பின்பற்றுபவர்கள்

10 நவம்பர், 2008

மிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல !

தத்துவ நூல்களை வாசிப்பென்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுயநலம் கூட எதாவது ஒரு கோட்பாட்டிற்குள்ளேயே அடங்கும் என்பதால் உலகின் அசைவுகள், செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவம் சார்ந்தவையே என்று என்னால் கூறமுடியும்.

அன்புத் தம்பி ஈப்போ விக்னேஷ்வரன் சிங்கை வருகையின் போது அன்புப் பரிசாக ஒரு நூலை கொடுத்தார். மற்றவர்களுக்கு கொடுத்ததைவிட அளவில் மாறுபட்டு இருந்ததைக் கூட நான் அதைப் பெரும் போது கவனிக்கவில்லை. பரிசு கிடைப்பதே பெருமகிழ்ச்சி என்ற நினைப்பு திறந்து பார்க்கும் ஆர்வத்தைக் குறைந்திருந்தது. மேலும் மேலே பரிசுத்தாள் சுற்றப்பட்டு இருந்ததால் வீட்டில் சென்று பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். பெரிய நிகழ்வாக இல்லாமல், நினைவு பரிசாக, பொதுவாக நாம் யாருக்காவது அன்பு பரிசு கொடுத்தால், நாம் அங்கிருக்கும் போதே... அவர்கள் அதைத் திறந்து பார்த்து எதாவது சொல்லவேண்டும் என்றே எதிர்ப் பார்ப்போம். மாறுபட்ட ஒரு நூலைக் கொடுக்கும் விக்கி அதே போன்று நினைத்திருப்பார் போலும், 'அண்ணே பிரிச்சு பார்த்திங்களா' ன்னு கேட்டார். சந்திப்பு கூட்டம் முடியட்டும் வீட்டில் சென்று பார்க்கிறேன் என்று சொன்னேன். அதன் பிறகுதான் தெரிந்தது, இவ்வளவு ஆவலாக கேட்பவர், புத்தகத்தை நான் திறந்தாவது பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதே. வீட்டுக்கு திரும்பும் போது பிரித்துப் பார்த்தேன்.

"மிர்தாதின் புத்தகம்" - மூலம் மிகெய்ல் நெய்மி, தமிழில் புவியரசு என்றிருந்தது. அன்றும் இரவு 10 மணி அளவில் பதிவர் நண்பர்களுடன் இருந்ததால் படிக்க முடியவில்லை, மறுநாளும் அலைச்சல், விக்கியை வழியனுப்பும் போது மீண்டும் கேட்டார். புத்தகத்தைப் படிச்சிங்களா ? ... 'இல்லப்பா நேரம் கிடைக்கல' ..படிங்க உங்களுக்கு பிடிக்கலாம், என்று கூறிவிட்டு சிறு முன்விளக்கமும் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் தான் படித்தேன். பின் அட்டையில் ஓசோவின் குறிப்பாக

"உலகின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன, அவையாவும் இதற்கு ஈடாகாது, நைமி எல்லா நூற்றாண்டிற்கும் சேர்த்தே இவரே மாபெரும் எழுத்தாளர்"
- என்பதை வாசித்த போது, நல்ல படைப்பாக இருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இதைத் தமிழில் உருவாக்க எடுத்துக் கொண்ட நல்ல அனுபவ முன்னோட்டத்துடன், புத்தகத்தில் இருக்கும் நாவல் பகுதியின் சிறுகுறிப்புடன் புத்தகம் தொடர... அதன் உள்ளீடை நோக்கி பயணம் செய்தேன்.

ப்ளாட்டோ, சீசர் போன்ற தத்துவ ஞானிகள் மேலை நாடுகளில் தோன்றி இருந்தாலும், இஸ்லாம் / கிறித்துவ மதங்களில் தத்துவங்கள் என்பதைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். ஆனால் இந்த புத்தகத்தில் இவ்விரு மதங்களில் வரும் நோவாவின் வரலாற்றைத் தொடர்பு படுத்தி முழுக்க முழுக்க தத்துவமாகவே எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் நாயகன் 'மிர்தாத்'தின் ஒவ்வொரு உரையாடல் வரிகளும் தேர்ந்தெடுத்த சொற்களான தத்துவங்கள், அவை அறிவுரையா, பேருண்மையா என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னி எழுதப்பட்டு இருக்கிறது.

"கடவுள் பல அல்ல, கடவுள் ஒன்றுதான், மனிதரின் நிழல்கள் பலவாக இருக்கும் வரை அது பலதான். நிழல் இல்லாதவன், ஒளியில் இருப்பவன், நிழல் அற்றவனே ஒன்றே கடவுள் என்பதை உணர்வான், கடவுளே ஒளிதான், ஒளியால் தான் ஒளியை உணரமுடியும்"

நிழல்கள் அற்றது ஒளிதானே, மனிதனின் நிழல் என்று ஆசிரியர் சொல்வது மனிதனை மூடி இருக்கும் மனத்திரைகளைத்தான்.

"மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனை பற்றிப் பிடித்துக் கொள்ளும் பற்றுவதை விட்டுவிட்டாலே பற்றுறற்று போகும்"

(பற்றுக பற்றற்றான் பற்றினை - என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது)

எதை நாம் மிகவும் விரும்புகிறோமோ, அது கிடைக்காமல் போகும் போதும், நம் கைவிட்டு நழுவிச் செல்லும் போது சொல்ல முடியாத சோகத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடும்

"அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பே மரணத்தின் சீழ், ஆனால் இரத்தம் நரம்புகள் வழியாக தடையற்று பாய்வது போல், அன்பு உடலெங்கும் பாயவேண்டும், இரத்தம் தடைபட்டால் நோய்தான் வரும், வெறுப்பு என்பது தடைபட்ட அன்புதான்...அன்பில் அதிகம் குறைவெல்லாம் கிடையாது, அதை அளக்க முயற்சித்தாலே அது நழுவி சென்றுவிடும்"

நூல் பேசுவது இன்னும் ஏராளம் ஏராளம்...மரணம், பிறப்பு, மறுபிறப்பு...விபத்துகள், அதற்கான காரணங்கள், புலனடக்கம், நாவடக்கம், பேராசை, பற்று அறுத்தல், பிரபஞ்ச சுழற்சி, கடவுள், ஆதாம் ஆப்பிள்...ஆன்மிகம் தொடர்பில் அனைத்தையும் பேசுகிறது.

முப்பரிமாணங்களை ஒருங்கே அமைந்த நூலாகத்தான் இதனை உணர்ந்தேன். அதாவது நாவல் என்று படித்தால் நாவல், தத்துவம் என்று படித்தால் பகவத் கீதையைப் போல் சிறிய அளவிளான தத்துவ நூல், உளவியல் என்று பார்த்தாலும் முழுக்க உளவியல் என்பதாக உணரப்படும் ஒரே நூல். ஒப்பீடு அளவில் சுவாமி விவேகாநந்தரின் ஞானயோகம் போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை வெகு இயல்பான உரையாடல்களாக அமைக்கப்பட்டு இருக்கிறது.


கதைப்படி நோவா வழி வரும் ஒரு மடலாயத்தின் 8 துறவிகளுக்கு தலைவராகும் மிர்தாதின், ஆன்மா மற்றும் உடல் வாழ்க்கை பற்றிய முழு அறிவை போதனை செய்கிறார், அவரை மதிக்காத முன்னாள் மடாலயத் தலைவரான 8 ஆம் துறவி பின்னர் தவறை உணர்ந்து கொள்ள, 8 ஆம் துறவியைத் தேடிப் போகும் ஒருவர் மூலம் அந்த அறிவுரைகள் வெளி உலகத்துக்கும் தெரியவருகிறது.


இந்நூலை விமர்சனம் செய்வது எளிதல்ல, பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி என தத்துவம் மற்றும் முற்போக்கு, ஆன்மிகம் என எதாவது ஒன்று பேசப்படுக்கிறது, பெருக்கெடுத்த ஆற்றின் நீரை கையளவு நுரையுடன் அள்ளிக் காட்டி இதுதான் அந்த ஆறு என்று சொல்ல முனையும் அளவுக்குத்தான் என்னால் அது பற்றி சொல்ல முடிகிறது.

கவிஞர் புவியரசுவின் மொழிப்பெயர்ப்பு சிக்கல் இருப்பதை அவரே ஒப்புக் கொண்டாலும் நல்ல நேர்த்தியாகவே மொழிப் பெயர்த்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். மொழிப்பெயர்ப்பே இப்படி என்றால் மூல நூலை அதன் மூல மொழியிலேயே படித்தால் அதன் கருத்தாழம் இன்னும் மிகுதியாக இருக்குமோ என்று நினைக்க வைத்திருக்கிறார்.



புத்தகம் கிடைக்கும் இடம்:
கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை
சென்னை 017
தொலைபேசி எண் ; +91 44 2433 2682

இந்நூலை நினைவு பரிசாக எனக்கு வழங்கிய பதிவர் விக்னேஷ்வரன் மற்றும், நூலை பரிந்துரைத்த திரு ஜவகர் ஆகிய இருவருக்கும் நன்றி

தொடர்புடைய மற்றொரு சுட்டி : The Book of Mirdad - துக்ளக் மகேஷ்

14 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

வாவ்!

எனக்கும் துக்ளக் மகேஷ் இந்தப் புத்தகத்தைத்தான் கொடுத்தார்.

என்னையும் நம்ம்ம்ம்ம்ம்பி, ஆங்கில மூலத்தைக் கொடுத்திருக்கிறார். எழுத்துக் கூட்டிப் படிக்க தாமதமாகிக் கொண்டிருக்கிறது!!!

:-)

பரிசல்காரன் சொன்னது…

அட. வெகு நாட்களுக்குப் பிறகு நான் மீ த ஃபர்ஸ்ட்!

உங்க சிங்கை சிங்கங்களெல்லாம் சிங்கள் டீ அடிக்கப் போய்விட்டார்கள் போல...

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
அட. வெகு நாட்களுக்குப் பிறகு நான் மீ த ஃபர்ஸ்ட்!

உங்க சிங்கை சிங்கங்களெல்லாம் சிங்கள் டீ அடிக்கப் போய்விட்டார்கள் போல...
//

பரிசல்,
தமிழ்மணம் சொதப்பல், பதிவை இணைக்க முடியல, அதனால் தான் யாரும் பார்கல

கோவி.கண்ணன் சொன்னது…

// பரிசல்காரன் said...
வாவ்!

எனக்கும் துக்ளக் மகேஷ் இந்தப் புத்தகத்தைத்தான் கொடுத்தார்.

என்னையும் நம்ம்ம்ம்ம்ம்பி, ஆங்கில மூலத்தைக் கொடுத்திருக்கிறார். எழுத்துக் கூட்டிப் படிக்க தாமதமாகிக் கொண்டிருக்கிறது!!!

:-)
//

எனக்கும் ஆங்கில புத்தகம் கிடைத்திருன்ந்தால் படித்து முடித்திருப்பேனா என்பது சந்தேகமே, இதுவரை வாங்கிய ஆங்கில நூல்களில் எதையும் முழுதாக வாசித்தது இல்லை.

RAHAWAJ சொன்னது…

கோவி அவர்களுக்கு, நல்ல முறையில் புரிந்து அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்,நம்மை நாம் மிர்தாதாக நினைத்து படித்தால் இதன் ஆழம் இன்னும் புரியும்,தங்களை நேரில் சந்திக்கும் போது இதன் ஆங்கில பதிவை தருகிறேன் படியுங்கள் -- ஜவகர்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

புத்தகத்தை அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்... இப்புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும் போது புது புது கோனங்கள் நமக்கு கிடைக்குமென திரு.ஜவஹர் கூறுகிறார். நானும் ஒரு முறை தான் படித்தேன்...

Unknown சொன்னது…

படிக்கும்போதே இன்னும் ஓரிரண்டை எடுத்துப் போடாமல் விட்டு விட்டீர்களே என எண்ண வைக்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி.

//நிழல்கள் அற்றது ஒளிதானே, மனிதனின் நிழல் என்று ஆசிரியர் சொல்வது மனிதனை மூடி இருக்கும் மனத்திரைகளைத்தான்//
மனத்திரை எனும் இருள் பலவாக இருந்தாலும் 'ஒரு ஒளி' போதும் அவையெல்லாம் அகல - சரியா ஜிகே?

எனக்கு இதுதான் நினைவுக்கு வருகிறது. 'இறைவனை நீங்கள் பார்த்தீர்களா' என நபியவர்களிடம் வினவப்பட்டபோது 'அவனோ ஒளியானவன். அவனை எப்படி (இந்த ஊனக் கண்களால்) காண முடியும்' என்று கேட்டார்களாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
படிக்கும்போதே இன்னும் ஓரிரண்டை எடுத்துப் போடாமல் விட்டு விட்டீர்களே என எண்ண வைக்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி.
//

எதைவிடுவது எதை எடுப்பது என்பதால் எடுத்துப் போடவில்லை.

//மனத்திரை எனும் இருள் பலவாக இருந்தாலும் 'ஒரு ஒளி' போதும் அவையெல்லாம் அகல - சரியா ஜிகே?
//

சரிதான். மனதில் பல திரைகளை வைத்துக் கொண்டுதான் பார்க்கிறோம் என்று சிலவரிகள் இந்த நூலில் வரும்.

//எனக்கு இதுதான் நினைவுக்கு வருகிறது. 'இறைவனை நீங்கள் பார்த்தீர்களா' என நபியவர்களிடம் வினவப்பட்டபோது 'அவனோ ஒளியானவன். அவனை எப்படி (இந்த ஊனக் கண்களால்) காண முடியும்' என்று கேட்டார்களாம்.
//

இது நல்லா இருக்கு. இறைவன் - பேரொளி அனைத்து மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். வள்ளலார் கூட இறை குறித்து கூறுகையில் அருட்பெரும் ஜோதி என்று ஒளியாகத்தான் சொல்கிறார்.

இறைவனின் 'பெயர்' குழப்பம் தானே அனைத்திற்கும் அடிப்படையான குழப்பமாக ஆகிவிட்டது. சூரியனைப் போல் இறைவனும் பொதுவானவன் என்று எவரும் நினைப்பதில்லை. :(

Sanjai Gandhi சொன்னது…

* ► November (11) - 10 நாளில்.

* ▼ September (56)

* ► August (39)

* ► July (32)

* ► June (35)

* ► May (11)

* ► April (34)

மே மாசம் மட்டும் கொஞ்சம் ரெஸ்ட் போல..:)

வேற ஒன்னும் சொல்றதுகில்ல.. முடிஞ்சா சுத்தி போடுங்க.. கம்ப்யூட்டரை இல்ல.. கம்ப்யூட்டருக்கு... :))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான விமரிசனம்...புத்தகத்தை வாங்க தூண்டியுள்ளது..நன்றி கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்ஜெய்,

மே மாதம் ஊருக்குப் போய் வந்தோம்ல

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் 9:25 PM, November 10, 2008
சஞ்ஜெய்,

மே மாதம் ஊருக்குப் போய் வந்தோம்ல

:)//

தொழிலாளர் தினம் அப்பதானே வருது! அதான் கொஞ்சம் குறைவா இருக்கு!!

Mahesh சொன்னது…

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... விக்கி உங்களை படித்து எழுதச் சொன்னார்னு தெரிஞ்சதிலிருந்தே எப்ப்ப எழுதுவீங்கன்னு பாத்துக்கிட்டுருந்தேன். இதை எனக்கு அறிமுகப் படுத்திய என்னோடு வேலை செஞ்ச ரோலண்ட் டும்மர் ஒரு லெபனீயர். அவர் மூலத்தையே படிச்சுருக்காரு. அவர் ரொம்ப அனுபவிச்சு சொல்லும்போதே படிக்கற ஆர்வம் வந்துடுச்சு. படிச்ச பிறகு... அதை வார்த்தைல சொல்ல முடியாது.

Unknown சொன்னது…

Arumaiyana pathivu, online pdf copy iruntha anuppunga thozare

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்