பின்பற்றுபவர்கள்

17 ஜனவரி, 2010

தம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி !

தமிழ்மணம் விருதுகள் 2009 போட்டியில் பிரிவு 5ல் எனது பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் பெற்று தந்து வெற்றி பெற வைத்த பதிவர் நண்பர்களுக்கு நன்றி.

போட்டிக்காக என்று எதையும் எழுதாவிட்டாலும் போட்டி நடைபெறும் பொழுது போட்டிக்காக எதை அனுப்பலாம் என்பதில் பெரும் மனக் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. போட்டிகளுக்கு அனுப்பப்படும் கட்டுரைகள் என்பதில் ஒரளவு தரமும் உண்மைத் தகவல்களும் இடம் பெற வேண்டும் என்பதால் அதற்குரிய தகுதி இருப்பதாக எனது இரு தொடர் கட்டுரைகளைத் தான் அனுப்பினேன். இரண்டுமே முதல் சுற்றில் வாக்குகளைப் பெற்று தேர்வாகி இருந்தது. இரண்டாம் சுற்றிலும் வெற்றிபெறுமா என்பது ஐயமாகவே இருந்தது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்று போட்டி முடியும் வரை யாரிடமும் தனிப்பட்ட அளவில் கேட்டுக் கொண்டதில்லை. அவ்வாறு கேட்டு வாங்கி வெற்றிபெறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. போட்டிகளை கொடுக்கல் வாங்கலாக கொச்சைப் படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன். நான் போட்டிக்கு அனுப்பிய பிரிவுகளில் மிகவும் ஆக்கபூர்வமாகவும் வாசகர்கள் மிகுதியாக உடையவர்களும் போட்டி இட்டு இருந்தனர் என்பதால் இரண்டாம் சுற்றில் எனது கட்டுரைகளில் எதாவது ஒன்றாவது வெற்றிபெருமா என்கிற ஐயமும் இருந்தது. நல்ல கட்டுரைகள் வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் நாம் எழுதுவதும் நல்ல கட்டுரை என்கிற தீர்ப்பு வரவேண்டும் என்கிற விருப்பம் இருந்ததை இல்லை என்று சொல்வதற்கில்லை. போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அதன் பிறகு முதல் சுற்றில் தேர்வானதும் கூடுதல் மகிழ்ச்சி, இறுதி சுற்றில் பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.நாம் வெற்றிபெருவதைவிட வெற்றிபெறுவது அனைத்தும் நல்லக் கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்று எல்லோரைப் போல் நானும் விரும்புகிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே போட்டியில் பங்கு பெறுவது என்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துவிடுகிறார்கள். மற்ற முடிவுகள் எல்லாம் ஒரு அங்கீகாரம் என்ற அளவில் தான் கொள்ளப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றி மேலும் விழிப்புணர்வுகள் வளரவேண்டும் என்கிற சமூகப் புரிதலில் சகோதரி லிவிங் ஸ்மைல் வித்தியாவின் 'திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்' என்ற கட்டுரை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் இரு சுற்றுகளிலும் அவருக்காக வாக்களித்தேன். நினைத்தபடி வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கையின் எழுத்து என்கிற பொது புத்தி சாயம் கூட அவரது எழுத்துக்கு தேவையற்ற ஒன்று. தேர்ந்த எழுத்தாளரின் எழுத்துக் கூறுகள் அவரது எழுத்துகளில் உண்டு என்பதை அவர் பலமுறை நிருபணம் செய்திருக்கிறார். வெற்றி பெற்ற 'லிவிங் ஸ்மைல் - வித்யா' விற்கு நல்வாழ்த்துகள்.

மருத்துவர் புரூனோ, வினவு மற்றும் தமிழ் சசி ஆகியோர் இரு பிரிவுகளில் போட்டி இட்டு இரு பிரிவுகளில் வெற்றிகளும் பெற்றிருக்கிறார்கள். புதிய பதிவர்கள் நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். போட்டி நடத்திய தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்

25 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

நல்வாழ்த்துகள் நிறைந்த பாராட்டுகள் கோவி

அருமையான இடுகைக்கு பரிசு

வாழ்க வாழ்க

சிங்கக்குட்டி சொன்னது…

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.

Subankan சொன்னது…

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா

சுல்தான் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜிகே.

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள் அண்னே!

முகவை மைந்தன் சொன்னது…

வாழ்த்துகள். வெற்றி பெற்றா கொண்டாட்டம் வைக்கத் தான் வேணும், அதுக்குன்னு இனி வர்ற போட்டிகள்ல கலத்துக்க மாட்டேன்னு சொல்றது நல்லா இல்லை.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வெற்றிக்கு வாழ்த்துக்கள் பெரியவா.
ஐபோன் பண்றேன் அப்பால.

பார்ட்டி குறித்த விவரங்கள ஐபோன்ல பேசிக்குவோம்.

T.V.Radhakrishnan சொன்னது…

வாழ்த்துகள் கோவி

வேடிக்கை மனிதன் சொன்னது…

manam niraintha nal vazthukkal anna

Sammy சொன்னது…

//கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்//

அப்ப அடுத்த வருடம் தைரியமா போட்டில இறங்கலாம்னு இருக்கேன் ...

வாழ்த்துக்கள் கோவியாரே.

பிரியமுடன் பிரபு சொன்னது…

நல்வாழ்த்துகள்

வானம்பாடிகள் சொன்னது…

வாழ்த்துகள் கோவி சார்.

Thekkikattan|தெகா சொன்னது…

congrats, govi! enjoy :)!!

LOSHAN சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியாரே..
நல்ல இடுகையோன்றுக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சியே.. :)

//எனக்கு வாக்கு அளியுங்கள் என்று போட்டி முடியும் வரை யாரிடமும் தனிப்பட்ட அளவில் கேட்டுக் கொண்டதில்லை. அவ்வாறு கேட்டு வாங்கி வெற்றிபெறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. போட்டிகளை கொடுக்கல் வாங்கலாக கொச்சைப் படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன்.//
முழுக்க முழுக்க உடன்படுகிறேன்..
நானும் இதே கொள்கை உடையவனே..

// புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.//

நல்ல ஒரு நோக்காயினும், நீங்களும் பங்குபெறும் போட்டியில் புதியவர்கள் உங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவதே அவர்களுக்குப் பெருமிதமானது என நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

வாழ்த்துக்கள்

Dr.Rudhran சொன்னது…

best wishes

சுந்தரா சொன்னது…

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்..

ஜெ.ஜெயமார்த்தாண்டன் சொன்னது…

வாழ்த்துக்கள். அடுத்த (இந்த)ஆண்டும் போட்டியிடுங்கள். அதுதான் புதியவர்களின் வெற்றிக்கு சரியான அங்கீகாரம்

நிகழ்காலத்தில்... சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு..

அப்பாவி முரு சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே

Logan சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே

வெ.இராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே. அடுத்த முறையும் நீங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

மாதேவி சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே!//புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.//

கலைஞரை பின்பற்ற போவதில்லை என்பதை சூசகமாக சொல்ல வருவது புரிகிறது!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்