பின்பற்றுபவர்கள்

28 ஜனவரி, 2010

கலவை 28/ஜன/2010 !

தேசிய விருது : இசை ஞானி இளையராஜாவுக்கு பத்ம பூசன் விருது கிடைத்திருக்கிறது. அடப்பாவிகளா, இன்னுமா கொடுக்காமல் வைத்திருந்திங்கன்னு கேட்கத் தோன்றுகிறது. இசை புயல் ரகுமான் எவ்வளவோ எட்டாத உயரத்திற்குச் சென்றிருந்தாலும் இளையராஜா - ரகுமான் ஒப்பீடுகள் இன்னும் தொடருகிறது, இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஒரே நேரத்தில் விருதா ? இளையராஜா ரசிகர்களுக்கு முகம் சுளிப்பாக இருக்கும். ரகுமானை வெளிநாட்டினர் பாராட்டிய பிறகே இந்தியா பாராட்டுது என்று நினைங்கப்பா, ரகுமானுக்காவது சரியான நேரம் கடப்பதற்குள் கொடுத்துவிட்டார்களே என்று நினைக்கலாம். இளையராஜா இசை ராஜா என்பதால் அவரது அந்த கலைத் திறமைக்கு என்றும் போற்றப்படுபவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. மற்றபடி அவரது தனிமனித செயல்களை முட்டுக் கொடுப்பவர்கள் வெறும் துதிப்பாடிகள் என்றே நான் சொல்லுவேன். தேசிய விருதுகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது புதிதல்ல நடிகர் திலகத்திற்கே அந்த அவமானங்கள் நடந்திருக்கின்றன. வழக்கமாக மலையாளப்படங்கள் நிறைய விருது பெருவதற்கு காரணம் தேசிய விருது குழுவில் கனிசமான மலையாளிகள் அமர்ந்திருப்பதும் காரணமாக சொல்லும் குற்றச் சாட்டு உண்மை இல்லாமல் இல்லை, சென்ற ஆண்டு எத்தனையோ பசங்க, நாடோடிகள் போன்ற ஓரளவு சிறப்பான படங்கள் வந்திருந்தாலும் கவுதம் 'மேனனின்' வாரணம் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்வதற்கு இல்லை. எவனும் குழுவாக சேர்ந்தாலும் அரசியல் பண்ணிடுவானுங்க, இதுல மலையாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ?

அம்மா அரசியல் : அம்மா டெல்லிக்கு போய் வந்ததும் லேசான பரபரப்பு கிளம்பியது, சோனியாவை சந்தித்தார் என்று சொன்னார்கள், ஐந்து நிமிடத்திற்கும் குறைவாக ஒரு அறையில் சந்திக்க நேர்ந்ததாம், ஒருவருக்கொருவர் ஹலோ சொல்லிக் கொண்டதுடன் சரியாம். 'பதி பக்தி இல்லாதவர்' என்ற ஜெவின் தூற்றலை சோனிய மறந்திருப்பாரா என்ன ? அவர் தான் இராஜிவுக்காக இலங்கை அரசியலையே மாற்றியவர் ஆயிற்றே. இருந்தும் சோ இராம சாமி போன்றோருக்கு ஜெ வரவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்குக் காரணம் நல்ல அரசியல் சூழல் தமிழகத்தில் வரவேண்டும் என்பதா ? வழக்கமான கருணாநிதி வெறுப்புதான். பெரியவா சின்னவாவை உள்ளே தள்ளியது உட்பட ஆயிரம் தான் பிணக்கு இருந்தாலும் அம்மாவின் ஆட்சி அவர்களது ஆட்சி என்று நினைக்கிறார்கள் போலும். எதிர்காலத்திலும் கூட சோனியா - ஜெ கூட்டணி ஏற்படுவது கடினமே. இருவருமே மக்களுக்காக அரசியல் நடத்துவதைவிட சுய நலத்திற்க்காக......வெற என்னத்த சொல்வது எதையாவது இட்டு நிறப்பிக் கொள்ளுங்க.

தேசிய மொழி : இந்தி தேசிய மொழி இல்லை, பெருவாரியான மக்கள் பேசப்படும் ஒரு மொழி மட்டுமே என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்ததாம். இப்போது தான் மொழி பற்றிய புரிந்துணர்வுகள் பல்வேறு மாநிலங்களில் வரத் தொடங்கி இருக்கிறது. உலக மொழிகள் முற்றிலும் அழியும் முன் முழுதாக விழித்துக் கொண்டால் சரி. ஆங்கிலத்தினால் உலக மொழிகளில் சிதைவும், இந்தியால் இந்திய மொழிகள் அழியும் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்பவே ஒரு வீட்டில் நன்கு ஆங்கிலம் தெரிந்த கணவன், மனைவி, குழந்தைகள் யாரும் தாய் மொழியைப் பேசுவதில்லை. இந்தி நுழையும் மாநிலங்களிலும் இதே நிலைமை தான். மொழிப் பற்றால் பலர் தாய் மொழியில் பேசுகிறார்கள், நாளடைவில் அல்லது நாளைய தலைமுறையில் அதுவும் குறையும். இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலம் இந்தி எது இருந்தாலும் ஒன்று தான் என்றாலும் ஆங்கிலம் உலக அளாவிய தொடர்பையும் அறிவையும் தரவல்லது. இந்திக்கு கொடி பிடிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

தர்மபுரி இளைஞரின் தர்மம் : தர்மபுரி இளைஞர் ஒருவர் குடியரசு நன்னாளில் அரசு மருத்துவமனை சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக முக மழிப்பு செய்தாராம். பணக்காரன் தான தர்மம் என்று கோவில் உண்டியலில் காசு போட்டு புண்ணியம் கிடைக்காதா என்று நினைக்கிறான். ஒன்றும் இல்லாத இவரைப் போன்ற ஏழைகளோ மனம் இருந்தால் எப்படியேனும் தர்மம், தானம் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவர் பெயர் கனேசன், அந்த இளைஞரை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். அந்த தகவலும் படமும் : நன்றி தினமலர்


மத நல்லிணக்கம் : மேதகு முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் படம் ஒன்றை இணையப்பக்கம் ஒன்றில் பார்த்தேன். என்ன ஒரு தெய்வீகக் களை. இஸ்லாமியர் நெற்றியில் இந்து அடையாளம். பார்த்ததும் தமிழ் மணம் குழுவில் ஒருவரும் பதிவருமான தமிழ் சசி எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை.

*****

"நீங்க ஏன் ஆ.ஒ படத்துக்கு ஆ.இரண்டாவது விமர்சனம் எழுதவில்லை, படம் அவ்வளவு மோசமா ?"

"வேற ஒண்ணும் இல்லை, இன்னும் படமே பார்கலைப்பா :) "

28 கருத்துகள்:

மோகன் குமார் சொன்னது…

தின மலர் செய்தி மனதை தொட்டது.

நானும் கூட என்னாடா இது ராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஒரே நேரம் ஒரே அவார்ட் என்று யோசிக்கவே செய்தேன்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பகிர்வுக்கு நன்றி

அன்புடன்
ஆ,ஞானசேகரன்

SanjaiGandhi™ சொன்னது…

நடிப்புக்குத் தான் தேசியவிருது இருக்கு.. மிகை நடிப்பு பிரிவு எதுவும் இல்லை என்பதால் சிவாஜியை அவமானப் படுத்தியதாக நினைக்க முடியாது.

ஜெ வர வேண்டும் என சோவுக்கு தான் விருப்பமாம்.. கோவியாருக்கு இல்லையாம்.. எல்லாரும் நம்பித்தான் ஆகனும் :))

எங்க ஊர் கணேசனுக்கு சல்யூட்..

மேதகு பட்டம் பிரபாகரனுக்கு மட்டுமே தமிழர்கள் கொடுக்கனும் என்பது எழுதப்படாத விதி. அதை மீறிய கோவியார் தமிழர் இல்லை என அறிவிக்கப் படுகிறார்.

SanjaiGandhi™ சொன்னது…

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author//

இது எப்போ இருந்து? கோவியாருக்கே இந்த நிலையா? அவ்வ்வ்வ்வ்வ்

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள், அம்மா அட்சியாக இருந்தால் என்ன? அய்யா அட்சியாக இருந்தால் என்ன? நடப்பது என்னமே ஒரே கருமம்தான். நாயும் பேயும் ஆட்சி நடத்தும் காலத்தில் நான் ஆட்சிசெய்தால் கூட நல்லதுதான். அட்லீஸ்ட் எனது தலைமுறைகளுக்காவது சொத்து தேறுமே.

விருதுகள் அரசியல்வாதிகளினால் அளிக்கப்படுவதாலும், வட நாட்டினரின் பாரபட்சமும் அதை எப்போதே கோலிக்குறியது ஆகிவிட்டது. கோவிலின் கோபுரத்தில் மயில் உக்காந்தாலும், மயிர் விழுந்தாலும் அது கோபுரம்தான் அது போல பண்ணயபுரத்தார் விருது வாங்கினாலும்,வாங்காவிட்டாலும் அவர் இசைஞானிதான்.

அப்துல்கலாம் படம் அருமை. நம்ம ஆள்க ஒன்னும் சொல்ல மாட்டார்கள், ஜமாத்தில் அவரையும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி.(அய்யா பதிவர்களே உடனே கும்மாதிங்க,நான் முஸ்லிம்களை குறை சொல்லவில்லை,ஜமாத் என்ற பெயரில் அடக்குமுறையைத் தான் குறை சொல்லுகின்றேன்).

நல்ல பகிர்வு நன்றி அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்துல்கலாம் படம் அருமை. ///
நான் அதில் இணைத்திருக்கும் சுட்டியைப் பார்க்கவில்லையா ?
:) அவ்வ்வ்வ்

//நம்ம ஆள்க ஒன்னும் சொல்ல மாட்டார்கள், ஜமாத்தில் அவரையும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி.(அய்யா பதிவர்களே உடனே கும்மாதிங்க,நான் முஸ்லிம்களை குறை சொல்லவில்லை,ஜமாத் என்ற பெயரில் அடக்குமுறையைத் தான் குறை சொல்லுகின்றேன்).

நல்ல பகிர்வு நன்றி அண்ணா.//

அவங்க ஜாமத்தில் அடக்குறாங்களா, அடங்குறாங்களான்னு உங்களுக்கு எப்படித் தெரியும், நீங்கள் ஏன் தேவை இல்லாமல் அவர்களின் வழிகாட்டும் குழுவை குறை கூறுகிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

/./ SanjaiGandhi™ said...

நடிப்புக்குத் தான் தேசியவிருது இருக்கு.. மிகை நடிப்பு பிரிவு எதுவும் இல்லை என்பதால் சிவாஜியை அவமானப் படுத்தியதாக நினைக்க முடியா//

சிவாஜி 'ஜோ' எங்கிருந்தாலும் உடனே வரவும். தம்பி சஞ்செய்க்கு எதோ கேட்குது

ஜோ/Joe சொன்னது…

//நடிப்புக்குத் தான் தேசியவிருது இருக்கு.. மிகை நடிப்பு பிரிவு எதுவும் இல்லை என்பதால் சிவாஜியை அவமானப் படுத்தியதாக நினைக்க முடியாது.//

ஆமா ..1960 - சிவாஜிக்கு கெய்ரோவில் கொடுக்கப்பட்ட ஆசிய ஆப்ரிக்க சிறந்த நடிகருக்கான விருதும் ,பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்த ‘செவாலியே’ விருதும் ‘மிகைநடிப்பு’ பிரிவில் கொடுக்கப்பட்டது தான் .ஹைய்யோ ..ஹைய்யோ.

மற்றபடி ‘ரிக்‌ஷாகாரன்’ -க்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை ,சிவாஜிக்கு கொடுக்காமல் விட்டதை சிவாஜியை அவமானப்படுத்தியதாக கொள்ள முடியாது ..முற்றிலும் உண்மை.

T.V.Radhakrishnan.. சொன்னது…

நல்ல பகிர்வு

SanjaiGandhi™ சொன்னது…

/மற்றபடி ‘ரிக்‌ஷாகாரன்’ -க்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை ,சிவாஜிக்கு கொடுக்காமல் விட்டதை சிவாஜியை அவமானப்படுத்தியதாக கொள்ள முடியாது ..முற்றிலும் உண்மை. //

ஜோ, சிவாஜிக்கு மிகை நடிப்பாவது வரும். எம்ஜியாருக்கு நடிப்பே வராது. அவருக்கு கொடுத்த அதே விருதை சிவாஜிக்கும் கொடுத்திருந்தால் தான் அது அவமானம். சிவாஜியின் மிகை நடிப்பை குறையாக சொல்லவில்லை. அவர் நடிப்புப் பயின்று நடித்து வளர்ந்த சூழல் அப்படி. அந்தக் கால நாடக நடிகர்கள் மிகை நடிப்பாளார்கள் தான். எங்கள் பகுதிகளில் இப்போதும் நடக்கும் தெருக்கூத்து நடிகர்கள் இன்றும் சிவாஜி பாணியில் தான் நடிக்கிறார்கள். அதை தவறு என்று சொல்லவில்லை. மிகை நடிப்பு என்று தான் சொல்கிறேன்.

ஜோ/Joe சொன்னது…

//அவருக்கு கொடுத்த அதே விருதை சிவாஜிக்கும் கொடுத்திருந்தால் தான் அது அவமானம். //
அதை தானே நானும் சொல்லியிருக்கிறேன் .மீண்டும் படித்துப் பாருங்கள்.

சிவாஜிக்கு கொடுக்குற அளவுக்கு தேசிய விருதுக்கு தகுதி கிடையாது .தேசிய விருது வாங்கிய எந்த நடிகரும் சர்வதேச விருது வாங்காததும் ,சர்வதேச விருதுகள் வாங்கிய நடிகர்திலகம் தேசிய விருது வாங்காததும் அதற்கு சான்று.

இமயமலையை கடந்தவனிடம் பரங்கிமலையை கடந்தாயா என கேட்கக் கூடாது .நடிகர் திலகம் இமயமலை .பல்கலைகழகங்களில் மற்றவர் போய் படுத்து பட்டம் பெறலாம் . நடிகர் திலகமே ஒரு பல்கலைக் கழகம் .அவருக்கு அது தேவையில்லை.

ஜோ/Joe சொன்னது…

// கவுதம் 'மேனனின்' வாரணம் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்வதற்கு இல்லை.//

சூர்யாவின் வாரணம் ஆயிரம் என்பதோடு நக்மா-வும் ஒரு தேர்வு கமிட்டி உறுப்பினர் என்பதை இணைத்துப் பார்க்கணும் கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சூர்யாவின் வாரணம் ஆயிரம் என்பதோடு நக்மா-வும் ஒரு தேர்வு கமிட்டி உறுப்பினர் என்பதை இணைத்துப் பார்க்கணும் கோவியாரே.//

ஓ நக்மாவும் அந்த குழுவில் இருக்காங்களா ? பேட்டாராப் !

Kesavan சொன்னது…

//எதிர்காலத்திலும் கூட சோனியா - ஜெ கூட்டணி ஏற்படுவது கடினமே//
யார் சொன்னது. கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் ராகுல் காந்தி பேசிய பேச்சு மறந்து போச்சா . தமிழகத்தில் தேவைபட்டால் அதிமுக வுடனும் கூட்டணி ஏற்படலாம்னு சொன்னாரே . இது சோனியா காந்திக்கு தெரியாமலா பேசி இருப்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

/Blogger Kesavan said...

//எதிர்காலத்திலும் கூட சோனியா - ஜெ கூட்டணி ஏற்படுவது கடினமே//
யார் சொன்னது. கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் ராகுல் காந்தி பேசிய பேச்சு மறந்து போச்சா . தமிழகத்தில் தேவைபட்டால் அதிமுக வுடனும் கூட்டணி ஏற்படலாம்னு சொன்னாரே . இது சோனியா காந்திக்கு தெரியாமலா பேசி இருப்பார்//

கூட்டணி கட்சிக்கு பேதியை ஏற்படுத்த ராகுல் பேசியதை சோனியா பாராட்டி இருப்பார் என்று தான் நினைக்கிறேன். தம்பி நீ ஒரு அப்பாவி, எல்லாத்தையும் நம்பிவிடுகிறாய்.

Kesavan சொன்னது…

//கூட்டணி கட்சிக்கு பேதியை ஏற்படுத்த ராகுல் பேசியதை சோனியா பாராட்டி இருப்பார் என்று தான் நினைக்கிறேன்.// அப்படிஎன்றால் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தயவு தேவை பட்டிருந்தால் அதரவு கேட்டு இருக்க மாட்டாரா . அரசியலில் எல்லாம் சகஜமப்பா . எல்லாருக்கும் தேவை அதிகாரம் . அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த அரசியல்வாதிகள். ஒரு காலத்தில் இந்திராவை வைக்கு வந்த படி திட்டி விட்டு கலைஞர் மீண்டும் இந்திராவுடன் கூட்டணி வைக்க வில்லையா .

SanjaiGandhi™ சொன்னது…

//தமிழகத்தில் தேவைபட்டால் அதிமுக வுடனும் கூட்டணி ஏற்படலாம்னு சொன்னாரே //

கேசவன், இது தவறான தகவல். ராகுல்காந்தி ஒருபோதும் இப்படி சொல்லவில்லை. அவர் சொன்னதாக சில பத்திரிக்கைகள் சுட்டிகாட்டிய விடியோவை முழுமையாக பாருங்கள் புரியும். pressbrienf.inல் பார்த்துக்கொள்ளுங்கள். தேதி நினைவில்லை. தேடிப்பாருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படிஎன்றால் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தயவு தேவை பட்டிருந்தால் அதரவு கேட்டு இருக்க மாட்டாரா . அரசியலில் எல்லாம் சகஜமப்பா . எல்லாருக்கும் தேவை அதிகாரம் . அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த அரசியல்வாதிகள். ஒரு காலத்தில் இந்திராவை வைக்கு வந்த படி திட்டி விட்டு கலைஞர் மீண்டும் இந்திராவுடன் கூட்டணி வைக்க வில்லையா .//
ம் சரி, உன் கூற்றுபடியே அதிமுக - திமுக கூட்டணி கூட அமையட்டம், நான் வேண்டான்னு சொல்லவில்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் குமார் said...

தின மலர் செய்தி மனதை தொட்டது.

நானும் கூட என்னாடா இது ராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஒரே நேரம் ஒரே அவார்ட் என்று யோசிக்கவே செய்தேன்//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி

அன்புடன்
ஆ,ஞானசேகரன்//
நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan.. said...

நல்ல பகிர்வு//

நன்றி !

ஷாகுல் சொன்னது…

ஐயா பித்தனின் வாக்கு,

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த சமயம் காஞ்சிக்கு சென்று காம கோடியை சந்திக்க சென்ற போது இருக்கை கொடுக்க வேண்டும் என்ற இங்கிதம் கூட இல்லாமல் அவரை நிற்க வைத்து அவமானபடுத்திய போதே ஜமாத் எதுவும் சொல்லவில்லை.

அப்புறம் அவர் சென்ற கோவிலில் அவ்ர் சென்றதுக்காக பரிகார பூஜை நடத்தி தீட்டு கழிக்காமல் இருந்திருப்பார்களா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™


//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author//

இது எப்போ இருந்து? கோவியாருக்கே இந்த நிலையா? அவ்வ்வ்வ்வ்வ்//

திறந்த வீடுன்னா நாயிங்க தொல்லை இருக்கும்னு சொல்லுவாங்க. அது போல நடக்குது.

பிரியமுடன் பிரபு சொன்னது…

அடப்பாவிகளா, இன்னுமா கொடுக்காமல் வைத்திருந்திங்கன்னு கேட்கத் தோன்றுகிறது.
///

ஆமாங்க

பிரியமுடன் பிரபு சொன்னது…

, சென்ற ஆண்டு எத்தனையோ பசங்க, நாடோடிகள் போன்ற ஓரளவு சிறப்பான படங்கள் வந்திருந்தாலும் கவுதம் 'மேனனின்' வாரணம் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்வதற்கு இல்லை. எவனும் குழுவாக சேர்ந்தாலும் அரசியல் பண்ணிடுவானுங்க, இதுல மலையாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ?
///////

ஓ.......

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அம்மா டெல்லிக்கு போய் வந்ததும் லேசான பரபரப்பு கிளம்பியது, சோனியாவை சந்தித்தார் என்று சொன்னார்கள், ஐந்து நிமிடத்திற்கும் குறைவாக ஒரு அறையில் சந்திக்க நேர்ந்ததாம், //

அந்தம்மாவின் இன உணர்வு எவ்வளவு பலமானது என்பதை அந்தம்மாவை நம்பியவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

கழுதை கெட்டா குட்டிச்சுவர்தான்!

தமிழர்கள் பட்டது போதாது, இன்னும் பட்டுத் திருந்த வேண்டியிருக்கிறது!

புருனோ Bruno சொன்னது…

//சூர்யாவின் வாரணம் ஆயிரம் என்பதோடு நக்மா-வும் ஒரு தேர்வு கமிட்டி உறுப்பினர் என்பதை இணைத்துப் பார்க்கணும் கோவியாரே.
//

இது வேறயா

:) :) :)

வலசு - வேலணை சொன்னது…

தர்மபுரி இளைஞரின் செயல் நெகிழ வைக்கிறது. பகர்விற்கு நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்