பின்பற்றுபவர்கள்

6 ஜனவரி, 2010

கண்ட கண்ட மின்னனு பொருள்களை வாங்குபவரா நீங்கள் ?

'கடைவிரித்தேன் கொள்முதல் செய்ய ஆள் இல்லை' என்னும் அளவுக்கு மின்னனு வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை சீனாவும் ஏனைய நாடுகளும் ஆயத்தம் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றன. ஒரு பக்கம் தேவை என்பதைவிட மலிவாக விற்கிறது என்பதற்காக கண்டதையும் வாங்கிக் குவிப்போர் உண்டு. மின்னனு பொருள்கள் குறிப்பாக படக் கருவி (கேமரா) தொழில் நுட்பம் எந்த அளவுக்குப் தனிமனிதனுக்கு பயன்படுகிறதோ, அதே அளவுக்கு சமூக எதிரிகளுக்கு பயனளிக்கிறது. அசைப் படக் கருவியின் பயன்கள் எத்தகையதாக இருந்தாலும் குற்றத் தடுப்பிற்கும், குற்றச் செயலுக்கும் அதுவே ஏதுவாக அமைந்திவிடுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பின் பயனும் கெடுதலும் அதைப் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. படக்கருவிகளைப் பொருத்த அளவில் காட்சிகளை பதிய வைக்கும் தொழில் நுட்பம் இருக்கிறதேயன்றி எந்தக் காட்சியை பதிய வைக்க முடியாது என்பதற்கு எந்த தொழில் நுட்பமும் கிடையாது என்பதால் தான் கருவரையிலேயே (கர்பப் பைதான், வேற ஒன்றும் இல்லை) பயன்படுத்தி கருவின் வளர்ச்சிகளைக் கூட தெரிந்து கொள்ள முடிகிறது.

தற்கொலைகளையும், கொலைகளையும் படமெடுக்கும் கேமராவால் அதைத் தடுப்பதற்கோ, அதைப் படம் பிடிக்காமல் இருக்கவோ எந்த ஒரு தடையும் இல்லை. அதாவது கேமரா நுட்பம் என்பதில் எந்த ஒரு புனிதத் தன்மையும் இல்லை, அது ஒரு தொழில் நுட்பத்தின் வழியாக புலன் நீட்டிக்க மற்றும் பதிவு செய்து பார்க்கும் வசதி கொண்ட ஒரு படக் கருவி மட்டுமே. கேமரா ஒரு கடவுள் போல கண்ணுக்கு முன்னால் எந்த அநியாயம் நடந்தாலும் கண்டு கொள்ளாது, போட்டுக் கொடுக்க பதிய வைத்துக் கொள்ளும். :)

இப்போதெல்லாம் மலிவு விலையில் கவர்ச்சிகரமான மின்னனு பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றை மலிவு விலையில் விற்பதற்கு மறை முகக் காராணங்களும் உள்ளன. டிஜிட்டல் டிவி என்கோடர் என்பது ஒரு மின்னனு கருவி, இதன் மூலம் இணையத்திலிருந்து படக் காட்சிகளை தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் பலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை படுக்கை அறையில் வைத்திருப்பார்கள். தூங்கும் முன்பு பார்த்துவிட்டு கண் அயர்ந்ததும் தூங்கலாம் அல்லது தூக்கம் வரவில்லை என்றால் ஓடவிட்டுப் பார்க்கலாம் என்பதற்காக நடுத்தர வருமான இல்லங்களிலும் கூட படுக்கை அறையில் தொலைக்காட்சி கருவிகள் இருப்பது பொதுவானவையே. தொலைக்காட்சியுடன் தொடர்புடைய மலிவு விலைக்கருவிகளின் குறியும் (டார்கெட்) அது தான். இது போன்ற கருவிகளில் ஒலிவாங்கியுடன் கூடிய படக்கருவியை கருவியுனுள் வெளியே தெரியாதபடி இணைத்து படுக்கை அறைக் காட்சிகளை படம் எடுத்து அதை நேரடியாக அதிவேக அலைவரிசை (RF) வழியாக அல்லது இணைய வழியாகவே சமூக எதிரிகளால் பதியப்பட்டு விடுகிறதாம்.

அனைத்துலக நீலப்பட விற்பனையில் இல்லங்களில் இருந்து எடுக்கப்படும் நீலப்படங்களுக்கு ஏகப்பட்ட மவுசு.நமக்கு தெரியாமலேயே நம் வீட்டுப் படுக்கை அறைக் காட்சிகள் உலகமெங்கும் சிடிகளாக வலம் வரும் அச்சமும், அவமானமும் அடையும் கொடுமைகள் நடந்துவிடலாம். எதற்கும் புதிய வகை எலக்ட்ரானிக் கருவிகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எலக்ட்ரானிக் கருவிகளில் அல்ட்ரா வேவ் எனும் தொழில் நுட்பம் வழியாக ரீமூட் கண்ட்ரோல் எனப்படும் தொலை இயக்கி வழியாக இயங்கும் படி அனைத்து வீட்டு மின்னனுகருவிகளுமே அமைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் அல்டாரா வேவ் இயக்கத்திற்காக கருவிப் பெட்டிகளில் சிறிய வட்டமான கண்ணாடித் திரைகள் உண்டு. அதில் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால் அல்லது நீளமான மெல்லிய கண்ணாடி அல்லது ஒளி ஓடுருவக் கூடிய அளவுக்கு கண்ணாடித் தடுப்புகளின் பின்னால் இண்டிகேட் எல்இடிகள் கருவி இயக்கத்தை காட்டுவதற்கு அமைக்கப்பட்டு இருக்கும் (That means brown or transparent glass front panel) அதனுள் ரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்தால் நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நம்பக நிறுவனங்கள் தவிர்த்து பிற மலிவு விலை எலெக்ட்ரானிக் பொருள்களை வாங்குவோர் எச்சரிக்கையுடன் வாங்கி சோதித்துப் பார்த்துவிட்டு கேமாராக்கள் எதுவும் இல்லை என்றால் பயன்படுத்தலாம். முடிந்த அளவுக்கு மலிவு விலைப் பொருள்களை புறக்கணிப்பதே நல்லது.இந்த வீடியோவின் நம்பகத் தன்மை எத்தகையது என்று தெரியவில்லை. சீனத் தயாரிப்புகளை / மலிவு விலை தயாரிப்புகளை புறக்கணிக்க /விற்பனையை முடக்க பிற நாடுகளால் அவதூறு கிளப்பி விடக் கூட இந்த வீடியோ தயாரிக்கப்பட்டு இருக்கலாம். இருந்தாலும் தற்போதைய தொழில் நுட்பத்தால் ஒருவருக்கு தெரியாமல் அவர் பயன்படுத்தும் கருவி வழியாக அவரது படுக்கை அறையைக் கூட கண்காணிக்க முடியும் என்பதற்கான கூறுகள் உள்ளன என்பதை நாம் தகவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்

17 கருத்துகள்:

gulf-tamilan சொன்னது…

ம்!!!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல தகவல்கள் , கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். மிக்க நன்றி கண்ணன் அண்ணே .

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு.

மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

கிரி சொன்னது…

அடப்பாவிகளா! இவனுக இம்சை தாங்க முடியலையே..நிம்மதியா நம்ம வீட்டுல கூட இருக்க முடியாது போல இருக்கே

வடுவூர் குமார் சொன்னது…

கொடுமையாக‌த்தான் இருக்கு.
தூங்கும் அறையிலும் தொலைக்காட்சி தேவையா? இட‌ப்ப‌ற்றா குறை என்றால் ஒன்றும் சொல்ல‌முடியாது.

அறிவிலி சொன்னது…

இந்த கண்றாவி வேற நடக்குதா???


ரிமோட் கண்ட்ரோல்களில் உபயோகிக்கப்படுவது அகச்சிவப்பு கதிர்கள் (Infrared).

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவிலி said...
இந்த கண்றாவி வேற நடக்குதா???


ரிமோட் கண்ட்ரோல்களில் உபயோகிக்கப்படுவது அகச்சிவப்பு கதிர்கள் (Infrared).
//

Infrared (IR) சரிதான் நான் UW என்று தவறாக எழுதி இருக்கிறேன் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
அடப்பாவிகளா! இவனுக இம்சை தாங்க முடியலையே..நிம்மதியா நம்ம வீட்டுல கூட இருக்க முடியாது போல இருக்கே
//

நிம்மதி இல்லை கிரி, வீட்டுல ஒண்ணா சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது போல இருக்குன்னு சொல்லி இருக்கனும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// அக்பர் said...
நல்ல பகிர்வு.

மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல தகவல்கள் , கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். மிக்க நன்றி கண்ணன் அண்ணே .
//
நன்றி ஸ்டார்ஜன்

கோவி.கண்ணன் சொன்னது…

/gulf-tamilan said...
ம்!!!
/
ம்ம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கொடுமையாக‌த்தான் இருக்கு.
தூங்கும் அறையிலும் தொலைக்காட்சி தேவையா? இட‌ப்ப‌ற்றா குறை என்றால் ஒன்றும் சொல்ல‌முடியாது.
//

பரிசாக (கிப்ட்) இன்னொரு தொலைகாட்சிப் பெட்டி வந்தால் அதை படுக்கையறையிலாவது முடக்கி ஆகனுமே !

Unknown சொன்னது…

அடக்கிரகமே ...

இனி எதை பார்த்தாலும் மெர்சலா இருக்குமே ...

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

கலைஞர் கொடுக்கும் இலவச தொலைக்காட்சி சீனத்தயாரிப்பு தானே ?? பலர் இதை படுக்கைஅறையில் வைக்கின்றனராம் ;)))

Unknown சொன்னது…

(கர்பப் பைதான், வேற ஒன்றும் இல்லை)
////


ஹ ஹா சரி சரி

Unknown சொன்னது…

கேமரா ஒரு கடவுள் போல கண்ணுக்கு முன்னால் எந்த அநியாயம் நடந்தாலும் கண்டு கொள்ளாது, போட்டுக் கொடுக்க பதிய வைத்துக் கொள்ளும். :)
////

ஹ ஹா

Unknown சொன்னது…

இதுவேறா???????????????!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்