பிய ஆலயங்களிலும் ஒரு சில கோவில்களே சக்தியுடையவையாக பரப்பபட்டு உண்டியலை நிறைய வைப்பது எதற்கு ?

எல்லாம் அவன் செயல் என்ற பின் பகுத்தறிவாதிகளை நொந்து கொள்வதன் காரணம் என்ன ? அதுவும் அவன் செயல் தானே.

ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்று பேர்வழிகள் சொல்வதையெல்லாம் அமோதிக்கும் விதமாக நல்ல ஆன்மிக சிந்தனையாளர்கள் கூட அதைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் அவன் செயல் என்றால் 'முயற்சி, பலன்' இவற்றிற்கெல்லாம் பொருளே இல்லை.

இறைவன் என்ற சொல்லில் பயத்தை ஏற்படுத்தி மூட நம்பிக்கை பற்றி கேள்வி எழுப்பாமல் மத அடிப்படை வாதத்தை, மத வெறியை தற்காத்து வைத்திருப்பதைத் தவிர்த்து வேறு எதையுமே போலி ஆன்மிக வாதிகள் செய்தது கிடையாது.

அன்பே கடவுள் என்றோ, கடவுள் தன்மையே அன்பினால் ஆனது என்றோ சொல்லாமல், மூட நம்பிக்கைக்கு எதிராக பேசுபவர்களுக்கு கடவுள் பெயரால் 'கடவுள் மகா கோபக்காரன் உன்னைய தண்டிச்சிடுவான்' என்று கடவுளை கேவலப்படுத்துவர்களெல்லாம் இறைவன் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டி இருப்பதாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை பயமுறுத்த முயற்சிப்பது காமடியோ, காமடி.

இறைவன் வந்து நம் பேசுவது பொய் என்று சொல்லிவிடப் போகிறானா என்கிற நம்பிக்கையிலேயே இத்தகைய போலி ஆன்மிகவாதிகள் மூடநம்பிக்கை வளர்ப்பில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.

******

"எல்லாம் அவன் செயல்" என்பது உனக்கு கிடைத்த புகழினால் கர்வப்படாதே, நாளை நிலைதாழ்ந்தால் கீழே சென்றால் ஏற்படும் உனக்கு மனவருத்தம் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதற்க்காக சொல்லப்பட்ட ஒன்றேயாகும். ஏனென்றால் பதவி,புகழ், இளமை இவையாவும் நிரந்தரம் அன்று.

"எங்கும் இருக்கிறான் இறைவன்" - உன்னை கண்காணிப்பவர் எவருமில்லை என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபடாதே என்பற்காக சொல்லி வைக்கப்பட்டது ஆகும்.

பகுத்தறிவாதம் பேசிய அண்ணா அழகாகச் சொன்னார்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்...ஏழையின் சிரிப்பிலும் இறைவனைப் பார்"

3 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

me the first
:-)))

நசரேயன் சொன்னது…

/*"ஒன்றே குலம், ஒருவனே தேவன்...ஏழையின் சிரிப்பிலும் இறைவனைப் பார்"*/
உண்மைன்னு சொன்னா யாரும் சண்டைக்கு வர ௬டாது

Asokan சொன்னது…

/*"ஒன்றே குலம், ஒருவனே தேவன்...ஏழையின் சிரிப்பிலும் இறைவனைப் பார்"*/

அண்ணாவின் வார்த்தைக்கு தவறான அர்த்தம் புரிந்துகொண்டுள்ளீர்கள்...ஒரு பகுத்தறிவாளன் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு பொருள் என்னவாயிருக்கும் என்று யோசித்தால்...ஒன்றே குலம் என்று வந்தால் ஒருவனே தேவன் ஆவான்...ஆனால் மனிதர்களே உங்களை ஆத்திகவாதி அங்கே போகவிடமாட்டான் என்றும் கொள்ளலாம். கடவுள் இல்லையென்றவர் இப்படி “ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்” என ஏன் சொன்னார் என்றால்...என்று ஏழை சிரிப்பது...என்று நாம் இறைவனைப் பார்ப்பது..அதாவது ஏழை சிரிப்பது என்பது இயலாத காரியம்...அது போல் கடவுளை பார்ப்பதும்...ஆக கடவுள் இன்பதை இப்படிச் சொல்கிறார் என்றும் கொள்ளலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்