பின்பற்றுபவர்கள்

5 மார்ச், 2010

நித்யானந்தா VS பெரியவா !

இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது.

நித்தியானந்தா மீதான திடீர் புகார் - முழுமையாக விசாரிக்க வேண்டும் - ராம கோபாலன்

இது போன்று முறைகேடுகள், விதவைகள் மீது பாலியல் தொந்தரவு (அணுராதா ரமணன் உட்பட), நம்பிக்கை மோசடி கூடுதலாக கொலை ஆகியவற்றுடன், ஆபாச வீடியோ வெளியீடுகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் பெரியவாவை உள்ளே வைத்து விசாரணை நடத்திய போது அரசுக்கு எதிராக போராடியவர்கள் தான் இராம கோபாலன் தலைமையிலான இந்து அமைப்புகள்.

நித்யானந்தா மேட்டரில் விசாரனை நடை பெற வேண்டும் என்று உடனடியாக கேட்பதில் இருந்து இந்த அமைப்புகளின் உள்நோக்கம் பற்றி நினைக்க வேண்டி இருக்கிறது.

பெரியவா சின்னவாக்களின் மீது விசாரணையே கூடாது, அவர் தவறு செய்யக் கூடியவர் அல்ல என்று வரிந்து கட்டிய இந்த அமைப்பினர் நித்யானந்ததின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதின் பற்றி நினைத்தால் வெறும் பார்பனர் / பார்பனர் அல்லாதவர் என்கிற வருண சாதி அரசியலே காரணம். மற்றபடி இந்து மதத்தை இவர்கள் துய்மை படுத்த நடவெடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை. பார்பான் சதுர்வேதி மற்றும் பார்பான் தேவநாதன் விடியோவும் போஸுமாக சிக்கிய பின்பு இந்த அமைப்பினர் அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு இப்படியான உடனடி ஆதரவு கொடுத்தாகக் கூட நான் படித்ததில்லை. அப்படி இருந்தால் யாராவது இணைப்பை கொடுங்கள்.

பெரியாவா மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றாலும் குறைந்த பட்சமாக விசாரணை நடை பெற்றால் உண்மை தெரியும், எனவே இது பற்றி நாங்கள் மவுனம் சாதிக்கிறோம் என்றாவது கூறி இருக்கலாம், ஆனால் சு.சாமி மற்றும் ஏவி எம் நிறுவன உரிமையாளர்களுடன் சென்று விசாரணைக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து காஞ்சியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தான் இந்த இந்து அமைப்புகள்.

ஒருவரை நீதிமன்றம் சாட்சிகளின் வழியாக குற்றவாளி என்றால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது நடைமுறை ஆனால் ஒருவர் மீது குற்ற அடிப்படைகளை வைத்து குற்றம் சுமத்தி விசாரணைக் கோருவது தவறே இல்லை. அப்படி பட்ட குற்றச் சாட்டுகள் பெரியவாளுக்கு எதிராக பதிய வைத்தற்குக் கூட எதிர்ப்பு காட்டிய இந்து அமைப்புகள் நித்யானந்ததிற்கு மட்டும் உடனடியாக விசாரணைக் கோருவது ஏன் ?

காரணம் மிக எளிது, நித்யானந்தம் ஒரு சூத்திரன், மேலும் (வீடியோவில் பார்த்ததில்) மிகவும் கருப்பாகவே இருக்கிறான், அவனிடம் பார்பன லட்சணம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அடையாளமும் இல்லை. போட்டிக்கு கல்லா கட்டியவன் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் தெரியவில்லை.

******

இராம கோபாலன் மற்று இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லுபவர்களும், சில இந்து அமைப்புகளும் பார்பனிய / வருணாசிரம நலம் காப்பவர்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகவே உள்ளது.

நித்யாநந்தம் யோக்கிய சிகாமணி பார்பனரல்லாதவர்கள் அவனைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் நடத்துபவர்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவு பெற வேண்டும் என்று நினைக்கும் இந்து அமைப்புகள் எப்படி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற அமைப்புகளால் இந்து மதம் மெய்யாலுமே காக்கப்படுமா ? ஆனால் இதே அமைப்புகள் மார்ச் 2 முன்பு, நித்யானந்ததின் செல்வாக்கு, வளர்ச்சி, உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து நித்யானந்தம் இந்து மதத்தின் புதிய சூரியன், நவீன விவேகாநந்தர் என்று புகழ்ந்தவைகள் தாம். ஒரு பார்பன சாமியார் சிக்கினால் அவர் தப்பே செய்யாதவர் என்றும், அதுவே ஒரு சூத்திர சாமியார் சிக்கினால் நடவெடிக்கை கோருவதென்றால் அதில் உள்நோக்கம் இன்றி வேறென்ன, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், இந்து அமைப்பு என்ற போர்வைகள் யாரைக் காப்பதற்கு என்று, இவர்கள் ஒட்டு மொத்த இந்துக்களின் நலனையும் இந்து மதத்தின் நலனையோ, இந்து தெய்வங்களின் நலனையோ காக்கிறார்கள் என்று நினைப்பவர்கள் தான் யோசிக்க வேண்டும். இது போன்ற பக்க சார்பு அமைப்புகளை நம்பும் நம்மால் இந்துகளுக்குள் ஒற்றுமையாவது வளர்க்க முடியுமா ?

இன்னும் ஒரு இடத்தில் சந்தடி சாக்கில் ஒரு இஸ்லாமியர் 'எங்க மதத்தில் துறவரம் கிடையாது....இது போன்று நடப்பதில்லை' என்கிறார். எல்லோரும் இஸ்லாமியராக மாறுங்கள் உண்மையான இறைவனை அடையுங்கள் என்கிறாரா தெரியவில்லை. நிரந்தர சொற்கம், நீளக் கண்கள் பெண்கள் கிடைக்கும் என அப்பாவிகளை ஆசைக்காட்டி, தீவிரவாதிகளாக்கி, தற்கொலை படைகளாக மாற்றி இறக்குவதைவிட சாமியார்களின் செக்ஸ் லீலைகள் எனக்கு பெரியதாகவே தெரியவில்லை. எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.

படம் : நன்றி வினவு

52 கருத்துகள்:

Robin சொன்னது…

//எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.// உண்மை. எல்லா மதங்களிலும் கருப்பு ஆடுகள் உண்டு. இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது அந்தந்த மதத்தினரின் கடமை.

குகன் சொன்னது…

பெரியார் சொன்னத சொன்னா கல்லெடுத்து அடிக்க வரான். 'பெரியவா' சொன்னா அசிவாதம் பண்ணுறான்.... :)

குகன் சொன்னது…

பெரியார் சொன்னத சொன்னா கல்லெடுத்து அடிக்க வரான். 'பெரியவா' சொன்னா அசிவாதம் பண்ணுறான்.... :)

வால்பையன் சொன்னது…

சரியா சொன்னிங்க!

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கோவி கண்ணன்!

உங்கள் கேள்வி, பார்வையில் அடிப்படையிலேயே ஒரு கோளாறு தொடர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது!

உங்களுடைய வார்த்தைப் பிரயோகத்திலேயே சொல்ல வேண்டுமென்றால், ஒரு பாப்பாத்தி தான் ஜெயேந்திரனுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க முடிந்தது!

ஆனால், பகுத்தறிவுவாதிகள், இன்றைக்கு பகலில் சாமி இரவில் காமி என்று அறிக்கைவிட்டுக் கொண்டிருப்பவர்கள், அந்த வழக்கில் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறார்கள், திரை மறைவில் நடப்பதென்ன என்பதை உங்களால் பார்க்க முடிவதில்லை என்பதை விட, உங்களுக்கு சௌகரியப்பட்ட விதத்தில் மட்டுமே பிரச்சினையைப் பேசுகிறீர்கள்! உண்மையைத் தேடுவதற்காக அல்ல, அப்படித்தானே?

ராம கோபாலன் மாதிரிக் கோமாளிகள் போராட்டம் நடத்துவதால் தான் அரசு தயங்குவது போல, நடவடிக்கை எடுக்க முடியாமல் பதுங்குவது போலப் பேசுகிறீர்கள்!

ஒவ்வொரு சாட்சியாக பல்டி அடித்துக் கொண்டே போவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது! இந்த ஒரு வழக்கு என்று மட்டும் அல்ல, எல்லா அரசியல் வழக்குகளிலும் தான்!

ஊழல் என்று வழக்குப் போடுவார்கள்! கட்சி மாறி இவர்களிடம் வந்தவுடன், நீதிமன்றத்தில் சாட்சியங்கள் இல்லாமல் விடுதலை செய்யப் பட்ட உத்தமர்கள் எத்தனை பேர் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

ஜெயேந்திரரும், அந்த உத்தமர் பட்டியலில் விரைவிலேயே வந்து விடுவார்! அதற்கு உண்மையிலேயே காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி அக்கறை இருக்கிறதா?

ராம கோபாலன், இல.கணேசன் மாதிரிக் காமெடிப் பீஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் மனம் போன போக்கில் பதிவு எழுதி விடுகிறீர்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம கோபாலன், இல.கணேசன் மாதிரிக் காமெடிப் பீஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் மனம் போன போக்கில் பதிவு எழுதி விடுகிறீர்கள்!//

நீங்களே அவர்களை காமடி பீஸ் என்று சொல்லிவிட்டு அவர்கள் செயல்பாட்டை சுட்டும் இதை மனம் போன போக்கில் எழுதுவதாகச் சொல்வது விந்தையாக இருக்கிறது. இந்த அமைப்பினர் தேவநாதனுக்கு எதிரான நடவெடிக்கைக்காவது ஆதரவு தெரிவித்துள்ளார்களா ? அமைதி தானே காக்கிறார்கள்

அப்பாவி முரு சொன்னது…

//பகலில் சாமி இரவில் காமி //

அரசு முத்திரையிட்டு ”காப்பிடப்பட்ட” வரி, எதிர்த்துப்பேசினால் ”காப்பிடப்படும்”

கவனம்...

தமிழ் உதயம் சொன்னது…

உலகம் இப்படி தான். ஆன்மீகவாதிகளும் இப்படி தான் இருப்பார்கள். புரிஞ்சுக்கிற அறிவு தான் நமக்கு வேண்டும்

Chitra சொன்னது…

////எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.////

............ ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள். :-)

கோவி.கண்ணன் சொன்னது…

இராபின்,
குகன்,
வால்பையன்,
அப்பாவி முரு,
தமிழ் உதயம்,
சித்ரா

நன்றி !

பித்தனின் வாக்கு சொன்னது…

வழக்கம் போல பார்ப்பன எதிர்ப்பைப் பதிவு செய்து உள்ளீர்கள்.

ஆனால் இந்தப் பிரச்சனையை நான் வேறு ஒரு கோணத்தில் சிந்திக்கின்றேன். முதலில் ஜெயேந்திரன் கைதின் போது அது தோழியின் குடும்பம் மற்றும் மடத்தின் சொத்து பிரச்சனை காரணமாகாப் பழிவாங்குவதாக கூறப்பட்டது. அதனால் ஆதரவு காணப்பட்டது. ஆனால் குற்றத்தின் பின்னனி குறித்து அறிந்தவுடன் பெரும்பாலேனர் பின் வாங்கி விட்டார்கள்.

அவர் கைதின் போது ஆடியவர்கள் எல்லாம் சிறையில் இருந்த போது ஒன்னும் செய்யவில்லை. அவரைக் காப்பாற்றியவர்கள் எஸ் வீ சேகரும் , கருணா நிதியும் தான் என்பதை மறந்து விடாதீர்கள். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

// பெரியார் சொன்னத சொன்னா கல்லெடுத்து அடிக்க வரான். 'பெரியவா' சொன்னா அசிவாதம் பண்ணுறான்.... :) //
அமாம்மா சார், பொண்டாட்டிகளுக்கு கற்பு, தாலி எல்லாம் வேண்டாம்ன்னு அவர் சொன்னா, நீங்க கேக்கலாம், ஆனா நாங்க கல் எடுத்து அடிக்காம என்ன பண்ண முடியும்?

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...

வழக்கம் போல பார்ப்பன எதிர்ப்பைப் பதிவு செய்து உள்ளீர்கள்//

அவர்கள் ஆதரவை பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையாவது ஒப்புக் கொள்கிறீர்களா ? குறைந்த பட்சம் காமக் குருக்கல் தேவனாதனின் நடவடிக்கையைக் கூட இவ்வமைப்புகள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லையே

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

// பெரியார் சொன்னத சொன்னா கல்லெடுத்து அடிக்க வரான். 'பெரியவா' சொன்னா அசிவாதம் பண்ணுறான்.... :) //
அமாம்மா சார், பொண்டாட்டிகளுக்கு கற்பு, தாலி எல்லாம் வேண்டாம்ன்னு அவர் சொன்னா, நீங்க கேக்கலாம், ஆனா நாங்க கல் எடுத்து அடிக்காம என்ன பண்ண முடியும்?//

சுதாகர் சார், உண்மையிலே கற்புன்னு ஒரு சமாச்சாரம் உடலில் ஒரு உருப்பாக எங்கேயாவது பெண்களுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கிறதா ?

எவனோ பாலியல் வன்முறை செய்தால் அதை ஏன் கற்பை அழித்துவிட்டான் என்று சொல்லி அந்த பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் ?

தாழி - இதை பெண்களுக்கு ஆண்களே போடுவாங்களாம் பின்னார் அவங்க செத்த பிறகு கழட்டிவிடச் சொல்லுவாங்களாம் நல்லா இருக்கு சார். ஆம்பளைக்களுக்கு தாழி மாதிரி மேட்டரெல்லாம் கிடையாதா ?

பித்தனின் வாக்கு சொன்னது…

// பகுத்தறிவுவாதிகள், இன்றைக்கு பகலில் சாமி இரவில் காமி என்று அறிக்கைவிட்டுக் கொண்டிருப்பவர்கள், அந்த வழக்கில் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறார்கள், திரை மறைவில் நடப்பதென்ன என்பதை உங்களால் பார்க்க முடிவதில்லை என்பதை விட, உங்களுக்கு சௌகரியப்பட்ட விதத்தில் மட்டுமே பிரச்சினையைப் பேசுகிறீர்கள்! உண்மையைத் தேடுவதற்காக அல்ல, அப்படித்தானே? //
உண்மைதான் கிருஷ்ண மூர்த்தி அய்யா, இது அவர்களின் வழக்கம். அவர்களுக்கு சாதகமான அம்சத்தை மட்டும் வைத்துக் கொள்வார்கள். மற்றதை விட்டு விடுவார்கள். இதை சொன்னால் இதிலையும் ஜாதி பார்ப்பார்கள். நாம் உண்மையைத் தான் சொல்கின்றேம் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆ,தி,மு, கா ஆட்சியில் சாட்சி சொன்னவர்கள் தி,மு,க ஆட்சியில் பல்டி அடித்தது ஏன். கருணா நிதியும் பார்ப்பான் என்பதாலா? கேட்ட கருணானிதியை நாங்க எப்ப சப்போட் பண்ணிணேம் என்பார்கள். நானும் இவர் , வால் பையன் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருகின்றேன். யாரை சப்போர்ட் பண்றாங்க, என்ன சொல்ல வர்றாங்கன்னு புரியல்லை.

ஒன்னு மட்டும் நல்லா புரியுது. ஹிந்து மதம், பார்ப்பனர், ஆரியம் மட்டும் எதிர்க்க வேண்டும் என்று மந்திரித்து விட்ட கோழிகளைப் போல கோஷம் போடுகின்றார்கள். இவர்கள் மட்டும் அல்ல மொத்த இயக்கத்தைச் சொல்கின்றேன்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// இந்த அமைப்பினர் தேவநாதனுக்கு எதிரான நடவெடிக்கைக்காவது ஆதரவு தெரிவித்துள்ளார்களா ? அமைதி தானே காக்கிறார்கள்//
இதை எந்த கருத்தில் கேக்கின்றீர் என்று புரியவில்லை, அவன் செய்த காரியத்திற்கு யாரவது ஒரு மனுசன் சப்போர்ட் வருவானா?. என்ன கேள்வி யோசித்துக் கேளுங்கள். அவன் தலித்தா இருந்தாக் கூட கிருஷ்ன சாமி, திருமான்னு யாரும் வரமாட்டாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//// இந்த அமைப்பினர் தேவநாதனுக்கு எதிரான நடவெடிக்கைக்காவது ஆதரவு தெரிவித்துள்ளார்களா ? அமைதி தானே காக்கிறார்கள்//
இதை எந்த கருத்தில் கேக்கின்றீர் என்று புரியவில்லை, அவன் செய்த காரியத்திற்கு யாரவது ஒரு மனுசன் சப்போர்ட் வருவானா?. என்ன கேள்வி யோசித்துக் கேளுங்கள். அவன் தலித்தா இருந்தாக் கூட கிருஷ்ன சாமி, திருமான்னு யாரும் வரமாட்டாங்க.//

சரியாக படிக்கவும் நான் இந்து அமைப்பினர் தேவநாதனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லவில்லை அரசு எடுத்த நடவெடிக்கைகளுக்கு அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்களா என்று தான் கேட்டு இருக்கிறேன்.

:)

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்லா இருக்கு, முதலில் ஒரு மதக் கருத்துக்களை நல்லா படியுங்கள். அப்புறம் கருத்து சொல்லுங்கள். தாலி பொண்ணுக்கு, மெட்டி ஆணுக்கு. அனால் ஆண்தான் மெட்டியும் பெண்ணுக்கு கொடுத்து விட்டான். கல்யாணம் ஆன கணவன் மெட்டி அணியவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் அது கடைப்பிடிப்பதில்லை. இது மனிதனின் குற்றம். சம்பிராதயத்தின் குற்றம் அல்ல.

பெண் பாலியல் பலாத்காரத்தால் கெடுக்கப் படும் போது கற்பழிக்கப் பட்டாள் என்றுதான் கூறுகின்றார்கள். கற்பு இழந்தாள் என்று கூறுவது இல்லை. கற்பு அழிப்பது வேறு, கற்பு இழப்பது வேறு. கற்பே தேவையில்லை என்று கூறுவது வேறு. மூன்றையும் திரிக்காதீர்கள். கற்பு அழிக்கப் பட்ட பெண்களுக்கு நான் உட்பட பலர் தயாராக உள்ளேம். ஆனால் பெண்ணுக்கு கற்பே தேவை இல்லை. பாலியல் என்பது உடலின் தேவைதான் என்று பெரியார் கூறுவதைக் குடும்பத்தில் கூற முடியுமா என்று மட்டும் நேரடி பதில் கூறுங்கள்.(சுத்தி வளைக்க வேண்டாம்)

பித்தனின் வாக்கு சொன்னது…

இதை வீட ஒரு கருத்தை ரொம்ப வசதியாக மறைத்து விட்டீர்கள், கொலை நடந்த இடம் கோவில் என்பதால் பல பிராமணர்கள் ஜெயேந்திரர்க்கு ஆதரவு அளிக்க வில்லை. பின்னும் சங்கர மடம் காஞ்சியில் பல பார்ப்பனர்களுகுப் பிடிக்காத இடம். அங்கு பெரும்பாலும் முதலாளிகளும், வட நாட்டவரும் தான் வருகின்றனர். சராசரி பார்ப்பனர்களுக்கு அந்த இடம் பிடிக்ககாத ஒன்று. பணக்காரத்தனம் மற்றும் ஆடம்பரம், ஜயர்,தெலுங்கு எனப் பல பாகுபாடுகளால் சிக்கிச் சீப்பட்டனர். உண்மையில் இந்தப் பிரச்சனையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஒரு சிறு சபலத்தில் தூண்டில் மீனாக மாட்டியவர் ஜெயேந்திரர். திமிங்கலம் வேறு இடத்தில் இருக்கின்றது. நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

கோவி நீங்க காமெடி கிமடி எதுவும் பண்ணலையே. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது அது சட்டத்திற்க்கு புறம்பாக செயல் பட்டால் எதிர்க்கலாம், திறமையாக செயல் பட்டால் ஆதரிக்கலாம். ஆனா கடமையைச் செய்யும் போது எதற்க்கு பாரட்டுவது?
என்ன செய்ய வேண்டும், குருக்கள் சிறை வைத்த கோமகளே ஒரு பாராட்டுப் பத்திரமா வாசிக்க முடியும். சரி தப்பு பண்ணினான் அனுபவிக்கின்றான் என்று சத்தம் இல்லாமல் இருந்து விட்டார்கள். அவ்வளவுதான். வாததிற்க்காக கூறாதிர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு, முதலில் ஒரு மதக் கருத்துக்களை நல்லா படியுங்கள். அப்புறம் கருத்து சொல்லுங்கள். தாலி பொண்ணுக்கு, மெட்டி ஆணுக்கு. அனால் ஆண்தான் மெட்டியும் பெண்ணுக்கு கொடுத்து விட்டான். கல்யாணம் ஆன கணவன் மெட்டி அணியவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் அது கடைப்பிடிப்பதில்லை. இது மனிதனின் குற்றம். சம்பிராதயத்தின் குற்றம் அல்ல. //

இதைச் சொல்லுவேள் என்று நேக்கு தெரியும். சொல்லட்டும் என்றே விட்டு வைத்தேன். ஆண்கள் மெட்டி போட்டார்கள் என்றாலும் இப்போது ஏன் போடவில்லை. நான் இப்போது உள்ள நடைமுறை குறித்து தான் பேசுகிறேன். இப்ப மெட்டிப் போடும் ஆண்களைக் காட்டிவிட்டு தாலி பற்றி பேசுங்கள்.

சம்ராதயாம் புண்ணாக்கு வேதம் உபநிசத்து எல்லா கன்றாவியிலும் எல்லாம் இருக்கு நடை முறையில் என்ன இருக்கு அதைத்தான் பேச முடியும். ஆம்பளைங்க மெட்டியை கழட்டி எரிந்துவிட்டு பெண்களை மட்டும் தொங்க தொங்க அணிந்து கொள்ளுங்கள் அது தான் சமயப் பண்பாடு என்று சமயத்தை பெண்கள் தலையில் கட்டுவது ஏன், எனக்கு தெரிஞ்சு பொம்பளைங்களுக்கு பட்டுப் புடவை கட்டச் சொல்லி விழாக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்களில் பெரும் பகுதியினர் அதே விழாவில் வெள்ளைகாரன் குழாய் தான் மாட்டுகிறார்கள். இப்ப பிரச்சனை பெண்கள் மீது கட்டுபாடு செலுத்திவரும் உரிமையை மட்டும் ஆண்களே வைத்துக் கொண்டு கற்பு, தாலி என்று சின்னத்தம்பி வசனம் பேசுவது ஏன்.

ராஜன் சொன்னது…

//இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது.//

தோணனும் அப்ப தான் டைம் பாஸ் ஆவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

கோவி நீங்க காமெடி கிமடி எதுவும் பண்ணலையே. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது அது சட்டத்திற்க்கு புறம்பாக செயல் பட்டால் எதிர்க்கலாம், திறமையாக செயல் பட்டால் ஆதரிக்கலாம். ஆனா கடமையைச் செய்யும் போது எதற்க்கு பாரட்டுவது?
என்ன செய்ய வேண்டும், குருக்கள் சிறை வைத்த கோமகளே ஒரு பாராட்டுப் பத்திரமா வாசிக்க முடியும். சரி தப்பு பண்ணினான் அனுபவிக்கின்றான் என்று சத்தம் இல்லாமல் இருந்து விட்டார்கள். அவ்வளவுதான். வாததிற்க்காக கூறாதிர்கள்.//

மறுபடியும் புரியாதது மாதிரியே எழுதினால் என்ன பொருள்.

நித்யானந்ததின் மீது நடவெடிக்கை எடுக்கக் கோருவது போலவே தேவநாதன் மேட்டர் வெளியே தெரிந்த பிறகு அவனுக்கு எதிராக பேசி அவன் மீது விரைவாக நடவெடிக்கை எடுக்கச் சொல்லி இந்த இந்து அமைப்புகள் போராடி இருக்கலாமே ? இன்னொமொரு மோசடி பார்பான் பேரு சதுர்வேதி அவன் மீது நடவெடிக்கை எடுக்கச் சொல்லி இந்த அமைப்புகள் போராடினார்களா ?

Dr.Rudhran சொன்னது…

i wonder if that lady who was giving interviews all over about his sexual harassment even wrote a one page complaint and gave to police.
they are all one and the same.
there is not much point in debating this over net... we have to go to the people.

அப்பாதுரை சொன்னது…

ஜெயேந்திரரை உத்தமனென்றோ அல்ல என்றோ யாரும் சொல்லவில்லையே கிருஷ்ணமூர்த்தி? வழிகாட்டியாகச் செயல்பட வேண்டியவர்கள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஒரு தட்டு மேலே இருக்க வேண்டும் என்பது தான் எடுத்துச் சொல்லப்படுகிறது.

கடவுள்-மதத்தின் பெயரில் புரட்டு பண்ணுகிறவர்கள் பொதுப் பார்வையில் கீழ்த் தட்டுக்கு வந்த பின் இன்னும் அவர்களுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மை தான். அவரவர் கண்ணோட்டத்தில் எழுதினாலும் இரு தரப்பிலும் விழிக்கப் போவதில்லை. ஜெயேந்திரரும் நித்தியானந்தரும் ஒவ்வொரு மதத்திலும் வந்து கொண்டு தான் இருப்பார்கள். பார்ப்பனனாக இருந்தால் என்ன, கிறுஸ்தவ முஸ்லிமாக இருந்தால் என்ன? நாம் தான் விழிப்படைய வேண்டும்.

அருமையான கருத்துகள், கோவி.

Kesavan சொன்னது…

//இன்னொமொரு மோசடி பார்பான் பேரு சதுர்வேதி அவன் மீது நடவெடிக்கை எடுக்கச் சொல்லி இந்த அமைப்புகள் போராடினார்களா ? //

சதுர்வேதி பார்பனன் கிடையாது . அனால் அவன் தன்னை நான்கு வேதங்களை கற்றவன் என்று சொல்லிக்கொண்டு தனக்கு சதுர்(4)வேதி என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்டான்.

வால்பையன் சொன்னது…

//பொண்டாட்டிகளுக்கு கற்பு, தாலி எல்லாம் வேண்டாம்ன்னு அவர் சொன்னா, நீங்க கேக்கலாம், ஆனா நாங்க கல் எடுத்து அடிக்காம என்ன பண்ண முடியும்?//


நீங்க சொல்ற மாதிரியே தாலி,கற்பு எல்லாம் வேணும்னு வச்சுக்குவோம்!
தாலி கடையில விக்குது, கற்பு எங்கே விக்குது!?

வால்பையன் சொன்னது…

//ஒன்னு மட்டும் நல்லா புரியுது. ஹிந்து மதம், பார்ப்பனர், ஆரியம் மட்டும் எதிர்க்க வேண்டும் என்று மந்திரித்து விட்ட கோழிகளைப் போல கோஷம் போடுகின்றார்கள். இவர்கள் மட்டும் அல்ல மொத்த இயக்கத்தைச் சொல்கின்றேன். //


அப்போ மத்தவங்களை திட்டினால் உங்களுக்கு சந்தோசமா இருக்குன்னு ஒத்துகிறிங்களா!?

அல்லா ஒரு கம்முனாட்டி
இயேசு ஒரு புறம்போக்கு
சிவன் ஒரு தெள்ளவேறி!

இப்ப சந்தோசமா!?

வால்பையன் சொன்னது…

//// இந்த அமைப்பினர் தேவநாதனுக்கு எதிரான நடவெடிக்கைக்காவது ஆதரவு தெரிவித்துள்ளார்களா ? அமைதி தானே காக்கிறார்கள்//
இதை எந்த கருத்தில் கேக்கின்றீர் என்று புரியவில்லை, அவன் செய்த காரியத்திற்கு யாரவது ஒரு மனுசன் சப்போர்ட் வருவானா?. என்ன கேள்வி யோசித்துக் கேளுங்கள். அவன் தலித்தா இருந்தாக் கூட கிருஷ்ன சாமி, திருமான்னு யாரும் வரமாட்டாங்க. //


என்ன கேள்வி என்ன பதில்!

பித்தன் வாக்குல மட்டும் தானே!

அவர் கேட்பது எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு! நீங்கள் சொல்வது தப்பு செய்தவனுக்கு ஆதரவு!
யாரும்

வால்பையன் சொன்னது…

//முதலில் ஒரு மதக் கருத்துக்களை நல்லா படியுங்கள். //

மதமே இல்லைங்கிறேன், எங்கிருந்து கருத்து வரும்!

வால்பையன் சொன்னது…

//பெண் பாலியல் பலாத்காரத்தால் கெடுக்கப் படும் போது கற்பழிக்கப் பட்டாள் என்றுதான் கூறுகின்றார்கள்.//

நீங்க அப்படி தானே சொல்லி கொடுத்துருக்கிங்க!

//கற்பு அழிப்பது வேறு, கற்பு இழப்பது வேறு. கற்பே தேவையில்லை என்று கூறுவது வேறு.//

கற்பு எங்கேயிருக்கு, அதை யார் அழித்தார்கள்!?

//பெண்ணுக்கு கற்பே தேவை இல்லை. பாலியல் என்பது உடலின் தேவைதான் என்று பெரியார் கூறுவதைக் குடும்பத்தில் கூற முடியுமா என்று மட்டும் நேரடி பதில் கூறுங்கள்.(சுத்தி வளைக்க வேண்டாம்) //

இதுல சுத்தியை ஏன் வளைக்கனும்!
உண்மையில் பாலியல் தேவைக்காக தானே கல்யாணம் பண்றானுங்க, அதுல கற்பு எங்கிருந்து வந்தது!?

ஒருத்திக்கு ஒருவன் என்பது சமுதாய கட்டமைப்பு தானே தவிர மதகோட்பாடுகள் எல்லாம் கிடையாது!
நிரந்தர பாதுகாப்பிற்கும், அன்பிற்கும் தான் இந்த குடும்ப அமைப்பு! கற்பாவது, மண்ணாங்கட்டியாவது!

வால்பையன் சொன்னது…

//சதுர்வேதி பார்பனன் கிடையாது . அனால் அவன் தன்னை நான்கு வேதங்களை கற்றவன் என்று சொல்லிக்கொண்டு தனக்கு சதுர்(4)வேதி என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்டான். //

அர மண்டைய செரச்சு வச்சிருந்தானே!
தொலைகாட்சியில் காட்டினாங்க!

Kesavan சொன்னது…

//அர மண்டைய செரச்சு வச்சிருந்தானே! தொலைகாட்சியில் காட்டினாங்க! //

மண்டைய செரச்சு வச்சிருந்தா பார்பனனா .யார் குடுமி வச்சிருந்தாலும் பார்பனணு சொல்றது வேடிக்கைய இல்லை . தொலைகாட்சியில் காமிகரத வச்சி சொல்லாதீங்க

ராஜரத்தினம் சொன்னது…

ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்களிடமுருந்து ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

குட்டிபிசாசு சொன்னது…

ராமகோபாலனுக்கு நித்யா கமிஷன் எதுவும் கொடுக்கலையா.

ராஜரத்தினம் சொன்னது…

//அல்லா ஒரு கம்முனாட்டி
இயேசு ஒரு புறம்போக்கு
சிவன் ஒரு தெள்ளவேறி!//
இந்து சாமிகளை திட்ட வேண்டும் என்றால் அதற்கு கருனாநிதியை பாராட்ட்வந்தர்களை போன்ற பெரிய list.அது உங்களால் முடியாது.
அல்லா ஒரு கம்முனாட்டினு எங்கேயாவது வெளியே சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டாம். பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சேனு படிச்சவங்க நாங்க. இந்துக்கள் நாங்கதான் நீங்க எங்க மனசை காயப்படுத்தனாலும் உங்க உடம்பை காயப்படுத்த நினைக்க மாட்டோம். அதனால உங்க பொழுது போக எங்களையே திட்டுங்க. அப்பதான் நீங்க கொஞ்ச காலம் நல்லா இருப்பீங்க.

ராஜன் சொன்னது…

//அர மண்டைய செரச்சு வச்சிருந்தானே!
தொலைகாட்சியில் காட்டினாங்க!//

வேற என்ன காட்டுனாங்க

ராஜன் சொன்னது…

//ராமகோபாலனுக்கு நித்யா கமிஷன் எதுவும் கொடுக்கலையா.
//


ரஞ்சியவே அனுப்பிட்டாராம்

வால்பையன் சொன்னது…

//மண்டைய செரச்சு வச்சிருந்தா பார்பனனா .யார் குடுமி வச்சிருந்தாலும் பார்பனணு சொல்றது வேடிக்கைய இல்லை . தொலைகாட்சியில் காமிகரத வச்சி சொல்லாதீங்க //

அப்படி இதுவரை நினைத்து கொண்டிருந்தேன் என்பதற்காக அந்த பின்னூட்டம், இனிமேல் எல்லோரையும் சாதி சான்றிதழோடு அலைய சொல்லுவோமா?!

உடன்பிறப்பு சொன்னது…

உள்ளேன் ஐயா

ராஜரத்தினம் சொன்னது…

உங்களை பாராட்டும் பின்னூட்டம் மட்டும் இங்கு போடறீங்க.வால்பயனுக்கு நான் எழுதிய பின்னூட்டத்தை போடவில்லை. உண்மையை போடமாட்டீர்கள்தானே. இந்துக்களைதான் பாப்பான் என்று மொத்தமாக திட்ட முடியும். மசூதிகளில் அரபி, தேவாலயங்களில் ஆங்கிலம் போன்று எதையும் உங்களால் விமர்சிக்க முடியாது. ஆனால் இந்து மதத்தை மட்டும் சிவன் வருவானா? என்று கேக்கமுடியும். இங்கு சிங்கையில் கூட இஸ்லாமிய கருத்தரங்குகள் நடக்கும். அங்கு அல்லா வருவானா என்று கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் சங்கதி.அதைத்தான் அவருக்கும், அவரை போன்ற புல்தடுக்கி பயில்வான்களுக்கும் பதிலாக சொல்லியிருந்தேன். இதற்கு கூட பயமா? நான்தான் ராஜா என்ற பெயரில் உங்கள் பார்ப்பன பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவன்.ஆனால் இங்கு வேறு ஒரு ராஜா சிங்கபூரில் இருந்து பின்னூட்டமிட்டதால் என் முழு பெயரை வைத்து உள்ளேன். நான் பாப்பானல்ல. ஆனால் அவர்களையும் நான் மதிப்பவன். இது இந்த பதிவிற்கான பின்னூட்டமல்ல. உங்களுக்கு என் பதில். இதை போட வேண்டாம் என்று நான் சொல்லமாட்டேன். போட வேண்டிய அவசியமில்லை என்று சொல்வேன். அப்புறம் உங்க இஷ்டம்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

//வால்பையன்
அல்லா ஒரு கம்முனாட்டி
இயேசு ஒரு புறம்போக்கு
சிவன் ஒரு தெள்ளவேறி!//

அவ்வ்வ்...
அப்படின்னா

கண்ணன்
முருகன்
விநாயகன்
பார்வதி
பிரம்மா
விஷ்ணு
நாரதர்
மாரியாத்தா
காளியாத்தா

இவங்கெல்லாம் யாரு...

அவ்வ்வ்வ்........

Robin சொன்னது…

ராஜரத்தினம் அவர்களே,

கோவிகண்ணனின் பழைய பதிவுகளை படித்து பாருங்கள். அவர் எல்லா மதங்களையும் விமர்சித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கும்போது நான் பதில் கொடுத்துள்ளேன். இந்து மதத்தை விமர்சித்தால் நீங்கள் பதிலளியுங்கள். அதை விடுத்து இப்படி புலம்புவது சரியல்ல. ஒரு கருத்தை பொதுவில் வைக்கும்போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். மதக் கருத்துகளும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே. விமர்சனத்தில் தவறு இருந்தால் நீங்கள் தாரளமாக சுட்டி காட்டலாம். இந்து மதம் இங்கு அதிகமாக விமர்சனத்திற்குள்ளாவதற்கு காரணம், இந்துக்கள் இங்கு அதிகம் என்பதால். மேற்கத்திய நாடுகளில் பார்த்தீர்களென்றால் அதிகமாக விமர்சிக்கப்படும் மதம் கிறிஸ்தவமாக இருக்கும்.

தேவாலயங்களில் அந்தந்த உள்ளூர் மொழிகளிலேயே வழிபாடுகள் நடக்கின்றன.

ஒட்டு மொத்தமாக எல்லா இந்துக்களையும் பார்பான் என்று யாரும் சொல்வதில்லை.

என்னை பொறுத்தவரை வால்பையன் போன்ற நாத்திகர்களின் விமர்சனத்தை ஆர்வமாக படிப்பேன். நாத்திகர்களின் விமர்சனம் ஆத்திகர்களை சுயபரிசோதனை செய்து மேலும் பண்பட செய்யும். வால்பையன் மேல் கோபப்படுவதை விட்டுவிட்டு அவர் என்ன சொன்னார், அது சரியா தவறா என்று சிந்தியுங்கள்.

அக்பர் சொன்னது…

நித்யானந்தமோ, தாவுத் இப்ராஹிமோ யார் தப்பு செஞ்சாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்யணும்.

எல்லா மதத்திலும், இயக்கத்திலும் நல்லவனும் இருக்கான்; கெட்டவனும் இருக்கான். இது பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் முதற்கொண்டு பொருந்தும்.

நாளைக்கே முஸ்லிமோ, கிறிஸ்டினோ, சீக்கியனோ இந்த அயோக்கியத்தனத்தை செய்தாலும் எதிர்ப்பு இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

ராஜரத்தினம்,

//உங்களை பாராட்டும் பின்னூட்டம் மட்டும் இங்கு போடறீங்க.வால்பயனுக்கு நான் எழுதிய பின்னூட்டத்தை போடவில்லை. உண்மையை போடமாட்டீர்கள்தானே.//

தவறான கருத்து, எண்ணப் பகிர்தலுக்காக எழுதுகிறேன். புகழ்ச்சிக்கு அல்ல. பிடித்தவர்கள் பாராட்டுகிறார், பிடிக்காதவர்கள் உங்களைப் போல் தூற்றுகிறார்கள், இருந்தாலும் இரு தரப்பும் கருத்து சொல்லுகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான், தனி மனித தாக்குதல், ஆபாசம் இல்லை என்றால் எல்லா பின்னூட்டங்களையும் வெளி இடுகிறேன். அஞ்சல் வழியாக பின்னூட்டங்களை வெளி இடுவதால், ஒன்றன் மீது ஒன்றாக பின்னூட்டங்கள் இருக்கும் போது ஒன்றிரண்டு விடுபட்டுவிடும், பின்னர் வலைப் பதிவு மாடுரேசனில் பார்த்து அவற்றையும் வெளி இட்டுவருகிறேன்

//இந்துக்களைதான் பாப்பான் என்று மொத்தமாக திட்ட முடியும். //

இந்துகளெல்லாம் பார்பனர்களா ? நான் பார்ப்பான் இல்லை ஆனால் இந்து.

//மசூதிகளில் அரபி, தேவாலயங்களில் ஆங்கிலம் போன்று எதையும் உங்களால் விமர்சிக்க முடியாது. //

அதை எதற்கு ஒரு இந்து விமர்சிக்க வேண்டும் ? தமிழ் வழி வழிபாடு வேண்டும் என்பவன் இந்து தான் இஸ்லாமியர் அல்ல. இஸ்லாமியர்கள் / கிறித்துவர்கள் அவர்களுடைய வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மட்டும் தான் கேட்கமுடியும். ஒரு இஸ்லாமியரோ, கிறித்துவரோ தமிழில் இந்துவழிபாடு என்று கேட்காத போது உங்கள் கேள்வியே தேவையற்றது. அதை ஏன் ஒரு பகுத்தறிவுவாதி விமர்சிக்க வேண்டும், பகுத்தறிவுவாதி யார் வழிபாட்டு உரிமை கேட்கிறார்களோ அவர்களுக்காகத்தான் விமர்சனம் செய்கிறான். ஒரு இஸ்லாமியர், கிறித்துவர் அவர்கள் வழிபாட்டு முறை தமிழில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதன் பிறகு பகுத்தறிவுவாதி அவர்களுக்காக அம்மதங்களின் கட்டுமானங்களை விமர்சனம் செய்வான். இது போன்ற அபத்தமான கேள்வி வேறெங்கும் கேட்டு இருந்தால் இதையே பதிலாகக் கொண்டால் அடுத்த முறை உங்களுக்கு இதே அரத பழசு கேள்வி கேட்க்கத் தோன்றாது.

//ஆனால் இந்து மதத்தை மட்டும் சிவன் வருவானா? என்று கேக்கமுடியும். இங்கு சிங்கையில் கூட இஸ்லாமிய கருத்தரங்குகள் நடக்கும். அங்கு அல்லா வருவானா என்று கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் சங்கதி.அதைத்தான் அவருக்கும், அவரை போன்ற புல்தடுக்கி பயில்வான்களுக்கும் பதிலாக சொல்லியிருந்தேன். இதற்கு கூட பயமா? நான்தான் ராஜா என்ற பெயரில் உங்கள் பார்ப்பன பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவன்.ஆனால் இங்கு வேறு ஒரு ராஜா சிங்கபூரில் இருந்து பின்னூட்டமிட்டதால் என் முழு பெயரை வைத்து உள்ளேன். நான் பாப்பானல்ல. ஆனால் அவர்களையும் நான் மதிப்பவன். இது இந்த பதிவிற்கான பின்னூட்டமல்ல. உங்களுக்கு என் பதில். இதை போட வேண்டாம் என்று நான் சொல்லமாட்டேன். போட வேண்டிய அவசியமில்லை என்று சொல்வேன். அப்புறம் உங்க இஷ்டம். //

வால்பையன் எல்லா மதங்களையுமே விமர்சிப்பவர்.

ராஜரத்தினம் சொன்னது…

//அதை எதற்கு ஒரு இந்து விமர்சிக்க வேண்டும் ? தமிழ் வழி வழிபாடு வேண்டும் என்பவன் இந்து தான் இஸ்லாமியர் அல்ல. இஸ்லாமியர்கள் / கிறித்துவர்கள் அவர்களுடைய வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மட்டும் தான் கேட்கமுடியும். ஒரு இஸ்லாமியரோ, கிறித்துவரோ தமிழில் இந்துவழிபாடு என்று கேட்காத போது உங்கள் கேள்வியே தேவையற்றது. அதை ஏன் ஒரு பகுத்தறிவுவாதி விமர்சிக்க வேண்டும், பகுத்தறிவுவாதி யார் வழிபாட்டு உரிமை கேட்கிறார்களோ அவர்களுக்காகத்தான் விமர்சனம் செய்கிறான். ஒரு இஸ்லாமியர், கிறித்துவர் அவர்கள் வழிபாட்டு முறை தமிழில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதன் பிறகு பகுத்தறிவுவாதி அவர்களுக்காக அம்மதங்களின் கட்டுமானங்களை விமர்சனம் செய்வான். இது போன்ற அபத்தமான கேள்வி வேறெங்கும் கேட்டு இருந்தால் இதையே பதிலாகக் கொண்டால் அடுத்த முறை உங்களுக்கு இதே அரத பழசு கேள்வி கேட்க்கத் தோன்றாது.//
எனக்கு நிச்சயம் தெரியும். இது மாதிரி தத்து பித்துன்னு பதில் வரும்னு தெரியும்.நான் கேட்பது பகுத்தறிவு பதார்த்தம்னு பேசறவங்க ஏன் அதே பதார்த்தத்தை பொதுவில் பேசுவதில்லை என்றுதான். ஏன்னா மற்ற மதங்கள் லாம் ஜிகாத், cursade னு வந்தவை. அங்க உங்க பருப்பு வேகாது. என் கேள்வி அரத பழசு என்றால் உங்கள் பார்ப்பன பதிவுகள்லாம் புத்தப் புதிய சிந்தனையா? ஒரு இந்து வாகிய நான் கோயில்களில் சமஸ்கிருதம்னு எப்பவுமே கவலை பட்டதில்லயே? இதை பற்றி பேசுவதே கோயிலுக்கே போகாத கிராதகர்கள்தான். பிறப்பால் ஒருவன் இந்து வாவது சட்டத்தின் மூலமாக வேணுமானால் இருக்கலாம். அவன் வாழும் முறை தான் அவன் இந்துவா இல்லையா என்று முடிவு செய்கிறது. இந்துவை, இந்து முறைகளை பற்றி இந்து கேள்வி கேட்க மாட்டான். கேள்வி கேட்பவன் இந்து கிடையாது. அப்படி கேட்பவன் மற்ற மதங்களில் இருந்து, கைக்கூலிகள்தான் கேட்பான். பகுத்தறிவுவியாதிகள் என்பது இந்து எதிர்ப்பு தவிர வேறு ஒன்றுமில்லை. உடனே இந்து யார்னு உளறகூடாது. உங்களுக்கு இப்ப புரியும்னா எனக்கு சந்தோஷம்.
உங்களுக்கு இந்து வழிமுறைகள் பிடிக்கவிலை யென்றால் விலகுவதுதான் புத்திசாலிதனம். அதை விடுத்து இப்படி பண்ணு என்றால் அது பாஸிஸம். இந்தியாவை பற்றி இந்தியர்கள் விமர்சிக்கலாம். அமெரிக்கர்கள் செய்தால் அது தகுமா? ஈ.வே. ராமசாமி பெரியார்(?) போன்ற இந்து மத எதிர்ப்பாளர்கள் எப்படி இந்து மதத்தை விமர்சிக்க முடியும். சின்ன புள்ள தனமால்ல இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு நிச்சயம் தெரியும். இது மாதிரி தத்து பித்துன்னு பதில் வரும்னு தெரியும்.நான் கேட்பது பகுத்தறிவு பதார்த்தம்னு பேசறவங்க ஏன் அதே பதார்த்தத்தை பொதுவில் பேசுவதில்லை என்றுதான். ஏன்னா மற்ற மதங்கள் லாம் ஜிகாத், cursade னு வந்தவை. அங்க உங்க பருப்பு வேகாது. என் கேள்வி அரத பழசு என்றால் உங்கள் பார்ப்பன பதிவுகள்லாம் புத்தப் புதிய சிந்தனையா? ஒரு இந்து வாகிய நான் கோயில்களில் சமஸ்கிருதம்னு எப்பவுமே கவலை பட்டதில்லயே? இதை பற்றி பேசுவதே கோயிலுக்கே போகாத கிராதகர்கள்தான்.//

கோவில்கள் கொடியவர்களின், கிராதகர்களின் கூடாரமாக இருக்கும் போது எவன் போவான். தேவநாதன்கள் இருக்கிற இடத்தில் சாமி இருக்கா ?

எவனும் இந்துவும் இல்லை பொந்துவும் இல்லை. வெள்ளைக் காரன் வெளியே சென்ற பிறகு யார் யார் இஸ்லாமியர் இல்லையோ, யார் யார் கிறித்துவன் இல்லையோ மீதம் உள்ளவர் இந்து என்று எவரையும் கேட்காமலே அறிவிக்கப்பட்டது. பார்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு மத்ததில் உள்ளவர்கள் தாம் இந்து என்று வெளியே சொல்லவே வெட்கப்படும் நிலையைத்தான் இந்து மதம் என்ற பெயரில் ஆக்கி வைத்திருக்கிறார்கள்

//உங்களுக்கு இந்து வழிமுறைகள் பிடிக்கவிலை யென்றால் விலகுவதுதான் புத்திசாலிதனம். அதை விடுத்து இப்படி பண்ணு என்றால் அது பாஸிஸம். இந்தியாவை பற்றி இந்தியர்கள் விமர்சிக்கலாம். அமெரிக்கர்கள் செய்தால் அது தகுமா? ஈ.வே. ராமசாமி பெரியார்(?) போன்ற இந்து மத எதிர்ப்பாளர்கள் எப்படி இந்து மதத்தை விமர்சிக்க முடியும். சின்ன புள்ள தனமால்ல இருக்கு. //

விலகுறதா ? என்னையோ எம்முன்னோர்களையோ கேட்டு அவர்களை இந்துவாக்கவில்லை. நாங்களெல்லாம் கிறித்துவரோ, இஸ்லாமியரோ அல்லாததால் நாங்கள் இந்துவாம். கேட்காமல் சேர்த்தால் பாதிக்கப்படுபவர்கள் விமர்சனம் செய்யவே செய்வார்கள், கிந்துவாகிய எனக்கு பார்பனர்களின், காம சாமியார்களின், சாதிவெறியர்களான சங்கராச்சாரிகளின் தலைமை தேவை இல்லை என்று சொல்ல எனக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. முதலில் கிந்துமதத்தில் காமசாமியார்களுக்கு அனுமதி இருக்கிறதா ? இருந்தால் அவர்களை ஏன் எதிர்க்கனும் ? அந்த எதிர்ப்பையும் ஏன் பார்பன அல்லாத சூத்திரம் சாமியார்களுக்கு மட்டும் அமல்படுத்தனும். அதுக்கு நீங்களும் உடந்தையா ?

ராஜரத்தினம் சொன்னது…

//கோவில்கள் கொடியவர்களின், கிராதகர்களின் கூடாரமாக இருக்கும் போது எவன் போவான். தேவநாதன்கள் இருக்கிற இடத்தில் சாமி இருக்கா ? //
சாத்தானுக்கு வேதம் ஓதிதான் ஆகனும் போல இருக்கே?
நாத்திகர்கள் தான் அதனால் பாதிக்க வில்லையே அப்புறம் ஏன் உங்களுக்கு எங்க வலிக்குது. உங்க கிட்ட வரலியேன்ற பொறாமையா?
தேவநாதனாவது தவறு, தண்டனை, அவமானம்னு எல்லாத்தையும் தாண்டறான். உங்களுக்கு என்ன தண்டனை? மறுபடியும் சொல்றேன் நீங்கதான் இந்துவும் இல்லை, பொந்துவும் இல்லை, சந்துவும் இல்லையே. நீங்கள் அதைபற்றி எழுதுவது, பேசுவது உங்களுக்கு அவமானமாக படவில்லையா? நான் மற்ற மதத்தின் குறைகளை பற்றி பேசுவதில்லை.இப்போ கூட நீங்கள் கிருத்துவையே, இஸ்லாமையே பற்றி எழுதியிருந்தால் இந்த பதிவு பக்கமே வந்திருக்கமாட்டேன். நான் என்ன உங்களை போலவா? தேவையில்லாதவற்றை பற்றி எழுத? பேச?
ஜிகாத் பேசும் தீவிரவாதிகூட இந்து மதத்தை பற்றி பேசுவதில்லை. அப்படி பேசினால் அவனை சுலபமாக அதை செய்யாமல் தடுத்துவிடலாம்.
சிங்கையில் கூட இந்தியாவின் இந்து மதத்தை தான் அங்கிகரித்துள்ளனர். அவர்களுக்கு இதை தெரிவித்துள்ளீரா?
அவர்கள் இன்னும் தமிழ்புத்தாண்டையே மாற்றவில்லையே? அதை மாற்றியவன் இந்து மதத்தை எதிர்ப்பவன்.அங்க இந்தியாவில் எதை குறை சொல்றீங்களோ அதே இந்து மதம்தான் சிங்கையில். இங்கும் இதே மனசோடுதாம் எல்லாரிடமும் உபதேசமா? உங்களை போன்ற கிந்துக்களெல்லாம் கொஞ்சம் ரத்தம் சூடு குறைஞ்ச உடனே கோயில்களில் புரளுவதை பார்த்தவன் நான். அப்ப சாமி(?) உங்களையெல்லாம் நீங்கள் இப்ப குறை சொல்ற மாதிரி குத்திக்காட்டுவதில்லை.

//பார்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு மத்ததில் உள்ளவர்கள் தாம் இந்து என்று வெளியே சொல்லவே வெட்கப்படும் நிலையைத்தான் இந்து மதம் என்ற பெயரில் ஆக்கி வைத்திருக்கிறார்கள்//

உங்கள் பதில் உங்கள் அறியாமை சொல்கிறது. எத்தனை கோயில்களில் பார்ப்பான் இல்லாமல் பூஜை நடக்கிறதுனு உங்களுக்கு தெரியவில்லையா? ஆச்சர்யம்.
கோயில்களில் பூஜை செய்யும் வரை தான் பார்ப்பான் சாமி. அப்புறம் அவன் பார்ப்பான் கிடையாது. பாப்பான், பாப்பான் இப்படி கத்துவது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாக தெரியலயா? பாப்பான் கோயில் பூஜை செய்தால் உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்னை? அவன் வேலை அவன் பார்கிறான். இதில் கிந்துவாகியா எனக்கு, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நீங்க ஏன் அதுக்கு கஷ்ட படறீங்க.எங்களை எந்த பாப்பானும் கேவலமா பார்க்கலை. மற்ற மதத்தினர் சாதி பற்றி பேசினால் உங்களை போன்ற பொந்துக்கள் பாப்பானை பற்றி பேசறீங்க. நான் மட்டும் உங்களை போன்ற சிந்தனை கொண்டிருந்தால் இந்நேரம் கிந்துவாக இருந்திருக்க மாட்டேன். அதுதான் எனக்கு பெருமை. உங்களுக்கும் அந்த பெருமை கொள்ள வேண்டுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சாத்தானுக்கு வேதம் ஓதிதான் ஆகனும் போல இருக்கே?
நாத்திகர்கள் தான் அதனால் பாதிக்க வில்லையே அப்புறம் ஏன் உங்களுக்கு எங்க வலிக்குது. உங்க கிட்ட வரலியேன்ற பொறாமையா?
தேவநாதனாவது தவறு, தண்டனை, அவமானம்னு எல்லாத்தையும் தாண்டறான். உங்களுக்கு என்ன தண்டனை? மறுபடியும் சொல்றேன் நீங்கதான் இந்துவும் இல்லை, பொந்துவும் இல்லை, சந்துவும் இல்லையே. நீங்கள் அதைபற்றி எழுதுவது, பேசுவது உங்களுக்கு அவமானமாக படவில்லையா? நான் மற்ற மதத்தின் குறைகளை பற்றி பேசுவதில்லை.இப்போ கூட நீங்கள் கிருத்துவையே, இஸ்லாமையே பற்றி எழுதியிருந்தால் இந்த பதிவு பக்கமே வந்திருக்கமாட்டேன். நான் என்ன உங்களை போலவா? தேவையில்லாதவற்றை பற்றி எழுத? பேச?
ஜிகாத் பேசும் தீவிரவாதிகூட இந்து மதத்தை பற்றி பேசுவதில்லை. அப்படி பேசினால் அவனை சுலபமாக அதை செய்யாமல் தடுத்துவிடலாம்.
சிங்கையில் கூட இந்தியாவின் இந்து மதத்தை தான் அங்கிகரித்துள்ளனர். அவர்களுக்கு இதை தெரிவித்துள்ளீரா?
அவர்கள் இன்னும் தமிழ்புத்தாண்டையே மாற்றவில்லையே? அதை மாற்றியவன் இந்து மதத்தை எதிர்ப்பவன்.அங்க இந்தியாவில் எதை குறை சொல்றீங்களோ அதே இந்து மதம்தான் சிங்கையில். இங்கும் இதே மனசோடுதாம் எல்லாரிடமும் உபதேசமா? உங்களை போன்ற கிந்துக்களெல்லாம் கொஞ்சம் ரத்தம் சூடு குறைஞ்ச உடனே கோயில்களில் புரளுவதை பார்த்தவன் நான். அப்ப சாமி(?) உங்களையெல்லாம் நீங்கள் இப்ப குறை சொல்ற மாதிரி குத்திக்காட்டுவதில்லை.//

நாத்திகன் பாதிக்கிறானாங்கிறது பிரச்சனையே இல்லை, அப்பாவிகள் போலிசாமியார்களால் ஏமாற்றப்பட்டு, பெண் பக்கதர்கள் தேவநாதன் போன்ற பொறுக்கிகளால் ஏமாற்றப்படுவது சமூக சீரழிவே. ஒரு இஸ்லாமியர் தீவிரவாதியானால் உங்களுக்கு பாதிப்பே இல்லை என்றாலும் சமூகத்திற்கு ஆபத்து, நாட்டுக்கு ஆபாத்து என எப்படி குடைச்சல் ஏற்படுகிறதோ அதே போன்று தான் ஆன்மிகம், நம்பிக்கை என்ற பெயரில் அப்பாவிகள் சீரழியும் போது எந்த ஒரு மனிதனும் அதை எதிர்ப்பான். அவன் நாத்திகனோ ஆத்திகனாகவே இருக்க வேண்டிய தேவை இல்லை. இங்கே இந்த பதிவில் கடைசி பாராவில் எல்லா மதவெறியர்கள் குறித்தே சொல்லப்பட்டு இருக்கிறது.

//உங்களை போன்ற கிந்துக்களெல்லாம் கொஞ்சம் ரத்தம் சூடு குறைஞ்ச உடனே கோயில்களில் புரளுவதை பார்த்தவன் நான்// இருந்துவிட்டு போகட்டுமே, எத்தனையோ பக்தியாளர்கள் போலி சாமியார்களின் ஏமாற்றதியதால் கடவுளும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை என்று புறக்கணிப்பதே இல்லையா ?


//உங்கள் பதில் உங்கள் அறியாமை சொல்கிறது. எத்தனை கோயில்களில் பார்ப்பான் இல்லாமல் பூஜை நடக்கிறதுனு உங்களுக்கு தெரியவில்லையா? ஆச்சர்யம்.
கோயில்களில் பூஜை செய்யும் வரை தான் பார்ப்பான் சாமி. அப்புறம் அவன் பார்ப்பான் கிடையாது. பாப்பான், பாப்பான் இப்படி கத்துவது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாக தெரியலயா? பாப்பான் கோயில் பூஜை செய்தால் உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்னை? அவன் வேலை அவன் பார்கிறான். இதில் கிந்துவாகியா எனக்கு, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நீங்க ஏன் அதுக்கு கஷ்ட படறீங்க.எங்களை எந்த பாப்பானும் கேவலமா பார்க்கலை. மற்ற மதத்தினர் சாதி பற்றி பேசினால் உங்களை போன்ற பொந்துக்கள் பாப்பானை பற்றி பேசறீங்க. நான் மட்டும் உங்களை போன்ற சிந்தனை கொண்டிருந்தால் இந்நேரம் கிந்துவாக இருந்திருக்க மாட்டேன். அதுதான் எனக்கு பெருமை. உங்களுக்கும் அந்த பெருமை கொள்ள வேண்டுகிறேன். //

பார்பனர் இல்லாத கோவில்கள் தனியார் உடைமை, அதுவும் சாதி சார்புடன் இயங்கும் கோவில்களாகவே இருக்கின்றன. ஒருவனை கிந்துவா இல்லையா என்று தீர்மாணிக்கும் அளவுகோல் என்ன ? போலிசாமியார்களுக்கு சாமரம் வீசனுமா ? இந்துகோவில்கள் புனிதம் நிறைந்தது, தேவநாதன் ஆணுறை கழட்டிப் போட்டிருந்தாலும் மந்திரம் சொல்லி கருவரையை தூய்மை படுத்திவிடலாம் என்று நம்புபவன் தான் கிந்துவா ? ஒருவரை கிந்து / கிந்து இல்லை என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யாரேனும் கொடுத்து இருக்கிறார்களா ?

முதலில் அனைத்து சாதிகளுக்கும் கிந்து மதம் சம உரிமை கொடுக்கிறதா ? ஒரு பாப்பானும் தாழ்த்தப்பட்டவரும் ஒண்ணு தான் என்பதை ஒப்புக் கொள்கிறதா ? வருணம் என்றால் என்ன ? மனு வேதத்தை கொளுத்திப் போட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ?

Subu சொன்னது…

நான் நித்யானந்தா பக்தனோ, பித்தனோ இல்லை. நான் அவரை நேரில் பார்த்தில்லை.

ஆயினும் ஒரு தனிமனிதன், சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவன் தாக்கப்படும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை

அந்த வீடியோவில் இருப்பது சாமி நித்யானந்தா தானா ? அந்த படம் எடுக்கப் பட்ட போது அவர் சுய நினைவுடன் இருந்தாரா, இது எந்த ஊரில் நடந்தது ? அப்போது சாமி தனியாக பயணம் செய்தாரா (அவர் இபோதெல்லாம் பொதுவாய் பலருடன் மட்டுமே பயணம் செய்கிறார்) , இந்த பெண் கொடுத்த மாத்திரை என்ன போதை அல்லது மயக்க மாத்திரையா ? சன் தொலைக்காட்சி மாரன் குடும்பத்துக்கும் சாமிக்கும் சண்டை இருந்ததா ? அந்த படத்தில் மார்பிங் அது இது என ஏதாவது விளையாடி இருக்கிறார்களா என அடிப்படை ஆதாரங்களை எதிர்த்து பல கேள்விகள் எழுகின்றன.

அக்கேள்விகளை இப்போதைக்கு புரம் தள்ளிவிட்டு வேறு சில அடிப்படை கேள்விகளை பார்போம்

1. நித்யானந்தாவை ஏன் தாக்கினார்கள் ?

நீண்ட பின்னூட்டானதால், மேலும் படிக்க :
http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

கோவி.கண்ணன் சொன்னது…

//நீண்ட பின்னூட்டானதால், மேலும் படிக்க :
http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html//

சுப்பு,

படித்தேன்.

நித்யானந்தர் நல்லவரு வல்லவரு, மேலும் பெண் சிஷ்யகளை அன்புடன் நடத்துபவராம். அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் கூட நித்தி முரட்டு தனமாக நடந்து கொண்டார் என்று சொல்லவே இல்லை.
:)

thamizan சொன்னது…

//அர மண்டைய செரச்சு வச்சிருந்தானே!
தொலைகாட்சியில் காட்டினாங்க!//

//வேற என்ன காட்டுனாங்க //

அவன் கேட்ட பணத்தை கொடுகலேன்னா எல்லாத்தையும் காமிபாங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்