சொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லிள் வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?
பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துண்புறுத்தப்பட்டனர். சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
இவை முற்றிலும் அத்வைத,துவைத தத்துவங்களுக்கு எதிரானவை, ஏனென்றால் படைப்பு என்பது தான்தோன்றி (சுயம், சுயம்பு, வெளிப்பாடு) இறைவனின் சித்தத்தால் ஏற்படுவது என்பதே இவர்களின் நம்பிக்கை. சமணர்களும் அத்வைதிகளும் வாதத்தில் ஈடுபட்ட போது, அத்வைதிகள் எல்லாம் இறைவன் அல்லது பரம்பிரம்மத்தின் சித்தம், தான் தோன்றி என்றார்கள். நீலிகேசி அதை பலமாக மறுத்தாள், ஆதாரம் கேட்டாள், அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தார்கள், அப்பொழுது நீலிகேசி வெகுண்டு 'நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதைத் தான்தோன்றி, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?' என்று ஆவேசமாகவே கேட்டாள். இதற்கு மேல் இவளிடம் வாதத்தில் வெல்லவே முடியாது என்பதால் அத்வைத சைவ ஆதாரவு அரசரின் ஆதரவுடன் அவளை சிறைப்பிடித்து மரணதண்டனைக் கொடுக்கப்போவதாக இழுத்துச் சென்றார்கள். அப்போது அவள் கண்ணீர் விட்டு சபித்திருக்கிறாள். அவளது கண்ணீரைப் பார்த்து...'எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள் பார்...ஹஹ்ஹஹ் ஹா' என்று கேலி செய்து பலமாக சிரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சமணவாதங்களின் போதெல்லாம் நீலியின் கண்ணீரை குறிப்பிட்டு தூற்றுவதே வழக்காக மாறி, பழிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பதமாக மாறியது.
உண்மையில் நீலி பயந்து போயோ, பொய் சொல்லிவிட்டதாக நினைத்தோ கலங்கவில்லை, உண்மையை உணராத மூடர்களிடம் சிறைபட்டுவிட்டேனே என்றே கண்ணீர்விட்டு வருந்தினாள். சமண மதப் பெண் வீரத் துறவியை பழிக்கும் விதாமாக இழித்துக் கூறிய சொல் நாளடைவில் போலியாக அழுபவர்கள் குறித்த பழிப்புச் சொல் ஆகியது. 'நீலி' என்ற அடைமொழியாக மாறி ஒரு சொல் காலம் கடந்து நிற்பதால் இவை வரலாறு வழி வந்தவை என்று சொல்லிவிட முடியும்.
******
பொதுவாக இனிப்பு, உப்பு சுவை சேர்ந்திருந்தாலும் இளநீரும், கண்ணீரும் தூய்மையானது என்றே சொல்லுவார்கள், ஏனெனில் வெளி மாசு அவற்றில் கலந்திருக்காது, கண்களில் மாசு சேரும் போது அதை அகற்ற சுரக்கும் கண்ணீர் தூய்மையற்றதாக இருக்க முடியாது. இவை எதிர்பாராமல் தேவையான நேரத்தில் சுரக்கும் கண்ணீர். உணர்வின் போது சுரக்கும் கண்ணீர் அதன் புனித ,தன்மை தூய்மை குறித்த புரிதலுடன் எண்ணத்தில் கட்டுப்பாட்டுடனேயே அதனை வெளிப்படுத்த வேண்டும். என்றுமே அழாத ஒருவர் அழும் போது அவரது சோகத்தின் அளவுகோல் கண்ணீர் தான் என்பதால் அதன் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்திக் கூற கண்ணீர் புனிதமானது என்று சொல்லப்படுகிறது. மன ஈரத்தின் உருதான் கண்ணீர். கண்ணீரை பிடிவாதத்தின் அளவு கோலாக்கி தொட்டதற்கு கண்ணீர் சுரப்பவர்களின் கண்ணீர் தூற்றப்படுகிறது. மன எண்ணத்திற்கு மாற்றாக வெளிப்படையாக கண்ணீர் வரும் போது அவை போலிக் கண்ணீர் என்று சொல்லப்படுகிறது. போலிக் கண்ணீர் சுரக்கும் போது முகமே காட்டிக் கொடுத்துவிடும். எனென்றால் அவை மனத்தூண்டிதலால் இயல்பாக ஏற்படுபவையே அல்ல. இறைக்காக ஏங்கி எவரும் சிக்கவில்லை அல்லது சிக்கிவிட்டது என்பதற்காக முதலலகள் வடிக்கும் கண்ணீரே முதலைக்கண்ணீர் எனப்படுக்கிறது. அதாவது தன்னலம் சார்ந்து வெளிப்படும் கண்ணீர் முதலைக்கண்ணீர் எனப்படுகிறது. நெடும் தொடரைப் பார்த்துவிட்டு தாய்குலங்களும் சில ஆண்களும் கூட கண்ணீர் வடிப்பது 'குறுகிய கால மெகா சீரியல்' அல்லது 'தேவையற்ற' கண்ணீர் என்று சொல்லலாமா ? ஏனென்றால் இந்த கண்ணீரினால் தொடர் முடிந்த அடுத்த நிமிடமே மன பாதிப்புகள் எல்லாம் மறைந்து போய்விடும். ஆனந்த கண்ணீர் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. பளார் என்று கன்னத்தில் அரை விட்டு அடுத்த நிமிடமே... 'என் செல்லாம் இல்லே...' கணவர் பல்லிளித்து மன்னிப்புக் கேட்கும் அடுத்த நிமிடமே வலியால் வரும் கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆகிவிடும். இதுப்போல் ஆனந்த கண்ணீருக்கு நிறைய காட்டுகள் வைக்கலாம். சபை நடுவில் போற்றப்படுபவர்கள் எவருக்குமே முதல் முறை உணர்ச்சிப் பெருக்கால் வருவது ஆனந்தக் கண்ணீர்..
கண்ணீரின் புனிதத் தன்மை கருத்தி தண்ணீரைப் போலவே வீணாக்கமல் பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறார்கள்
***
யாரையும் பழிப்பதற்க்காக 'நீலிக் கண்ணீர்' என்ற பதத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணை, ஒரு சமயத்தை சாடுவதற்காக வலிந்து உருவாக்கியச் சொல் அது. அந்த அநீதிக்கு நாமும் துணை போகவேண்டாம். ஏனென்றால் நீலி போலிக் கண்ணீர் வடிக்கவில்லை, நீதியின்மைக்கு எதிராக வருத்தப்பட்டுதான் கண்ணீர் விட்டாள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
28 கருத்துகள்:
me the first :):)
நீலி பொய்க் கண்ணீர் வடிக்காமலே இருக்கட்டும், இன்றய நமது மக்களிடையே நிலவும் சொல்லாடலை தவிர்ப்பது சுலபமா?
ஒரு மாயையான கருத்தை மக்களிடையே நிலைக்கச் செய்ய பல ஆரிய கதைகள் உள்ளன. அதை உணரவே சிரமம் கொள்கிறார்களே..
நீலி கண்ணீர் விளக்கம் புரிஞ்சது
ஓ அப்ப இந்த தேசிய வியாதி வேடமிட்டு விடும் கண்ணீர் என்னவோம்..... :))))
ஐம்பெரும் காப்பியங்களில் குண்டலகேசி என்று சொல்வார்கள் அதுவும் நீங்கள் சொல்லும் நீலகேசியும் ஒன்றா??
நீலி கண்ணீர் என்பதற்கு ஒரு நீண்ட கதை இருக்கிறது,அதன் அடிப்படையில் சொல்லப்பட்ட வாசகம் அது.கணவனால் கைவிடப்பட்ட ஒருவள் தன் கணவனை
ஆவி ரூபத்தில் வந்து பழி வாங்கும் கதை.
ஒரு இரவில் அந்த கணவன் அடைக்கலம் தேடி திருவாலங்காடு கிரமசபையிடம் அடைக்கலம் கேட்டு தங்குவான்,அப்போது அவள் மனித ரூபத்தில் வந்து "தன் கணவன் தன்னை கைவிட்டதாக அவர்களிடம் முறையிட ,அவன் விருப்பதிு மாறாக அவளையும் அவனுடனே தங்க வைப்பார்கள்,அவள் தண்னை கொன்று விடுவாள் என்று அவன் சொல்ல,அதை கேட்ட கிராமத்தினர் அதுபோல நேரிட்டால் நாங்கள் அனைவரும் தீ குளிப்போம் என்று வாக்குறுதி தருவார்கள்.கடைசியில் அவள் அவனை கொன்று விட ,கிராமத்தினர் தங்கள் தவறை உணர்ந்து அனைவரும் தீ குளிப்பர்.முதல் நாள் அங்கு இல்லாமல் ,மறுநாள் ஊர் வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவனும்,மற்றவர்கள் தீக்குளித்த சம்பவத்தை கேட்டறிந்து ,கிராமசபையின் சத்தியம் தன்னையும் கட்டுபடுத்தும் என்று சொல்லி அவனும் தீக்குளிப்பான்.
அதனால் தான் நீலி கண்ணீர் என்ற வாசகம் வந்தது என்பது நான் அறிந்தது .
இன்றும் நீங்கள் திருவாலங்காடு சென்றால் அந்த இடத்தை பார்க்கலாம்
ஒரு சிறு மண்டபம் கட்டப்பட்டுள்ளது,ஆனால் விசாரித்து செல்ல வேண்டும் .ஒரு தெருவின் மூலையில் ,சிறு குளத்திற்கு அருகில் உள்ளது.
ஆவி பற்றி தெரியாது,ஆனால் அவர்கள் தீக்குளித்த சம்பவம் உண்மை என்பது அங்குள்ள ஒரு சிறு கல்வெட்டு மூலம் நீங்கள் அறியலாம்.
இந்த கதையும் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம்,அதை பற்றிய உங்கள் பதிவில் இல்லாத காரணத்தால் விரிவாக சொல்லவேண்டியதாகி விட்டது
//பாபு said...
ஐம்பெரும் காப்பியங்களில் குண்டலகேசி என்று சொல்வார்கள் அதுவும் நீங்கள் சொல்லும் நீலகேசியும் ஒன்றா??
//
ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி ஆகும், அதில் குண்டலகேசியில் வரும் ஒரு சமணத்துறவிதான் நீலிகேசி. நீலிக்கேசி தனிக் காப்பியம் கிடையாது
அச்சச்சோ...... நீலியின் கதை இப்படியாப் போகுது?
நான் சின்னப் பொண்ணா இருந்த காலத்துலே..... என்னைத் திட்டப்போறாங்கன்ற அறிகுறியைப் பார்த்ததும் பொலபொலன்னு கண்ணீர் விட்டுருவேன்.
எங்க பாட்டி வேற ,'நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே' பாரு.' நீலி மாதிரி அழறா'ன்னுவாங்க!
உங்களின் விளக்கத்துக்கு நன்றி, அருமை!
இதுபோலவே பல சொற்களுக்கு சரியான பொருள் தெரியாமலேயே நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி பிழையாக பயன் படுத்தும் சொற்களையும் வார்த்தைகளையும் இப்பொழுது நான் சேகரிக்கிறேன்; இது போல சரியான பொருளோடு பயன்படுத்தவற்கு.
மக்கள் இதை அறிந்தால் தங்களை திருதிக்கொள்வார்கள்.
நன்றி.
நான் படித்த நீலிக்கதை வேறு. அதில் வரும் பெண்ணை பழையனூர் நீலி என்பர். பழையனூர் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ளது. இவ்வூர்கள் இரண்டில் ஏதோவொன்றில் இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெர்ஷன்கள் உள்ளன.
ஒன்றின் படி ஒரு வாணிகன் தன் வைப்பாட்டிக்கு மனைவி இடையூறாக இருக்கிறாள் என்பதற்காக அவளைக் காட்டு வழியில் அழைத்துச் சென்று கொன்று விட்டான்; இறந்த பெண் பேயாக அக்காட்டில் அலைந்து கொண்டிருந்தாள்; ஒருமுறை அவன் அக்காட்டின் வழியே செல்லும் போது அவள் மனித வடிவில் ஒரு கைக்குழந்தையுடன் அவனைத் தொடர்ந்து சென்றாள். அருகிலிருந்த ஊரை அடைந்தவுடன் அவ்வூராரிடம் தன் கணவன் தன்னைக் குழந்தையுடன் கைவிட்டு வந்து விட்டதாகவும் தன்னை அவனுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுகிறாள். ஊரார் அவ்வாறே அவனை வற்புறுத்துகின்றனர். அவள் பேய் என்று வணிகன் மறுத்துக் கூறியும் பயனில்லாத நிலையில் தன்னுயிர்க்கு அவ்வூரிலுள்ள 64 தலைக்கட்டு வேளாளர்களும் தம்முயிரைப் பிணையாக்க வேண்டுமென்கிறான். அவ்வாறே அவர்கள் ஒப்புக் கொள்ள அவன் அப்பேயுடன் ஊர் விடுதியில் தங்குகிறான். பேய் அவனைக் கொன்று போட்டு விட்டுப் போய் விடுகிறது. மறுநாள் காலை அவன் இறந்திருப்பதை அறிந்த 64 தலைக்கட்டுக்காரர்களும் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இன்னொரு கதையின்படி நீலி வணிகனின் மனைவியல்ல; அவனது காதற் கணிகை. அவளிடம் அவள் தன் பொருளனைத்தையும் இழந்து வறியவனாகிவிட்ட நிலையில் நீலியின் தாய் அவனைத் துரத்தி விடுகிறாள். வணிகனைப் பிரிய மனமில்லாத நீலியும் அவனைப் பின் தொடர்ந்து காட்டு வழியில் அவனை அடைகிறாள். வழியில் இரவில் தன் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த நீலியைத் தரையில் இறக்கிக் கிடத்துகிறான். எதிர்கால வாழ்வை நோக்கி அஞ்சியவனாக அவள் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று தானும் இறந்து போகிறான். மறு பிறவியில் வாணிகனாக அக்காட்டிலுள் வரும் போதுதான் நீலியின் பேய் அவனைத் தொடர்கிறது என்கிறது இக்கதை.
காதல் இதழில் அரு. இராமநாதன் எழுதிய கதையில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாணிகனின் மனைவி நீலி நிறை சூலி. அவள் கிணற்றிலுள் முழுகி இறக்கு முன்பே குழந்தையும் பிறந்து அவளோடு இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. முதல் கதையில் வாணிகனின் மனைவி என்று காட்டிக் கொள்வதற்காகக் கள்ளிச் செடியொன்றின் கொழுந்தைக் கிள்ளிக் குழந்தையாக்கிக் கொண்டது பேய் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் 64 தலைக்கட்டினர் மாண்ட பின்னர் அவ்வூரினர் பல்வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். அவர்கள் இன்றும் இக்கதையைக் கூறுவதுடன் நீலியை வழிபட்டும் வருகின்றனர். எனவே இக்கதையில் ஏதோ ஓர் உண்மை இருக்கக் கூடும். கொல்லப்பட்டவளாகக் கருதப்பட்ட நீலி உயிர் பிழைத்திருந்து தன் கணவனை அப்பிறவிலேயே பழிவாங்கியிருக்கக் கூடும்.
இவ்வாறு கணவனைப் பெண்கள் கொலை செய்வது நம் இலக்கியங்களில் ஒன்றும் புதிதில்லை. மலையிலிருந்து பிடித்துத் தள்ளிக் கொல்ல இருந்த தன் கணவனைத் தானே முந்தித் தள்ளிக் கொன்றாள் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் கதைத் தலைவி.[1] இதனால் அவள் “தற்கொல்லியை முற்கொல்லி” என்ற பட்டமும். பெற்றாள். அதே போல் நீலி என்ற பெயரும் நமக்குப் பழக்கமானதே. நீலி, காளி, துர்க்கை, குமரி எனப்படுபவை கொற்றவையின் பெயர்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறப்பில் அவனைச் சபித்தவளாகக் கூறப்படுபவள் பெயரும் நீலியே.
எது எப்படியாயினும் ஊர்ப் பெரியவர்களிடம் தன் கதையை கண்ணீர் சிந்தி கூறினாள் நீலி. அவர்களும் அதில் ஏமாந்து வணிகனை அவளிடம் ஒப்படைத்தனர். ஆக இம்மாதிரி பொயாக அழுவதைத்தான் நீலிக் கன்ணீர் என்று கூறுவதாகவும் நான் படித்துள்ளேன்.
மற்றப்படி வணிகனுக்கு அந்த தண்டனை வேண்டியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல விளக்கம் கோவி.. ஒரு சொல்லாடலுக்கு எத்தனை எத்தனை விளக்கங்கள். பாபு, டோண்டு சார் விளக்கங்களும் பொருத்தமாக இருக்கின்றன.
உங்க போன பதிவு பின்னூட்ட சண்டைய படிச்சு மண்டை காஞ்சு போன எனக்கு இந்த லைட் பதிவு இதமா இருக்கு :))))
நல்ல கருத்துள்ள பதிவு ....
அருமையான பினூட்ட விளக்கங்கள் ....
//நெடும் தொடரைப் பார்த்துவிட்டு தாய்குலங்களும் சில ஆண்களும் கூட கண்ணீர் வடிப்பது 'குறுகிய கால மெகா சீரியல்' அல்லது 'தேவையற்ற' கண்ணீர் என்று சொல்லலாமா ? ஏனென்றால் இந்த கண்ணீரினால் தொடர் முடிந்த அடுத்த நிமிடமே மன பாதிப்புகள் எல்லாம் மறைந்து போய்விடும்.//
:)
எல்லாப் பதிவுகளையும் படித்தாலும், இதற்கு நிச்சயமாக பின்னூட்ட வேண்டுமென்று தோன்றியது.
பாபு, டோண்டுசாரின் பின்னூட்ட பரிமாற்றங்கள் சந்தோஷமாய் இருக்கிறது, எதையும் ஆரோக்யமாய் இப்படி, பரிமாறிக்கொள்ளும் பின்னூட்டப் பொற்காலம் துவங்கவேண்டுமென்பதே என் அவா!
//பரிசல்காரன் said...
எல்லாப் பதிவுகளையும் படித்தாலும், இதற்கு நிச்சயமாக பின்னூட்ட வேண்டுமென்று தோன்றியது.
பாபு, டோண்டுசாரின் பின்னூட்ட பரிமாற்றங்கள் சந்தோஷமாய் இருக்கிறது, எதையும் ஆரோக்யமாய் இப்படி, பரிமாறிக்கொள்ளும் பின்னூட்டப் பொற்காலம் துவங்கவேண்டுமென்பதே என் அவா!
1:53 PM, November
//
பரிச,
புக்சாய நமகவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன், அதற்கு பின்னூட்டமாறு செய்ய வந்துவிட்டு, அது தெரியாமல் இருக்க கருத்துச் சொல்லிட்டு போறிங்களாக்கும் ?
நல்லா இருங்க !
:)))))
// dondu(#11168674346665545885) said...
நான் படித்த நீலிக்கதை வேறு. அதில் வரும் பெண்ணை பழையனூர் நீலி என்பர். பழையனூர் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ளது. இவ்வூர்கள் இரண்டில் ஏதோவொன்றில் இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெர்ஷன்கள் உள்ளன.
//
டோண்டு சார்,
வெள்ளிக்கிழமை பிசியிலும் இப்படி நீளமான பின்னூட்டம் தட்டச்சு செய்து போட்டதற்கு மிக்க நன்றி !
நீங்கள் சொல்லிய கதையின் தொடர்பு இங்கே இருக்கிறது.
//நசரேயன் said...
me the first :):)
//
முதலில் வந்தவர் முதல்வருக்கு நன்றி !
//VIKNESHWARAN said...
நீலி பொய்க் கண்ணீர் வடிக்காமலே இருக்கட்டும், இன்றய நமது மக்களிடையே நிலவும் சொல்லாடலை தவிர்ப்பது சுலபமா?
ஒரு மாயையான கருத்தை மக்களிடையே நிலைக்கச் செய்ய பல ஆரிய கதைகள் உள்ளன. அதை உணரவே சிரமம் கொள்கிறார்களே..
//
விக்கி, காலத்தில் எதுவுமே கரைந்துவிடும். முன்பெல்லாம் சாதிகளைப் பழிக்க ஒவ்வொரு சாதியில் பல பழமொழிகள் உண்டு, சாதியை தற்பொழுது யாரும் வெளிப்படையாக பேசிக் கொள்வது நின்றுவிட்டதால் அந்த பழமொழிகள் தேவை இல்லாமல் போயிற்று. அதுவும் நல்லது தான். அந்த பழமொழிகளில் இகழ்ச்சியே மிகுதி. அதுபற்றி முன்பே பதிவிட்டு இருக்கிறேன். 'பெயருக்கு பின்னால் சாதி, அவப்பெயரே' என்பது பதிவின் தலைப்பு. தேடி எடுக்க சோம்பல். இணைப்பு கொடுக்க முடியவில்லை.
//நசரேயன் said...
நீலி கண்ணீர் விளக்கம் புரிஞ்சது
//
நன்றி !
//TBCD said...
ஓ அப்ப இந்த தேசிய வியாதி வேடமிட்டு விடும் கண்ணீர் என்னவோம்..... :))))
//
அவையெல்லாம் முதலாளித்துவம் இல்லையா முதலைக் கண்ணீர் ?
:)
பதிவும், டெம்பிளேட்டும் சூப்பர்
Informative :-))
பதிவை படிச்சி... ஆனந்த கண்ணீரே வந்துடுத்து...போங்கோ...
நல்ல விளக்கம். பாபு மற்றும் டோண்டு ஐயா இருவரும் ஒரே கருத்தை சொல்கிறார்கள். ஏற்புடையதாகவும் தோன்றுகிறது. ஆக நீலிக்கண்ணீர் என்பதை தற்போதைய வழக்கில் சொல்வது சரியா? தவறா?
ஒரே கன்பீச்சனா கீதுப்பா.
அடடா நான் வேறொரு கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இதுதான் காரணமா, பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றி:):):)
நன்றாகவே இஷ்டப்படிக்குக் கயிறு திரித்துவிட்டிருக்கிறீர்கள்.
சபாஷ்.
ஓ.. நீலிக்கண்ணீருக்கு இவ்ளோ கதைகள் இருக்கா? நீங்க,பாபு, டோண்டு சொன்னது எல்லாமே புதிய தகவல்கள்.
அப்படியே முதலைக் கண்ணீர் பற்றியும் முடிஞ்சா பதிவு போடுங்க..
கவிஞர் வைரமுத்து இப்படிச் சொல்கிறார்.
காஞ்சி வணிகன் ஒருவன்
வஞ்சித்துக் கொன்றுவிட்டான்
தன் முதல் மனைவி நீலியை.
ஒருநாள் அவன் பழையனூர்
வழியாகப் பயணம் போகிறான்.
பேயாக மாறிய மனைவி
இப்போது பெண்ணுருவில் வந்து
அவனை வழிமறிக்கிறாள்.
இடுப்பில் மாயப்பிள்ளை
ஒன்று வைத்திருக்கிறாள்.
அவனை அப்பா என்று
அழைக்கவும் வைக்கிறாள்.
திருவாலங்காட்டு வேளாளர் சபைக்கு
வழக்கு வருகிறது.
‘‘என் கணவனோடு
என்னைச் சேர்த்து விடுங்கள்’’
என்று மன்றாடுகிறாள்.
‘‘இல்லை; இவள் என் மனைவி இல்லை;
என்னைக் கொல்ல வந்த பேய்’’
என்று வணிகன் மறுக்கிறான்.
அவள் அழுகிறாள்.
அவள் கண்ணிலிருந்து
திரண்டு வந்த கண்ணீரின் திடம்கண்டு
‘இவள் உன் உண்மையான மனைவிதான்;
அழைத்துப்போ’ என்கிறார்கள்.
‘‘இவளோடு சென்றால் இவள்
என்னைக் கொல்வது உறுதி’’
என்று அஞ்சுகிறான் வணிகன்.
‘‘இன்று ஒருநாள் வாழ்ந்துபார்;
ஒருவேளை அவள் உன்னைக்
கொன்று விட்டால் நாங்கள்
எழுபது பேரும் பொறுப்பு;
நீ மாண்டால் நாங்கள்
தீக்குளித்துச் சாகிறோம்.’’
என்கிறது தீர்ப்பு.
விடிந்து பார்த்தால் அவன்
இறந்து கிடக்கிறான்.
வேளாளர் எழுபது பேரும்
தீப்புகுந்து மாள்கிறார்கள்.
கொலை செய்த கணவனை மட்டுமல்லாமல்
நியாயம் சொன்ன நீதி மான்களையும்
கொன்று முடித்ததே _ அதுதான் நீலிக்கண்ணீர்.
/*‘‘இல்லை; இவள் என் மனைவி இல்லை;
என்னைக் கொல்ல வந்த பேய்’’
என்று வணிகன் மறுக்கிறான்.*/
இந்த எலவத்தானே,
நாட்டிலே பாதி பேரு சொல்லிக்கிட்டு இருக்கான்...
கூகுளில் நீலிக்கண்ணீர்க்கு அர்த்தம் கண்டு கொள்ள வந்தேன்
நிறைய வலைப்பதிவு கள் தோன்றினாலும் ஏதோ ஒரு விடயம் இங்கே கிடைக்கலாம் வந்தால் உங்கள் பதிவிலும் கிடைத்தது அது மட்டுமல்ல பின்னூட்டத்திலும் கிடைத்தது.நன்றி
கருத்துரையிடுக