பின்பற்றுபவர்கள்

13 ஜனவரி, 2010

தமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் !

நான் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மாறிவிட்டேன். கடந்த இரு ஆண்டுகளாக பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் சேர்த்தே கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. ஏப்ரல் 14 ? வழக்கம் போல் ஒரு நாளாக செல்கிறது.

இது பற்றி சென்ற ஆண்டுகளில் எழுதிய பதிவுகள்.

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) (2009) !
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! (2008)

வைப்பதற்கும் சிரைப்பதற்கும் அது என்ன மீசையா தேதியை மாற்றி மாற்றி வைக்க என்று வழக்கம் போல் தை 1 ஐ தமிழ் புத்தாண்டு என்று சொன்னால் சிலர் சினந்து எழுகிறார்கள்.

நானும் 'தீபாவளி', 'மகர சங்கராந்தி', 'கிருஷ்ண ஜயந்தி', 'ஆவணி அவிட்டம்', 'அட்சய திருதியை', 'கோகுலாஷ்டமி', 'புரட்டாசி சனிக்கிழமை', 'பங்குனி உத்திரம்', 'மாசி மகம்', 'சித்திரா பவுர்ணமி', 'ஆடி அமாவாசை', 'ஆடி பூரம்', 'வைகாசி விசாகம்', 'வைகுண்ட ஏகாதேசி', 'சிவ ராத்திரி', 'மாளய அமாவாசை' 'சித்திரை விசு','ரஜினி பிறந்த நாள்', 'விஜய் பிறந்த நாள்' இவையெல்லாம் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருக்கிறதா ? இவை சங்கத்தமிழர்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவே இல்லை. இவை யெல்லாம் சத்தமில்லாமல் நுழைந்து அவற்றையும் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரே ஒரு நாள் தமிழறிஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றி அமைப்பதால் தமிழுக்கு எந்த குடியும், தமிழர் குடியும் முழுகிவிடாது என்று தெரிந்தது. நம்மைக் கேட்காமலேயே எவ்வளவோ மாற்றம் புகுத்தப்பட்டு புகுந்து நிகழ்ந்திருக்கிறது. தை 1 புத்தாண்டாக அறிவித்ததும் இருந்துவிடட்டுமே என்றே நினைக்கிறேன்.




வழக்கமாக கொண்ட்டாடும் புத்தாண்டுக்கு பதிலாக இந்த ஆண்டு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகவும் பொங்கலாகவும் கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள், அவர்களையும் வரும் காலம் மாற்றும்.

தமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.

37 கருத்துகள்:

gulf-tamilan சொன்னது…

தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்!!!

ஜெகதீசன் சொன்னது…

தலைப்பில் இருக்கும் சந்திப் பிழைகளில் ஏதேனும் நுண்ணரசியலா?

Radhakrishnan சொன்னது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடும்போது இருக்கும் சுகம் தனிதான்.

தமிழ் சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

யுவகிருஷ்ணா சொன்னது…

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், அண்ணிக்கும், பாப்பாவுக்கும்...

தமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே! :-)

Rajaraman சொன்னது…

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். (குறிப்பு: தமிழ்ப்புத்தாண்டு சித்திரை ஒன்று அன்று தான் பிறக்கிறது)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Subbiah Veerappan சொன்னது…

பொங்கலுக்கு சிங்கையில் விடுமுறை உண்டா இல்லையா? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள் :-).

பிரபாகர் சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...

பிரபாகர்.

மாதேவி சொன்னது…

தமிழ் புத்தாண்டு
தைப் பொங்கல்
வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
பொங்கலுக்கு சிங்கையில் விடுமுறை உண்டா இல்லையா? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
//

பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம். நான் பொங்கலும் புத்தாண்டும் கொண்டாடுகிறேன். பொங்கலுக்கு மட்டும் தான் வாழ்த்துகளா ?
:(

பெரிய மனசு பண்ணுங்க வாத்தியாரே ! வாழ்த்தியவரைக்கும் நன்றி !

கிரி சொன்னது…

கலைஞர் டிவி மற்றும் சன் டிவி ல April 14 சிறப்பு நிகழ்ச்சி எப்போ போடாம இருக்கறாங்களோ அன்னைக்கு தான் நம்புவேன் தை 1 தமிழ் புத்தாண்டு என்று :-)

விடுமுறை நாள் சிறப்பு நாள் (அம்பேத்கர் நாள்) என்று April 14 சிறப்பு நிகழ்ச்சிக்கு காரணம்
சொன்னால் செல்லாது செல்லாது ;-)

Ganesan சொன்னது…

தமிழ் புத்தாண்டை தை திங்களில் கொண்டாடும்போது உவகை கொள்கிறேன்.

பொங்கல் வாழ்த்துக்கள் கோவியாரே.

www.kaveriganesh.blogspot.com

pt சொன்னது…

Tamil new year day ?
Will somebody forward this to Mr. Karunanidhi ? With this question this mail came to me long back, and then I was not knowing to post this properly and the pictures were not appearing. Now, I have posted this again since many of you might have not seen this

http://www.arvindsdad.blogspot.com/

இதற்கு சரியான விளக்கம் கொடுக்கவும்

உறையூர்காரன் சொன்னது…

இனிய தைப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

உஜாலாவுக்கு மாறிட்டேங்கறீங்க! சரி!
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

ராஜரத்தினம் சொன்னது…

தமிழ் ஆண்டு 12 மாதங்கள். அது முடிவது பங்குனியில்தான்.உன்னை மாதிரி விசிலடிச்சான் குஞ்சிகள் எப்போது ஒழியுமோ அப்பதான் இந்த தமிழ்நாட்டுக்கும், இந்து மதத்துக்கும் விடிவுகாலம். நீ யில்லாம் ஒரு ஆளு மயிறுன்னு எழுத வந்துட்டே.இல்லையென்றால் உன்னை மாதிரு லூசுங்களை தாண்டி நாங்கள் 3000 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா?

TBD சொன்னது…

தித்திப்பான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தலைவரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//gulf-tamilan said...

தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்!!!//

நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

தலைப்பில் இருக்கும் சந்திப் பிழைகளில் ஏதேனும் நுண்ணரசியலா?//

ஒரு மண் அரசியலும் இல்லை. விடுபட்டுவிட்டது அம்புட்டு தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடும்போது இருக்கும் சுகம் தனிதான்.//

உங்களுக்கும் நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ் said...

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்//

உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள் திகழ்

கோவி.கண்ணன் சொன்னது…

//யுவகிருஷ்ணா said...

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், அண்ணிக்கும், பாப்பாவுக்கும்...

தமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே! :-)//

உங்களுக்கும் தங்கச்சிக்கும், பாப்பாவுக்கும் நல்வாழ்த்துகள் யுவா

கோவி.கண்ணன் சொன்னது…

// Rajaraman said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். //

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

//(குறிப்பு: தமிழ்ப்புத்தாண்டு சித்திரை ஒன்று அன்று தான் பிறக்கிறது)//

நல்லா பிறக்கட்டும், ஏற்கனவே பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் தவறு இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.//

நன்றி ஷேக்

nagoreismail சொன்னது…

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் என் அன்பு கலந்த இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

தமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே! :-)

- என்று தோழர் யுவகிருஷ்ணா அவர்கள் சொன்னதையும் இந்த நேரத்தில் வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கக்குட்டி said...

பொங்கல் வாழ்த்துகள் :-).//

வெண்பொங்கல் சர்கரைப் பொங்கல் வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபாகர் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...

பிரபாகர்.//

நன்றி தம்பி. உங்களுக்கும் வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//மாதேவி said...

தமிழ் புத்தாண்டு
தைப் பொங்கல்
வாழ்த்துக்கள்!//

நன்றி மாதேவி.

உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு
தைப் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...

கலைஞர் டிவி மற்றும் சன் டிவி ல April 14 சிறப்பு நிகழ்ச்சி எப்போ போடாம இருக்கறாங்களோ அன்னைக்கு தான் நம்புவேன் தை 1 தமிழ் புத்தாண்டு என்று :-)

விடுமுறை நாள் சிறப்பு நாள் (அம்பேத்கர் நாள்) என்று April 14 சிறப்பு நிகழ்ச்சிக்கு காரணம்
சொன்னால் செல்லாது செல்லாது ;-)//

நீங்க கருணாநிதி பாலோயரா ? அவ்வ்வ்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்!

வரும் ஆண்டிலாவது,

தமிழர்க்கு மழை போல வந்த இடர்கள் பனி போல பறந்து போகட்டும்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்!

வரும் ஆண்டிலாவது,

தமிழர்க்கு மழை போல வந்த இடர்கள் பனி போல பறந்து போகட்டும்!
//

மழை, தூவானம் அதுக்காக அதுக்காத்தான் மழைன்னு போட நேர்ந்தது இல்லன்னா மலை தான், அது தமிழர்களில் தோள்களாயிற்றே!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் சார்....

நசரேயன் சொன்னது…

//தமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.//

நம்புவோமாக

cheena (சீனா) சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்