பின்பற்றுபவர்கள்

18 நவம்பர், 2008

முதல்வர் பேச்சு - ஒரே குழப்பமைய்யா !

புறச் சின்னங்கள் அல்ல பிரச்னை!: 'சோ'.அனந்த நாராயணன், தலைமையாசிரியர் (ஓய்வு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: கவிதை எழுதுவது முதல்வரின் பொழுதுபோக்கு. ஆனால், பல சமயங்களில், அவரது கவிதை விவாதப் பொருளாக அமைந்து விடுகிறது. அவரது சமீபத்திய கவிதையொன்று, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்து விட்டது. "இந்துக்கள் புறச் சின்னங் கள் அணிவதை தவிர்த்துவிட்டால், ஜாதி, சமய வேறுபாடுகள் குறையும்' என்று கூறியுள்ளார். சாமர்த்தியாக, மற்ற மதத் தவரின் புறச் சின்னங்கள், தரிப்புகளை கிண்டலடிப்பதை தவிர்த்து விட்டார். ஏனெனில், இந்துப் பழக்க வழக்கங்களை மட்டும் தானே சாட முடியும். புறச்சின்னங்கள் அணிவதை ஒழிப்பதின் மூலம், மக்கள் குருதியில் பரம்பரையாக ஊறியுள்ள ஜாதிப்பற்று ஒழிந்து விடுமா? இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடு மனதளவில் களையப்பட்டால் தானே, ஜாதி சமய சமரச நோக்கு உருவாகிடும்? மனதிற்கண் மாசு இலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற' என்ற வள்ளுவன் வாக்கும், இதையே வலியுறுத்துகிறது. உண்மையிலேயே ஜாதி சமயங்களிடையே சமரசப் போக்கு உண்டாக வேண்டுமாயின், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமைய வேண்டும்.

*********

முதல்வர் பேச்சுக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் என்னய்யா தொடர்பு ?

முதல்வர் சாதி, சமய அடையாளமாக சொல்லி இருப்பது இந்து சமயத்தில் புற அடையாளமாக பூணூல், வடகலை நாமம், தென்கலை நாமம், திருநீற்றுப்பட்டை என்பதைக் குறித்ததாகவே நினைக்கிறேன். சாதி மத என்று சொல்லாமால் சாதி சமய வேறுபாடுகள் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார், இதுல இந்து மதத்தை மட்டும் தான் குறைச் சொல்றார், குல்லாவையோ, சிலுவையையோ குறைச் சொல்லவில்லை என்று 'சோ' அனந்த நாரயணன் திருக்குறள் காட்டெல்லாம் சொல்லி என்ன மாதிரி கவலைப்படுகிறார். அச்சச்'சோ'

ஒரே குழப்பமைய்யா, குழப்பம், முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள் !

முடியல்ல........ :)

4 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

mee the firstu.....

மணிகண்டன் சொன்னது…

It does not matter what was told ! people understand the meaning from the person who said it ! That is the bane of the society. Whether it is cho or kalaignar, it is the same !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பகுத்தறிவுப் பகலவன் கலைஞர் அய்யாவைக் கண்டிப்பவர்களுக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். நதி மூலம் ரிஷி மூலம் பார்த்து அவருக்கு குடைச்சல் கொடுப்பதே இப்போதைய டிரண்டாகப் போய் விட்டது. இதை கலைஞர் புரிந்து கொண்டு, இந்தமாதிரி கவிதைகள் எல்லாம் எழுதாத தனது மகன் ஸ்டாலினிடம் காலத்தோடு பதவியை ஒப்படைக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

Robin சொன்னது…

இட ஒதுக்கீட்டினால் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற முடியும் என்பதற்கு தமிழ்நாடு ஒரு சிறந்த முன்னுதாரணம். ஆதிக்க சக்திகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று குழப்புவதற்கும் ஒதுக்கப்பட்டவர்கள் முன்னேறி வருகிறார்களே என்ற எரிச்சல்தான் காரணம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்