தீவிரவாதம் என்ற தீம்புயல் மதங்களில் மையம் கொண்டிருப்பது ஒப்புக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவருமே புரிந்து கொள்வது நல்லது. மதத்தை மையப்படுத்தி தீவினையாற்றும் தீவிரவாதிகள் எவரும் சாத்தானின் பிள்ளைகளாக மேலுலகத்தில் இருந்து குதித்து வந்துவிடுவதில்லை. இங்கே பூமியில் தாய்களின் மார்பில் பாலறுந்தியவர்களே. இவர்கள் ஒரே இரவில் மனமாற்றப்பட்டார்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள், மதத்திற்கும் இவர்களுக்கும் தொடர்புகளே இல்லை என்னும் வாதம் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏற்க்கப்படும், அல்லது சொல்லிக் கொண்டு இருக்கப்படும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.
மதக்கூட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களில், தத்தமது இறை நம்பிக்கையைவிட மாற்று மதத்தினரை எப்படி எதிர்கொள்ளவேண்டு,ம் தூற்றவேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகச் சொல்லிக் கொடுக்கும் மதங்கள் எதுவுமே, தத்தமது மதத்தில் முளைக்கும் தீவிரவாத விதைகளை தீயிலிட்டு பொசுக்காமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிற சாக்கு போக்குகள் வரும் காலத்தில் எள்ளி நகையாடப்படும் மேலும் தூற்றப்படும்.
நாங்கள் உத்தமர்கள் எங்கள் மதமே புனிதமானது என்பதைப் போன்ற வாதமே சகமனிதனை சுட்டுவீழ்த்துவதும், உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்மையைத் தரும் மதத் தீவிரவாதிகளின் மத்தியில் இருக்கும் எதோ ஒரு மதம் சார்ந்த கொள்கையின் இருக்கும் எதோ ஒரு தவறான (புரிதலில்) ஒன்றாகவே இருக்கிறது. இது போர் செய்வது தருமம் என்றும் வலியுருத்துக்கும் கீதையாக இருந்தாலும் சரி, புனித போர் என்று சொல்லப்படும் 'ஜிகாத்' ஆக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே விதமான மனித குல வேரறுப்பு மகாவாக்கியங்கள் தாம்.
எங்கள் மதம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று துன்பவேளையில் யாழிசைப்பவர்களே, தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் ? பிறக்கும் போதே தீவிரவாதிகளாக பிறந்தவர்களா ? நேற்றுவரை நம்முடன் இருந்தவன் ஒருவனே நாளை நம் முன் தீவிரவாதியாக வந்து நம்முன் வந்து நிற்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். நான் சிறுவனாக இருந்த போது என்னுடன் விளையாடிய இரு மத சிறுவர்களும் இன்று மதச்சார்பு என்ற பெயரில் முகங்களையே மாற்றிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் இறைநம்பிக்கை ஊட்டப்படாமல் தீயவர்களின் கூடாரத்திலேயே வளர்ந்தவர்கள் அல்ல.
எங்கள் மதங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பது காலவதியாகிப் போகும் செய்தியாகிக் கொண்டிருப்பதை உணர்பவர் எவரோ அவர்களே மதங்களில் இருக்கும் தீமையை உணர்ந்து அகற்ற முன்வருவர். சீழ்பிடித்த சிரங்கை மருந்திடாமல் மறைப்பது அதை மேலும் பெரிதாக்கி உடலையே இழக்க நேரிடும் என்பதை உணர்க்க.
தீவிரவாதிகள் யார் ? என்ன செய்கிறார்கள் ? என்கிற புரிந்துணர்வு இருந்தால், செத்துப் போவதில் என் மதத்தைச் சேர்ந்தவனும் இருக்கிறான் என்கிற புரிந்துணர்வு இருக்கும். இதோ மதத்தீவிரவாதிகள் முன்பு சமாதானம் பேசும் மதவாதிகள் எவரையும் தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக எவனும் கொல்லாமல் விடுவதில்லை. திரிசூலத்தில் இருக்கும் மூன்று முனைகளில் நடுவில் இருப்பது தன் மதத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பதற்கே என்ற அரைகூவலும், தீவிரவாத வெறியில் தம் மதத்து மசூதிக்குள்ளேயே வெடிகுண்டு வீசுவதும் ஒன்றே. தீவிரவாதத்திற்கான காரணம் மதத்தின் மையமாக இருப்பது கண்கூடாகத் தெரியும் போது, எரிந்து கொண்டிருப்பதை அறிந்தும் உடையில் தீப்பற்றவில்லை என்று சொல்லி ஏமாற்றி தன்னை தீயின் நாக்குக்கு தீக்கிரையாக்கும் செயலுக்கு ஒப்பானது.
மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பதை மதவாதிகள் சொல்லக் கூடாது. மதவாதிகள் அவ்வாறு தொடர்ப்புகளை துண்டித்து காட்டும் போது பொதுமக்களே சொல்லுவார்கள். மதத்தீவிரவாதத்தால் சந்தேகத்தின் பெயரால் கைதாகுபவர்கள் அப்பாவி மதப்பற்றாளர்கள் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. அவர்களால் கொல்லப்பட்டுள்ளவர்களிலும் அப்பாவி மதப்பாற்றாளர்களும், மதமே வேண்டாம் என்று மண்டியிட்டு கெஞ்சுபவர்களும் உண்டு. இறந்தவர்களுக்கான இரக்கம் சிறிதும் இன்றி மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பே இல்லை என்னும் சீற்றமோ, போலிக் கண்ணீரோ மதத்தைக் காப்பாற்றும் நெடுநாளைய அணைப்பாக இருக்கவே முடியாது.
மதத்தீவிரவாதம் என்ற சொல் மதம் வேண்டாம் என்று சொல்பவர்களைவிட மதப்பற்றாளர்களாலேயே மிகுந்து சொல்லப்படுகிறது என்பதையும் உணர்க. மிகச் சரியான இறைநம்பிக்கை உடையவர் எவருமே மதச் சிந்தனைக்கும், இறை நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று சரியாக புரிந்து கொண்டிருப்பர். மதத்தின் தீவிரவாதத் தன்மைகளைச் சுட்டிக் காட்டும் போது அவர்களில் ஒருவரும் அதனை இறைவனை பழிப்பதாக எண்ணி மறுக்கவும் மாட்டார்கள்.
******
இறைவன் சாத்தானின் பிடியிலும், மாயையின் பிடியிலும் மனிதன் சிக்கி இருப்பது சொல்வது, மனிதன் மதங்களின் பிடியில் சிக்கி இருப்பது குறித்தான சொல்லே என்பதாகத்தான் எனக்கு புரிகிறது.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
25 கருத்துகள்:
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது.Written by பி.இரயாகரன்
பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.
அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.
ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாத எல்லோரும் 'பயங்கரவாத"த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான்.
இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை
இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.
இப்படி இரட்டை வடிவங்களின் சமூகத்தில் சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் என அனைத்தையும், தனக்கு (உயர்சாதிக்கு) அல்லாத மக்களுக்கு மறுக்கின்றது.
இந்த பயங்கரவாத பாசிசக் கும்பல், இந்த முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எவையும் நீதி விசாரணைக்கு வந்தது கிடையாது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிய அடக்குமுறை இயந்திரங்கள், அப்பாவி முஸ்லீம் மக்களை வகை தொகையின்றி குதறியது. இவர்கள் கட்டமைத்த நீதியின் முன், நீதி மறுக்கப்பட்டு மீண்டும் முஸ்லீம்கள் வதைக்கப்படுகின்றனர்.
ஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். இதைவிட வேறு ஒரு தீர்வை சமூகம் வழிகாட்டவில்லை. இந்துத்துவ ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முஸ்லீம் வாழமுடியாத வகையில், மொத்த சமூக நிறுவனமும் இந்துத்துவ காவிமயமாகி நிற்கின்றது.
இவை அனைத்தும் சாதி ரீதியாக தாம் கொடுமைப்படுத்தி ஆளும் பார்ப்பனிய கொடுங்கோலாட்சியை மூடிமறைக்க அவர்களுக்கு தேவையானதாக உள்ளது. மதவாதத்தை உயர்த்தயி இந்திய ஆட்சி வடிவங்கள் தான், 'பயங்கரவாத'த்தை உற்பத்தி செய்கின்றது.
இந்து பார்ப்பனிய இந்துத்துவம் தான் ஒரிசாவில் கிறிஸ்துவ மக்கள் மேல் அண்மையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதன் எதிர்வினையான கிறிஸ்துவ 'பயங்கரவாதம்" நாளை இந்தியா மேல் உருவாகலாம்.
குஜராத் படுகொலை, பம்பாய் படுகொலை, அத்வானியின் ரத யத்திரையுடன் அரங்கேறிய படுகொலை, பாபர் மசூதி இடிப்புடன் அரங்கேறிய படுகொலை, இப்படி முஸ்லீம் மக்கள் மேல் எண்ணிக்கையற்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகொலைகள். நாள்தோறும் ஒரு முஸ்லீம் என்பதால், இந்து பயங்கரவாதிகளால் அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
எத்தனையோ படுகொலைகள், எத்தனையோ விதமான ஒடுக்குமுறைகள் நடந்த போதும், இதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது கிடையாது, நீதி விசாரணை நடைபெற்றது கிடையாது. பெரும்பான்மை மக்கள் இந்த அநீதியை எதிர்த்து போராடியது கிடையாது.
'பயங்கரவாதம்" இப்படித்தான் உருவாகின்றது. சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத" வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது. இதனால் இந்துத்துவ ஒடுக்குமுறை அதிகரிக்கும், என்பதை 'பயங்கரவாதத்"தில் ஈடுபடும் நபர்கள் புரிந்து கொள்வதில்லை. சமூகத்துடன் சேர்ந்து போராடுவது தான், விடுதலைக்கான மாற்றுவழி.
மறுபக்கத்தில் மற்றவர்களும் இதைத்தான் செய்கின்றனர். இன்று இந்தியாவில் இந்த பயங்கரவாதம், உங்கள் ஒத்துழைப்புடன் ஆட்சியைப் பிடிக்க பயன்படவில்லையா? உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா? சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா? இவர்கள் தானே 'பயங்கரவாதிகளை" உற்பத்தி செய்கின்றனர்.
இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி. அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத"த்தை ஒழிக்க முடியும்.
முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை" உண்மையாக ஒழிப்பான்.
பி.இரயாகரன்
28.11.2008
Written by பி.இரயாகரன் Friday, 28 November 2008 10:06 அரசியல்/சமூகம் பி.இரயாகரன் 2008 சனி, 29 கார்த்திகை 2008
http://www.tamilcircle.ne/index.php?option=com_content&view=articleid=4505:2008-11-28-09-09-39&catid=74:2008
சோனியா காந்தி பாவையாக உள்ள பிரதமர் என்பதால் மட்டும் அல்ல ....ஒரு தலைவர் ,பிரதமர் என்பதற்கும் ...ஒரு மிக பெரிய நாட்டுக்கு தலைவர் என்பதற்கும் ....வீரமும் விவேகமும் துணிச்சலும் இருப்பது அவசியம் ..என்பதை இந்த தாக்குதல் உறுதி படுத்து கிறது
கோவி.கண்ணன்,
தீவிரமாக தம்மதத்தைப் பின்பற்றுவதற்கும் தீவிரவாதத்தையே மதமெனப் பின்பற்றுவதற்குமுள்ள நூலிழை வேறுபாடே உள்ளது. ஒவ்வொரு முறை வன் தாக்குதல்களிலும் ஏதேனும் மதச்சாயம் பூசப்பட்டு நடந்து முடிந்த நிகழ்வின் கோரம் மறைக்கப்படுகிறது. நியாயமாகச் சொல்வதென்றால் இத்தகைய மனிதகுல விரோதச் செயலை மதத்தின் பெயரால் செய்பவர்கள் மத நம்பியக்கையற்றவர்களே!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - இந்துமதம், அன்பே கடவுள்- கிறிஸ்தவம் மனிதர்களிடம் அன்பு காட்டாதவனிடம் அல்லாஹ் அன்பு காட்டமாட்டான் - இஸ்லாம்! இவையெல்லாம் மதங்கள் சொன்ன உன்னதக் கோட்பாடுகளே என்பதை ஏனோ நாத்திகர்கள் சிந்திப்பதில்லை.
நடந்துமுடிந்த மும்பைத் தாக்குதல்முதல் ஏனைய அனைத்து வகையானத் தாக்குதலுக்கும் பின்னணி அரசியலே காரணம். இந்திய அரசியலுக்குள் இராமரை வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்ட பின்னரே இத்தகைய குண்டுவெடிப்புகளுக்கும், தாக்குதலுக்கும் எதிர்மதச்சாயம் பூசப்பட்டு அடுத்த தேர்தல்களில் வாக்குகள் அறுவடை செய்யப்படுகின்றன.
பிரச்சார 'பீரங்கி'களால் செய்ய முடியாததை 'துப்பாக்கிகளும் குண்டுகளும்' செய்து முடிக்கின்றன!அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்தெடுக்காதவரை இத்தகைய மனிதகுல வன்செயல்கள் முடிவுக்கு வருமென தெரியவில்லை!
//ஆர்.கே.சதீஷ்குமார் 4:29 PM, November 30, 2008
சோனியா காந்தி பாவையாக உள்ள பிரதமர் என்பதால் மட்டும் அல்ல ....ஒரு தலைவர் ,பிரதமர் என்பதற்கும் ...ஒரு மிக பெரிய நாட்டுக்கு தலைவர் என்பதற்கும் ....வீரமும் விவேகமும் துணிச்சலும் இருப்பது அவசியம் ..என்பதை இந்த தாக்குதல் உறுதி படுத்து கிறது
//
தீவிரவாதிகளின் செயலுக்கும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலால் நடக்கும் காங்கிரசுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. முன்பு பாஜக ஆட்சியில் இருந்த போது பாராளுமன்றத்திலேயே புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
//அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்தெடுக்காதவரை இத்தகைய மனிதகுல வன்செயல்கள் முடிவுக்கு வருமென தெரியவில்லை!//
நல்லடியார்,
உங்கள் நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி, அரசியலையும் மதமும் இரட்டை குழந்தைகள் அவற்றை ஒருக்காலமும் பிரிக்க முடியாது என்பது வெள்ளிடை மலை.
மதத்திற்கு அரசியல் ஒத்துழைப்பு கொடுப்பதும், அரசியலுக்கு மதத்தலைவர்கள் ஆதரவு கொடுப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. புதிது இல்லை என்றாலும் இப்பொழுது தீவிரத்தன்மையை அடைந்திருக்கிறது.
பி.இரயாகரன் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டும் ராஜ்,
இங்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படுவதாகவே புரிந்து கொள்கிறேன். அதற்குக் கொடுக்கப்படும் காரணங்களும் சரியான காரணங்களாகத் தெரியவில்லை.
பயங்கரவாதம் யாரால் என்று இங்கு நடத்தப்படுகிறது என்று இரயாகரன் சொல்கிறார்? அவர் அதற்குத் தரும் காரணங்கள்தான் என்ன?
//சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத" வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது.//
ஆக எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சிறுபான்மையர்களுக்கு முன் உள்ள ஒரே வழி பயங்கரவாதம் என்கிறாரா? அதை மேற்கோள் காட்டும் நீங்கள் அதை ஒப்புக்கொள்கிறீர்களா?
// உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர்.//
??யார் யார் அவர்கள்?
//தனக்குக் கீழ் 'கீழ் மக்களை" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.//
ரொம்ப நல்லாயிருக்கு இந்த லாஜிக்!!
// ஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.//
என்ன சொல்கிறார் இவர்?
நல்லடியார்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - இந்துமதம், அன்பே கடவுள்- கிறிஸ்தவம் மனிதர்களிடம் அன்பு காட்டாதவனிடம் அல்லாஹ் அன்பு காட்டமாட்டான் - இஸ்லாம்! இவையெல்லாம் மதங்கள் சொன்ன உன்னதக் கோட்பாடுகளே என்பதை ஏனோ நாத்திகர்கள் சிந்திப்பதில்லை.//
நாத்திகர்கள் எப்படியோ நானெல்லாம் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். மதம் என்று ஒன்று இருந்தால் எந்த மதமாக இருந்தாலும் அது நன்னெறிகளைப் போதிக்கும்; இதில் இரண்டாவது கருத்துக்களுக்கே இடமில்லை.
ஆனால் எந்த மதமாயிருந்தாலும் அந்த மதக் கொள்கைகள் மத நம்பிக்கையாளர்களை எந்த அளவுக்கு மதத்தீவிரத்துக்குள் இழுக்கிறது/ தள்ளுகிறது என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
//அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்தெடுக்காதவரை…//
பிரித்தெடுக்க வேண்டியதுதான்; அதுவே நல்ல வழி. ஆனால், தனிமனித வாழ்க்கை நெறி மட்டுமின்றி ஒரு நாடு எப்படி ஆளப்படவேண்டும் என்றுகூட எங்கள் மதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது அல்லவா உங்கள் மதத்தைப் பற்றி நீங்களே கூறுவது. பின் எப்படி அரசியலையும், மதத்தையும் பிரிக்க வேண்டுமெனக் கூறுகிறீர்கள்?
//இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது.Written by பி.இரயாகரன் //
எங்கயோ போயிட்டீங்க!. இதே மாதிரி கற்பழிக்கப்படுற பெண்களிடம், பெண்ணிய பயங்கரவாதமே ஆணிய பயங்கரவாதமாக அவர்களை கற்பழிக்கிறது. பெண்ணிய பயங்கரவாதமே ஆணிய பயங்கரவாதத்தை உற்பத்தி செய்ததுன்னும் எழுதுங்கண்ணா.. பிச்சிகிட்டு போவும்..
அதே மாதிரி தாய்லாந்தில பௌத்த பயங்கரவாதமே முஸ்லீம் பயங்கரவாதமாக விளைகிறதுன்னும் விளாசுங்க..
அதே மாதிரி, சீன கம்யூனிஸ்டு பயங்கரவாதமே, முஸ்லீம் பயங்கரவாதமாக ஸின்ஸியாங்கில் நடக்கிறதுன்னும் எழுதுங்க..
அதே மாதிரி, சிறுபான்மை ஷியா பயங்கரவாதமே, பெரும்பான்மை சுன்னி பயங்கரவாதமாக பாகிஸ்தானில் சிறுபான்மை ஷியாக்களை கொல்கிறதுன்னும் சொல்லுங்க.. சும்மா அடிச்சி விடுங்க.. என்னா?
அதே மாதிரி பெரும்பான்மை ஷியா பயங்கரவாதமே சிறுபான்மை சுன்னிபயங்கரவாதமாக ஷியா மக்களை ஈராக்கில் கொல்கிறதுன்னும் அட்ச்சி கிளப்புங்க.. காசா பணமா... என்னா?
அப்புறம் பெரும்பான்மை சுபி பயங்கரவாதமே வகாபி சுன்னி பயங்கரவாதமாக திரும்பி மாலத்தீவு மக்களை கொல்கிறதுன்னும் அடிச்சி உடுங்க.. என்னா?
மதம் தீவீரவாதம் போதிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், மதநம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகமாக கடவுள்-துணையுடன் தீவிரவாததில் இறங்குகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது!
மதம் மனிதனை நல்மனிதனாக்க வேண்டும்! ஆனால் மிருகமாக்குவது வேடிக்கை!
//இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி. அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத"த்தை ஒழிக்க முடியும்.
முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை" உண்மையாக ஒழிப்பான்//
பாகிஸ்தானுள், மசூதிகளில் குண்டுவெடிக்கும் பயங்கரவாதம் பற்றியும் பி.இராயகன் போன்றோர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினால் உலக அளவில் முஸ்லிம் மக்களின் மீது பயங்கரவாதம் எப்படி திணிக்கப்படுகிறது என்பதை பலரும் அறிந்து கொள்வர்.
மதம் தீவீரவாதம் போதிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், மதநம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகமாக கடவுள்-துணையுடன் தீவிரவாததில் இறங்குகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது! - VARUN //a meaningful irrefutable statement. wow!
//தனிமனித வாழ்க்கை நெறி மட்டுமின்றி ஒரு நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்றுகூட எங்கள் மதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது அல்லவா உங்கள் மதத்தைப் பற்றி நீங்களே கூறுவது. பின் எப்படி அரசியலையும், மதத்தையும் பிரிக்க வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? // - தருமி,
'இந்திய' அரசியலிருந்து மதத்தைப் பிரித்தெடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் தெளிவாக இருந்திருக்கும். மதச்சார்பற்று இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை சம்பந்தமே இல்லாதவர் மட்டுமின்றி அதற்கெதிராகச் செயல்பட்ட கும்பல் மதத்தை முன்னிறுத்தி இந்தியர்களைப் பிரித்தாண்டு அரசியல் சுகம் கண்டனர்.
சுதந்திரப் போராட்டத்திற்கு வராத ராமர், இந்தியர்களை பிரித்தாளுவதற்காக வலுக்கட்டாயமாக இந்திய அரசியலுக்கு இழுத்து வந்தபிறகே இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியதை மறுக்கிறீர்களா?
நாட்டின் பலபாகங்களில் இதற்கு முன்பும் குண்டுகள் வெடித்துள்ளன.ஆனால் அவையெல்லாம் பிரிவினைவாதிகள்,நக்சல்கள் என்றே அடையாளப்படுத்தப் பட்டன.ராமரின் 'தீவிர அரசியல்' பிரவேசத்திற்குப் பின்னரே அதற்கு 'பச்சை' சாயம் பூசி, 'சுன்னத்' செய்யப்பட்டு 'இஸ்லாமிய' அந்தஸ்து கொடுக்கப் படுகிறது என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்பலாமா?
மும்பைத் தாக்குதலைப் பொருத்தவரையில் பிடிபட்டத் தீவிரவாதி சார்ந்த மதம் முன்னிறுத்தப்பட்டு வழக்கம்போல், குற்றச்சாட்டின் பலனை அவன் (முஸ்லிம்கள்) சுமக்க வேண்டும் என்ற கேவலமான எதிர்ப்பார்ப்பு சிலரிடம் தெரிகிறது. (கோவி.கண்ணனைச் சொல்லவில்லை)
பாகிஸ்தானிலிருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு யூகங்களே ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளன. ISI - சங்பரிவார தொடர்புகள் வெளிவரத் தொடங்கிய சூழலில் இத்தாக்குதல் நடந்திருப்பதாலும், அதை விசாரித்த அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாலும், எல்லாவற்றையும்விட வடமாநிலத் தேர்தல் நேரத்தில் நடந்திருப்பதால் மதவாதஅரசியலே காரணமாக இருக்க வேண்டும். எந்தமதவாத அரசியல் கட்சிக்கு இது அவசியமோ அவர்களே இத்தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மதச்சண்டைகள் மூலம் அரசியல் இலாபமடையலாம் என்ற எண்ணம் சில 'தேசபக்தர்களிடம்' இருக்கும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தேவையான போதெல்லாம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பதாலேயே (இந்திய) அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்றேன்.
இஸ்லாத்தோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
நல்லடியார்,
//... மதச்சார்பற்று இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை// .. அப்டியா? :)
// சுதந்திரப் போராட்டத்திற்கு வராத ராமர், … வந்தபிறகே இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியதை மறுக்கிறீர்களா?// இல்லை. அதையே நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன்: சுதந்திரப் போராட்டத்திற்கு வராத ராமர், … வந்தபிறகே இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியதை மறுக்கிறீர்களா?
அதோடு, அதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்கிறீர்களா? இல்லை .. பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் இஸ்லாமிய தீவிரவாதம் ஆரம்பித்தது என்கிறீர்களா?
// அதற்கு 'பச்சை' சாயம் பூசி, 'சுன்னத்' செய்யப்பட்டு 'இஸ்லாமிய' அந்தஸ்து கொடுக்கப் படுகிறது..//
ஆக இப்படியாகத்தானே சாயம்பூசி, சுன்னத் எல்லாம் செய்து “அந்தஸ்து” அளிக்கப் படுகிறதேயொழிய இஸ்லாமுக்கும் தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்கிறீர்கள். அப்படித்தானே? நியூயார்க்கிலும், லண்டனிலும், பாலியிலும், நம்ம ஊர் கோவையிலும், ஏற்கெனவே மும்பையிலும் …..இன்னும் நீள லிஸ்ட் இருக்கிறதே – அங்கெல்லாமும் கூட
ராமர், பாபர் மசூதி, பச்சைச் சாயம், சுன்னத் எல்லாம் செய்துதான் “அந்தஸ்து” கொடுக்கப் பட்டதோ?
// …பலனை அவன் (முஸ்லிம்கள்) சுமக்க வேண்டும் என்ற கேவலமான எதிர்ப்பார்ப்பு சிலரிடம் தெரிகிறது.// உப்பு தின்னவன் தண்ணி குடிச்சிச்தான ஆகணும். இதில் எதிர்பார்ப்பு – அதிலும் கேவலமான எதிர்பார்ப்பு – என்பதற்கு இடமெங்கே?
// பாகிஸ்தானிலிருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு யூகங்களே ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளன..//
நீங்கள் எதைத்தான் ஆதாரங்கள் என்று ஒப்புக் கொள்வீர்கள்? இரண்டாம் உலகப் போரில் யூதருக்கு ஹிட்லர் நிகழ்த்திய கொடுமைகளை ஜெர்மானியர்களே ஒப்புக் கொள்ளும்போதுகூட அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றல்லவா கூறுகிறீர்கள்!
இந்த 26/11 நிகழ்வும் அதன் பின்னணியும் தெரிந்தபின்பும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றால் நான் என்ன சொல்ல?
//. ISI - சங்பரிவார தொடர்புகள்…// அப்டியா? அப்படி வேறு இருக்கிறதா? நல்லது .. இந்த இடத்திலாவது ISI என்று ஒன்று இருக்கிறது; அதற்கும் தீவிரவாதத்திற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
// எந்தமதவாத அரசியல் கட்சிக்கு இது அவசியமோ அவர்களே இத்தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்//
இலங்கைப் புலிகள் முட்டாள்தனமாக ராஜீவைக் கொன்று தங்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டிய நாட்டை விரோதித்துக் கொண்டதுபோல, இந்த இந்து மதவாதிகள் இந்த மகாலான் வெடிவைப்பில் மடத்தனமாக ஈடுபட்டது உங்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதென நினைக்கிறேன். இனி நீங்கள் அவர்களையும், அவர்கள் உங்களையும் மாற்றி மாற்றி கைகாட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்; நாங்கள் நடுவில் பிடித்துவைத்த குரங்காக எப்போதும் நிச்சயமற்ற ஒரு பயத்தில் இருக்க வேண்டியதுதான் போலும்.
இனி நீங்கள் சொல்லும் - // .. (இந்திய) அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டும்// என்பதற்கு வருவோம்.
அய்யா, இதை நாங்கள் – அதாவது என் போன்ற மத மறுப்பாளர்கள் – சொன்னால் அதற்குப் பொருளுண்டு. பெரும்பான்மையராக இருக்கும் இடங்களில் எங்கள் ஷாரியத் படிதான் எல்லாம் நடக்கவேண்டும் என்று சொல்லும் நீங்கள், சிறுபான்மையராக இருக்குமிடங்களில் பொதுச் சட்டங்களுக்கு – common civil code-களுக்கு – எதிர்ப்பாளராக இருக்கும் நீங்கள் அரசியலையும் மதத்தையும் பிரிக்கவேண்டுமென்று குரலெழுப்புவது – கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிவது போலில்லையா? அதுவும் நீங்கள் குறிப்பாக இந்திய அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்கிறீர்கள். அதென்ன இந்தியாவுக்கு மட்டும் அப்படி ஒரு கண்டிஷன் போடுகிறீர்கள்? பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இதெல்லாம் வேண்டாமா? ஆனால், என் போன்றவர்கள் எங்குமே அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்போம்.
//இஸ்லாத்தோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.//
குழப்புவதோ குழம்புவதோ நானில்லை…
//இலங்கைப் புலிகள் முட்டாள்தனமாக ராஜீவைக் கொன்று தங்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டிய நாட்டை விரோதித்துக் கொண்டதுபோல, இந்த இந்து மதவாதிகள் இந்த மகாலான் வெடிவைப்பில் மடத்தனமாக ஈடுபட்டது உங்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதென நினைக்கிறேன். //
மாலேகான்+ குண்டுவெடிப்புகளில் இந்து மதவாதிகள் 'புத்திசாலித்தனமாக' ஈடுபட்டிருந்தால் உங்களுக்கு வசதியாகப்போயிருக்குமோ?
//இனி நீங்கள் அவர்களையும், அவர்கள் உங்களையும் மாற்றி மாற்றி கை காட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்; நாங்கள் நடுவில் பிடித்து வைத்த குரங்காக எப்போதும் நிச்சயமற்ற ஒரு பயத்தில் இருக்க வேண்டியதுதான் போலும்.//
மாலேகானில் 'மடத்தனமாக' மாட்டிக்கொள்ளும்வரை குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள்தான் நடத்தினார்கள் என்று சொல்லப்பட்டபோதெல்லாம் 'பிடித்து வைத்த குரங்காக'த்தானே இருந்தீர்கள்?
கோவிலில் வெடித்தாலும் குப்பைத் தொட்டியில் வெடித்தாலும், மசூதியில் வெடித்தாலும் இன்னும் வேறு எங்கு வெடித்தாலும் அதற்கெல்லாம் முஸ்லிம்களே என்று சொல்லப்பட்டபோது பயமின்றி இருந்தீர்களா தருமி?
//பெரும்பான்மையராக இருக்கும் இடங்களில் எங்கள் ஷாரியத் படிதான் எல்லாம் நடக்கவேண்டும் என்று சொல்லும் நீங்கள், சிறுபான்மையராக இருக்குமிடங்களில் பொதுச் சட்டங்களுக்கு – common civil code-களுக்கு – எதிர்ப்பாளராக இருக்கும் நீங்கள் அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டுமென்று குரலெழுப்புவது – கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிவது போலில்லையா?//
அக்மார்க் இஸ்லாமிய நாடுகளாக 'நீங்கள்' நம்பிக் கொண்டிருக்கும் So Called நாடுகள் எதிலும் 100% ஷரிஆ சட்டங்கள் நடைமுறையில் இல்லை. கொஞ்ச நஞ்சமிருந்த ஆப்கானில் பாமியான் சிலைகளை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டவில்லை. சுருக்கமாகச் சொல்வதெனில் பெரும்பாலான அரபுநாடுகளில் நடப்பது ஷரிஆவிற்கு எதிரான மன்னராட்சி. இருந்தாலும் எந்த மன்னரும் ஷேக்கும் 'ரத' யாத்திரை செல்லவில்லை.
அரபுமண் அரபிகளுக்கு மட்டுமே என்று சொல்லும் அரபு தாக்கரேக்கள் அங்கு இல்லை. அரபு நாட்டிற்கு வந்துள்ள இந்துக்களே நேபாளத்திற்குச் செல்லுங்கள் என்று எந்த அரபு தொகாடியாவும் இல்லை! இத்தனைக்கும் அவை 'இஸ்லாமிய' தேசங்கள் என்று சொல்லிக் கொண்டுள்ளன. ஆனால் பாழாய்ப்போன மதசார்பற்ற தேசமென்று சொல்லும் இந்தியாவில்தான் 'பாழாய்ப்போன' சாமியார்களின் ஆட்சி நடக்கிறது.
Common Civil Code கிடக்குது. இன்னும் 33% சதவீதமே கொடுத்தபாடில்லை. இந்த இலட்சனத்தில் CCC பற்றி பேசலாமா? அப்படியே CCC க்கு ஒப்புக் கொண்டு விட்டால் மட்டும் 20% இடஒதுக்கீடு கொடுத்து விடுவார்களா? 2% பார்ட்டிகள் 95% 'நல்ல' பதவியில் 'ஒட்டி'க் கொண்டிருக்கிறார்களே அவர்களிடம்போய் "COMMON" ன்னு சொல்லிப் பாருங்களேன். 'பட்டை'யைக் கிளப்பிடுவாங்க!
//அதுவும் நீங்கள் குறிப்பாக இந்திய அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்கிறீர்கள். அதென்ன இந்தியாவுக்கு மட்டும் அப்படி ஒரு கண்டிஷன் போடுகிறீர்கள்? பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இதெல்லாம் வேண்டாமா? ஆனால், என் போன்றவர்கள் எங்குமே அரசியலையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்போம்.//
ராமரின் பெயரைச் சொல்லி சிறுபான்மையினர் பாதிக்கப்படாத ஒரேயொரு இந்திய மாநிலம் வேண்டாமய்யா ஒரு மாவட்டத்தையாவது சொல்ல முடியுமா? தெரியாமத்தான் கேட்கிறேன் இந்தியாவைப் பற்றி பேசும்போது ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்னு எல்லை'தாண்டுவது ஏன்? அதற்கு இந்திய முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும் என்று 'நீங்கள்" எதிர்பார்க்கிறீர்கள்?
பாகிஸ்தான் சரியில்லை என்றால் அத்வானி மாதிரி வந்து துணைப்பிரதமர் ஆகலாம். ஏன் அடுத்த பிரதமர்கூட ஆகலாமே? ஆப்கனில் பாமியான்சிலை இடிக்கப்பட்டதுபோல் பாபர் மசூதியை இடித்திருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல். 1 பதிவில் 'பெரும்பான்மை இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து ஏன் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது?(http://dharumi.blogspot.com/feeds/5706551098311299790/comments/default) என்ற தருமியின் நியாயத்தைப் படித்துவிட்டு,ஆசிரியராக இருந்தாரா அல்லது ஆச்சாரியராக இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. பெரும்பாலோரின் சமய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கமுடிந்த தருமிக்கு, பெரும்பான்மையினரின் நம்பிக்கையை மதித்து முஸ்லிம்கள் எப்படி பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்க முடியும் என்று கேட்கத் தோன்றவில்லையா?
முடிந்தமட்டும் இஸ்லாமிய எதிர்ப்புநிலை புரையோடிப்போயுள்ள தாங்கள் இன்னமும் நாத்திகன் என்று சொல்லித்திரிய வேண்டாம் பேராசிரியரே!
//குழப்புவதோ குழம்புவதோ நானில்லை… //
அப்படியா? :)
//அரபுமண் அரபிகளுக்கு மட்டுமே என்று சொல்லும் அரபு தாக்கரேக்கள் அங்கு இல்லை. அரபு நாட்டிற்கு வந்துள்ள இந்துக்களே நேபாளத்திற்குச் செல்லுங்கள் என்று எந்த அரபு தொகாடியாவும் இல்லை! இத்தனைக்கும் அவை 'இஸ்லாமிய' தேசங்கள் என்று சொல்லிக் கொண்டுள்ளன. ஆனால் பாழாய்ப்போன மதசார்பற்ற தேசமென்று சொல்லும் இந்தியாவில்தான் 'பாழாய்ப்போன' சாமியார்களின் ஆட்சி நடக்கிறது.//
பிற நாட்டினர் எவருக்கும் குடியுறிமை அவர்கள் கொடுப்பது இல்லை என்பதை உங்களுக்கேற்ப அழக்காகச் சொல்லி இருக்கிறீர்கள். அங்கு வேலைக்குச் செல்பவர்களில் சிலரில் இந்திய இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரபி பள்ளிவாசலில் ஓதுவதற்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
//அக்மார்க் இஸ்லாமிய நாடுகளாக 'நீங்கள்' நம்பிக் கொண்டிருக்கும் So Called நாடுகள் எதிலும் 100% ஷரிஆ சட்டங்கள் நடைமுறையில் இல்லை.//
நீங்கள் இதை வருத்தப்பட்டு சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா ? பெரும்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா ? புரியலையே
//கொஞ்ச நஞ்சமிருந்த ஆப்கானில் பாமியான் சிலைகளை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டவில்லை. //
ஆப்கானை டிவியில் காட்டினால் பாலையாகவும், சிதலமடைந்த வீடுகளாகத்தான் இருக்கிறது, சிலர் மயங்கியபடி சுவரில் சரிந்து சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இதுல மசூதி கட்ட பணத்துக்கு அவங்க எங்கப் போவாங்க. அரபுநாடுகளில் இருக்கும் பணம் இருந்தால், அல்லது நடிகைகளின் ஆட்டத்துக்கு அரபு நாடுகள் கொடுக்கும் பணம் ஆப்கான் தலிபான்களுக்கு கொடுத்து இருந்தால் பாமியன் மலையில் மசூதிக் கட்டி இருப்பார்கள்.
நல்லடியார்,
நான் சொல்வது எதையும் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதில் ரொம்பவுமே உறுதியாக இருக்கிறீர்கள்; நல்லது.
மாலேகான் குண்டு வெடிப்பு மடத்தனம் என்றால் எனக்குத் தெரிந்த தமிழில் அவ்வாறு செய்தது தவறு என்பதாகத்தான் பொருள். ஆனால் அவர்கள் செய்தது சரி; முட்டாள்தனமாக மாட்டிக்கொண்டதுதான் தவறு என்பதாகத் திரித்தால் -- அது உங்கள் பார்வையின் தவறு.
அதிலும் // மதவாதிகள் 'புத்திசாலித்தனமாக' ஈடுபட்டிருந்தால் உங்களுக்கு வசதியாகப்போயிருக்குமோ?// ரொம்ப குத்தலாகப் பேசிவிட்டதுபோல் நினைத்துக் கொள்கிறீர்கள் போலும்; போகட்டும்.
//மாலேகானில் 'மடத்தனமாக' மாட்டிக்கொள்ளும்வரை குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள்தான் நடத்தினார்கள் என்று சொல்லப்பட்டபோதெல்லாம் 'பிடித்து வைத்த குரங்காக'த்தானே இருந்தீர்கள்?//
மாலேகானில் + இன்னும் சில என்று சேர்த்துக் கொள்வோம். இதெல்லாம் இந்துத் தீவிரவாதிகள் என்றால் உடனே இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டே வைத்ததில்லை என்பது போல் சொல்லிச் செல்வது நல்லவேடிக்கைதான். Call a spade a spade, sir. அந்தக் குண்டுவெடிப்புகளைப் பற்றியும் பேசுங்கள் இப்படிப்பட்ட தீவிரவாதிகள் இருப்பது இஸ்லாமுக்கு இழுக்கைத் தேடித்தருவது என்றுகூட உங்களால் சொல்ல முடியவில்லை என்றால்....
நான் இரண்டுபேரையும்தான் குறை சொல்கிறேன் – எங்களை மனிதர்களாக வாழவிடுங்கள்; 'பிடித்து வைத்த குரங்காக ஆக்காதீர்கள் என்றுதானே கூறுகிறேன்.
//..நாடுகள் எதிலும் 100% ஷரிஆ சட்டங்கள் நடைமுறையில் இல்லை //
அரபுமண் அரபிகளுக்கு மட்டுமே என்று சொல்லும் அரபு தாக்கரேக்கள் அங்கு இல்லை//
இவைகளுக்கு, கோவியின் பதில்கள் / கேள்விகள் போதுமென நினைக்கிறேன்.
நான் CCC பற்றி சொன்னது என்ன? அதற்கும் இடப்பங்கீட்டுக்கும் என்ன தொடர்பு?
// ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்னு எல்லை'தாண்டுவது ஏன்?//
நீங்கள்தானே அய்யா இத்தியாவில் (மட்டும்) மதத்தையும் அரசியலையும் பிரிக்கவேண்டுமென்கிறீர்கள்? அது ஏன் இங்கு மட்டும் பிரிக்கவேண்டுமென்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். நீங்கள் ஏதோ ‘எல்லையே’ தாண்டாததுபோல் சொல்கிறீர்கள்!
//பாகிஸ்தான் … அத்வானி மாதிரி .. ஆப்கனில் பாமியான்சிலை .. பாபர் மசூதியை இடித்திருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா//
இதில் என்ன சொல்ல வருகிறீர்களென்றே புரியவில்லை.
அதோடு // பாமியான்சிலை இடிக்கப்பட்டதுபோல் பாபர் மசூதியை இடித்திருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?// என்று சொல்லி, உங்கள் வார்த்தைகளை என் வாய்க்குள் ஏன் திணிக்கிறீர்கள்?
// ஆசிரியராக இருந்தாரா அல்லது ஆச்சாரியராக இருந்தாரா..// ஆசிரியனாகத்தான் இருந்தேன். உங்களுக்கு எல்லாமே ‘அவாளாக’ தெரிந்தால் அதற்கு நானென்ன செய்வது?
// முடிந்தமட்டும் இஸ்லாமிய எதிர்ப்புநிலை புரையோடிப்போயுள்ள தாங்கள் இன்னமும் நாத்திகன் என்று சொல்லித்திரிய வேண்டாம் பேராசிரியரே!//
இதை எத்தனையாவது முறையாகச் சொல்லிவருகிறீர்கள் என்று நினைவில்லை. இது என்மீது நீங்கள் வைக்கும் அரதப் பழசான குற்றச்சாட்டு. நான் இஸ்லாமிய எதிர்ப்பாளன் தான்; ஆனால் இஸ்லாமியத்தை மட்டுமல்லாமல் எல்லா மதங்களையும் மறுப்பவன், எதிர்ப்பவன் என்பதைப் பலதடவை உங்களிடமே சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். “காதுள்ளவன் கேட்கக் கடவன்” . வேறென்ன சொல்ல…
மற்றபடி –
// ISI - சங்பரிவார தொடர்புகள் வெளிவரத் தொடங்கிய சூழலில்..//
//கேவலமான எதிர்ப்பார்ப்பு..//
// சுதந்திரப் போராட்டத்திற்கு வராத ராமர், … வந்தபிறகே இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியதை மறுக்கிறீர்களா?//
// நியூயார்க்கிலும், லண்டனிலும், பாலியிலும், நம்ம ஊர் கோவையிலும்,…//
// பாகிஸ்தானிலிருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு யூகங்களே ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளன..//
நீங்கள் எதைத்தான் ஆதாரங்கள் என்று ஒப்புக் கொள்வீர்கள்?//
----இவைகளைப்பற்றி ஏதும் சொல்லாது போய்விட்டீர்களே!
// //குழப்புவதோ குழம்புவதோ நானில்லை… //
அப்படியா? :)//
அப்படியேதான் :))
//அந்தக் குண்டுவெடிப்புகளைப் பற்றியும் பேசுங்கள் இப்படிப்பட்ட தீவிரவாதிகள் இருப்பது இஸ்லாமுக்கு இழுக்கைத் தேடித்தருவது என்று கூட உங்களால் சொல்ல முடியவில்லை என்றால்.... //
தீவிரவாதியின் பெயரை வைத்து அவன்சார்ந்த மதத்தைக் குறைசொல்லும் போக்கை பலமுறை பதிவிலும், பின்னூட்டங்களிலும் சொல்லிய பின்னரும், இப்பதிவில் என்முதல் பின்னூட்டத்திலும் மதபோதனைக்கு எதிராகச்செயல் படும் தீவிரவாதிகள் நிச்சயம் மதவாதியாக இருக்க முடியாது, மனிதகுல விரோதிகள் என்று பொதுப்படையாகச் சொல்லிய பின்பும் 'தீவிரவாதத்தைக் கண்டிக்கவில்லை' என்பது தருமியின் பிடிவாதமா அல்லது முன்முடிவா என்று தெரியவில்லை.
"இப்படிப்பட்டத் தீவிரவாதிகள் இருப்பது மனிதகுலத்திற்கே இழுக்கு"
//நான் CCC பற்றி சொன்னது என்ன? அதற்கும் இடப்பங்கீட்டுக்கும் என்ன தொடர்பு?//
மும்பை தாக்குதலுக்கும் மதவாத அரசியல் என்றதற்கும் CCC க்கும் என்ன தொடர்பு?
//நீங்கள்தானே அய்யா இத்தியாவில் (மட்டும்) மதத்தையும் அரசியலையும் பிரிக்கவேண்டுமென்கிறீர்கள்? அது ஏன் இங்கு மட்டும் பிரிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். நீங்கள் ஏதோ ‘எல்லையே’ தாண்டாததுபோல் சொல்கிறீர்கள்!//
இந்தியாவிலேயே விசுவாசமாகத் தங்கிவிட்டதால்தான் இந்தியா குறித்து பேசுகிறோம். பாகிஸ்தானில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் அதற்கு பூர்வீக இந்தியர்களாகிய நாங்கள் ஏனய்யா பொருப்பாக வேண்டும்? பெரும்பான்மை மதவாத அரசியலால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என்பதால் இந்தியாவில்தானே கூடாது என்று சொல்லமுடியும்.
கோவி.கண்ணன்,
என்ன சொல்லவருகிறீர்கள் என்று தெளிவாகப் புரியவில்லை உள்குத்தா? ;-(
அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களில் குறிப்பாக தமிழர்களை அரபு முதலாளிகள் விரும்புகிறார்கள் என்பது தெரியும். சுல்தான்கூட இதுகுறித்து ஒரு பதிவிட்டிருந்தார். தொழவைக்க அரபியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. முறையாகத் தொழத்தெரிந்த எவரும் தொழுகை வைக்கலாம்.
//ஆப்கானை டிவியில் காட்டினால் பாலையாகவும், சிதலமடைந்த வீடுகளாகத்தான் இருக்கிறது, சிலர் மயங்கியபடி சுவரில் சரிந்து சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இதுல மசூதி கட்ட பணத்துக்கு அவங்க எங்கப் போவாங்க. அரபுநாடுகளில் இருக்கும் பணம் இருந்தால், அல்லது நடிகைகளின் ஆட்டத்துக்கு அரபு நாடுகள் கொடுக்கும் பணம் ஆப்கான் தலிபான்களுக்கு கொடுத்து இருந்தால் பாமியன் மலையில் மசூதிக் கட்டி இருப்பார்கள். //
உண்மையில் தொழுவதற்கு கட்டிடமே தேவையில்லை. நடிகைகளின் ஆட்டத்துக்கு எந்த அரபு நாடு பணம் கொடுக்கிறது என்று தெரியவில்லை?!! தயவு செய்து 80களில் வெளியான தமிழ் சினிமாக்களைப் பார்க்காதீர்கள் ;-))
// பாகிஸ்தானிலிருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு யூகங்களே ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளன..//நீங்கள் எதைத்தான் ஆதாரங்கள் என்று ஒப்புக் கொள்வீர்கள்?// இவைகளைப்பற்றி ஏதும் சொல்லாது போய்விட்டீர்களே!//
மும்பை தாக்குதல் - கேட்கக்கூடாதக் கேள்விகள்!": பதிவில் ஏதோ சொல்லி இருக்கிறேன்.மற்றபடி ISI - இவர்கள் ISI முத்திரை குத்தப்பட்ட அக்மார்க் சுத்தமானவர்கள் என்று எங்கேனும் சொல்லவில்லை என்பதால் ISI பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?
//தீவிரவாதியின் பெயரை வைத்து அவன்சார்ந்த மதத்தைக் குறைசொல்லும் போக்கை பலமுறை பதிவிலும், பின்னூட்டங்களிலும் சொல்லிய பின்னரும், இப்பதிவில் என்முதல் பின்னூட்டத்திலும் மதபோதனைக்கு எதிராகச்செயல் படும் தீவிரவாதிகள் நிச்சயம் மதவாதியாக இருக்க முடியாது, மனிதகுல விரோதிகள் என்று பொதுப்படையாகச் சொல்லிய பின்பும் 'தீவிரவாதத்தைக் கண்டிக்கவில்லை' என்பது தருமியின் பிடிவாதமா அல்லது முன்முடிவா என்று தெரியவில்லை//
இளமையில் ஊதாரியாக மாறி ஒழுக்கம் கெட்டவனாக மாறிய ஒருவனைப் பற்றி பாதிக்கப்பட்டோர் முறையிடும் போது அவனுடைய தந்தை 'இவன் எனக்கு பொறந்தவனே இல்லை' என்று சொன்னால் அது அவரது மனைவிக்கும் இழுக்கு என்று அறியாமலேயே வெறுப்பில் சொல்லும் சொல்லுக்கு ஒப்பாக இருக்கும் அல்லவா. ஆனால் அவர் சொல்வது உண்மையாக இருக்க முடியாது.
//மதபோதனைக்கு எதிராகச்செயல் படும் தீவிரவாதிகள் நிச்சயம் மதவாதியாக இருக்க முடியாது,..//
நீங்க இப்படி அடிக்கடி சொல்லி தண்ணி தெளிச்சி விட்டுர்ரீங்க. கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா, இங்க இப்படி போட்டிருக்கே .. //“LeT is eagerly looking forward for the war and they don’t want India and Pakistan to hold discussions. They are looking beyond Kashmir and are talking about islamising the entire India in the next 10-15 years,” sources quoting Qasab said. New Ind Exp Dec 4 -pp7 II column IV para//
அதோடு, இந்த கசாப் அல்லது அவனது தலைவன் ‘சாச்சா’ அப்துல் ரஹ்மான் (of LeT) இப்படி ஆளுகளை நீங்கதான் தண்ணி தெளிச்சி மதவாதி இல்லைன்னு சொல்லிட்டீங்கல்ல .. அதுக்குப் பிறகும் தீவிரவாதிகள் மேல் எங்களுக்கு வர்ர கோபம் மாதிரி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது?சொல்லப்போனா மதத்திற்குக் கெட்ட பெயர் கொடுக்கிறான்களே அப்டின்னு உங்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே கோபம் வரணும்.அத விட்டுட்டு பல காரணங்களை லிஸ்ட் போடுறது எதுக்காக?
// மும்பை தாக்குதலுக்கும் மதவாத அரசியல் என்றதற்கும் CCC க்கும் என்ன தொடர்பு?// ஏங்க, நல்லா வாசிக்கலையா? நீங்க மதத்தையும் அரசியலையும் பிரிக்கணும்னு உபதேசம் பண்ணுனீங்க .. அப்படி நீங்க சொல்றது கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லெறியறது மாதிரில்ல இருக்குன்னு சொல்றதுக்காக சொன்ன சின்ன விளக்கம்தாங்க அது.
// பாகிஸ்தானில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் அதற்கு பூர்வீக இந்தியர்களாகிய நாங்கள் ஏனய்யா பொருப்பாக வேண்டும்?// அய்யோடா! நீங்க எதுக்குங்க பொறுப்பாகணும்? ஆனா ‘நம்ம ஆளுக’ கஷ்டப்படுறாங்களேன்னு எங்களோடு சேர்ந்து கவலைப்படணும்னு எதிர்பார்க்கிறோம். அது தப்பா? இல்ல, நாங்களும் கவலைப்படுறோமே அப்டின்னு ஒருவேளை நீங்க சொன்னீங்கன்னா .. I have to repeat: அதுக்குப் பிறகும் தீவிரவாதிகள் மேல் எங்களுக்கு வர்ர கோபம் மாதிரி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது?
// பெரும்பான்மை மதவாத அரசியலால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என்பதால் இந்தியாவில்தானே கூடாது என்று சொல்லமுடியும்.// இதைப் – பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விசேஷ உரிமைகள் (சலுகைகள் என்றுகூட நாங்கள் சொல்வதில்லை)- பற்றி நாங்களும்தான் பேசுகிறோம்!
// மற்றபடி ISI - இவர்கள் ISI முத்திரை குத்தப்பட்ட அக்மார்க் சுத்தமானவர்கள் என்று எங்கேனும் சொல்லவில்லை என்பதால் ISI பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?// என்ன சொல்றீங்கன்னு சரியா விளங்கலைன்னாலும், விடுங்க அதை. ஏன்னா இன்னும் இதைவிட முக்கியாமானவைகளை விட்டு விட்டீர்கள்!:
//சுதந்திரப் போராட்டத்திற்கு வராத ராமர், … வந்தபிறகே இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியதை மறுக்கிறீர்களா?//
// நியூயார்க்கிலும், லண்டனிலும், பாலியிலும், நம்ம ஊர் கோவையிலும்,…//
----இவைகளைப்பற்றி மறுபடியும் ஏதும் சொல்லாது போய்விட்டீர்களே! at least முதல் விசயத்துக்கு - அது நீங்க சொன்ன வார்த்தைகள்தான் - பற்றி கொஞ்சமாவது சொல்லுங்களேன்.
இன்னொண்ணு: நீங்க உங்க பதிவில் சொன்ன ஒரு விசயத்தை 200% ஒத்துக்குறேன்:// ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு." என்று மிகச் சரியாக ஞானி குறிப்பிட்டிருந்தார்.//
அதுனாலதான் எங்கெங்கு மதவெறி இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் எதிர்க்கிறோம். கோவியின் பதிவுகளுக்குக் காரணமும் அதே!
// பாகிஸ்தானிலிருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு யூகங்களே ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளன..//
நீங்கள் எதைத்தான் ஆதாரங்கள் என்று ஒப்புக் கொள்வீர்கள்?//
உங்க பதிவில் நீங்க குடுத்த லிஸ்ட் ரொம்ப நல்லா இருந்ததால் ..
இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கை 25042.
அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7000 க்கும் மேல்.
உங்க கணக்குப்படி 3 குண்டுவெடிப்புக்கு சங் பரிவார் காரணமுன்னு கண்டு புடுச்சிட்டீங்க.உங்க பெனிபிட்டுக்காக சம்ஜவ்தா வெடிகுண்டு சேத்து 4 நான் தர்ரேன். ஆனாலும் இன்னும் 25039 குண்டு வெடிப்பு நடந்துருக்கு. போய் அதையும் ஆராய்ச்சி பண்ணி உங்க "கண்டுபிடிப்பை" உலகுக்கு குடுங்க.
'நியாயப்படி, தர்மப்படி இப்படியும் கேக்கலாமுல்ல!'
//நீங்க இப்படி அடிக்கடி சொல்லி தண்ணி தெளிச்சி விட்டுர்ரீங்க. கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா, இங்க இப்படி போட்டிருக்கே .. //“LeT is eagerly looking forward for the war and they don’t want India and Pakistan to hold discussions. They are looking beyond Kashmir and are talking about islamising the entire India in the next 10-15 years,” sources quoting Qasab said. New Ind Exp Dec 4 -pp7 II column IV para//
800+ வருடங்கள் ஆட்சிப் பொருப்பில் இருந்தபோதே entire India வை islamising பண்ணாமல் 'மொகல் பிரியானியும் முட்டைப் புரோட்டாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களால் சிறுபான்மையாக,சாதிக்கட்சியைவிடக் குறைந்த MLA, MP களை வைத்துக் கொண்டிருப்பவர்களால் எப்படி in the next 10-15 years இல் islamising the entire India சாத்தியமாகும்? என்று அந்த Source இடம் "கேள்வி" கேட்டுச் சொல்ல முடியுமா தருமி?
//அதுக்குப் பிறகும் தீவிரவாதிகள் மேல் எங்களுக்கு வர்ர கோபம் மாதிரி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது?சொல்லப்போனா மதத்திற்குக் கெட்ட பெயர் கொடுக்கிறான்களே அப்டின்னு உங்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே கோபம் வரணும். அத விட்டுட்டு பல காரணங்களை லிஸ்ட் போடுறது எதுக்காக?//
மசூதியை இடித்தத் தீவிரவாதிகளைக்கூட நீங்கள் பெரும்பான்மையினர்னு 'தண்ணி தெளிச்சு' அல்லவா விடச்சொன்னீர்கள்? பிறகு எதை வச்சி தீவிரவாதிகள் மேல் 'உங்களுக்குக் கோபம் வர்ரதாகச் சொல்கிறீங்க?
//// மும்பை தாக்குதலுக்கும் மதவாத அரசியல் என்றதற்கும் CCC க்கும் என்ன தொடர்பு?// ஏங்க, நல்லா வாசிக்கலையா? நீங்க மதத்தையும் அரசியலையும் பிரிக்கணும்னு உபதேசம் பண்ணுனீங்க .. அப்படி நீங்க சொல்றது கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லெறியறது மாதிரில்ல இருக்குன்னு சொல்றதுக்காக சொன்ன சின்ன விளக்கம்தாங்க அது.//
CCCஐ மதவாத அரசியலாக்கியது யாரென்று தெரிந்தும் வசதியாக மறைத்து / மறந்து கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லெறியறதாகச் சொல்வது சரியா? முதலில் 'எல்லா' தீவிரவாதிகளுக்கும் CCC (Common Criminal Code) கொண்டு வந்துவிட்டு அந்த CCC குறித்துப் பேசுவீர்களா? ஏன்னா அந்த CCC ஐ விட தற்போதைய தேவை இந்த CCCக்குத்தான்!
//இதைப் – பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விசேஷ உரிமைகள் (சலுகைகள் என்றுகூட நாங்கள் சொல்வதில்லை)- பற்றி நாங்களும்தான் பேசுகிறோம்!//
வெறுமனே பேசி விட்டால் மட்டும் போதுமா? பெரும்பான்மையினராக இருக்கும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிய 2% பார்ட்டிகளிடம் போய் 'நாம்' எல்லோருமே Common தான்னு சொன்னீர்களா? 'எதிலும்' சேர்த்தியில்லாத நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ('எதிலும் சேர்த்தியில்லாத' என்பதை எந்த மதத்திலும்/சாதியிலும் சேர்த்தியில்லாத என்று வாசிக்கவும்)
//இவைகளைப்பற்றி மறுபடியும் ஏதும் சொல்லாது போய்விட்டீர்களே! //
ராமர் அரசியலில் நுழைக்கப்படும் முன்பு நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் எத்தனை? அதில் 'இஸ்லாமிய' ப்ராண்டுள்ளவை எத்தனை? என்று கொஞ்சம் உங்க Source இடம் Quote பண்ணச் சொல்லுங்களேன்.
//எங்கெங்கு மதவெறி இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் எதிர்க்கிறோம்.//
கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது.(பாபர் மசூதி மேட்டரைப் பற்றிய உங்களின் பதிவைப் படிக்கும்வரை ;-( இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதாகச் சொல்லப்படும் தீவிரவாதிகளால் islamising the entire Pakistan in the next 10-15 years கூட முடியாது. தன்னைப்போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புவது மதப்பற்று; தன்னைத் தவிர யாரும் நல்லா இருக்கக்கூடாது என்று விரும்புவது மதவெறி. இது யாரிடம் இருக்கிறது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் எதைத்தான் ஆதாரங்கள் என்று ஒப்புக் கொள்வீர்கள்?//
உங்க பதிவில் நீங்க குடுத்த லிஸ்ட் ரொம்ப நல்லா இருந்ததால் ..
இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கை 25042. அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7000 க்கும் மேல்.
உங்க கணக்குப்படி 3 குண்டுவெடிப்புக்கு சங் பரிவார் காரணமுன்னு கண்டு புடுச்சிட்டீங்க.உங்க பெனிபிட்டுக்காக சம்ஜவ்தா வெடிகுண்டு சேத்து 4 நான் தர்ரேன். ஆனாலும் இன்னும் 25039 குண்டு வெடிப்பு நடந்துருக்கு. போய் அதையும் ஆராய்ச்சி பண்ணி உங்க "கண்டுபிடிப்பை" உலகுக்கு குடுங்க.//
எங்கிருந்து இந்த புள்ளிவிபரத்தை 'சுட்டீர்கள்" என்று தெரியவில்லை. கடந்த நான்காண்டுகள் குறித்து 'மட்டும்' 'சுட்டி' இருப்பதால் அந்த 4 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பப்பட்டவர்களிடமிருந்து சுட்டிருப்பீர்கள் என்று வைத்துக் கொள்ளலாமா?
சங்பரிவாரத் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றை தவிர்த்து, மற்றவை முஸ்லிம்களே செய்தார்களென முடிவுக்கு வந்த உங்கள் ஆராய்ச்சியை விடவா நம்ம ஆராய்ச்சி உலகுக்கு அவசியம்?
ஏன் கடந்த 4 ஆண்டுகளை மட்டும் 'கணக்கில்' எடுத்துக் கொண்டீர்கள்? அதற்கு முந்தைய 1947லிருந்து கொல்லப்பட்ட உயிர்களை யார் கணக்கில் எழுதுவது? என்றும் நியாயப்படி, தர்மப்படி கேட்கக் கூடாது!
நல்லடியார்,
Missing the wood for the trees என்று சொல்வார்கள்; அதே போல் என் பதிவுகளில் நான் சொல்லவந்ததை விட்டு விட்டு நீங்கள் தனியான உங்கள் புரிதலில் என்னிடம் விவாதம் செய்வது புதிதல்ல. இந்தப் பதிவில் கூட அப்படி நடந்தது நினைவிலிருக்கிறது. இப்போதும் // மசூதியை இடித்தத் தீவிரவாதிகளைக்கூட நீங்கள் பெரும்பான்மையினர்னு 'தண்ணி தெளிச்சு' அல்லவா விடச்சொன்னீர்கள்?// என்று நீங்கள் சொல்வதிலிருந்து உங்கள் புரிதல் மீண்டும் தடம் மாறிவிட்டதல்லாமல் நான் சொன்னதை நீங்கள் அறவே புரிந்துகொள்ளவில்லை என்பதை உறுதிப் படுத்தியுள்ளீர்கள். எதற்கும் மறுபடியும் வாசியுங்கள். நான் சொன்ன பெரும்பான்மை, ஏன் அதைச் சொன்னேன்; அது யாரைக் குற்றவாளிக்கூண்டில் நிப்பாட்டும் முயற்சி என்பது புரிகிறதா என்று மீண்டும் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ள முயலுங்கள். பதில் கூறுவதற்கு முன்பு புரிதல் முக்கியமல்லவா?
// CCCஐ மதவாத அரசியலாக்கியது யாரென்று தெரிந்தும் வசதியாக மறைத்து…// அப்போ நீங்கள் பொதுச்சட்டதிற்கு மறுப்பாளர்கள் கிடையாது என்கிறீர்கள்; அப்படித்தானே?
//பெரும்பான்மையினராக இருக்கும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிய 2% பார்ட்டிகளிடம் போய் 'நாம்' எல்லோருமே Common தான்னு சொன்னீர்களா?//
உங்களோடு எனக்குள்ள பிரச்சனையே இதுதான். நான் இஸ்லாமைத் தொட்டுவிட்டால் ஓடிவந்து வாசிப்பதுபோல் என் மற்றப் பதிவுகளைக் கொஞ்சமேனும் பார்த்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டை என்னை நோக்கி நீட்டியிருக்க மாட்டீர்கள். நீங்கள் சொன்னதைவிடவும் அந்த “2% பார்ட்டிகளை” நிறையவே குற்றம் சொல்லியிருக்கிறேன். என்னைப் பார்க்கும் உங்கள் பார்வையே சேணம் மாட்டிய பார்வைதானே; அதனால்தான் அதெல்லாம் உங்கள் கண்ணில் படுவதில்லை.
//800+ வருடங்கள் ஆட்சிப் பொருப்பில் இருந்தபோதே entire India வை islamising பண்ணாமல் ' …//கவலைப்படுகிறீர்களோ?
// …எப்படி சாத்தியமாகும்? என்று அந்த Source இடம் "கேள்வி" கேட்டுச் சொல்ல முடியுமா தருமி?// அந்த Source-த்தான் அங்கேயே கொடுத்துள்ளேனே hyper link-ல். உங்களுக்கு மிகவும் “பிடித்தமான” source தான்! அந்த source-ன் இறுதியில் அது மத்திய அமைச்சகம் தந்த தகவல் என்று வேறு சொல்லியுள்ளது!
இன்னொரு source இங்கே இருக்கிறது. வேண்டுமானால் அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
// தன்னைப்போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புவது மதப்பற்று; தன்னைத் தவிர யாரும் நல்லா இருக்கக்கூடாது என்று விரும்புவது மதவெறி.//
இப்படி யாருங்க சொல்லிக்கொடுத்தது உங்களுக்கு? தன்னைப்போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புவது மதப்பற்று என்பது நிச்சயம் தப்புத்தான். தன்னைப்போல் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது மனிதநேயம். நீங்கள் சொல்வதில்: ‘தன்னைப்போல் எல்லோரும் இருக்க வேண்டும்’ என்பது தன் மார்க்க வழியில் மற்றோரும் இருக்க வேண்டும் என்பதாகவே ‘ நீங்கள் பொருள்கொள்வதாகத்தான் தெரிகிறது. அப்படியாயின் அது மிகத் தவறு.
//தன்னைத் தவிர யாரும் நல்லா இருக்கக்கூடாது என்று விரும்புவது மதவெறி.// இதற்குப் பெயர் பொறாமைங்க. இதற்கும் மதத்திற்கும் என்னங்க தொடர்பு???
// சங்பரிவாரத் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றை தவிர்த்து, மற்றவை முஸ்லிம்களே செய்தார்களென முடிவுக்கு வந்த உங்கள் ஆராய்ச்சியை விடவா நம்ம ஆராய்ச்சி உலகுக்கு அவசியம்?// என் ஆராய்ச்சியை விடுங்கள்; நீங்கள் ஓர் ஆராய்ச்சி செய்து மற்ற தீவிரவாதங்கள் யாரால், எப்போது செய்யப்பட்டன என்றுதான் சொல்லிவிடுங்களேன்.
மீண்டும் மீண்டும் நீங்கள் சொன்ன ஒன்றிற்கு விளக்கம் கேட்டு அயர்ந்து விட்டேன். இதோ நீங்கள் சொன்னது”// சுதந்திரப் போராட்டத்திற்கு வராத ராமர், இந்தியர்களை பிரித்தாளுவதற்காக வலுக்கட்டாயமாக இந்திய அரசியலுக்கு இழுத்து வந்தபிறகே இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியதை மறுக்கிறீர்களா?// இதற்கு இல்லை என்று நான் பதில் சொல்லிவிட்டேன். இருப்பினும் நீங்கள் சொன்னதின் முழுப்பொருள் சொல்லுங்கள் என்றேன். தரவில்லை. இப்போது நான் சொல்கிறேன். தவறெனில் திருத்துங்கள்.
ராமர் என்ட்ரி கொடுத்த பிறகு, அதாவது ராமர் ஜென்மபூமி அப்டின்னு ஒண்ணைச் சொல்லிக்கிட்டு மசூதியை இடித்த பிறகு தான் இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியது என்கிறீர்கள் அப்படித்தானே.
கடைசியாக, முக்கியமாக ….
ஏற்கெனவே பலமுறை உங்களிடம் சொல்லியாயிற்று. //? 'எதிலும்' சேர்த்தியில்லாத நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ('எதிலும் சேர்த்தியில்லாத' என்பதை எந்த மதத்திலும்/சாதியிலும் சேர்த்தியில்லாத என்று வாசிக்கவும்)// உங்களது இந்த அங்கதப்பாணியைப் போல் எனக்கு எழுதத்தெரியாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, எழுதமாட்டேன் என்பதைப்புரிந்து கொண்டு எழுதுகிறீர்களா? இல்லை, புனைப்பெயரில் முகமூடி போட்டு எழுதுவதால் மட்டுமே வரக்கூடிய “தைரியமா”? எழுத்தில் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கள் என்று ஏற்கெனவே பலமுறை சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். இதுவே இப்படிப்பட்ட எழுத்துகளை என்னை நோக்கி வீசுவது கடைசியாக இருக்கட்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.. சரியா?
தருமி,
*பாபர் மஸ்ஜிதினுள் சிலைகளை வைக்கும் சிலமணி நேரம்வரை முஸ்லிம்கள் தொழுகைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர் எனும்போது "பயன்படுத்தாத ஓரிடத்தை" என்பது சரியா?
*பயன்படுத்தாத இடம் என்றே வைத்துக் கொண்டாலும் பிறரின் உரிமையை அவர்களின் அனுமதியின்றி வன்முறையாகக் அபகரிப்பது முறையா?
*பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நம்புபவர்கள் பெரும்பான்மையினரா? எனில் இந்தியர்களின் எத்தனை சதவீதம் பேர்?
*உண்மையிலேயே தவறிழைத்தவர்களை/முஸ்லிம்களை வஞ்சித்தவர்களைக் குற்றவாளிக் கூண்டிலேற்றும் முயற்சியாகப் நீங்கள் பதிவிட்டிருந்தால் "பாபர் மஸ்ஜிதை இடித்தது தவறு என்று நேரடியாகச் எழுதியிருக்கலாமே? அதனைத் தொடந்த கலவரங்களின் எதிர்வினையாகவே குண்டு வெடிப்புகளும் என்று பலரும் சொல்லும்போது,வினையை மறைத்து எதிர்வினையைப் பற்றி மட்டும் பேசுவது நியாயமா?
*பொதுச்சிவில் சட்டம் - இதற்கும் தீவிரவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? மற்ற சிவில் சட்டங்களைப் பின்பற்றியும்,முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்புடைய, அரசியல் சாசண வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றான தனியார் சட்டங்களால் பெரும்பான்மையினருக்கு என்ன தீங்கு வந்தது?
//தன் மார்க்க வழியில் மற்றோரும் இருக்க வேண்டும் என்பதாகவே ‘ நீங்கள் பொருள்கொள்வதாகத்தான் தெரிகிறது. அப்படியாயின் அது மிகத் தவறு//
கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமாக,நேர்மையாக,பிறருக்குத் தீங்கிழைக்காமல், எல்லாவகையான அநீதிகளையும் எதிர்க்கும், இறைபக்தியாளராக இருக்கும் ஒருவரைப்போல் தன் சகமனிதனும் இருக்க வேண்டும் என்று விரும்புவது எவ்வகையில் "மிகத் தவறு" என்று விளக்குவீர்களா? அல்லது அவ்வாறு ஓர் முஸ்லிம் விரும்பக்கூடாதா?
//தீவிரவாதங்கள் யாரால், எப்போது செய்யப்பட்டன என்றுதான் சொல்லி விடுங்களேன்.//
உலகளவில் தீவிரவாதம் என்ற சொல்லாடல் அடக்குமுறையாளர்களாலும், ஆக்கிரமிப்பாளர்களாலுமே அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதைச்சுருங்கக் கூறிட முடியாது. ஒருகாலத்தில் விடுதலைப் போராட்டம் என்று சொல்லப் பட்டதே தற்போது தீவிரவாதம் என்று சொல்லப்படுகிறது.
அடக்குமுறை, அநீதி, ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடுவதையே நாம் தீவிரவாதம் என்கிறோம். ஆங்கிலேயருக்கு எதிராக இவ்வாறு போராடியே சுதந்திரம் பெற்றோம்! ஓர் முஸ்லிம் அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்பிற்கும், அநீதிகளுக்கும் எதிராகப் போராடினால் மட்டும் அதைத் தீவிரவாதம் என்பது நியாயமா தருமியாரே? அல்லது முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? ஒன்றுமே புரியவில்லை ஐயா!
//ராமர் என்ட்ரி கொடுத்த பிறகு, அதாவது ராமர் ஜென்மபூமி அப்டின்னு ஒண்ணைச் சொல்லிக்கிட்டு மசூதியை இடித்த பிறகு தான் இத்தகையத் தீவிரவாதங்கள் தலைதூக்கத் தொடங்கியது என்கிறீர்கள் அப்படித்தானே//
எனது கேள்வியையே உங்கள் பதிலாக்கி, உங்கள் பதிலை எனது பதிலாகத் நிறுவ முனைந்திருக்கிறீர்கள்! உலகளவில் மனிதர்கள் அனைவரும் சமம்; ஒரே தாய்-தந்தையிலிருந்து பிறந்தவர்கள். இறைவனின் படைப்பில் உயர்ந்தோர்-தாழ்ந்தோர் வேறுபாடு இல்லை என்று சொல்லப் பட்டபிறகே, தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கியது என்று நான்நினைக்கிறேன். நீங்கள்?
முஸ்லிம்கள் தீவிரவாதச்செயல்களில் ஈடுபடவே இல்லை என்று யாரும் சொல்லவில்லை. முஸ்லிம்களிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்களைவிட முஸ்லிம் அல்லாதவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். பிரிவினைவாதிகள், நக்சலைட்கள்,விடுதலைப்புலிகள்,உல்பா என்ற பெயர்களில் இருப்பவர்களெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகளல்ல.இவர்கள் எல்லோரும் தங்கள் தீவிரவாதச் செயல்களைக் விட்டுவிட்டு சாதுக்களாகி விட்டார்களா என்ன? 'முஸ்லிம் தீவிரவாதிகள்' குறித்து மட்டும் கவலைப் படும்போதே தீவிரவாதம் குறித்த கண்னோட்டத்தில் சந்தேகம் வருகிறது.
அப்புறம், எனது எழுத்து நாகரிகம் குறித்து - உலகளவில் பெரும்பாலோர் இறைத்தூதராக மதிக்கும் ஒருவரையும் அவர் போதித்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களையும் "கேள்வி கேட்கிறேன்"என்ற பெயரில் விமர்சித்த போது, விளக்கமென்று பதிலிட்டதை ஏற்காமல் "கேள்வி மட்டும் கேட்கும்' நாகரிகத்தைவிட நானொன்றும் அநாகரிகமாக எழுதவில்லை என்று மட்டும் சொல்ல முடியும். எனினும், சிலேடையாக, நகைச்சுவையாக உரையாடலில் / பின்னூட்டத்தில் நாகரிகம் தவறியிருந்தாலும் புண்படுத்தி இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயக்கமில்லை.
கேள்வி, மட்டும்தான் கேட்பேன் என்று பிடிவாதமாகயிராமல், மேற்கண்ட கேள்விகளுக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுப்பீர்கள் என்று நம்புவோமாக!
நல்லடியார்,
//*பாபர் மஸ்ஜிதினுள் சிலைகளை வைக்கும் சிலமணி நேரம்வரை முஸ்லிம்கள் தொழுகைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர் எனும்போது "பயன்படுத்தாத ஓரிடத்தை" என்பது சரியா?
*பயன்படுத்தாத இடம் என்றே வைத்துக் கொண்டாலும் பிறரின் உரிமையை அவர்களின் அனுமதியின்றி வன்முறையாகக் அபகரிப்பது முறையா?
*பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நம்புபவர்கள் பெரும்பான்மையினரா? எனில் இந்தியர்களின் எத்தனை சதவீதம் பேர்?//
புரிந்துகொள்ள மறுக்கிறீர்களா இல்லை புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. என் பதிவை மீண்டும் படித்தால் பதில் பெறலாம். இருந்தும் ஒன்று சொல்கிறேன். நான் முதலில் ஒரு கருத்தும், பின்னால் ஒரு புத்தகத்தாலும், டாக்குமென்ட்ரி படத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொண்டேன் / திருத்திக் கொண்டேன் என்று கூறியிருக்கிறேன்.
-------------------
//*உண்மையிலேயே தவறிழைத்தவர்களை/முஸ்லிம்களை வஞ்சித்தவர்களைக் குற்றவாளிக் கூண்டிலேற்றும் முயற்சியாகப் நீங்கள் பதிவிட்டிருந்தால் "பாபர் மஸ்ஜிதை இடித்தது தவறு என்று நேரடியாகச் எழுதியிருக்கலாமே? //
நான் எப்படி என் கருத்தை மாற்றிக்கொண்டேன் என்பதற்கான காரணத்தைக் கூற அப்பதிவு. நீங்க சொல்வது போல்/எதிர்பார்ப்பதுபோலெல்லாம் என்னால் எழுத முடியுமா என்ன?
--------------------------
அதனைத் தொடந்த கலவரங்களின் எதிர்வினையாகவே குண்டு வெடிப்புகளும் என்று பலரும் சொல்லும்போது,வினையை மறைத்து எதிர்வினையைப் பற்றி மட்டும் பேசுவது நியாயமா?
நீங்கள் சொல்லும் வினையும் தவறென்று கூறியுள்ளேன்.எதிர்வினையையும் தவறு என்றுதான் கூறுகிறேன்.
----------------------------------
*பொதுச்சிவில் சட்டம் - இதற்கும் தீவிரவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? மற்ற சிவில் சட்டங்களைப் பின்பற்றியும்,முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்புடைய, அரசியல் சாசண வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றான தனியார் சட்டங்களால் பெரும்பான்மையினருக்கு என்ன தீங்கு வந்தது?
இதற்கும் நீங்கள் என் பின்னூட்டத்தை மீண்டும் படிக்கவேண்டும். நீங்கள் மதமும் அரசியலும் பிரிந்திருக்கவேண்டுமென்று சொன்னதை ஒப்புக் கொண்டு, ஆனால் அதை நீங்கள் சொல்கிறீர்களே என்று இரு காரணங்கள் காட்டி எழுதியுள்ளேன்.
----------------------------------
//கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமாக,நேர்மையாக,பிறருக்குத் தீங்கிழைக்காமல், எல்லாவகையான அநீதிகளையும் எதிர்க்கும், இறைபக்தியாளராக இருக்கும் ஒருவரைப்போல் தன் சகமனிதனும் இருக்க வேண்டும் என்று விரும்புவது எவ்வகையில் "மிகத் தவறு" என்று விளக்குவீர்களா? அல்லது அவ்வாறு ஓர் முஸ்லிம் விரும்பக்கூடாதா? //
இதைத்தான் proselytization என்பார்கள். கிறித்துவர்களிடம் உள்ள இந்த “விரும்புதலை” எதிர்ப்பவன் நான். அதே கருத்தை நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் சொல்லும் "கட்டுப்பாட்டுடன் ... என்று விரும்புவது" தவறல்ல. ஆனால் என்னவோ ஒரு இஸ்லாமியனால் /கிறிஸ்துவனால் மட்டுமே முடியும்; அதனால் இங்கே வந்துவிடு என்று கூறும் அந்த proselytization தவறு என்றேன்; என்கிறேன்.
------------------
// முஸ்லிம் அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்பிற்கும், அநீதிகளுக்கும் எதிராகப் போராடினால் மட்டும் அதைத் தீவிரவாதம் என்பது நியாயமா தருமியாரே? அல்லது முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? ஒன்றுமே புரியவில்லை ஐயா!//
புரியாதுதான். இந்தப் பதிவு பேசும் தீவிரவாதம் மதத்தீவிரவாதம். அதைப் பற்றித்தான் நானும் பேச வந்தேன்.
---------------------------
அப்புறம், எனது எழுத்து நாகரிகம் குறித்து - உலகளவில் பெரும்பாலோர் இறைத்தூதராக மதிக்கும் ஒருவரையும் அவர் போதித்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களையும் "கேள்வி கேட்கிறேன்"என்ற பெயரில் விமர்சித்த போது, விளக்கமென்று பதிலிட்டதை ஏற்காமல் "கேள்வி மட்டும் கேட்கும்' நாகரிகத்தைவிட நானொன்றும் அநாகரிகமாக எழுதவில்லை என்று மட்டும் சொல்ல முடியும்.//
உங்களுத்தான் நபி இறைத்தூதர்; எல்லோருக்கும் அல்ல. ஏசு கிறித்துவர்களுக்குக் கர்த்தர்; எல்லோருக்கும் அல்ல. ஆகவே இவர்களைப்பற்றிக் கேள்வி எழுப்புவதே தவறு போல் நினைக்கிறீர்கள். அதற்கு நானென்ன செய்ய முடியும்? கேள்வி எழுப்புவதோ விமர்சிப்பதோ தவறல்ல. முறையற்ற வார்த்தைகளை எங்காவது பயன்படுத்தியிருந்தால் மட்டுமே கோபப்படுவது முறை.
// விளக்கமென்று பதிலிட்டதை ஏற்காமல்..// அதென்னங்க, உங்க விளக்கத்தை நான் கட்டாயமாக ஏற்கவேண்டுமா என்ன? Should I not be convinced by your answers? அதோடு ஏதோ என் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லிவிட்டதாக எப்போதும் கூறுவீர்கள். நிச்சயமாக இல்லை. என் கேள்வித்தொகுதிகளை மீண்டும் பார்த்து எல்லா கேள்விகளுக்குமா பதில் தந்து விட்டீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு மீண்டும் நான் உங்களை தர்க்கத்திற்கு அழைக்கிறேன் என்பது பொருளல்ல. உங்கள் மனத்திருப்திக்காக மட்டுமே அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
--------------
// பதிலிட்டதை ஏற்காமல் "கேள்வி மட்டும் கேட்கும்' நாகரிகத்தைவிட நானொன்றும் அநாகரிகமாக எழுதவில்லை..//
அப்படியா? சரி.
//எனினும், சிலேடையாக, நகைச்சுவையாக உரையாடலில் / பின்னூட்டத்தில் நாகரிகம் தவறியிருந்தாலும் புண்படுத்தி இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயக்கமில்லை.//
// 'எதிலும்' சேர்த்தியில்லாத நீங்கள் சொன்னால்..// உங்கள் standard-ல் இதெல்லாம் சிலேடை/ நகைச்சுவை …அப்படித்தானே? நல்லது.
நல்லடியார்,
கடைசியாக, எனக்கு அலுப்பாக இருக்கிறது. போதுமென்று நினைக்கிறேன்.
கருத்துரையிடுக