பின்பற்றுபவர்கள்

12 நவம்பர், 2008

அறிவியல் (என்ற) மதம் !

ஆன்மீக அபத்தங்களை மறுத்து துவம்சம் செயத்ததில் அறிவியல் துணை மிக முதன்மையானது. உலகம் தட்டை என்பதே பல மதங்களில் நம்பிக்கையாக இருந்தது அல்லவா ? எதையும் நிரூபணம் செய்யும் வகையில் இருந்தால் தான் புலன்களால் கட்டுண்ட மனித மனம் ஏற்றுக் கொள்ளும்.

கண்களால் காண்பது மட்டுமே மெய் என்ற கூற்று எவ்வளவு உண்மை ? நாம் எல்லோரும் மனிதர்கள் தான். விழி உள்ளவர்களையே எடுத்துக் கொள்வோம். எந்தக் குறையில்லாத இரு மனிதர்களுக்குமே பார்வைத் திறனில் சிறு வேறுபாடாவது இருக்கத்தான் செய்யும். ஒரு காட்சி ஒருவருக்கு ஒரு அளவாகவும் மற்றவருக்கு இன்னொரு அளவாகவும் கூடத் தெரிகிறது. எது உண்மை என்பதற்கு கருவிகளின் துணையைத்தான் நாட வேண்டும். ஆக நம் புலன்களின் திறன் என்பது எல்லைக் குட்பட்டது, வேறுபாடு உள்ளது. தற்பொழுதுதான் கண்ணுக்குத் தெரியாத ஒளி அலைகளை அளக்கும் கருவிகள் வந்திருக்கின்றன. ஆனாலும் கருவிகள் எதற்குமே திறன் எல்லைகள் உண்டு. நுண்ணோக்கியின் மூலம் 1 மைக்ரான் அளவுள்ள கிருமிகளைத்தான் கண்டறிய முடியும் என்ற நிலை இருக்கும் போது, 0.1 மைக்ரான் அளவு உள்ள இன்னொருவகை கிருமி இருக்கவே முடியாது என்று சொல்லிவிட முடியாது.

அறிவியல் என்பது பெளதீக பொருள்களின் தன்மை, இயக்கம், மாறுதல் ஆகியவற்றை அறிதல் பற்றிய படிநிலைகளின் வளர்ச்சி. அது மிக நுணுக்கங்களைக் கண்டறிவதிலும் விரைவாக பயணம் செய்வதில் வளர்ச்சியை நோக்கிப் பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனால் முழுமை பெற்றுவிட வில்லை, இலக்கு எது என்றே தெரியாததால் ஆன்மிகத் தேடல்கள் போலவே அறிவியலின் பயணம் என்றுமே முற்றுப்பெறாத பயணம்.

அறிவியல் தரவுகள் தான் எல்லாவற்றிற்கும் தேவை அதுதான் பகுத்தறிவு என்பவர்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அடுத்த ஆண்டில் ஒரு விஞ்ஞானி கடவுள் கோட்பாட்டை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி கடவுள் உண்டு என்று நிரூபணம் செய்தால் பகுத்தறிவாதிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா ? கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் கடவுள் இல்லை என்பது அவர்களின் கோட்பாடாக மாறி இறைமறுப்பு என்பது பெயரில்லாத மதமாக இருக்கிறது. தற்போதைய அறிவியல் துணை மூலம் புலனில் புலப்படாதது என்று ஒன்றுமே இல்லை, எனவே இறைவன் இல்லை என்று வாதிடுபவர்களாக இருப்பவர்கள், கடவுள் இருப்பை ஏற்பது அறிவியலே என்றாலும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். எனவே இறைவன் இருப்பை நிருபிப்பதற்கோ, ஏற்றுக் கொள்ளவைப்பதறோ அறிவியல் வழியான நிரூபணம் பயன்படாது என்றே நினைக்கிறேன்.

இறை ஏற்பாளர்களின் இறைவன் பற்றிய கட்டுமானங்களே இறை மறுப்பாளர்களுக்கும் மறுப்பிற்கான இலக்கு (முன்பே சொல்லி இருக்கிறேன்). இறைவன் உண்டு என்று நிரூபணம் செய்தால், இறைவன் இவை இவற்றையெல்லாம் ஏன் செய்யவில்லை என்ற அடுத்தக் கேள்வி நோக்கி சென்று, இறைவன் இருப்பின் ஒப்புதல் என்பதிலிருந்து இறைவனின் சக்தி அல்லது புனிதத் தன்மை பற்றிய கேள்விகளை நோக்கி இறை மறுப்பாளர்கள் நகர்வார்கள். காரணம் 'எல்லாம் அவன் செயல்' என்ற அபத்த வேதாந்தமே எல்லா மதங்களின் அடிநாதமாக இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்பதை ஆன்மிகவாதிகள் நம்பினாலும் எல்லாம் அவன் செயல் என்று மன அளவில் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிகழ்வுகள் எதுவுமே இல்லை. நமீதாவின் இடுப்பை ஆட்டுவதும் இறைவனா ?. அது ஒரு சித்தாந்தம் என்ற வகையில் நிறுத்திக் கொள்ளாமல்... ஆன்மிகவாதிகள் எல்லாம் இறை சக்தியின் திருவிளையாடல் என்று சொல்லிவிடுவதன் மூலம் இறை சக்திக்கு எதோ கைமாறு செய்துவிட்டதாகவே நினைத்து தவறுகிறார்கள். அப்படியே இறைவன் ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக காட்சி கொடுத்தாலும் எந்த மதத்தின் கடவுளாக வருவது என்று கடவுளுக்கே குழப்பம் வந்துவிடும். ஏனென்றால் அந்த மத கோட்பாடுபடி இறைவன் இல்லை என்றால் நம்பிக்கை இருக்காது.

தலைப்புக்குப் போவோம்,

இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபணம் செய்ய முடியவில்லை அதனால் இருக்க முடியாது என்பதைவிட அறிவியலால் அவற்றை அறிய முடியவில்லை என்பதும், அறிவியலால் அவற்றை என்றுமே நிரூபணம் செய்ய முடியாது என்பதும் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது ? அதாவது அறிவியலுக்கு அப்பாற்பட்டு அறிவியலால் என்றுமே கண்டுபிடிக்க முடியாத ஒரு சக்தி ஏன் இருக்க முடியாது ? அது ஏன் அப்படியெல்லாம் ஓளிந்து கொண்டு இருக்கவேண்டுமா ? :) நல்ல கேள்வி ! அன்பு பாசம் நேர்மை மற்றும் பல்வேறு நல்ல உணர்வுகள் அனைத்துமே உணர்வுகளாக மட்டுமே உணரப்படுபவை. இறை சக்தி இவை அனைத்தையும் எல்லையற்றதாக வைத்திருக்கும் ஒரு பெரிய சக்தி என்றே வைத்துக் கொள்ளுங்கள், அதாவது முற்றிலும் உணர்வு சார்ந்த ஒன்று, அதனை புலன்களை வைத்தோ, அறிவியல் கருவிகளை வைத்தோ கண்டுகொள்ளவே முடியாது என்ற ஒரு கூற்று உண்மையாகக் கூட இருக்கலாம்.

பல மதங்களில் அறிவியல் கோட்பாடுகளை மதக் கொள்கைகளுடன் தொடர்பு படுத்தி இரண்டுமே ஒன்றை ஒன்று நிருபிப்பதாக சொல்லி எங்கள் மதம் அறிவியல் கண்ட மதம் என்று சொல்வதைக் கேட்க நகைப்பாக இருக்கிறது.

அறிவியல் கூட நாளடைவில் ஒரு மதமாகவும் மாறி பழைய அறிவியல் கோட்பாடுகளைத் தாங்கிப் பிடிக்கும் அறிவியல் அடிப்படை பழமைவாதிகள் உருவாகலாம், ஏனென்றால் தீவிர நம்பிக்கைகள் தான் மதங்களாக மாறுகிறது. இதுவரையில் நம்பிக்கைகளின் கட்டுமானமும் அதன் வளர்ச்சியுமே மதங்களாக மாறி இருக்கிறது, அறிவியல் மட்டும் தான் உலக மக்களின் நம்பிக்கை எனவே அறிவியலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், அதை எந்த கெடுதலான ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவதும் தவறல்ல என்று அதற்கு முழு ஆதரவு தெரிவிப்பது அறிவியல் வழிபாடு தானே. இன்றைய அதிதீவிர அறிவியல் நம்பிக்கைகளை 'அறிவியல் மதம்' என்று சொன்னால் அதில் தவறு உண்டா ?

93 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

அறிவியல் மதம் - பெயர் நன்றாக இருக்கு முதலில் காப்புரிமை வாங்கிடுங்க.

கிருஷ்ணா சொன்னது…

கோவி சார்,

கருத்து செறிவோடு இவ்வளவு அதிகமாக பதிவுகள் எழுதும் நிங்கள் ஆச்சரியப்பட வைக்கிறிர்கள்.

கிருஷ்ணா சொன்னது…

//கடவுள் இல்லை என்பது அவர்களின் கோட்பாடாக மாறி இறைமறுப்பு என்பது பெயரில்லாத மதமாக இருக்கிறது

அப்படியே இறைவன் ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக காட்சி கொடுத்தாலும் எந்த மதத்தின் கடவுளாக வருவது என்று கடவுளுக்கே குழப்பம் வந்துவிடும்

பல மதங்களில் அறிவியல் கோட்பாடுகளை மதக் கொள்கைகளுடன் தொடர்பு படுத்தி இரண்டுமே ஒன்றை ஒன்று நிருபிப்பதாக சொல்லி எங்கள் மதம் அறிவியல் கண்ட மதம் என்று சொல்வதைக் கேட்க நகைப்பாக இருக்கிறது.//

Fine..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அறிவியல் மதம் வந்து மற்ற மதங்கள் ஒழிந்தால் ஒழிய உலகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.(அவர் பெயரால் தானே மதத்தைக் கண்டுபிடித்துக் கொண்டாடுகிறார்கள், கொன்றாடுகிறார்கள்!
பி.கு:
மதம் = வெறி(கா) (காப்புரிமை: அத்திவெட்டி ஜோதிபாரதி)

மதம் = வெறி(கா) (காப்புரிமை: அத்திவெட்டி ஜோதிபாரதி)


மதங்கள் மற்றும் ஆன்மிகம் பற்றி அலசுவதில் கோவியார் வல்லவர் என்பது அவருடைய பதிவுகளில் இருந்து புலப்படுகிறது.

கையேடு சொன்னது…

//அறிவியல் கூட நாளடைவில் ஒரு மதமாகவும் மாறி பழைய அறிவியல் கோட்பாடுகளைத் தாங்கிப் பிடிக்கும் அறிவியல் அடிப்படை பழமைவாதிகள் உருவாகலாம், ஏனென்றால் தீவிர நம்பிக்கைகள் தான் மதங்களாக மாறுகிறது.//

அறிவியலில் இது போன்ற நிகழ்வுகள் சில சலசலப்பை ஏற்படுத்தியதுண்டு ஆனால், நிரந்தரமாகத் தங்கியதற்கு சான்றுகள் இதுவரை இல்லை.

//அறிவியல் மட்டும் தான் உலக மக்களின் நம்பிக்கை எனவே அறிவியலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்,//

அறிவியலின் ஒரே சிறப்பும் குறைபாடும் இதுதான்: அது எதையுமே "நம்பாததுதான்"

// அதை எந்த கெடுதலான ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவதும் தவறல்ல என்று அதற்கு முழு ஆதரவு தெரிவிப்பது அறிவியல் வழிபாடு தானே. //

இது அறிவியல் அறம் சார்ந்த கேள்வி, மேலும் இப்படி அறம் சார்ந்த கேள்விகள் எல்லா நிறுவனத்துக்கும் பொருந்தும் ஒன்று. அதற்கான தீர்வுகள் ("அறிவியல் நிறுவனம்" உட்பட) சமூகத்தோடு பின்னிப்பிணைந்தது.

அறிவியல் நிறுவனம் பற்றி விரிவாக ஆராய்ந்தால் ஒருவேளை விடை சிக்கலாம்.

அறம் பற்றிய கேள்விகளைக் கொஞ்சம் நீட்டித்தால் உணவு உற்பத்தியே அறம் மீறியதாகக் காணமுடியும்.


//இன்றைய அதிதீவிர அறிவியல் நம்பிக்கைகளை 'அறிவியல் மதம்' என்று சொன்னால் அதில் தவறு உண்டா ?//

அறிவியல் மதத்தின் ஒரே நம்பிக்கை அது எதையும் நம்பாதது என்பது மட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அறிவியல் மதம் வந்து மற்ற மதங்கள் ஒழிந்தால் ஒழிய உலகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.(
//

ஜோதிபாரதி,

அதுக்கும் முன்பே அறிவியல் மதத்தின் அணு ஆயுதங்கள் உலகத்தையே ஒழித்துவிடும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
அறிவியல் மதம் - பெயர் நன்றாக இருக்கு முதலில் காப்புரிமை வாங்கிடுங்க.
//

குமார் அண்ணன்,

அந்த சொல் புதியது அல்ல, பலர் பயன்படுத்திவருகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
கோவி சார்,

கருத்து செறிவோடு இவ்வளவு அதிகமாக பதிவுகள் எழுதும் நிங்கள் ஆச்சரியப்பட வைக்கிறிர்கள்.
//

கிருஷ்ணா,
ஒவ்வொரு பதிவுக்கும் உங்கள் பின்னூட்டம், நீங்களும் வியப்படைய வைக்கிறீர்கள். மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said... அறிவியல் நிறுவனம் பற்றி விரிவாக ஆராய்ந்தால் ஒருவேளை விடை சிக்கலாம்.
//

கையேடு,

அறிவியல் பற்றிக் கேள்வி எழுப்பினால் சிக்கலாகலாம் :)

ஆய்வுக்கூடங்களில் என்ன என்னவெல்லாம் செய்கிறார்களோ, அறிவியல் வளர்ந்த பிறகு தான் எய்ட்ஸ் போன்ற புதிய கிருமிகளும் உற்பத்தியாயின என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும், அதை எதோ (ஊகம் செய்து) ஆப்ரிக்கா குரங்கின் மீது சுமத்திவிட்டார்கள்.

Unknown சொன்னது…

//ஆன்மீக அபத்தங்களை மறுத்து//
//எங்கள் மதம் அறிவியல் கண்ட மதம் என்று சொல்வதைக் கேட்க நகைப்பாக இருக்கிறது.//

அல்லாஹ் மனித அறிவியல் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன். மனிதப்புலன்களும் சிந்தனையும் அவனை அடைவதை விடவும் அவன் உயர்ந்தவன், மேலானவன். அவன் தன்னைப் பற்றி என்ன சொல்கிறானோ அதை விடக் கூடுதலாக மனிதனால் அறியமுடியாது என்பதால் அப்படியே நமபுகிறோம். படைப்புகள் அனைத்தும் அவனுடைய அறிவிலுள்ளவை, அவனுடையவை. எனவே அவன் மனிதனுக்கு கொடுத்த அறிவில் (மனித அறிவியலில்) தவறுகள் ஏற்படுவதில்லை.

இது எனது இஸ்லாமிய நம்பிக்கை. எனது சிந்தனைகளில் ஆராய்ச்சிகளில் அதிலுள்ள உண்மையையும் உணர முடிகிறது. அவன் கொடுத்த செய்தி (குர்ஆன்) எந்த நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுடன் மோதாதது மட்டுமில்லாமல் அதை உண்மைப்படுத்துவது அதிசயமானதல்ல. உண்டாக்கியவனுக்கு அதைப்பற்றிய உண்மைகள் தெரியாமலிப்பதிருல்லையே.

ஆன்மிகமே அபத்தமென்றால் அறிவியல் அறிஞர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளராயும் இருப்பதெங்ஙனம்? சிந்திக்க முடிகிறதா? இறைமறுப்பே அறிவியல் என்று குழம்பிப் போனவர்கள் தங்களை சிந்தனையாளர்களாய் முன்னிறுத்திக் கொண்டதால் வந்த குழப்பம்.
அல்லது
தங்களது தவறான இறை கொள்கைக்கு மாற்றமாக வந்த அறிவியல் உண்மைகளினால் விழி பிதுங்கிய குருமார்கள் அறிவியலாளர்களைக் கொன்ற அபத்தம்தான் எல்லா இறைக் கோட்பாடுகளுக்கும் பொதுவானது என குருட்டுத்தனமான நம்பிக்கை உடையவர்களால் வந்த குழப்பம்.

குர்ஆனைப் படிக்க ஆராய எந்தவொரு முயற்சியும் செய்யாமல் வீணாக தர்க்கிக்கின்றவர்களை என்ன சொல்வது.

இதோ அடுத்த அடிப்படைவாதி என தூற்றலாம். தூற்றுங்கள். யாரிடமும் எதையும் இரக்காமல், என்றுமே இறக்காமல், யாரையும் பெறாமல், எவராலும் பெறப்படாமல், உவமையால் வர்ணிக்க முடியாத உயர்நதவனாகிய (அவனை நீங்கள் எந்த பெயரிட்டு அழைத்தாலும், தனக்கென அழகிய பெயர்களைக் கொண்ட) அந்த இறைவனை நான் நம்புகிறேன் என்பதற்கு நீங்களே சாட்சியாகுங்கள்.

நையாண்டி நைனா சொன்னது…

/*நமீதாவின் இடுப்பை ஆட்டுவதும் இறைவனா ?. */

ஆம்.

நமீதா இருக்கிற சைய்சூக்கு
நீங்களோ , நானோ இல்லை நமீதாவோ கூட ஆட்ட முடியுமா?

ஆமா..... நமீதா கிட்டே இடுப்பு எங்கே இருக்கு?

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் ஐயா,

பதிவில் எழுதி இருக்கும் இந்த ////

இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபணம் செய்ய முடியவில்லை அதனால் இருக்க முடியாது என்பதைவிட அறிவியலால் அவற்றை அறிய முடியவில்லை என்பதும், அறிவியலால் அவற்றை என்றுமே நிரூபணம் செய்ய முடியாது என்பதும் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது ? அதாவது அறிவியலுக்கு அப்பாற்பட்டு அறிவியலால் என்றுமே கண்டுபிடிக்க முடியாத ஒரு சக்தி ஏன் இருக்க முடியாது ?

இறை சக்தி இவை அனைத்தையும் எல்லையற்றதாக வைத்திருக்கும் ஒரு பெரிய சக்தி என்றே வைத்துக் கொள்ளுங்கள், அதாவது முற்றிலும் உணர்வு சார்ந்த ஒன்று, அதனை புலன்களை வைத்தோ, அறிவியல் கருவிகளை வைத்தோ கண்டுகொள்ளவே முடியாது என்ற ஒரு கூற்று உண்மையாகக் கூட இருக்கலாம்.
/////

- வரிகளெல்லாம் உங்கள் கவனத்தை ஈர்க்காதது வியப்பாக இருக்கிறது. இறைவன் குறித்து உயர்வாக சொல்லி இருப்பதைவிட மதம் குறித்து குறை சொல்லி இருப்பது தான் உங்களால் ஏற்க முடியவில்லையா ? அப்படியும் நான் இந்த மதம் என்று எந்த மதத்தின் பெயரையும் சொல்லவில்லையே.

அணுகுண்டு, விசவாயு, புதிய வகைக் கிருமிகள் இன்னும் அனைத்து நாசவேலை செய்யக்கூடிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கும் ஆன்மிகம் தான் காரணம் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

மனிதன் கண்டுபிடிக்கட்டும் அதன் பிறகு மதநூல்களில் அவை ஏற்கனவே இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று சொல்லி எந்த மதநூல்களிலும் குறிப்பு இல்லை. :(

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...
/*நமீதாவின் இடுப்பை ஆட்டுவதும் இறைவனா ?. */

ஆம்.

நமீதா இருக்கிற சைய்சூக்கு
நீங்களோ , நானோ இல்லை நமீதாவோ கூட ஆட்ட முடியுமா?

ஆமா..... நமீதா கிட்டே இடுப்பு எங்கே இருக்கு?
//
நைனா,
எல்லோருக்கும் கண்களில் குறைபாடா அல்லது இடுப்புப் பகுதி கண்ணில் படாதபடி பார்வைகள் வேறு எங்காவது சென்றுவிட்டதா ?
:)

தருமி சொன்னது…

//கடவுள் உண்டு என்று நிரூபணம் செய்தால் பகுத்தறிவாதிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா ? கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்//

இதற்கு இரு பதில்கள்:
1. அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும்; பிறகு சித்தப்பா என்று கூப்பிடணுமா என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்!

2. அது எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள்? நான் ஏற்றுக் கொள்வேனே.

//இறைவன் இருப்பை நிருபிப்பதற்கோ, ஏற்றுக் கொள்ளவைப்பதறோ அறிவியல் வழியான நிரூபணம் பயன்படாது என்றே நினைக்கிறேன்.//

இங்கேயும் மற்ற இடங்களிலும் நீங்கள் "அறிவியல் வழியான நிரூபணம்" என்று சொல்வதெல்லாமே ஸ்தூலப் பொருட்கள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளை மட்டும் மனதில் வைத்துப் பேசுவதுபோல் தெரிகிறதே. metaphysicsஇருக்கிறது. theoretical .. hyptothesis...என்றெல்லாம் இருக்கின்றனவே.. நேரடி சான்றுகள் இல்லாமலேயே theoretical ஆக hyptotheses உருவாகலாமே..?!


//அறிவியல் வளர்ந்த பிறகு தான் எய்ட்ஸ் போன்ற புதிய கிருமிகளும் உற்பத்தியாயின என்பதையும் ..//

:) அல்லது :( - இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.


சுல்தான்:.....அவன் மனிதனுக்கு கொடுத்த அறிவில் (மனித அறிவியலில்) தவறுகள் ஏற்படுவதில்லை.

:)
அப்டியா?

அறிவியல் வளர்ச்சியே trial and error வழிதானே...?!மனித அறிவியலில் ஏற்பட்ட தவறுகள் எத்தனை எத்தனையோ!

Unknown சொன்னது…

//அப்படியும் நான் இந்த மதம் என்று எந்த மதத்தின் பெயரையும் சொல்லவில்லையே//
இல்லைதான். எனைப் பாதிப்பவற்றுக்குத்தானே நான் சொல்ல வேண்டும்.

//அணுகுண்டு, விசவாயு, புதிய வகைக் கிருமிகள் இன்னும் அனைத்து நாசவேலை செய்யக்கூடிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கும் ஆன்மிகம் தான் காரணம் என்று நீங்கள் சொன்னால்//
இவை அனைத்தும் அந்த உயர்நதோனுடைய அறிவிற்குட்பட்டதுதான். அவன் அறியாமல் நடப்பவைகளல்ல.
நல்லவையும் தீயவையும் கலந்ததே உலகம். நாம் நன்மையின் பக்கம் இருக்கிறோமா என பார்த்து நடப்பதுதான் வெற்றிக்கான வழி.

//மனிதன் கண்டுபிடிக்கட்டும் அதன் பிறகு மதநூல்களில் அவை ஏற்கனவே இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று சொல்லி எந்த மதநூல்களிலும் குறிப்பு இல்லை//
மனிதன் கண்டுபிடித்து நிருபித்தவற்றுக்கு அவனால் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நூல் எதிரானதாக இல்லை என்பதே நான் சொல்ல வருவது.

No hard feelings. Food for thought.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி..அருமையான பதிவு..
ஆமாம் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள்?
எவ்வளவு நேரம் கணினி முன் அமர்ந்து இருப்பீர்கள்?
எவ்வளவு நேரம் குறிப்பெடுப்பீர்கள்?
எவ்வளவு நேரம் அலுவலக வேலை செய்வீர்கள்/
எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்?
எவ்வளவு நேரம் குடும்பத்தை கவனிப்பீர்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

//2. அது எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள்? நான் ஏற்றுக் கொள்வேனே.//

நீங்கள் மதம் காட்டும் கடவுளைத்தானே மறுக்கிறீர்கள் ? அப்படி என்றால் கடவுளுக்கு நீங்களே ஒரு டெபனேசன் கொடுத்து, எப்படி இருந்தால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று சொல்லவும். பதிலுக்காக ஆவலோடு... இல்லை கடவுளே தேவை இல்லை என்று சொன்னாலும் சரி

தருமி சொன்னது…

//எப்படி இருந்தால் ஏற்றுக் கொள்வீர்கள் //

எப்படி இருந்தாலும் இருந்தால் ஏற்றுக் கொள்வேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவி..அருமையான பதிவு..//

ஐயா, பாராட்டுக்கு நன்றி !

//ஆமாம் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள்?
எவ்வளவு நேரம் கணினி முன் அமர்ந்து இருப்பீர்கள்?
எவ்வளவு நேரம் குறிப்பெடுப்பீர்கள்?
எவ்வளவு நேரம் அலுவலக வேலை செய்வீர்கள்/
எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்?
எவ்வளவு நேரம் குடும்பத்தை கவனிப்பீர்கள்?//

பர்சனல் டிடெயில்ஸ் நேராக சந்திக்கும் போதுதான் சொல்ல முடியும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...

எப்படி இருந்தாலும் இருந்தால் ஏற்றுக் கொள்வேன்!
//

'இருந்தால்' என்பதற்கு என்ன பொருள் ? புலன்களுக்கு தட்டுப்படனுமா ? அப்படி தட்டுபடுவதாக இருந்தால் செத்துப் போனவர்களின் ஆவியைக் கூட பார்க்க முடியுமே ? :)

மதங்களில் சொல்லப்படுபவைத் தாண்டி இறைவன் பற்றி எதாவது சிந்தித்து இருக்கிறீர்களா ?

Unknown சொன்னது…

//அறிவியல் வளர்ச்சியே trial and error வழிதானே...?!மனித அறிவியலில் ஏற்பட்ட தவறுகள் எத்தனை எத்தனையோ!//

என் மறுமொழியின் முதல் பத்தியோடு இரண்டாவது பத்தியையும் இணைத்துப் படியுங்கள்.
இறைவன் நமக்குக் கொடுத்தவற்றில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. அதாவது அவனுடைய அறிவில் தவறுகள் நிகழாது.

மனித அறிவுதான் trial and errorக்கு உட்பட்டது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவி..அருமையான பதிவு..

ஆமாம் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள்?
எவ்வளவு நேரம் கணினி முன் அமர்ந்து இருப்பீர்கள்?
எவ்வளவு நேரம் குறிப்பெடுப்பீர்கள்?
எவ்வளவு நேரம் அலுவலக வேலை செய்வீர்கள்/
எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்?
எவ்வளவு நேரம் குடும்பத்தை கவனிப்பீர்கள்?//

வழி மொழியலாம் என்று பார்த்தேன்.
கேள்விகள் அதிகமாக இருப்பதால்,
வழி கேட்கிறேன்.

தருமி சொன்னது…

எப்படி இருந்தாலும் லாஜிக் இருந்தால் ஏற்றுக் கொள்வேன்!

லாஜிக் என்னன்னு கேட்டீங்கன்னா, என் பழைய பதிவுகளில் எல்லா கேள்விகளும் இருக்கின்றன.

வருண் சொன்னது…

கண்ணன்!

அறிவியலை மதம்னு சொல்லி பல மதவாதிகள், ஜஸ்டிஃபை செய்கிறார்கள் பாவம்! :-(

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி 11:30 PM, November 12, 2008
எப்படி இருந்தாலும் லாஜிக் இருந்தால் ஏற்றுக் கொள்வேன்!//

லாஜிக் தானே வேண்டும் ? அடுத்த முறை சந்திக்கும் போது லாஜிகோடு சொல்கிறேன் :)

//லாஜிக் என்னன்னு கேட்டீங்கன்னா, என் பழைய பதிவுகளில் எல்லா கேள்விகளும் இருக்கின்றன.
//

அதுபற்றி இரண்டு ஒரு சுட்டிக் கொடுக்க முடியுமா ?

தருமி சொன்னது…

சுல்தான்,
சில விளங்காத விஷயங்கள் மட்டும் இங்கே:

//நல்லவையும் தீயவையும் கலந்ததே உலகம்.//
ஆக கெட்டவையும் அல்லாவிடமிருந்துதான் என்று கொள்ளட்டுமா?

//அவன் மனிதனுக்கு கொடுத்த அறிவில் (மனித அறிவியலில்) தவறுகள் ஏற்படுவதில்லை.//
இதுவும் நான் முந்திய பின்னூட்டத்தில் சொன்னது போல் ஒரு குழப்பமாகவே எனக்குத் தெரிகிறது

//மனிதன் கண்டுபிடித்து நிருபித்தவற்றுக்கு அவனால் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நூல் எதிரானதாக இல்லை என்பதே நான் சொல்ல வருவது.

மனிதன் கண்டுபிடிப்பதற்காக ஒரு ‘நோட்ஸ்’மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சரி, அது அவனின் திருவிளையாடல் என்பீர்கள். ஆனால் “மனிதன் கண்டுபிடித்து நிருபித்த” பின்னால் மட்டுமே புரியக்கூடியதாய் இருக்கும் நூல் எப்படி “வழிகாட்டியாக” இருக்க முடியும்; வழிகாட்டியாய் இருக்கிறது.

CERN EXPERIMENT வந்ததும் இது ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது என்கிறீர்கள். அதை முதலில் புரிந்திருந்தால் இல்லை இப்போதாவது முழுதும் புரிந்தால் அவ்வளவு காசு செலவு பண்ண வேண்டாமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நாம் வேண்டுமானால் நம் பதிவுகளில் இதையெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் தொடர்ந்தால் கோவியின் பதிவை அதிகமாக ஆக்கிரமிப்பதாகிவிடுமென நினைக்கிறேன்.

தருமி சொன்னது…

http://dharumi.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


http://dharumi.blogspot.com/2005/09/49-1.html

நசரேயன் சொன்னது…

அறிவியல் (என்ற) மதம் ! அறிவு பூர்வமா இருக்கு

குரங்கு சொன்னது…

கோவி,

ஒன்றை அறிவியலால் நிரூபணம் செய்ய முடியவில்லை என்பதாலே, அல்லது கண்களால் நம்மால் காணமுடியவில்லை என்பதாலே நிராகரிப்பதா? பகுத்தறிவு எண்பது கண்களால் பார்ப்பதை மட்டும் கொள்ளும் நம்பிக்கையா? நமக்கு வேறு புலன்களே இல்லையா? உங்க‌ள் பதிவிலிருந்தே நீங்க‌ள் இறை ம‌றுப்ப‌ளார‌க‌வும் அல்ல‌து ஆத‌ர‌வாளார‌க‌வும் இல்ல‌திருக்கிறீர்க‌ள், ஆதாவ‌து குழ‌ப்ப‌மான‌ ம‌ன‌நிலை. தாங்க‌ளின் தேட‌ல் ந‌ல்வ‌ழியிலே தாங்க‌ளை கொண்டுசெல்லுட்டும். இறை ம‌றுப்ப‌ளாரகள்/ஆத‌ர‌வாளார‌கள் அனைவ‌ரும் இவ்வுல‌க‌ம் மிகப்பெரிய‌ வெடிப்பு த‌த்துவ‌த்தின் ப‌டி உருவாகி உள்ளது என்று நம்புகிறார்கள், இறை ம‌றுப்ப‌ளாரகள் மட்டும் ஒரு சிறிய‌ அணுவின் மூல‌மாக அனைத்து உயிரினம் உருவானது, பரிணாமவளர்ச்சியின் ப‌டி குரங்கில் இருந்து மனிதன் உருவாகிக்கொண்டான் நம்புகிறார்கள். இதை தாங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌ முடிகிற‌தா? இன்னும் ஏன் குரங்கு குரங்காவே இருக்கிறது? நம்மளுடைய பரிணாமாற்றம் எப்ப நடக்கும்?


விஜய் டிவியின் "நடந்தது என்ன?" இரவு 10:00 இந்திய நேரத்துக்கு ஒளிபரப்பு ஆகின்றது, அதை நீங்கள் பார்கிறீர்களா??? பல விசயங்கள் அறிவியலால் பதில் கூறியும், நிரூபணம் இருக்க காரணம் என்ன? அதை எல்லாம் உண்மை என்றோ, பொய் என்றோ கூறவில்லை. நம்மளால் அளவிட முடியாத அல்லது தீர்க்கமாக உணர முடியாத பல விசயங்கள் நடந்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆணுக்கும் பெண்னுக்கும் எந்த குறையும் இல்லாமல், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களை சந்தித்ததுன்டா? இவர்களுக்கு மட்டும் ஏன் கடவுள் குழந்தையே கொடுக்க வில்லை, கடவுள் எவ்வளவு பெரிய கொடுரமானவன் என்றும் நீங்கள் நினைக்கலாம், ஒரு உண்மை என்னவென்றால் ஒவ்வொரு ஆத்மாவிடமும் இறைவன் தன்னுடைய இருப்பை ஏதாவது வகையில் உணர்த்துகிறான்.

கருவில் இருக்கும் குழ்ந்தைக்கு எப்போது உயிர் உன்டாகிறது என்பதும்? ஒருவருக்கு எப்போது உயிர் பிரியும் என்பதையும் யாராலும் கூறமுடியுமா?

சிந்திங்கிங்கள்...

நீங்கள் கூறியதிலிருந்தே....
ஏனென்றால் கடவுள் இல்லை என்பது அவர்களின் கோட்பாடாக மாறி இறைமறுப்பு என்பது பெயரில்லாத மதமாக இருக்கிறது. அப்படி நீங்கள் போய் விடாதீர்கள்.

என்னுடைய பதிவில் மேலும் விவாதிக்கிறேன் (இறைவன் நாடினால்)

தேடலுடன்.
குரங்கு

வருண் சொன்னது…

****அறிவியல் தரவுகள் தான் எல்லாவற்றிற்கும் தேவை அதுதான் பகுத்தறிவு என்பவர்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அடுத்த ஆண்டில் ஒரு விஞ்ஞானி கடவுள் கோட்பாட்டை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி கடவுள் உண்டு என்று நிரூபணம் செய்தால் பகுத்தறிவாதிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா ?****

விஞ்ஞானிகள் கடவுள் ஆராச்சியில் இருப்பதாக எங்கே படித்தீர்கள்?

உங்கள் கனவிலா?

வருண் சொன்னது…

****அறிவியல் கூட நாளடைவில் ஒரு மதமாகவும் மாறி பழைய அறிவியல் கோட்பாடுகளைத் தாங்கிப் பிடிக்கும் அறிவியல் அடிப்படை பழமைவாதிகள் உருவாகலாம், ஏனென்றால் தீவிர நம்பிக்கைகள் தான் மதங்களாக மாறுகிறது. ****

இது சுத்தமான அபத்தம், கண்னன்!

அறியிலில் உள்ள நம்பிக்கையை யாரும் க்ரிடிசைஸ் பண்ணலாம்.

மதமாக அறிவியல் மாறவே மாறாது!

வருண் சொன்னது…

****இன்றைய அதிதீவிர அறிவியல் நம்பிக்கைகளை 'அறிவியல் மதம்' என்று சொன்னால் அதில் தவறு உண்டா ?****

அறிவியல் நம்பிக்கைனு எதை சொல்றீங்க?

One scientist's view is always OPEN for other scientitsts criticisms! That is not the case in any religion!

கோவி.கண்ணன் சொன்னது…

//குரங்கு 12:20 AM, November 13, 2008
கோவி,

ஒன்றை அறிவியலால் நிரூபணம் செய்ய முடியவில்லை என்பதாலே, அல்லது கண்களால் நம்மால் காணமுடியவில்லை என்பதாலே நிராகரிப்பதா? பகுத்தறிவு எண்பது கண்களால் பார்ப்பதை மட்டும் கொள்ளும் நம்பிக்கையா? நமக்கு வேறு புலன்களே இல்லையா? உங்க‌ள் பதிவிலிருந்தே நீங்க‌ள் இறை ம‌றுப்ப‌ளார‌க‌வும் அல்ல‌து ஆத‌ர‌வாளார‌க‌வும் இல்ல‌திருக்கிறீர்க‌ள், //

குரங்கு, நான் சொல்லி இருப்பது தான். ஆனால் இறைமறுப்பாளராகவும் அல்லது ஆதரவாளராக மட்டும் தான் இருக்க முடியுமா ?

இறைமறுப்பாளனாக கண்டிப்பாக இல்லை. மதமறுப்பாளன் மட்டுமே.
மதமறுப்பாளன் இறைமறுப்பாளனா ?
மதம் என்பது மனிதர்களை பிரித்துப் போட்டே வைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீரக்ளா ? மதக் கொள்கைகளுக்கு நான் ஆதரவாளன் இல்லை. இறையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவும் என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை. எனது இறை நம்பிக்கை மதங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, அதை நான் வலியுறுத்துவது இல்லை.


//ஆதாவ‌து குழ‌ப்ப‌மான‌ ம‌ன‌நிலை. தாங்க‌ளின் தேட‌ல் ந‌ல்வ‌ழியிலே தாங்க‌ளை கொண்டுசெல்லுட்டும். //

குழப்பம் எதுவும் இல்லை. பலர் வழியைத் தான் தேடுவார்கள், எனக்கு அது எப்போதோ கிடைத்துவிட்டது. தற்பொழுது வழியைத் தேடுவதில்லை..தொடர்ந்து தெளிவாகவே பயணித்துக் கொண்டு இருக்கிறேன் :)

//இறை ம‌றுப்ப‌ளாரகள்/ஆத‌ர‌வாளார‌கள் அனைவ‌ரும் இவ்வுல‌க‌ம் மிகப்பெரிய‌ வெடிப்பு த‌த்துவ‌த்தின் ப‌டி உருவாகி உள்ளது என்று நம்புகிறார்கள்,//

வெடிப்பு ஒரு தத்துவம் தான் அதனை நிரூபனம் செய்வது எளிதல்ல.

//இறை ம‌றுப்ப‌ளாரகள் மட்டும் ஒரு சிறிய‌ அணுவின் மூல‌மாக அனைத்து உயிரினம் உருவானது, //

இதையும் ஒப்புக் கொள்ள மாட்டேன், ஏனெனில் எந்த ஒரு பொருளும் வடிவம் மாறுமேயன்றி முற்றிலும் அழிக்கவோ, புதியதொன்றை தோன்றவைக்கவோ முடியாது.


//பரிணாமவளர்ச்சியின் ப‌டி குரங்கில் இருந்து மனிதன் உருவாகிக்கொண்டான் நம்புகிறார்கள். இதை தாங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌ முடிகிற‌தா? இன்னும் ஏன் குரங்கு குரங்காவே இருக்கிறது? நம்மளுடைய பரிணாமாற்றம் எப்ப நடக்கும்? //

நீங்கள் சொல்வது சரித்தான். குரங்கில் இருந்து மனிதன் பரிணாமம் பெற்று வந்திருந்தால் மனிதன் மட்டும் தான் இருப்பான் குரங்கு இருக்காது. ஒரு சூழலில் வளர்ச்சியடையக் கூடிய ஒரு பொருள் எதுவும் ஒரே காலகட்டத்தில் இருவேறு தன்மைகளில் இருக்க முடியாது. பரிணாமக் கொள்கையும் தவறுதான் என்றே நினைக்கிறேன்

//நம்மளால் அளவிட முடியாத அல்லது தீர்க்கமாக உணர முடியாத பல விசயங்கள் நடந்ந்து கொண்டுதான் இருக்கிறது. //

சரிதான், ஒரு கழுகின் கூர்மையான பார்வை நமக்குக் கிடையாது, 3 கிலோமீட்டர் தொலைவில் செத்த எலி கிடப்பதை கழுகு தன் சிறிய கண்களால் அறிந்து கொள்ளும். நம் புலன்களின் திறன் குறைவுதான். நம் புலன்களால் அறிய முடியாத பெளதீகப் பொருள்கள் கூட இருக்கிறது.

//ஆணுக்கும் பெண்னுக்கும் எந்த குறையும் இல்லாமல், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களை சந்தித்ததுன்டா? இவர்களுக்கு மட்டும் ஏன் கடவுள் குழந்தையே கொடுக்க வில்லை, //

எந்தக் குறையும் இல்லாதவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் செய்முறையில் தான் எதாவது தவறு இருக்கும், அவர்களுக்கு தேவை சிகிச்சை அல்ல, கவுன்சிலிங்

//கடவுள் எவ்வளவு பெரிய கொடுரமானவன் என்றும் நீங்கள் நினைக்கலாம், //

கொடுரமானவன் என்று நான் சொன்னது கிடையாது

//ஒரு உண்மை என்னவென்றால் ஒவ்வொரு ஆத்மாவிடமும் இறைவன் தன்னுடைய இருப்பை ஏதாவது வகையில் உணர்த்துகிறான்.//

:)

//கருவில் இருக்கும் குழ்ந்தைக்கு எப்போது உயிர் உன்டாகிறது என்பதும்? ஒருவருக்கு எப்போது உயிர் பிரியும் என்பதையும் யாராலும் கூறமுடியுமா? //

உயிர்போவதை உத்தேசமாகச் சொல்லிவிடுகிறார்கள், அதனால் தான் உறுப்பு தானம் செய்ய முடிகிறது.

//சிந்திங்கிங்கள்...// நன்றாக சிந்தித்து இருக்கிறேன்

//நீங்கள் கூறியதிலிருந்தே....
ஏனென்றால் கடவுள் இல்லை என்பது அவர்களின் கோட்பாடாக மாறி இறைமறுப்பு என்பது பெயரில்லாத மதமாக இருக்கிறது. அப்படி நீங்கள் போய் விடாதீர்கள்.
//
நான் சொன்னது எனக்கேவா ? : குறும்பு தானே !

//என்னுடைய பதிவில் மேலும் விவாதிக்கிறேன் (இறைவன் நாடினால்)

தேடலுடன்.
குரங்கு//

எழுதுங்க,

படிக்க ஆவலுடன்
கோவி.கண்ணன்

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
****அறிவியல் கூட நாளடைவில் ஒரு மதமாகவும் மாறி பழைய அறிவியல் கோட்பாடுகளைத் தாங்கிப் பிடிக்கும் அறிவியல் அடிப்படை பழமைவாதிகள் உருவாகலாம், ஏனென்றால் தீவிர நம்பிக்கைகள் தான் மதங்களாக மாறுகிறது. ****

இது சுத்தமான அபத்தம், கண்னன்!

அறியிலில் உள்ள நம்பிக்கையை யாரும் க்ரிடிசைஸ் பண்ணலாம்.

மதமாக அறிவியல் மாறவே மாறாது!
//

மின்சாரம் கண்டுபிடிப்பில் பெஞ்சமின் பிராங்கிளினால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது டிசி மின்சாரம் தானாம், அதன் பிறகு அவர் உதவியாளர் ஏசி மின்சாரத்தைக் கண்டுபிடித்தாராம், ஆனால் பெஞ்சமின்னால் ஒப்புக்கொள்ளப்படாமல் அதைப் பயன்படுத்தினால் வியாதிவரும் என்றெல்லாம் கிளப்பிவிடப்பட்டதாம், பிறகே ஏசி மின்சாரம் எங்கும் பயன்படுத்த சிபாரிசு செய்யப்பட்டதாம்.

அனு ஆயுதங்களை யாரும் அழிக்கத் தயாராக இல்லை, ஏனெனில் அது மகத்தான அறிவியல் குழந்தை என்று ஆராதிக்கப்படுகிறது. அந்த டெக்னாலஜிகளை அழித்தால் அறிவியலை வழிபடுபவர்களே இல்லை என்று சொல்லமுடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
****அறிவியல் தரவுகள் தான் எல்லாவற்றிற்கும் தேவை அதுதான் பகுத்தறிவு என்பவர்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அடுத்த ஆண்டில் ஒரு விஞ்ஞானி கடவுள் கோட்பாட்டை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி கடவுள் உண்டு என்று நிரூபணம் செய்தால் பகுத்தறிவாதிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா ?****

விஞ்ஞானிகள் கடவுள் ஆராச்சியில் இருப்பதாக எங்கே படித்தீர்கள்?

உங்கள் கனவிலா?
//

பெருவெடிப்புப் பற்றிய தற்போதைய உலகநாடுகளின் சோதனைகளை கடவுள் துகளின் ஆராய்ச்சி என்று தானே சொன்னார்கள்.

தருமி சொன்னது…

விஞ்ஞானிகள் கடவுள் ஆராச்சியில் இருப்பதாக எங்கே படித்தீர்கள்?//

பெருவெடிப்புப் பற்றிய தற்போதைய உலகநாடுகளின் சோதனைகளை கடவுள் துகளின் ஆராய்ச்சி என்று தானே சொன்னார்கள்.

நல்லா ஜோக்கடிக்கிறீங்க கோவி.........

வருண் சொன்னது…

கண்ணன்!

ஐன்ஸ்டயினே ஏதாவது அப்த்தமா பேசினால், அவர் விஞ்ஞானிகளால் தூக்கி எறியப்படுவார்.

அதுதான் விஞ்ஞான உலகம்! இவர் பெரிய தியரி கொண்டு வந்துட்டார்னு அவர் என்ன சொன்னாலும் கேட்பதில்லை.

மதங்களில் இது உண்மை அல்ல!

வருண் சொன்னது…

கண்ணன்!

ஐன்ஸ்டயினே ஏதாவது அப்த்தமா பேசினால், அவர் விஞ்ஞானிகளால் தூக்கி எறியப்படுவார்.

அதுதான் விஞ்ஞான உலகம்! இவர் பெரிய தியரி கொண்டு வந்துட்டார்னு அவர் என்ன சொன்னாலும் கேட்பதில்லை.

மதங்களில் இது உண்மை அல்ல!

வருண் சொன்னது…

கண்ணன்!

ஐன்ஸ்டயினே ஏதாவது அப்த்தமா பேசினால், அவர் விஞ்ஞானிகளால் தூக்கி எறியப்படுவார்.

அதுதான் விஞ்ஞான உலகம்! இவர் பெரிய தியரி கொண்டு வந்துட்டார்னு அவர் என்ன சொன்னாலும் கேட்பதில்லை.

மதங்களில் இது உண்மை அல்ல!

வருண் சொன்னது…

****பெருவெடிப்புப் பற்றிய தற்போதைய உலகநாடுகளின் சோதனைகளை கடவுள் துகளின் ஆராய்ச்சி என்று தானே சொன்னார்கள்.***

எந்த ஜேர்னலில் இது பற்றி ஆராய்ச்சி வந்தது?

சயண்ஸா இல்லை நேச்சரா?

ஏதாவது ஜேர்னல் ரெஃபரண்ஸ் கொடுங்க!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கோவி சார் ,
இதுக்கு நான் ஒன்று சொல்லவா ?.
மதம் என்பது ஒரு கண்ணாடி , அதில் பார்க்கும் நபர்களை பொறுத்து வித்தியாசம் . அதே மாதிரி அதை எப்படி பயன் படுத்துகிறோம் என்பதை பொறுத்து . , இதில் குழப்பம் வேண்டாம் .ஓகே வா !!. இதில் எல்லாம் அடங்கி விட்டது .

கையேடு சொன்னது…

////பரிணாமவளர்ச்சியின் ப‌டி குரங்கில் இருந்து மனிதன் உருவாகிக்கொண்டான் நம்புகிறார்கள். இதை தாங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌ முடிகிற‌தா? இன்னும் ஏன் குரங்கு குரங்காவே இருக்கிறது? நம்மளுடைய பரிணாமாற்றம் எப்ப நடக்கும்? //

//நீங்கள் சொல்வது சரித்தான். குரங்கில் இருந்து மனிதன் பரிணாமம் பெற்று வந்திருந்தால் மனிதன் மட்டும் தான் இருப்பான் குரங்கு இருக்காது. ஒரு சூழலில் வளர்ச்சியடையக் கூடிய ஒரு பொருள் எதுவும் ஒரே காலகட்டத்தில் இருவேறு தன்மைகளில் இருக்க முடியாது. பரிணாமக் கொள்கையும் தவறுதான் என்றே நினைக்கிறேன்//


அடடா..பரிணாமம் பற்றிய தவறான புரிதலில் முதன்மையானது இதுதான். மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது.
இது மிகவும் ஆபத்தான புரிதல்.

பரிணாமத்தில் படிநிலைகளும் உண்டு கிளைகளும் உண்டு.

பரிணாமம் ஒரு மரத்தைப்போன்றது.
அதில் குரங்கும் மனிதனும், பெரும் கிளையின் ஒரே புள்ளியில் இருந்து விரிந்த இருவேறு சிறு கிளைகள் மட்டுமே. அதனால் குரங்கும் மனிதனும் அடுத்தடுத்தப் படிநிலையில் தோன்றியவையல்ல. அவை ஒரு பெரும்கிளையில் மிகவும் நெருங்கிய உறவுடன் இருக்கும் இரு சிறு கிளைகள்.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது மிகவும் தவறான பரப்புவாதம். அது மனிதன் என்ற உயரிய அகம்பாவத்தை நிலைநிறுத்தவும், பரிணாமத்தை எதிர்க்கவும் உருவாக்கப்பட்ட ஒரு கதையாடலாகயிருக்கலாம்.

//பரிணாமக் கொள்கையும் தவறுதான் என்றே நினைக்கிறேன்//

இதுவரை உலகெங்கிலும், பலவகைக் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒரு கொள்கை பரிணாமக் கொள்கை.
அதனால், விவாத அவசரத்தில் முடிவெடுத்துவிடவேண்டாம்.

நன்றி.

குடுகுடுப்பை சொன்னது…

கடவுளை முதன் முதலில் கண்டு பிடித்தது யார்?

கல்வெட்டு சொன்னது…

.........அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற விசயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை மேலும் ஆராய்வதே பகுத்தறிவு. கப்பல் பயணைத்தில் கிடைத்த அனுபவ அறிவு பாலைவனப் பய்ணத்திற்கு அப்படியே பயன் படாது.

முன் முடிவுகள் இல்லாமல் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. அந்த பகுத்தறிவின் மூலம் புதிய தீர்வுகள் கண்டறியப்படவேண்டும்.

அனுபவம் (கற்றல்,கேட்டல்,உணர்தல்..) + அவற்றை கேள்விக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்துதல் + சுய புரிதல் = பகுத்தறிவு.
....
நீங்கள் 5 வயதில் பகுத்தறிந்த ஒன்றை 50 வயதிலும் பகுத்தறிய தயாராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கேள்விகளுக்கு உட்படுத்திக் கொள்வது அறிவியல்.

அதாவது "." டன் (முற்றுப் புள்ளியுடன் ) நிற்காமல் , அடுத்த தலைமுறையும் தொடர்ந்து சிந்திக்கும் வண்ணம் "," வைப்பது. உதாரணமாக இதுதான் இறுதி இறை வேதம் அல்லது இறுதி அவதாரம் அல்லது தூதர் என்று சொன்னால் அங்கே "." வந்து விடுகிறது. அறிவியல் அப்படி அல்ல.......

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

*************************************

......என்னளவில் , மதம்/கடவுள் என்பது என்பது ஒரு சாதாரண பொழுது போக்குச்சாதனம். அது ஒரு குழு சார்ந்த entertainment அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.அதனை ஒட்டி கொண்டாடப்படும் விழாக்கள் அதுசார்ந்த கூட்டத்தை குஷிப்படுத்துகிறது. ...

ஒருவர் தன்னை மதப்பற்றாளராக அடையாளம் காண்பிக்கும்போது அவரிடம் மதம் பற்றிய நமது மாற்றுக் கருத்துக்களை அவராக நம்மிடம் கேட்டால் தவிர பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.அதுவே சாதிக்கும்.....

......இவர்கள் நம்பிக்கையாளர்கள். தனது நம்பிக்கையை அடையாளமாக தெரிந்தே வெளியில் வெளிப்படுத்துகிறார்கள்.இவர்கள், தங்களின் நம்பிக்கையை தாங்கள் வரித்துக்கொண்ட அடையாளங்களால் தெளிவாக உங்களுக்குச் சொல்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை மதித்து விலகிப் போக வேண்டும்.விவாதிப்பது /உரையாடுவது நேர விரயம்.

குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை தாங்களே கேள்விக்கு உட்படுத்தாதவர்களின் (மத/சாதி/அதிமுக வின் இரத்தின் இரத்தங்கள்/தி.மு.கவின் உடன் பிறப்புகள்/ரஜினியின் இரசிகர்/சுஜாதாவின் விசிறி.. etc.... போன்றோரின் நம்பிக்கைகள்) நம்பிக்கையை நேரடியாக அவர்களிடமே விவாதிப்பதால் ஒரு பயனும் இல்லை.

... கேள்வி எழுப்புவது அவர்களையே அசைத்துவிடும் என்பதால், அப்படியே இருக்கவே விரும்புகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல. அதீத இரசிகத்தன்மையால் தன்னை ஒரு அடையாளத்துக்கு ஒப்புக்கொடுத்த யாரும் இவ்வாறே செயல்படுகிறார்கள். ரஜினி இரசிகனாய் ஆன ஒருவன், ரஜினி என்ன சொன்னாலும் அல்லது என்ன நடித்தாலும் இரசிக்க வேண்டிய அல்லது ஆதரித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான். அது போலவே அரசியல் கட்சிகளின் தொண்டர்களும், எழுத்தாளர்களின் வாசகர்களும்.......

மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html



------------------

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan 1:44 AM, November 13, 2008
கோவி சார் ,
இதுக்கு நான் ஒன்று சொல்லவா ?.
மதம் என்பது ஒரு கண்ணாடி , அதில் பார்க்கும் நபர்களை பொறுத்து வித்தியாசம் . அதே மாதிரி அதை எப்படி பயன் படுத்துகிறோம் என்பதை பொறுத்து . , இதில் குழப்பம் வேண்டாம் .ஓகே வா !!. இதில் எல்லாம் அடங்கி விட்டது .
//
starjan சார்,
மதம் ஒரு கண்ணாடிதான், அழுக்கடைந்த கண்ணாடி அதில் நல்ல முகங்களைக் கூட சரியாகக் காட்ட முடியாத நிலைதான் தற்போதைய நிலை. அவரவர் மதம் மட்டும் தான் கண்ணாடியாக தெரிவதும் வியப்புதான். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துதான் சொன்னேன். உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல.

கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வருங்கால முதல்வர் said...
கடவுளை முதன் முதலில் கண்டு பிடித்தது யார்?

3:14 AM, November 13, 2008
//

இதற்கு விடை காப்புரிமையாக அந்தந்த மதங்களுக்குத்தான் சொந்தம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுவரை உலகெங்கிலும், பலவகைக் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒரு கொள்கை பரிணாமக் கொள்கை.
அதனால், விவாத அவசரத்தில் முடிவெடுத்துவிடவேண்டாம்.

நன்றி.//

கையேடு,

நான் பரிணாமம் என்றால் புல்லாகி பூண்டாகி...குரங்காகி...மனிதானகி என்று சொல்வதைத் தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதே பொருளில் கிருஷ்ணனின் தசவாதாரத்துக்கு நண்பர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது தசவதாரத்தின் ஒவ்வொரு அவதாரமும் பரிணாம அறிவியலாம். (எல்லா மதங்களுமே அறிவியலால் தம்மை உண்மையான மதம் என்று நிரூபிக்க முயல்கின்றன)

நீங்கள் பரிணாம் என்றால் என்ன வென்று எழுதுங்கள், தெரிந்து கொள்கிறேன்

அரபுத்தமிழன் சொன்னது…

//நல்லவையும் தீயவையும் கலந்ததே உலகம்.//
ஆக கெட்டவையும் அல்லாவிடமிருந்துதான் என்று கொள்ளட்டுமா? - தருமி சார்//

தருமி சார்,

ஒவ்வொரு டைரக்டரும் தமது படத்தில்
'வில்லன்' கேரக்டரை வைத்திருப்பார்கள். அதுபோல்
சாத்தானுக்கு சந்தர்ப்பம் கொடுத்த இறைவன் கையில்
சாட்டையையும் வைத்திருக்கிறான்.
சமயம் வரும் போது சகலத்திற்கும் பதில் கிடைக்கும்.

இன்பம்/துன்பம், இறப்பு/பிறப்பு, இரவு/பகல்,
சுவர்க்கம்/நரகம் என எல்லாவற்றையும் இரட்டையாகப்
படைத்த இறைவன் நல்ல சக்தி / தீய சக்தியைப் படைத்து
தனது கற்பனைப் படி நடாத்துகிறான்.

கதா பாத்திரங்களை நம்பி ஏமாந்து போகாமல் டைரக்டரான
இறைவனின் திறமைகளை உணர்ந்து, அவனைப் புகழ்ந்து,
அவனது எண்ணத்தைப் புரிந்து வாழ்பவர்களுக்கே
'சுவனம்' என்னும் 'விருது'.

அவனை நம்புபவர்களும் சரி நம்பாதவர்களும் சரி,
CLIMAX வரை பொறுத்துக் கொள்ளவும்.

Iyappan Krishnan சொன்னது…

முடிவிலா தொடர் தர்கத்தின் மற்றோர் இழையை இங்கே தொடர்ந்திருக்கிறோம்.
***
மதம் சொல்வது "மட்டுமே" சரி என்று வாதிடும் எவரும் பகுத்தறிவின் வழியில் இருந்து விலகி விடுகிறார்கள். அதே போலவே " அறிவியல் " சொன்னது எல்லாமே சரி தான் என்பர்களுக்கும் மேல் சொன்னது பொருந்தும்.

***

கல்வெட்டு சொன்னது போல பகுத்தறிவு என்பது //.........அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற விசயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை மேலும் ஆராய்வதே பகுத்தறிவு. கப்பல் பயணைத்தில் கிடைத்த அனுபவ அறிவு பாலைவனப் பய்ணத்திற்கு அப்படியே பயன் படாது.//

இதை அப்படியே வழிமொழிகிறேன்.
**
வெறும் கேள்விகள் மட்டும் தான் கேட்பேன், நீ சொல்லும் பதிலை ஏற்க மாட்டேன் என்பது தான் தற்போதைய பகுத்தறிவாக மாறியுள்ளது.

கடவுளைக் காண வழியென்று கூறுவதை முயற்சித்து பார்க்காமல் அவை வெற்று வேட்டு என்றால் கடவுள் என்பதே வெற்று வேட்டாகிப் போகும். அதுவே பகுத்தறிவென்றாகிப் போகும்.
***
அன்று முறையான தியானப் பயிற்சி இருந்தால் வானத்திலும் பறக்கலாம் என்பது வேடிக்கை. இன்று வெளிநாட்டவர் அதை செய்து காட்டும் போது அது நமக்கு ஆச்சரியம். அப்போது அறிவியல் சொன்னது "இது நடவாத காரியம்" இன்று "ஆராய வேண்டும்" ( லின்க் கைவசம் இல்லை. ). விவேகானந்தர் இதை முறையாக செய்து காண்பித்தார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
இன்று நீ பறந்து பார்க்க வேண்டுமானால் அத்தனை கடுமையானப் பயிற்சித் தேவை. அது இல்லாமல் இரண்டு நாள் உற்காந்து விட்டு பறக்க இயலவில்லை என்பது பகுத்தறிவின் தாக்கம்.
***

நாம் உறுதியாக நடக்கும் என்று நம்பிய ஒன்று நடக்காத வரை நடக்காது என்று நம்பிய ஒன்று நடக்கும் வரை, அதற்கான " ஏன் "னிற்கு பதில் கிடைக்காத வரை, விடையறியா பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காத வரையிலும்

கடவுள் என்ற ஒன்றை நம்பித் தொலைக்கத் தான் வேண்டியிருக்கிறது கேள்வி மட்டும் கேட்கும் பகுத்தறிவு மனதில் இருந்தும்.!!

குரங்கு சொன்னது…

உஸ்ஸ்... அப்பாடா...

எனக்கும் இதே சிந்தனைதான் கோவி.

நானும் மதம் மறுப்பாள‌ன் மட்டுமே... கடவுள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எங்கே நீங்களும் பகுத்தறிவுங்கிற பேரில் இறை மறுப்பாளராக இருபப்பீங்களேன்னு நினச்சேன். எல்லாம் அவன் செயல் என்று நினைத்தால் தவறுதான் ஏற்படும்.

பிறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்கை நம்ம கையிலே...

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அ.இப்னுஜுபைர் said...

தருமி சார்,

ஒவ்வொரு டைரக்டரும் தமது படத்தில்
'வில்லன்' கேரக்டரை வைத்திருப்பார்கள். அதுபோல்
சாத்தானுக்கு சந்தர்ப்பம் கொடுத்த இறைவன் கையில்
சாட்டையையும் வைத்திருக்கிறான்.
சமயம் வரும் போது சகலத்திற்கும் பதில் கிடைக்கும்.//

சாத்தான் என்பது ஒரு உருவகம் தான் என்றே நினைக்கிறேன். இந்து மதத்தில் அரக்கன், ராட்சிதன், அசுரன் என்றெல்லாம் கடவுளுக்கு எதிரான சக்தியைச் சொல்லுவார்கள். அப்படி யாரும் இருந்ததாக ஆதாரம் இல்லை.

தீய மனிதனைவிட ஒரு சாத்தான் இருக்கவோ, இவ்வளவு கொடுமையாக இருக்கவே முடியாது. சாத்தானோ, அசுரனோ எந்த கெட்ட சக்திகளும் சில கீழான மனிதர்களைப் போல் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் பாலியல் வன்முறை செய்தது கிடையாது.

மனிதர்கள் தன்னிச்சையாக வளர்த்துக் கொள்ளும் தீய குணங்களே அசுரர்களாகவும், சாத்தானாகவும் சொல்லப்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன்.

//இன்பம்/துன்பம், இறப்பு/பிறப்பு, இரவு/பகல்,
சுவர்க்கம்/நரகம் என எல்லாவற்றையும் இரட்டையாகப்
படைத்த இறைவன் நல்ல சக்தி / தீய சக்தியைப் படைத்து
தனது கற்பனைப் படி நடாத்துகிறான்.//

இன்ப துன்பம் நல்லது கெட்டது என்று நினைத்துப் பார்ப்பதெல்லாம் நம் மனது தான். நமக்கு இரவு கொடுமையாக தெரிந்தாலும் சில விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரவுதான் பகலே, அப்போதுதான் அவை இரை தேடவே செல்லும். பொதுவாக நமக்கு ஏற்பில்லாத ஒன்றைத்தான் கெட்டது என்கிறோம், பாலியல் தொழில் செய்பவர்களில் 90 விழுக்காடு வலுக்கட்டாயமாக அதைச் செய்ய வைக்கப்பட்டவர்கள், அவர்கள் அதிலிருந்து மீளாவே முடியாத சிறை வாழ்க்கை நிலையில் அவர்களை கெட்டவர்கள் என்று சொல்லுவீர்களா ?

//கதா பாத்திரங்களை நம்பி ஏமாந்து போகாமல் டைரக்டரான
இறைவனின் திறமைகளை உணர்ந்து, அவனைப் புகழ்ந்து,
அவனது எண்ணத்தைப் புரிந்து வாழ்பவர்களுக்கே
'சுவனம்' என்னும் 'விருது'.//

இறைவனைப் புகழவேண்டும் என்பதோ, அவன் புகழ்ச்சிக்கு ஆசைப்படுபவனாகவோ சொல்வது இறைக்கு எந்த பெருமையையும் சேர்க்காது, இறைவனை நம்புபவர்கள் இறைவனின் இருப்பை தங்கள் செயல் மூலம் பிறர் அறியும் வண்ணம் செய்ய வேண்டும், மற்றபடி இறைவனின் பெயரை வீன்பெருமைக்காக பயன்படுத்துபவர்களை இறைவனும் அறிந்திருப்பான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா ?

//அவனை நம்புபவர்களும் சரி நம்பாதவர்களும் சரி,
CLIMAX வரை பொறுத்துக் கொள்ளவும்.//

நம்புபவர்களைவிட நம்புபவர்களாக நடிப்பவர்களுக்கு நம்பாதவர்களைவிட கூடுதலாகவே Anti-Climax ஆகாமல் இருந்தால் சரி.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு said...
.........அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற
//

கல்வெட்டு ஐயா,

உங்கள் பின்னூட்டங்களை மறுத்து மறுமொழி போடும் அளவுக்கு எதுவும் எழுத மாட்டீர்களா ?
:)

Unknown சொன்னது…

கல்வெட்டு ஐயா.

//'.' டன் (முற்றுப் புள்ளியுடன் ) நிற்காமல் இ அடுத்த தலைமுறையும் தொடர்ந்து சிந்திக்கும் வண்ணம் 'இ' வைப்பது. உதாரணமாக இதுதான் இறுதி இறை வேதம் அல்லது இறுதி அவதாரம் அல்லது தூதர் என்று சொன்னால் அங்கே '.' வந்து விடுகிறது.//
இறை நம்பிக்கை அறிவியலோடு சமப்படுத்தக் கூடியதல்ல. அது மனித அறிவியலை விடவும் பல கோடி மடங்கு உயர்ந்தது. மனித அறிவியலில் trial & error உள்ளது. இறை அறிவு, அறிவியலில் இது வரை அறிந்ததுடன் இனி வருவதையும் அறிந்த அறிவு.
நமக்குக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி, முன் முடிவுகள் இல்லாமல், அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. தவறுகள் சந்தேகங்கள் ஏற்படுகின்றதா என்ற தொடர்ந்த தேடுதல்தான் தேவை. அவ்வாறு தோன்றி விட்டால் அடுத்த சரியானது எது சிந்திக்க வேண்டும். தோன்றவில்லையாயின் சரியானதில் நிலைத்திருப்பதல்லவா சரி.

//என்னளவில் , மதம்/கடவுள் என்பது என்பது ஒரு சாதாரண பொழுது போக்குச்சாதனம். அது ஒரு குழு சார்ந்த entertainment அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.அதனை ஒட்டி கொண்டாடப்படும் விழாக்கள் அதுசார்ந்த கூட்டத்தை குஷிப்படுத்துகிறது. ...//
உங்களளவில் சரிதான். எதையும் கூடுதலாக அறிய முயற்சிக்காமல், இறை நம்பிக்கை என்பதே வெறுக்கப்பட்டதாய் ஒதுக்கியதன் விளைவு.

//ஒருவர் தன்னை மதப்பற்றாளராக அடையாளம் காண்பிக்கும்போது ... ... ... அதுவே சாதிக்கும்.....//
புதியதாக ஏதும் அறியும் முயற்சியை விட சாதிக்கத் துடிக்கும் மனோபாவம்.

//இவர்கள் நம்பிக்கையாளர்கள். ... ... ...
விவாதிப்பது /உரையாடுவது நேர விரயம்.//
//குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை ... ... ...
விவாதிப்பதால் ஒரு பயனும் இல்லை.//
உண்மையாய் தோன்றுமிடத்து ஏற்போம். இல்லாவிட்டால் விலகுவோம் என்பதே சரியான மனோபாவமாய் இருக்க முடியும்.

//கேள்வி எழுப்புவது அவர்களையே அசைத்துவிடும் என்பதால், அப்படியே இருக்கவே விரும்புகிறார்கள்.//
நீங்கள் கேள்வி கேளுங்கள். எங்கே கேள்விகள் எழுகிறதோ அதுவே விளங்க வேண்டும் என்ற அவா. நான் எழுத்தில்தான் கேட்பேன். பேச்சில் கேட்க மாட்டேன் என்பதெல்லாம் விதண்டாவாதம்.

//கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல. ... ... ... கட்சிகளின் தொண்டர்களும், எழுத்தாளர்களின் வாசகர்களும்.......//
இறை நம்பிக்கையை இரசிகத் தன்மை என்பது மலினப்படுத்தும் முயற்சி. தானறிந்த மதத்தை தவிர மற்றவற்றை அறிய ஆவலே இல்லாமல், தானறிந்ததைப் போன்றெ அதுவுமிருக்கும் என்ற தான்தோன்றி முடிவின் அடையாளம்.

//மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்//
எதையும் அறிய முயற்சிக்காமல் அதுவும் அப்படித்தான் என்ற முடிவாளர்களின் கோர்வையhன நாற்றம்.

கல்வெட்டு சொன்னது…

சுல்தான் நன்றி!

என் தாயும் தந்தையும் சிறந்தவர்கள் கருணையானவர்கள் என்று நினைக்கும் அதே நேரத்தில் , அடுத்தவர்களின் பெற்றோர்களும் அப்படி இருக்கலாம் ஏன் அதற்கு மேலும் இருக்கலாம் என்று என்னால் நினைக்க முடியும்.

உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் பின்பற்றும் அல்லது நீங்கள் நம்பும் ஒரு கடவுள் அடையாளம் அல்லது இறைத்தூதரைவிட ஒரு வேறு ஒரு நல்லவரோ அல்லது அதற்கு இணையாக வேறு யாரும் இருக்கக்கூடும் என்று உங்களால் நம்பமுடிந்தால் ....

நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் கவலை இல்லை. அப்படி இல்லாவிட்டால் நீங்கள்தான் மற்ற மதங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

****

எல்லா மதங்களையும் அறியச் சொல்லும் உங்களின் பரிந்துரைக்கு நன்றி.

மதங்கள் எனக்குத் தேவை இல்லை.

மிகச் சாதாரண மனிதப் பண்புகள் என்னை மகிழ்ச்சியாகவே வைத்துள்ளது. சுவனம்/சொர்க்கம்/பாவம்/புண்ணியம் போன்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னால் யாரையும் நேசிக்க முடியும்.

இந்து/முஸ்லீம்/கிறித்துவன்/... என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் மனிதனாக ம‌ட்டுமே பார்க்க முடியும் எந்த மனத்தடையும் இல்லாமல். இவையே எனக்குப் போதும் என்பதால் எந்த பகவானிடமும் போவது தேவை இல்லாத ஒன்று.

சோமாலியால் துன்பப்படும் ஒரு ஜீவனின் படத்தைப் பார்த்தால் அய்யோ எப்படி உதவுவது என்றுதான் மனது துடிக்குமே தவிர எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒன்றும் நட்க்காது என்று சில புத்தகங்களில் இருந்து சில வரிகளைச் சொல்லிவிட்டு நகர முடியாது என்னால்.

//இறை நம்பிக்கை அறிவியலோடு சமப்படுத்தக் கூடியதல்ல.//

கோவி அறிவியலை மதம் என்ற சாக்கடையுடன் (என்னளவில் எல்லா மதங்களும்) ஒப்பிட்டதால் நான் அப்படி இல்லை என்று சொல்லவே சில கருத்துக்களை பதிந்தேன்.

நீங்களே இறை நம்பிக்கை அறிவியலோடு சமப்படுத்தக் கூடியதல்ல என்று சொன்ன பின்னால் உங்களிடம் உரையாட இந்த இழையில் ஒன்றும் இல்லை.

இறை நம்பிக்கையும் அறிவியலும் வேறு என்றே நான் சொல்ல விழைவது.

வருண் சொன்னது…

****கோவி அறிவியலை மதம் என்ற சாக்கடையுடன் (என்னளவில் எல்லா மதங்களும்) ஒப்பிட்டதால் நான் அப்படி இல்லை என்று சொல்லவே சில கருத்துக்களை பதிந்தேன்.

நீங்களே இறை நம்பிக்கை அறிவியலோடு சமப்படுத்தக் கூடியதல்ல என்று சொன்ன பின்னால் உங்களிடம் உரையாட இந்த இழையில் ஒன்றும் இல்லை.

இறை நம்பிக்கையும் அறிவியலும் வேறு என்றே நான் சொல்ல விழைவது.****

கல்வெட்டு!

அறிவியலை மதம் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. அதை மதத்துடன் ஒப்பிடாமல் என்ன வேண்டுமானால் செய்துகொள்ளட்டும்!

இதில் சுல்த்தான் மற்றும் உங்களுடன் ஒத்துப்போகிறேன்!

மதத்தை சாக்கடை என்று நாம் சொல்ல வேண்டியதில்லை! மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது அவனை வழிப்படுத்த மனிதானாக உருவாக்கிய ஒன்றுதான் மதமும் கடவுளும்! நாளடைவில் விஞ்ஞான வளர்ச்சியில், இவைகள் இரண்டையும் புறக்கணித்து அழகாக வாழ்வது எளிது!

அறிவியலை மதம் என்று கோவி கண்ணன் சொல்வது அவர் அறியாமை!

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் பின்பற்றும் அல்லது நீங்கள் நம்பும் ஒரு கடவுள் அடையாளம் அல்லது இறைத்தூதரைவிட ஒரு வேறு ஒரு நல்லவரோ அல்லது அதற்கு இணையாக வேறு யாரும் இருக்கக்கூடும் என்று உங்களால் நம்பமுடிந்தால் ....//

கல்வெட்டு சார், குரான் தவிர்த்து பிறவற்றை சிந்திக்க குரான் அனுமதி மறுக்கும் போது அதை பின்பற்றுவர்களை நீங்கள் சிந்திக்கச் சொல்வதும் தவறு. இங்கு மதம் சார்பில் பேசுபவர்கள் எந்த மதத்துக்காரர்களும் இறைவனை விட இறைவன் பெயரும், மதக்கொள்கையும் தான் உயர்ந்தது என்றே நினைப்பர்.

பகவத்கீதையும், இந்துக்கடவுள் மட்டும் உயர்ந்தது என்று நினைப்பதால் தானே இந்துமதம் தீவிரவாதமதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. எனவே ஒருமதத்தினரை மட்டும் தான் அடிப்படைவாதிகள் என்று சொன்னால் அதை நான் ஏற்பது இல்லை.

எல்லா மதத்தினரும் தீர்ப்பு நாள் குறித்தே பேசுகிறார்கள். எனக்கும் கூட நம்பிக்கை இருக்கிறது அந்த நாளில் மதங்கள் அனைத்துமே கண்டிப்பாக அழியும் நல்லவர்கள் இறைமறுப்பாளராக இருந்தாலும் அவர்கள் போற்றப்படுவார்கள். எனென்றால் நல்லவன் என்ற அளவுகோளுக்கும் இறை நம்பிக்கைக்கும் தொடர்பு இல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவியலை மதம் என்று கோவி கண்ணன் சொல்வது அவர் அறியாமை!//

வருண் எது அறியாமை,

இன்றைய தேவை வற்றாமல் கிடைக்கக் கூடிய நீர்தான், உலகில் பலநாடுகளில் தண்ணீர் கிடைக்காததாலேயே பொருளாதாரம் சீர்குலைகிறது. இதையெல்லாம் சிந்திக்காது பெரும் பொருட் செலவில் செவ்வாயில் நீர் இருப்பதை அறிவியல் வழி அறிந்து என்ன செய்யப் போகிறோம், செவ்வாய்க்கும் பூமிக்கு குழாய் வழி இணைப்புக் கொடுத்து தண்ணீர் பெற முடியுமா ?

அணுஆயுத உற்பத்தி, மக்களை கூட்டம் கூட்டமாக கொள்ளக் கூடிய விசவாயுக்கள், உயிர்கொள்ளி கிரிமிகள் இவை கூட அறிவியலால் கிடைத்தவைகள், இதுபோன்ற மனித குலத்திற்கு பயனளிக்காத, மனிதனை அழிக்கக் கூடிய ஆராய்ச்சிகளை நிறுத்தச் சொல்லி அறிவியல் (மத) நம்பிக்கையாளர்கள் என்றாவாது வேண்டுகோள் வைத்திருக்கிறார்களா ?

மதங்களால் அழிவு ஏற்படுவது போலவே உலகில் மற்றொரு பயமுறுத்தலும் நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கைக் இன்மைக்கு காரணமாக அமைவது இந்த அணு ஆயுதங்கள்தான். இவற்றின் ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்த தியரிகளை கொளுத்தி அழிக்க எந்த அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்வார்கள், மதம் வெறும் நம்பிக்கைதான், ஆனால் அறிவியல் நம்பிக்கையையும் தாண்டி உண்மை என்பதால் அதனை வழிபடுபவர்களும் மதவாதிகள் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஓகே தான், ஆனால் அறிவியலால் எதையெல்லாம் மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும் என்ற பொறுப்பும் இருக்க வேண்டும்.

உலகத்தில் மதவாதிகளால் போர் ஏற்பட்டால் அதற்கு உதவப் போவது அறிவியல் மதத்தின் கருவிகள் தான்.

கல்வெட்டு சொன்னது…

வருண்/கோவி/தருமி/சுல்தான்/மற்றும் அனைவருக்கும்...

இங்கே கடவுள்,மதம்,அறிவியல் என்ற மூன்று வெவ்வேறு சமாச்சாரங்களைப் பேசுகிறோம். ஒன்றுக்கு ஒன்று தொடர்புகள் உண்டு.

எதையும் அப்படியே நம்பிவிட்டு பேச வருவது விவாதம். தான் நம்பியதை நிறுவ நடக்கும் முயற்சி.

தெரிந்ததை சொல்லிவைப்பது மற்றும் பிறரின் உரையையும் கேட்பது உரையாடல்.

நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை இங்கே.

தெரிந்ததை அதாவது தெரிந்து கொண்டதாக இன்று நான் நினைப்பதை மட்டுமே சொல்லிவைக்கிறேன். நாளையே இது மாறலாம் யார் கண்டார்கள்?



***


அறிவியல் என்பது எந்தக் கருமாந்திரத்தையும் கேள்வி கேட்பதும், மேலும் அறிய முயற்சி செய்வதும், இதுதான்‍‍-இம்புட்டுத்தான் என்று சொன்னதை நம்பாமல், மேலும் அறிய ஆவலாய், சோதனைகள் செய்வதும், இன்றைக்கு ஒரு விடை என்று தெரிந்து ஆவணப்படுத்தியதையே நாளை மறு ஆய்வு செய்வதுமான...ஒரு தொடர் நிகழ்வு.

**

எதற்காக பீயையெல்லம் கிண்டி கிளறி சோதிக்கிறார்கள். நோயைக் குணப்படுத்தும் முயற்சியில் பீயும், இரத்தமும் ஒரே சோதனைச் சாலையிலேயே சோதனை செய்யப்படும். அறிவியலில் புனிதம் என்று ஏதும் கிடையாது.

அறிவியல் ஒரு புனிதம்/மதம் என்று சொன்னால் ஓ அப்படியா ? அதுவும் ஏன் என்று ஆராயப்படும் அதுதான் அறிவியலின் சிறப்பு. அறிவியல் ஒரு குப்பை என்று சொன்னால், ஓ அப்படியா அதையும்தான் ஆராய்வோமே என்று அறிவியலே கிளம்பும்.

நிச்சயம் அறிவியல் மதம் அல்ல. நேற்றுவரை புளூட்ட்டோவை கோள் என்று வகைப்படுத்தியவர்கள் இன்று அதை குள்ள கோள் என்று கடாசிவிட்டார்கள். மதத்தில் அப்படி நடக்கச் சாத்தியம் இல்லை.

**

கடவுள் என்ற ஒரு கற்பிதமே அறிவியலின் வழியாக ஏன்/ எப்படி/எங்கே.. என்று கேள்வி கேட்ட ஒரு தேடலில் விளைவே.

ஆன்மீகத் தேடலும் ஒரு அறிவியல் முயற்சி என்று வேண்டுமானல் சொல்லலாம் ..அந்தத் தேடல் இன்னும், என்றும் தொடர வழியிருக்கும்போது.

அதையே அம்புடுத்தேன் நான் சொன்னதே /சொல்வதே ஆன்மீகம்/கடவுள் என்று நின்றுவிடும்போது அது மதமாக மாறிவிடுகிறது.

மனிதனின் ஆறாவது அறிவே சிந்திக்கத்தான் அப்படியே கற்பிதங்களை நம்ப அல்ல.

வருண் சொன்னது…

***உலகத்தில் மதவாதிகளால் போர் ஏற்பட்டால் அதற்கு உதவப் போவது அறிவியல் மதத்தின் கருவிகள் தான்.***

கோவி என்ன சொல்றார்னா,

மதவாதிகள் அறிவியலில் இருந்து வந்த கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அதனால, அறிவியல் மதவாதிகளை கெட்ட செயல்கள் செய்ய ஊக்குவிக்குது. அதனால, அறிவியலும் ஒரு மதம்தான்! இப்படித்தானே?

உங்க தர்க்க வாதம் எனக்குப்புரியலை, கோவி! :(

கோவி.கண்ணன் சொன்னது…

//எதற்காக பீயையெல்லம் கிண்டி கிளறி சோதிக்கிறார்கள். நோயைக் குணப்படுத்தும் முயற்சியில் பீயும், இரத்தமும் ஒரே சோதனைச் சாலையிலேயே சோதனை செய்யப்படும். அறிவியலில் புனிதம் என்று ஏதும் கிடையாது.
//

கல்வெட்டு சார்,

ரொம்ப டென்சனாக இருக்கிங்களா ?

அறிவியல் புனிதம் இல்லை என்று ஒப்புக் கொண்டாலே போதும். அதைத்தான் சொல்லிக் கொண்டுவருகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகத்துக்கே ஆபத்து என்று தெரிந்துவிட்டால், அதனை அழிப்பதற்கு உலகளாவிய குரல்கல் எழும்ப வேண்டும், அவற்றை அழிக்கவும் முன்வரவேண்டும். கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து அழிப்பதா என்று கேள்வி எழுந்தாலே அதுவும் அறிவு செண்டிமெண்ட் ஆகிவிடும்.

கல்வெட்டு சொன்னது…

//ரொம்ப டென்சனாக இருக்கிங்களா ?//

இல்லை கோவி ... நிச்சயம் இல்லை..எதுக்கு டென்சன் ?

(நீங்க என்ன சாரு சாருன்னு சொல்றது நக்கல்னா ஒன்னியும் பிரச்சனை இல்லை. மருவாதின்னு நினைச்சு சொன்னீங்கன்னா ..நிச்சயம் டென்சன்தான் சார் வேணாமே கோவி)

பீ உதாரணததை கட்டம் கட்டி இருக்கிறீர்கள் அதைச் சொன்னதலா? ஆய்வுக்கூடத்தில் ஏதும் புனிதம் இல்லை என்று சொல்லவே அது. அப்புறம் நாயர் ஏன் சந்திராயனுக்குக்காக சாமியிடம் வேண்டினார் என்று கேட்கக்கூடாது :‍) சந்திராயன் போய் சிவனின் தலையில் இருக்கும் நிலாவைக் குத்திடும் என்று பயந்துபோய் ஆய்வு செய்வதைக் கைவிடாதவரை நஃசடம் யாருக்கும் இல்லை. இலாபம் ஏழுமலையானுக்குத்தான். :-‍))

**

அறிவியல் அறம் பற்றி கையேடு தொட்டுச் சென்றுள்ளார் என்று நினைக்கிறேன்.

பயிரை பாதுகாக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்து பூச்சிக்கொல்லி. பூச்சிகள் ஆராய்ச்சி செய்து மனிதக் கொல்லி கண்டுபிடிக்காதவரைக்கும் மனிதனுக்கு எல்லாம் வெற்றிதான் சரியா?

**

அறிவியல் கண்டுபிடிப்புகளை எப்படி /எப்போது/ எதற்கு பயன்படுத்துவது எனபது ஒரு பெரிய அரசியல்.

ஃச‌டெம் செல் ஆராய்ச்சி வேண்டுமா? எப்படி/எந்தப் பாதையில் அது செல்ல வேண்டும் என்று அரசியலே தீர்மானிக்கிறது. அதற்காக அறிவியலும் அரசியலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

தொலை நோக்கியை வைத்து எதிர்வீட்டு பெண் ஜட்டி மாட்டுறதக்கூடத்தான் பாக்குறானுக? கில்மா படம் எடுக்க புகைப்படப் பொட்டி பயன்படுது... இப்படிச் சொல்லி இவைகளையும் தடை செய்யுங்கள் என்று சொல்லவா முடியும்?

கோவில்ல மணியடிக்கக்கூட அறிவியல் பயன்படுது. அதற்காக அறிவியல் ஆன்மீகம் என்றா சொல்ல முடியும்?

அறிவியல் அது பாட்டுக்கு குட்டியப்போட்டுக்கிட்டு இருக்கு. அதை எப்படி பயன்படுத்துவது என்று முடிவு செய்வது அரசியல்.

அணு ஆயுதங்களை என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்வது அரசியல்.

**

சொல்றதுக்கு ஒன்னும் இல்லை கோவி. இந்த உரையாடல் எங்கேயோ போகுது. அல்லது நான் தான் தேர இழுத்து தெருவில விட்டுட்டேனா?

நல்லாருங்க சாமிகளா :-))

**

Unknown சொன்னது…

//உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் பின்பற்றும் அல்லது நீங்கள் நம்பும் ஒரு கடவுள் அடையாளம் அல்லது இறைத்தூதரைவிட ஒரு வேறு ஒரு நல்லவரோ அல்லது அதற்கு இணையாக வேறு யாரும் இருக்கக்கூடும் என்று உங்களால் நம்பமுடிந்தால் ....//
ஏன் நம்ப முடியாமல். யூதர்களின் மோஸேவுக்கும் (நபி மூஸா), கிறித்துவர்களின் இயேசுவுக்கும் (நபி ஈஸா), எங்களின் நபி முஹம்மதுக்கும் இடையில் நாங்கள் வேறுபாடு பார்க்காமல் முவருமே நல்லவர்கள், இணையானவர்கள் என்று எங்களால் உறுதியாக நம்ப முடிகிறதே.

//மிகச் சாதாரண மனிதப் பண்புகள் என்னை மகிழ்ச்சியாகவே வைத்துள்ளது. சுவனம்/சொர்க்கம்/பாவம்/புண்ணியம் போன்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னால் யாரையும் நேசிக்க முடியும்.//
இந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் நீங்கள் நேசிப்பதையும் விட கூடுதலாக எம்மாலும் நேசிக்க முடிகிறது. சுவனம்/சொர்க்கம்/பாவம்/புண்ணியம் இவையெல்லாம் இல்லை என்ற நினைப்பில் நீங்கள் பேசுகிறீர்கள். சொல்ல வேண்டியது கடமை என்பதால் நானும் சொல்கிறேன். கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பத்திலுள்ளது.

//சோமாலியால் துன்பப்படும் ஒரு ஜீவனின் படத்தைப் பார்த்தால் அய்யோ எப்படி உதவுவது என்றுதான் மனது துடிக்குமே தவிர//
துன்பப்படும் உயிரைப் பார்த்து அதற்காக துடிப்பதோடு இயன்ற வரை உதவி செய்ய முயற்சிப்போம். முடியாது போனால், குறைந்த அளவு, அந்த உயிர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவாவது செய்வோம்.

//அறிவியலை மதம் என்ற சாக்கடையுடன் (என்னளவில் எல்லா மதங்களும்)//
உங்களுக்கு மதங்கள், இறை நம்பிக்கை தேவையில்லை. அவைகள் பற்றிய அறிவுமில்லை. தெரிந்து கொள்ள ஆர்வமுமில்லை. அப்புறம் எப்படி சாக்கடை? உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லை.

//குரான் தவிர்த்து பிறவற்றை சிந்திக்க குரான் அனுமதி மறுக்கும் போது அதை பின்பற்றுவர்களை நீங்கள் சிந்திக்கச் சொல்வதும் தவறு//

ஜி.கே. பதில் சொன்னதற்கே திரும்ப உள் குத்தா?
திரும்பவும் அதே பதில் உங்களுக்காக.

//நமக்குக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி, முன் முடிவுகள் இல்லாமல், அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. தவறுகள் சந்தேகங்கள் ஏற்படுகின்றதா என்ற தொடர்ந்த தேடுதல்தான் தேவை. அவ்வாறு தோன்றி விட்டால் அடுத்த சரியானது எது சிந்திக்க வேண்டும். தோன்றவில்லையாயின் சரியானதில் நிலைத்திருப்பதல்லவா சரி.//

வருண் சொன்னது…

****அப்புறம் எப்படி சாக்கடை? உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லை.***

அதனால் விளையும் தீமைகளை சொல்கிறார்.

கடவுளை வணங்குவதைவிட்டுவிட்டு பல தீயகாரியங்களையும் செய்பவர்களை என்ன சொல்வது?

அறிவியலை மதம் என்று சொல்வதும் அறிவிலை அவமானப்படுத்துவதுதான்.

வருண் சொன்னது…

***துன்பப்படும் உயிரைப் பார்த்து அதற்காக துடிப்பதோடு இயன்ற வரை உதவி செய்ய முயற்சிப்போம்***

இதற்கு மனிதாபிமானம் உள்ள மனிதனாக இருந்தால் போதும்! கடவுளோ, மதமோ தேவையற்றது!

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மதநம்பிக்கை உள்ளவர்கள்தான் மனிதன் என்பதுபோல் இருக்கிறது!

கடவுள் மத நம்பிக்கை இல்லாமல் அதை நம்புகிறவர்களைவிட உயர்ந்த மனிதனாக வாழமுடியும் என்பதை மனதில் கொள்ளவும்!

தருமி சொன்னது…

சுல்தான்,

//அடுத்த சரியானது எது சிந்திக்க வேண்டும். தோன்றவில்லையாயின் சரியானதில் நிலைத்திருப்பதல்லவா சரி.//

ஏற்கெனவே சொல்லவா வேண்டாவா என்று நினைத்திருந்தேன்;மீண்டும் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் சொல்லியே விடுகிறேன்.

நீங்கள் சொல்லியிருப்பது புரியவில்லையே. அடுத்த சரியானது எது என்று சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்துப் பதில் கிடைக்காவிட்டால் கையிலிருப்பதையே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று தானே சொல்கிறீர்கள்? சரியாகச் சொல்லியிருக்கிறேனா?

கல்வெட்டு சொன்னது…

//உங்களுக்கு மதங்கள், இறை நம்பிக்கை தேவையில்லை. அவைகள் பற்றிய அறிவுமில்லை. தெரிந்து கொள்ள ஆர்வமுமில்லை. அப்புறம் எப்படி சாக்கடை? உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லை.//

மிக்க நன்றி சுல்தான் !


எனக்கு என்ன தெரியும், எதை படித்தேன் ..என்று சொல்லி நான் இதை விவாதமாக ஆக்க விரும்பவில்லை.

***

உங்களைப் பொறுத்த வரையில்
"மதங்கள் அனைத்தும் சந்தனம்தான்" வாழ்க மதங்கள்.

என்னுடை குறைவான,அதிகம் படிக்காத, அறிய முயற்சிக்காத, தான் தோன்றித்தனமான, அதிகப்படியான ... எல்லாவற்றின் படியும் மதம் சாக்கடைதான்.

**

சாக்கடை என்று சொல்வது கழிவு, அகற்றப்பட வேண்டியது, கிருமிகள் வளர வாய்ப்பான இடம் என்ற அர்தத்தில் சொன்னேன்.


சந்தனம் - சாக்கடை .. இதில் எந்த ஒன்றையும் நான் புனிதமாகவோ மற்றதை கேவலமாகவோ நினைக்கவில்லை.

அணிந்து கொள்ள வேண்டியது சந்தனம் என்றால், அகற்றப்படவேண்டியது சாக்கடை என்ற பொருளில் சொன்னேன். (அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வது போல)

**

மதத்தின் தேவை ஒருவருக்கு சந்தனம் போலவும் சிலருக்கு சாக்கடை போலவும் இருக்கலாம்.

இருந்துவிட்டுப்போவோமே கருத்து வேறுபாடுகளுடன்?

மகிழ்வாய் இருங்கள்.

ப்ரியங்களுடன்

கையேடு சொன்னது…

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்
http://kaiyedu.blogspot.com/2008/11/blog-post_13.html

பரிணாமம் பற்றிய உங்கள் கேள்விக்காக.
நன்றி.

Unknown சொன்னது…

//கடவுளை வணங்குவதை விட்டுவிட்டு பல தீய காரியங்களையும் செய்பவர்களை என்ன சொல்வது?//
தவறானவர்களென்று.
ஒரு நம்பிக்கையில் தவறென்றால் அது சம்பந்தமான நூல்களை, அதன் ஆதாரங்களைச் சொல்லி மறுக்கலாம்.
எந்த நம்பிக்கையுள்ளவர்களிடமும், இறை நம்பிக்கை அற்றவர்களிடமும் தவறு நிகழாமலில்லை.
எனவே எவர் தீய காரியங்கள் செய்கிறார்களோ அவர்களே அவர்கள் செய்யும் காரியங்களுக்குப் பொறுப்பாக்கப் பட வேண்டும்.

//இதற்கு மனிதாபிமானம் உள்ள மனிதனாக இருந்தால் போதும்! கடவுளோ, மதமோ தேவையற்றது!
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மதநம்பிக்கை உள்ளவர்கள்தான் மனிதன் என்பதுபோல் இருக்கிறது!//
இல்லை. நல்ல மனிதர்களில் இறை நம்பிக்கையும் சேர்ந்து விடும்போது மனிதாபினம் கூடுதல் பெறுமானம் அடைகிறது. அந்த உதவியினால், தன் இறப்புக்கு பின்னுள்ள வாழ்வு நன்றாயிருக்கும் என்ற சுயநலமும் சேர்நது விடும்போது கூடுதலாக உதவ முடியும்.

//கடவுள் மத நம்பிக்கை இல்லாமல் அதை நம்புகிறவர்களைவிட உயர்ந்த மனிதனாக வாழமுடியும் என்பதை மனதில் கொள்ளவும்!//
அந்த உயர்நத மனிதனை இறை நம்பிக்கை மேலும் மனிதரில் புனிதராக்கும்.

//சரியாகச் சொல்லியிருக்கிறேனா?//
பலவற்றை ஆராய்ந்து ஒன்றில் தெளிகிறோம். அதிலே நிலைக்கிறோம். சிந்திக்கும் மனது, நாமிருப்பது சரியானதுதானா என்று அடிக்கடி பார்த்துக் கொள்ளும். தேடலில் இருக்கும். புதுப்புது கேள்விகள் உருவாகும். நம் கேள்விகளுக்கு சரியான, தெளிவான பதில் கிடைத்து விடும்போது அடுத்த ஒன்றை அடைய அவசியமில்லையல்லவா?

Unknown சொன்னது…

//எனக்கு என்ன தெரியும், எதை படித்தேன் ..என்று சொல்லி நான் இதை விவாதமாக ஆக்க விரும்பவில்லை.//
தனிப்பட்ட முறையில் உங்களை குறை சொல்வது எனது நோக்கமல்ல நண்பரே. நீங்களும் அறிய முயற்சித்தால் உங்கள் மறுமை வாழ்வும் சிறக்குமே என்ற ஆதங்கம்தான்.

//சந்தனம் - சாக்கடை .. இதில் எந்த ஒன்றையும் நான் புனிதமாகவோ மற்றதை கேவலமாகவோ நினைக்கவில்லை.//
உங்களைப்போல் என்னால் சந்தனத்தையும் சாக்கடையையும் ஒன்று போல நோக்க இயலவில்லை.

வருண் சொன்னது…

****//கடவுள் மத நம்பிக்கை இல்லாமல் அதை நம்புகிறவர்களைவிட உயர்ந்த மனிதனாக வாழமுடியும் என்பதை மனதில் கொள்ளவும்!//

அந்த உயர்நத மனிதனை இறை நம்பிக்கை மேலும் மனிதரில் புனிதராக்கும்.****

நான் இந்தக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை!

கடவுள் நம்பிக்கை ஒரு மனிதனை புனிதமாக்க தேவை இல்லாதது!

மற்றபடி உங்கள் நம்பிக்கை உங்கள். என் நம்பிக்கை எனக்கு!

நன்றி! :-)

வருண் சொன்னது…

***உங்களைப்போல் என்னால் சந்தனத்தையும் சாக்கடையையும் ஒன்று போல நோக்க இயலவில்லை.**

என்னைப்பொறுத்தமட்டில்.

சந்தனம் = அறிவியல்

அறிவியலை மதம் என்று சொல்வது சந்தனத்தை சாக்கடையில் கலப்பதுபோல!

குடுகுடுப்பை சொன்னது…

வருண் said...

***உங்களைப்போல் என்னால் சந்தனத்தையும் சாக்கடையையும் ஒன்று போல நோக்க இயலவில்லை.**

என்னைப்பொறுத்தமட்டில்.

சந்தனம் = அறிவியல்

அறிவியலை மதம் என்று சொல்வது சந்தனத்தை சாக்கடையில் கலப்பதுபோல!//

மனிதன் கண்டுபிடித்த
மதம்,கடவுள் எல்லாமே அறிவியல்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பீ உதாரணததை கட்டம் கட்டி இருக்கிறீர்கள் அதைச் சொன்னதலா? ஆய்வுக்கூடத்தில் ஏதும் புனிதம் இல்லை என்று சொல்லவே அது. அப்புறம் நாயர் ஏன் சந்திராயனுக்குக்காக சாமியிடம் வேண்டினார் என்று கேட்கக்கூடாது :‍) சந்திராயன் போய் சிவனின் தலையில் இருக்கும் நிலாவைக் குத்திடும் என்று பயந்துபோய் ஆய்வு செய்வதைக் கைவிடாதவரை நஃசடம் யாருக்கும் இல்லை. இலாபம் ஏழுமலையானுக்குத்தான். :-‍))//

கல்வெட்டு அங்கிள் (நீங்க தானே பலூன் மாமா)

சில உதாரணங்களை நேரடியாகச் சொல்வது எல்லா சமூகங்களிலுமே தவிர்க்கப்பட்டு இருக்கிறது. நமக்கு மெய்யாக தெரிவது ஒவ்வொருவரின் வயிற்றுக்குள்ளும் மலம் இருக்கும் என்பதே, நன்கு தெரிந்திருந்தும் நம்மால் கழிவரையில் அமர்ந்து உணவு உண்ண முடியாது. நீங்கள் நேரிடையாக 'பீ' என்றதான் டென்சனாக இருக்கிங்களோன்னு நினைச்சேன் :)
தமிழில் இடக்கரடக்கல் என்பார்கள், அதன் பொருள் வந்தால் அடக்கிக் கொள்வது இல்லை என்று நான் சொல்லத் தேவை இல்லை. :)


இந்த (நிலவின்) பிறையை ஏன் தான் எல்லா மதத்திலும் போட்டு படுத்துறாங்கன்னு எனக்கும் தெரியல. வைரமுத்துக் கூட கையில புடிச்சு பார்த்துட்டாரு :)

அதுபாட்டுக்கு 'சிவனேன்னு' ஒரு துணைக்கோளாக சுற்றிக் கொண்டு இருக்கு.

//சொல்றதுக்கு ஒன்னும் இல்லை கோவி. இந்த உரையாடல் எங்கேயோ போகுது. அல்லது நான் தான் தேர இழுத்து தெருவில விட்டுட்டேனா? //

அப்படித்தான் நானும் நினைக்கிறேன், தருமி ஐயாவும் நினைத்திருப்பார். 'அறிவியல் புனிதமில்லை' என்று சொன்னது தான் தெருவில் நிறுத்தியது செயல் :)

உங்கள் பின்னூட்டம் நல்ல கலகலப்பை ஊட்டியது.

சாக்கடையும் சந்தனமும் ஒன்று என்று தாங்கள் சொல்வது அறிவியல் ரீதியில் சரி. ஏனென்றால் இன்னிக்கு தேதிக்கு எல்லாம் ரீசைக்கிள் தான். கழிவுகள் தானே பயிர்களுக்கும் உரம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களைப்போல் என்னால் சந்தனத்தையும் சாக்கடையையும் ஒன்று போல நோக்க இயலவில்லை.//

சுல்தான் ஐயா,

இங்கே சிங்கையில் NUWATER என்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைச் சொல்லுவாங்க, எதிலிருந்து சுத்திகரிக்கிறார்கள் தெரியுமா ? சிறுநீர். சிங்கையின் குடிநீர் தேவையின் 40 விழுக்காடு NUWATER தான் ஈடுசெய்யப்படுகிறது.

'சிறுநீரைக் குடிக்கிறோம்' என்பதை பலர் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

மாமிசம் என்பது விலங்கின் பிணம் என்று சொன்னால் அறுவெறுப்பாக இருக்கும், ஆனாலும் அது உண்மைதானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை Said...மனிதன் கண்டுபிடித்த
மதம்,கடவுள் எல்லாமே அறிவியல்தான்.//

சூப்பர் !

முதன் முதலில் இயக்கங்களின் காரண காரியங்களை அப்போது இருந்த அறிவி(யலி)ன் படி எழுதிய கோட்பாடுகளே மதம். :)

கல்வெடு வாங்க...பதில் சொல்லுங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்
http://kaiyedu.blogspot.com/2008/11/blog-post_13.html

பரிணாமம் பற்றிய உங்கள் கேள்விக்காக.
நன்றி.
//

கையேடு மிக்க நன்றி, எட்டிப் பார்த்தேன் நீளமாக இருந்தது பொருமையாக படிக்க நினைத்திருக்கிறேன்.

கல்வெட்டு சொன்னது…

//நீங்கள் நேரிடையாக 'பீ' என்றதான் டென்சனாக இருக்கிங்களோன்னு நினைச்சேன் :)//

மலம் என்று சொல்லியிருக்கலாம்தான். சில நேரங்களில் வார்த்தைகளின் கனத்தைக்கூட்ட வேண்டியுள்ளது. மென்மையாக இருக்கவேண்டும் என்று நினைத்து சொல்லப்படுவதால் சில விசயங்கள் தேவையான புரிதலைக் கொடுப்பதில்லை. அதனால்தான் பயன்படுத்தினேன். நீங்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறேன் மென்மையாக சொல்லி இருக்கலாம்தான்.

***

//மதம்,கடவுள் எல்லாமே அறிவியல்தான்//

//// கல்வெடு வாங்க...பதில் சொல்லுங்க ! ////

ஏற்கனவே சொன்னதுதான் கோவி...

‍‍====>கடவுள் என்ற ஒரு கற்பிதமே அறிவியலின் வழியாக ஏன்/ எப்படி/எங்கே.. என்று கேள்வி கேட்ட ஒரு தேடலில் விளைவே.

ஆன்மீகத் தேடலும் ஒரு அறிவியல் முயற்சி என்று வேண்டுமானல் சொல்லலாம் ..அந்தத் தேடல் இன்னும், என்றும் தொடர வழியிருக்கும்போது.

அதையே அம்புடுத்தேன் நான் சொன்னதே /சொல்வதே ஆன்மீகம்/கடவுள் என்று நின்றுவிடும்போது அது மதமாக மாறிவிடுகிறது.

மனிதனின் ஆறாவது அறிவே சிந்திக்கத்தான் அப்படியே கற்பிதங்களை நம்ப அல்ல.
<‍‍====

KARMA சொன்னது…

மிக்க நன்றி தோழர்களே...!!!

அருமையானதொரு உண்மை தேடியலையும் ஒரு பதிவு.

இங்கே எனது ரெண்டணாவை அளிக்கிறேன்.

ஆன்மிகம் (spirituality) என்பது அனைத்தயும் உள்ளடக்கியது.

மதம், மலம் அனைத்துமே ஆன்மிகம்
சந்தனம், சாக்கடை ...
அறிவியல், அவியல், பொரியல், விஞ்ஞானம், மெய்ஞானம், அஞ்ஞானம் மற்றும் நமிதா இடை முதல் தொடை வரையில் அனைத்தயும் உள்ளடக்கியதே ஆன்மிகம்.

இதில் ஒரு மதம் அல்லது ஒரு புத்தகத்தை கொண்டு அனைத்தையும் அடைந்து விட்டதாக நினைப்பது சமுத்திரத்தை தீப்பெட்டி டப்பாவிற்குள் சுருட்டும் சாமர்த்தியம் போன்றது.

ஆன்மிகவாதிகளும், மிகச்சிறந்த மனிதாபிமானிகளும் இந்த மதங்களோ, அவை போதிக்கும் கடவுள்களின் வெளிக்கு அப்பால் இருக்க கண்டிப்பாக சாத்தியமுண்டு.

ஆன்மிகப்பரப்பில் புனிதமென்றோ, அசிங்கமென்றோ ஏதுமில்லை.

SHIT = SHIVA

அறிவியலுக்கும் இது மிகப்பொருந்தும்.

வார்த்தைகளின் கனங்களை அவை தாங்கித்திரிவதில்லை, அவைகளை உணர்வுத்தளங்ளுக்குள் இட்டுச்செல்லும் மனங்களே அந்த சுமைகளைத் தாங்குகின்றன.

கல்வெட்டு, கோவி, கையேடு, தருமி, சுல்தான் மற்றும் வருண் அனைவரின் பங்களிப்பும் மிக அருமை.

வருண் சொன்னது…

****//உங்களைப்போல் என்னால் சந்தனத்தையும் சாக்கடையையும் ஒன்று போல நோக்க இயலவில்லை.//

சுல்தான் ஐயா,

இங்கே சிங்கையில் NUWATER என்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைச் சொல்லுவாங்க, எதிலிருந்து சுத்திகரிக்கிறார்கள் தெரியுமா ? சிறுநீர். சிங்கையின் குடிநீர் தேவையின் 40 விழுக்காடு NUWATER தான் ஈடுசெய்யப்படுகிறது.

'சிறுநீரைக் குடிக்கிறோம்' என்பதை பலர் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

மாமிசம் என்பது விலங்கின் பிணம் என்று சொன்னால் அறுவெறுப்பாக இருக்கும், ஆனாலும் அது உண்மைதானே.****

Mr. Kannan!

You amaze me!!! It is urine bcos it has urea and all the other metabolites and chemiicals come out of your body as solute in water. Once you distil that off, it is just water which has a boiling point 100 C! It is no longer urine!

Nobody is feeling bad about calling meat as "dead". May be you are as you may be proud to be a vegetarian and living with a notion that you are superior!

I am sorry to say, the way you and Mr. Sultan sound is like ONLY BELIEVERS are superior than non-beleivers! And that you guys know better or something becos you believe in religion and your Gods

You guys dont have any right to say that non-believers are inferior and it is really offensive and RUDE!

KARMA சொன்னது…

வருண்,

Urine, Meat, Non-believing பற்றிய உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

//மாமிசம் என்பது விலங்கின் பிணம் என்று சொன்னால் அறுவெறுப்பாக இருக்கும்//

மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு அறுவெறுப்பாகத் தோன்றலாம், இல்லை என்று சொல்வதற்கில்லை.

எனக்கு தெரிந்தவரை கோவி மிக நடு நிலையான பதிவாளர். அவரது முந்தய பதிவுகளை காணுகையில் மதங்களால் (அல்லது any school of thought) மனிதர்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் எழுதிவருகிறார் என்பது எனது புரிதல்.

மற்றபடி Veg, Non-Veg, ஆத்திக/ நாத்திகம் போன்ற கட்டங்களுக்குள் அடையாளப்படுத்திகொள்ள (அதன் மூலம் superior/inferior என்பனவற்றை)விரும்பாதவர் என்றே தோன்றுகிறது.

எப்படி இருந்தாலும் விஷயங்களை பற்றி (objective-ஆக) விவாதிக்கும் போது தனிநபர் குறித்த விமர்சனங்களை சற்று தள்ளிவைத்தல் நலமே.

அன்புடன்,
கர்மா.

வருண் சொன்னது…

கர்மா!

சுல்த்தான் சொல்கிறார்,

இறைநம்பிக்கை ஒரு நல்ல மனிதனை இன்னும் புனிதமாக்கும் என்று!

அதாவது இரண்டு நல்ல மனிதர்கள் இருந்தால். அதாவது சமமான அளவு நல்லவைகள் செய்தாலும், இறைநம்பிக்கை உள்ளவர் இன்னும் புனிதமானவராம்!

இதெப்படி சரியாகும்?

அதுவும் இறைநம்பிக்கை உள்ள ஒருவர் அதைச் சொல்லுகிறார். இங்கேதான் எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது.

இதுவந்து மத கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டமாக சொல்வது போல்தான் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து கோவி, இன்னொரு மத, கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவர் பேசியதால், நான் சொல்ல வேண்டி வந்தது.

கடவுள் என்பவன் இருந்தால் அவர்/அவள் ஒருவர்/ஒருத்தி தான். அப்படி இருக்கும் ஒரு கடவுளை ஒருவர் இஸ்லாமை கடைபிடித்துதான் அந்த கடவுளைதிருப்திப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருவர், இந்து மதத்தை கடைபிடித்து கடவுளை சந்தோஷப்படுத்துகிறார்.

ஒரே கடவுள்தான். இவரால் இந்து மதத்தையோ, அவரால் இஸ்லாம்மதத்தையோ "பால்லோ" செய்து அதே கடவுளை திருப்திப்படுத்த முடியாதஒரு அவல நினலியில் உள்ளவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் சொல்லவில்லையே!

அதே அளவுக்கு அவர்களிடம் ஏன் நாகரீகம் (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவர்களுக்கு சமம்தான் என்கிற எண்னம்) இல்லாமல் போகிறது?

கோவி.கண்ணன் சொன்னது…

கர்மா / வருண்,

புலால் உண்ணுதல் பற்றி எனது நிலை, பாவ புண்ணியம் குறித்தது அல்ல. வாழும் உரிமை அனைத்து உயிர்களுக்கும் உள்ளது என்பதே ஆகும். மனித உயிருக்கு மதிப்புக் கொடுத்து அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று நினைக்கும் நாம், விலங்குகளை கீழானவையாக நினைத்து அவற்றை உண்ணலாம் அதுவும் கொலை செய்து உண்ணலாம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதே சமயத்தில் அப்படி உண்ணுபவர்களைப் பாவிகள் என்று நான் தூற்றுவதில்லை. காய்கறி உணவு உண்பவர்களிலும் மற்றவர்களை தாழ்த்தி மன அளவில் கொலை செய்பவர்களும் உள்ளனர். எனவே உணவு பழக்கத்தை மனிதரின் குணநலனில் பொருத்திப் பார்ப்பதிலும் உடன்படுவதில்லை. விலங்குகளை அடித்து உண்ணும் போது அவை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துடிக்காவிட்டால் நான் கூட அவற்றின் உயிரின் மதிப்பு எனக்கும் தெரியாமல் தான் இருக்கும்.


வருண்,

நீங்கள் மதம் காட்டும் கடவுளைத் தேடி அது இல்லை, பித்தலாட்டாம் என்கிறீர்கள், சரிதான். இறைவன் என்ற உருவகத்தை மதத்திற்கு அப்பாற்பட்டதாகவும் நல்ல குணங்களில் நிறைவு பெற்ற ஒன்றாகவும் தான் என்னால் நினைக்க முடிகிறது. விரும்பியபடியெல்லம் நடக்கும் திறன் இறைசக்திக்கு கிடையாது என்றே நானும் நம்புகிறேன். பக்தியாளர்களின் அதிதீவிர நம்பிக்கையால் இறைவனால் எல்லாம் முடியும் என்று சுமையைத்தான் ஏற்றிவைக்கிறார்கள். இது கிட்டதட்ட நாத்திகன் (தெரியாமல்) இறைசக்தியை அவமானப்படுத்தும் செயலை ஒத்ததே. எல்லாம் இறைவனால் முடிந்தால் குழந்தைகள் தீயில் கருகும் போது காப்பாற்றி இருக்க முடியும், ஏனென்றால் பசியால் வாடிய பார்பன சிறுவனான ஞானசம்பந்தனுக்கு பால் கொடுத்ததாக கதை இருக்கும் போது மற்ற குழந்தைகள் பிறக்கும் போதே பாவிகளா என்று திருப்பிக் கேட்பது தவறான வாதமே அல்ல.

வருண் சொன்னது…

***வருண்,

நீங்கள் மதம் காட்டும் கடவுளைத் தேடி அது இல்லை, பித்தலாட்டாம் என்கிறீர்கள், சரிதான்.***

கோவி!

நான் அப்படி சொல்லவில்லை! நீங்கள் நான் அப்படி சொன்னதாக சொல்றீங்க!

வருண் சொன்னது…

***இறைவன் என்ற உருவகத்தை மதத்திற்கு அப்பாற்பட்டதாகவும் நல்ல குணங்களில் நிறைவு பெற்ற ஒன்றாகவும் தான் என்னால் நினைக்க முடிகிறது.***

அது உண்மை என்றால் மதங்களை தூக்கி எறியுங்கள், கோவி!

அறிவியல் என்கிற மதத்தையும் உருவாக்க முயற்சிக்காதீர்கள்!

உள்ள மதங்களும் அதனால் வரும் பிரச்சினைகளும் போதவில்லையா??

வருண் சொன்னது…

****இது கிட்டதட்ட நாத்திகன் (தெரியாமல்) இறைசக்தியை அவமானப்படுத்தும் செயலை ஒத்ததே.***

நாத்திகர்களுக்கு உங்கள் இறை நம்பிக்கையை மதிக்கத்தெரிவதால்தான் உங்களைப்போல் ஒரு திரி ஆரம்பித்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமானப்படுத்தாமல் இருக்காங்க!

அதேபோல் உங்களிடமும் அவ்ர்கள் எதிர்பார்ப்பது தவறுதான்!

வருண் சொன்னது…

****வாழும் உரிமை அனைத்து உயிர்களுக்கும் உள்ளது என்பதே ஆகும்.***

இந்த சிந்தனை நாத்தீகர்களிடம் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது???

வருண் சொன்னது…

****விலங்குகளை அடித்து உண்ணும் போது அவை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துடிக்காவிட்டால் நான் கூட அவற்றின் உயிரின் மதிப்பு எனக்கும் தெரியாமல் தான் இருக்கும்.***

விலக்ன்குகளையும், அவைகளுக்கு மனிதன் செய்யும் தீங்குகளையும் பற்றி கவலைப்பட,மனிதாபிமானம் இருந்தால்போதும்!

கடவுள் எதற்கு இங்கே???

KARMA சொன்னது…

வருண்,

கடவுள் பக்தி உள்ளதால் ஒருவர் புனிதரோ, மற்றவரைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தவரோ இல்லவே இல்லை.

அவர் ஏதோ ஒன்றின் நம்பிக்கையாளர், அவ்வளவுதான்.
இதில் உங்களுடன் உடன்படுகிறேன்.

கடவுளோ, மதங்களோ தேவையில்லை என்று சொல்லும் கல்வெட்டு, தருமி இவர்களுடன் நான் உடன்படவில்லை.

KARMA சொன்னது…

அதேபோல் கடவுள் மறுப்பாளர்களும் ஒரு வகையில் நம்பிக்கையாளர்களே.

அவர்களும் எந்தவிததிலும் கடவுள் நம்பிக்கையாளர்களை விட உயர்தவர்கள் (பகுத்தறிவில் உட்பட)
இல்லை.

சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் மிகவும் அறிவுஜீவிகளாகவும், கடவுள் நம்பிக்கையாளர்கள் மிகவும் பிற்போக்குவாதிகள் என்பது போன்ற மாயத்தோற்றங்களும் சகிக்க முடியாதவை.

எது பகுத்தறிவு? ஒருவருக்கு பகுத்தறிவாகத்தோன்றுவது மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாகத்தெரிவது மிக மிக சாதாரணமான நிகழக்கூடியது.

மனிதன் 80% உணர்வு பூர்வமானவன். அன்பு மிகுந்த இடங்களிலும் (காதல், கருணை போன்றவை), குழந்தைகளிடம் விளையாடும்போதும் அறிவிற்கு ஒரு வேலையும் இல்லை (அது எவ்வளவு உயர்ததாயிருந்தாலும் சரி). அவன் வாழ்வு, மனநிறைவால் முழுமையடைகிறது....இது போன்று பயன்தராத பகுத்தறிவு மற்றும் Logic-ஐ வைத்துக்கொண்டு என்ன செய்வது?

காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கச்செல்வதுவரை LOGIC-ஆக வாழ்ந்து பாருங்கள், அதையே இன்னும் 40 வருடங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.....நினைத்துப்பாருங்கள். அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?

கேள்விகள் இருந்திருக்கின்றன ஆயிரமாயிரம், ஆண்டாண்டு காலங்களாய். இந்த பகுத்தறிவுவாதிகள் எதையும் புதிதாக கேட்டுவிடவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said..

விலக்ன்குகளையும், அவைகளுக்கு மனிதன் செய்யும் தீங்குகளையும் பற்றி கவலைப்பட,மனிதாபிமானம் இருந்தால்போதும்!

கடவுள் எதற்கு இங்கே??? //

வருண், நானும் கடவுள் வந்து அதைக் காப்பாற்றுவார் என்று சொல்லவில்லையே, இயற்கை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் திறனும், காக்கும் பொறுப்பும் மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

//இந்த சிந்தனை நாத்தீகர்களிடம் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது??? //

நான் அப்படி எங்கும் சொல்லவில்லை, விலங்குகளை அடித்து உண்ணுபவர்களாக நாத்திகராக மட்டும் இருந்தால் அதுபோல் சொல்லலாம், ஆனால் அவ்வாறு இல்லை, எனக்கு தெரிந்த்து நாத்திகர்களிடம் புலால் உண்ணாமை பழக்கம் இருக்கிறது


//***இறைவன் என்ற உருவகத்தை மதத்திற்கு அப்பாற்பட்டதாகவும் நல்ல குணங்களில் நிறைவு பெற்ற ஒன்றாகவும் தான் என்னால் நினைக்க முடிகிறது.***அது உண்மை என்றால் மதங்களை தூக்கி எறியுங்கள், கோவி!//

நான் எந்த மதத்திற்கும் வக்காலத்து வாங்கவில்லை, எனக்கு மதங்களின் மீது விமர்சனம் இருக்கிறது, ஒவ்வொன்றிலும் சில நல்லக் கொள்கைகளும் இருக்கிறது என்ற அளவில் அவற்றை மதிக்கிறேன். மதங்கள் இல்லாத நிலை இருந்தால் நன்றாக இருக்கும் என்றே தான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். இன்றைய குழப்பங்கள் அனைத்திற்கும் மதவெறிகளே காரணம், ஆனால் வசதியாக நாத்திகர்கள் மீது பழியைப் போட 'தெய்வ நம்பிக்கை குறைந்துவிட்டதால்...அக்ரமம் மிகுந்துவிட்டது' என்று கூசாமல் சொல்கிறார்கள்

//அறிவியல் என்கிற மதத்தையும் உருவாக்க முயற்சிக்காதீர்கள்!//
:) நான் எதையும் உருவாக்க முடியாது, காலப்போக்கில் எல்லாம் உருவாகும், உருவானவை அழிந்து போகும்

//உள்ள மதங்களும் அதனால் வரும் பிரச்சினைகளும் போதவில்லையா?? //
மோதிக் கொள்ளட்டுமே நமக்கு என்ன ? :)

//***வருண்,

நீங்கள் மதம் காட்டும் கடவுளைத் தேடி அது இல்லை, பித்தலாட்டாம் என்கிறீர்கள், சரிதான்.***

கோவி!

நான் அப்படி சொல்லவில்லை! நீங்கள் நான் அப்படி சொன்னதாக சொல்றீங்க! //

கடவுள் என்ற ஆத்திக சித்தாந்தங்களுக்கு எதிரான
நாத்திக சித்தாந்தங்கள் அதற்கு எதிரானவைதானே, அவர்கள் உண்டு என்பார்கள், அவர்கள் உண்டு என்பதற்கான காரணங்களை மறுத்து நீங்கள் இல்லை என்பீர்கள், ஆனால் இருவருமே அதைப் பற்றி அறிந்தது கிடையாது, இரண்டுமே நம்பிக்கைத் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
கர்மா!

சுல்த்தான் சொல்கிறார்,

இறைநம்பிக்கை ஒரு நல்ல மனிதனை இன்னும் புனிதமாக்கும் என்று!//

உங்களோடு உடன்படுகிறேன், வெறும் நம்பிக்கை மட்டுமே மனிதனை புனிதமாக்காது, கடவுளை சர்வாதிகாரியாக மதங்களில் கட்டப்பட்டுள்ளதால் கடவுளுக்கு பயப்படவேண்டும் என்றும் அதிலேயே சொல்லப்பட்டுள்ளது, அதன்படி அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள். அன்பே கடவுள், அவன் மன்னிப்பான் என்று சொல்லிக் கொண்டே, நீங்கள் பாவம் செய்தால் அவனைவிட கொடூர தண்டனை வழங்குபவர் யாரும் என்று சொல்லும் கருத்து முற்றிலும் முரணானது, அதை நான் எப்போதும் நிராகரித்தே வருகிறேன். நல்லவர்களுக்கு எந்தவிதமான நம்பிக்கைகளோ, பயமுறுத்தல்களோ தேவையற்றது, கடவுளை ஒரு கட்டப்பஞ்சாயத்துத் தலைவரைப் போல் பலரும் சொல்வதாலேயே அப்படி ஒரு கடவுள் எனக்குத் தேவை இல்லை என்று சொல்ல வருபவர்கள் கூட அப்படி ஒரு கடவுளே இருக்க மாட்டார் என்றே நினைப்பர். கடவுள் மறுப்பிற்கு மூலக் காரணமே ஆத்திகர் இட்டுக்கட்டிய அதீத கற்பனைக் கதைகள் தான். மனிதனைத் தூய்மையாக்குவதைத் தவிர்த்து கடவுள் எதையும் செய்யமாட்டார் என்று சொல்லாமல், மனிதன் தூய்மையாக அதாவது புனித மடைய கடவுள் நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று மாற்றிச் சொல்கின்றனர். :)

//அதாவது இரண்டு நல்ல மனிதர்கள் இருந்தால். அதாவது சமமான அளவு நல்லவைகள் செய்தாலும், இறைநம்பிக்கை உள்ளவர் இன்னும் புனிதமானவராம்!
இதெப்படி சரியாகும்?

அதுவும் இறைநம்பிக்கை உள்ள ஒருவர் அதைச் சொல்லுகிறார். இங்கேதான் எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது.

//

இதன் பொருள் தெரியாமல் தான் சொல்கிறார்கள், நீங்களும் மறுக்கிறீர்கள். இரு நல்ல விதைகள் அருகருகே விதைத்து இருந்தாலும், சூரிய சக்தியும் சூழலும் கிடைப்பதே முளைக்கும் அல்லவா ? அப்படி பொருள் கொள்ளுங்கள், விதைகள் பழுது கிடையாது, முளைப்பதற்கான சூழல் மட்டுமே வேறு.

//இதுவந்து மத கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டமாக சொல்வது போல்தான் இருக்கிறது.//

நாளைய சூரியன் அடுத்த விதையின் மீதும், அந்த விதைக்குச் சூழலும் கூட அமையும் என்ற அறியாமல் அவர்கள் சொல்லுகிறார்கள்.


//இதைத்தொடர்ந்து கோவி, இன்னொரு மத, கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவர் பேசியதால், நான் சொல்ல வேண்டி வந்தது.

கடவுள் என்பவன் இருந்தால் அவர்/அவள் ஒருவர்/ஒருத்தி தான். அப்படி இருக்கும் ஒரு கடவுளை ஒருவர் இஸ்லாமை கடைபிடித்துதான் அந்த கடவுளைதிருப்திப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருவர், இந்து மதத்தை கடைபிடித்து கடவுளை சந்தோஷப்படுத்துகிறார்.//

இதுவும் ஒரு தவறான வாதம் தான், காலப் போக்கில் (அவர்கள் சித்தாந்தப்படி) கடவுளுக்கே மதங்கள் தேவைப்படுகிறது எனவே, ஒரு மதமே உய்விக்க வந்ததாகச் இவர்கள் சொல்வதெல்லாம் வெறும் நம்பிக்கை அடிப்படையில் தான். இவையெல்லாம் மத அரசியல் பிரச்சாரங்கள். நான் முன்பு கூறி இருக்கிறேன். கிறித்துவ நம்பிக்கைப் படி கிறித்துவத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொர்கம் என்றால் பின்லேடன் கிறித்துவராக மாறினால் சொர்கம் செல்வாரா ? மோடி முஸ்லிமாக மாறிவிட்டால் சொர்கம் செல்வாரா ? - இதற்கெல்லாம் யாரும் சரியான பதில் சொல்லவில்லை. ஏற்றுக் கொள்பவர் எவரும் சொர்கம் செல்லமுடியும் என்று சொல்வது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஏற்றுக் கொள்ளாத நல்லவர்களைவிட ஏற்றுக் கொள்ளும் நாசக்காரர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளும் கடவுள் நடுநிலையாளனாகவே இருக்க முடியாது.

//ஒரே கடவுள்தான். இவரால் இந்து மதத்தையோ, அவரால் இஸ்லாம்மதத்தையோ "பால்லோ" செய்து அதே கடவுளை திருப்திப்படுத்த முடியாதஒரு அவல நினலியில் உள்ளவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் சொல்லவில்லையே!//
இன்னும் நோண்டி நோண்டிக் கேட்டால், அவரவர் மதங்களுக்கு தனித்தனியான கடவுளும் தனித்தனி சொர்கம் நகரமாகவும் இருப்பதாகச் சொல்லிவிடுவார்கள். இஸ்லாமியர்களின் சொர்கத்தில் இருக்கும் ஆண்கள் எல்லாம் குல்லா அணிந்திருப்பார்கள், இந்துக்களின் சொர்கத்தில் எல்லோரும் பட்டு பீதாம்பரம் உடுத்தி இருப்பார்கள், 'பார்த்தியா எங்கள் மதம் தான்...உண்மை என்று அடித்துக் கொண்டோம்...கேட்டாயா ?' என்று சொர்கத்தில் நக்கல் கூட அடிப்பார்களோ என்னவோ :) கற்பனையே தமாஷாக இருக்கு !

//அதே அளவுக்கு அவர்களிடம் ஏன் நாகரீகம் (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவர்களுக்கு சமம்தான் என்கிற எண்னம்) இல்லாமல் போகிறது?//
ரஜினி ரசிகனுக்கு சத்தியராஜின் ரசிகன் மட்டமாகத் தெரிவான் இல்லையா ? அவர்கள் எதை உயர்வாக கற்பித்துக் கொள்கிறார்களோ, அதற்கு எதிரானவை மட்டமாகத்தான் தெரியும். அதுபோன்று தான் :)

வருண் சொன்னது…

karma/kovi

We are all in the same boat but I can address some issues only by bringing up some questions- நீங்கள் அப்படி நினைக்காவிட்டாலும் நிறைய பிளீவெர்ஸ் அதுபோல் நினைக்கிறார்கள்!

மற்றபடி, உங்கள் பார்வையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை! :-)

அன்புடன்,
வருண்

வருண் சொன்னது…

****ரஜினி ரசிகனுக்கு சத்தியராஜின் ரசிகன் மட்டமாகத் தெரிவான் இல்லையா ? அவர்கள் எதை உயர்வாக கற்பித்துக் கொள்கிறார்களோ, அதற்கு எதிரானவை மட்டமாகத்தான் தெரியும். அதுபோன்று தான் :)***

வினை விதைத்தது சத்யராஜ்.

அதற்கு முன்னால் சத்யராஜை எல்லோரும் ரசித்தார்கள்.

ரஜினி யாரையும் என்றுமே மனிதாபிமானம் இல்லாமல் தாக்கியது இல்லை!

ரஜினி மத நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும், அடுத்தவர்கள் விமர்சனத்தில் உள்ள நல்லவைகளை எடுத்துக்கொள்பவர்.

அதனால்தான் படங்களில் புகைபிடிப்பதை நிறுத்தினார்.

இலங்கை தமிழருக்கும் குரல் கொடுத்தார்.

ராமதாசையே பாராட்ட வைத்தார்.

சரி நான் மனிதாபிமானம் பற்றிதான் பேசுகிறேன். வேறொன்றுமில்லை! :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்