பின்பற்றுபவர்கள்

3 நவம்பர், 2008

திண்டுக்கல் சர்தார் (எஸ்கேஎஸ்) !

அனுராதா அம்மாவின் மறைவிற்கு முன்னரே திண்டுக்கல் சர்த்தார் ஐயாவின் பதிவும் பின்னூட்டங்களும் பதிவுகளில் பலர் படித்து இருக்கிறார்கள், அப்போதெல்லாம் அனுராதாம்மாவின் கணவர் என்று யாருக்கும் தெரியாது. திண்டுக்கல் சார்த்தார் என்ற பெயருக்குப் பின்னே ப்ரொபைல் எண்கள் அதை வைத்து இவர் புதிய பதிவராக இருக்காது என்றே சிலர் நினைத்தனர். அதில் எனது நண்பர் திரு லக்கிலுக் ஒருவர், அதன்பிறகு அவரிடம் தொலை பேசியில் பேசி திண்டுக்கல் சர்த்தார் என்ற பெயரில் எழுதுபவர் அனுராதா அம்மாவின் அன்புக் கணவர் திரு எஸ்கே சுப்ரமணியம் தான் என்று தெரிந்து கொண்டதாகச் சொன்னார் லக்கி.

சென்ற மாதம் சிங்கை வருவதாக மின் அஞ்சல் அனுப்பி இருந்தார், அதன்படி செப் 15 முதல் சிங்கையில் தான் இருக்கிறார். சிங்கைப் பதிவர் சந்திப்புப் பற்றி குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பினேன், உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து கொள்வதாக சொல்லி உற்சாகப் படுத்தினார். சொன்னபடியே மகன், மகள், மருமகன், மருமகள் பேரக் குழந்தைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பதிவர் சாந்திப்புக்கு வந்தார். லேசாக நடிகர் சிவக்குமாரை நினைவு படுத்தும் முகம், சராசரிக்கும் சற்று குறைவான உயரம். யாரையும் கடிந்து கொள்ள முடியாத மென்மையான குரல். எதிரே இருப்பவர்கள் மரியாதைக் கொடுக்கக் கூடிய அளவுக்கு தேர்ந்தெடுத்த, நிதான பேச்சு, இவைதான் இவருடைய தோற்றத்திலும் பேசிய உடனேயும் உணர்ந்தது. வடுவூர் குமாரின் கட்டுமாணத்துறை பதிவு தன்னை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிட்டார்.



கூடவே பதிவர்களுக்கு மசால் வடைகள், சூழியன் ஆகியவற்றை நிறைய செய்து எடுத்து வந்து கொடுத்தார்.

திண்டுக்கல்லில் வட்டாச்சியாராக பணி புரிந்ததாகவும், மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் விருப்ப ஓய்வு பெற்று, மனைவின் அருகில் இருந்து மூன்றாண்டுகளாக கவனித்து வந்ததாகவும் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மனைவியின் மறைவிற்கு பிறகு மன நிம்மதி இழந்து பல கோவில்களுக்குச் சென்றதாகவும், சில பெரியவர்களைப் பார்த்தாகவும் குறிப்பிட்டார், அதில் ஒரு பெரியவர் ஒரு சாமியார் என்றும் அவரிடம் தனது நிலையைச் சொன்னதாகவும், மனவருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லிய போது அந்த சாமியார் சொல்லி இருக்கிறார்,

"நாங்களெல்லாம் யாரிடமும் ஒட்டாமல் வாழ்கிறோம், ஆனால் உண்மையாக கடமையை செய்கிறவர்கள் தான் யோகி, அப்படிப் பார்த்தால் சுமார் மூன்றாண்டுகளுக்கும் மேலாக உங்கள் மனைவிக்கு, நோய்வாய்ப்பட்ட ஒரு கணவனுக்கு ஒரு மனைவி செய்வதைவிட நீங்கள் மிகுதியாகவே செய்தி இருக்கிறீர்கள் இந்த அளவுக்கெல்லாம் நாங்கள் யாருக்கும் எதையுமே செய்தது கிடையாது" என்று சொன்னாராம். எத்தகைய உண்மை அது !

எந்த சமூகத்திலுமே மனைவிக்கு பணிவிடை செய்யும் கணவர் மிக மிகக் குறைவு. காலையில் எழுந்து பல்விளக்கி விடுவது முதல்... இரவு தூங்கவைத்து, இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்வது என எல்லாவற்றையும் ஒரு குழந்தைக்குச் செய்வது போல், மனைவியின் நிலை குறித்த வேதனை ஒருபுறம் இருந்தாலும், சிறிதும் கடமை தவறாது, மன நிறைவுடன் எல்லாவற்றையும் செய்து வந்திருக்கிறார். வேறெதையும் சிந்திக்காது, தனக்கு உற்ற துணையாக இருந்தவரின் ஒவ்வொரு விநாடி வாழ்விலும் ஒன்றாக இருப்பதென்பது மிக மிகக் கடினம். அவர் தனது மனைவியை பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது...தன் கணவரை மேலும் தொல்லைக்கு ஆளாக்கக் கூடாது என்றே அனுராதாம்மா நிம்மதியாக கண் உறங்கினோரோ என்று நினைக்க வைத்தது. நல்ல பணியில் இருந்தவர் தன்னை ஒரு தாயாகவே மாற்றிக் கொண்டு மனைவிக்கு பணிவிடை செய்திருப்பது ஆண்களுக்கு இவர் சொல்லித்தரும் பாடம் என்று நினைக்க வைத்தது.

அனுராதாம்மா எழுதி வைத்த பதிவுகளை நூலாக மாற்றுவதன் மூலம் அவரின் ஆசையை நிறைவேறும் ஒரு பொறுப்பு இருப்பதாகவும், அது பற்றி பலரை சந்தித்து வருவதாகவும் சொன்னார். (இதுபற்றி பதிவர்கள் அவருக்கு மேலும் ஆலோசனை வழங்கினால் மிகவும் நன்று), அனுராதாம்மாவின் எழுத்தைமட்டுமே வைத்து புத்தகமாக எழுதினால் அது சுயசரிதை போல் இருக்கும், புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் சேகரித்து அதில் அனுராதா அம்மாவின் அனுபவங்களை, ஆலோசனைகளை இணைத்து புத்தகவடிவமாக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் தெரிவித்தேன். புற்றுநோய் தாக்கியவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்யலாமே என்று பதிவர்கள் மகேஷ், ஜோ மற்றும் பால்ராஜ் ஆகியோர் தெரிவித்தார்கள், அதையும் செய்துவருவதாகச் சொன்னார். மூன்றாண்டுகள் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு எப்படி கிடைத்தது ? என்று கேட்டார் பாரி.அரசு, இன்னும் கூட நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் தனிமையில் அழுது கொண்டு இருக்கிறேன் என்றார். ஏறக்குறைய 2 மணி நேரங்கள் எங்களுடன் இருந்து வடைகொடுத்து, சிங்கையில் நீண்டகாலம் தங்குவதாகவும் இடையிடையே தமிழகம் சென்று வரப் போவதாகவும் சொல்லி விடைபெற்றார். அன்பின் திருவுருவம் ஒருவரை சந்தித்த நிறைவு இருந்தது எனக்கு.

எஸ்கேஎஸ் மற்றும் அவரது மகன் திலிப் பாபு (இடது பக்கம்)


யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோனோ அவையெல்லாம் முயற்சியாலும், தன்னாலும் நிறைவேறி விடுகிறது, இன்னும் சிலர் பட்டியலில் இருக்கிறார்கள்.

விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

பதிவர் சந்திப்பு பற்றிய விரிவான தகவல்கள் இங்கே,
சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு - கிஷோர்

பதிவர் சந்திப்பு பற்றிய சுறுக்கமான தகவல்கள் இங்கே,
சிங்கை அறிஞர் அரங்கம்

42 கருத்துகள்:

Unknown சொன்னது…

அன்புக்கு உதாரணமாய் வாழ்ந்த சிறந்த பண்பாளர். நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் ஒருவர்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நான் புதியவன் என்பதால்,திரு எஸ்கே சுப்ரமணியம் அவர்களைப் பற்றி தெரியாது. இருப்பினும் அவரைப்பற்றி நீங்கள் கூறியதும் மனம் கொஞ்சம் கனத்தது... இது போன்ற சமயங்களில் "சாவே உனக்கு சாவே வராதா?" என்று தோன்றி மறையும்... இவரின் தனிமை நிம்மதியுடன் இருக்க வேண்டுமாய் நினைக்கின்றேன்...பொதுவாக ஆண்கள் தனிமை கொடுமையாது....உங்கள் பகிர்விக்கு நன்றி கண்ண்ன்..

கிரி சொன்னது…

அனுராதா அம்மா அவர்களை உடன் இருந்து கவனித்து கொண்ட ஐயா அவர்களின் அன்பிற்கு ஈடு இல்லை.

கிஷோர் சொன்னது…

அவ‌ரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.

சிறந்த ஏற்பாட்டிற்கு நன்றி கோவி அண்ணா.

குறும்படம் எடுக்க எண்ணம் இருந்தால், அதற்கு என்னாலான உதவி செய்கிறேன். சில நண்பர்கள் இத்துறையில் உள்ளனர். எனக்கும் சில அனுபவங்கள் உண்டு

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

பல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்.... நினைவுகள் தான் உயிர்... அவர் மனைவி அவர் குடும்பத்தாரின் நினைவில் இன்றும் வாழ்வதாக அறிகிறேன்...

Sanjai Gandhi சொன்னது…

// அன்பின் திருவுருவம் ஒருவரை சந்தித்த நிறைவு இருந்தது எனக்கு.//
அன்பின் திருவுருவம் ஒருவரை பற்றி வாசித்த நிறைவு இருந்தது எனக்கு.
நன்றி கோவியாரே.

//விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//

உங்களைவிட நான் பக்கியசாலி கோவியாரே..:)
ஞானவெட்டியான் ஐயாவையும் , சுப்பைய்யா வாத்தியாரையும் சந்தித்துவிட்டேன். பின்ன.. எங்க ஊர்க்காராங்க ஆச்சே.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// பொடியன்-|-SanJai said...
// அன்பின் திருவுருவம் ஒருவரை சந்தித்த நிறைவு இருந்தது எனக்கு.//
அன்பின் திருவுருவம் ஒருவரை பற்றி வாசித்த நிறைவு இருந்தது எனக்கு.
நன்றி கோவியாரே.//

சஞ்ஜெய்,
நன்றி !

////விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//

உங்களைவிட நான் பக்கியசாலி கோவியாரே..:)
ஞானவெட்டியான் ஐயாவையும் , சுப்பைய்யா வாத்தியாரையும் சந்தித்துவிட்டேன். பின்ன.. எங்க ஊர்க்காராங்க ஆச்சே.. :)//

ஹலோ, மேலே நான் குறிப்பிட்டவர்கள் அனைவரையும் நான் ஏற்கனவே சந்தித்துவிட்டேன் :)

Sanjai Gandhi சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(

சரவணகுமரன் சொன்னது…

//நல்ல பணியில் இருந்தவர் தன்னை ஒரு தாயாகவே மாற்றிக் கொண்டு மனைவிக்கு பணிவிடை செய்திருப்பது ஆண்களுக்கு இவர் சொல்லித்தரும் பாடம் என்று நினைக்க வைத்தது.//

உண்மையிலேயே அவர் ஆண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...

அன்புக்கு உதாரணமாய் வாழ்ந்த சிறந்த பண்பாளர். நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் ஒருவர்.

//
சுல்தான் ஐயா,
ஒருவர் மீது அன்பு கொண்டு அவர்களை சந்திக்க நினைத்தால் அந்த எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும், அப்படிப்பட்ட நிகழ்வு எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. நாமும் சந்திப்போம் :)

வடுவூர் குமார் சொன்னது…

எஸ் கே எஸ் - இவரை சந்திக்கமுடியாமல் போவிட்டதே,சரி இந்த பக்கம் வருகிறாரா? என்று கேளுங்கள்.
என்னை தெரியும் சொன்ன அனுராதா அம்மா எப்படி என்று சொல்லாமல் போய்விட்டார்,இன்று வரை யோசித்து பார்க்கிறேன்,பிடிபடவில்லை.அவர் மகனை வைத்து யோசித்தாலும் தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
நான் புதியவன் என்பதால்,திரு எஸ்கே சுப்ரமணியம் அவர்களைப் பற்றி தெரியாது. இருப்பினும் அவரைப்பற்றி நீங்கள் கூறியதும் மனம் கொஞ்சம் கனத்தது... இது போன்ற சமயங்களில் "சாவே உனக்கு சாவே வராதா?" என்று தோன்றி மறையும்... இவரின் தனிமை நிம்மதியுடன் இருக்க வேண்டுமாய் நினைக்கின்றேன்...பொதுவாக ஆண்கள் தனிமை கொடுமையாது....உங்கள் பகிர்விக்கு நன்றி கண்ண்ன்..
//

ஞானசேகரன்,
அடுத்த சந்திப்புக்கு உங்களை விடுவதாக இல்லை. சந்திப்பு ஏற்பாட்டாளர் திரு ஞானசேகரன் என்று அறிவித்துவிடச் சொல்லிடுவோம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிஷோர் said...
அவ‌ரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.

சிறந்த ஏற்பாட்டிற்கு நன்றி கோவி அண்ணா.

குறும்படம் எடுக்க எண்ணம் இருந்தால், அதற்கு என்னாலான உதவி செய்கிறேன். சில நண்பர்கள் இத்துறையில் உள்ளனர். எனக்கும் சில அனுபவங்கள் உண்டு
//

கிஷோர்,

உங்களை சந்தித்தும் மகிழ்ச்சி, குழந்தை முகம் என்று பலரும் சொன்னது உண்மைதான் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
அனுராதா அம்மா அவர்களை உடன் இருந்து கவனித்து கொண்ட ஐயா அவர்களின் அன்பிற்கு ஈடு இல்லை.
//

சிகோசிர கிரி அவர்களுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

VIKNESHWARAN said...
பல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்.... நினைவுகள் தான் உயிர்... அவர் மனைவி அவர் குடும்பத்தாரின் நினைவில் இன்றும் வாழ்வதாக அறிகிறேன்...
//

விக்கி,
பின்னூட்டதிற்கு நன்றி, புரொபைல் புகைப்படம் மாற்று, குட்டு வெளிபட்டுவிட்டதே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...


உண்மையிலேயே அவர் ஆண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.
//

பின்னூட்டத்திற்கு நன்றி திரு சரவணகுமரன்

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
//

கடைசி வரி படித்து பின்னுட்டமிடுபவர் என்று அப்பட்டமாக தெரிந்துவிட்டது.

:)

Sanjai Gandhi சொன்னது…

ஹலோ ஹலோ.. புரளிய கெளப்பிவிடாதிங்க சாமி.. நான் இந்த பதிவை முழுசா படிச்சேன்.. அந்த பத்தியை சரியா புரிந்துக் கொள்ளவில்லை. அம்புட்டு தான்.. உங்களுக்கு டௌட் இருந்தா இந்த பதிவுல் கேள்வி கேட்டுப் பாருங்க.. :))

நல்லா கெலப்பறாய்ங்கய்யா பீதிய.. :(

//விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//

அந்த ”யும்”ல கொஞ்சம் சில்ப் ஆய்ட்டேன்...

...ரொம்பப் பெரிய பதிவுகளில் மட்டும் தான் அந்த மொள்ளமாறித் தனம் எல்லாம் பண்ணுவேன். இது முக்கியமானவரை பற்றிய சின்ன பதிவு தான. இதிலெல்லாம் நோ அய்யோக்கியத் தனம்.. :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai 4:21 ஹலோ ஹலோ.. புரளிய கெளப்பிவிடாதிங்க சாமி.. நான் இந்த பதிவை முழுசா படிச்சேன்.. அந்த பத்தியை சரியா புரிந்துக் கொள்ளவில்லை. அம்புட்டு தான்.. உங்களுக்கு டௌட் இருந்தா இந்த பதிவுல் கேள்வி கேட்டுப் பாருங்க.. :))
//

ஒரு பதிவுக்கு 4 பின்னூட்டம் வந்து வந்து போட வைக்கும் டெக்னிக் கற்றுக் கொண்டீர்களா ? இல்லையா ? (நான்காவது கிடைக்கப் போகுது)

:) :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai Said...
//ஒரு பதிவுக்கு 4 பின்னூட்டம் வந்து வந்து போட வைக்கும் டெக்னிக் கற்றுக் கொண்டீர்களா ? இல்லையா ? (நான்காவது கிடைக்கப் போகுது)

:) :) //

அட அப்டியா மேட்டர்.. நல்லா இருங்க.. :))

...இப்போ என்ன செய்விங்க.. இப்போ என்ன செய்விங்க.. :))//

சொன்னது போல் 4 ஆவது பின்னூட்டம் வந்துவிட்டது. வேறென்ன செய்யனும். சரியாக செய்து இருக்கேனா ? அது.......!

:)

லக்கிலுக் சொன்னது…

எஸ்.கே.எஸ். அவர்களை சிங்கை பதிவர்கள் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தாலும் இதுவரை சந்தித்ததில்லை.

சி தயாளன் சொன்னது…

மனதைக் கனக்க வைக்கின்றது.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

SKS ஐயா மற்றும் பதிவர்கள் சந்திப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி கோவி அண்ணா!

ஆமா, சிவகுமார் ஜாடை போலத் தான் தெரியுது! :)

சரி ஐயா கொண்ட வந்த வடைகள், சுகியம் அதெல்லாம் எங்கே? பதிவுல காணோமே? :)

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் என்று ஈசன் எழுந்தருளுகிறார்.
தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்பார்கள்.
SKS ஐயாவுக்கு வந்தனங்கள்!

இறுக்கம் தளர்ந்து நெருக்கம் வளர்ப்பன சந்திப்புகள்! தொடரட்டும்!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

என்னை நெகிழ வைத்த மாமனிதர் சர்தார் ஐயா.
இந்த சந்திப்பு எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம்.

//பொதுவாக ஆண்கள் தனிமை கொடுமையாது....//
மிகவும் சத்தியமான வார்த்தைகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எஸ்.கே.எஸ் அய்யாவைப் பற்றி எழுதி, அந்த பண்பாளரை பெருமைப் படுத்தியதற்கு நன்றி கோவியாரே.

மெழுகுவர்த்தி தான் அழுவதை மறைத்துக் கொண்டு, தனது வாழ்க்கைத் துணைக்காக ஒளிவீசியிருக்கிறது.

போற்றுதலுக்குரியவர்!

சிறந்த உதாரணகர்த்தா!!

ராமலக்ஷ்மி சொன்னது…

ஒரு உன்னதமான மனிதருக்கு மரியாதை செய்யும் பதிவு.

Mahesh சொன்னது…

நான் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பே சிறப்பாக இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது... அதே சமயம் அவருடைய தனிமையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது... பதிவுலகம் அவருடைய தனிமையைப் போக்கும் !!

Subramanian சொன்னது…

முதலில் என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.மிகச் சிறப்பாக என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.பின்னூட்டங்களில் காண்கின்ற நண்பர்களின் ஈர வரிகள் எனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதாக அமைந்துள்ளது.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
முதலில் என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.//

எஸ்கேஎஸ் ஐயா,

'எல்லாப் புகழும் இறைவனுக்கே...வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே..' என்கிற இஸ்லாமியர்களின் வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும்

//மிகச் சிறப்பாக என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.பின்னூட்டங்களில் காண்கின்ற நண்பர்களின் ஈர வரிகள் எனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதாக அமைந்துள்ளது.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
//

நான் மிகையாக எதையும் சொல்லவில்லை. உங்களை சந்தித்தவர்கள் அனைவரும் மிக நல்ல மனிதர் ஒருவரை சந்தித்தனர் என்றே உணர்ந்திருக்கிறார்கள். வந்து கலந்து கொண்டு எங்களுக்கு சிறப்பு சேர்த்ததற்கு சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்துப் பதிவர்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...
எஸ் கே எஸ் - இவரை சந்திக்கமுடியாமல் போவிட்டதே,சரி இந்த பக்கம் வருகிறாரா? என்று கேளுங்கள்.
என்னை தெரியும் சொன்ன அனுராதா அம்மா எப்படி என்று சொல்லாமல் போய்விட்டார்,இன்று வரை யோசித்து பார்க்கிறேன்,பிடிபடவில்லை.அவர் மகனை வைத்து யோசித்தாலும் தெரியவில்லை.
//

குமார் அண்ணா,

அனுராதாம்மா இந்த ஆண்டு ஆரம்பத்தில் சிங்கை வந்திருந்தாராம், லிட்டில் இந்தியாவில் உங்களைப் பார்த்து இருக்கக் கூடும். அழைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் நீங்களோ அவர்களோ எதிர் திசையில் சென்றிருக்கக் கூடும். எஸ்கேஎஸ் ஐயா சிங்கையில் இருப்பார், நீங்கல் சிங்கை நிரந்தரவாசி ஆயிற்றே கண்டிப்பாக இந்தப் பக்கம் வருவீர்கள், சந்திப்பீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
எஸ்.கே.எஸ். அவர்களை சிங்கை பதிவர்கள் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தாலும் இதுவரை சந்தித்ததில்லை.
//

லக்கி, அவர் தமிழகம் வருவார், அப்போது பதிவர் சந்திப்பு ஏற்பாடுகள் இருந்தால் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
மனதைக் கனக்க வைக்கின்றது.
//

'டொன்' லீ, உணர்வு பகிர்தலுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
SKS ஐயா மற்றும் பதிவர்கள் சந்திப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி கோவி அண்ணா!//

மகிழ்வுக்கு நெகிழ்ச்சி !

//ஆமா, சிவகுமார் ஜாடை போலத் தான் தெரியுது! :)//

பார்த்தவுடன் பழகிய முகம் மாதிரியும் தெரிந்தது.

//சரி ஐயா கொண்ட வந்த வடைகள், சுகியம் அதெல்லாம் எங்கே? பதிவுல காணோமே? :)//

துக்ளக் மகேஷ் பதிவில் இருக்கு பாருங்க, இந்த பதிவிலேயே கிழே லிங்க் கொடுத்து இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
என்னை நெகிழ வைத்த மாமனிதர் சர்தார் ஐயா.
இந்த சந்திப்பு எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம்.
//

அனுபவ பகிர்வுக்கு நன்றி தம்பி பால்ராஜ் அவர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எஸ்.கே.எஸ் அய்யாவைப் பற்றி எழுதி, அந்த பண்பாளரை பெருமைப் படுத்தியதற்கு நன்றி கோவியாரே.//

உங்களுடைய பங்கும் அதில் இருக்கிறது


//மெழுகுவர்த்தி தான் அழுவதை மறைத்துக் கொண்டு, தனது வாழ்க்கைத் துணைக்காக ஒளிவீசியிருக்கிறது.

போற்றுதலுக்குரியவர்!

சிறந்த உதாரணகர்த்தா!!
//

வழிமொழிகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமலக்ஷ்மி said...
ஒரு உன்னதமான மனிதருக்கு மரியாதை செய்யும் பதிவு.
//

ராமலக்ஷ்மி அவர்களே,

பாராட்டும் கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Mahesh said...
நான் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பே சிறப்பாக இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது... //

உணர்வு பகிர்வுக்கு நன்றி மகேஷ். உங்களை சந்தித்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

//அதே சமயம் அவருடைய தனிமையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது... பதிவுலகம் அவருடைய தனிமையைப் போக்கும் !!
//

நாமெல்லாம் இருக்கிறோமே, போக்கிடுவோம்.

வால்பையன் சொன்னது…

//சூழியன் //

முருக்கத்தான் இப்படி முருக்கிருக்கிங்களா?

வால்பையன் சொன்னது…

அந்த சாமியார் நல்ல மனிதராக தெரிகிறார், வேறாளென்றால் பூஜை பண்ணனும் என்று பில்ல போட்டுருப்பானுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//சூழியன் //

முருக்கத்தான் இப்படி முருக்கிருக்கிங்களா?
//

வால்பையன் சார்,
முறுக்கு இல்லிங்க மைதா அல்லது அரிசி மாவில் போண்டா செய்வது போல் உள்ளுக்குள் காரத்துக்கு பதில் இனிப்பு வைத்து செய்து இருப்பார்கள்.

வால்பையன் சொன்னது…

அட அதுவா
நானும் சாப்பிட்டுருக்கேன்.
ஐயா திண்டுக்கல் வரும் போது கூப்பிட சொல்லுங்கள்

Bapooji.P சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்