பின்பற்றுபவர்கள்

15 ஆகஸ்ட், 2008

முக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் !

கலைஞர் ஐயாவுக்கு வயது ஆக ஆக வாரிசுகள் மேல் வைத்திருக்கும் பாசமும், பெருமையும் கூடிக் கொண்டே போகிறது, தந்தை மக்கட்கு ஆற்றும் உதவியாக, அரசு விழாவா ? குடும்ப விழாவா ? என பெரும் குழப்பம் ஏற்படும் அளவுக்கு பொது இடங்களில் வாஞ்சையின்றி வாரிசுகளைப் புகழ்ந்து தள்ளுகிறார்.

//"இப்போது சென்னை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அங்கே பக்கத்திலே ஒரு ரயில்வே கேட்- அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய காலனி. அந்தக் காலனியில் ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்போது ஸ்டாலின் ஒரு சின்ன குழந்தை. ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் புரிகிறது- அவன் ஒரு ஊக்கை விழுங்கவில்லை. ஊக்கத்தை விழுங்கியிருக்கிறான் என்று. அந்த ஊக்கம்தான் இன்றைக்கு அவரை மேயராக்கி, அமைச்சராக்கி, இன்னும் என்னென்னவோ ஆக்கப் போகிறது."//


நல்ல வேளை கலைஞர் வீட்டில் ஊக்கமருந்தாக ஒரே ஒரு ஊக்குதான் இருந்திருக்கிறது போலும். இன்னும் நிறைய ஊக்குகள் இருந்திருந்தால் மற்ற வாரிசுகளுக்கும் மேயராகி, அமைச்சராகும் வாய்பெல்லாம் விரைவாகவே கிடைத்திருக்கும்.

//கருணாநிதி நகர் என்றால் கே.கே.நகர்- இன்னும் 10 ஆண்டுகள் சென்ற பிறகு அது கீக்கி நகர் என்றாகி விடும். ஏனென்றால் வரலாற்றுப் பெயர்களை, இன உணர்வுக்கு தூண்டுதல்களாக இருந்த பெயர்களை எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டும் என்பதுதான் சில வஞ்சகர்களுடைய திட்டம். நான் எல்லோரையும் சொல்லவில்லை. அப்படிச் செய்பவர்கள் வஞ்சகர்கள். அது வஞ்சகர்களுடைய திட்டம், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் என்றார் கருணாநிதி.//

ஞாயமான ஆதங்கம் ! 'முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம்' என்ற பெயரில் இருந்த எம்ஜிஆர் என்ற பெயரெல்லாம் காணமல் போனது பற்றி எதுவும் சொல்லவில்லையே !

நாளுக்கு நாள் கலைஞர் செய்யும் காமடிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவரைப் பற்றி எதிர்கட்சிகள் எதுவும் தவறாக சித்தரிக்கத் தேவை இல்லை. அவரே அதையெல்லம் பொதுமக்களுக்கு தன் பேச்சின் வழியாக உணர்த்திவிடுகிறார்.

18 கருத்துகள்:

வடகரை வேலன் சொன்னது…

சின்ன வயசிலேயா? தாங்க முடியல.

ஜோதிபாரதி சொன்னது…

கலைஞர்களுக்கு இயற்கையாகவே கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம். அதுக்காக இப்படியா? தம் பிள்ளைகளை வாழ்த்துவதை எப்பவும் மறந்ததில்லை(மற்றவர்களைப் பற்றி என்ன கவலை)

அன்புடன்,
ஜோதிபாரதி.

கிரி சொன்னது…

ஊக்கு தொண்டையில மாட்டிக்காம இருந்தா சரி :-)

SanJai சொன்னது…

//அந்தக் காலனியில் ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//
இப்போது எத்தனை எத்தனை வீடுகள்? அன்று ஒரு காலனியில் அவர்கள் வீடு. இன்று ஒரு காலனியே உருவாக்கும் அளவுக்கு அவர்களுக்கு வீடுகள். :)

ஹ்ம்ம்ம்.. அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே.. :)))

.. அதென்ன இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்.. அந்த என்னென்னவோ என்ன என்ன என்று சொல்லிவிட வேண்டியது தானே.. நீண்ட அரசியல் அனுபவம் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் தகுதி இருப்பதாவே நினைக்கிறேன். அதற்கு ஒரே தடை அழகிரி...

ஹ்ம்ம்.. இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் பார்ர்கப் போகிறோமோ? :)

Dharan சொன்னது…

///ஞாயமான ஆதங்கம் ! 'முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம்' என்ற பெயரில் இருந்த எம்ஜிஆர் என்ற பெயரெல்லாம் காணமல் போனது பற்றி எதுவும் சொல்லவில்லையே ///

காமராசர் எண்னத்தில் உதித்து நடைமுறையில் இருந்ததை, MGR ன் பெயரால் அழைப்பது எப்படி சரியாகும்.
MGR அதனை மேம்படுத்தி இருக்கலாம் அதற்காக MGR சத்துணவு திட்டமென்றூ வைத்துக் கொள்வதா??? திரு. கருணாநிதி கூடத்தான் முட்டை மற்றும் பழும் என்று மேம்படுத்தினார் அதற்காக கருணாநிதி சத்துணவு திட்டமென்று பெயர் வைத்துக்கொள்ளவில்லையே அவர்????

KK வின் செயல்பாடுகள் மீது சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் JJ வை விட 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000......மடங்கு மேல்

karikalan சொன்னது…

//நல்ல வேளை கலைஞர் வீட்டில் ஊக்கமருந்தாக ஒரே ஒரு ஊக்குதான் இருந்திருக்கிறது போலும். இன்னும் நிறைய ஊக்குகள் இருந்திருந்தால் மற்ற வாரிசுகளுக்கும் மேயராகி, அமைச்சராகும் வாய்பெல்லாம் விரைவாகவே கிடைத்திருக்கும்\\

:-))))))

மோகன் கந்தசாமி சொன்னது…

////KK வின் செயல்பாடுகள் மீது சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் JJ வை விட 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000......மடங்கு மேல்////

inthu ondrirkkaaga thaan sagalaththaiyum sagiththuk kolla vendiyulladhu!

லக்கிலுக் சொன்னது…

நீங்கள் குறிப்பிட்ட விழாவை நேரில் பார்த்தவன் என்ற முறையில் உங்களது இந்த விமர்சனம் காழ்ப்புணர்வின் காரணமாக எழுதப்பட்டது என்பதை என்னால் உணரமுடிகிறது.

கலைஞர் விழா மேடையில் பேசியவற்றில் மூன்று சதவிகித அளவினை மட்டுமே எடுத்துவைத்து அவரை மோசமாக விமர்சிப்பது என்பது சோ பாணி விமர்சனம்.

அதே விழா மேடையில் காமராஜர் சாலை, அண்ணா மேம்பாலம், உஸ்மான், துரைசாமி அய்யர் ஆகியோரைப் பற்றியெல்லாம் கூட கலைஞர் பேசினார்.


சஞ்சய் சார்!

//ஹ்ம்ம்ம்.. அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே.. :)))///

காங்கிரஸ்காரர்கள் மட்டும் தான் தியாகிகள் :-)

SanJai சொன்னது…

//சஞ்சய் சார்!

//ஹ்ம்ம்ம்.. அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே.. :)))///

காங்கிரஸ்காரர்கள் மட்டும் தான் தியாகிகள் :-)//

அப்படியே சிந்தாமல் சிதறாமல் ஒத்துக் கொள்கிறேன். செண்பகராமன் காங்கிரஸ்காரரா? :)

... லக்கி .. சார் எல்லாம் வேண்டாம் ப்ளீஸ்.. நான் உங்களை விட இளையவன் தான்...

SanJai சொன்னது…

//காமராசர் எண்னத்தில் உதித்து நடைமுறையில் இருந்ததை, MGR ன் பெயரால் அழைப்பது எப்படி சரியாகும்.
MGR அதனை மேம்படுத்தி இருக்கலாம் அதற்காக MGR சத்துணவு திட்டமென்றூ வைத்துக் கொள்வதா???//

மகா மோசமான செயல் இது... இதை மட்டுமா புரட்சி தலைவர் செய்தார். இன்று தமிழகத்தில் இருக்கும் கல்வி கொள்ளையர்கள் பல பேரை உருவாக்கியவரே அந்த தெய்வத் திருமகன் தானே.

ஜேப்பியா, ஏ.சி. சண்முகம், மு.தம்பிதுரை, விஸ்வநாதன், எம்.ஜி சேகர் இன்னும் ஏராளமானோர்..

வெண்பூ சொன்னது…

//நாளுக்கு நாள் கலைஞர் செய்யும் காமடிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவரைப் பற்றி எதிர்கட்சிகள் எதுவும் தவறாக சித்தரிக்கத் தேவை இல்லை. அவரே அதையெல்லம் பொதுமக்களுக்கு தன் பேச்சின் வழியாக உணர்த்திவிடுகிறார்.//

அட விடுங்க சார்.. வயசானவரு எதுனா காமெடி அடிச்சா சிரிச்சிட்டு போவீங்களா.. அத விட்டுட்டு.. நமக்கும் ஒரு நேரம் வராமலா போய்டும் இவங்கள வெச்சி காமெடி அடிக்க.. தேர்தல் அப்படின்ற பேர்ல‌

பரிசல்காரன் சொன்னது…

அதானே பார்த்தேன்.. லக்கி இல்லாம கலைஞர் பத்தின பதிவா?

எப்படியோ..
பின்னூட்டத்துல வந்துட்டாருல்ல??

புதுகை.எம்.எம்.அப்துல்லா சொன்னது…

நல்ல வேளை கலைஞர் வீட்டில் ஊக்கமருந்தாக ஒரே ஒரு ஊக்குதான் இருந்திருக்கிறது போலும். இன்னும் நிறைய ஊக்குகள் இருந்திருந்தால் மற்ற வாரிசுகளுக்கும் மேயராகி, அமைச்சராகும் வாய்பெல்லாம் விரைவாகவே கிடைத்திருக்கும்.


மனசாட்சியோடு சொல்லுங்கள். திரு.ஸ்டாலின் அவர்கள் வாரிசு என்ற ஓரே ஓரு தகுதியால் தான் மேயர் மற்றும் அமைச்சர் ஆனார் என்கின்றீர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

மனசாட்சியோடு சொல்லுங்கள். திரு.ஸ்டாலின் அவர்கள் வாரிசு என்ற ஓரே ஓரு தகுதியால் தான் மேயர் மற்றும் அமைச்சர் ஆனார் என்கின்றீர்களா?

3:32 AM, August 17, 2008
//

தகுதி இல்லை என்று யார் சொன்னது ? இருந்தால் நல்லா இருக்கும் என்று தானே விரும்புறோம் !
:))

அட அது இல்லை, அவர் வாரிசாக இருந்ததால் அவருக்கு அதற்கான வாய்பு எளிதில் கிடைத்தது. ஸ்டாலின் வயது உள்ள திமுக கீழ்மட்ட தலைவர்கள் யாருக்கும் ஸ்டாலின் அளவுக்கு திறமை இல்லை என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்ல முடியுமா ? :)

ஸ்டாலின் வளர்சிக்காகவே வைகோ பலி கொடுக்கப்பட்டார் என்றும் இன்னும் கூட பழைய திமுக விசுவாசிகள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஸ்டாலின் திறமையைக் குறைத்துச் சொல்லவில்லை. வாரிசு அரசியல் பற்றி ஏற்கனவே பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்.

முடிந்தால் அந்த லிங்கைக் படிங்கண்ணா :)

நான் காழ்புணர்வோடு சொல்லவில்லை என்பது விளங்கும் !

புதுகை.எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ஸ்டாலின் வயது உள்ள திமுக கீழ்மட்ட தலைவர்கள் யாருக்கும் ஸ்டாலின் அளவுக்கு திறமை இல்லை என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்ல முடியுமா
//

அண்ணா!இன்றைக்கு ஸ்டாலின் வயதுடைய கீழ் மட்ட தலைவர்களில் ஓருவர் கூட மிசாவில் இருந்தது உதை பட்டது கிடையாது.இனறைக்கு அமைச்சரவையில் இருக்கும் ஸ்டாலின் வயதுடைய அமைச்சர்கள் பொன்முடி,எ.வா.வேலு,எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம், மதிவாணன்,கே.என்.நேரு,
ஐ.பெரியசாமி,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இதில் யார் மிசாவில் இருந்தார்கள் காட்டுங்கள் பார்ப்போம்? நான் மேலே குறிப்பிட்டுள்ள நபர்களில் பலர் 1989 லேயே அமைச்சர் ஆனவர்கள்.

//ஸ்டாலின் வளர்சிக்காகவே வைகோ பலி கொடுக்கப்பட்டார் என்றும் இன்னும் கூட பழைய திமுக விசுவாசிகள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//

ஓருஎம்.பியாக இருந்து தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் கள்ளத் தோணியில் இலங்கை சென்ற காரணத்தால் தான் அன்று தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டது. அதுதான் கோபால்சாமி வெளியேற்றத்துக்கு உண்மையான காரணம். உங்கள் வாதப்படி கோபால்சாமி பலி கொடுக்கப்பட்டார் என்றே வைத்துக்கொண்டாலும் நல்லவேளை பலி கொடுக்கப்பட்டார், இல்லாவிட்டால் தி.மு.க வும் ம.தி.மு.க அளவிற்கு தமிழகத்தில் வேறு கட்சிகளே இல்லை என்கிற அளவிற்கு வளர்ந்து இருக்கும் :)))))

SanJai சொன்னது…

//ஸ்டாலின் வளர்சிக்காகவே வைகோ பலி கொடுக்கப்பட்டார் என்றும் இன்னும் கூட பழைய திமுக விசுவாசிகள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//

பழய திமுக விசுவசிகள் என்றால் மதிமுக வினரா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanJai said...
//ஸ்டாலின் வளர்சிக்காகவே வைகோ பலி கொடுக்கப்பட்டார் என்றும் இன்னும் கூட பழைய திமுக விசுவாசிகள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//

பழய திமுக விசுவசிகள் என்றால் மதிமுக வினரா? :)
//

SanJai,

நீண்ட நாளாக திமுக விசுவாசிகளாக இருப்பார்கள் !

Dharan சொன்னது…

///கோவி.கண்ணன் said...

ஸ்டாலின் வளர்சிக்காகவே வைகோ பலி கொடுக்கப்பட்டார் என்றும் இன்னும் கூட பழைய திமுக விசுவாசிகள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//

வைகோ வின் தகுதியைத்தான் அவர் MDMK வை நடத்தும் லட்சனத்திலேயே தெரியவில்லை. வேண்டாம் வைகோ புராணம். ஈழ விடயம் பேசுவதினாலேயே ஒருவன் தலைவனாகிவிட முடியாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்