பின்பற்றுபவர்கள்

15 நவம்பர், 2008

திராவிடன், ஆரியன் என்று சொல்வது மிசனெறிகளின் சதி...

கிறித்துவ இஸ்லாமியர்கள் பிரித்தார்களா ? ஆப்பு வைத்தார்களா ?

உலகை ஆளுமைக்கு உட்படுத்தியவை மூன்று மதங்கள் கிறித்துவம், இஸ்லாம் மற்றும் வருணாசிர கறை படியாத இந்திய சமயமான பெளத்தம்.
மற்றவையெல்லாம் கலாச்சார கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதால் அந்தப் பகுதியை விட்டுத்தாண்டாதவை, உதாரணம் இந்திய சமயப் பிரிவுகளில் உள்ள சநாதனம் (வேதவழிபாடு), சைவம், வைணவம் இவை சேர்ந்துதான் இந்து என்று சொல்லப்படுகிறது. வருணத்தை எதிர்க்காததால் ஜைன மதமான சமணமும் இந்தியாவைக் கடக்கமுடியாமல் ஏன் சேட்டுகளையே கடக்க முடியாமல் முடங்கியது. இந்திய சமயங்கள் அனைத்தும் பெளத்தம் தவிர்த்து உலகத்தாருக்கு பொதுவானவை என்ற ரீதியில் வழியுறுத்தல் செய்ய முடியாமல் போனது அவற்றில் இருந்து வில(க்)க முடியாத உருவவழிபாடே. பிள்ளையாரையும், இந்திய முகங்களை உடைய கடவுளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றால் உலகில் உள்ள மற்ற இனங்கள் ஏற்குமா ? ஏற்காது புத்தரை ஜப்பானிய முகத்துடனும், சீன முகத்துடனும் தான் ஜப்பானியர், சீனர் வணங்கி வருகின்றனர். சீனப் பெண் போல் லட்சுமி இருந்தால் இந்தியருக்கு ஐயுறுவாக இருக்குமல்லவா. இந்திய சமயங்கள் உலகிற்கான மதம் என்றோ, உருவ வழிபாடு கோட்பாடுகள், உருவமற்ற வழிபாடான பரப்பிரம்மம் (எல்லாம் மாயை என்கிற மாபெரும் பேரண்டப் பொய்) என்னும் தத்துவங்களெல்லாம் உலகத்தாரால் ஒருகாலமும் ஏற்கப்படாது.

இந்தியாவில் பிரிவினையை விதைத்தது கிறித்துவ / இஸ்லாமியர்களே என்ற கருத்து பலமாக நம்மிடையே வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் ? ஒருபிரிவினர் அடிமையாகவே சுரணையற்று இருப்பதைச் காட்டி விழித்துக் கொள் என்று சுட்டிக் காட்டியது பிரிவினைவாதமா ? ஆனால் நடந்தது இவைதான். இஸ்லாமியர்களின் அரசியல் ரீதியான படையெடுப்புகளைக் சுட்டுகிறார்கள் இவற்றை எல்லோருமே செய்திருக்கிறார்கள், இங்கே நடந்த சைவ / வைணவ சண்டைகள் அனைத்தும் அரசியல் ரீதியானவைதான். வருணாசிரம மரம் செழித்து வளர்ந்து கொண்டிருந்த போது அதன் வேரில் வெண்ணீரைக் கொட்டி பட்டுப் போக வைத்தது கிறித்துவ இஸ்லாமிய மதங்களின் பிரச்சாரம் என்றால் அவை உண்மைத்தான்.

இன்றைய புலம்பல்களாக நாம் கேட்பது,

திராவிடன் இல்லை, ஆரியன் இல்லை இவையெல்லாம் கால்டுவெல் என்னும் கிறித்துவ மதவெறியாளனின் சூழ்ச்சி, இப்படி ஒருபக்கம் குறை சொல்லும் கூட்டம் தான். சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களது என்றுக் காட்ட குதிரைக்கு கொம்பு வரைந்து முயற்சித்து பார்த்தது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆரியர்களது என்று நிருவுவதன் மூலம் இந்திய நாகரீகம் ஆரியர்களைப் பின்பற்றியது என்று காட்டவே அவ்வாறு முயன்று தோற்றார்கள். ஆரியன் என்ற சொல்லே வெளிநாட்டுக்காரன் சதி என்று ஒருபக்கம் பரப்பிக் கொண்டு, மறுபக்கம் எல்லாம் ஆரிய வழி வந்தது என்று முனைந்துக் காட்டுவது இரட்டை வேசம் தானே ?

இங்கே ஒருவர் எழுதுகிறார்

உங்களுக்கு தெரியுமா?

1. திராவிட இயக்கங்கள் உண்மையிலேயே கால்டுவெல் எனும் கிறிஸ்தவ மதவெறியனால் இந்தியாவை துண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
2. திராவிட இனம் இந்தியர்களே ௮ல்ல எனும் தேசதுரோக கருத்தினை பரப்பியவன் இவன் தான்.


முதல் கட்டுரைக்கும் இரண்டாவதிற்கும் உள்ள தலைப்பின் முரண்பாடுகளையே பாருங்கள்.

முதலில் சொல்லவருவது திராவிட / ஆரிய என்ற இனமே இல்லை, எல்லாம் பாதிரியின் கட்டுக்கதை, இரண்டாவதில் உள்ளது அவன் உங்களை (திராவிடர்களை) ஆப்பிரிக்காரன் என்று சொல்கிறான் என்ற தூண்டல்.

ஒருகாலத்தில் கண்டங்கள் இல்லாது ஒரே நிலப்பரப்பாக இருந்தத போது ஆப்ரிக்க என்ற நாடும் இந்தியா என்ற நாடும் இருந்ததா ? இந்தியர்கள் ஆப்பிரிக்கவிலிருந்து வந்திருக்கலாம் என்பது ஊகமே அன்றி அதில் உண்மை என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குறியது மட்டுமே. ஆனால் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததற்கு தெளிவான வரலாறே இருக்கிறது, கைபர், போலன் கனவாய் என்று சொல்லிப் பாருங்கள், எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆங்கிலத்தில் பயன்படுத்தும் (அப்பா, அம்மா) பாதர், மதர் என்ற சொல்லுக்கும் சமஸ்கிரத பித்ரு, மாத்ரூ என்ற சொல்லுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், இவற்றின் வேர் மற்றும் மூலம் ஆராய்ந்தாலே ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்களா என்று தெரிந்துவிடும். எந்த மொழியும் தந்தை / தாய் என்ற சொல்லை பிறமொழிகளில் இருந்து அமைத்துக் கொண்டிருக்கவே இருக்காது.

கிறித்துவ / இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்த அளவுக்கு வெறியோடு நடந்து கொண்டார்கள் அதுவும் கிறித்துவ தேவலயங்களை மதப்பரவல்களைச் சாக்கிட்டு ஏன் தாக்குகிறார்கள் என்பதற்கானக் காரணமே அவர்கள் ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் சொல்லியதே ஆகும். கிறித்துவர்கள் செய்த பிரிவினை என்பது திராவிடம் என்ற இனத்தை பிரித்து அறிந்து அதன் தனித்தன்மையை வெளிச்சமிட்டது ஆகும். அதுவே ஆரியர்களுக்கு ஆப்பாக அமைந்தது.

ஆரியர் இல்லை, திராவிடர் இல்லை, எல்லாம் கிறித்துவ மிசனறிகளின் சதி என்றால், ஆரிய பவனுக்கும், ஆரிய சமாஜிற்கும் பெயர் வைத்தது எந்த பாதிரியின் பிரிவினைவாதச் செயல் ? ஆரிய பவன் என்று பெருமையாகப் போட்டுக் கொள்வதும் கிறித்துவ மிசநெறிகளின் தூண்டுதலால் ?

நரசூஸ் காப்பியுடன் இட்லி வடை சாம்பாருடன் தயார் செய்து விற்கும் உங்கள் உணவகங்களுக்கு இன்று முதல் 'ஆரிய பவன்' என்று பெயர் சூட்டுகிறேன் என்று எந்த இஸ்லாமிய மன்னர் பெயர் வைத்தார் ?

உடம்பிலும் பெயரிலும் சாதீய அடையாளத்தை சுமந்து கொண்டு பிரிவினைவாதம் செய்பவர் யார் ? புலம்பல்களை விட்டுவிட்டு புற அடையாளங்களை நீக்கிக் கொள்ளுங்கள், அதன் பிறகு ஆரிய - திராவிட அடையாளமே காணாமல் போகும்.

9 கருத்துகள்:

நவநீதன் சொன்னது…

me the first...

R. பெஞ்சமின் பொன்னையா சொன்னது…

கோவியாரே,

நல்ல பதிவு. காவிக்கும்பல் இன்னும் என்னென்னவெல்லாம் செய்து அவர்களின் மூடக் கொள்கைகளையும், சாதிக் கொடுமை என்னும் அருவருப்பான சிந்தனையையும் நிலை நாட்டவும், உண்மை என நிரூபிக்கவும் முயன்றாலும் தோல்வியையே த்ழுவி வந்துள்ளனர். மேலும் தோல்வியையே தழுவுவர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

I am the third person Single!

மணிகண்டன் சொன்னது…

********** எந்த மொழியும் தந்தை / தாய் என்ற சொல்லை பிறமொழிகளில் இருந்து அமைத்துக் கொண்டிருக்கவே இருக்காது *********

ஏன் ?

MK சொன்னது…

அருமையான பதிவு!

ராஜ நடராஜன் சொன்னது…

//கிறித்துவ / இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்த அளவுக்கு வெறியோடு நடந்து கொண்டார்கள் அதுவும் கிறித்துவ தேவலயங்களை மதப்பரவல்களைச் சாக்கிட்டு ஏன் தாக்குகிறார்கள் என்பதற்கானக் காரணமே அவர்கள் ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் சொல்லியதே ஆகும்.//

உங்களின் இந்த வாதம் எனக்குச் சரியாகப் படவில்லை.கிறுஸ்தவ மிஷினரிகள் அன்றும் இன்றும் இந்தியர்களுக்கு கல்விக்கு வித்திட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் கல்வி என்ற பொதுத்தொண்டுக்கும் அப்பால் மதமாற்றம் என்ற நிலைக்கு மக்களை கொண்டு செல்வதாலேயே பிரச்சினைகள் வெடிக்கின்றன என நினைக்கிறேன்.யார் ஒருவருக்கும் எந்த மதம் பிடிக்கிறதோ அந்த மதத்தினை தொழுவதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவதில்லை.ஆனால் சிறிது சிறிதாக ஒரு அடையாளத்தை மாற்ற நினைப்பது சரியல்ல.மத்திய கிழக்கு நாடுகளில் கூட மண்ணின் மைந்தர்கள் யாரும் கட்டாய அடையாளங்களாக யாரையும் மதம் மாற்றுவதில்லை.இந்த மாதிரி வேலைகளையெல்லாம் அவர்களாலேயே பக்கீர் என மறுக்கப்படும் மதப் பற்றுக் கற்பிதம் செய்யும் சித்தர்கள் நம் மண் மக்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் has left a new comment on your post "திராவிடன், ஆரியன் என்று சொல்வது மிசனெறிகளின் சதி.....":

//கிறித்துவ / இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்த அளவுக்கு வெறியோடு நடந்து கொண்டார்கள் அதுவும் கிறித்துவ தேவலயங்களை மதப்பரவல்களைச் சாக்கிட்டு ஏன் தாக்குகிறார்கள் என்பதற்கானக் காரணமே அவர்கள் ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் சொல்லியதே ஆகும்.//

உங்களின் இந்த வாதம் எனக்குச் சரியாகப் படவில்லை.கிறுஸ்தவ மிஷினரிகள் அன்றும் இன்றும் இந்தியர்களுக்கு கல்விக்கு வித்திட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் கல்வி என்ற பொதுத்தொண்டுக்கும் அப்பால் மதமாற்றம் என்ற நிலைக்கு மக்களை கொண்டு செல்வதாலேயே பிரச்சினைகள் வெடிக்கின்றன என நினைக்கிறேன்.யார் ஒருவருக்கும் எந்த மதம் பிடிக்கிறதோ அந்த மதத்தினை தொழுவதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவதில்லை.ஆனால் சிறிது சிறிதாக ஒரு அடையாளத்தை மாற்ற நினைப்பது சரியல்ல.மத்திய கிழக்கு நாடுகளில் கூட மண்ணின் மைந்தர்கள் யாரும் கட்டாய அடையாளங்களாக யாரையும் மதம் மாற்றுவதில்லை.இந்த மாதிரி வேலைகளையெல்லாம் அவர்களாலேயே பக்கீர் என மறுக்கப்படும் மதப் பற்றுக் கற்பிதம் செய்யும் சித்தர்கள் நம் மண் மக்களே. //

ராஜ நடராஜன் ஐயா,

ஒருவர் மதம் மாறுவதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பாருங்கள், உங்களையும் என்னையும் மாற்றிவிட முடியுமா ? நான் ஒரு குழுவில் இருக்கிறேன். அதே குழுவில் உள்ளவர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும் என்னை வைத்திருந்து என்னை மனிதனாகவே மதிக்காது இருந்தால், மதிக்கிறேன் என்று அழைப்பவர்களை நம்பிச் செல்வது மட்டுமே என்னுடைய முடிவாக இருக்கும். அப்படி அழைப்பவர்கள் மதிக்கிறார்களா ? என்பது அடுத்தக் கேள்வி. ஆனால் என்னைப் பொருத்த அளவில் நான் மதிக்கும் இடத்தை மட்டுமே நாடுவேன். சரி அவன் மதம் மாறவேண்டாம், ஆனால் அவனுக்கு மதத்தில் இருக்கும் வழிபாட்டு உரிமைகளைக் கூட மறுத்து 'நீ கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும்' என்று சொல்பவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்க வேண்டும், அவர்களை தண்டித்துவிட்டு அடுத்ததாக கட்டாயமாக மதம் மாற்றுபவர்கள் பற்றிப் பேசுங்கள், எப்படி அவமானப் படித்தினாலும் பொருத்துக் கொண்டு இருக்க, மனிதர்கள் ஒன்றும் தொழுவத்தில் கட்டிய மாடுகள் இல்லை. அனைத்து சாதியினரும் அர்சகராக வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கும் போதே ஆகமம், புனிதம், புண்ணாக்கு என்று பேய்க் கூச்சல் போடும் விசநரிகளை வீழ்த்திவிட்டு மிசநெரிகள் பற்றிப் பேசினால் நானும் ஏற்றுக் கொள்வேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
********** எந்த மொழியும் தந்தை / தாய் என்ற சொல்லை பிறமொழிகளில் இருந்து அமைத்துக் கொண்டிருக்கவே இருக்காது *********

ஏன் ?
//

வடமொழி தேவபாஷை என்ற புனிதம் கற்பிக்கப்பட்டது அதற்குரிய அப்பா அம்மா என்ற மாத்ரு, பித்ரூ என்ற சொற்கள் கிரேக்கம், லத்தீனை ஒத்தே இருப்பது ஏன் ? ஏனென்றால் இவையெல்லாம் ஒரே இடத்தில் உருவானைவை. வடமொழிக்கு தமிழைப் போலவே தனித்தன்மை இருந்திருந்தால் அப்பா அம்மா ஆகிய சொற்களுக்கு வடமொழியில் தனியான சொற்கள் இருந்திருக்கும். நான் இங்கே குறிப்பிட்ட எந்த மொழி என்ற பொருள் இயற்கையாக தனித்து இருக்கும் மொழிகள் பற்றிய கூற்று.

கோவி.கண்ணன் சொன்னது…

http://dictionary.reference.com/browse/mother
Origin:
bef. 900; ME fader, OE fader; c. G Vater, L pater, Gk patr, Skt pitar, OIr athir, Armenian hayr
Origin:

bef. 900; ME mother, moder, OE mōdor; c. D moeder, G Mutter, ON mōthir, L māter, Gk mtēr, Skt mātar-. As in father, th was substituted for d, possibly on the model of brother

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்