பின்பற்றுபவர்கள்

9 நவம்பர், 2008

ஓரின புணர்சியாளர்களின் திருமணக் கூத்து !

வயது வந்தவர்களின் பாலியல் இச்சை என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பு, அவர்கள் ஒருபால் விருப்பம் உடையவர்களாக இருப்பது மனநோய் என்றெல்லாம் சொல்ல முடியாது, முன்பெல்லாம் அப்படி வலியுறுத்த முயன்றார்கள் அதன் பிறகு அவை தவறான அனுமானம் என்று புரிந்து கொள்ளப்பட்டது. அவற்றை மதரீதியாக பார்த்து கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை. ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக மதக்கருத்துக்களைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.

தன்பால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாதவர்கள் அந்த வழியிலேயே செல்வது அவர்களின் விருப்பம் என்றாலும் அவர்கள் 'திருமணம்' செய்து கொள்வதும், அதற்கு சட்ட அங்கீகாரம் கேட்பதும் கேலிக் கூத்துதான். திருமணம் என்ற அமைப்பே சமூகம் தொடர்புடையது, ஆண் / பெண் இருபாலார் திருமணம் செய்து கொள்ளும் போது அவை ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலப் பயனாக சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள், திருமண பந்தம் அவர்களுடைய கடமைகளை வரையறுக்கிறது. மேலும் சட்டப்பாதுகாப்புக் கிடைக்கிறது. இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் பிரியும் போது வாழ்வுதவி (ஜீவனாம்சம்) கிடைக்க சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இவையே திருமணம் என்னும் சடங்கின் வழி ஆண்/பெண் இருபாலரும் அடையும் நன்மை. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் திருமணம் என்னும் சடங்கை சமூக அங்கீகாரமாக நினைக்கும் ஓரினபுணர்சியாளர்கள் அவை தங்களுக்கும் கொடுக்கப் பட வேண்டும் என்பது ஏற்கத் தக்கது அல்ல.

ஆண் / பெண் இருபாலரும் மணந்து கொள்வதும் கூட முதல் காரணம் பாலியல் தேவையை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் ஒரு ஒழுக்க நடவடிக்கை, அதற்கு பெற்றோர் முதல் சமூகத்தின் ஆதரவு எப்போதும் கிடைக்கும், அந்த திருமணத்தின் வழி பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது மட்டுமின்றி அதன் பயனாக உலகத்தை உயிரோட்டத்துடன் சுழற்ற வாரிசுகளை பெற்றுத் தருகிறார்கள். இவையெல்லாம் ஓரினபாலினரின் திருமணத்தால் ஏற்பட்டுவிடுமா ?

யாருடைய அங்கீகாரமும் தேவையின்றியே ஓரின பால் விரும்பிகளின் விருப்பப்படி அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்க முடியும். அதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. இவர்களும் அதை அனுமதிக்கவோ, சகித்துக் கொள்ளவோ மாட்டார்கள், பிறகு ஏன் இவர்கள் திருமணத்தை நாடவேண்டும் என்று தெரியவில்லை. விளங்கவில்லை. ஒருவேளை இவர்களுக்குள் சொத்து முதல் காப்பீடுகள் வரை பகிர்ந்துக் கொள்ளப்படும், அல்லது ஒருவரின் இறப்பிற்கு பிறகு மற்றவர்களுக்கு கிடைக்க ஓரின திருமணம் வழங்கினாலும், திருமணம் என்ற சடங்கே இல்லாமல் ஒருவர் தன் சொத்துக்களை காப்பிடுகளை விரும்பியவர்களுக்கு எழுதி வைக்க முடியும். அதற்காக திருமணம் செய்து கொள்வதெல்லாம் டூ.........மச். இத்தகைய திருமணங்கள் சமூகத்தை, தன்னைப் பெற்றவர்களின் செயலையெல்லாம் பழிப்பது போன்றதே.

ஆண் / பெண் திருமணம் செய்து கொள்ளும் போது உறவு முறைகள் கிடைக்கிறது,ஓரு ஆணும் ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோர்கள், தங்கள் மகன் மணம் முடித்துக் கொண்ட ஆடவனை மருமகன் என்றுச் சொல்லிக் கொள்வார்களா ? பெற்றோர்கள் இவர்களின் இச்சைகளை இயற்கை / இயற்கைக்கு மாற்றானது என்ற புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டாலும், இவர்களின் பெற்றோர்களாலேயே புதிய ஒரு உறவாகவே மதிக்காத இவர்களின் திருமணத்தினால் இவர்களுக்கும் பயன்கிடையாது.

*******

மேலை நாடுகளில் ஒத்தப்பாலின ஈர்ப்பில் நட்பு என்ற ஒன்று இருப்பதே அறியாதவர்களாக இருந்து அவற்றை பாலின தேவையுடன் தொடர்பு படுத்தி ஒருபாலின் நட்பு என்பதே ஓரின சேர்க்கையாகவே புரிந்து கொள்ளப்படுகிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது. நம் இந்தியா போன்ற நாடுகளில் மிக நெருங்கிய நண்பர்கள் கைகோர்த்து நடப்பதும், ஒரே படுக்கையில் படுப்பதெல்லாம் இயல்பு. ஹாஸ்டல் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்பவர்களின் நெருக்கம் ஒரே சிகெரெட்டை இருவரும் புகைப்பது முதல் பலவற்றில் அவர்களின் அன்பின் ஆழம் இருக்கும். மேலை நாடுகளில் இதுபோல் இரு ஆண்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் ஓரின ஈர்பில், ஓரின புணர்ச்சியாளர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்களிடம் இருக்கும் குறையாக நினைப்பது என்னவென்றால், நல்ல நட்பிலும் ஒத்த பாலினரிடம் நெருக்கமாக இருக்க முடியும் என்று அவர்கள் அறிந்ததில்லை.

****

ஓரின புணர்ச்சியாளார்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் இணையர்களின் நம்பிக்கை எதிராக இருக்கமாட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இவர்களின் மனதை வசப்படுத்தும் இன்னொரு கவர்சியான ஆடவன் கிடைத்தால் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை எல்லாம் உடனடியாகவே தொலைந்துவிடும். மேலை நாடுகளில் ஆண்கழிவரைகளில் சில ஆண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள், பார்க்கப்படும் ஆண்கள் இவர்களை பார்த்துவிட்டால் சிரிப்பார்கள், பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ?

திருமணம் செய்து கொள்ளும் ஆண்பெண் இருவரும் ஓரின புணர்ச்சியாளர்களைப் போலவே வேறொருவரை நாடுவதில்லையா ? நாடுவார்கள். அது அவர்களின் தனிமனித ஒழுங்கீனம், அப்படி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே.

********

மனநோய் இல்லை என்றாலும் சுயநலம் என்பதின் உச்சம் தான் ஓரின பால் தொடர்பு, அதாவது தான் விரும்பிய வாழ்கையை மட்டுமே வாழ்வது. அதையேன் சுயநலம் என்று சொல்கிறேன் ? பாலியல் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்வு முறையையே மாற்றி சமூகத்துக்கு பயனளிக்காமல் வாழ்வது சுயநலமின்றி வேறென்ன ? அவர்களால் பிறருக்கு கெடுதல் இல்லை என்றாலும் இவை முழுக்க முழுக்க பாலியல் தேவையை மட்டுமே சார்ந்து, அதன் பிடிப்பில் மையத்தில் வாழ்வதாக மட்டுமே இருக்கிறது.

நட்பையும், பாலியல் தேவையையும் ஒன்றாக குழப்பிக் கொள்வது இவர்களின் குறையாக தெரிகிறது. இந்த ஓரின பாலினருக்கு (அதில் நாட்டமில்லாத) நல்ல நெருங்கிய அதே பாலின நண்பர்(கள்) இருப்பார்களா என்பதும் சந்தேகமே, அப்படி இருந்தாலும் அந்த ஓர் பாலின நாட்டமில்லா நண்பர்கள் இவர்களிடம் (ஓர் பால் ஈர்பாளர்களிடம்) எச்சரிக்கையாகத்தான் நடந்து கொள்வார்.

முடிவாக, ஒரு பாலின ஈர்ப்பு, ஒர் இனக் கவர்ச்சி என்ற எந்த பெயரில் சொன்னாலும் ஓரின சேர்க்கையை முற்றிலும் தவறு, மனநோய் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதெலலம் கேலிக் கூத்துதான். அதன் தேவை இல்லாமலே, எந்தவித சமூக அங்கீகாரமும் இல்லாமல் இவர்களால் அதைத் தொடரமுடியும். ஆண்பெண் இருபாலருக்கான சமூகம் ஆக்கி இருக்கும் திருமணம் என்கிற சடங்கை இவர்களும் செய்து கொள்வோம் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என்கருத்து.

தொடர்புடைய சுட்டி : ஓரின கலப்பு திருமணம் (Gay Marriage)

63 கருத்துகள்:

Muthu சொன்னது…

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் திருமணம் செய்வதும் சட்ட அங்கீகாரம் கோருவதும் தேவையில்லை என்கிறீர்கள். ஆனால் அதில் என்ன தவறு என்று சொல்லவே இல்லையே?

இது போன்றவர்கள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கக்கூடாதா? மாட்டார்களா?


அல்லது எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லையா? ஒரே குழப்பம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்து தமிழினி said...
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் திருமணம் செய்வதும் சட்ட அங்கீகாரம் கோருவதும் தேவையில்லை என்கிறீர்கள். ஆனால் அதில் என்ன தவறு என்று சொல்லவே இல்லையே?
//

இவ்வளவு நீளமாக எழுதியும் புரியவில்லையா ?

திருமணம் என்பதன் தேவை என்பது சமூக நோக்கம் தான், அது இல்லாமல் கூட ஆண்பெண் இணைந்திருக்க முடியும் ஆண்பெண் ஈர்ப்பு என்பது இயற்கையானது. சமூகமாக வாழப்பழகிவிட்ட, அதன் அங்கமாக இருப்பவர்களுக்கு திருமணம் ஒரு அங்கீகாரம் கூடவே வாழ்த்துக்களும் கிடைக்கும். உயிரனங்கள் அனைத்திலுமே இந்த ஈர்ப்பு இருக்கும் அப்படி இல்லாதவை விழுக்காட்டு அளவில் மிகக் குறைவே. மனம் தொடர்புடையது என்ற அளவில்
ஓர்பாலின ஈர்ப்பு இயற்கை இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவற்றில் பாலியல் தேவைதவிர்த்து சமூகக்காரணங்களுக்கான இயற்கை ஈர்ப்பு என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. தனிமனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சித்தாந்தப்படி சரிதான். ஆனாலும் இவர்களும் ஒருவரையும் சார்ந்து இல்லாமல் இல்லை. எனவே தனிமனித விருப்பத்தை மீறி இவர்களும் யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டி இருக்கிறது அல்லவா ? பாலியல் தேவைக்காக மட்டுமே இன்னொரு ஒத்த பாலினத்தை நாடுகிறார்கள். உடல் / மனவிருப்பு தாண்டி, சமூக நலன் என்பது இவர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன்.

இதுபோன்றவர்களை நம்பி தத்துக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம் தான். அப்படியே வளர்த்தாலும் இவர்களைப் போல் இல்லாமல், அதாவது இவர்களைப் பின்பற்றாமல் சுயமாக (எதிர்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களாக) வளர்த்து எடுப்பார்களா என்பதும் சந்தேகமே.

விருப்பபடி வாழ்வதற்கு எதற்கு திருமணம் கோருகிறார்கள் என்பதே கேள்வி. அவர்கள் விருப்பப்படி இருப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது, இவர்களும் அனுமதிக்கமாட்டார்கள், பெற்றோர்களே விருப்பப்படி போ என்று (கை)விட்டுவிடுவார்கள்.

திருமணங்கள் அனைத்துமே (சுயமரியாதைத் திருமணம் தவிர்த்து) அனைத்துமே மதம் சார்ந்த சடங்குகள் தான், மதம் ஓரின திருமணத்திற்கு, ஓரின கூடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவை,பிறகு ஏன் இவர்கள் மதம் சார்ந்த திருமணத்தின் அங்கீகாரம் கோரவேண்டும். ஓரின திருமணம் என்பது தங்கள் செயலை புனிதப்படுத்துக் கொள்ள முயலும் செயலாகத்தான் தெரிகிறது.

குசும்பன் சொன்னது…

//இவ்வளவு நீளமாக எழுதியும் புரியவில்லையா ?//

அதுனால் தான் புரியவில்லை:((

Karthik சொன்னது…

//பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள்.

அப்படியா?

//அதாவது தான் விரும்பிய வாழ்கையை மட்டுமே வாழ்வது.

சுயநலம்? ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதும், அவர்களின் விருப்பப்படிதான். அவர்கள் விரும்பும் வாழ்க்கைதான்.

//அப்படி இருந்தாலும் அந்த ஓர் பாலின நாட்டமில்லா நண்பர்கள் இவர்களிடம் (ஓர் பால் ஈர்பாளர்களிடம்) எச்சரிக்கையாகத்தான் நடந்து கொள்வார்.

ஹா..ஹா.
:D

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இயற்கைக்கு எதிரான செயல்கள் சரித்திர காலம் தொட்டே இருந்ததாக தகவல்கள் உள்ளன.. அதற்கு காரணம் சுரபிகளால் ஏற்படும் மாற்றமாக இருக்கலாம்... அதை முற்றினும் இல்லாமல் ஆக்குவது என்பது சிரமமானதே...

ஜமாலன் சொன்னது…

நண்பருக்கு இது குறித்து எனத கருத்துக்கள தனிப்பதிவாக இடலாம் என்று உள்ளேன். பதிவிட்டபின் இணப்புத் தருகிறேன்.

TBCD சொன்னது…

பெரிய பதிவெல்லாம் படிக்கிறதில்லை...!!!

என் கருத்து...அவர்கள் திருமணம் செய்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை...அது அவங்க விருப்பம் , தேர்வு...

அம்புட்டுத்தான்...!!!

ஜமாலன் சொன்னது…

ஓரினச்சேர்க்கை என்கிற சொல் நீங்கள் கூறவிரும்பும் “பழக்கத்தினை” குறிக்கும் சொல் அல்ல. தன்பால் புணர்ச்சி என்று கூறலாம். ஆண், பெண் என்பது பாலினவேறுபாடே ஒழிய ஒரு இனவேறுபாடு அல்ல. ஆனால் பழக்கத்தில் இச்சொல் இருப்பதால் இதனை பயன்படுத்துவது பாதகமில்லை.

இது ஒருவகை பாலியல் வகைமை என்பதை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும். காரணம் பண்டைய கிரேக்கச் சமூகத்திலிருந்து இது நிலவிவருகிறது. பண்டைய சமூகம் பெண்ணுடன் ஆன “வேற்றுப்பால் புணர்ச்சியை (ஹெட்ரோ செக்ஸ்வல்)“ வெறும் குழந்தை பெறுவதற்கான நிகழ்வாக மட்டுமே வைத்திருந்தது. ஒரு பெண்ணிற்கும் காமசுகம் உண்டென்பது மேற்குலகில் 6 அல்லது 7 நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு நூல் குறிப்பிடுகிறது. அதற்கு முந்தைய பெண் தனது காம இச்சையை வெளிப்படுத்தினால் அவளை பேய் பிடித்தவள் மனநிலை பாதிக்கப்பட்டவள் மற்றும் மோகினி, காட்டெறி, நீலி என பலபெயர்கள் சூட்டி அழைப்பது வழக்கமாக இருந்துள்ளது. மேற்குலகில் இது டிராகலா, வாம்பயர் என பல பெயர்கள் உண்டு. இதன் மறுதலையாக பாலியல் எனபது பெண்ணற்ற ஒரு தளத்தில் நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம். அல்லது ஆணுடன் ஆண் மற்றும் பெண்ணுடன் பெண் என்கிற தன்பால் புணர்ச்சியாக இது நிகழ்ந்திருக்கலாம். இது ஒரு விரிவான ஆய்விற்கு உரிய கருத்து. ஆக, தன்பால் புணர்ச்சி என்பது ஒருவகைமை என்பதை மேற்றிசை நாடுகள் ஒரு பாலியல் பிறழ்ச்சியாக மாற்றியது 17-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே. அதை பிறழ்ச்சியாக மாற்றக் காரணம், இந்த வேறறுப்பால் புணர்ச்சியை சமூகத்தின் மையப்புணர்ச்சியாக மாற்றி தன்பால் புணர்ச்சியை குற்றமாகவும் பாவமாகவும் மாற்றி விளிம்பிற்குத் தள்ளியது மேற்குலகம்.

இந்திய மற்றும் கிழக்குலகில் தன்பால்பணர்ச்சி பற்றிய வரலாறுகள் முறையாக ஆராயப்படவில்லை. இங்கு அது குறித்த நடவடிக்கைகள் குற்றமாகவோ அல்லது பேசக்கூடிய அளவிற்கு ஒரு பிரச்சனைப்படுத்தப்பட்டதாகவோ இல்லை. குறிப்பாக காமசாத்திரத்தில் தன்பால் புணர்ச்சிபற்றிய குறிப்புகள் உள்ளதாக படித்த நினைவு. ஆக, வரலாற்றிலோ சமூக வளர்ச்சியிலோ தன்பால் புணர்ச்சி என்பது இன்றுபோல் ஒரு ஒடுக்கமுறைக்கு ஆளான கருத்தாக இல்லை. பொதுவாக ஐயப்பன் பிறப்பு பற்றிய தொன்மம் இத்துடன் இணைந்து ஆராயத்தக்கது.

அப்புறம் அவர்கள் திருமணம் செய்துகொள்வது தேவையா இல்லையா என்பது அவர்களது குறிப்பான சூழலிருந்து வருகிறது. தவிரவும் திருமணம் என்பது பாலின அடிப்படையில் நடைபெறுவது அல்ல. ஒரு சமூக ஒப்பந்தம் என்கிற அடிப்படையில் அவர்கள் சட்டரீதியான ஒப்பந்தத்தை கோருகிறார்கள். அது அவர்களது உரிமை. அதை மறுப்பது நமது ஆதிக்கம் சார்ந்த உணர்வே. குறிப்பாக திருமணம் என்பது ஒரு புனித ஒப்பந்தம் அல்ல. தன்பால் புணர்ச்சியாளர்கள் தாங்கள் மணம் முடித்த சட்ட அங்கீகாரத்துடன் வாழமுயல்வதில் தப்பொன்றும் இல்லை. திருமணத்தை கூத்தாக மாற்றி அதில் உள்ள புனிதத்தை கிழித்தெறிவதும் இன்று தேவைதானே?

பிறகு விரிவாக இதகுறித்து எனது தனிப்பதிவில் தருகிறேன். தற்சமயம் நேரமின்மையால் இதனை பின்னோட்டமாக இடுகிறேன்.

நண்பர் செல்வன் இதுகுறித்து விரிவாக எழதி உள்ளார். மற்றும் இது குறித்த பண்புடன் குழமத்தில் சுவராஸ்யமான விவாதம் நடந்துள்ளது.

இந்த இணைப்புகளைப் பாருங்கள்.
http://holyox.blogspot.com/2007/07/316-1.html

நல்லதந்தி சொன்னது…

//தவிரவும் திருமணம் என்பது பாலின அடிப்படையில் நடைபெறுவது அல்ல. //

அய்யய்யோ! அடிப்படைக்கே ஆப்பா?

கோவி.கண்ணன் சொன்னது…

//திருமணத்தை கூத்தாக மாற்றி அதில் உள்ள புனிதத்தை கிழித்தெறிவதும் இன்று தேவைதானே?

திருமணம் என்பது பாலின அடிப்படையில் நடைபெறுவது அல்ல. ஒரு சமூக ஒப்பந்தம் என்கிற அடிப்படையில் அவர்கள் சட்டரீதியான ஒப்பந்தத்தை கோருகிறார்கள். அது அவர்களது உரிமை. அதை மறுப்பது நமது ஆதிக்கம் சார்ந்த உணர்வே.
//

ஜமாலன்,

மேற்கண்ட இரு கருத்துக்களும் ஒன்றை ஒன்று மறுப்பதாக இருப்பினும் ஒன்று சமூக அங்கீகாரம் என்று ஒன்று இருப்பதை அவர்களுக்கும் கொடுக்கலாம் என்றும், பொதுவாக திருமணம் என்பதே சமூகத்தின் குறைபாட்டை மறைக்கும் செயல் அல்லது கட்டுப்பாட்டுடன் கூடிய வரைமுறையாக திணித்துக் கொள்ளுதல் என்று தாங்கள் சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் ஓரினசேர்கையாளர்களுக்கு திருமணத் தேவையின் நோக்கம் தான் விளங்கவே இல்லை. சமூகம் ஒப்புக் கொள்ளாததைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சி வழி வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுக்கும் இவர்கள் அதற்கு முற்றிலும் மாற்றாக சமூக அங்கீகாரத்தை கோரும் விதமாக திருமணம் என்ற சடங்கை நாடுவது வேடிக்கையாகவும் முரணாகவும் இருக்கிறது.

தருமி சொன்னது…

//இவ்வளவு நீளமாக எழுதியும் புரியவில்லையா ?//

ஆமாங்க ஆமா ...

திருமணம் என்பதே குழந்தை பெற்று சந்ததி உண்டுபண்ணுவதற்கு மட்டுமே என்பது போல் சொல்வது ஏற்புடைத்ததல்ல ...

கோவி.கண்ணன் சொன்னது…

// தருமி said...
//இவ்வளவு நீளமாக எழுதியும் புரியவில்லையா ?//

ஆமாங்க ஆமா ...

திருமணம் என்பதே குழந்தை பெற்று சந்ததி உண்டுபண்ணுவதற்கு மட்டுமே என்பது போல் சொல்வது ஏற்புடைத்ததல்ல ...
//

ஐயா,

திருமணம் என்னும் சமூக சடங்கின் நோக்கம் பற்றி சொல்லுங்க, திருமணம் செய்து கொண்டவர், பேரப்பிள்ளைக்களை உடையவர் என்பதால் உங்களால் அதுபற்றி கருத்துரைக்க முடியும். அப்படி நீங்கள் சொல்பவை ஓருபாலினர் திருமணத்தில் இருக்கிறதா என்று அறிந்து கொள்கிறேன்.

தருமி சொன்னது…

//திருமணம் செய்து கொண்டவர், பேரப்பிள்ளைக்களை உடையவர் ...//

இந்த qualification இல்லாமலே சொல்லலாமே... ஏன் உங்களுக்கே தெரியாதா என்ன? பிள்ளை பெறுவதற்கு மட்டுமேயா திருமணம்? மணம் செய்துகொண்டு குழந்தை பெறாதவர்களைத் தண்டித்துவிடுவீர்கள் போல் தெரிகிறதே! குழந்தை பெறுவதையும் தாண்டி, உடலின்பத்தையும் தாண்டி மனது தொடர்பான விசய்ங்கள், ஒருவர் ஒருவரை நேசிப்பது இவைகள் அல்லவா முக்கியம். நாம் நம் மனைவிகளை- எதிர் பாலினரை - நேசிக்கிறோம். 'அவர்கள்' அதேபோல் தன்பாலினரை நேசிக்கும்போது சேர்ந்து வாழ மண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தலில் என்ன குற்றம் கண்டீர்கள்?

நமக்கு இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது என்றே நினைக்கிறேன். அதனால் இதற்கு முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்களே. நாம் அதை ஒத்துக் கொள்வதே முறை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த qualification இல்லாமலே சொல்லலாமே... ஏன் உங்களுக்கே தெரியாதா என்ன? பிள்ளை பெறுவதற்கு மட்டுமேயா திருமணம்? மணம் செய்துகொண்டு குழந்தை பெறாதவர்களைத் தண்டித்துவிடுவீர்கள் போல் தெரிகிறதே! //

அது ஒரு நோக்கம் மட்டுமே, அப்படி பெறாதவர்களை தண்டிப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் பிள்ளை பெறுவது உடலியல் கூறுகளையும் சார்ந்தது என்பது தெரியும்.

நேசிப்பின் அடையாளத்தின் சமூக அங்கீகாரம் தான் திருமணம் என்றால், இவர்கள் சமூகத்தைப் பற்றி கவலையே படாதவர்கள், பிறகு ஏன் திருமணம் என்ற சடங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் திருமணங்கள் அனைத்துமே மதச் சடங்காகத்தான் நடைபெறுகிறது, மதங்களில் இவர்கள் திருமணம் ஏற்றக் கொள்ளப்படுவதில்லை என்று தெரிந்தும் மத நம்பிக்கை உடையவர்களான இவர்கள் அதை ஏன் வலியுறுத்த வேண்டும் ?

//நமக்கு இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது என்றே நினைக்கிறேன். அதனால் இதற்கு முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்களே. நாம் அதை ஒத்துக் கொள்வதே முறை.
//

திருமணம் செய்து கொள்ள இவர்கள் வழுவான காரணங்கள் எதையும் சொல்லவில்லை. அந்த செயல் தாழ்வுணர்ச்சியாக தெரிவதால் அதிலிருந்து மீளவே திருமணச் சடங்கை நாடுகிறார்கள் என்று மட்டும் தான் நினைக்கத் தோன்றுகிறது. ஒப்புக் கொள்ள தயார்தான். ஆனால் அந்த செயல்பற்றிய விளக்கங்களை அவர்கள் சொல்ல வேண்டும்.

தருமி சொன்னது…

//இவர்கள் சமூகத்தைப் பற்றி கவலையே படாதவர்கள்,//

மிகத்தவறு. நாம்தான் அவர்களை ஒதுக்கி வைக்கிறோம்.

//திருமணங்கள் அனைத்துமே மதச் சடங்காகத்தான் நடைபெறுகிறது,//

என்னங்க இப்படி தப்பு தப்பா சொல்றீங்க! நீங்க எந்த மத அடிப்படையில் திருமணம் செய்து கொண்டாலும் அரசின் முத்திரை கட்டாயம் தேவை என்று சொல்லிக் கொண்டு இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் போய் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்!!

//நேசிப்பின் அடையாளத்தின் .... அதை ஏன் வலியுறுத்த வேண்டும் ?//

இந்தப் பத்தியே தகராறாக (!) இருக்கிறது.

//திருமணம் செய்து கொள்ள இவர்கள் வலுவான காரணங்கள் எதையும் சொல்லவில்லை.//

அவர்கள் செயலில் காட்டுவதை நாம் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை என்பதே உண்மை.

//அந்த செயல் தாழ்வுணர்ச்சியாக தெரிவதால் அதிலிருந்து மீளவே ..//

எப்படி இதைக் கூறுகிறீர்கள்?

அவர்களின் பார்வை - perspectives - என்னவென்பதை நாமெப்படி அறிவோம்?

நீங்களும் நானும் இந்த விஷயங்களை இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறோம். ஆக்வே நீங்கள் சொல்வதையெல்லாம் நான் initial hiccups / starting problems என்றே கருதுகிறேன்.

Santhosh சொன்னது…

//மேலை நாடுகளில் ஒத்தப்பாலின ஈர்ப்பில் நட்பு என்ற ஒன்று இருப்பதே அறியாதவர்களாக இருந்து அவற்றை பாலின தேவையுடன் தொடர்பு படுத்தி ஒருபாலின் நட்பு என்பதே ஓரின சேர்க்கையாகவே புரிந்து கொள்ளப்படுகிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது. நம் இந்தியா போன்ற நாடுகளில் மிக நெருங்கிய நண்பர்கள் கைகோர்த்து நடப்பதும், ஒரே படுக்கையில் படுப்பதெல்லாம் இயல்பு. ஹாஸ்டல் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்பவர்களின் நெருக்கம் ஒரே சிகெரெட்டை இருவரும் புகைப்பது முதல் பலவற்றில் அவர்களின் அன்பின் ஆழம் இருக்கும். மேலை நாடுகளில் இதுபோல் இரு ஆண்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் ஓரின ஈர்பில், ஓரின புணர்ச்சியாளர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.//

நெருக்கமான நண்பர்கள் குறித்தான் உங்களின் கருத்துக்கு.. இதற்கு உளவியில் ரீதியாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் personal space or space for Individual person மிகவும் குறைவு எனவே மக்கள் உளவியல் ரீதியாகவும் physically நெருக்கமாக பழகுவதை விரும்புவர் ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு மக்களின் personal space மிக அதிகம் அதனால் அவ்வாறு இருக்க விரும்ப மாட்டார்கள்..

//ஓரின புணர்ச்சியாளார்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் இணையர்களின் நம்பிக்கை எதிராக இருக்கமாட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இவர்களின் மனதை வசப்படுத்தும் இன்னொரு கவர்சியான ஆடவன் கிடைத்தால் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை எல்லாம் உடனடியாகவே தொலைந்துவிடும்.//

ஆமாம் மேலை நாடுகளில் சாதாரண திருமணம் போன்றே இதிலும் திருமண முறிவுகள் நிகழும். என்னுடன் வேலை பார்த்த நண்பருக்கு அப்பொழுதே 2 ஆவதோ அல்லது 3 ஆவது boy friend. எனக்கு தெரிந்த வரையில் சாதாரண திருமணங்களை போன்றே they have their own rules like they wont date while they are married இது மாதிரி..


// மேலை நாடுகளில் ஆண்கழிவரைகளில் சில ஆண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள், பார்க்கப்படும் ஆண்கள் இவர்களை பார்த்துவிட்டால் சிரிப்பார்கள், பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ?//

நல்ல நகைச்சுவை கோவி.. என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் Gay ஆனால் அவருடன் பேசியதில்/பழகியதில் இது போல் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்று தோன்ற வில்லை... இந்தியாவில் இது போல் நிறைய பார்த்துள்ளேன் மேலை நாடுகளில் எனக்கு தெரிந்த வரையில் அவ்வாறு கிடையாது.. மேலும் அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு சமூகம் போல் அமைத்துக்கொண்டு அதில் உள்ள மற்ற Gay மக்களுடன் வாழ்வார்களேயன்று மற்ற பொது மக்களை அவர்கள் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.

//ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதெலலம் கேலிக் கூத்துதான். அதன் தேவை இல்லாமலே, எந்தவித சமூக அங்கீகாரமும் இல்லாமல் இவர்களால் அதைத் தொடரமுடியும். ஆண்பெண் இருபாலருக்கான சமூகம் ஆக்கி இருக்கும் திருமணம் என்கிற சடங்கை இவர்களும் செய்து கொள்வோம் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என்கருத்து.//
அப்படி இல்லை கோவி.. இந்தியா போன்ற நாடுகளில் வேண்டுமானால் எவ்வித பயனும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் திருமணமானோருக்கு நிறைய benefits உண்டு அதை அவர்கள் பெற முயல்வதில் தவறேதும் இல்லையே?

//இதுபோன்றவர்களை நம்பி தத்துக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம் தான். அப்படியே வளர்த்தாலும் இவர்களைப் போல் இல்லாமல், அதாவது இவர்களைப் பின்பற்றாமல் சுயமாக (எதிர்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களாக) வளர்த்து எடுப்பார்களா என்பதும் சந்தேகமே.//
எனக்கு தெரிந்த வரை எந்த நாட்டிலும் அவர்களுக்கு இந்த உரிமை கொடுக்கப்படவில்லை.. ஏனெனில் அவர்கள் வளர்த்த குழந்தைகள் எதிர்பாலின் ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்களா என்ற சந்தேகம் தான்...

Santhosh சொன்னது…

பெரும்பாலானோர் சொல்லி இருக்க மாதிரி இதுல நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு சத்தியமா புரியலை :))...

வருண் சொன்னது…

கோவி கண்ணன்!

அவங்க கல்யாணம் செய்து கொண்டால், சடங்கு செய்துகொண்டால் நமக்கென்னங்க?

நம்ம போய் வாழ்த்த வேண்டிய அவசியமோஅல்லது அதத கேலி பண்ண வேண்டியதோ தேவை இல்லை

அவங்க ஏன் கல்யாணம் செய்து கொள்ளனும்?

அமெரிக்கா போன்ற நாடுகளில், இப்போ லைஃப்-பார்ட்னெராக இருந்தால்தான் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவற்றில் "டிப்பெண்டெண்ட்ஸ்" ஆக சேர்க்கமுடியும். சும்மா பாய்-ப்ரெண்டாவோ, கேர்ள்-ஃப்ரெண்டாவோ இருந்தால் முடியாது.

அதற்காகவும் திருமணம் என்பது அவர்களுக்குள் தேவைப்படுவதாக சொல்கிறார்கள்.

Sridhar Narayanan சொன்னது…

ஜமாலம் மற்றும் தருமியின் கருத்துகள் மிக அருமை.

ஏற்கெனவே செல்வனின் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

நீங்கள் திருமணத்தை மதச் சடங்காக மட்டும் பார்க்கிறீர்கள். அதையும் தாண்டி சமூகத்தில் திருமணம் என்ற Instituition-ன் தேவை நிறையவே இருக்கிறது. இணைந்து வாழ விரும்புவர்களுக்கு திருமண ஒப்பந்தம் அரசு அங்கீகாரம் (recognition) பெற்று தருகிறது.

அவர்கள் இணைந்து வாழ அரசு அங்கீகாரம் கேட்கிறார்கள். அதை நீங்கள் உங்கள் பார்வையில் திருமணமாக அர்த்தப் படுத்திக் கொண்டு கேலி செய்கிறீர்கள் :((

எதற்கு அரசு அங்கீகாரம் தேவை என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

NONO சொன்னது…

//திருமணம் என்ற அமைப்பே சமூகம் தொடர்புடையது//

ஒரேபாலில் நாட்டம் கொண்டவர்களும் சமுகத்துக்குள் அடங்குவார்கள்.

//இருபாலார் திருமணம் செய்து கொள்ளும் போது அவை ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலப் பயனாக சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள்//

எல்லா இருபாலாராலும்
முடியாதது!

//திருமணம் என்னும் சடங்கின் வழி//

திருமணம் சடங்குமட்டும் சார்ந்தது அல்ல!

//அவர்களிடம் இருக்கும் குறையாக நினைப்பது என்னவென்றால், நல்ல நட்பிலும் ஒத்த பாலினரிடம் நெருக்கமாக இருக்க முடியும் என்று அவர்கள் அறிந்ததில்லை//

இருபால் நாட்டங்கொண்டவர்களுக்கு ஆண் / பெண் நன்பராக இருப்பதை பார்தது இல்லையா?

//இவர்களின் மனதை வசப்படுத்தும் இன்னொரு கவர்சியான ஆடவன் கிடைத்தால் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை எல்லாம் உடனடியாகவே தொலைந்துவிடும்//

இருபால் நாட்டங்கொண்டவர்களுக்கும் பொருந்தும், எதுக்கும் 100% உத்தரவாதம் இல்லை.

//சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள்//

நாக்க தொங்கப்போட்டுக்கொண்டு "அலை"பவர்கள் எல்லா பால்வகையிலும் உண்டு.

//எனக்கு தெரிந்த வரை எந்த நாட்டிலும் அவர்களுக்கு இந்த உரிமை கொடுக்கப்படவில்லை.. ஏனெனில் அவர்கள் வளர்த்த குழந்தைகள் எதிர்பாலின் ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்களா என்ற சந்தேகம் தான்...//

இங்கு சென்று பாக்கவும்...

http://en.wikipedia.org/wiki/Adoption_by_same-sex_couples

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

///ஆண்பெண் இருபாலருக்கான சமூகம் ஆக்கி இருக்கும் திருமணம் என்கிற சடங்கை இவர்களும் செய்து கொள்வோம் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என்கருத்து.///

ஆமாங்க

நசரேயன் சொன்னது…

நல்ல வேளை, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஒரு பெண்ணோட

கிஷோர் சொன்னது…

//இவையே திருமணம் என்னும் சடங்கின் வழி ஆண்/பெண் இருபாலரும் அடையும் நன்மை//

திருமணத்தை வெறும் நன்மைக்காக செய்யும் விஷயமாக நான் கருதவில்லை.

உணர்வு சார்ந்ததாக இருப்பின், பால் வித்தியாசம் அடிபட்டுபோகிறது.

கொண்டோடி சொன்னது…

கண்ணன்,
அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகும் போராட்டம் தொடர்பில் உங்கள் நிலையை வைத்தே உங்களின் இந்தக் கருத்தை மிகச் சுலபமாக உடைத்துவிடலாம்.
தேவையிருக்கிறதோ இல்லையோ, உது அவர்களின் உரிமை. அதற்காக அவர்கள் போராடுகிறார்கள்.

இரட்டைக் குவளை முறை தொடர்பான விவாதத்தில், 'நீங்கள் ஏன் அவர்களிடம் போராடுகிறீர்கள்? முடிந்தால் உங்களுக்கென்று தனிக்கடை போட்டுக் கொள்ளுங்கள்' என்பது போல 'டோண்டுத்' தனமாக இருக்கிறது உங்களின் இந்த வாதம். 'உங்களுக்குத் தான் இறைபத்தி இல்லையே? பிறகேன் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டம்? என்று போராடுபவர்களைப் பார்த்துக் கேட்பதுடனும் ஒப்பிடலாம் உங்கள் வாதத்தை.

நீங்கள் தற்பாலுறவாளரின் திருமண அங்கீகாரத்துக்கான போராட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்ற தகவலைத் தவிர உங்கள் இந்த நீண்ட இடுகையில் தர்க்கமேதுமில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,

எனது மறுமொழி,

திருமணம் என்ற சொல்லை நான் சமூக நலன் நோக்குடன் தான் பார்க்கிறேன். திருமணம் அதன் வழி சந்ததியைப் பெருக்கிக் கொள்வது இதுவே நடைமுறை. அப்படி ஆண் பெண் திருமணத்தில் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்களும் இருக்கிறவர்கள் உண்டு, உடலியல் குறைபாட்டால் பெற முடியாதவர்களும் உண்டு, ஆனால் அவை விழுக்காட்டு அளவில் குறைவே, எனவே அதைக் கொண்டு வந்து ஓரின திருமணத்துடன் ஒப்பிடுவது சரி இல்லை என்றே நினைக்கிறேன்.

வெறும் இன்சுரன்சுக்காகவும், உயில் மட்டும் பிற சொத்து சட்டப் பாதுகாப்புக்கும் மட்டுமே இத்தகைய ஓரின திருமணங்கள் அவர்களுக்கு தேவையாகிறது என்று சொல்லும் போது, சொத்துரிமை சட்டத்தை திருமணத்துடன் தொடர்ப்பு படுத்தியதால் தான் அவர்கள் திருமணம் நாடிச் செல்கிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

வருண் சொன்னது…

****கோவி.கண்ணன் 10:00 AM, November 10, 2008
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,

எனது மறுமொழி,

திருமணம் என்ற சொல்லை நான் சமூக நலன் நோக்குடன் தான் பார்க்கிறேன். *****

அந்த சமூகத்தில் ஓரின சேர்க்கை செய்பவர்கள் இல்லையா?

*****திருமணம் அதன் வழி சந்ததியைப் பெருக்கிக் கொள்வது இதுவே நடைமுறை. அப்படி ஆண் பெண் திருமணத்தில் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்களும் இருக்கிறவர்கள் உண்டு, உடலியல் குறைபாட்டால் பெற முடியாதவர்களும் உண்டு, ஆனால் அவை விழுக்காட்டு அளவில் குறைவே, எனவே அதைக் கொண்டு வந்து ஓரின திருமணத்துடன் ஒப்பிடுவது சரி இல்லை என்றே நினைக்கிறேன்.****

ஆக, உங்கள் வாதப்படி விழுக்காட்டில் குறைவாக இருந்தால் அவர்கள் உணர்வுகள் முக்கியமல்ல என்கிறீர்களா?

உடல் ஊனமுற்றோரும் விழுக்காடில் குறைவுதான். அவர்கள் உணர்வுகளை நாm மதிப்பதில்லையா?

கண்ணன்!

ஓரினச்சேர்க்கை என்றாலே அருவருப்பாக நினைத்தோம்.இன்று அதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வந்துள்ளது. அதனால் தான் ஒரு * மட்டுமே உங்கள் திரி பெற்றிருக்கிறது.

அவர்கள்திருமணத்தையும் அதன் தேவையையும் புரிந்துகொள்ளும் நாள் வர்த்தான் போகிறது.

* கடைசியாக ஓரின சேர்க்கையில் செய்யும் "ஆனல்" மற்றும் "ஓரல்" செக்ஸை ஹெட்டெரோ செக்ஸுவலும் செய்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்! அப்போ அவர்களும் "அப்நார்மல்" தான் என்பதை மறந்துவிட வேண்டாம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்ணன்!

ஓரினச்சேர்க்கை என்றாலே அருவருப்பாக நினைத்தோம்.இன்று அதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வந்துள்ளது.//

அதன் பெயர் சகிப்புத்தன்மை தான் !

/* கடைசியாக ஓரின சேர்க்கையில் செய்யும் "ஆனல்" மற்றும் "ஓரல்" செக்ஸை ஹெட்டெரோ செக்ஸுவலும் செய்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்! அப்போ அவர்களும் "அப்நார்மல்" தான் என்பதை மறந்துவிட வேண்டாம்!//

பாலியல் செயல்பாடுகளைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லையே. வாரிசுகளைப் பெற்றுக் கொள்ள, இன்னார்க்கு இன்னார் தாய் தந்தை என்று சட்டப்படி பிறர் அறிவதற்கும், சமூக நலன்னோக்கிறகானது என்று நான் திருமணம் குறித்த புரிதலுடன் இருக்கிறேன்.

இவர்கள் திருமணத்திற்கு செல்வதும் கூட சொத்து உரிமைக்கு மட்டும் தான் என்றால் அது தேவையற்றது என்பதாக நினைக்க முடிகிறது. மேலும் அவர்களுக்கு(ள்) சொத்துக்களை விரும்பியவர்களுக்கு வழங்க அவர்களுக்கு சட்டத்தில் இடமளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

செக்ஸுவல் ஒரியண்டேசன் எவற்றிற்கும் திருமணம் அங்கீகாரம் கொடுக்கலாம் என்கிறீர்களா ?

வருண் சொன்னது…

கண்ணன்!

மனிதருக்கு ஒரு துணை தேவை. காதல், காமம்,அன்பை பரிமாறிக் கொள்ள. அந்தத்துணைத்தான் தன் வாழ்க்கைத் துணையாக்குகிறார்கள்.
அதற்குத்தான் அந்ததுணையை திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அந்தத் துணைவர்கள், ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண் எப்படி வேணா இருக்கலாம்.

இதுதான் என்னுடைய இன்றைய புரிதல் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்தத் துணைவர்கள், ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண் எப்படி வேணா இருக்கலாம்.
//

சரியாக சொல்லத் தெரியவில்லை, சட்டம் அனுமதி கொடுக்கும் சிலவற்றை நாம் சமூக நோக்கிற்காக செய்வது இல்லை. சமூகத்தை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது. விருப்பப்பட்டவர்கள் அப்படி வாழ வேறு சில சட்ட உதவிகளை நாடலாம், அவர்களுக்காக சட்டத் திருத்தங்களைக் கூடச் செய்யலாம். ஆனால் அவற்றை திருமணத்தின் பெயரால் செய்வது ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

வயது வந்த அண்ணன் - தங்கை மணப்பதை ஏற்போமோ ? இது ஒரு வாதத்திற்குச் சொன்னாலும் ஓர்பாலின திருமணத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது தெரியும். அனைத்து சமூகத்திலிருக்கும் சில பொதுவான கோட்பாடுகளில் இருந்து விலகுதல் என்பதால் இதனை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை. அவர்கள் விருப்பப்படி செய்து கொள்வதை யார் தான் தடுக்க முடியும். எனது கருத்தை மட்டும் தான் இங்கே கூறினேன்.

Robin சொன்னது…

கோவி கண்ணன் அவர்களுடைய கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன். தனி மனித சுதந்திரம், தனி மனித சந்தோசம் என்று மனிதன் வாழ்க்கையின் ஒழுக்க நெறிகளை புறக்கணித்து வாழ்வதை ஒரு பெருமையாக நினைப்பது இந்த சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

Robin சொன்னது…

ஒரு சில கட்டுப்பாடுகள்தான் மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும் முக்கியமான காரணிகள். ஆனால் தற்போது மனிதன் மனிதனாக இருப்பதைவிட மிருகநிலைக்கு போவதையே விரும்புகிறான்.

Bharath சொன்னது…

சுத்தமாக பிரச்சினையை புரிந்து கொள்ளமல் எழுதப்பட்ட கட்டுரை.. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மேல் ஜாதி ஹிந்து.. இரட்டை குவளை முறையை பற்றி எழுதியதுபோல் இருக்கிறது..

ஜமாலன் மற்றும் தருமி அய்யாவின் விளக்கங்கள் தங்களை கொஞ்சமாவது தெளிவு படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்..


//ஓரின புணர்ச்சியாளார்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் இணையர்களின் நம்பிக்கை எதிராக இருக்கமாட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இவர்களின் மனதை வசப்படுத்தும் இன்னொரு கவர்சியான ஆடவன் கிடைத்தால் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை எல்லாம் உடனடியாகவே தொலைந்துவிடும். மேலை நாடுகளில் ஆண்கழிவரைகளில் சில ஆண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள், பார்க்கப்படும் ஆண்கள் இவர்களை பார்த்துவிட்டால் சிரிப்பார்கள், பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ? //

அபாண்டமான வரிகள்.. Maybe you should consider withdrawing this statement..

கோவி.கண்ணன் சொன்னது…

//அபாண்டமான வரிகள்.. Maybe you should consider withdrawing this statement..//

கழிவறைகளிலும், நீச்சல் குளத்தின் உடைமாற்றும் இடங்களிலும் பொதுவாக நடப்பவைதான். அப்படி பார்க்கப்படுபவர்களில் பலர் சகித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். நீங்கள் சொல்வது போல் இவர்களில் ஆண் - ஆண் அல்லது பெண் பெண் உறவை புனிதமாக கருதுபவர்கள் மிகச் சிலரே என்று மட்டும் நினைக்க முடிகிறது. அப்படி இருக்கும் அந்த மிகச் சில 'தெய்வீக காதலர்களுக்கு' திருமணம் என்கிற சடங்கு தேவையா ?

தருமி சொன்னது…

//அந்த மிகச் சில 'தெய்வீக காதலர்களுக்கு' திருமணம் என்கிற சடங்கு தேவையா ..//

ரொம்பச் சரிங்க .. நீங்க பிடிச்ச முயலுக்கு மூணே கால்தான்!

வர்ட்டா ...

Sanjai Gandhi சொன்னது…

தலைப்பில் Adults Only என்று போடாமல் என்னைப் போன்ற பொடியனை எல்லாம் இங்கு வரவழைத்ததற்கு வன்மையான கண்டனங்கள். :)

வருண் சொன்னது…

****வயது வந்த அண்ணன் - தங்கை மணப்பதை ஏற்போமோ ?****

மாட்டோம்.

இன்செஸ்ட் தவறானது என்பது என் கருத்தும்.

இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கனும்.

இன்செஸ்ட் எல்லா மேலை நாடுகளிலும் சட்டவிரோதம்.

அமெரிக்காவில் க்ராஸ் கசின் திருமணம்கூட சட்டவிரோதம்.

ஜெனெடிக்கலா இண்செஸ்ட் துணைகளூக்கு "ரிட்டார்டெட்" குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

ஓரினச்சேர்க்கையிலும், அண்ணன் - தம்பி, அக்கா-தங்கை சட்டவிரோதம் தான்.

Bharath சொன்னது…

// இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ?//

இதைத்தான் முழுவதுமாக மறுத்திருந்தேன்.. காலம் முழுவதும் ஓரே துணை என்ற கான்சப்ட் இந்தியா முதற்க்கொண்டு எல்லா நாடுகளிலும் போயாச்சு.. அந்தந்த கால்கட்டத்தில் ஓரு துணை அதற்கு விசுவாசமாய் இருத்தல் என்ற சித்தாந்தம் எல்லோருக்கும் பொறுந்தும்.


கொண்டோடி மிக அழகாக கேட்டிருக்கிறார்.. அவர் மற்றும் வருணுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன்..

Sanjai Gandhi சொன்னது…

அண்ணாச்சி ஓரினச் சேர்க்கை என்பதும் அவர்கள் திருமணம் செய்துக் கொள்வதும் அருவெருப்பான சங்கதியாய் இருந்தாலும் கூட சக மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத இரண்டு பேரின் தனிப்பட்ட உணர்வுகளை எபப்டித் தடுக்க முடியும்? அதை எபப்டி கேலி கூத்தாய் பார்க்க முடியும்?

//திருமணம் என்ற அமைப்பே சமூகம் தொடர்புடையது,//
இதெல்லாம் ஏத்துக்க முடியாதுங்ணா.. இப்படித்தான் சமூகம் சமூகம்னு சொல்லி ஆரம்பத்துல ஜாதி ரீதியா கட்டுபடுத்தினாங்க.. சமூகம் தொட்ர்புடைய எல்லாம் மாற்றியமைக்கத் தக்கதல்ல என்று எடுத்துக் கொள்ள முடியாதுங்ணா..

இந்த வகை திருமணங்களால் சக மனிதனுக்கு என்ன பாதிப்பு என்று சொல்லுங்க( எனக்கு தெரியவில்லை ).. எற்றுக் கொள்ளக் கூடிய காரணம் இருந்தால் ஏற்றுக் கொள்வோம்.

Sanjai Gandhi சொன்னது…

//குசும்பன் said...

//இவ்வளவு நீளமாக எழுதியும் புரியவில்லையா ?//

அதுனால் தான் புரியவில்லை:((//

மங்களூரேய்ய்ய்ய்ய்ய்.. :))

Sanjai Gandhi சொன்னது…

//திருமணங்கள் அனைத்துமே (சுயமரியாதைத் திருமணம் தவிர்த்து) அனைத்துமே மதம் சார்ந்த சடங்குகள் தான், மதம் ஓரின திருமணத்திற்கு, ஓரின கூடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவை,பிறகு ஏன் இவர்கள் மதம் சார்ந்த திருமணத்தின் அங்கீகாரம் கோரவேண்டும்.ஓரின திருமணம் என்பது தங்கள் செயலை புனிதப்படுத்துக் கொள்ள முயலும் செயலாகத்தான் தெரிகிறது.//

அப்போ அவர்களும் சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்டால் எற்றுக் கொள்ளலாம் என்கிறீர்களா? :)

SurveySan சொன்னது…

////மனநோய் இல்லை என்றாலும் சுயநலம் என்பதின் உச்சம் தான் ஓரின பால் தொடர்பு, அதாவது தான் விரும்பிய வாழ்கையை மட்டுமே வாழ்வது. ///

அப்படியா? இடு ஏதோ மருத்துவ ரீதியான டிஃபெக்ட் என்பது என் எண்ணம். அப்படிதான் பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன்.
பாக்கரதுக்கும் ரொம்ப வித்யாசமாதான் தெரீவீங்க, இந்த ஓ.இ.சே ஆட்கள்.

என்ன இருந்தாலும், மற்றவர்கள் வாழ்க்கை முறையை, அங்கீகரிக்கும் உரிமை நமக்கில்லை என்பது என் கருத்து.
அடுத்தவனுக்கு கஷ்டம் தராதவரை, எல்லாம் ஓ.கே.

ஜோ/Joe சொன்னது…

//இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ?//

என்ன வாதம் இது ? பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்களுக்கும் விருப்பம் ஒரே பெண்ணுடன் முடிகிறதா என்ன? பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் தேவைப்படுகிறது.

இந்த விடயத்தில் என்னைப் பொறுத்தவரை ..திருமணம் என்னும் சடங்கை மத ரீதியாக செய்பவர்கள் கூட சட்ட ஆங்கீகாரம் வேண்டி அதை அரசாங்கத்தில் பதிகிறார்கள் ..ஓரின சேர்க்கையாளர்கள் கேட்பது இந்த இரண்டாவது விடயத்தைத் தான் ,அதாவது சட்டபூர்வமாக அதை பதிந்த்து கொள்ளும் அங்கீகாரம் வேண்டும் என்பதே ..அதை எதிர்ப்பதற்கு நமக்கு உரிமை இல்லை ..ஆனால் மதமும் இதை அங்கீக்கரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தால் அந்தந்த மத நம்பிக்கையுள்ளவர்கள் எதிர்க்கவோ,ஆதரிக்கவோ உரிமையுண்டு.

நவநீதன் சொன்னது…

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தில் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது...

அன்பு என்பது பொதுவானது. ஆண் மேலும் அன்பு வைக்கலாம். பெண் மேலும் அன்பு வைக்கலாம். அது அவரவர்களுடைய ஈர்ப்பை பொறுத்தது.

திருமணம் சமூகத்திற்காக செய்யப் படுவதா? இது மாற்றுமொரு சர்ச்சைக்குரிய கேள்வி. இது அவரவர் பார்வையை பொறுத்தது. திருமணம் சமூகத்திற்கு இவர்கள் கணவன் மனைவி என்று சொல்வதற்கு தேவைப்படுகிறது என்றால் அந்த பந்தமே தேவையில்லை. ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே வாழலாம். ஒரு சமூகத்திற்கு சொன்ன பின்னால் தான் அதற்க்கு பயந்து உங்களால் உண்மையாக வாழ முடியுமா...? உங்களுக்கு என்று மன சாட்சி இல்லையா?

ஓரின சேர்க்கை சுயநலம் சார்ந்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். சமூகம் அவர்கள் குழந்தை பெற்று சமூகத்தை விருத்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது சமூகத்தின் சுயநலம் இல்லையா?

என்கருத்து என்னவென்றால் மாற்றங்கள் மாறாதது. ஒரு காலத்தில் கிரேக்கத்தில் அங்கிகரிக்கப் பட்ட ஓரின சேர்க்கை, இன்று குற்றமாக கருதப்படுகிறது. நாளையே இது அங்கிகரிக்கபடலாம். அப்போது இதே கோவி கண்ணன், அதில் உள்ள சிறப்புகளை பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதலாம். யாருக்கு தெரியும்??

rapp சொன்னது…

இதில் ஜமாலன், சந்தோஷ், வருண், தருமி கருத்துக்களை வழிமொழிகிறேன். இங்கு நான் கூறுவது பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்பதுப் போலத் தோன்றினாலும் இவ்விஷயத்தில் எனக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், தவறாகக் கூறவில்லை. ஆனா நீங்க ஓரினச் சேர்க்கயாளர்களைப் பற்றி ஒரு மேலோட்டமான கண்ணோட்டத்தில் எழுதியிருக்கீங்கன்னு தோனுது. அவங்க என்னமோ டேஸ்டே இல்லாத ஆட்கள் மாதிரியும், சான்ஸ் கிடைத்தால் யாரோடும் இணைவார்கள் என்பது போலவும் இருக்கிறது. ஆனா அவங்க உண்மையில் பயங்கர கிளாஸ் டேஸ்ட் உள்ளவர்கள். பேஷன் உலகம் மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் இவர்களே பெரும்பான்மையாக இருப்பதற்கு இதுவே காரணம். உலகப் புகழ்பெற்ற பல டிசைனர்கள் ஓரினச் சேர்க்கயாளர்களே.

அதுப்போல அவர்கள் straight sex மக்களோடு உறவு கொள்ள விரும்புபவர்கள் போல் இங்குக் கூறப்பட்டுள்ளது. அது சுத்தமாக அவர்களின் உரிமைகளை மதிக்காத, சட்டத்தை மீறிய குற்றமாகக் கருதும் இடங்களில் வேண்டுமானால் வேறுவழியில்லாமல் சிலசமயங்களில் இருக்கலாம். ஆனால் நார்மலான சட்ட திட்டங்கள் உள்ள நாடுகளில் இவ்வாறு இருப்பதில்லை. பயர் படத்தில் கூறப்பட்ட கோணம் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். காரணம் என்னவென்றால் அவர்கள் பெர்சனலாக, தங்களை மிக மிக நன்றாக வைத்துக் கொள்வார்கள். அலங்காரம்(groom) செய்து கொள்வதில் அவர்களுக்கு இணையாக யாரையும் கூற முடியாது. பிசிகல் அபியரன்சாக அவர்கள் எதிர்பார்ப்பு என்பது வேறு, straight sex மக்களின் எதிர்பார்ப்பு வேறு.

பிளஸ் அவர்கள் தங்கள் இணைக்கு விசுவாசமாக இருப்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பல நாடுகளில் சர்வசாதாரணம். அதோடு மேலே பலர் குறிப்பிட்டுள்ள காரணங்களும் அடங்கும்.

திருமணம்ங்கறது வெறும் குழந்தைப் பிறப்பிற்காக என்பதை துளிக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

rapp சொன்னது…

முதலில் அவர்கள் அப்நார்மல் என்னும் கருத்தே தவறு என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தால் தான் இப்படிப்பட்ட கருத்துக்கள் தோன்றுகின்றன

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
முதலில் அவர்கள் அப்நார்மல் என்னும் கருத்தே தவறு என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தால் தான் இப்படிப்பட்ட கருத்துக்கள் தோன்றுகின்றன

8:27 PM, November 10, 2008
//

நான் அவர்கள் அப்நார்மல் என்று சொல்லவில்லை. 50 வயது பெண்ணை 25 ஆடவன் விரும்புவதையெல்லாம் மேலை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை. ஓரின திருமணம் குறித்து ஓரளவு சகிப்புத்தன்மைக்கு வந்திருக்கிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது, இன்னும் ஜோடி மாற்றிக் கொள்ளுதல் மற்றும் ஏனைய பாலியல் விருப்பு குறித்தான பழக்க வழக்கங்கள் கூட அவர்களிட்ம் இருக்கிறது. ஓர்பால் திருமணம் எல்லா இன சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளப் படும் போது மட்டுமே அவை சரி என்று சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன்.

காதல் திருமணத்தையே ஏற்க முடியாத நம் இந்திய சமூகத்திற்கு இது போன்ற திருமணங்களை ஏற்கும் மன நிலையெல்லாம் வெகுவிரைவில் ஏற்படும் என்றெல்லாம் நினைக்க முடியாது.

இந்த கட்டுரை எழுதி இருப்பதற்குக் காரணம் நா.கனேசன் பதிவில் ஓர்பால் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதையும் சுட்டி எழுதி இருந்தார். முற்பட்ட சமூகத்தில் கிளம்பும் எதிர்ப்பு வெறும் மதக்காரணங்களால் மட்டுமே ஏற்படுபவை என்று என்னால் நினைக்க முடியவில்லை. பால் உறவை சமூக ஒழுங்காகத் தான் அவர்களும் நினைக்கிறார்கள் என்றே கொள்ள முடிகிறது.

மற்றபடி அவர்கள் திருமணம் செய்தாலும் சேர்ந்து வாழ்ந்தாலும் நாம் என்ன செய்ய முடியும். என்னைப் பொருத்து இத்தகைய உறவுகள் இயற்க்கைக்கு மாற்றாக தெரிகிறது. பாலியல் தேவையை மனப்படி நிறைவேற்றிக் கொள்வதும் இயற்கைதான் என்று சொல்லிவிட்டால் இப்படித்தான் வாழவேண்டும் என்னதல்ல எப்படியும் வாழலாம் என்பதை சமூகம் அங்கீகரிப்பதாகவும் நினைக்கிறேன்.

நாளைக்கு குழுவாக பாலியியல் ஈடுபடுவர்களும் அவர்களைப் பற்றி வெளியே சொல்லி, நாங்கள் குழுவாக திருமணம் செய்துக் கொள்ளப் போகிறோம் என அங்கீகாரம் கேட்கும் போது அதற்கும் அங்கீகாரம் தர தயாராகவே இருங்கள். ஏனென்றால் பாலியல் தேவையை மனப்படி நாடுவது நார்மல் தான் என்ற சித்தாந்தப்படி அதுகூட சரிதானே.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இருவர் ஒருவருக்கொருவர்(ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும், ஆணும்-பெண்ணும்) விருப்பப் பட்டால் யார் வேண்டுமானாலும் யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கு வழிவகை செய்யப் படவேண்டும். இது திருநங்கைகளுக்கும் பொருந்த வேண்டும் என்பது என்னுடைய உள் மன ஓட்டம்.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிபாரதி, ஆணும் பெண்ணும் திருமணத்தை மூன்றாவதாக தள்ளி விட்டுட்டிங்களே இது அடுக்குமா ?

:)

திருநங்கைகள் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் ஆண் உடலில் வாழும் பெண் என்பதால், உறுப்புகளைக் கூட அறுவை செய்து மாற்றிக் கொள்கிறார்கள். இந்த கட்டுரை அவர்களைக் குறித்து எழுதவில்லை.

ஆணும் ஆணும் திருமணச் சட்டத்தில் மணமுறிவின் போது வாழ்விழப்பு தொகை வழங்கப்படுகிறதா ? எனக்கு தெரியவில்லை. என்.கனேசன் பதிவில் SK என்பவர் அவர்கள் திருமணம் நாடிச் செல்ல பொதுவான காரணங்களைச் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

இவர்கள் இருவருக்குமான உரிமைகளை சட்டங்களில் வரையறுத்து இருவரின் ஒப்புதல் பேரில் அவர்களுக்கிடையான ஒப்பந்தமாக பதிவு செய்து வைக்கலாம். ஆனால் திருமணம் என்னும் சமூகச் சடங்கு ..... என்னைப் பொறுத்து ஏற்க முடியவில்லை :(

புருனோ Bruno சொன்னது…

//எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் திருமணம் செய்வதும் சட்ட அங்கீகாரம் கோருவதும் தேவையில்லை என்கிறீர்கள். ஆனால் அதில் என்ன தவறு என்று சொல்லவே இல்லையே? //

உதாரணமாக ஒருவர் தரையிலிருந்து 20 மாடிக்கு 10 தடவை ஏறி இறங்குவது தவறல்ல

தேவையும் அல்ல :)

புருனோ Bruno சொன்னது…

//விருப்பபடி வாழ்வதற்கு எதற்கு திருமணம் கோருகிறார்கள் என்பதே கேள்வி. //

???

//ஆனால் ஓரினசேர்கையாளர்களுக்கு திருமணத் தேவையின் நோக்கம் தான் விளங்கவே இல்லை. சமூகம் ஒப்புக் கொள்ளாததைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சி வழி வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுக்கும் இவர்கள் அதற்கு முற்றிலும் மாற்றாக சமூக அங்கீகாரத்தை கோரும் விதமாக திருமணம் என்ற சடங்கை நாடுவது வேடிக்கையாகவும் முரணாகவும் இருக்கிறது.//

இதற்கு விடை என்ன

--

கோவியாரே உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது :)

ஜெயச்சந்திரன் சொன்னது…

//ஆனால் திருமணம் என்னும் சமூகச் சடங்கு ..... என்னைப் பொறுத்து ஏற்க முடியவில்லை :(//

இந்த விடத்தை சொல்ல இவ்வளவு நிண்ட தெளிவில்லாத வள வளா கொள கொளா பதிவு தேவை தானா?

2 வரி யே போதுமே.

அடுத்தது தலைப்பு "திருமண கூத்து" .... இது இரு பால் திருமணம் செய்பவரையும் பார்த்து கேட்கலாம் என்ன கூத்து என்று..............

தலைப்பின் நோக்கம் உங்க பதிவின் கிட் கவுண்டரை / சூட்டை கூட்ட இல்லையே :)

NONO சொன்னது…

//விருப்பபடி வாழ்வதற்கு எதற்கு திருமணம் கோருகிறார்கள் என்பதே கேள்வி. //


ஒருவர் திருமணம் செய்வது அது தனிமனித உருமை

சட்டத்தின்கீழ் எல்லேரும் சமமானவர்கள் குருடனாய் இருந்தால் என்ன கோமுவாய் இருந்தால் என்ன நீங்கள் கூறுவதைப்பாத்தால் ஒவ்வொருவருக்கும் உவ்வொரு சட்டம் கொண்டுவரவேண்டும் போல.

//பிறகு ஏன் திருமணம் என்ற சடங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்//

எல்லாத்தையும் தப்பாய்புரிந்து வைத்துள்ளீர்கள்
சடங்கு முக்கியம் இல்லை! சட்ட அங்கீகாரம்தான் இவர்களுக்கு முக்கியம். பிறகு தங்களுடைய விருப்பப்படி வேன்றும் என்றால் சடங்கை செய்துகொள்வார்கள் இதில் என்ன தவறு? ஏன் எமது தமிழ் சடங்குகள் எல்லாம் ஒரேமாதிரியா நடக்குது?

ஜெயச்சந்திரன் சொன்னது…

http://www.cleveland.com/nation/index.ssf/2008/08/biological_parenthood_now_an_o.html

வருண் சொன்னது…

****பிறகு ஏன் திருமணம் என்ற சடங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் *****

நீங்க ஏன் இந்த சடங்கு சடங்குனு பெருசா பேசுறீங்கனு தெரியலை.

என்ன சடங்கு?

இந்த மந்திரம்லாம் சொல்லுவாங்களே அதா? இல்லைனா திருமணத்தையே சடங்கு என்கிறீர்களா?

மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது!

சடங்கும் மனிதனால் உருவாக்கப்பட்டது!

மனிதனாலுருவாக்கப்பட்ட மதமும், சடங்கும் காலப்போக்கில் மனிதனால் மாற்றியமைக்கப்படுகிறது.

இதில் எதுவும் சந்தேகம் உண்டா???

விதவை மறுமணம் போன்றவையை நாம் எற்றுக்கொள்ளவில்லையா?

அதேபோல்தான் ஓரினச்சேர்க்கையின் திருமணமும்.

ஹெட்டெரோ செக்ஸுவலில் இந்த சடங்குகளை புறக்கணிப்பவற்கள் உண்டு!
அதை கட்டி அழுபவர்களும் உண்டு.

அதேபோல்தான் ஓரினச்சேர்க்கையில் உள்ள ஒரு சில லூசுகள் இந்த சடங்கிலும் ஆர்வம் காட்டுதுக போல!

வருண் சொன்னது…

****அதற்கு முற்றிலும் மாற்றாக சமூக அங்கீகாரத்தை கோரும் விதமாக திருமணம் என்ற சடங்கை நாடுவது வேடிக்கையாகவும் முரணாகவும் இருக்கிறது.****

கண்ணன்!

உங்கள் வாதப்படி சமூகம் என்பது என்ன?

பெரும்பாண்மையான மக்கள் நம்பிக்கையா?

அதாவது இந்துக்கள் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், சமூகம் என்பது இந்துக்கள்.

அப்படியா?

அமெரிக்காவில் சமூகம் என்பது க்ரிஸ்டியன்ஸ்.

அங்குள்ள இந்துக்களின் சடங்குகளை க்ரிஸ்டியன்ஸ் தவறென்று நினைத்தால், அது சமூக விரோதமா?

நீங்க என்னை குழப்புறீங்க. இப்போ நானும் பழிக்கு பழி வாங்குறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
****அதற்கு முற்றிலும் மாற்றாக சமூக அங்கீகாரத்தை கோரும் விதமாக திருமணம் என்ற சடங்கை நாடுவது வேடிக்கையாகவும் முரணாகவும் இருக்கிறது.****

கண்ணன்!

உங்கள் வாதப்படி சமூகம் என்பது என்ன?

பெரும்பாண்மையான மக்கள் நம்பிக்கையா?//

பெரும்பாண்மை மக்கள் என்று சொல்லவில்லை. ஓர்பால் சேர்கையாளர்களின் பெற்றோர்களும் கூட அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். ஆண் பெண் சேர்க்கையால் தானே ஓர்பால் விரும்பிகளும் பிறந்திருக்கிறார்கள்.

//அதாவது இந்துக்கள் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், சமூகம் என்பது இந்துக்கள்.

அப்படியா?

அமெரிக்காவில் சமூகம் என்பது க்ரிஸ்டியன்ஸ்.

அங்குள்ள இந்துக்களின் சடங்குகளை க்ரிஸ்டியன்ஸ் தவறென்று நினைத்தால், அது சமூக விரோதமா?//

இவையெல்லாம் நீங்களாக குழம்பிச் சொல்வது, நான் சமூகம் என்ற வரையில் ஆண் பெண் திருமணம் செய்து கொள்பவர்களைத்தான் குறிப்பிட்டேன். எந்த மதத்திலும் ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்வதைத்தான் திருமணச் சடங்கு என்கிறார்கள் என்றேன்.

இங்கே பின்னூட்டிய எவருமே ஓர்பால் விரும்பிகளுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்று சொல்லவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஓர்பால் சேர்க்கை இறப்பு வரையில் சக்ஸஸ்புல்லாக இருப்பதாகச் சொல்லப்படுவது ஒரு சிலருக்குத் தான். பலர் தனிமையில் தான் சாகுறார்கள். ஓர்பால்விருப்பம் முழுக்க முழுக்க பாலியல் தேவையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது என்றால் இல்லை என்கிறீர்கள். பிறகு ஏன் பல ஓர்பால் விரும்பிகள் அதிலிருந்த நாட்டம் முடிந்ததும் விலகிச் செல்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் அமைப்புகளும் இருக்கின்றன.

அவர்களின் திருமணத்திற்கு ஆதரவு தெரிக்கும் அனைவருமே அவர்களை திருத்தவே முடியாது என்று நினைப்பவர்களா ? அல்லது அவர்கள் தவறு என்ன செய்கிறார்கள் திருத்துவதற்கு என்று நினைப்பவர்களா ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

தாங்கள் ஓர்பால் மோகத்திலிருந்து விடுபட்டுவிட்டதாக் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் முன்னாள் ஓர்பால் ஈர்ப்பினர் பற்றி உங்கள் கருத்து என்ன ?

வருண் சொன்னது…

///அவர்களின் திருமணத்திற்கு ஆதரவு தெரிக்கும் அனைவருமே அவர்களை திருத்தவே முடியாது என்று நினைப்பவர்களா ? ///

சரி, அவர்களை திருத்த அவர்களை ஃபோர்ஸ் பண்ணி வேறுபாலை சேர்ந்த ஒருவரை
காதலிக்க/மணக்க வைக்க வேண்டும் எனபது தவறாகத்தோனுது.


///அல்லது அவர்கள் தவறு என்ன செய்கிறார்கள் திருத்துவதற்கு என்று நினைப்பவர்களா ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.///

எனக்கு புரியாததை, உணரமுடியாததை சரி அல்லது தவறென்று சொல்லத்தெரியவில்லை.


///தாங்கள் ஓர்பால் மோகத்திலிருந்து விடுபட்டுவிட்டதாக் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் முன்னாள் ஓர்பால் ஈர்ப்பினர் பற்றி உங்கள் கருத்து என்ன ?////

நான் அந்தக்கட்டுரைகள் படித்ததில்லை, கண்ணன்.

அதேபோல் ஹெடெரோ செக்ஸுவலாக இருந்தவர்கள் பல ஆண்டுகள் இல்லற உறவுக்கு பின் ஓர் பால் ஈர்ப்பினராகவும் மாறுகிறார்கள்.

ஜெயச்சந்திரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெயச்சந்திரன் சொன்னது…

//நான் அவர்கள் அப்நார்மல் என்று சொல்லவில்லை.//

//இங்கே பின்னூட்டிய எவருமே ஓர்பால் விரும்பிகளுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்று சொல்லவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. //

நீங்களே முன்னுக்கு பின் முரண சொல்லுறீங்க.............



இத பார்க்கவே புரியுது உங்களுக்கு அடியும் புரியலை நுனியும் புரியலைன்னு. கவுன்சிலிங் எதுக்கு குடுப்பாங்க ஏதாவது பிரச்சனை இருந்தா, ஒருபாலின நாட்டம் என்பதே ஒரு இயற்கையானயான விடயம் என அறிவியல் சொல்லும் போது அதுக்கெப்படி கவுன்சிலிங் கொடுக்க முடியும்?

ஒரு பாலின நாட்டம் உள்ளவங்களும் சமுகத்தின் அங்கம் தான். அத புரிஞ்சுக்கிறீங்களா?

ஒரு பாலின நாட்டம் இயற்கையானது. அவங்க நீங்க "சமூகம் சமூகம்" உண்டு என புலம்பும் சமூகத்துக்கு கட்டுபட்டு பெண்ணை திருமணம் செய்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு எங்களூர் ஆசிரியர் ஒருவரே உதரணம். அவர் "சமூகத்துகாக" பெண்ணை திருமணம் செய்தார், குழந்தைகளும் உண்டு. அவர் ரியுசன் வகுப்புகள் கொடுப்பார். தனியாக டீனேஜ் பையன்கள் வகுப்பில் இருந்தால் அவர்களுடன் தகாத முறையில் நடப்பதாகவும், அப்படி அனுபவப்பட்டவர்கள் மற்ற மாணவர்களை தனியே வகுப்புக்களுக்கு போகாது தடுத்து, எப்போதும் குழுவாக இருக்க முயல்வார்கள் ........

கோவி.கண்ணன் சொன்னது…

//இத பார்க்கவே புரியுது உங்களுக்கு அடியும் புரியலை நுனியும் புரியலைன்னு. கவுன்சிலிங் எதுக்கு குடுப்பாங்க ஏதாவது பிரச்சனை இருந்தா, ஒருபாலின நாட்டம் என்பதே ஒரு இயற்கையானயான விடயம் என அறிவியல் சொல்லும் போது அதுக்கெப்படி கவுன்சிலிங் கொடுக்க முடியும்? //

அவர்களால் தொந்தரவு இல்லை என்பதால் அது இயற்கையாக புரிந்து கொண்டு சகித்துக் கொள்ளப் படுகிறது. ஆனால் அதை இயற்கை என்று முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது இயற்கை என்றால் இன்னும் பல மாறுபட்ட பாலியல் தேவைகளையெல்லாம் முறைகேடு அற்றது என்று எந்த வகையில் சொல்கிறோம் ? உதாரணத்திற்கு சிலர் விலங்குகளுடன் கூட செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம், அதுவும் கூட யாருக்கும் தொந்தரவு இல்லை தான். விலங்குகளை தோல் உறித்து நீங்களும் சாப்பிடுவதற்கு கொலைதானே செய்கிறீர்கள், எங்களை மட்டும் ஏன் தவறு சொல்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டால் பதில் சொல்லமுடியுமா ? அவர்களும் கூட இது மன நோய் அல்ல, எங்களுக்கே எங்களுக்கான இயற்கை நாட்டம் தான் என்றால் நம்மால் எதுவுமே சொல்ல முடியாது அல்லவா ?

நான் இவர்களை அவர்களுடன் ஒப்பீடு செய்யவில்லை, ஆனால் இங்கு சொல்வதன் காரணம் ஒழுக்கம் என்பது சமூகத்தின் அளவீடு அல்ல என்று பலரும் வலிந்து கருத்துரைப்பதால் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஜெயச்சந்திரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெயச்சந்திரன் சொன்னது…

//மேலை நாடுகளில் ஆண்கழிவரைகளில் சில ஆண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள், பார்க்கப்படும் ஆண்கள் இவர்களை பார்த்துவிட்டால் சிரிப்பார்கள், பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள்.//?????

//அவர்களால் தொந்தரவு இல்லை என்பதால் அது இயற்கையாக புரிந்து கொண்டு சகித்துக் கொள்ளப் படுகிறது//

:)))))))))))))))))))))))))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//தலைப்பின் நோக்கம் உங்க பதிவின் கிட் கவுண்டரை / சூட்டை கூட்ட இல்லையே :)//

ஹிட் கவுண்டரைக் கூட்டுவதால் என்ன கிடைக்கும் ஒரு லட்சம் ஹிட்டுக்கு ஒரு லட்சம் காசு கூட கிடைக்காது.

அதற்காக எழுதுவதில்லை என்பது எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்க்களுக்குத் தெரியும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்