பின்பற்றுபவர்கள்

14 ஜனவரி, 2010

பொங்க(ல்) வச்சாச்சு !

வேலை நாளில் பொங்கல் வந்தால் சிங்கையில் பொது விடுப்புக் கிடைக்காது, அதி காலையில் , மாலையில், விடுப்பு எடுத்து மூனு வழியில் பொங்கல் வைக்கலாம். விடுப்பு எடுத்து வைத்தால் தொலைக்காட்சிகளின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்க. காலையில் எழுந்து வைப்பது என்று முடிவு செய்தோம்.

அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 5:15 மணிக்கு செய்ய துவங்கி சேனை, பனங்கிழங்கு, பரங்கிக்காய், பூசனிக் காய், வாழைக்காய், பச்சை மொச்சை, பச்சை துவரை, வள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், உருளை கிழங்கு, முருங்கை காய் எல்லாம் போட்டு பொங்கல் கறி மற்றும் சர்கரை வெண் பொங்கல் செய்து முடிக்க காலை 6.15 ஆச்சு.




ஒரு மணி நேரத்தில் மிகவிரைவாக எல்லாம் முடித்து 6:30க்கு படையல் போட்டு முடிந்தது. (பொங்ல் வைக்க நாள்காட்டியில் நேரம் இருக்குமாம், நமக்கு நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்லை, எல்லா நாளும், நேரமும் நல்ல நாள் தான்)



எல்லாம் முடித்து சாப்பிட அமர்ந்து சன் தொலைக்காட்சியை ஓடவிட்டால் நமீதா பொங்கல் கிண்டுறாங்க.




பொங்கல் புத்தாண்டு சேர்த்தே கொண்டாடினாலும் புதுத் துணி எடுக்கும் வழக்கம் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த ஆண்டுக்கு புத்தாடைகளுடன் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்பது இந்த ஆண்டு பற்றுறுதி.

சென்ற ஆண்டு, பொங்கல் பதிவு:

பொங்கல் புராணம் !



அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்துகள் !

சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாட இருப்பவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளையும், மற்றவர்களுக்கு (கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்லனுமா ? இல்லையா ?) பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

17 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

கடைசி படத்தில மம்மூட்டி மாதிரி இருக்கீங்க :)

ராவணன் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் மட்டும்!?!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//

உங்களுக்கும் நல்வாழ்த்துகள் !

// கடைசி படத்தில மம்மூட்டி மாதிரி இருக்கீங்க :)//

கையில் கடாமார்க் பீடி ஒண்ணும் இல்லையே ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் மட்டும்!?!///

புத்தாண்டு வாழ்த்துகளும் சேர்த்தே சொல்லி இருக்கேனே.

ராவணன் சொன்னது…

பொங்கலுக்குக் கூட விடுப்பு எடுப்பதில்லையா...?அப்ப இது பொங்கலில்லை...
பொங்கலுக்கு விடுப்பு எடுக்காததற்கும் வாழ்த்துக்கள்...!?!

கோவி.கண்ணன் சொன்னது…

// ராவணன் said...

பொங்கலுக்குக் கூட விடுப்பு எடுப்பதில்லையா...?அப்ப இது பொங்கலில்லை...
பொங்கலுக்கு விடுப்பு எடுக்காததற்கும் வாழ்த்துக்கள்...!?!//

விடுப்பு கையிருப்பு இல்லை, இருந்தால் எடுக்கலாம், விடுப்பு எடுக்காததற்கு வேறெந்த சிறப்புக் காரணமும் இல்லை. வாழ்த்துக்கு நன்றி இராவணன்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள் கண்ணன்

cheena (சீனா) சொன்னது…

அட - தமிழ் நாட்டில பண்ற மாதிர்யே பண்ணிட்டீங்களே - சூப்பர் - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கோவி

கையேடு சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்ங்க..கோவி.கண்ணன்.

Unknown சொன்னது…

ஒரு மணி நேரத்துக்குள் இத்தனை அயிட்டமும் செய்து முடித்து விட்டீர்களா! என்னவொரு வேகம். தனித்தனியாக சமைத்தீர்களா? ஒன்றாகவா?

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Radhakrishnan சொன்னது…

:) இரவுதான் நாங்கள் பொங்கல் வைப்போம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

படம் எடுக்கும் போது லைட் போடலையா அண்ணா.

விஜய் சொன்னது…

பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

(வேற யாராவது ஆட்சிக்கு வந்து ஆடியை தமிழ் புத்தாண்டு ஆக்கிட போறாய்ங்க , நமக்கு சித்திரைதான் )

விஜய்

vasu balaji சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் புகைப்படம் அசத்தல்.

priyamudanprabu சொன்னது…

சேனை, பனங்கிழங்கு, பரங்கிக்காய், பூசனிக் காய், வாழைக்காய், பச்சை மொச்சை, பச்சை துவரை, வள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், உருளை கிழங்கு, முருங்கை காய் எல்லாம் போட்டு
//////

அப்பா மூச்சு முட்டுது????!?!?1

priyamudanprabu சொன்னது…

நானும் 'தீபாவளி', 'மகர சங்கராந்தி', 'கிருஷ்ண ஜயந்தி', 'ஆவணி அவிட்டம்', 'அட்சய திருதியை', 'கோகுலாஷ்டமி', 'புரட்டாசி சனிக்கிழமை', 'பங்குனி உத்திரம்', 'மாசி மகம்', 'சித்திரா பவுர்ணமி', 'ஆடி அமாவாசை', 'ஆடி பூரம்', 'வைகாசி விசாகம்', 'வைகுண்ட ஏகாதேசி', 'சிவ ராத்திரி', 'மாளய அமாவாசை' 'சித்திரை விசு','ரஜினி பிறந்த நாள்', 'விஜய் பிறந்த நாள்'
///////////

மீண்டும் மூச்சு முட்டுது

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் கோவியாரே!
(தமிழ் நாடு சென்று வந்ததால் இந்த தாமதம்)

திருநீரு பட்டை சற்று மிகையாக எதிரொளிக்கிறது, படம் எடுக்கும் போது புகைப்படக்கருவியில் பளிச்சிடல் தவித்திருக்கலாமே!

மறக்காமல் கொண்டாடுவது மகிழ்வைத் தருகிறது! நன்றி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்