மனிதர்களுக்கு மதம் சொல்லாவிடில் சொர்க்கம் / நரகம் பற்றி யாதொரு கனவும் வந்துவிடப் போவதில்லை. முன்பு எதோ ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன், புத்தகத்தின் பெயர் நினைவு இல்லை. நாய் தனக்கு கடவுள் இருப்பதாக நினைத்து நல்ல நாய்களுக்கு சொர்க்கம் கொடுப்பதாகவும், கெட்ட நாய்களுக்கு (அப்படி ஒரு நாய் இருக்கா ?) நரகமும் கொடுப்பதாக இருந்தால், நல்ல நாய் செல்லும் சொர்கத்தில் எலும்புத் துண்டுகளுக்கு பஞ்சமே இருக்காது, முடிவற்ற கார்த்திகை மாதங்களாகவே அதன் சொர்க்கம் நீடித்த சுகம் கொடுப்பவையாக இருக்கும், அது போல் நரகம் செல்லும் நாய்கள் முனிசிபல் காரர்களைப் போல் காக்கி யூனிபாரம் போட்டுக் கொண்டு இருப்பவரால் துறத்தி பிடித்து... கழுத்தில் இரும்புக் கம்பியை சுறுக்காகப் போட்டு தலையில் நச் நச் என்று அடித்துக் இழுத்துச் செல்வார், நாய்க்கு உயிர்போகும் வலி இருக்கும் ஆனால் நாய் சாகாது. இதுவே நாயின் சொர்க்கம் / நரகம் பற்றிய நாய் கடவுள் கோட்பாடாக இருக்கும்.
இதுபோல் ஆடு சொர்கம் செல்வதாக இருந்தால், வேலியே இல்லாத பரந்த வயல்வெளியில் பசுமையான பயிர்களின் நடுவில் தனக்கு மேய்ச்சல் கிடைக்கும், கடிக்க கடிக்க பயிர்கள் வளர்ந்து கொண்டே இருக்கும், நரகம் செல்லும் ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டு பட்டினிப் போடப்பட்டு சித்திரவதை செய்யப்படும் என்று நினைப்பதும் ஞாயம் தானே
அதாவது உடல் சார்ந்த சுகமும், நாவின் சுவையுமே சொர்க்கத்தின் மகிழ்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது, இதற்காகவா ஆசைப்படுகிறார்கள் ? இவர்கள் மதத்தின் பெயரால் அடித்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கையில் எரிச்சலை மீறிய வியப்பும் புன்னகையுமே மிஞ்சுகிறது.
இந்த மனித சொர்க்கக் கனவுகள் கூட மதத்திற்கு மதம் வேறுபடுவதும் வியப்பளிக்கிறது. இந்து மத சுவர்க்கம் கிட்டதட்ட இந்திர சபையைப் போலவே பெண்களால் இன்பம் கொடுப்பதாகச் சொல்லப்படுவது போலவே இஸ்லாம் / கிறித்துவ மதங்களிலும் அதையே சொல்கிறார்கள், எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. சொர்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் இந்திரனே பெண் பித்தனாகவும் எப்போதும் ரம்பை - ஊர்வசி - மேனகை (ஒரே முகங்களைப் பார்க்க அலுக்காதா ?) ஆட்டத்தை ரசித்துக் கொண்டு இருப்பவனாகவே கதைகள் சொல்லப்படும் போது அதனை பின்பற்றும் இந்து மதத்தினரின் சொர்க்கக் கனவுகள் இதைத் தாண்டியும் இருக்குமா ? சொர்கத்தில் உறவு முறைகள் இருக்கிறதா ? இந்து மதத்தை பொருத்து அப்படி இல்லை.
இந்திரனுக்கு மகிழ்வு தரும் ரம்பை அங்கு தற்காலிகமாக செல்லும் அவன் மகன் அர்சுனனையும் 'அழைக்கவே' தந்தை தொட்டவளை தனயன் தொடுவதா ? என்ற பூமியில் வாழும் வாழ்க்கை கலாச்சாரம் ஒழுக்கம் தடுக்கவே, அவன் மறுத்துவிடுகிறான் (இத்தனைக்கும் பஞ்சபாண்டவர்கள் ஐவருமே...சரி அதுவேண்டாம்) , 'நாங்கள் வெறும் சேவாதாரிகள், இங்கு வருபவர்களை மகிழ்விக்க வேண்டியது எங்களது கடமை... எங்களை உறவுகளாக கற்பனை செய்து பார்க்கக் முடியாது (பால் உறவு இ(ய)ந்திர) பொம்மைகள்?), அது தெரியாமல் என்னை அவமதித்துவிட்டாய்...இந்த பிடி சாபத்தை...இன்று முதல் நீ பெண்ணாகக் கடவது ...என்று ரம்பை அர்ஜுனனை சபிக்க...அப்பவும் 'தாயே' என்னை மன்னித்துவிடுங்கள்...என்று கெஞ்சினானாம் அர்ஜுனன், மகனின் சாபம் தீர்க்கச் சொல்லி இந்திரனின் வேண்டுகோள் வைக்க... ரம்பை அதற்கு இணங்கி...சாபத்தில் தள்ளுபடி செய்து... கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது ஆனால் சாபம் பலிக்கும் ... நீ விரும்பும் போது ஓர் ஆண்டு பெண்ணாக ஆகுவாய்....என்று சொல்லப்பட்டதாம் (இந்திரன் மகன் என்பதால் சாபத்தில் சலுகை... இந்திரன் மகன் அர்ஜுனன் எப்படி சத்திரியன் ?)
அதன் பிறகு ஒருவருட அஞ்ஞாத வாசத்தில் மறைந்து வாழ வேண்டிய சூழலில் அர்ஜுனன் பிருகுநளை என்ற பெயரில் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்வான்...இவனை பெண் என்று நினைத்து மயங்கும் கீசகனை வதம் செய்வதாக மகாபாரத கதை நீளும்' அனைத்து மதங்களிலுமே சுவர்கம் என்பது காமத்துடன் தொடர்புடையது குறிப்பாக அளவற்ற பெண் சுகம் கண்டிப்பாக உண்டு என்பதே. அனைத்து மதங்களுமே பெண்களின் காம இச்சையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, அப்படி காம சுகம் தேவையை வெளிப்படையாக சொன்னப் பெண்களையெல்லாம் 'அரக்கி'கள் ஆக்கிவிட்டனர். அரக்கிகள் பற்றிய 'லட்சனமாக' புராணங்கள் காட்டுவது என்னவென்றால் அரக்கிகள் கட்டற்ற காமசுகம் நாடுபவள் என்பதாகவே...உதாரணம் சூர்பனகை.
பெளத்தர், சமணர், சங்கரர் போன்ற சந்நியாசிகளின் மதக்கோட்பாடுகளில் இத்தகைய சொர்கம் கோட்பாடுகளில் சூனியவாதம், பரம்பிரம்மம் என்று சொல்லப்படுவதால் அதில் இந்த பெண் பித்துகள் சொல்லப்படுவதில்லை. அந்த கோட்பாடுகள் ஆன்மா, பேரான்மா என்ற தத்துவக் கோட்பாடுகளில் சென்றுவிடுவதால் உடல் சார்ந்த சுகமான காம இச்சைகளும் அது திகட்டாமல் கிடைப்பதே சுவர்க்கம் என்றெல்லாம் அவற்றில் சொல்வதில்லை. மாறாக கர்மா, மறுபிறப்பு என்று கொள்கைகளை வைத்திருக்கிறார்கள், செயலுக்கான எதிர்வினையும், நல்வினையும் இருந்தால் அதனை துய்க்க பிறவி எடுக்கவேண்டி இருக்கும், எந்த ஒரு பிறவியில் கர்மம் அற்ற தன்மை ஏற்படுகிறதோ அப்போது பிரம்மத்துடன் கலந்துவிடுவார்கள், பிரம்மம் ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியுமாக இருக்கும், அதுவே சுவர்கம் என்கிறார்கள்.
சுவர்கம் மண்ணில் இல்லை என்பதே அனைத்து மதங்களின் கோட்பாடாக இருக்கிறது. இதுதவிர எங்களது கொள்கையே உண்மையானது, எங்களது இறைவனே உண்மையானவன் என்கிற அறைகூவலும், மற்றவர்களெல்லாம் பேய் பிசாசுகளை வணங்குபவர்கள், தீவரவாதிகளை உறுவாக்கும் மதம் என்றெல்லாம் தங்களுக்குள் தூற்றிக் கொள்கிறார்கள்.
மதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும். அதுதவிர்த்த கற்பனை சுவர்க்கத்துக்கு, (பிறரின்) வாழும் வாழ்க்கை அழித்துக் கொல்வதும், பிறரின் வழிபாட்டுத் தலங்களையெல்லாம் இடித்துவிட்டு ஆவியாகிப் போனால் என்ன சொர்க்கம் கிடைக்கும் என்றே தெரியவில்லை.
மதங்கள் மனிதர்களை இழுக்க அவர்களுக்கு தூண்டில் இரையாக பயன்படுத்துவது மனிதர்கள் நாட்டம் கொண்டுள்ள காமமும், பொருளாசையும் சுவர்கத்தில் அளவற்ற அளவாக கிடைப்பதாகச் சொல்வதுதான். பெண்ணாசையும், பொருளாசையும் மனிதனுக்கு என்னாளும் தேவையாக இருக்கிறது என்பதையே மதங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன.
இதெல்லாம் சுவர்க்கத்தில் கிடைக்காது என்று மதங்கள் சொல்லட்டுமே... பிறகு 90 விழுக்காடு மனிதர்கள் இறைமறுப்பாளர்கள் ஆகிவிடுவார்கள் :)
மீண்டும் முதல் பத்தியை வாசிக்கவும்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
23 கருத்துகள்:
me the first:-))))
me the second :-)))
/*
மதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும்
*/
1000 சதவிதம் உண்மை
// முடிவற்ற கார்த்திகை மாதங்களாகவே அதன் சொர்க்கம் நீடித்த சுகம் கொடுப்பவையாக இருக்கும், //
:-)))))
இதே மாதிரி ஒரு குழப்பமான பதிவை என் 50 வது பதிவாக இட்டுள்ளேன். வருகையும் நிறைய குறைவு.:)
//Natty 10:54 AM, November 11, 2008
This post has been removed by the author. //
Natty, என்ன ஆச்சு ?
//இந்து மத சுவர்க்கம் கிட்டதட்ட இந்திர சபையைப் போலவே பெண்களால் இன்பம் கொடுப்பதாகச் சொல்லப்படுவது போலவே இஸ்லாம் / கிறித்துவ மதங்களிலும் அதையே சொல்கிறார்கள்// கிறிஸ்தவ மதத்தில் சுவர்க்கத்தில் பெண்களால் இன்பம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படவில்லை.
//மதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும். // - தவறான கருத்து. மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த உணடாக்கப்பட்டவை. மதங்களை தவறான வழியில் பயன்படுத்தினால். அது அப்படி செய்பவர்களின் குற்றம். மதங்கள் இல்லாத ரஷ்யாவில் சொர்க்காத்தை உண்டாக்க முடியாவில்லை மீண்டும் அவர்கள் மதத்திற்கே திரும்பிவிட்டார்கள்.
//மதங்கள் மனிதர்களை இழுக்க அவர்களுக்கு தூண்டில் இரையாக பயன்படுத்துவது மனிதர்கள் நாட்டம் கொண்டுள்ள காமமும், பொருளாசையும் சுவர்கத்தில் அளவற்ற அளவாக கிடைப்பதாகச் சொல்வதுதான். // காமமும் பொருளாசையும் இந்த உலகத்திற்கு உரிய விஷயங்கள். சொர்க்கத்தில் இதற்கு இடமில்லை.
//இதெல்லாம் சுவர்க்கத்தில் கிடைக்காது என்று மதங்கள் சொல்லட்டுமே... பிறகு 90 விழுக்காடு மனிதர்கள் இறைமறுப்பாளர்கள் ஆகிவிடுவார்கள் :)// இதெல்லாம் சொர்க்கத்தில் கிடைக்காது என்றுதான் கிறிஸ்தவ மதம் சொல்கிறது. உடனே எல்லாரும் இறைமறுப்பாளர்கள் ஆகிவிட்டார்களா?
//அர்ஜுனன் பிருகுநளை என்ற பெயரில் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்வான்...இவனை பெண் என்று நினைத்து மயங்கும் கீசகனை வதம் செய்வதாக மகாபாரத கதை நீளும்' //
கீசகன் ஆசைப்பட்டது திரெளபதியைப் பார்த்து..
ஏ.பி.நாகராஜன், மற்றும் விட்டலாசார்யா படம் பாத்திட்டு எழுத உட்க்கார்ந்தால் இப்படித்தான் மேலோட்டமா எழுத முடியும்..
//Bharath 12:13 PM, November 11, 2008
கீசகன் ஆசைப்பட்டது திரெளபதியைப் பார்த்து..
ஏ.பி.நாகராஜன், மற்றும் விட்டலாசார்யா படம் பாத்திட்டு எழுத உட்க்கார்ந்தால் இப்படித்தான் மேலோட்டமா எழுத முடியும்..
//
அது எனக்கும் தெரியும். கீசகனை இரவில் சந்திப்பதாகக் கூறி ... திரவுபதிக்கு பதிலாக கீசகனை இரவில் சந்திக்க பெண் வேடத்தில் செல்வது யார் ?
நல்ல வேளை அர்சுனன் தண்டனை பெற்ற காரணத்தையாவது ஒப்புக் கொள்கிறீர்களே.
நோய்களும் பிரச்சனைகளும் நிறைந்த இந்த உலகில் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்று கற்பிப்பது மடமை. சொர்க்கம் மற்றும் நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருப்பதால்தான் மனிதர்கள் பலரும் தவறு செய்ய பயப்படுகிறார்கள்.
//அது எனக்கும் தெரியும். கீசகனை இரவில் சந்திப்பதாகக் கூறி ... //
அப்படி சொன்னதும் திரெளபதிதான்.. சரி சரி விடுங்க மண் ஒட்டல.. :)
//ஏ.பி.நாகராஜன், மற்றும் விட்டலாசார்யா படம் பாத்திட்டு எழுத உட்க்கார்ந்தால் இப்படித்தான் மேலோட்டமா எழுத முடியும்..//
விட்டலாச்சாரியார் படத்தில் பேய்கள் அடுப்பில் காலை விட்டு எரிப்பது பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை. நமீதாவின் ஜெகன் மோகினையை எதிர்பார்த்து இருக்கிறேன். விட்டலாச்சாரியார் படக் கதையெல்லாம் ஞாபகம் வைத்து எழுதலாம் என்று சொல்லும் உங்கள் ஞாபக சக்தி வியக்கவைக்கிறது
//Robin said...
நோய்களும் பிரச்சனைகளும் நிறைந்த இந்த உலகில் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்று கற்பிப்பது மடமை. சொர்க்கம் மற்றும் நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருப்பதால்தான் மனிதர்கள் பலரும் தவறு செய்ய பயப்படுகிறார்கள்.
//
நோய்களுக்கான முதன்மைக் காரணம் சுற்றுப்புறச் சூழலை, பருவ நிலையைக் கெடுத்தது, முன்பெல்லாம் 120 ஆண்டுகள் வரையிலும் கூட உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிரச்சனைகளுக்கு காரணம் மனிதன் பேராசைகள்.
//முன்பெல்லாம் 120 ஆண்டுகள் வரையிலும் கூட உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிரச்சனைகளுக்கு காரணம் மனிதன் பேராசைகள்.//
அதே போல் 2 வயதிலும், 10 வயதிலும் மற்றும் 30களிலும் மறைந்தவர்களும் மிகவும் அதிகம்.. avg mortality is around 55 years.. now it has increased to 65 - 70
//நோய்களுக்கான முதன்மைக் காரணம் சுற்றுப்புறச் சூழலை, பருவ நிலையைக் கெடுத்தது, முன்பெல்லாம் 120 ஆண்டுகள் வரையிலும் கூட உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிரச்சனைகளுக்கு காரணம் மனிதன் பேராசைகள்.// முன்பை விட இப்போதுதான் மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. பண்டைய காலத்திலும் நோய்கள் உண்டு. தற்போது புது புது நோய்கள் உருவாவதற்கு மனிதர்கள் செய்யும் தவறுகளும் காரணம்.
//எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. //
அதான ...!
// தருமி said...
//எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. //
அதான ...!
//
அதில் என்ன சந்தேகம், மதம், சமூகம் இவற்றை தன் கட்டுப்ப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவது ஆண்களே... எனவே இவை குறித்து ஆண்களின் இலக்கியங்கள் தான் மிகுதியாக புனையப்பட்டு இருக்கிறது, மேலும் அன்றைய சமூகங்களில் பெண்களின் நிலையை மீறி அவர்களாலும் கதை கட்ட முடியவில்லை.
சுத்தமான இடம் தான் சொர்க்கம்.
அதைவிட, ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது தான் சொர்க்கத்தைப் பார்க்க முடியும்.(அவன் மனசைப் பொருத்தது) இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் செல்வதில் எல்லாம் எமக்கு உடன்பாடு இல்லை. இது நரகத்துக்கும் பொருந்தும்.
கனவு என்பது உண்மை!
http://arumbavoor.blogspot.com/2010/06/blog-post_06.html
http://arumbavoor.blogspot.com/2010/06/blog-post_06.html
கருத்துரையிடுக