பின்பற்றுபவர்கள்

25 ஜனவரி, 2010

இராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு !

பெரியவர் தமிழ் பதிவுலகின் முன்னோடி, தமிழ் பதிவு கூறும் நல்லுலகிற்கு பல புதிய (வலைப்பக்கம், பின்னூட்டம், இடுகை என பல) கலைச் சொற்களை ஆக்கித் தந்தவர் வளவு இராமகி ஐயாவை நேற்று பதிவர்களுடன் சந்தித்தோம். நான் ஏற்கனவே அவரை சென்னையில் சந்தித்திருந்தாலும் அருகாமையில் எதெரெதிரே அமர்ந்து அளவளாவும் அறிய வாய்ப்பு நேற்று தான் கிட்டியது. குறித்த நேரத்தில் அங்மோகியோ நூலகம் அருகில் வந்துவிட்டார். மேலும் சில பதிவர்களுடன் நூலகத்தின் பின் பகுதியில் அமர்ந்தோம்.
இராமகி ஐயா மற்றும் இராம் குமார்
இராமகி ஐயா மற்றும் இராம் குமார்

பேச்சு சங்க இலக்கியம், தமிழக பண்டைய அரசர்கள், அசோகர் குறிப்புகள் என இலக்கிய காலம் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கிய காலம் அல்லது வரலாற்றின் காலம் வரையறுத்தலில் பயன்படுத்தும் Absolute Marker எனப்படும் குறிப்பு முறைகளைப் பற்றி சொல்லத் தெரிந்து கொண்டோம். வரலாற்றின் காலம் கிறித்துவ ஆண்டின் அடிப்படையில் ரோமப் பேரரசுகளின் குறிப்புகளை ஒட்டி அவற்றுடன் தொடர்புடைய தகவல்களால் வரலாற்றின் காலம் வரையறுக்கப்படுகிறது. இதன் படி சங்க இலக்கியத்தின் காலம் கிமு 1000 வரையில் கூட இருக்கவும், சிலம்புவின் காலம் கிமு வுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பதாக தெரிவித்தார். நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார். தமிழர்களின் தொல் சமயம் ஆசிவகம் எனப்படும் சமண வகையைச் சார்ந்ததாக இருப்பதற்கான கூறுகளாக சங்க இலக்கியத்தில் எண்ணற்றக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன என்றார். ஆசிவகம், பெளத்தம், திருத்தங்கர்களைப் பின்பற்றும் ஜைன சமயம் ஆகியவை சமணம் என்பதாகக் குறிப்பிட்டார். சமணம் என்கிற சொல் தனிப்பட்ட சமயம் சார்ந்ததல்ல அது ஒரு குறியீட்டுப் பெயர் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது சம்மணர் அதுவே சமணர் என்பதாகியது அந்த வகையில் புத்தர், மகாவீரர், ஆசிவகர் ஆகியோர் சமணர் எனப்பட்டனர் என்பதாக கூறினார்.

கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குமான உரையாடலில் தமிழ் தொடர்புடைய பல தகவல்களை தெரிந்து கொண்டோம். பேச்சு எழுத்து சீர்த்திருத்தம் தொடர்பாகவும் சென்றது. தற்போது இருக்கும் எழுத்து அமைப்பு போதுமானதாகவே உள்ளது, எழுத்துச் சீர்திருத்தம், மாற்றம் தேவை என்பதாக நடைபெறவிருக்கும் இணைய தமிழ் சொம்மொழி மாநாட்டில் தேவையற்றது என்பதாக குறிப்பிட்டார். அச்சுத் தமிழில் இருந்த எழுத்து எண்ணிகையின் அடிப்படையில் சேர்க்கப்படும் அச்சுக் கோர்ப்புகள் குறைபாட்டிற்கு பெரியார் பரிந்துரை மாற்றாக இருந்தது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் பெரிய அளவு மாற்றமாக இகர, உகர மெய்யெழுத்துச் சீர்த்திருத்தம் தேவை அற்றது, இந்த சீர்த்திருத்தப் பரிந்துரையின் படி இகர வரிசையிலான 'கு முதல் னு' மற்றும் 'கூ முதல் னூ' வரையிலான தனி எழுத்துக்குப் பதில் 'க்+உ,ஊ -> கு,கூ என்பதற்கு பதில் ஜு, ஜூ க்கு இருக்கும் மேற் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்பது போன்ற பரிந்துரையாம், இதன் மூலம் இகர உகர வரிசை எண்ணிக்கையிலான நெடுங்கணக்கு குறியீடுகள் வெகுவாக குறைக்கப்படும், எனவே கற்றுக் கொள்ள எழுது என்பதாக பரிந்துரைச் செய்ய இருக்கிறார்கள் இன்றும் இது தமிழுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தும் என்றார். அவருடைய பதைபதைப்புக் காரணமாக,

இந்த மாற்றம் சிறிய மாற்றம் அல்ல, வீரமாமுனிவர் செய்தது 3 விழுக்காடு, பெரியார் செயத்து 2 விழுக்காடு, ஒப்பீட்டு அளவில் புதியவகை மாற்றம் எழுத்து அமைப்பில் பெரும் சிதைவை ஏற்படுத்தும், ஏற்கனவே இருக்கும் இலட்சக்கணக்கான நூற்களை புதியவகை எழுத்துக்கு மாற்றி மீள் பதிப்பு செய்யப் போகிறவர் யார் ? அப்படிச் செய்யவில்லை என்றால் அவை பயன்படாமல் அழிந்துவிடவோ, வாசிக்க முடியாத ஒன்றாகவே ஆகி இலக்கிய பயன்பாட்டில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு.

எழுதும் முறைகள் கற்கள், துணி, ஓலைசுவடி, தாள், கணி(னி) என்று வளர்ந்து வந்திருக்கிறது, கணி(னி)யில் தட்டச்சு செய்வதற்கும் சேமிப்பதற்கும் தற்போதைய நடைமுறை எழுத்துக்களால் எந்த ஒரு தடையும் இல்லை, மேலும் எளிதாக மாற்றினாலும் தற்போதைய கணிணி நுட்பத்தினால் பெரும் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அந்த மாற்றம் பயனளிக்காது என்றார். அச்சுக் கோர்க்கும் காலத்தில் தேவை என்பதற்கு இருந்த எழுத்துச் சீர்திருத்தமும், தற்போதைக்கு வலிந்து வழியுறுத்தப் போகும் எழுத்துச் சீர்த்திருத்தமும் ஒன்று அல்ல, அது தேவையற்றதுமாகும் என்றார். உண்மையில் சொல்லப் போனால் ஆங்கில பெரிய சிறிய எழுத்துக்களின் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் தற்போது நாம் படுத்தும் தமிழ் தட்டச்சு எழுத்துகள் எண்ணிக்கையில் குறைவே. உயிர், மெய், உயிர்மெய் என்ற எண்ணிக்கையில் நெடுங்கணக்கு குறியீடுகள் 247 எழுத்து என்றாலும் நம் பயன்படுத்தும் தட்டச்சு எண்ணிக்கைக் குறிய எழுத்துகள் 48க்கும் குறைவே, பெரும்பாலும் உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் + மெய் எழுத்துகளை சேர்த்து தட்டச்சும் போது நமக்கு கிடைக்கும் படி மென் பொருள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதால் மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் இருப்பது உண்மை என்றாலும் அவற்றை மொத்தம் 46க்கும் குறைவான தட்டச்சு விசை பொத்தான்களினுள்ளேயே அமைப்பட்டு இருக்கிறது. தங்கிலீஸ் முறையில் அல்லாமல் தமிழ் 99 முறையில் நாம் தட்டச்சு செய்யும் போது அந்த எண்ணிக்கை இன்னும் குறைவே. எனவே 247 எழுத்துகள் தனித் தனிக் குறியீடாக நம் விசைப்பலகையில் இல்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

என்னிடம்(கோவி) தமிழில் எத்தனை எழுத்துகள் என்று பிறமொழி பேசுவோரிடம், நான் 247 என்று சொல்வது இல்லை, பெரிய சிறிய என மொத்தம் ஆங்கிலத்தில் இருக்கும் 48 எழுத்துகளைவிட தமிழ் குறியீட்டுச் சொற்கள் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வதுண்டு.

இராமகி ஐயா சொல்வது போல் தமிழில் மேலும் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது என்பதுடன் அவர் சொன்னது போல், அத்தகைய பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் அது தமிழ் வளர்ச்சி என்னும் தொடர்ச்சியில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு பழந்தமிழுக்கும் தற்காலத்திற்கும் இடையே பெரிய தடையாகிவிடும் வாய்ப்பு மிகுதியாவே இருக்கிறது. எப்போதுமே வளர்ச்சி என்பதில் பழமைக்கும் புதுமைக்கும் நுட்பமான தொடர்பு இருக்கும் அந்த தொடர்பே வளர்ச்சியின் அளவீடாகவும் அமையும் அப்படியே அமையும் வளர்ச்சி மிக மிக மெதுவானதாகவும் தேவையானதாகவும் அமையும் போது அதனால் மொழிக்கு பயனுண்டு ஆனால் புகுத்தப்படும் பெரும் வளர்ச்சிகளினால் மொழி முற்றிலும் சிதையும் பேருங்கேடு உள்ளது. இதன் காட்டிற்காக பல்வேறு மொழிகளில் புகுத்தப்பட்ட நடைமுறைகளையும் அவை சிதைந்து போனதையும் குறிப்பிட்டார்.

இராமகி ஐயாவின் வேண்டுகோள், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் என்ன எழுதினாலும் கூடவே அவ்வப்போது துறை சார்ந்த ஆக்கங்களை ஒன்றிரண்டாவது எழுதினால் நன்றாக இருக்கும், துறைச் சார்ந்த இடுகைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

நேற்றைய மாலை மாலை 6.30 வரை நடந்த சந்திப்பு சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இராமகி ஐயாவுக்கு மிக்க நன்றி.

இராமகி ஐயாவுடனான சந்திப்புக்கு வந்திருந்தவர்கள் ஜோசப் பால்ராஜ், இராம் குமார், ஜெகதீசன், விஜய் ஆனந்த், வெற்றிக் கதிரவன்(விஜய்), பிரியமுடன் பிரபு, ஜோ மில்டன் மற்றும் நான்.

*******

இணைப்பு: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது எனக்கோரும் மலேசிய பதிவர் திரு சுப.நற்குணன் அவர்கள் தனது திருத்தமிழ் பதிவில் எழுதிய இரு இடுகைகள் மற்றும் கருத்துரைகள்.
1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)

19 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

பதிவுகளுக்கான கலைச் சொற்களை தந்தவர் எனும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு - சந்திக்க தவறிட்டேன்.

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமான்னு பார்ப்போம்.

நன்றி அண்னா பகிர்தலுக்கு.

’டொன்’ லீ சொன்னது…

தவற விட்டு விட்டேன் :-(

சந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி

துளசி கோபால் சொன்னது…

அருமை கோவியாரே.

சந்திப்புக்கு நான் வந்திருந்தால்..........
பயந்து ஒளிஞ்சு உக்கார்ந்திருப்பேன்.

ஏன்னா.... நம்ம தமிழ் அப்படி(-:

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...

அருமை கோவியாரே.//

நன்றி !

// சந்திப்புக்கு நான் வந்திருந்தால்..........
பயந்து ஒளிஞ்சு உக்கார்ந்திருப்பேன்.

ஏன்னா.... நம்ம தமிழ் அப்படி(-://

உங்கள் தமிழுக்கு எந்த குறைவும் இல்லை, தமிழில் பேச்சுத் தமிழ் நாடகத் தமிழ் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையும் தமிழில் எழுதும் முறைதான். குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை.
:)

பழமைபேசி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.... அவர் சார்லட் வரும்போது நாங்களும் சந்திக்க இருக்கிறோம்!

அறிவன்#11802717200764379909 சொன்னது…

{நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார்."}

இது அறியப்படாத செய்தியாக வேண்டுமானால் இருக்கலாம்;ஆனால் வேங்கடசாமி,நசிக போன்றோர் நாட்களிலேயே தமிழ் மொழியின் காலம் மிக முற்பட்டது என்றும் இப்போது கிடைத்திருக்கும் நூல் கிமு 100 லிருந்து கிமு 1000 வரைக்குமான காலமாக இருக்கலாம் என்பது ஏற்கனவே அறுதியிடப்பட்டு விட்டது.

மேலும் அக்காலமும் கட்டமைப்புடன் கூடிய ஒரு நூல் ஆக்கப்பட்ட காலம்,எனவே மொழியின் தோற்ற வளர்ச்சி காலங்கள் இன்னும் முன்னோக்கிப் போகத்தான் வாய்ப்பிருக்கிறது.

மற்றபடி ஆரம்ப இலக்கியங்கள் சமணத்தைக் குறிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நோக்கிலான இராம.கி.யின் கருத்துக்களை விரிவாக ஒரு பத்தியாக அவர் எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 said...

{நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார்."}

இது அறியப்படாத செய்தியாக வேண்டுமானால் இருக்கலாம்;ஆனால் வேங்கடசாமி,நசிக போன்றோர் நாட்களிலேயே தமிழ் மொழியின் காலம் மிக முற்பட்டது என்றும் இப்போது கிடைத்திருக்கும் நூல் கிமு 100 லிருந்து கிமு 1000 வரைக்குமான காலமாக இருக்கலாம் என்பது ஏற்கனவே அறுதியிடப்பட்டு விட்டது.//

அறிவன் சார், மயிலை வெங்கடசாமி புத்தசார்ப்பு உடையவர் என்கிற கருத்தும் நிலவுகிறது. புத்தமதம் குறித்து மிகுதியாக எழுதி உள்ளார்.
ஆனால் என்னுடைய இலக்கிய அறிவுக்கு திருக்குறள் சைவ இலக்கியமாகவோ, வள்ளுவர் வேத சார்புள்ளவராகவோ இருக்க முடியாது. 'சமணர்' என்பது வைதிகம் சாராத பவுத்தம், ஜெயினம் மற்றும் ஆசிவகத்தின் ஒற்றைக் குறீயீட்டுச் சொல் என்று அவர் சொல்வது சரி என்று நினைக்கிறேன்

// மேலும் அக்காலமும் கட்டமைப்புடன் கூடிய ஒரு நூல் ஆக்கப்பட்ட காலம்,எனவே மொழியின் தோற்ற வளர்ச்சி காலங்கள் இன்னும் முன்னோக்கிப் போகத்தான் வாய்ப்பிருக்கிறது.//

வட இந்தியர்கள் இதை மறுக்கத் துணிகிறார்கள் என்பதாகவும் ஒரு மேற் குறிப்பைச் சொல்லி இராமகி ஐயா குறிபிட்டார்

// மற்றபடி ஆரம்ப இலக்கியங்கள் சமணத்தைக் குறிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நோக்கிலான இராம.கி.யின் கருத்துக்களை விரிவாக ஒரு பத்தியாக அவர் எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும்!//

எழுதுவார் என்று நானும் நினைக்கிறேன்

ரோஸ்விக் சொன்னது…

//’டொன்’ லீ
தவற விட்டு விட்டேன் :-(

சந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி//

என் கருத்தும் அதே... :-(

Sangkavi சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.... எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க கண்ணன்,..
என்னால் வர முடியாமைக்கு வருத்தமே...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...
பதிவுகளுக்கான கலைச் சொற்களை தந்தவர் எனும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு - சந்திக்க தவறிட்டேன்.

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமான்னு பார்ப்போம்.

நன்றி அண்னா பகிர்தலுக்கு.
//


நன்றி ஜமால் !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
தவற விட்டு விட்டேன் :-(

சந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி
//

நன்றி டொன் லீ

கோவி.கண்ணன் சொன்னது…

// பழமைபேசி said...
பகிர்வுக்கு நன்றி.... அவர் சார்லட் வரும்போது நாங்களும் சந்திக்க இருக்கிறோம்!
//

அதுவும் நடக்கட்டும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ரோஸ்விக் said...
//’டொன்’ லீ
தவற விட்டு விட்டேன் :-(

சந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி//

என் கருத்தும் அதே... :-(
//

நன்றி ரோஸ்விக்

கோவி.கண்ணன் சொன்னது…

//Sangkavi said...
பகிர்வுக்கு நன்றி.... எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்...
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
பகிர்வுக்கு நன்றிங்க கண்ணன்,..
என்னால் வர முடியாமைக்கு வருத்தமே...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்
//
நன்றி

பிரியமுடன் பிரபு சொன்னது…

அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்..


கலந்துகொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி

குலவுசனப்பிரியன் சொன்னது…

சந்தித்து பேசிய விடயங்களை நன்றாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிரைய உள்ளது.

// பழமைபேசி said...
பகிர்வுக்கு நன்றி.... அவர் சார்லட் வரும்போது நாங்களும் சந்திக்க இருக்கிறோம்!
//
நல்ல சேதி. எனக்கும் அவரை சந்திக்க ஆவல்.

ஜோ/Joe சொன்னது…

தாமதமாக வந்ததால் நான் தவற விட்டதையும் அறியும் படி சொன்னீர்கள் .நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்