1989ல் ஒரு இரவில் சென்னையில் இருந்து நாகையை நோக்கிய பேருந்து பயணம், முன் இருக்கையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் அப்படியே தூங்கிப் போனேன். திடிரென்று காதைப் பிளக்கும் இடியொலி. தலையெல்லாம் கற்கண்டு அபிஷேகமாக கண்ணாடிச் சிற்கள். பயந்து விழித்துப் பார்த்தால் பெரிய கும்பல் வரிசையாக பேருந்துகளை நிறுத்தி பேருந்து கண்ணாடிகளை உருட்டுக் கட்டையால் நொறுக்கிக் கொண்டிருந்தது... எங்கும் அலறல் ஒருபக்கம் ...எங்கும் 'அடிங்கடா...நொறுக்குங்கடா... கொலை வெறி கோஷம் இன்னோர் பக்கம்... திண்டிவனம் தாண்டி மேல்மருவத்துத்தூர் அருகில் தான் அந்த இடம்... வன்னியர்களின் போராட்டம் என்றார்கள். ஒரு இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு கண்களை குருடாக (கண்ணாடி இன்றி) பேருந்துகள் புறப்பட்டன. வீட்டிற்குச் சென்று தலையைச் சுரண்டும் போதெல்லாம் இரத்தத் துளிகளுடன் சிறு கண்ணாடி சிற்களை எடுத்துக் காட்டினேன். மேல்சட்டை பாக்கெடிலெல்லாம் கண்ணாடி துண்டுகள், வீட்டில் இருந்த பெற்றோர் பயந்து போனார்கள். கண்ணாடி உடைப்புடன் இல்லாமல் பேருந்தையே எரித்து இருந்தால்...நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும்.
இந்த போராட்டக்காரர்களுக்கெல்லாம் ஏன் அரசு பேருந்தே எதிரியாகத் தெரிகிறது ? ஆத்திரம் அடங்கவில்லை என்றால் பெட்ரோலை வாங்கி தலையில் கொட்டிக் கொண்டு தீக்குளிப்பு போராட்டம் நடத்தலாமே, எவனோ எங்கோ செல்லும் பேருந்தை வழிமறித்து கொளுத்திவிடும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது ? இந்த அறிவீனர்களின், காட்டுமிராண்டிகளின் செயலால் 3 மாணவிகள் உயிருடன் எரிந்தது போதாதா ? இப்பவும் எதாவது சாதிக் கலவரம், கட்சிக் கலவரம் என்றால் உடனடியாக பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி தீ வைக்கிறார்கள். எதையாவது கொளுத்தி தான் போராட்டத்தின் கவனத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் தன்னையே கொளுத்திக் கொள்ள வேண்டியதுதானே.
இதைத் தடுப்பதற்கு எளிய வழியாக, எந்த கட்சி சார்பில் பேருந்து கொளுத்தப்பட்டாலும் இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும். கூடவே கொளுத்தியவர்களுக்கு 4 ஆண்டுகள் வரையில் சிறைதண்டனை அளிக்கலாம், சாதிக் காரர்களின் போராட்டம் என்றால் அந்தந்த சாதி சங்கத்திடமிருந்து அதே போல் வசூல் செய்யவேண்டும், மீறினால் அந்த சாதி சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் ஆண்டுகள் வரை கடும்காவல் தண்டனையும், 4 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும். பேருந்து எரிப்பின் போது யாராவது உயிரிழக்க நேரிட்டால் போராட்டக் காரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்.
தற்பொழுது முதல்முறையாக பேருந்து எரிப்பில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு வந்திருக்கிறதாம். இடது கையைப் பார்த்து சுடுங்க, காலம் முழுவதும் அவன் ஒரே கையால் தான் கழுவனும், அதே கையால் தான் சாப்பிடனும், அதைவிட பெரிய தண்டனை கொடுக்க முடியாது, உணர்ச்சிவசத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கும், பொதுமக்களின் உயிரையும் உடமையையையும் துறும்பாக நினைக்கும் மடையர்களுக்கு பாடமாக அமையும்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
28 கருத்துகள்:
தண்டனையை அப்படியே ரெட்டிப்பாக்குங்க.
நாலு புது பஸ் ஓடட்டும்.
/தண்டனையை அப்படியே ரெட்டிப்பாக்குங்க.
நாலு புது பஸ் ஓடட்டும்.
//
இப்ப இருக்கிற ஜனத்தொகையில 4 கூட போதாது!
10 பஸ் வாங்கி விடலாம்!
ஆனா மைனர் குஞ்சு மாதிரி ஆளுக அட்வான்ஸ் புக்கிங்லே செய்ய ஆரம்பிச்சாங்கன்னா வம்பாயிடும்!
அதனால இடது கையைப் பார்த்து சுடுறது நல்ல தண்டனை! (இடது கையை சுடுவது மட்டுமிலாம வெட்டி எடுத்துடணும்)
ஆனா கலவரம் நடக்குதுன்னு தெரிஞ்சி போலீஸ் வரதுக்குள்ளே பஸ்ஸையே எரிச்சிட்டு ஓடிடுறாங்களே!
பயணிகளுக்கே அந்த உத்தரவை கொடுத்துடலாம்! பொதுச் சொத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும்/பொறுப்பும் மிஸ்டர் பொதுஜனத்துக்கும் உண்டு!
அப்பத்தான் இந்த மாதிரி அராஜங்கள் அடங்கும்! இல்லாட்டி போலீஸ் வர வரைக்கும் பார்த்துகிட்டு இருந்தா...
ஹெஹெ...!
ஆழமான பதிவு..தண்டனையின் ஆழம் இன்னும் அதிகம் வேண்டும்!
பேருந்துன்னு இல்லங்க.. பொது சொத்து எதையுமே இவனுங்க சேதப்படுத்தாம இருக்கர மாதிரி தண்டனைகள் கடுமையா இருக்கனும்..
பொது இடங்களில் சிறுநீர் களிப்பது.. எச்சில் துப்புவது.. எல்லாத்துக்கும் தக்க தண்டனைகள் தரனும்.. பொது இடத்துல புகைபிடிப்பது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது???
எரிக்கும் கை வலது கையாகவே இருக்கும், அதையே வெட்டி ஏறிய சட்டம் செய்வோம். கழுவும் கையினாலே தின்னு தொலையட்டும்.....
(பாவமே செய்யாத இடது கையை ஏன்? தண்டிப்பானேன்)
நடைமுறையில் அமல்படுத்தினால் நல்லதுதான்..
//இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும்//
பேருந்து விலையைக் கொடுத்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் போலுள்ளதே :))
//(பாவமே செய்யாத இடது கையை ஏன்? தண்டிப்பானேன்)//
திரும்பவும் அந்த கைக்குத்தான் தண்டணை. எல்லா வேலையும் அதுதானே செய்யனும்.:))
Jokes apart சிந்திக்க வேண்டிய பதிவு.
இதெல்லாம் எழுத நல்லா இருக்கும் செயல் படுத்த முடியாது
கொளுத்திட்டு அடுத்தவன் கட்சி துண்டை போட்டுடா..?
ஒட்டு தாடி தொப்பி வைச்சி குண்ட வைச்சிட்டா..?
நிதிபதிகளை விலைக்கு வாங்கிட்டா..?
தீர்ப்பு வர விடாம இழுத்து அடிச்சிட்டா..?
கலவரம் பண்ணி இதுவரைக்கு தீர்ப்பு கொடுக்க பட்டது எத்தனை..? விடுபட்டவை எத்தனை..?
இந்த பதிவை பற்றி நச்சினு ஒன்னு..
இதுதெல்லாம் அரசியலில் சகஜமப்பா... :)
//நையாண்டி நைனா 5:27 PM, November 19, 2008
எரிக்கும் கை வலது கையாகவே இருக்கும், அதையே வெட்டி ஏறிய சட்டம் செய்வோம். கழுவும் கையினாலே தின்னு தொலையட்டும்.....
(பாவமே செய்யாத இடது கையை ஏன்? தண்டிப்பானேன்)
//
தன்னுடைய உடல் உறுப்பிலும் தீண்டாமையாக இடது கையை இழிவாக நினைக்கும் பழக்கம் குறிப்பாக இந்துக்களுக்கு இருக்கு. இடது கை இல்லை என்றால் நிலைமை எவ்வளவு மோசம் என்பதை பலரும் உணருவார்கள். இடது கைக்கு தண்டனை இல்லை, சாப விமோசனம் :)
//துளசி கோபால் said...
தண்டனையை அப்படியே ரெட்டிப்பாக்குங்க.
நாலு புது பஸ் ஓடட்டும்.
4:26 PM, November 19, 2008
//
அந்த பேருந்தில் எரிக்கப்பட்ட பேருந்துக்கு மாற்றாக வழங்கப்பட்டது என்றும் பேருந்தை எரித்தவர்களின் பெயர்களுடன் படங்களை ஜட்டியுடன் போடவேண்டும்
//ஆனா கலவரம் நடக்குதுன்னு தெரிஞ்சி போலீஸ் வரதுக்குள்ளே பஸ்ஸையே எரிச்சிட்டு ஓடிடுறாங்களே!
பயணிகளுக்கே அந்த உத்தரவை கொடுத்துடலாம்! பொதுச் சொத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும்/பொறுப்பும் மிஸ்டர் பொதுஜனத்துக்கும் உண்டு!
அப்பத்தான் இந்த மாதிரி அராஜங்கள் அடங்கும்! இல்லாட்டி போலீஸ் வர வரைக்கும் பார்த்துகிட்டு இருந்தா...
ஹெஹெ...!
//
கணனி காலம், அனைத்துப் பேருந்தின் முகப்பில் கேமரா வைத்து கண்காணித்து அமுக்கலாம்.
//narsim said...
ஆழமான பதிவு..தண்டனையின் ஆழம் இன்னும் அதிகம் வேண்டும்!
4:55 PM, November 19, 2008
//
பேருந்து எரித்தவர்களின் படங்களை அந்த ஊர் பேருந்து நிலையத்தில் வைத்தால் பொதுமக்கள் துப்பிவிட்டுச் செல்வார்கள், மேலும் அந்த அடையாளத்தை வைத்து நடத்துனர்கள் அவர்களை எதிர்காலத்தில் பேருந்துக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது
//Ŝ₤Ω..™ said...
பேருந்துன்னு இல்லங்க.. பொது சொத்து எதையுமே இவனுங்க சேதப்படுத்தாம இருக்கர மாதிரி தண்டனைகள் கடுமையா இருக்கனும்..
பொது இடங்களில் சிறுநீர் களிப்பது.. எச்சில் துப்புவது.. எல்லாத்துக்கும் தக்க தண்டனைகள் தரனும்.. பொது இடத்துல புகைபிடிப்பது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது???
//
உங்கள் பின்னூட்டம் நிறைவாக இருந்தது, சிறுநீர் 'களிப்பது' என்று எழுதி இருக்கிறீர்கள், பொது இடத்தில் சிறுநீர் போகிறவர்கள் ஆனந்தமாகவே கழிக்கிறார்கள் என்று பொருள் எடுத்துக் கொள்ளவா ?
:) சில எழுத்துப் பிழைகள் பொருளையே மாற்றிடும் இல்லையா ?
நானும் ஒருமுறை கல்வி என்கிற இடத்தில் கலவி என்று எழுதிவிட்டேன். துளசி அம்மாதான் சுட்டிக் காட்டினார்கள்.
பாசமலர் நன்றி !
சுல்தான் ஐயா நன்றி !
//வெடிகுண்டு முருகேசன் said...
இதெல்லாம் எழுத நல்லா இருக்கும் செயல் படுத்த முடியாது
கொளுத்திட்டு அடுத்தவன் கட்சி துண்டை போட்டுடா..?
ஒட்டு தாடி தொப்பி வைச்சி குண்ட வைச்சிட்டா..?
நிதிபதிகளை விலைக்கு வாங்கிட்டா..?
தீர்ப்பு வர விடாம இழுத்து அடிச்சிட்டா..?
கலவரம் பண்ணி இதுவரைக்கு தீர்ப்பு கொடுக்க பட்டது எத்தனை..? விடுபட்டவை எத்தனை..?
இந்த பதிவை பற்றி நச்சினு ஒன்னு..
இதுதெல்லாம் அரசியலில் சகஜமப்பா... :)
//
அனைத்துப் பேருந்திலும் சிறிய அளவு பாதுகாப்பு கேமரா பொருத்தி பதிவு செய்ய முடியும். மற்ற நேரங்களில் இல்லாமல் கலவரமான சூழல் வந்தால் ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்த ஆதார அடிப்படையில் அப்படியே கூட்டத்தையே அள்ளிப் போடலாம்
ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்த ஆதார அடிப்படையில் அப்படியே கூட்டத்தையே அள்ளிப் போடலாம்
//
பஸ்ஸையே கொளுத்திபுட்டாங்களாம் கேமராவாம் ஆதாரமாம் யப்பா முடியடா சாமி :)
//வெடிகுண்டு முருகேசன் said...
ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்த ஆதார அடிப்படையில் அப்படியே கூட்டத்தையே அள்ளிப் போடலாம்
//
பஸ்ஸையே கொளுத்திபுட்டாங்களாம் கேமராவாம் ஆதாரமாம் யப்பா முடியடா சாமி :)
//
ப்ளாக் பாக்ஸ் போல் தீயால் எரியாத பாதுகாப்புப் பெட்டிக்குள் படப் பதிவை வைக்கலாம், வயர்லஸ் கேமரா கூட பயன்படுத்துறாங்க.
சரி
ஒட்டு தாடி தொப்பி போட்டு கொளுத்துனா..?
இல்லை புடிக்காத கட்சி துண்டு போட்டு கொளுத்துனா..?
மத்தபடி மைனர் குஞ்ச சுடலாம்
அதுவும் நம்ம போலிசு யார சுடும்னு குஜராத்தையும் ஒரிஸாவையும் பார்த்த பிறகும் நம்புறிங்களே
உங்களையெல்லாம் நினைத்தால் பாவமா இருக்கு..:)
உங்கள் கருத்துக்களை முழுமையாக வரவேற்கிறேன்.
ஏற்கனவே இருந்த சட்டம் தான் இது , சமீபத்துல திமுக ஆட்சியிலத்தான் இத அனைத்துக் கட்சி ஆதரவோட நீக்குனாங்க.
கொளுத்துறதெல்லாம், ஒன்ரியம்,தாலுகா, வட்டம், மாவட்டம், ச்துரம் போன்ற அரசியல் பிரமுகர்களும் அவ்ர்களின் அல்லக்கைகளும்தான்.
போலீசுக்கும் தெரியும். அவர்கள் கைகள் கட்டப்ப்ட்டிருக்கின்றன.
// வடகரை வேலன் said...
கொளுத்துறதெல்லாம், ஒன்ரியம்,தாலுகா, வட்டம், மாவட்டம், ச்துரம் போன்ற அரசியல் பிரமுகர்களும் அவ்ர்களின் அல்லக்கைகளும்தான்.
போலீசுக்கும் தெரியும். அவர்கள் கைகள் கட்டப்ப்ட்டிருக்கின்றன.//
unmai
//அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து ...//
இதையெல்லாம் யாரு செய்யணும். அரசியல் கட்சிகள்தான். தான் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குறது மாதிரிதான். அதனால் இது எதுவும் நடக்கப் போவதில்லை. எல்லாம் ஒரு wishful thinking. அம்புடுதான்
எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் ஒன்னு இருக்கு.. அடிதடி கொளுத்தறது எல்லாம் டீவியில் காண்பிக்கிறாங்க.. ஆனா அதுல வந்த ஆளுங்களை ன்னு அடையாளம் கண்டு யாரையாச்சும் கைது செய்திருக்காங்களா.. இந்த வீடியோ ஆதரங்களை வைத்து..?
நம்மாளுங்களுக்கு பொதுச்சொத்துன்னாவே ஏளனம் தான் :(
//படங்களை ஜட்டியுடன் போடவேண்டும்//
ஏன்? லேடீஸ் ஸ்பெஷலா இல்லைன்னா லேடீஸை ஏறவிடாமல் செய்வதற்கா? :-)
'களிப்பதை ' நேத்தே கண்டேன்!
சீரியஸான பதிவுக்குள்ளே குச்சியைத் தூக்கிக்கிட்டு வரவேணாம். 'மகிழ்ச்சி'யா போகட்டும் போலீஸ் பிடிக்கும்வரைன்னு விட்டுட்டேன்:-))))
//இதைத் தடுப்பதற்கு எளிய வழியாக, எந்த கட்சி சார்பில் பேருந்து கொளுத்தப்பட்டாலும் இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும். //
இந்த கருத்தே நடைமுறைக்கு ஒவ்வாது என்பது என் கருத்து. ஒரு கட்சியின் தலைவனோ அல்லது தலைவியோ அல்லது மற்ற தலைவர்களோ ஒரு தொண்டனைப் பார்த்து இரண்டு மூன்று பேருந்தை கொளுத்தினால் தான் நம் போராட்டம் வெற்றி பெரும் என்று வாய்மொழி உத்தரவு போட்டாலும் கூட, கொளுத்துபவனை அல்லது கொளுத்துகிற வயதுக்கு வந்த முட்டாளைத் தான் தண்டிக்க வேண்டும். அவனிடமிருந்து தான் பணத்தை வசூலிக்க வேண்டும். அவனுக்கு புத்தி எங்கே போனது? கட்சித் தலைமையிடம் இருந்து வசூலிக்கவே கூடாது. கட்சித் தலைமை உத்தரவிடாத பட்சத்தில், ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தொண்டன் செய்திருந்தால் அதற்கு கட்சித் தலைமை எப்படிப் பொறுப்பாக முடியும். அதனால் அவனவன் செய்த வினையை அவனே அறுவடை செய்ய வகை செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஒரு பய கூட பஸ்சை கொளுத்தவோ பொது சொத்துக்குச் சேதம் உண்டாக்கவோ மாட்டான். தமிழகம் அமைதிப்பூங்காவாகக் காட்சியளிக்கும். முன்னூத்தி அம்பத்தி ஆருக்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை.
பின்னூட்டம் அளித்த அன்பு பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !
நல்ல சட்டம்தான்.
:)
கருத்துரையிடுக