பின்பற்றுபவர்கள்

5 ஆகஸ்ட், 2008

பரிசல்காரனின் சதி அம்பலமாகியது.

பரிசல்காரன் குசேலன் படம் பார்த்துவிட்டு கன்னா பின்னாவென்று பதிவில் ரஜினியை வறுத்து எடுத்துவிட்டார். அந்த பதிவைப் பார்த்த சின்னக் கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி மூன்று நாட்களாக அன்னம் ஆகரமில்லாமல் கிடக்கிறார். பரிசல்காரன் குசேலனை வறுத்து எடுததற்கான காரணம் கண்டுபிடித்த போது அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு நாளும் இவர் நடுநிலை பதிவர் என்று நினைத்துக் கொண்டு இருந்ததே அதற்குக் காரணம்.

பரிசல்காரன் ஏன் குசேலனைப் போட்டுத் தாக்கவேண்டும்? நீங்களே அவரது கைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள், நீங்களும் அதிர்ச்சி அடைவீர்கள். தசவதாரப் பாடல் 'முகுந்தா முகுந்தா...கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...' என்ற அழைப்பு ஒலிபாடல் கேட்கும். இதிலிருந்தே தெரிகிறது இவர் ஒரு அக்மார்க் கமல் ரசிகர். அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குசேலனை இந்த வாரு வாரி இருக்கிறார்.

கிரி உங்களுக்காக எவ்வளவு கடினப்பட்டு இந்த ஆராய்ச்சியை செய்திருக்கிறேன் தெரியுமா ? இன்றாவது துக்கத்திலிருந்து மீண்டு பிரியாணி வாங்கித் தின்றுவிட்டு உங்கள் சோகங்களை மறந்துவிடுங்கள். கமல் ரசிகனான பரிசல் ரஜினியை விமர்சனம் செய்தது சதிதான். இப்பொழுது கண்டு பிடித்துவிட்டோம். பரிசலுக்கு ஒரு நேரம் வந்தால் படகுக்கு ஒரு நேரம் வராமலா போகும், மருதநாயகம் வரட்டும் என்னது கமலுக்கே அந்த நம்பிக்கை இல்லையா ? அப்ப விடுங்க, மர்மயோகி வரட்டும், நாமும் பரிசலுக்கு மூன்று நாள் தூக்கம் இல்லாமல் பண்ணிவிடுவோம்.

126 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:))
ஒரு விசயம்தாங்க புரியமாட்டேன்னுது...

கிரி ஒரு ரஜினி ரசிகர்.. அவரு எவ்வளவு பெருந்தன்மையா தசாவதாரத்தைப் பாராட்டிப் பதிவு போட்டாரு..
பரிசல் மாதிரி கமல் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இது போல பெருந்தன்மை இருக்கமாட்டேன்னுதுன்னு தான் புரியல... இவ்வளவு நல்ல படத்தைப் போய் இப்படி சொல்றாங்க... :P

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

//

ஜெகதீசன்,
அதுதான் எனக்கும் புரியல, இப்ப பாருங்க நாம ரஜினி ரசிகர்கள், எவ்வளவு பெரும் தன்மையாக கமல் பற்றி பேசுகிறோம், கமல் ரசிகர்களுக்கு அந்த பெரும்தன்மை இல்லையே. தலைவனே சரியில்லை என்றால் ரசிகர்கள் எப்படி இருப்பான்ங்க. வாழ்க ரஜினி சார் !

கிரி சொன்னது…

//பரிசல்காரன் குசேலன் படம் பார்த்துவிட்டு கன்னா பின்னாவென்று பதிவில் ரஜினியை வறுத்து எடுத்துவிட்டார்//

ஏன் அவர் அப்படி கூறி இருப்பாருன்னு நான் என்னுடைய விமர்சனத்திலேயே கூறி விட்டேன் :-))

//கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி மூன்று நாட்களாக அன்னம் ஆகரமில்லாமல் கிடக்கிறார்//

ஹா ஹா ஹா மொத வேலையா வீட்டை போய் செக் பண்ணனும் கோவி கண்ணன் ரகசிய காமெரா வைத்து எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்.

//கிரி உங்களுக்காக எவ்வளவு கடினப்பட்டு இந்த ஆராய்ச்சியை செய்திருக்கிறேன் தெரியுமா //

அப்படியா! ச்சே! என் மேல தான் உங்களுக்கு எப்படி ஒரு அன்பு கரிசனம்..உங்க நாள எந்த மாடு ஆடு (இல்லை இருந்தாலும் சொல்வோம்) கிட்டயும் நிக்க முடியல..புல்லரித்து விடுவதால் ஹி ஹி ஹி

வெண்பூ சொன்னது…

//இதிலிருந்தே தெரிகிறது இவர் ஒரு அக்மார்க் கமல் ரசிகர். அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குசேலனை இந்த வாரு வாரி இருக்கிறார்.//

பரிசலுக்கு வன்மையான கண்டன‌ங்கள்.. குசேலன் படத்தைக் குறித்து எழுதியதற்காக.

கோவி.கண்ணனுக்கும் கண்டனங்கள்... குசேலனை சூப்பர் ஹிட் என்று சொன்னதற்காக... :) :) :))))

பி.கு.: குசேலன் சூப்பர் ஹிட் என்பதற்கு சாட்சி வேண்டும் என்பவர்கள் உடனடியாக www.inoxmovies.com இணையதளத்திற்கு சென்று படம் எத்தனை நாட்களுக்கு ஹவுஸ்புல்லாக அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளவும் :)

கிரி சொன்னது…

//ஜெகதீசன் said...
பரிசல் மாதிரி கமல் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இது போல பெருந்தன்மை இருக்கமாட்டேன்னுதுன்னு தான் புரியல... இவ்வளவு நல்ல படத்தைப் போய் இப்படி சொல்றாங்க... :P//

என்ன பண்ணுறது ஜெகதீசன் மாதிரி பெருந்தன்மையான ஆளு கிடைக்க மாட்டேங்குறாங்க நல்லவர் வல்லவர் நாளும் அறிந்தவர் :-)

---------------------------------------------

//ஜெகதீசன்,
அதுதான் எனக்கும் புரியல, இப்ப பாருங்க நாம ரஜினி ரசிகர்கள், எவ்வளவு பெரும் தன்மையாக கமல் பற்றி பேசுகிறோம்//

இதை வன்மையா கண்டிக்கிறேன். .. ஜெகதீசன் இனிமே என்னை சின்ன ரித்தீஷ் னு தான் கூப்பிடனும்னு சொல்லிட்டாரு..:-) சாம் ஆண்டர்சன்னு வேணா உங்களை இனிமேல் கூப்பிடுகிறேன்

//வாழ்க ரஜினி சார் !//

வளர்க சாம் ஆண்டர்சன் கோவி கண்ணன் சார் :-))

என்னடா இது பதிவுலகத்துல ரஜினியா திட்டி ஒரு மூன்று நாள் முன்னாடி போட்ட மாதிரி சரமாரியா போட மாட்டேங்குறாங்க அதனால இப்படி ஏதாவது போட்டு படம் மொக்கை மொக்கை னு (சொல்லாமல்) சொன்னாதான் வேலைக்கு ஆகும் போலன்னு பாவம் ரொம்ப தான் கஷ்டபடுறீங்க..

ஹய்யோ ஹய்யோ ஒரே டமாசு

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...

பரிசலுக்கு வன்மையான கண்டன‌ங்கள்.. குசேலன் படத்தைக் குறித்து எழுதியதற்காக.

கோவி.கண்ணனுக்கும் கண்டனங்கள்... குசேலனை சூப்பர் ஹிட் என்று சொன்னதற்காக... :) :) :))))

பி.கு.: குசேலன் சூப்பர் ஹிட் என்பதற்கு சாட்சி வேண்டும் என்பவர்கள் உடனடியாக www.inoxmovies.com இணையதளத்திற்கு சென்று படம் எத்தனை நாட்களுக்கு ஹவுஸ்புல்லாக அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளவும் :)
//

ரஜினி சாரின் குSALEன் சூப்பர் ஹிட் இல்லையா ? படம் பார்த்துட்டு வெளியே வருகிறவர்கள் மண்டையப் பாருங்கள் கண்டிப்பாக ஒரு சொட்டு இரத்தமாவது வரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said... வளர்க சாம் ஆண்டர்சன் கோவி கண்ணன் சார் :-))

என்னடா இது பதிவுலகத்துல ரஜினியா திட்டி ஒரு மூன்று நாள் முன்னாடி போட்ட மாதிரி சரமாரியா போட மாட்டேங்குறாங்க அதனால இப்படி ஏதாவது போட்டு படம் மொக்கை மொக்கை னு (சொல்லாமல்) சொன்னாதான் வேலைக்கு ஆகும் போலன்னு பாவம் ரொம்ப தான் கஷ்டபடுறீங்க..

ஹய்யோ ஹய்யோ ஒரே டமாசு//

பரிசலுக்கான கும்மியை குசேலன் கும்மி ஆக்கிய சின்ன கிரி வாழ்க !

கலைஞர் டிவியில் 'திரைக்கு வந்த சில மணித்துளிகளே ஆனா....' என்று சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. பின்னே ஏன் கனிமொழி குசேலனைப் பார்க்கப் போகனும் ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசலுக்கான கும்மியை குசேலன் கும்மி ஆக்கிய சின்ன கிரி வாழ்க !//

சின்ன ரஜினி என்று திருத்தி வாசிக்கவும் !

வெண்பூ சொன்னது…

//ரஜினி சாரின் குSALEன் சூப்பர் ஹிட் இல்லையா ? படம் பார்த்துட்டு வெளியே வருகிறவர்கள் மண்டையப் பாருங்கள் கண்டிப்பாக ஒரு சொட்டு இரத்தமாவது வரும்//

இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? ந‌டுமண்டையில "நச்"சுன்னு அடிச்சிட்டானுங்கன்னு சொல்றீங்களா? ஹா..ஹா..ஹா..

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said... ஹா ஹா ஹா மொத வேலையா வீட்டை போய் செக் பண்ணனும் கோவி கண்ணன் ரகசிய காமெரா வைத்து எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்.//

வீட்டை ஏன் பாக்கனும் ஆளை நேரில் பார்ப்பவர்கள் எவருமே சொல்லிவிடுவாங்க.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வந்துட்டேன்....

இப்ப தான் புரியுது ஏன் அன்னைக்கி சாலமன் மீன் வேணம்னு சொன்னாருனு. பாவம் புள்ள பச்ச தண்ணி கூட குடிக்க கூடாதுனு இருந்துருக்கு, அது எப்டி சாலமன் மீன் சாப்புடும்?

ஆனாலும் பரிசல்காரரு உண்மைய சொன்னதுக்காக இப்டி கோவிச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்கது தப்பு. குசேல‌ன் ந‌ல்லா இல்ல‌ன்ன‌ ந‌ல்லா இல்ல‌ன்னுதான் சொல்ல‌ முடியும், சூப்ப‌ர் ஸ்டாருக்கு ம‌ட்டும் என்ன‌ சூரிய‌ன் மேற்க‌யா உதிக்கும்?

விஜய் ஆனந்த் சொன்னது…

// ரஜினி சாரின் குSALEன் சூப்பர் ஹிட் இல்லையா ? படம் பார்த்துட்டு வெளியே வருகிறவர்கள் மண்டையப் பாருங்கள் கண்டிப்பாக ஒரு சொட்டு இரத்தமாவது வரும் //

ஹிஹிஹி....

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...

2:34 PM, August 05, 2008
//

சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் இந்த பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் 'சூரியன் மேற்கில் உதிக்கும்' என்று சொல்லிவிட்டால், எங்களுக்கு சூரியன் உதிக்கும் திசையே மேற்குதான். அப்போது மேற்கில் உதிக்காதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
வந்துட்டேன்....

இப்ப தான் புரியுது ஏன் அன்னைக்கி சாலமன் மீன் வேணம்னு சொன்னாருனு. பாவம் புள்ள பச்ச தண்ணி கூட குடிக்க கூடாதுனு இருந்துருக்கு, அது எப்டி சாலமன் மீன் சாப்புடும்?
//

சாப்பாடே இறங்காமல் ...மீனை வாங்கி குளிர்பெட்டியில் தான் வைத்திருந்தார். இன்று தான் அதற்கு விமோசனம் பிறக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
// ரஜினி சாரின் குSALEன் சூப்பர் ஹிட் இல்லையா ? படம் பார்த்துட்டு வெளியே வருகிறவர்கள் மண்டையப் பாருங்கள் கண்டிப்பாக ஒரு சொட்டு இரத்தமாவது வரும் //

ஹிஹிஹி....

2:38 PM, August 05, 2008
//

கும்மிக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
//ரஜினி சாரின் குSALEன் சூப்பர் ஹிட் இல்லையா ? படம் பார்த்துட்டு வெளியே வருகிறவர்கள் மண்டையப் பாருங்கள் கண்டிப்பாக ஒரு சொட்டு இரத்தமாவது வரும்//

இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? ந‌டுமண்டையில "நச்"சுன்னு அடிச்சிட்டானுங்கன்னு சொல்றீங்களா? ஹா..ஹா..ஹா..

2:31 PM, August 05, 2008
//

அச்சா அச்சா...நச்சின்னு பிடித்துக் கொண்டீர்களே. அதே தான். அது சூப்பர் ஸ்டாருக்காக சிந்தும் செந்நீர் துளி, வழக்கமாக கமல் ரசிகர்கள் கண்ணீர் துளிதான் சிந்துவார்கள். நாங்களெல்லாம் யாரு, தலைவரோட ரசிகர்கள். ஒரு படி மேலே செய்ய வேண்டாமா ?

கிரி சொன்னது…

சாம் ஆண்டர்சன் கோவி கண்ணன் தொடர்ந்து இப்படியே குசேலன் குசேலன் ன்னு கூறி ரஜினி ரசிகர்களை விட அதிகமாக புலம்பி அடுத்ததாக என்ன பதிவு போடுவது ரஜினி யை எப்படி தாக்கி எழுதலாம் இன்னும் யார் யார் பேரை போட்டு குசேலனை கிண்டல் அடிக்கலாம் என்று எப்போதும் குசேலன் சிந்தனையாகவே இருப்பதால் தற்போது யார் ரஜினியை அதிகமாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று குழம்பி விட்டேன்.

சாம் ஆண்டர்சன் (ஹி ஹி ஹி இந்த பேரு உங்களுக்கு நல்லாவே இருக்கு) கோவி கண்ணன் போல பின்னூட்டம் போட்டு மொக்கை போட நான் தயாராக இல்லை. நீங்க இப்படியே எதிர் பாட்டு பாடிட்டே இருங்க....இப்படியே உங்க "காலத்தை" ஓட்டுங்க..... ஹா ஹா ஹா

நான் எஸ்கேப் ஆகுறேன் :-)

நையாண்டி நைனா சொன்னது…

திரு. கோவி அண்ணன் எவ்வளவோ சொன்னாரு, நானும் கேட்காமே போய் உக்காந்து, நொந்து போய் வந்தேன். " உளவுத்துறை" என்ற ஒரு படம் பார்த்து, விஜய் காந்த் படம் பார்ப்பதை நிறுத்தினேன். இனி ரஜினி படமும் பார்ப்பதில்லை....... ஓ.சி.க்கே கூப்பிட்டாலும்

ஜெகதீசன் சொன்னது…

கூல் டவுன் கிரி... ரெம்ப ரென்சன் ஆகாதீங்க...

நம்ம தலைவர் சொன்னா சூரியன் மேற்க உதிக்கும்ன்னு இந்த அற்ப மானிடப் பதர்களுக்கெல்லாம் தெரியமாட்டேன்னுது.. அவங்க கண்களை ஆண்டவன் விரைவில் திறக்கட்டும்....

அதிஷா சொன்னது…

:-)))))))))

பின்னூட்ட டுபுரித்தனம்

முரளிகண்ணன் சொன்னது…

me the twenty firsttu?

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
திரு. கோவி அண்ணன் எவ்வளவோ சொன்னாரு, நானும் கேட்காமே போய் உக்காந்து, நொந்து போய் வந்தேன். " உளவுத்துறை" என்ற ஒரு படம் பார்த்து, விஜய் காந்த் படம் பார்ப்பதை நிறுத்தினேன். இனி ரஜினி படமும் பார்ப்பதில்லை....... ஓ.சி.க்கே கூப்பிட்டாலும்
//

300 ரூபாய் டிக்கெட்டில் பார்க்கப் போவதாகச் சொல்லி இருந்தீர்கள். டூ டூ டூ மச் இல்லே ? ஒரு பரம ஏழை நடிகரை வாழவைக்க தங்ககாசு கொடுக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
me the twenty firsttu?

3:25 PM, August 05, 2008
//

அதற்கும் மேல் என்னுடைய பின்னூட்டம் ஒன்றை எடுத்துவிட்டால் இந்த கணக்கு பொய்யாகிவிடும் !
:)

இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள், கணக்கு உட்பட மாயா மாயா எல்லாம் மாயா ...சாயா சாயா எல்லாம் சாயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
சாம் ஆண்டர்சன் கோவி கண்ணன் தொடர்ந்து இப்படியே குசேலன் குசேலன் ன்னு கூறி ரஜினி ரசிகர்களை விட அதிகமாக புலம்பி அடுத்ததாக என்ன பதிவு போடுவது ரஜினி யை எப்படி தாக்கி எழுதலாம் இன்னும் யார் யார் பேரை போட்டு குசேலனை கிண்டல் அடிக்கலாம் என்று எப்போதும் குசேலன் சிந்தனையாகவே இருப்பதால் தற்போது யார் ரஜினியை அதிகமாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று குழம்பி விட்டேன்.

சாம் ஆண்டர்சன் (ஹி ஹி ஹி இந்த பேரு உங்களுக்கு நல்லாவே இருக்கு) கோவி கண்ணன் போல பின்னூட்டம் போட்டு மொக்கை போட நான் தயாராக இல்லை. நீங்க இப்படியே எதிர் பாட்டு பாடிட்டே இருங்க....இப்படியே உங்க "காலத்தை" ஓட்டுங்க..... ஹா ஹா ஹா

நான் எஸ்கேப் ஆகுறேன் :-)
//

கிரி சார்.......,

Results 1 - 10 of about 7,030 for தசவதாரம். (0.26 seconds)

Results 1 - 10 of about 204,000 for குசேலன். (0.27 seconds)

கூகுளில் தேடினால் கூட நாமதான் (நம்ம தலைவர் படம் தான்) முன்னனி. மனசொடிஞ்சுப் போகாதிங்க, இந்த எண்ணிக்கை என்னாலும் ஜெகதீசனாலும் தானே கொஞ்சம் கூடி இருக்கிறது. இராமனுக்கு அணில் மாதிரி சிறுவர்கள் எங்கள் இருவரையும் மன்னித்து தலைவரின் ரசிகரில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
:-)))))))))

பின்னூட்ட டுபுரித்தனம்
//

கண்டிப்பாக இதுக்கு பின்னூட்டத்திற்கு பின்னூட்டமாறு செய்துவிடுவேன்.

நையாண்டி நைனா சொன்னது…

/////****//நையாண்டி நைனா said...
திரு. கோவி அண்ணன் எவ்வளவோ சொன்னாரு, நானும் கேட்காமே போய் உக்காந்து, நொந்து போய் வந்தேன். " உளவுத்துறை" என்ற ஒரு படம் பார்த்து, விஜய் காந்த் படம் பார்ப்பதை நிறுத்தினேன். இனி ரஜினி படமும் பார்ப்பதில்லை....... ஓ.சி.க்கே கூப்பிட்டாலும்
//

300 ரூபாய் டிக்கெட்டில் பார்க்கப் போவதாகச் சொல்லி இருந்தீர்கள். டூ டூ டூ மச் இல்லே ? ஒரு பரம ஏழை நடிகரை வாழவைக்க தங்ககாசு கொடுக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்****/////

அதற்கு நொந்து தானே இனி ரஜினி படங்கள் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்துவிட்டேனே... மேலும் இங்கு மும்பை-க்கு பெரிய படங்கள் தான் வருகிறது. இருப்பினும் நான் இனி ரஜினி படங்கள் பார்ப்பதில்லை, நான் ரஜினி ரசிகனாக இருந்தவன் தான்.

குசும்பன் சொன்னது…

கும்மிகளுக்கு பதில் சொல்லாதவருடன் எனக்கு என்ன பேச்சு.

இனி ஒரே ஒரு கமெண்டுதான்.

அதிலேயே எல்லாத்தையும் சொல்லி ஒரு 3 பக்கத்துக்கு கொண்டுவந்துவிடுகிறேன், அப்ப பதில் சொல்லிதானே ஆகனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
கும்மிகளுக்கு பதில் சொல்லாதவருடன் எனக்கு என்ன பேச்சு.

இனி ஒரே ஒரு கமெண்டுதான்.

அதிலேயே எல்லாத்தையும் சொல்லி ஒரு 3 பக்கத்துக்கு கொண்டுவந்துவிடுகிறேன், அப்ப பதில் சொல்லிதானே ஆகனும்.

3:59 PM, August 05, 2008
//

கோவிச்சிக்காதே தம்பி,

நேற்று விரலில் சுளுக்கு, அதனால் எல்லாவற்றிற்கும் மறுமொழி போட முடியவில்லை. நமக்குள்ள அப்படி கணக்கு பார்த்தா பழகுகிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
/////****//நையாண்டி நைனா said...
திரு. கோவி அண்ணன் எவ்வளவோ சொன்னாரு, நானும் கேட்காமே போய் உக்காந்து, நொந்து போய் வந்தேன். " உளவுத்துறை" என்ற ஒரு படம் பார்த்து, விஜய் காந்த் படம் பார்ப்பதை நிறுத்தினேன். இனி ரஜினி படமும் பார்ப்பதில்லை....... ஓ.சி.க்கே கூப்பிட்டாலும்
//

300 ரூபாய் டிக்கெட்டில் பார்க்கப் போவதாகச் சொல்லி இருந்தீர்கள். டூ டூ டூ மச் இல்லே ? ஒரு பரம ஏழை நடிகரை வாழவைக்க தங்ககாசு கொடுக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்****/////

அதற்கு நொந்து தானே இனி ரஜினி படங்கள் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்துவிட்டேனே... மேலும் இங்கு மும்பை-க்கு பெரிய படங்கள் தான் வருகிறது. இருப்பினும் நான் இனி ரஜினி படங்கள் பார்ப்பதில்லை, நான் ரஜினி ரசிகனாக இருந்தவன் தான்.

//

நையாண்டி நைனா ,

இப்படி ரசிகர்கள் கழண்டு கொண்டால் வைரமுத்து தான் சிரம படுவார். தங்காசுக்கு மாற்றாக அடுத்த ரஜினி படத்தில் வியர்வைக்கு வைரகல்லுன்னு பாட்டெழுத இருந்தாராம்

ஜோ / Joe சொன்னது…

நண்பர் ஒருவர் சொன்னது..

தசாவதாரம் படத்தில் வின்செண்ட் பூவராகனுக்கும் பி.வாசுவுக்கு நடக்கும் விவாதத்த்தின் இறுதியில் பி.வாசு கமலிடம் "இரு .இதையும் பார்த்துட்டு போ" என ஏதோ பெரிய குண்டைத் தூக்கி போடுவதைப் போல் சொல்லுவார் .ஆனால் சம்பந்தமே இல்லாமல் அடுத்த காட்சிக்கு சென்று விடும் ..ரொம்ப நாளா அவர் எதை பார்க்க சொன்னார் என மண்டைய பிய்த்துக் கொண்டிருந்தேன் ..இப்போ தான் தெரியுது ..பி.வாசு கமலிடம் இருந்து பார்த்திட்டு போ-ன்னு சொன்னது குசேலன் படத்தை தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

4:10 PM, August 05, 2008
//

ஜோ,
அதுக்கு நான் சுனாமியில் போய் சேர்ந்துவிடுகிறேன் என்று பூவராகன் பதில் சொல்லி இருப்பார். சுனாமி இறைச்சலில் யாருக்கும் கேட்கவில்லை.
:)

வெண்பூ சொன்னது…

//கிரி சார்.......,

Results 1 - 10 of about 7,030 for தசவதாரம். (0.26 seconds)

Results 1 - 10 of about 204,000 for குசேலன். (0.27 seconds)

கூகுளில் தேடினால் கூட நாமதான் (நம்ம தலைவர் படம் தான்) முன்னனி.//

அடப்பாவிகளா... அப்ப இதுக்கு என்ன சொல்லுவீங்க..

Results 1 - 10 of about 285,000 for தசாவதாரம். (0.21 seconds)

வெண்பூ சொன்னது…

//இப்படி ரசிகர்கள் கழண்டு கொண்டால் வைரமுத்து தான் சிரம படுவார். தங்காசுக்கு மாற்றாக அடுத்த ரஜினி படத்தில் வியர்வைக்கு வைரகல்லுன்னு பாட்டெழுத இருந்தாராம்//

வேர்வைக்கு வைரக்கல்லா? அப்ப ஒண்ணுக்கு போனா? அட ரெண்டுக்கு போனா என்னப்பா?

வெண்பூ சொன்னது…

more pulli vivaram...

Results 1 - 10 of about 195,000 for rajini kuselan. (0.26 seconds) .....

Results 1 - 10 of about 196,000 for kamal dasavatharam. (0.29 seconds)

வெண்பூ சொன்னது…

one more please...

Results 1 - 10 of about 613,000 for kuselan. (0.13 seconds)

Results 1 - 10 of about 648,000 for dasavatharam. (0.08 seconds)

கோவி.கண்ணன் சொன்னது…

வெண்பூ said...
//கிரி சார்.......,

Results 1 - 10 of about 7,030 for தசவதாரம். (0.26 seconds)

Results 1 - 10 of about 204,000 for குசேலன். (0.27 seconds)

கூகுளில் தேடினால் கூட நாமதான் (நம்ம தலைவர் படம் தான்) முன்னனி.//

அடப்பாவிகளா... அப்ப இதுக்கு என்ன சொல்லுவீங்க..

Results 1 - 10 of about 285,000 for தசாவதாரம். (0.21 seconds)
//

வெண்பூ,

Results 1 - 10 of about 703,000 for dasavatharam. (0.09 seconds)

Results 1 - 10 of about 714,000 for kuselan. (0.25 seconds)

இப்ப சொல்லுங்க யார் முன்னனி

வெண்பூ சொன்னது…

நாங்க எல்லாம் யாரு.. புள்ளி விவரத்துல கேப்டன் விஜயகாந்த்துக்கே போட்டியாக்கும்... யாருகிட்ட...

கோவி.கண்ணன் சொன்னது…

தசவதாரம்

Results 1 - 10 of about 703,000 for dasavatharam. (0.09 seconds)

குசேலன்

Results 1 - 10 of about 714,000 for kuselan. (0.25 seconds)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
நாங்க எல்லாம் யாரு.. புள்ளி விவரத்துல கேப்டன் விஜயகாந்த்துக்கே போட்டியாக்கும்... யாருகிட்ட...

4:29 PM, August 05, 2008
//

:) அது அது !!!!!!!!!!!

வெண்பூ சொன்னது…

//வெண்பூ,

Results 1 - 10 of about 703,000 for dasavatharam. (0.09 seconds)

Results 1 - 10 of about 714,000 for kuselan. (0.25 seconds)

இப்ப சொல்லுங்க யார் முன்னனி//

அது எப்படிங்க? ஒரே வார்த்தைக்கு உங்களுக்கு ஒரு கவுண்ட், எனக்கு ஒரு கவுண்ட் வருது? கூகுளும் ஒரு டுபாக்கூரா? (ரஜினி மாதிரின்னு நான் சொல்லல. நீங்களா நெனச்சிகிட்டா நான் பொறுப்பில்ல.. ஆமா சொல்லிட்டேன்.)

வெண்பூ சொன்னது…

//கோவி.கண்ணன் said...
தசவதாரம்

Results 1 - 10 of about 703,000 for dasavatharam. (0.09 seconds)

குசேலன்

Results 1 - 10 of about 714,000 for kuselan. (0.25 seconds)
//

By clicking your link, I got,

Results 1 - 10 of about 648,000 for dasavatharam. (0.06 seconds)

Results 1 - 10 of about 613,000 for kuselan. (0.09 seconds)

வெண்பூ சொன்னது…

அது வேற ஒண்ணும் இல்ல. எவனாவது கூகுள் வீடியோல குசேலன் படம் அப்லோட் பண்ணி இருப்பான். அதுதான் கூகுள் சர்வரும் காண்டு ஆயிடுச்சி.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
அது வேற ஒண்ணும் இல்ல. எவனாவது கூகுள் வீடியோல குசேலன் படம் அப்லோட் பண்ணி இருப்பான். அதுதான் கூகுள் சர்வரும் காண்டு ஆயிடுச்சி.
//

கூகுளுக்கு கமல் ரசிகர்களுக்கு ஒரு எண்ணிக்கையும், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு எண்ணிக்கையும் காட்டுது. நமக்கு ஏன் வம்பு என்று நினைக்குமோ !

வெண்பூ சொன்னது…

//அதிஷா said...
:-)))))))))

பின்னூட்ட டுபுரித்தனம்
//

இதுக்கு இன்னா அர்த்தம்???

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
//அதிஷா said...
:-)))))))))

பின்னூட்ட டுபுரித்தனம்
//

இதுக்கு இன்னா அர்த்தம்???
//

பின்னூட்டம் வந்தால் அனுபவிக்கனும் ஆராயக் கூடாது. மீறி ஆராய்ந்தால் அதுதான் டுபுரித்தனம் !
:)

வெண்பூ சொன்னது…

//கூகுளுக்கு கமல் ரசிகர்களுக்கு ஒரு எண்ணிக்கையும், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு எண்ணிக்கையும் காட்டுது. நமக்கு ஏன் வம்பு என்று நினைக்குமோ ! //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ கும்முறதுக்கு ஒரு படம் கெடச்சதேன்னு குசேலன கும்முனா என்னை கமல் ரசிகனாக்கிட்டீங்களே.. கமலோ, ரஜினியோ காமெடி படம் யாருதா இருந்தாலும் நமக்கு ஓ.கே. :)

வெண்பூ சொன்னது…

//பின்னூட்டம் வந்தால் அனுபவிக்கனும் ஆராயக் கூடாது. மீறி ஆராய்ந்தால் அதுதான் டுபுரித்தனம் //

ய‌ப்பா,, யாருப்பா அது பின்னூட்ட‌ டிக்ஷ‌ன‌ரி மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌து? இந்த‌ வார்த்தையை ம‌ற‌க்காம‌ சேத்துக்க‌ங்க‌. ப‌க்க‌த்துல‌யே அதை க‌ண்டு பிடிச்ச‌து அதிஷா.. வெள‌க்க‌ம் சொன்ன‌து கோவி.க‌ண்ண‌ன் அப்ப‌டின்னு ம‌ற‌க்காம‌ சேத்துக்க‌ங்க‌.. அது.. பின்னால‌ வ‌ர்ற‌ த‌லைமுறைக்கு உப‌யோக‌மா இருக்கும்ல‌ அதுக்குதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
//கூகுளுக்கு கமல் ரசிகர்களுக்கு ஒரு எண்ணிக்கையும், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு எண்ணிக்கையும் காட்டுது. நமக்கு ஏன் வம்பு என்று நினைக்குமோ ! //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ கும்முறதுக்கு ஒரு படம் கெடச்சதேன்னு குசேலன கும்முனா என்னை கமல் ரசிகனாக்கிட்டீங்களே.. கமலோ, ரஜினியோ காமெடி படம் யாருதா இருந்தாலும் நமக்கு ஓ.கே. :)
//

கூகுள் அப்படி பாலிடிக்ஸ் வைக்கவில்லை என்றால் கூகுள் பிஸ்னஸ் நட்டமாகிடுமே ! ஓகே தான் !

வெண்பூ சொன்னது…

ஆமா.. இந்த‌ ப‌திவோட‌ த‌லைப்புல‌யே ஒரு ம‌னுச‌ன் இருக்காரே.. அவ‌ரு எங்க‌? மொத‌ நாளே ப‌ட‌த்தைப் பாத்து காண்டா திரிஞ்சிட்டு இருந்துட்டு இப்ப‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ர‌வே இல்லைன்னா என்னா அர்த்த‌ம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
//பின்னூட்டம் வந்தால் அனுபவிக்கனும் ஆராயக் கூடாது. மீறி ஆராய்ந்தால் அதுதான் டுபுரித்தனம் //

ய‌ப்பா,, யாருப்பா அது பின்னூட்ட‌ டிக்ஷ‌ன‌ரி மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌து? இந்த‌ வார்த்தையை ம‌ற‌க்காம‌ சேத்துக்க‌ங்க‌. ப‌க்க‌த்துல‌யே அதை க‌ண்டு பிடிச்ச‌து அதிஷா.. வெள‌க்க‌ம் சொன்ன‌து கோவி.க‌ண்ண‌ன் அப்ப‌டின்னு ம‌ற‌க்காம‌ சேத்துக்க‌ங்க‌.. அது.. பின்னால‌ வ‌ர்ற‌ த‌லைமுறைக்கு உப‌யோக‌மா இருக்கும்ல‌ அதுக்குதான்.

4:46 PM, August 05, 2008
//

பின்னால‌ வ‌ர்ற‌ த‌லைமுறைக்கு உப‌யோக‌மா இருக்கும்ல‌ அதுக்குதான். ----

அவிங்களெல்லாம் வெளங்குன மாதிரிதான். அவ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

50 ஆச்சு கணக்கு, பின்னூட்ட சுனாமியை இங்கு உண்டாக்கிய வெண்பூவிற்கு மிக்க மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
ஆமா.. இந்த‌ ப‌திவோட‌ த‌லைப்புல‌யே ஒரு ம‌னுச‌ன் இருக்காரே.. அவ‌ரு எங்க‌? மொத‌ நாளே ப‌ட‌த்தைப் பாத்து காண்டா திரிஞ்சிட்டு இருந்துட்டு இப்ப‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ர‌வே இல்லைன்னா என்னா அர்த்த‌ம்?

4:48 PM, August 05, 2008
//

குசேலன் படத்தில் டால்பின் துள்ளிய ஏரிக்கு பரிசல் ஓட்டிச் சென்று இருக்கிறார். ஒன்னாவது பிடிச்சுட்டுத்தான் வருவார்.

வெண்பூ சொன்னது…

ஓ.கே.. ஆணி அழைக்கிறது. அதனால் நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. பை.. பை..

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
ஓ.கே.. ஆணி அழைக்கிறது. அதனால் நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. பை.. பை..
//

வெண்பூ,

இந்த நன்றியை மறந்தால் நான் நன்றி கெட்டவன். அடுத்த பதிவு போடும் வரைக்கும் மறக்கவே மாட்டேன்.

ஸயீத் சொன்னது…

//ஜோ / Joe said...

நண்பர் ஒருவர் சொன்னது..

தசாவதாரம் படத்தில் வின்செண்ட் பூவராகனுக்கும் பி.வாசுவுக்கு நடக்கும் விவாதத்த்தின் இறுதியில் பி.வாசு கமலிடம் "இரு .இதையும் பார்த்துட்டு போ" என ஏதோ பெரிய குண்டைத் தூக்கி போடுவதைப் போல் சொல்லுவார் .ஆனால் சம்பந்தமே இல்லாமல் அடுத்த காட்சிக்கு சென்று விடும் ..ரொம்ப நாளா அவர் எதை பார்க்க சொன்னார் என மண்டைய பிய்த்துக் கொண்டிருந்தேன் ..இப்போ தான் தெரியுது ..பி.வாசு கமலிடம் இருந்து பார்த்திட்டு போ-ன்னு சொன்னது குசேலன் படத்தை தான்.//

அட ஆமா இப்பத்தான் விஷயம் புரியுது, அப்பாடா! இத்தனை நாள் இது புரியாமல் தலையே வெடிச்சுடும் போல இருந்தது. ரெம்ப நன்றி ஜோ மற்றும் கோ.வி. சிங்கப்பூர் பதிவர் படங்கள் சூப்பர். வாழ்த்துக்கள்..

மங்களூர் சிவா சொன்னது…

/
பரிசலுக்கு ஒரு நேரம் வந்தால் படகுக்கு ஒரு நேரம் வராமலா போகும்,
/

அதானே
:)))))))

VIKNESHWARAN சொன்னது…

:))

பரிசல்காரன் சொன்னது…

அடக் கொடுமையே!

கொஞ்சம் பிஸியா இருந்தா, அதுக்குள்ள இங்க என் பேரை வெச்சு பிஸினஸ் பண்ணி, ஆப்பு வெச்சு, அந்தரத்துல மாட்டீங்டாங்களே!

வெண்பூ சொன்னது…

//பரிசல்காரன் said...
அடக் கொடுமையே!

கொஞ்சம் பிஸியா இருந்தா, அதுக்குள்ள இங்க என் பேரை வெச்சு பிஸினஸ் பண்ணி, ஆப்பு வெச்சு, அந்தரத்துல மாட்டீங்டாங்களே!
//

தல.. உள்ள வர்றீங்களா?? மங்களூர் சிவா, விக்கியெல்லாம் வேற இருக்காங்க. ரெண்டாவது ரவுண்டுக்கு நான் ரெடி.. கோவி.கண்ணன் சார் எங்க?

பரிசல்காரன் சொன்னது…

//பரிசல்காரன் குசேலன் படம் பார்த்துவிட்டு கன்னா பின்னாவென்று பதிவில் ரஜினியை வறுத்து எடுத்துவிட்டா//

கொஞ்சம் சீரியஸா பேசவா?

என் மேல கிரி மாதிரியானவங்களுக்கு ரொம்ப கோவம்ன்னு இந்த பின்னூட்டங்களைப் பார்த்தா தெரியுது. கிரி.. சத்தியமா நீங்க வருத்தப் படுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்தளவு அதை விமர்சித்து இருக்க மாட்டேன்.

கிரி.. எனக்கு ரஜினியைவிட, உங்கள் நட்பு முக்கியம்! (குசேலன்ல தலைவர் சொல்லீருக்கார்!)

நீங்கள் எந்த அளவு ரஜினி ரசிகரோ அதை விட கொஞ்சமாவது அதிகமாக நானும் ரஜினி ரசிகன்தான். ஆனால், பிடிக்காத ஒரு படத்தை பிடிக்கும் என்று சொல்லச் சொல்லி ரஜினி சொல்லவில்லை. நான் விமர்சனத்தில் குறிப்பிட மறந்த ஒரு விஷயம்.. படத்தில் ரஜினியே சொன்னது ”படம் நல்லாயில்லைன்னா, சூப்பர் ஸ்டாரே நடிச்சாலும் ஓடாது!”

எனக்கு ரஜினி மேல் எந்த கோவமும் இல்லை (ஆபாச காமெடிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் என்பதைத் தவிர)

என்னுடைய பதிவை இன்னொரு முறை படிக்கவும். எந்த இடத்திலும் இந்தப் படத்தில் ரஜினியின் பங்கு பற்றி நான் குறை சொல்லவில்லை!
படம் ஃப்ளாப்! அதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்!

ஆகவே ரஜினியை நான் வறுத்தெடுத்தேன் என்பதை நான் மறுக்கிறேன்!

(அப்பாடா! எனக்கும் சீரியஸா எழுத வருதுடோய்!)

பரிசல்காரன் சொன்னது…

//தல.. உள்ள வர்றீங்களா?? மங்களூர் சிவா, விக்கியெல்லாம் வேற இருக்காங்க. ரெண்டாவது ரவுண்டுக்கு நான் ரெடி.. கோவி.கண்ணன் சார் எங்க?//

வெண்பூ...

வந்துட்டமில்ல..

ரெடியா, பார்ட்னர்ஷிப் குடுக்கணும். ஓக்கே? லூஸ் பால் வந்தா மட்டும் அஃபென்ஸ் ஆடலாம். செஞ்சுரி போடலாமா?

வெண்பூ சொன்னது…

//எனக்கு ரஜினி மேல் எந்த கோவமும் இல்லை (ஆபாச காமெடிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் என்பதைத் தவிர) //

யப்பா.. கேட்டுகோங்க. பரிசல் நல்லவராம்.

பரிசல்காரன் சொன்னது…

இங்க பின்னூட்டத்தையெல்லாம் படிச்சா, எத்தனை பேர் மரண வெறில இருக்காங்கன்னு புரியுது!

வெண்பூ சொன்னது…

//லூஸ் பால் வந்தா மட்டும் அஃபென்ஸ் ஆடலாம்//

நாங்கல்லாம் எல்லா பாலும் இறங்கிதான் ஆடுவோம்.. அடிச்சா சிக்ஸ்.. இல்லன்னா விக்கெட்டு..

வெண்பூ சொன்னது…

//(அப்பாடா! எனக்கும் சீரியஸா எழுத வருதுடோய்!) //
நீங்க எழுதுன பாடல் உருவாகிறது படிச்சிட்டு அத்தனை பேரும் சீரியஸ் ஆகிட்டாங்களாமே? நிஜமா?

பரிசல்காரன் சொன்னது…

///ஜோ / Joe said...

நண்பர் ஒருவர் சொன்னது..

தசாவதாரம் படத்தில் வின்செண்ட் பூவராகனுக்கும் பி.வாசுவுக்கு நடக்கும் விவாதத்த்தின் இறுதியில் பி.வாசு கமலிடம் "இரு .இதையும் பார்த்துட்டு போ" என ஏதோ பெரிய குண்டைத் தூக்கி போடுவதைப் போல் சொல்லுவார் .ஆனால் சம்பந்தமே இல்லாமல் அடுத்த காட்சிக்கு சென்று விடும் ..ரொம்ப நாளா அவர் எதை பார்க்க சொன்னார் என மண்டைய பிய்த்துக் கொண்டிருந்தேன் ..இப்போ தான் தெரியுது ..பி.வாசு கமலிடம் இருந்து பார்த்திட்டு போ-ன்னு சொன்னது குசேலன் படத்தை தான்.////
.

சூப்பரோ சூப்பரப்பு!

எக்ஸலென்ட்!!

வெண்பூ சொன்னது…

//பரிசல்காரன் said...
இங்க பின்னூட்டத்தையெல்லாம் படிச்சா, எத்தனை பேர் மரண வெறில இருக்காங்கன்னு புரியுது!
//

படம் பாக்காத நானே இவ்ளோ வெறுப்புல இருந்தா, முதல் நாள் குடும்பத்தோட போனவங்க ஏன் மரண வெறியில இருக்க மாட்டாங்க? (நான் உங்களச் சொல்லல..ஹி..ஹி..)

பரிசல்காரன் சொன்னது…

//கிரி ஒரு ரஜினி ரசிகர்.. அவரு எவ்வளவு பெருந்தன்மையா தசாவதாரத்தைப் பாராட்டிப் பதிவு போட்டாரு..
பரிசல் மாதிரி கமல் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இது போல பெருந்தன்மை இருக்கமாட்டேன்னுதுன்னு தான் புரியல... இவ்வளவு நல்ல படத்தைப் போய் இப்படி சொல்றாங்க...//

நான் ஷகீலா படத்துக்கு கூட நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதுவேன். நலாயிருக்குன்னு சொன்னா, அவங்க ரசிகன், இல்லைன்னா இல்லையா?

என்ன கொடுமை வெண்பூ இது?

என்னைக் காப்பாத்த வாங்க..

வெண்பூ சொன்னது…

//சூப்பரோ சூப்பரப்பு!

எக்ஸலென்ட்!! //

உங்களுக்கெல்லாம் கமல் படமெடுக்கறது புடிக்கலன்னா நேரா சொல்லுங்க. அத விட்டுட்டு பி.வாசுவை வெச்சி "குசேலனைப் பாரு"ன்னு சொல்றதெல்லாம் நல்லாயில்ல.

பரிசல்காரன் சொன்னது…

கிரி இப்போ நினைச்சிருப்பாரு,

இங்க கோவி.கண்ணனும், நீங்களும் பண்ற டுபூரித்தனத்துக்கு, என்னோட விமர்சனமே பரவால்லன்னு!

பரிசல்காரன் சொன்னது…

//இங்க கோவி.கண்ணனும், நீங்களும் பண்ற டுபூரித்தனத்துக்கு, என்னோட விமர்சனமே பரவால்லன்னு! //

வெண்பூ, இது உங்க வலைப்பூன்னு நெனைக்கற அளவுக்கு கும்மீட்டிருக்கீங்க!

வெண்பூ சொன்னது…

//நான் ஷகீலா படத்துக்கு கூட நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதுவேன்.
//

அது "நல்லா இருக்குன்னு"தான் எல்லாருக்கும் தெரியுமே.

வெண்பூ சொன்னது…

//
நலாயிருக்குன்னு சொன்னா, அவங்க ரசிகன், இல்லைன்னா இல்லையா?
//

ரசிகன்னா என்னான்னு ஏற்கனவே சொல்லிட்டாங்களே.. தலைவர் சொன்னா "சூரியன் உதிக்கும் திசை மேற்கு" அப்படின்னு ஒத்துக்கணும். இது கூட தெரியாம இருக்கீங்களே?

பரிசல்காரன் சொன்னது…

ஆட்டத்தின் 42வது ஓவரில், எதிரே வந்த பந்தை லெக் ஸைடில் லாவகமாக திருப்பி விட்டதில், பரிசல்காரனின் எண்ணிக்கை 9. அணியின் மொத்த எண்ணிக்கை 73!

வெண்பூ சொன்னது…

//பரிசல்காரன் said...
கிரி இப்போ நினைச்சிருப்பாரு,

இங்க கோவி.கண்ணனும், நீங்களும் பண்ற டுபூரித்தனத்துக்கு, என்னோட விமர்சனமே பரவால்லன்னு!//

அவரு எங்க உள்ளார வர்ற மாட்டேன்றாரு. நானும் கோவி.கண்ணனும் அதுக்குத்தான் காத்துகிட்டிருந்தோம்.

பரிசல்காரன் சொன்னது…

அட! அது 73 இல்ல. 74!

இது 75!

பரிசல்காரன் சொன்னது…

து 75 இல்ல, 76

இது 77!

வெண்பூ சொன்னது…

//பரிசல்காரன் said...
ஆட்டத்தின் 42வது ஓவரில், எதிரே வந்த பந்தை லெக் ஸைடில் லாவகமாக திருப்பி விட்டதில், பரிசல்காரனின் எண்ணிக்கை 9. அணியின் மொத்த எண்ணிக்கை 73!
//

அட அந்த 73 பேர் கூட தியேட்டர்ல குசேலன் பாக்குற இடத்துல இல்லையாமே? நெஜமா?

வெண்பூ சொன்னது…

//குசேலன் படத்தில் டால்பின் துள்ளிய ஏரிக்கு பரிசல் ஓட்டிச் சென்று இருக்கிறார். ஒன்னாவது பிடிச்சுட்டுத்தான் வருவார்.//

ஏதாவது கிடைச்சதா?

பரிசல்காரன் சொன்னது…

ஏய்.. கடை ஓனர் எங்கப்பா.. ரெண்டு கஸ்டமர்ஸ் காத்துட்டிருக்காங்க.. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம..

வெண்பூ சொன்னது…

//ஏய்.. கடை ஓனர் எங்கப்பா.. ரெண்டு கஸ்டமர்ஸ் காத்துட்டிருக்காங்க.. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம..//

அதானே... கல்லக் கண்டா (வேணா தப்பா நெனச்சிக்குவாரு).. நான் உங்கள கல்லுன்னு சொன்னேன் சார்..

பரிசல்காரன் சொன்னது…

எதிரிலிருக்கும் ஆட்டக்காரர் வெண்பூ, இப்போது சிறந்த ஃபார்மில் இருப்பதால், பரிசல் ஒவ்வொரு முறையும் ஒரு ரன் எடுத்து, வாய்ப்பை அவருக்கு வழங்கி, சிறப்பாக ஆடிவருகிறார்...

வெண்பூ சொன்னது…

ஆமா குசேலன் படம் ஓடாததுக்கு ஷங்கர்தான் காரணமாமே தெரியுமா பரிசல்?

பரிசல்காரன் சொன்னது…

//அதானே... கல்லக் கண்டா (வேணா தப்பா நெனச்சிக்குவாரு).. நான் உங்கள கல்லுன்னு சொன்னேன் சார்..//

ஆமாமா, நாமதான் **ங்க.. சும்மா கத்திகிட்டிருக்கோம் பாருங்க!

பரிசல்காரன் சொன்னது…

//ஆமா குசேலன் படம் ஓடாததுக்கு ஷங்கர்தான் காரணமாமே தெரியுமா பரிசல்//

இதென்ன புதுக் கதை.. எனக்கு மெயில்ல.. வேணாம், இங்கேயே சொல்லுங்க. நம்மளை கேள்வி கேக்கத்தான் இங்க யாருமே இல்லையே..

பரிசல்காரன் சொன்னது…

வெண்பூ, எங்க போய்ட்டீங்க?

வெண்பூ சொன்னது…

முதல்ல ஷங்கரும் ரஜினியும் படம் பண்றதா இருந்தது. அப்புறம் தள்ளிப்போச்சி. ரஜினி பாபா எடுத்தாரு, ஷங்கர் பாய்ஸ் எடுத்தாரு.. பாபா புட்டுகிச்சி, பாய்ஸ் படுத்துகிச்சி..

அப்புறம் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஹிட் குடுத்துட்டு (சந்திரமுகி, அந்நியன்) அப்புறம்தான் சிவாஜி குடுத்தாங்க. இப்ப ரோபோ பத்தி பேச்செடுத்ததுமே குசேலன் குப்புறடிச்சிருச்சி.

இப்ப சொல்லுங்க.. ஷங்கர்தான காரணம்..

வெண்பூ சொன்னது…

இது தெரியாம எல்லாரும் ரஜினியவும், பி.வாசுவையும் திட்டிட்டு இருக்கீங்க..

வெண்பூ சொன்னது…

//ஆமாமா, நாமதான் **ங்க.. சும்மா கத்திகிட்டிருக்கோம் பாருங்க!//

அட.. கம்பேனி ரகசியத்த வெளிய சொல்லிகிட்டு..

பரிசல்காரன் சொன்னது…

//வெண்பூ said...

முதல்ல ஷங்கரும் ரஜினியும் படம் பண்றதா இருந்தது. அப்புறம் தள்ளிப்போச்சி. ரஜினி பாபா எடுத்தாரு, ஷங்கர் பாய்ஸ் எடுத்தாரு.. பாபா புட்டுகிச்சி, பாய்ஸ் படுத்துகிச்சி..

அப்புறம் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஹிட் குடுத்துட்டு (சந்திரமுகி, அந்நியன்) அப்புறம்தான் சிவாஜி குடுத்தாங்க. இப்ப ரோபோ பத்தி பேச்செடுத்ததுமே குசேலன் குப்புறடிச்சிருச்சி.

இப்ப சொல்லுங்க.. ஷங்கர்தான காரணம்..//

யோசிச்சு முடிச்சு, ரூமைக் காலி பண்ணீட்டீங்களா?

வெண்பூ சொன்னது…

//இதென்ன புதுக் கதை.. எனக்கு மெயில்ல.. வேணாம், இங்கேயே சொல்லுங்க. நம்மளை கேள்வி கேக்கத்தான் இங்க யாருமே இல்லையே..//

அட நம்ம பேசுறத கேக்குறதுக்கே ஆள் இல்லையாம்.. இதுல கேள்வி வேற கேக்குறாங்களா!!!

பரிசல்காரன் சொன்னது…

அணியின் வெற்றிக்கு இன்னும் பத்தே ரன்கள்தான் தேவையென்ற நிலையில், வெண்பூவையும், பரிசலையும் ஆட்டமிழக்கச் செய்ய வழியின்றி, எல்லா பதிவ..ச்சே.. பவுலர்களும் திணறிக்கொண்டிருக்கிறார்கள்

வெண்பூ சொன்னது…

//யோசிச்சு முடிச்சு, ரூமைக் காலி பண்ணீட்டீங்களா?//

அது எப்படி... பேச்சு துணைக்கு ஆள் கெடச்சா விடுவமா நாங்க...

வெண்பூ சொன்னது…

//பரிசல்காரன் said...
வெண்பூ, எங்க போய்ட்டீங்க?
//

அட கொஞ்சம் பெரிய பின்னூட்டமா டைப் அடிக்க லேட் ஆயிடுச்சி.. அதுக்குள்ள கோச்சிகிட்டா எப்பிடி??

பரிசல்காரன் சொன்னது…

கோவி. கண்ணன் வருத்தப் படப் போறாரு....

கமெண்ட் மாடரேஷன எடுத்தது எவ்ளோ பெரிய தப்புன்னு!

பரிசல்காரன் சொன்னது…

96

வெண்பூ சொன்னது…

// பரிசல்காரன் said...
அணியின் வெற்றிக்கு இன்னும் பத்தே ரன்கள்தான் தேவையென்ற நிலையில், வெண்பூவையும், பரிசலையும் ஆட்டமிழக்கச் செய்ய வழியின்றி, எல்லா பதிவ..ச்சே.. பவுலர்களும் திணறிக்கொண்டிருக்கிறார்கள்
//

அட ஒருத்தருமே இல்லாம நாமளே பாலை தூக்கி போட்டு அடிச்சிட்டு இருக்கோம், இதுல நம்ம பெருமைக்கு வேற கொறச்சல் இல்ல..

பரிசல்காரன் சொன்னது…

97.... வெண்பூ, சீக்கிரம் இந்த சைடு வாங்க..

ஒரு டபுள்ஸ், இல்ல, ஃபோர் அடிச்சு செஞ்சுரி போட்டுக்கங்க

வெண்பூ சொன்னது…

//கோவி. கண்ணன் வருத்தப் படப் போறாரு....

கமெண்ட் மாடரேஷன எடுத்தது எவ்ளோ பெரிய தப்புன்னு!//

அவரு ஜி‍, மெயில் பாக்ஸ் ஃபுல் ஆயிடுச்சாமே.. தெரியுமா சேதி???

வெண்பூ சொன்னது…

100

பரிசல்காரன் சொன்னது…

அது 98! இது 99 அல்லது 100?

வெண்பூ சொன்னது…

செஞ்சுரி போட்டாச்சுடா சாமி....

பரிசல்காரன் சொன்னது…

என் பேர்ல பதிவு வந்தா செஞ்சுரிதான்!

ஓக்கே..வாங்க வாங்க.. அடுத்தது எவன் சிக்கறான்னு பார்ப்போம்!

வெண்பூ சொன்னது…

அட.. யாரு செஞ்சுரி போட்டா என்னா.. செஞ்சுரி போடணும்னு ஆரம்பிச்சோம்.. போட்டாச்சி. அது போதாதா?

வாங்க.. போயி பாதியில விட்ட ஆணியெல்லாம் புடுங்குவோம்..

பரிசல்காரன் சொன்னது…

இத்துணை நேரம் பொறுமை காத்து,
ரசித்துக் கொண்டிருக்கும் ரசிகப் பெருமக்களுக்கும், ஆன்றோர்களுக்கும், சான்றோர்களுக்கும்

என் மற்றும் வெண்பூவின் நன்றிகள் உரித்தாகுக!

பரிசல்காரன் சொன்னது…

வர்ட்டா!

வெண்பூ சொன்னது…

//ஓக்கே..வாங்க வாங்க.. அடுத்தது எவன் சிக்கறான்னு பார்ப்போம்!//

கரெக்ட்.. எவனாவது இளிச்சவாயன் அல்லது இளிச்ச‌வாச்சி கமெண்ட் மாடரேஷன் எடுத்து விட்டிருப்பாங்க‌.. அங்க போவோம்.. வாங்க..

கிளம்புறோம்..வர்ட்டா.. கோவி.கண்ணன் சார்..

Aneslin சொன்னது…

Match சூப்பரா போவுது. டபுள் செஞ்சரிக்கு வாழ்த்துக்கள்,
ரகசியமா சூதாட்ட ஏஜென்டுகளும் உலாவறதா கேள்வி, அடித்து ஆடுபவர்களே உஷார்ர்ர்ர்ர்.

//////
தசாவதாரம் படத்தில் வின்செண்ட் பூவராகனுக்கும் பி.வாசுவுக்கு நடக்கும் விவாதத்த்தின் இறுதியில் பி.வாசு கமலிடம் "இரு .இதையும் பார்த்துட்டு போ" என ஏதோ பெரிய குண்டைத் தூக்கி போடுவதைப் போல் சொல்லுவார் .ஆனால் சம்பந்தமே இல்லாமல் அடுத்த காட்சிக்கு சென்று விடும் .. /////////

எங்க ஊர்ல (இலங்கை) அந்த டயலாக்கு அடுத்து வின்சன்டோட வந்தவங்க தண்ணி அடிக்கற நேரடி வீடியோவ அங்க இருக்கற tv/Computer ல வாசு காட்டுவாரு. இது 5 செக்கண்டாவது வரும். அங்க சென்சார் பண்ணிருப்பாங்கனு நெனக்கிறேன்.

சுபாஷ்
hisubash.wordpress.com

kanchana Radhakrishnan சொன்னது…

கண்ணா..உன் பதிவைப் பார்த்தேன்..விடு..இவங்க இப்படி பேசினா உதைக்க வேண்டமா..
நான் என்னிக்குமே மத்தவங்க மனசை புண்படுத்தாதவன்..நான் உதைக்க வேண்டாமான்னா சொன்னேன்..இல்லை..இல்லை..
ஒரு சிலரைன்னு சொல்லியிருக்கணும்..ஏன்னா..நான் ஒரு சிலர்ன்னு சொன்னேன்னா நான் ஒன்னுன்னு சொன்னா நூறுன்னு அர்த்தம்..
பர்த்தானு...

வெயிலான் சொன்னது…

பரிசல்,

உங்க எம்.டி “முகுந்தா... முகுந்தா... க்ருஷ்ணா... முகுந்தா... முகுந்தா...“ னு தேடிட்டிருக்காங்க.

இங்க வெண்பூவோட சேந்து கும்மியடிச்சிட்டு இருக்கீங்களா?

இருங்க வைக்கிறேன் ஆப்பு....;)

ஜெகதீசன் சொன்னது…

:)))))))))))))))))))))))))))))))))

பெயரில்லா சொன்னது…

ஏங்க ஆணி புடுங்காம இப்படி விளையாடீட்டே இருந்தா எப்படி?

கோவி.கண்ணன் சொன்னது…

கும்மியடித்த வெண்பூ மற்றும் பரிசலாருக்கு என்ன பின்னூட்டமாறு செய்யப்போறேன். எப்போ செய்யப் போறேன் தெரியலையே.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

Results 1 - 10 of about 7,030 for தசவதாரம். (0.26 seconds)

நல்லத பாராட்டி எப்பவுமே கொஞ்ச பேருதான் எழுதுவாங்க.

Results 1 - 10 of about 204,000 for குசேலன். (0.27 seconds)
அதே ஒரு விசயத்த திட்றதுனா எத்தனை பேரு வர்றாங்க பாருங்கண்ணே.
மொக்கை போடுறதுல நம்ப ஆளுங்களுக்கு நிகர் நாம தான்.

சமூக சிந்தனையோட எத்தனை பதிவுங்க வருது, அதுல எல்லாம் இருக்க பின்னூட்டங்களோட எண்ணிக்கைய பாருங்க, அதே நேரம் மொக்கை பதிவுகளுக்கு வர்ற பின்னூட்டங்களோட எண்ணிக்கைய பாருங்க.

அதுக்கு அப்றமும் நீங்க இந்த கூகுள் புள்ளிவிவரத்த வைச்சு அரசியல் பண்ணுணா, எனக்கு உங்களையெல்லாம் பார்த்து பாவமா இருக்கு

ஸ்ரீ சொன்னது…

நீங்கள் காமெடி பண்றதா இருந்தா அமைதியா பதிவர்களோடு விளையாடுங்கள்.

// தலைவனே சரியில்லை என்றால் ரசிகர்கள் எப்படி இருப்பான்ங்க. வாழ்க ரஜினி சார் ! //
உங்களின் இந்த வாதம் நல்லா இல்லை.

அப்புறம் நானும் பதிலுக்கு இப்படி சொன்னா ஒத்துக்குவீங்களா?

//ஆந்திராவுக்கு வந்தா நான் என்.டி.ஆர் ரசிகன்னுவார்.. நாகேஸ்வர்ராவும் பிடிக்கும்னுவாரு. அப்புறம் சந்திரபாபு என்.டி.,ஆருக்கு ஆப்பு வைக்கும்போது ஜால்ரா போடுவார்.

கர்நாடகத்துக்கு போனா ராஜ்குமார் ரசிகன்னுவார் இங்கே காவிரி தண்ணி கேட்டு நடிகர்கள் நெய்வேலிக்கு போனா இவர் தனியே உண்ணாவிரதமிருப்பார். இன்னைக்கு கன்னடனை உதைக்கனும்னுவார் நாளைக்கு மன்னிப்புன்னுவார் மறுபடி இல்லை வருத்தம் தெரிவிச்சேன்னுவார்.

அட போங்கய்யா நீங்களும் உங்கள் சூப்பற ஸ்டாரும்.//

உங்கள் மேல் ஒரு மூத்த பதிவர் என்ற மரியாதை வைத்திருந்தேன். நீங்களே இப்படின்னா விளங்குனாப்புல தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்ரீ said...

ஸ்ரீ,
ஆந்திராவுக்கு வந்தா நான் என்.டி.ஆர் ரசிகன்னுவார்.. நாகேஸ்வர்ராவும் பிடிக்கும்னுவாரு. அப்புறம் சந்திரபாபு என்.டி.,ஆருக்கு ஆப்பு வைக்கும்போது ...

இதெல்லாம் இங்கே எங்கே வந்தது ? இந்த பதிவில் இல்லையே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் மேல் ஒரு மூத்த பதிவர் என்ற மரியாதை வைத்திருந்தேன். நீங்களே இப்படின்னா விளங்குனாப்புல தான்.

12:05 AM, August 06, 2008
//

ஸ்ரீ,

இந்த மதிப்பு மரியாதை டயலாக்கையெல்லாம் நிறுத்துங்கோ, இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் என்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வற்புறுத்துவது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

ஸ்ரீ,
ஆந்திராவுக்கு வந்தா நான் என்.டி.ஆர் ரசிகன்னுவார்.. நாகேஸ்வர்ராவும் பிடிக்கும்னுவாரு. அப்புறம் சந்திரபாபு என்.டி.,ஆருக்கு ஆப்பு வைக்கும்போது ...இந்த வரிகள் இந்த பதிவில் இருக்கு, http://indianpoliticalcloseup.blogspot.com/2008/08/blog-post_04.html

வெண்பூ சொன்னது…

அது சித்தூர் தினத்தந்தி நிருபர் எஸ்.முருகேசனின் வலைப்பக்கம். அதைப்பாத்துட்டு ஏன் கோவி.கண்ணனை திட்டுறீங்க சார்?

பரிசல்காரன் சொன்னது…

ஐயையோ

என்ன இது... இவ்வளவு ஒரு நல்ல மொக்கைப் பதிவு, சீரியஸாப் போகுது??

அன்புள்ள ஸ்ரீ & கோவி.கண்ணன்

ப்ளீஸ், யார் மனசு புண்பட்டிருப்பினும் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்!

விவாதம் வேண்டாமே...

பரிசல்காரன் சொன்னது…

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

என்ன கொடுமை இது!!

ஸ்ரீ சொன்னது…

//கோவி.கண்ணன் said...
ஸ்ரீ,
..இந்த வரிகள் இந்த பதிவில் இருக்கு, //

athaiyum thaan copy paste seidhen aana adhuku munnadiye comment save aayiduchu pola

ஸ்ரீ சொன்னது…

{{{{ நீங்கள் காமெடி பண்றதா இருந்தா அமைதியா பதிவர்களோடு விளையாடுங்கள்.

//// தலைவனே சரியில்லை என்றால் ரசிகர்கள் எப்படி இருப்பான்ங்க. வாழ்க ரஜினி சார் ! //

//உங்களின் இந்த வாதம் நல்லா இல்லை.// }}}}}

naan kettadhu mela irukura kelviya thaana? aana idhuku badhilo vilakkamo kudutha madhiri theriyalaye!!!! Ennamo ponga

கோவி.கண்ணன் சொன்னது…

//naan kettadhu mela irukura kelviya thaana? aana idhuku badhilo vilakkamo kudutha madhiri theriyalaye!!!! Ennamo ponga//

சரிங்க,

விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட உத்தமர் யாரும் இல்லிங்கோ, நீங்க வேண்டுமானல் இதைக் கண்டனம் செய்து கன்னாபின்ன்னான்னு எதைவேண்டுமானலும் எழுதுங்கோ ஒன்னும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன்.

மருதநாயகம் சொன்னது…

//மருதநாயகம் வரட்டும்//

அதான் வந்துட்டோம்ல

ஸ்ரீ சொன்னது…

Nethu ketta kelviku badhil dhaan podala. Innaiku andha pinnotam kooda publish pannalaya? Superu nalla irukunga nattama thanam. Adhuku badhil ungakitta illana neengalum pesama pesuna pechuku VARUTHAM therivichikonga.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்