பின்பற்றுபவர்கள்

25 ஜனவரி, 2010

மாதவிலக்கும் மதவிலக்கங்களும் !

மதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் கெட்ட உதிரம் வெளிப்படும், அது தூய்மையற்றது அதனால் அன்னாளில் விலக்கப்பட வேண்டியவள். மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளிலுமே தூய்மையற்றது தான் அல்லது தூய்மையற்றதாக மாறி இருக்கும், அந்த நிலையில் அவை உடலில் தங்ககுவது உடலுக்கு கேடுவிளைவிப்பது எனவே தான் உடல் கழிவுகள் பல்வேறு உந்துததல்கள் மூலம் வெளியாகிறது, இது வியர்வை, சீழ், சிறுநீர் மலம் பொருந்தும். பருவமடைந்த பெண்ணின் மாதவிலக்கு இரத்தமும் கழிவு பொருள் தான், அதனை கட்டுப்படுத்த முடியாது, மூன்று - ஐந்து நாள் வரை கசியும் தன்மை கொண்டது. பழங்காலத்தில் அடிக்கடி தூய்மை படுத்திக் கொள்ள முடியாத காலங்களில் தவிர்பதற்காக அல்லது ஓய்வு கொடுக்க பெண்ணை அந்த நாள்களில் தள்ளி வைத்திருந்தது என்பது தவிர்க்க முடியாத செயலாக இருந்திருக்க ஞாயங்கள் உண்டு என்று ஒப்புக் கொண்டாலும். இன்றைக்கு பெண்கள் வெளியே வேலைக்குச் செல்வது தவிர்க்க முடியாத சூழலில், பல்வேறு அணிய(ஆயத்த) பஞ்சுறைகள் (நாப்கின்) கிடைக்கும் சூழலில் தூய்மைக் கேடு பேசுவது பழமைவாத சிந்தனையே ஆகும்.

கிறித்துவம் தவிர்த்து ஏனைய மதங்களில் பெண்களின் மாதவிலக்கு பல்வேறு காலங்களாக விவாதப் பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. காஞ்சி 'புகழ்' பெரியவர் எங்கோ ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்தாரம், முன்கூட்டியே அதில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு யார் யாருக்கு மாதவிலக்கு இருக்கிறதோ அவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாம். இத்தனைக்கும் பெண்கள் பற்றிய பெரியவரின் மன நிலைகளை ஆன்மிக உலகம் நன்றே அறிந்து இருக்கிறது (நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா ?)

பெண்களுக்கு வழிபாட்டு உரிமைகள் கிடைத்தது கூட வரலாற்றுக் காலங்களுக்கு பிறகே, காரைக்கால் அம்மையார் போன்ற ஒரு சிலரே விதிவிலக்கு, அதற்கும் கூட அவர் தன் கணவனால் விலக்கப்பட்டார். காரைக்கால் அம்மையார் வாழ்வும் கதையா இல்லையா என்னும் ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. 63 நாயன்மார்களில் பெண்கள் ஐவர் அதில் அம்மையாரும் ஒருவராகத்தான் திருத்தொண்டர் மற்றும் சேக்கிழாரின் திருவிளையாடல் புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. உலகில் உள்ள சமயங்களையும் மதங்களின் தோற்றங்களைப் பார்த்தால் அதன் தோற்றத்திற்குக்கு காரணமாக ஒரு பெண்ணும் வரலாற்றில் எழுதப்படவில்லை, அல்லது அவர்களுக்கு மதம் தோற்றுவிக்கும் தகுதி இருப்பதாக மனித சமூகம் கருதவில்லை. மேரி ஏசுவின் தாய் என்பதால் அவருக்கும் ஆலயங்கள் எழுப்பட்டது என்பது மட்டுமே ஆப்ரகாமிய மதங்களில் பெண்களின் மீது கொஞ்சம் மரியாதை இருந்திருக்கிறது என்பதற்கான சான்று. இந்திய மதங்களிலும் பெண் தெய்வ வழிபாடு மற்றும் வணக்கங்கள் சமணர்களைப் பின்பெற்றி எழுந்தவையே (மயிலை வேங்கடசாமி போன்றோர் இது பற்றிய குறிப்புகள் எழுதியுள்ளனர்), காஞ்சி காமாட்சி கோவில் கூட முன்பு புத்தமதத்தில் வணங்கப்படும் தாரா தேவியின் கோவில் என்பதாக சமய ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். வேதங்களில் பெண் தேவர்கள் பெயர்கள் ஒரு சில இருக்கின்றன, ஆனால் இந்திரனுக்கு கூறும் புகழ்ச்சியைப் போல் அவற்றிற்கு பெரிதாக மதிப்பு எதுவும் கொடுக்காமல் வெறும் குறிப்பு அளவில் சில பெயர்கள் உண்டு. அந்த பெயர்களை வேதம் படித்தவர்களில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் ஐயமே. தற்பொழுது இருக்கும் இந்திய பெண் தெய்வங்களின் காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு பிற்பட்டவை தாம்.

பெண்களின் சமூக பங்களிப்புகளும், தேவைகளும் ஏற்படும் போது பெண்ணுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுவருகிறது, அவர்களின் பங்கு தேவை இல்லை என்னும் போது தந்திரமாகவும் தடுக்கப்படுகிறது. மற்றபடி பெண்களுக்கான சுதந்திரமோ உரிமையையோ எந்த ஒரு சமூகமும் மனம் உவந்து கொடுத்துவிடவில்லை. நாம் இப்போது பார்க்கும் பெண் உரிமைகள், பெண் விடுதலைகள் என்பது ஒரே நாளில் அனைவரும் மனம் மாறி தந்துவிடவில்லை. ஒரு பெண்ணை ஒரு சமூகம் சுதந்திர மாக நடமாடவிடுகிறது என்றால் அவளின் ஊதியம் அந்த சமூகத்து தனி மனித (அவளைச் சார்ந்த) இல்லங்களுக்கு தேவை என்கிற நிலையில் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று சொல்வது தான் நாம் காணும் பெண் விடுதலைகளின் விளக்கமாக இருக்கமுடியும். இது சூழலால் ஏற்படும் ஒரு சமூக மாற்றம் மட்டுமே. சரி எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வருவோம்.

பெண்கள் மாதவிலக்கின் போது கோவிலுக்குப் போகலாமா ? பூசை அறைக்குள் நுழையலாமா ? புனித நூல்களைத் தொடலாமா ?

என்ன கொடுமை இது, மாதவிலக்கின் போது பஞ்சுறைகள் பயன்படுத்தும் இந்த காலத்திலும் இந்த கேள்விகள் தேவையா ?

மனக்கோவிலுக்குள் இருக்கும் இறைவன் ஒரு பெண் மாதவிலக்கானால் உடனேயே வெளி ஏறிவிடுவானா ? மனக் கோவில் கட்டி வழிபாடு நடத்திய பூசலார் பெண்ணாக இருந்திருந்தால் ஒவ்வொரு மாதவிலக்கின் போது அவர் புதிய கோவில் கட்ட வேண்டி இருந்திருக்கும் :)

அவள் மனனம் செய்திருந்த மந்திரங்கள், இறைவசஙனங்கள் அன்று மட்டும் மனதில் இருந்து மறைந்துவிடுமா ? புனித நூல்கள் என்பவை காகிதத்தாலும் மையாலும் ஆனவை மட்டுமே, அதில் எழுதி இருப்பற்றை கல்வி, மொழி அறிவு உள்ளவர்களால் படிக்க முடியும், மற்றபடி மனதில் ஏற்கனவே முழுதாக மனனம் செய்துவிட்ட வசனங்களைவிட அதே வசனங்கள் அந்த நூலிலும் இடம் பெற்றிந்தால் மனதை விட அந்த நூல் புனிதத் தன்மை வாய்தவை என்று சொல்லிவிட முடியுமா ?

புனித நூலில் இருந்து வழிபாட்டு இடங்களில் இருந்து ஒரு மாதவிலக்கு பெண் தள்ளி நிற்க முடியும். ஆனால் மனதில் பதிந்த மந்திரங்களை, இறைவசனங்களை அவள் என்ன செய்வாள் ? நமக்கெல்லாம் மருந்து குடிக்கும் போதுதான் குரங்கு ஞாபகம் வருமே ! :)

இந்த சிக்கலுக்காகவும் மதத்தின் புனிதத் தன்மைகள் என்றும் எந்த சூழலிலும் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் பெண்கள் மதவிவகாரங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர் என்று யாரேனும் விளக்கம் சொன்னாலும் சொல்லுவார்கள். :)

22 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//ஒரு பெண்ணை ஒரு சமூகம் சுதந்திர மாக நடமாடவிடுகிறது என்றால் அவளின் ஊதியம் அந்த சமூகத்து தனி மனித (அவளைச் சார்ந்த) இல்லங்களுக்கு தேவை என்கிற நிலையில் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று சொல்வது தான் நாம் காணும் பெண் விடுதலைகளின் விளக்கமாக இருக்கமுடியும்//

உண்மை உண்மை.

//மற்றபடி மனதில் ஏற்கனவே முழுதாக மனனம் செய்துவிட்ட வசனங்களைவிட அதே வசனங்கள் அந்த நூலிலும் இடம் பெற்றிந்தால் மனதை விட அந்த நூல் புனிதத் தன்மை வாய்தவை என்று சொல்லிவிட முடியுமா ?//

பதில் கூற முடியத கேள்விகள்.

//புனித நூலில் இருந்து வழிபாட்டு இடங்களில் இருந்து ஒரு மாதவிலக்கு பெண் தள்ளி நிற்க முடியும். ஆனால் மனதில் பதிந்த மந்திரங்களை, இறைவசனங்களை அவள் என்ன செய்வாள் ? நமக்கெல்லாம் மருந்து குடிக்கும் போதுதான் குரங்கு ஞாபகம் வருமே ! :)//

:)

//பழங்காலத்தில் அடிக்கடி தூய்மை படுத்திக் கொள்ள முடியாத காலங்களில் தவிர்பதற்காக அல்லது ஓய்வு கொடுக்க பெண்ணை அந்த நாள்களில் தள்ளி வைத்திருந்தது என்பது தவிர்க்க முடியாத செயலாக இருந்திருக்க ஞாயங்கள் உண்டு//

சரியா சொன்னீங்க.

பெண்கள் (பாலியல் ரீதியாக ) பாதுகப்படவேண்டியவர்களே. ஆனால் ஒடுக்கப்படவேண்டியவர்கள் அல்ல.

ரோஸ்விக் சொன்னது…

பழைய பஞ்சாங்கங்கள் இன்னும் அப்படியே இருக்கத்தான் செய்கிறது. சிந்தித்து சிலவற்றையாவது மாற்றலாம். இன்றும் அவர்களை வீட்டில் ஒரு ஓரத்தில் அமரச் செய்வது மிகவும் கொடுமையானது.

பாலாஜி சங்கர் சொன்னது…

நல்ல பதிவு


தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

Unknown சொன்னது…

//பெண்கள் மாதவிலக்கின் போது கோவிலுக்குப் போகலாமா ? பூசை அறைக்குள் நுழையலாமா ? புனித நூல்களைத் தொடலாமா?//

இக்கேள்விகளுக்கு ஒரு முஸ்லீமின் பார்வையில் என் பதில்:
ஒவ்வொரு முஸ்லீமான பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரு நாளில் ஐந்து வேளைத் தொழுகை கட்டாயக் கடமை. அதில் மாதவிலக்கின்போது மட்டும் பெண் ஐவேளைத் தொழுகையிலிருந்து விதிவிலக்கு பெறுகிறாள். அவள் தொழுமிடத்துக்கு வந்தாலும் தொழுகையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

முஸ்லீம்களுக்கு பூசை அறை என்று தனியறை ஏதும் கிடையாது. வீட்டின் எல்லா சுத்தமான இடங்களும் தொழுமிடங்கள்தாம். அவள் தன் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மாதவிலக்கு காலங்களிலும் சென்று வருவாள். சென்று வரலாம்.

குர்ஆன் என்பது இறைவனால் புத்தமாக வழங்கப் படவில்லை. குர்ஆன் இறக்கப்பட்ட வடிவம் ஒலி வடிவமே அன்றி வரி வடிவம் அல்ல. எனவே மனதிலிருந்து படிப்பதுதான் உண்மை குர்ஆன். மனதிலிருந்தே படிக்க அனுமதி இருக்கும்போது வரி வடிவமாகிய புத்தகம் படிப்பதற்கு தடை என்ன இருக்க முடியும்.

இறைவனே அறிந்தவன்.

Unknown சொன்னது…

(நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா ?)
///

ஓ சந்தேகம் வேரயா?

Unknown சொன்னது…

//மற்றபடி மனதில் ஏற்கனவே முழுதாக மனனம் செய்துவிட்ட வசனங்களைவிட அதே வசனங்கள் அந்த நூலிலும் இடம் பெற்றிந்தால் மனதை விட அந்த நூல் புனிதத் தன்மை வாய்தவை என்று சொல்லிவிட முடியுமா ?//
///

அதுதானே

துளசி கோபால் சொன்னது…

எல்லாத்தையும் ஒரு அஞ்சு நாளைக்கு மறந்துருவோம். அப்புறம் 25 நாளுக்கு திரும்பவும் நினைச்சுக்குவோம்.

செலக்டிவ் அம்னீஷியா அப்போ வந்துரும்.

அடப் போங்கப்பா........ இதையெல்லாம் தாண்டி பெண்கள் எப்பவோ வெளியே வந்தாச்சு. இன்னுமா இந்தப்பேச்சு ஓயலை!

எங்கூர் ஹரே க்ருஷ்ணா கோவிலிலும் சரி, எங்க வீட்டிலும் சரி இதுக்கெல்லாம் தடை ஒன்னும் இல்லை.

பூனாவில் எங்க மாமி வீட்டில் இருந்த ஒரே அறையில்தான் எல்லோரும் புழங்க இடம். பழைய காலத்து கும்மோணம் மாமியே இதைப் பொருட்படுத்தலை, 33 வருசம் முந்தியே!

நாமா சொல்லலைன்னா யாருக்குத் தெரியப்போகுது?

இளமுருகன் சொன்னது…

அக்காலத்தில் பெண்களை தள்ளி வைத்ததற்கு சில நியாயங்கள் இருந்திருக்கலாம்.தவிர்க்க முடியாமல் இருந்திருக்கலாம்.அதை அப்படியே காலத்திற்கும் தொடர வேண்டிய அவசியம் ஏதுமில்லை.சரியான உதாரணங்களுடன் விளக்கிஇருக்கிறீர்கள்.
நன்றி ஐயா.

kailash,hyderabad சொன்னது…

உழைக்கும் மக்களிடம் இந்த பிரச்சனை இல்லை. ஒருநாள் வேலைக்கு போகாவிட்டால் கூலி நஷ்டம் ஏற்படும் .
அப்பா வேலைக்கு போய் அம்மா வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டால் யார் பிள்ளைகளுக்கு சமைத்து பள்ளிக்கு அனுப்புவது?.
மாதவிலக்கில் கருமுட்டை பெண்ணிடம் உருவாகி 28 நாள் காத்திருந்து ( உயிரணு வராவிட்டால் ) தானாகவே
தன்னை அழித்துக்கொண்டு ரத்தமாக வெளியேறி விடுகிறது. இந்த இயற்கையான விஷயத்தை தீட்டு என்பது அறிவியல் பார்வை இல்லாமை .
அறிவியலார்கள் அந்த ரத்தத்திலிருந்து stem cells ஐ எடுத்து உயிரை காப்பாற்ற ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்கள்.
முடிவுகள் பிரமிக்க வைப்பதாய்i உள்ளன. எதிர்காலத்தில் அழிந்துபோன உறுப்பு செல்களை வளர வைப்பதில் mensus blood முக்கிய பங்கு வகிக்கும்.

இது சம்மந்தப்பட்ட links சில :-
http://www.medinewsdirect.com/?p=344
http://www.nowpublic.com/health/menstrual-blood-bank-could-save-lives
http://www.ehow.com/how_4587255_menstrual-blood-stem-cell-research.html
http://www.msnbc.msn.com/id/21996417/

எதிர்காலத்தில் மதகுருமார்கள் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவசியம் stem செல் சிகிச்சை தேவை என்றால் அப்போது சிகிச்சை வேண்டாம் என்றுசொல்லி விடுவார்களா?

என்னுடைய கருத்து - அந்த cells எப்படி தன்னைதானே சுவிட்ச் போட்டாற்போல் அழித்து கொள்கிறது என்று கண்டுபிடுத்து கேன்சர் கட்டிகளுக்கு அப்ளை செய்தால் மக்களுக்கு மிகுந்த உபயோகமாகவும், வலி மிகுந்த
சிகிச்சையிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

Samuel | சாமுவேல் சொன்னது…

பெண் பாதிரியார் ...திருச்சபையில் முன்னதாக இல்லாமல் இருந்தது ....சமீப காலங்களில் எல்லா திருச்சபையிலும் நான் பெண் பாஸ்டர் பார்த்திருக்கேன்..... மற்றபடி பெண்ணடிமை, மாதவிலக்கு பிரச்சினை ,, இதை மதம் கற்றுகொடுப்பதில்லை என்பது என் கருத்து.

மாதவிலக்கும் மதவிலக்கங்களும் ! .... 'மதுவிலக்கும்' சேர்த்திருக்கலாம் நல்ல ர்ஹைமிங்கா வருது ...:-)

Samuel | சாமுவேல் சொன்னது…

//ஒரு பெண்ணை ஒரு சமூகம் சுதந்திர மாக நடமாடவிடுகிறது என்றால் அவளின் ஊதியம் அந்த சமூகத்து தனி மனித (அவளைச் சார்ந்த) இல்லங்களுக்கு தேவை என்கிற நிலையில் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று சொல்வது தான் //

இதில் சரியான ஒப்புதல் இல்லை, பெண் ஆட்சியாளர்கள் காலம் தொன்று பலர் இருந்திருகார்கள்...இந்திரா, ஜெயா போன்றோர் .. இவர்களை போன்றோர் சமுகத்தின் பார்வையை மாற்றி இருக்கலாம்.....
.//அவளின் ஊதியம் அந்த சமூகத்து தனி மனித// அவர்கள் ஊதியம் பண்ண அங்கு ஒரு வாய்ப்பு வந்து இருக்கு என்பதே, சமுகத்தின் பார்வை மாற்றத்தில் தானே

Unknown சொன்னது…

நோன்பு மற்றும், ஹஜ் பெருநாட்களில்

மாத விலக்காய் இருக்கும் பெண்கள் தொழுகை நடக்கும் இடத்திற்கு வரலாம் - அங்கு நடக்கும் சொற்பொழிவை கேட்க்கலாம்

மற்றும் அண்னன் சுல்தான் - நிறைய சொல்லிட்டாக.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல பதிவு...

Unknown சொன்னது…

மாத விலக்கு நாட்களில் பெண்களுக்கு உடல் மற்றும் மன நிலையில் ஓய்வு தேவை. கட்டாய ஓய்வு தரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கம், தூய்மையின்மை போன்ற காரணங்களாக மருவி இருக்கலாம்.

anbarasan சொன்னது…

GOVI SAID:
//கிறித்துவம் தவிர்த்து ஏனைய மதங்களில் பெண்களின் மாதவிலக்கு பல்வேறு காலங்களாக விவாதப் பொருளாகவே இருந்து வந்திருக்கிறது//

மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்ததை இருந்ததை தொட்டவனுக்கு தண்டனை ?

லேவியராகமம் 15:19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

15:21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:22 அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.

லேவியராகமம் 15:27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:31 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.

IN BIBLE:-
LEVITIUS

Menstruation--

Le 15:19-30;
19 And if a woman have an issue, (her period/menses), and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even.

20 And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean.

21 And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

22 And whosoever toucheth any thing that she sat upon shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

23 And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.

24 And if any man lie with her at all, and her flowers be upon him, he shall be unclean seven days; and all the bed whereon he lieth shall be unclean.

25 And if a woman have an issue of her blood many days out of the time of her separation, or if it run beyond the time of her separation; all the days of the issue of her uncleanness shall be as the days of her separation: she shall be unclean.

26 Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation.

27 And whosoever toucheth those things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

28 But if she be cleansed of her issue, then she shall number to herself seven days, and after that she shall be clean.

29 And on the eighth day she shall take unto her two turtles, or two young pigeons, and bring them unto the priest, to the door of the tabernacle of the congregation.

30 And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness

Radhakrishnan சொன்னது…

நல்லதொரு சிந்தனையை விதைத்திருக்கும் அழகிய பதிவு.

இதைப்பற்றி பேசவே அச்சப்பட்டிருந்த காலங்கள் இருந்ததுண்டு.

இது அவரவர் மனம் சம்பந்தபட்டவைகளாவும் இருக்கக்கூடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger RAJ said...

GOVI SAID:
//கிறித்துவம் தவிர்த்து ஏனைய மதங்களில் பெண்களின் மாதவிலக்கு பல்வேறு காலங்களாக விவாதப் பொருளாகவே இருந்து வந்திருக்கிறது//

மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்ததை இருந்ததை தொட்டவனுக்கு தண்டனை ?

லேவியராகமம் 15:19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.//

இது பழைய ஏற்பாட்டு நூலில் இருப்பது என்று நினைக்கிறேன். பழைய ஏற்பாடு கிறித்துவக்கு முந்தியது. நான் சொல்லும் கிறித்துவம் ஏசுவுக்கு பிறகானது

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு சிந்தனையை விதைத்திருக்கும் அழகிய பதிவு.

இதைப்பற்றி பேசவே அச்சப்பட்டிருந்த காலங்கள் இருந்ததுண்டு.

இது அவரவர் மனம் சம்பந்தபட்டவைகளாவும் இருக்கக்கூடும்.//

நன்றி சார்

துளசி கோபால் சொன்னது…

அதென்ன...சாயங்காலம் வரை?

அப்ப அதுக்கு அடுத்துவரும் நேரம் பரிசுத்தமா?

என்னவோ போங்க!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

அதென்ன...சாயங்காலம் வரை?

அப்ப அதுக்கு அடுத்துவரும் நேரம் பரிசுத்தமா?

என்னவோ போங்க!!!//

சாயங்காலம் நாள் தோறும் அவங்களுக்கு குளிக்கிற வழக்கம் இருந்திருக்கும் போல :) அதை இங்கே சொல்லாமல் இருக்கிறார்கள்

Robin சொன்னது…

//இது பழைய ஏற்பாட்டு நூலில் இருப்பது என்று நினைக்கிறேன். பழைய ஏற்பாடு கிறித்துவக்கு முந்தியது. நான் சொல்லும் கிறித்துவம் ஏசுவுக்கு பிறகானது//

நன்றி கோவி கண்ணன்.
எனக்கு ஒரு வேலை மிச்சம் :)

krishna சொன்னது…

இதில் எல்லாம் செரி. ஆனால் சமணர்களிடமிருந்து தான் ஹிந்து மதத்திற்கு பெண் வழிபாடு வந்தது என்று சொல்வது தவறு. மஹவீரர் பிறந்தது எப்பொழுது. அதற்கும் எத்தினை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கொற்றவை வழிபாடு நம் நாட்டில் இருக்கிறது. ஐந்தினைகளும் அவற்றுக்கு உரிய தெய்வங்களும் எல்லாம் மறந்துருதா ஜீ

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்