பின்பற்றுபவர்கள்

16 நவம்பர், 2008

வா...ர...ண...ம்........ஆ...யி...ர...ம்...!

சூரியா படம் என்பதற்காக அல்ல கெளதம் மேனனின் படம் என்பதற்காக விமர்சனங்களைப் படிக்காமல் சென்றது முட்டாள் தனமாகியது. நான்கு படங்களை வெற்றிப்படமாக கொடுத்துவிட்டால் 5 ஆவது படம் 'நாம எதை எடுத்தாலும் பார்த்து தொலைப்பாங்க' என்று நினைக்கும் இயக்குனர் வரிசையில் கவுதம் மேனன் சேர்ந்துவிட்டார் என்று படம் முடிந்ததும் தெரிந்தது. ஆமாம் கவுதம் மேனனின் காக்க காக்க, வே.விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களைப் பார்த்த துய்ப்பில் இந்தப்படத்துக்குச் சென்றேன்.

"Life has to go on" என்ற சித்தாந்த அடிப்படையில் நடக்கும் சம்பவங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல் என்ற ஒற்றைவரிதான் படத்தின் கதை. கதைப்படி அப்பா - மகன் இருவரும் சூர்யாக்கள், அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார், ஜாக்கி என்று பெயரில் முன்பெல்லாம் சண்டைக்காட்சிகளில் வரும் வில்லனுக்கு வயதானவர் வேசம் போட்டால் இருப்பது போன்ற தோற்றம், சூர்யா வயதானால் சிவக்குமார் போலத்தானே இருப்பார், அந்தக் உண்மையால் சூர்யாவின் வயதான செயற்கை வேடம் படத்துக்கு ஒட்டவே இல்லை. (கோல்ட் ப்ளேக்) சிகெரெட் பிடிப்பதால் கேன்சர் வந்து செத்துப் போவதாகக் காட்டுவார்கள் (படத்துக்கு அன்பு மணி நிதி உதவி செய்தாரோ ?) மகன் சூர்யாவை நல்ல முறையில் வளர்க்கும் பொறுப்பான அப்பா வேடம். மகன் அலட்டிக்கொள்ளாத துறுதுறு. கல்லூரி கடைசி ஆண்டில் ஊருக்குத் திரும்பும் போது சவீதா ரெட்டியை சந்தித்து முதல்பார்வையில் காதலிக்கத் தொடங்கி, வாங்கப் பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்று சொன்னதை நம்பி அவரை அமெரிக்காவரை துறத்திச் சென்று காதலிக்கிறார். அவர் விபத்தில் இறக்கவே சென்னைத் திரும்பி, இரண்டாவது காதல் அதாவது தங்கையின் தோழி குத்து ரம்யா மீது காதல் அறும்புகிறது (பசங்களுக்கு மட்டும் தாடியை மழிப்பதற்கு 2 வாது ஒண்ணு சிக்கிடுது பாரேன்...பின் சீட்டில் இருந்த இளைஞர்களின் கமெண்ட் ரசித்தேன்) இடையே காதலியை மறக்க போதையை நாடி...(அந்த காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார்) அதிலிருந்து மீள காஷ்மீர் செல்வது, அங்கே அமெரிக்காவில் சந்தித்த ஒரு பணக்காரரின் மகனை (டெல்லியில்) சிலர் கடத்திவிட அதிரடியாக தனியாக துப்புத் துலக்கி...அந்த சிறுவனை மீட்டுக் கொடுக்கிறார். அங்கு கடத்தல் காரனாக நடித்திருக்கும் பப்லூ அசத்தல் நடிப்பு...அதன் பிறகு ரம்யாவுடன் திருமணம் என்பதாக நீண்டு கொண்டே செல்கிறது.

படம் பார்பவர்கள் சீட்டு நுனிக்கே வந்துவிடுகிறார்கள். ஒண்ணும் இல்லை படம் எப்போ முடியும் எழுந்து போவோம் என்று தான். 70 களின் காட்சிகளாக அப்பா சூர்யா - அம்மா சிம்ரனின் காதல் காட்சிகளை வைத்திருக்கிறார்கள், அவர்களின் மகன் சூர்யாவின் 90 களின் காட்சிகள், ஓரளவுக்கு காலக் கட்டத்தை துல்லியமாகக் காட்ட உடை, வாகனம் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். 90 களின் விளம்பரங்களாக Solidair TV விளம்பரமெல்லாம் வைத்திருந்தது நல்ல நேர்த்தி. பாடல்கள் கேட்கும் ரகம் தான். மூன்று மணி நேரம் படம்....இ......ழு......வையாகச் சென்றது, படம் போரடிக்கவில்லை என்றாலும் நீளமானக் திரைக்கதை பார்பவர்களை அலுப்படைய வைக்கிறது.

படத்தில் மொத்தம் மூன்று காதல் காட்சிகள்...இதுவே படத்தின் பின்னடைவு, ஒளிப்பதிவு, பின்னனி இசையும் அருமையாக இருந்தது. படம் ஒரேடியாக டப்பா என்று சொல்ல முடியவில்லை. தீபாவளிக்கு வந்தப் படங்களை ஒப்பிடுகையில் வாஆ பரவாயில்லை. மீசையை எடுத்து இராணுவ மேஜராக வரும் சூர்யா ரியாஸ்கானைப் போன்றே தோற்றமளிக்கிறார். கல்லூரிக்கால சூர்யாவின் தோற்றம் நன்றாக இருக்கிறது. எப்படி இருந்த சிம்ரன் என்று சிம்ரன் ரசிகர்கள் பெருமூச்சு விடுவார்கள்.

அடிச்சு பிடிச்சு உடனே பார்க்கும் அளவுக்கு படம் சூப்பர் என்று சொல்லமுடியவில்லை. கிரைம் சப்ஜெக்ட் வைத்து படம் எடுக்கும் கவுதம் மேனன் காதல்களையும், அப்பா சென்டிமெண்ட் கலந்து வைத்து செய்திருக்கிறார், படம் ஆட்டோகிராப்பை நினைவு படுத்துவதாக பின்சீட்டில் சிலர் கமெண்ட் அடித்தார்கள். கவுதம் மேனன் படம் என்று செல்பவர்களுக்கு படம் ஏமாற்றத்தையே தரும். (வழக்கமாக கவுதம் படத்தில் வரும் 'மாயா' என்ற பெயர் கதை நாயகிக்கு வைக்கவில்லை:)), கஜினிக்கு பிறகு சூர்யா நம்பிக் கொண்டிருந்தப்படம், சூர்யா ரசிகைகளுக்கு பிடிக்கலாம். வ...ரா...ண...ம்........ஆ...யி...ர...ம் இழுவை. படம் பார்த்துவிட்டு யாரும் திட்டக் கூடாது என்பதற்காகவே 'life has to go' என்று முடிவில் சொல்லிவிடுகிறார்கள். அதைப் புரிந்து கொண்டு....சரிதான் தலையெழுத்து...ஹூம்....என்ற பெருமூச்சு படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் வருகிறது

12 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

\\ஜாக்கி என்று பெயரில் முன்பெல்லாம் சண்டைக்காட்சிகளில் வரும் வில்லனுக்கு வயதானவர் வேசம் போட்டால் இருப்பது போன்ற தோற்றம்\\

excellent observation

குசும்பன் சொன்னது…

//Life has to go" என்ற சித்தாந்த அடிப்படையில் நடக்கும் சம்பவங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல் என்ற ஒற்றைவரிதான் படத்தின் கதை.//

ம்ம்ம் ஆங்கில படத்தை பார்த்த பாதிப்பு இன்னும் போகவில்லை போல நீங்களும் ஆங்கிலத்திலேயே தத்துவம் எல்லாம் சொல்றீங்க:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...


ம்ம்ம் ஆங்கில படத்தை பார்த்த பாதிப்பு இன்னும் போகவில்லை போல நீங்களும் ஆங்கிலத்திலேயே தத்துவம் எல்லாம் சொல்றீங்க:))))//

யோவ்....அது அந்த படத்தில் வரும் வசனம் தான்

பெயரில்லா சொன்னது…

படம் இழுவைங்கிறதால தலைப்பையும் இழுத்துட்டீங்களோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் 12:12 AM, November 17, 2008
படம் இழுவைங்கிறதால தலைப்பையும் இழுத்துட்டீங்களோ?
//

தலைப்பிலேயே விமர்சனம் வைத்து விட்டால் ... அப்படித்தான் பலரும் வைக்கிறார்கள். :)

SurveySan சொன்னது…

/////மூன்று மணி நேரம் படம்....இ......ழு......வையாகச் சென்றது, படம் போரடிக்கவில்லை என்றாலும் நீளமானக் திரைக்கதை பார்பவர்களை அலுப்படைய வைக்கிறது.////

true, ஆனா, அறுவை கிடையாது.

என்னைப் பொறுத்தவரை, கொடுக்கர காசுக்கு, ரொம்ப நேரம் தியேட்டர்ல ஒக்கார வச்சா, நமக்குதான் லாபம். அறுவை ஆகாதவரை ;)


//life has to go on// - same pinch :)

Athisha சொன்னது…

ஹிஹி வேணும் வேணும் நல்லா வேணும்ழ..

நையாண்டி நைனா சொன்னது…

விட்டு தள்ளுங்க அண்ணா....

சினிமாவும் திருந்தாது, நாமளும் திருந்த மாட்டோம்....
என் என்றால்...
சினிமா உலகிலும் சரி,
நம்மிடையேயும் சரி..
"வானரம் ஆயிரம்"
ஹி..ஹி...ஹி..

(இன்னும் இங்க வரலை.. அதான்...நான் இன்னும் பார்க்கலை...)

rapp சொன்னது…

இதுல கேபிள் சங்கர் சார் சொல்லிருக்க மாதிரி, forest gump
படத்தை விட்டு வெளிய வராம, அதாவது அந்த எல்லைக்குள்ளயே சுத்தி படத்தை நம்ம தமிழ் சூழலுக்கு எடுக்காம யாருக்கோ எடுத்திருக்கார்னு தோனுது:(:(:(

சி தயாளன் சொன்னது…

ஆகா...அப்ப நான் தப்பிச்சேனா..?

நசரேயன் சொன்னது…

நல்ல வேளை நான் படம் பார்க்க வில்லை

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எனது தொலைபேசி இடையூறுக்குள்ளும் இவளது புடிச்சிருக்கீங்க!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்