பின்பற்றுபவர்கள்

19 ஜனவரி, 2010

கடன் அன்பை முறிக்கும் !

கடன் என்ற சொல்லுக்கு ஏனைய மொழிகளில் இருக்கும் பொருளை விட தமிழில் அதன் பொருள் வெறும் கொடுக்கல் என்பதைவிட மிகுதியானது. சில சொற்களின் பொருள் மொழிப் பெயர்ப்பில் முழுமையான பொருளைத் தந்துவிடாது அப்படிப் பட்ட சொற்கள் பல்வேறு மொழிகளிலும் உண்டு. 'எச்சரிக்கை' என்ற சொல்லை நாம் தமிழில் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல்லின் மூலம் திராவிட மொழித் தொகுப்பில் இடம் பெறும் மற்றொரு பழம் பெரும் மொழியான கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்பதை பலர் அறியோம். எச்சரிக்கை என்பது பாதுகாப்பு மற்றும் கவனம் ஆகிய இரண்டும் தேவை என்பது குறித்த ஒரே சொல். இதற்கு ஏற்றச் சொல் பிறமொழிகளில் கிடையாது. எதற்கும் 'எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்' என்று சொல்வது 'எண்ணம் சிதறாமல் கவனத்துடன்' நடந்து கொள்ளவும் என்பதன் எளிமையான சொல் வடிவம் 'எச்சரிக்கை'. இதற்கு ஆங்கிலத்தில் Caution and Alert என்கிற இரு சொல்களை அந்த வரியில் அமைத்து எழுதினால் தான் வரி அதே பொருள் மாறாமல் முழுமை அடையும். சரி கடனுக்கு வருவோம்.

ஏனைய துன்பங்களைப் போலவே பொருள் சார்ந்த தேவையும் அது இல்லையென்றால் ஏற்படும் துன்பமும் அளப்பெரியது. அதற்கு மாற்று வழி கடன் பெறுவது. அதனால் தான் என்னவோ இறுதியில் மிகவும் துயரம் மிக்கவனாக இருந்தான் இராவணன் என்பதை வழியுறுத்தும் விதமாக 'கடன் பெற்றான் நெஞ்சம் போல்' என்ற சொற்றடரை அமைத்திருந்தார் கம்பர். இன்றைய தேதியில் வங்கி அல்லது ஏதோ ஒரு வழியில் கடன் பெறாதவர் அல்லது கடனே இல்லாதவர் என்று எவரும் இலர். கடன் வாங்குவது என்பது தேவையாகவும் கடன் என்பது விற்பனையாகவும் ஆகிவிட்டதால் கடன் கொடுப்பது என்பது இன்றைய உலகில் பொருளியலுக்காக இயங்கும் மாபெரும் சந்தை. வாராக் கடன்கள் வங்கிகளையே வாரிவிடும் கடன் சுமை ஆகிப் போகும் போது வங்கிகள் காணாமல் போகின்றன. வங்கிகளினால் நட்டம் அடைபவர்கள் வங்கி நடத்துபவர்கள் அல்ல, அதில் பணம் செலுத்திவிட்டு வட்டி கிடைக்கும் என்று காத்திருந்தவர்கள் தான். கடன் பெற்றவர்களும், வங்கி நடத்துபவர்களும் வங்கி நலிவடையும் போது வேலை, தொழில் இழப்பு என்பது தவிர்த்து பெரிதாக நலிவு அடைவதில்லை. ஏற்கனவே இருக்கும் அறிவு நுட்பத்தால் அதே போன்று வேறொரு பெயரில் அவர்களே மீண்டும் திறந்துவிடுவார்கள். வங்கி மூழ்குவது ஒட்டுமொத்தமாக பயனீட்டாளர்களின் பாதிப்பாக அமையுமே அன்றி வங்கி உரிமையாளர்களுக்கு பெரிதாக நட்டம் எதுவும் ஏற்படுவதில்லை அப்படியே ஏற்பட்டு இருந்தாலும் அவர்கள் அதில் முதலீடு செய்தது கண்டிப்பாக பாட்டான் முப்பாட்டன் சொத்தாகவும் இருக்காது எங்கேயோ விரைவாக ஈட்டியதை இங்கே இழக்கிறார்கள். பெரும் முதலீட்டில் நட்டமும் பெரிதாகத்தான் இருக்கும். கந்து வட்டிகளை அது போன்ற வங்கிகளை விடுவோம் அவை எந்த ஒரு நெறிமுறை விதியிலும் அடங்காது.

'நான் கடனே வாங்க மாட்டேன்' என்று எந்த ஒருவரும் அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது, எதாவது ஒரு சூழலில் இருப்புக்கு மிகுதியாக பணத்தின் தேவை ஏற்படும் போது கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது. கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இருப்பவர்கள் வங்கியை நாடுவார்கள். அப்படியான ஆவணங்கள் இல்லாதவர்கள் அல்லது விரைவில் கொடுத்துவிட முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் உடனடியாக நெருங்கிய உறவினர்களையோ, நண்பர்களையோ தான் நாடுவார்கள். அவர்களில் மனது உள்ளவர்களே உதவி செய்வார்கள். உறவினரோ, நண்பரோ அவர்களிடம் இருப்பு இருப்பதை அறிந்து 'கொடுத்தா குறைந்தா போய்விடுவார்கள் ?' என்கிற நினைப்பாக புதிய தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு கடன் கேட்கவருபவர்களை விடுவோம், அப்படியாக வருபவர்களின் தேவை அப்படி ஒன்றும் மூழ்க்கக் கூடியது இல்லை என்றால் அவர்களுக்கு உதவுவதும் உதவாததும் அவரவர் விருப்பம் தான். ஆனால் உண்மையிலேயே இக்கட்டான சூழலில் கடன் உதவி கேட்பவர்களுக்கு செய்வதால் நமக்கு கிடைக்கும் மனநிறைவு விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று. நம்மையும் மதித்து ஒருவர் உதவி கேட்கிறார் என்பது தனிப்பட்ட மனிதருக்கு பெருமையான ஒன்று தான்.
அதைவிட வாங்கும் சூழலைவிட கொடுக்கும் சூழல் நமக்கு அமைந்திருக்கிறது என்று நினைத்தால் தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைத்த கொடுப்பினை தான்.

நாம கடன் கொடுப்பது போல் நமக்கு யாரும் கடன் தருவார்களா என்று நினைப்பதைவிட நாம் கேட்கும் நிலையில் இல்லை கொடுக்கும் நிலையில் இருக்கிறோம் அவ்வாறு அமைந்தது என் கொடுப்பினை அல்லது வாங்கி வந்த வரம் என்று நினைத்தால் 'கடன் அன்பை முறிக்கும்' என்று கொடுக்க மனம் அமையாதவர்களின் சொல்லையே நாமும் தெரிந்தவர்களிடம் பயன்படுத்த மாட்டோம்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - கடன் கொடுப்பதற்கும் பொருத்தமான குறள்.

11 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

உண்மை உண்மை - கடன் அன்பை முறிக்கும் - இல்லை யெனச் சொல்ல மனம் வேண்டும் - மனோ தைரியம் வேண்டும் - இது இல்லை எனில் துயரம் தான்.

கடன் வாங்குபவர்களை விட கடன் கொடுத்தவர்கள்தான் துயரத்தில் தள்ளப்படுகிறார்கள்

நல்ல இடுகை நல்வாழ்த்துகள் கோவி

ராவணன் சொன்னது…

அது சரி....S$10,000 கடன் கிடைக்குமா......?

கோவி.கண்ணன் சொன்னது…

//கடன் வாங்குபவர்களை விட கடன் கொடுத்தவர்கள்தான் துயரத்தில் தள்ளப்படுகிறார்கள்//

அது திருப்பிக் கொடுக்கும் கடன் பற்றி.

நான் அதைப் பதிவில் நீளம் கருதி சொல்லவில்லை.

பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...

அது சரி....S$10,000 கடன் கிடைக்குமா......?//

ரொம்ப குறைவாக இருக்கு !
:)

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லா சொன்னீங்க அண்ணே

-----------

எனக்கும் கொஞ்சம்(?) வேணும்

சரி சரி நேரடியா டீல் பன்னிக்கலாம் :)

dondu(#11168674346665545885) சொன்னது…

//'கடன் பெற்றான் நெஞ்சம் போல்' என்ற சொற்றடரை அமைத்திருந்தார் கம்பர்.//
இல்லை, கம்பர் அவ்வரியை எழுதவில்லை. அது தனிப்பாடலில் வருகிறது. இது பற்றி மேல் விவரங்களுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/blog-post_31.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

நிகழ்காலத்தில்... சொன்னது…

”திருப்பித்தராத கடன் அன்பை முறிக்கும்”

//நம்மையும் மதித்து ஒருவர் உதவி கேட்கிறார் என்பது தனிப்பட்ட மனிதருக்கு பெருமையான ஒன்று தான்.//

நெற்றியில் என்ன எழுதி இருக்கிறது என கண்ணாடியில் ஒரு முறை பார்த்து கொள்ளவும்..:))

//தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைத்த கொடுப்பினை தான்.//

உண்மைதான்

உதவி என்றாலே அன்பளிப்பு என வைத்துகொள்ளலாம் அல்லவா?
அது கடன் என்கிற வகையில் வராது அல்லவா!!!

சிங்கக்குட்டி சொன்னது…

மிக சரி, எங்கோ படித்தது நினைவில் வருகிறது.

"ஒரு நண்பனை எதிரியாக்க வேண்டுமா, அவனுக்கு கொஞ்சம் பணம் கடனாக கொடு"

பிரியமுடன் பிரபு சொன்னது…

உண்மையிலேயே இக்கட்டான சூழலில் கடன் உதவி கேட்பவர்களுக்கு செய்வதால் நமக்கு கிடைக்கும் மனநிறைவு விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று. ///
///

சரியா சொன்னீர்கள்

ஆனால் அதித நம்பிக்கையோடு ஒருவருக்கு கடன் கொடுத்து , அதை அவர் தராமல் நம்மை எமாற்ற முயற்ச்சித்து , நம் நட்பையும் விட்டுவிட்டு செல்லும் போது மனம் என்ன பாடுபடும்????(சொந்த அனுபவம்)

சுல்தான் சொன்னது…

கடன் சாதாரணமாகி விட்டது என்பது உண்மைதான் ஜிகே. ஆனால் சில வங்கிகளில் கூப்பிட்டு கடன் கொடுத்து விட்டு அடியாட்களை வைத்து திரும்பப் பெருகிறார்களாம்.
உரிய அவசர தேவையில்லாமல் கடன் வாங்குவோர் 'கடன் அன்பை மட்டுமல்ல சில நேரங்களில் எலும்பையும் முறிக்கும்' என நினைவில் கொண்டு, இயன்றவரை கடனை விட்டும் தவிர்ந்திருத்தலே நலம் பயக்கும்.

Sangkavi சொன்னது…

உண்மையிலும் உண்மை...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்