பின்பற்றுபவர்கள்

22 நவம்பர், 2008

இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை !

இனவெறுப்பு எப்போதும் இருமுனை கத்தி போன்றதே... ஆரிய இனவெறியில் யூதர்களுக்கு எதிராக ரத்த தாண்டவம் ஆடிய ஹிட்லர் அழிந்தது உலக வரலாறு, மக்கள் இனமாக அறியப்பட்ட காலகட்டங்களிலிருந்தே இயற்கை சீரழிவுகள் தவிர்த்து தனி இன வெறுப்புக்கு எந்த இனமும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. ஆஸ்திரேலிய பழங்குடிகள் அங்கு கூடிய வெள்ளையர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு கொன்று குவித்த பிறகும் அந்த இனம் இன்றும் அழியாமல் தான் இருக்கிறது, தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட வெள்ளையின அரசு தற்பொழுது அவர்களை மூத்த குடிகளாக அறிவித்து நல்ல முறையிலேயே நடத்துகிறது.

இந்தியாவில் ஊடுறுவிய ஆரியர்கள் திராவிடர்களிடம் போரிட்டு முற்றிலும் அழிக்க முடியாது என்பதால் தங்களை முற்போக்கு சமூகமாக மாற்றிக் கொண்டது மட்டுமின்றி ஆரிய - திராவிட கலப்பில் பிறந்தவர்களையெல்லால் பார்பனர் ஆக்கிக் கொண்டு இன்றும் பெரும்பாண்மை திராவிடர்களிடையே தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் கொள்ளையடித்துவிட்டு திரும்ப ஓடிக் கொண்டு இருந்த கஜினி முகமது போன்ற இஸ்லாமிய வேற்று நில மன்னர்களுக்கு பிறகு வந்த இப்ராஹிம் லோடி, அவரை வென்ற பாபர் இங்கு கொள்ளையடித்து செல்வதைவிட இந்தியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செலுத்துவது சிறந்ததாகப் பட்டது, ஆரம்பத்தில் இந்தியர்களை இஸ்லாமியர் ஆக்கும் கடும் முயற்சிக்கள் போன்றவை பலனளிக்காமல் போகவே, பேரரசர் ஹுமாயுனின் மகன் அக்பர் அவர் காலத்தில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இருவரை இணைக்கும் தீன் இலாகி என்ற புதிய மதத்தை உருவாக்கினார் ஆனால் அவரது காலத்துக்கு பிறகு அது வெற்றிபெறவில்லை, என்றாலும் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம், வாளால் பரப்பபட்டது என்ற குற்றச் சாட்டுகளெல்லாம் அதன் பிறகு அடங்கியது எனலாம்.

நாடுகளாக அறியப்படாத காலகட்டத்தில் இனக்குழுக்கள் மட்டும் தான் இருந்தது, இன்றைய நாடுகள் அனைத்துமே மொழி வாரி மாநிலங்களைப் போல் தனிமொழியும், தனி இன அடையாளமும் கொண்டவை, குடியேறிய நாடுகளில் மட்டும் தான் பல்வேறு மொழிகளும், பல்வேறு இனங்களும் இருக்கும், அந்த நாடுகள் எந்த ஒரு இனத்துக்கும் சொந்தமான இடமாக இருந்தது இல்லை என்பதால் அங்கு சென்ற இனக்குழுக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்தை அரசியல் கொள்கையாக ஆக்கிக் கொண்டது, அதிலும் ஆதிக்க இனங்களே ஆதிக்கம் செலுத்தியது. எந்த இன வெள்ளையராக இருந்தாலும் தோலை வைத்துதான் அந்த அரசியலும் அதாவது வெள்ளைத் தோல் உள்ளவர் அனைவரும் ஓர் இனம் என்ற உணர்வாக வெள்ளையர்கள் அனைவரும் செயல்பட்டனர். இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான்.

மற்ற உருவான நாடுகள், சிங்கப்பூர் போன்று உருவான நாடுகளில் அது இல்லை, பல்வேறு ஆசிய மக்கள் ஒன்று கூடி நீண்ட நாள் வாழ்ந்த இடம் என்பதால் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் அந்த நாட்டையே சொந்த நாடாக ஆக்கிக் கொண்டனர். சீனர்கள் பெரும்பான்மையினர் பவுத்த சமயத்தினராக இருப்பதால் சமய அடிப்படையில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்தால் ஈழத்தமிழர் நிலமை இன்னும் மோசமாகும். நல்லவேளை பார்பன பணியா இந்துத்துவ அரசியல் போல் அதனை மதம் சார்ந்தவையாக சீனர்கள் கொண்டு நினைக்காமல் இருப்பதற்குக் காரணம் மனிதனும் மதமும் ஒன்றல்ல என்று நினைப்பதேயாகும்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ செல்கிறது.....

இன அழிப்புகளால் முற்றிலும் முடியவே முடியாது என்பதால் தான் பல்வேறு நாடுகள், தங்கள் இன நலனுக்கான அரசியலை மதத்துக்கு திருப்பிவிட்டு, மத அரசியலுக்கும் மத வெறியைத் தூண்டுவதில் ஈடுபடுகின்றன.

தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்கிற இலங்கை அரசின் கனவெல்லாம் என்றுமே நிறைவேறாது, ஏனெனில் ஈழத்தமிழர்கள் ஈழத்தைவிட வெளிநாடுகளில் தான் மிகுதியாக இருக்கின்றனர். அண்மையில் உலகம் முழுவதும் ஒலிம்பிகின் போது சீனர்களிடம் திபத்தை மீட்க திபத்தியர்கள் ஆர்பாட்டம் செய்து பல இடங்களில் ஒலிம்பிக் ஜோதியை பறித்து அணைத்து எதிர்ப்பைக் காட்டியது போல், கனன்று கொண்டு இருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைத் தீ இலங்கையில் அனுமார் வாலினால் தீக்கிரையாக்கிய கதை போல், இலங்கை பூசல்கள் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும்...எப்போதும் அமைதியை திரும்பவே விடாது. பேச்சு வார்த்தை அல்லது ஈழவிடுதலை இரண்டில் ஒரு தீர்வுதான் இலங்கையில் அமைதி திரும்ப வழிவகுக்கும். இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதே இல்லை.

12 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

மேலைய நாட்டினில் இன அழிப்பு நடந்திருக்கிறது... நமக்கு தெரியாத இனங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்... கருப்பு என்றாலே உலக மக்களுக்கு கேவலமாக தானே இருக்கிறது...

மோகன் கந்தசாமி சொன்னது…

///இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும்///

கோவிஜி, இது பற்றி ஜாதா மேட்டர் போல்கே நிம்பில்கி சலாம்

வாசகன் சொன்னது…

கோவி,பயங்கர வாதமும் உலகில் எங்குமே வெற்றி பெற்றதும் இல்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி 12:14 PM, November 22, 2008
///இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும்///

கோவிஜி, இது பற்றி ஜாதா மேட்டர் போல்கே நிம்பில்கி சலாம்
//

சென்ற முறைக்கும் சென்ற முறை நடந்த உலகக் கோப்பை போட்டியை நான்கு பார்பனர்களுடன் உட்கார்ந்து பார்த்து போது... அவர்கள் இந்தியா தோற்கவேண்டும் என்ற ரீதியிலேயே பேசி பேசி மட்டம் தட்ட தொடர்ந்து ஆஸ்திரேலியாவை புகழ்ந்து புகழ்ந்து பேச ... ஹூம் வெறுத்துப் போனது எனக்குத்தான் தெரியும்.

நாகை சிவா சொன்னது…

//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான். //

அப்படியாஆஆஆஆஆ

அப்ப கருப்பு பார்பனர்கள் எல்லாம் இந்தியாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக இருப்பார்களா? பாலஸ்தீனத்தில் கருப்பு தோல் இல்லையே...

இந்திய பார்பனர்கள் தோல் வெள்ளையாக இருப்பதால் மட்டுமே அவர்கள் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் ஆகி விட முடியாது.

நீங்க பாத்த 4 வரை மட்டும் வைத்து இந்த பதிவுனா நான் எஸ்கேப்

சீனு சொன்னது…

//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும்//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா 7:37 PM, November 22, 2008
//இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான். //

அப்படியாஆஆஆஆஆ

அப்ப கருப்பு பார்பனர்கள் எல்லாம் இந்தியாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக இருப்பார்களா? பாலஸ்தீனத்தில் கருப்பு தோல் இல்லையே...

இந்திய பார்பனர்கள் தோல் வெள்ளையாக இருப்பதால் மட்டுமே அவர்கள் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் ஆகி விட முடியாது.

நீங்க பாத்த 4 வரை மட்டும் வைத்து இந்த பதிவுனா நான் எஸ்கேப்
//

எல்லோரையும் இல்லிங்க 'லேபிள்' வைத்துக்கொண்டு அதனைப் பெருமை என்றும் மற்றவன் தாழ்ந்தவன், சூத்திரன் என்று நம்புபவர்களையும் தான் குறிப்பிட்டேன். அப்படி நினைக்காதவங்க தன்னை லேபிளோடு சொல்லிக் கொள்ள மாட்டார்கள், லேபிளை வெளியே செல்லி பெருமை தேடுபவர்கள் குறித்து நீங்களும் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// VIKNESHWARAN said...
மேலைய நாட்டினில் இன அழிப்பு நடந்திருக்கிறது... நமக்கு தெரியாத இனங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்... கருப்பு என்றாலே உலக மக்களுக்கு கேவலமாக தானே இருக்கிறது...
//

கருப்பு கேவலமானது என்று சொல்வது வெறும் தோல் அரசியல் தான், விழிகளில் கருமை இருக்கிறது என்பதற்காக மனக் கருமை கொண்டோரும் அதனை பிடிங்கி எரிவதில்லை.

ஹேமா சொன்னது…

//தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்கிற இலங்கை அரசின் கனவெல்லாம் என்றுமே நிறைவேறாது,//
நன்றி கண்ணன்.காத்திருக்கிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வாசகன் said...
கோவி,பயங்கர வாதமும் உலகில் எங்குமே வெற்றி பெற்றதும் இல்லை!
//

சரிதான். பயங்கரவாதம் தற்காலிக வெற்றி (மட்டுமே) பெரும்.

வால்பையன் சொன்னது…

வெள்ளையா இருந்தா பாப்பானா?
அப்போ கருப்பா மாநிறமா இருக்குற பாப்பான் உண்மையான பாப்பான் இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
வெள்ளையா இருந்தா பாப்பானா?
அப்போ கருப்பா மாநிறமா இருக்குற பாப்பான் உண்மையான பாப்பான் இல்லையா?
//

பால் + இனர் > பாறினர் > பார்பனர் ஆகியது. பால்போன்ற வெண்மை நிறத்தோர் என்பதாக பொருள். மற்றவற்றை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பழங்குடிகள் தவிர்த்து அனைத்து இனமும் ஒன்றோடு ஒன்றாக கலக்காதிருந்தது இல்லை. இதில் திராவிடரும் அடக்கம் தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்