பின்பற்றுபவர்கள்

29 நவம்பர், 2008

மும்பை தீவிரவாதம் (தற்காலிகமாக) முடிவுக்கு வந்துள்ளது.

CNN செய்தியின் படி, 30 நிமிடங்களுக்கு முன்பு மும்பையின் அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், பிணையாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் தகவல் வந்திருக்கிறது.

தாஜ் ஹோட்டல் இன்னும் எரிந்து கொண்டு இருக்கிறது, தீயணைப்பு பணி நடந்துவருகிறது.

தீவிரவாதிகளின் கொடுஞ்செயலால் இறந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் (சுமார் 150 பேர்) ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையும் வேண்டும் என்று வேண்டுவோம், விரும்புவோம்.

மூன்று நாட்களாக நடந்த இந்த மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

******

தீவிரவாதிகள் முற்றிலும் துடைத்து ஒழிக்க பாகிஸ்தான் பகுதியாக இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்து, அந்த பகுதியை மீட்டெடுத்தால் தான் இந்தியர்கள் ஆறுதல் அடைவார்கள். இதுவே தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள தீவிரவாதத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும். இதைச் செய்ய துணியும் அரசை இந்தியர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

3 கருத்துகள்:

நவநீதன் சொன்னது…

தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய அனைத்து ராணுவ வீரர்களுக்கும் தலை வணங்குகிறேன்...

இப்போ இந்திய அரசு என்ன பண்ணும்...? கொஞ்ச நாளைக்கு எல்லைய (குஜராத் கடல் பகுதிய... ) தீவிரமா கண்காணிப்பாங்க... கொஞ்ச நாளைக்கு அப்புறம் அதையும் விட்ருவாங்க...

நம்ம மக்களுக்கு தான் கொஞ்சம் செலெக்டிவ் அம்னிசியா இருக்கில்லையா...? அவங்களும் எல்லாத்தையும் மறந்து ஒட்டு போட்ருவாங்க...

மறுபடியும் இதே வழியா கூட தீவிர வாதிகள் வரலாம். இப்ப இல்ல ஆனா கொஞ்ச நாள் கழிச்சு ...

இதுக்கெல்லாம் நிரந்தர தீர்வு காண்கிற அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதுதான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுன்னு நான் நினைக்கிறேன் ....

ஆட்காட்டி சொன்னது…

நம்பலாமா?

Ŝ₤Ω..™ சொன்னது…

i don think any political party will do as u said.. moreover, Indian democracy is actually becoming CRAZY.. we are not selecting any govt. we are just selecting the party which in turn forms the Govt. i cud understand that U too refer the same as I said.. but.. y can't we follow the US model?? there the citizen are selecting their President and his Secretaries.. where as, we are not sure of who will be ruling us..

In the last Lok Sabha elections, all the Votes that Congress got are for Ms. Sonia Gandhi.. but wat happened after the elections?? who knows that Mr. Manmohan would be the Prime Minister??

Y can't we amend the rule?? so that every voter should know who would rule them if that party forms the Govt.

atleast BJP is doing that.. the only good initiative taken by BJP..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்