பின்பற்றுபவர்கள்

9 டிசம்பர், 2010

கொஞ்சம் தமிழக அரசியல் !

நாளிதழலைத் திறந்தாலே நாறிப் போன ஸ்பெக்ட்ரம் விவகார செய்திகள் தான். இதில் சம்பந்தப்பட்ட தரப்பு அரசின் வருமான இழப்பு ஊழல் ஆகாது என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அரசுக்கு பல்வேறு வகைகளில், வரிகளில் கிடைக்கும் பணம் தான் நலத்திட்டங்களுக்கும், அரசு செலவீனங்களுக்கும் பயன்படுகிறது, அதைச் சரியாகச் செய்யாமல் அரசுக்கு வருமான இழப்பை அதையும் லட்சம் கோடிக் கணக்கில் செய்துவிட்டு தொடர்வதற்கு எந்த ஒரு அரசும் சர்வாதிகார அரசாக இருந்தால் மட்டுமே முடியும், ஆனால் அதை மக்கள் ஆட்சி என்றே சொல்லிக் கொண்டு தொடர்கிறார்கள். இன்றைய செய்தி அதிர்ச்சியை அளித்தது, நீதிபதிகள் திகைத்தார்களாம். அதாவது ஸ்பெக்டரம் ஏலம் பெற அரசுடமை வங்கிகளிடம் தனியார் பெற்ற கடன் இருபதாயிரம் கோடி. இவ்வாறு கடன் பெற்றே அந்த ஏலத்தை எடுத்து 10 மடங்கு இலாபத்திற்கு விற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு ஏழைமாணவன் கல்விக்கடனுக்குச் சென்றால் அப்பன்காரன் வங்கிக்கடன் வைத்திருந்தால் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புகின்றன வங்கிகள், அவர்கள் கடன் கேட்கும் தொகையோ இன்றைய நாணய மதிப்புகளில் சொற்பமே. ஆனால் அரசியல்வாதிகள் கண் அசைத்தால் ஆயிரம் கோடிகளில் கடன் வழங்குகிறது இந்திய அரசுடமை வங்கிகள். தனது நிர்வாகத்தின் கீழ் பணி புரிந்த அமைச்சர் ராசா ஊழல் செய்ததில் தனக்கு தொடர்பில்லை என்பது போலவும், தனது பரிந்துரைகளை அவர் கேட்கவில்லை என்றும் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன், நாடாளுமன்றத்தை நடத்தவிடுங்கள் என்று இயலாமையாக கூறுகிறது மன்மோகன் அரசு. நிர்வாகம் சரியாக செயல்படாமல் போனதற்கு, ஊழல் மலிந்ததற்கும் நிர்வாகி பொறுப்பு ஏற்கமாட்டார் என்றால் நிர்வாகி என்கிற பதவியின் பொருள் என்ன ? இவர்களெல்லாம் ஏன் தொடரவேண்டும் ?

ஊழல் நடைபெற்றதை கண்டுபிடித்தால் ராசாவை கட்சியை விட்டே நீக்கி சமூக நீதி காட்கிறோம் என்கிறார் கருணாநிதி, ஊழல் நடைபெற்றது நிருபனம் செய்யப்பட்டால் ராசாவுக்கு கிடைப்பது சிறை தண்டனை, இவர் கட்சியை விட்டு நீக்கினால் என்ன நீக்காவிட்டால் என்ன, ஒரு குற்றவாளிக்கு உறுப்பினர் அட்டை கொடுப்பது / கொடுக்காதது பற்றி யாரும் கேட்கப்போவதில்லையே. அப்படியே என்றாலும் கூட கட்சியை விட்டு நீக்குவதெல்லாம் ஒரு தண்டனையா ? அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து தண்டனை அடைந்தவர்கள் இவருடைய கட்சியில் இன்றைக்கு உறுப்பினர்களாக இருக்கிறார்களா ? இல்லையா ? கட்சியை விட்டு நீக்குவது, நீக்காதது தனிப்பட்ட ஊழல் உறுப்பினருக்கு (ஊழலை செய்தபின்பு) என்ன நட்டம் ஏற்பட்டுவிடப் போகிறது ?

தமிழகத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் இளங்கோவன் உட்பட ஸ்பெக்டரம் பற்றி கிழித்துவரும் வேளையில் பாமக மட்டும் அதுபற்றி இம்மி அளவும் மூச்சுவிடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. கருணாநிதி மீது திராவிட சிந்தனையாளர், தமிழ்பற்றாளர், ஈழ ஆதரவாளர் என்கிற எண்ணமெல்லாம் இருந்ததாலேயே அவர் மீது நான் உட்பட பல்வேறு கட்சிசாராதவர்கள் அன்பு கொண்டிருந்தனர். இன்றைய தேதிக்கு திராவிடம் என்பது கட்சிப் பெயரில் இருக்கிறது என்பது தவிர்த்து அது ஒரு தனியார் உடமை வாரிசு உரிமை கட்சியாகிவிட்டது, வராலாறு பழிக்கும் என்பதற்காக அவசர கெதியில் இதுவரை ஐந்து முறை முதல்வராக இருந்தும் செய்திடாத உலக தமிழ்மாநாட்டை பெயரை மாற்றி முதல் செம்மொழி மாநாடு என்று அறிவித்து குடும்பவிழாவாக மாற்றினார். ஈழ நலம் முழுவதுமாக கைகழுவப் பெற்றது, எந்த ஒரு காரணத்தினால் கருணாநிதி ஆதரவாளர் என்கிற எண்ணம் இருந்ததோ, அந்த காரணங்கள் எதுவுமே கருணாநிதியிடம் இல்லை. இவர் குடும்பத்து பங்காளிச் சண்டைகளில் மதுரையில் தினகரனின் வேலைப்பார்த்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை அது தொடர்புடையவர்கள் எவருக்குமே தண்டனைகள் வழங்கப்படவில்லை, பங்காளிகள் ஒன்று சேர்ந்த போது இதயம் இனித்து, கண்கள் பனித்தன என்றால்...... அவ்வளவு சுயநலவாதியா நீய்யீ........... என்று நினைக்க கருணாநிதிக்கு ஆதரவான நெஞ்சம் கசந்து நஞ்சை இறக்கி வைத்தது.

ஈழம் தவிர்த்து கூட கருணாநிதி ஆட்சித் தொடரவே வேண்டும் என்பதற்கு எந்த ஒரு சிறப்புக் காரணமும் தென்படவே இல்லை. சந்தர்பம் அமைந்தால் சிறுபான்மை காவலர் கருணாநிதி மதவாதக்கட்சியுடன் கூட கூட்டணி அமைப்பார் என்பது ஏற்கனவே உறுதியான ஒன்று தான். திராவிட இயக்கம் அதன் இலக்கை கருணாநிதியை வைத்து எட்டிவிட்டதால் கருணாநிதிக்கு திராவிடச் சிந்தனைகள் இனி தேவை அற்றதாகவே நினைத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் நிலைக்கு மக்கள் வாழ்க்கைத்தரத்தை சிறப்பாக ஆக்கி இருந்தால் கருணாநிதியின் திராவிட ஆட்சி தொடரலாம் என்றே சொல்லமுடியும், நிலைமை அவ்வாறு இல்லை. ஏழைகள் ஒரு ரூபாய் அரிசிக்கு கிடைத்தால் பிழைப்பையே ஓட்டமுடியும் என்கிற நிலையில் தான் கருணாநிதி ஆட்சி வைத்திருக்கிறது, ஆனால் கருணாநிதியின் வாரிசுகளோ டாட்டா அம்பானி ரேஞ்சுக்கு வளர்ந்துவருகிறார்கள். ஒரு தமிழனின் வாரிசுகள் அம்பானிக்கு ஈடுகொடுக்கிறார்கள் அல்லது பின்னுக்கு தள்ளுகிறார்கள் என்பது தமிழனுக்கு பெருமையா ? சத்தியமாக எனக்கு பெருமையாகத் தெரியவில்லை. குடும்பத்தை அம்பானிகள் ஆக்கியது தவிர்த்து ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைத்தால் தான் வாழமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி இருப்பதைத் தவிர்த்து கருணாநிதியின் எந்த ஒரு சாதனை கருணாநிதி ஆட்சி தொடரவேண்டும் என்கிறதோ அதை குப்பன் சுப்பன் கூட பதவியில் இருந்தால் செய்துவிட்டு போய்விடுவான்.

25 கருத்துகள்:

தமிழ்மலர் சொன்னது…

// ஏழைகள் ஒரு ரூபாய் அரிசிக்கு கிடைத்தால் பிழைப்பையே ஓட்டமுடியும் என்கிற நிலையில் தான் கருணாநிதி ஆட்சி வைத்திருக்கிறது,//

உண்மை...

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழக முதல்வர் எத்தனை அடிச்சாலும் தாங்குவாரு.

ALHABSHIEST சொன்னது…

குப்பன்,சுப்பன் விளக்கம் கிடைக்குமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Siva said...
குப்பன்,சுப்பன் விளக்கம் கிடைக்குமா?

4:47 PM, December 09, 2010//

இப்போதெல்லாம் அந்தப் பெயர்களே இல்லை, தமிழ் பெயர் வைத்தால் இழுக்கு என்பதாக யாரும் வைப்பதில்லை, பதிவுகளிலாவது பயன்படுத்துவோம் என்பதாக எழுதியுள்ளேன். அன்றாடம் நாள் கூலி குடிமகன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்

NAGA INTHU சொன்னது…

அம்பானிகளுக்கே,அல்வா கொடுக்கும் இந்த தமிழர்களை போய் திட்டுகிறீர்களே,
இந்தியா பூரா தமிழனை அவன் திறமையை (ஸ்பெக்ட்ரம்) வெளிப்படுத்திய தலைவனைப்போய் திட்டுகிறீகளே.
அரவரசன்.

ராவணன் சொன்னது…

//குப்பன்,சுப்பன் விளக்கம் கிடைக்குமா?//

குப்பன் மீன்ஸ்....பாஷ்யம் அய்யங்கார்

சுப்பன் மீன்ஸ்....ஷேசாத்திரி அய்யர்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சிந்திக்க வேண்டிய கட்டுரை.

பெரும்பாலோரின் எண்ண ஓட்டமும் இதுதான்.

Unknown சொன்னது…

//அதை குப்பன் சுப்பன் கூட பதவியில் இருந்தால் செய்துவிட்டு போய்விடுவான்//
அடுத்து வரும் அந்த குப்பனோ சுப்பனோ அவர் யாரென்றே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வாறு வருபவர் கண்டிப்பாக இவரை விட நல்லவராகத்தான் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதுதான் தமிழகத்தின் இன்றைய சாபக்கேடு.

ம.தி.சுதா சொன்னது…

வந்தேன் ஐயா..

vignaani சொன்னது…

பதிவில் ஊழலைப் பற்றிய கருத்துக்கள் இப்போது பொதுமக்கள் பெருவாரியா னவர் எண்ணத்தின் தொகுப்பு என நினைக்கும் வண்ணம் உள்ளன.
//அரசியல்வாதிகள் கண் அசைத்தால் ஆயிரம் கோடிகளில் கடன் வழங்குகிறது இந்திய அரசுடமை வங்கிகள்//
இந்த ஒரு இடத்தில் மட்டும் சரியான நிலையை உணர்ந்து கொள்ள இதையும் செவிமடுக்கவும்: நான் வங்கி ஊழியன். வங்கிகள் லாபகரமான தொழில் எதுவாயினும் கடன் தர வேண்டும். கல்விக் கடன் கொடுப்பது கூட, அந்த மாணவன், படிப்பு முடித்தவுடன், நல்ல வேளையில் அமர்ந்து, கடனை திருப்பி செலுத்துவான் என்ற அடிப்படையிலேதான். அலைக்கற்று லைசென்ஸ் பெற்ற கம்பனிகள் தங்கள் முதலீடு, செயல்முறைகளை விளக்கி, அவர்கள் அரசு கொடுத்த லைசென்சை பயன்படுத்தி குறிப்பிட காலத்துக்குள் தங்கள் ப்ராஜெக்டை செயல் படுத்துவோம் என புள்ளி விவரங்களுடன், உறுதி கூறினால் அவர்கள் போட்ட முதல் மேல் இரண்டு அல்லது மூன்று அளவு (It is called Debt: Equity, say 2:1 or 3:1) கடன் தரும் .ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணம் என்றால் அந்த திட்ட அளவு எந்த அளவு (இயந்திரங்கள், கட்டுமானம், முதலிய) செலவுகள், திட்டம் செயல் பட தோராயமாக காலம், திருப்பி செலுத்தும் தவணை , (வட்டியுடன்) என தரும் விவரங்கள் சரியாக இருந்தால், வங்கி கடன் கொடுக்கும். ஒரு வங்கி 2500 கோடி கடன் கொடுத்ததை நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்; அவர்கள் கடன் கொடுக்கும் முறை சரியாக உள்வாங்காமல் கூறி இருக்கிறார்கள். (sorry, I do not want any contempt of Court issue). ஒரு சிமெண்டு ஆலை , ஒரு அனல் மின் நிலையம் அமைப்பது என்றால் எவ்வளவு முதலீடு ஆகும் சில ஆயிரம் கோடி ரூபாய்; புரிதலுக்காக, ஐயாயிரம் கோடி ரூபாய் என்றால், முதல் ஆயிரத்து ஐநூறு கோடி ;வங்கி கடன் மூவாயிரத்து ஐநூறு கொடியாக இருக்கும். இந்த கடன் நான்கு ஐந்து வங்கிகள் சேர்ந்து வழங்கும். அதாவது பெரிய வங்கி ஐந்நூறு கோடி வழங்கலாம்; அந்த ஆலையின் நிலம், இயந்திரங்கள், அசையும் சொத்துகள் கடன் கொடுத்த வங்கிகளுக்கு அடமானமாக இருக்கும்; கடன் திருப்பி செலுத்தியபின் அடமானம் நீங்கும். இந்த அலைக்கற்று கம்பனிகள் எந்த ராஜாவுக்கோ, மந்திரிக்கோ தெரிந்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திட்டம் லாபகரமானதாகவும், அரசு அனுமதிகள் சரியாக இருந்தால் கடன் கிட்டும். அந்த நபர் அனுமதி பெற்ற விதம் குறித்து பிரச்னை இல்லை என்றால் வங்கி கடன் வழங்குவதே நடைமுறை. இது ஒரு பிரச்னை ஆகியது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தான்.
இந்த நீண்ட பின்னூட்டம் வங்கி கடன்கள் பற்றி கருத்துக்கள் சரியாக புரிதல் வேண்டும் என்ற எண்ணத்தில்.
பதித்தமைக்கு நன்றி.

vignaani சொன்னது…

பதிவில் ஊழலைப் பற்றிய கருத்துக்கள் இப்போது பொதுமக்கள் பெருவாரியா னவர் எண்ணத்தின் தொகுப்பு என நினைக்கும் வண்ணம் உள்ளன.

vignaani சொன்னது…

//ஆயிரம் கோடிகளில் கடன் வழங்குகிறது இந்திய அரசுடமை வங்கிகள்.//
இந்த ஒரு இடத்தில் மட்டும் சரியான நிலையை உணர்ந்து கொள்ள இதையும் செவிமடுக்கவும்: நான் வங்கி ஊழியன். வங்கிகள் லாபகரமான தொழில் எதுவாயினும் கடன் தர வேண்டும். கல்விக் கடன் கொடுப்பது கூட, அந்த மாணவன், படிப்பு முடித்தவுடன், நல்ல வேளையில் அமர்ந்து, கடனை திருப்பி செலுத்துவான் என்ற அடிப்படையிலேதான். அலைக்கற்று லைசென்ஸ் பெற்ற கம்பனிகள் தங்கள் முதலீடு, செயல்முறைகளை விளக்கி, அவர்கள் அரசு கொடுத்த லைசென்சை பயன்படுத்தி குறிப்பிட காலத்துக்குள் தங்கள் ப்ராஜெக்டை செயல் படுத்துவோம் என புள்ளி விவரங்களுடன், உறுதி கூறினால் அவர்கள் போட்ட முதல் மேல் இரண்டு அல்லது மூன்று அளவு (It is called Debt: Equity, say 2:1 or 3:1) கடன் தரும் .ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணம் என்றால் அந்த திட்ட அளவு எந்த அளவு (இயந்திரங்கள், கட்டுமானம், முதலிய) செலவுகள், திட்டம் செயல் பட தோராயமாக காலம், திருப்பி செலுத்தும் தவணை , (வட்டியுடன்) என தரும் விவரங்கள் சரியாக இருந்தால், வங்கி கடன் கொடுக்கும். ஒரு வங்கி 2500 கோடி கடன் கொடுத்ததை நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்; அவர்கள் கடன் கொடுக்கும் முறை சரியாக உள்வாங்காமல் கூறி இருக்கிறார்கள். (sorry, I do not want any contempt of Court issue). ஒரு சிமெண்டு ஆலை , ஒரு அனல் மின் நிலையம் அமைப்பது என்றால் எவ்வளவு முதலீடு ஆகும் சில ஆயிரம் கோடி ரூபாய்; புரிதலுக்காக, ஐயாயிரம் கோடி ரூபாய் என்றால், முதல் ஆயிரத்து ஐநூறு கோடி ;வங்கி கடன் மூவாயிரத்து ஐநூறு கொடியாக இருக்கும். இந்த கடன் நான்கு ஐந்து வங்கிகள் சேர்ந்து வழங்கும். அதாவது பெரிய வங்கி ஐந்நூறு கோடி வழங்கலாம்; அந்த ஆலையின் நிலம், இயந்திரங்கள், அசையும் சொத்துகள் கடன் கொடுத்த வங்கிகளுக்கு அடமானமாக இருக்கும்; கடன் திருப்பி செலுத்தியபின் அடமானம் நீங்கும். இந்த அலைக்கற்று கம்பனிகள் எந்த ராஜாவுக்கோ, மந்திரிக்கோ தெரிந்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திட்டம் லாபகரமானதாகவும், அரசு அனுமதிகள் சரியாக இருந்தால் கடன் கிட்டும். அந்த நபர் அனுமதி பெற்ற விதம் குறித்து பிரச்னை இல்லை என்றால் வங்கி கடன் வழங்குவதே நடைமுறை. இது ஒரு பிரச்சனி ஆகியது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தான்.
இந்த நீண்ட பின்னூட்டம் வங்கி கடன்கள் பற்றி கருத்துக்கள் சரியாக புரிதல் வேண்டும் என்ற எண்ணத்தில்.
பதித்தமைக்கு நன்றி.

vignaani சொன்னது…

//
ஆயிரம் கோடிகளில் கடன் வழங்குகிறது இந்திய அரசுடமை வங்கிகள்//இந்த ஒரு இடத்தில் மட்டும் சரியான நிலையை உணர்ந்து கொள்ள இதையும் செவிமடுக்கவும்: நான் வங்கி ஊழியன். வங்கிகள் லாபகரமான தொழில் எதுவாயினும் கடன் தர வேண்டும். கல்விக் கடன் கொடுப்பது கூட, அந்த மாணவன், படிப்பு முடித்தவுடன், நல்ல வேளையில் அமர்ந்து, கடனை திருப்பி செலுத்துவான் என்ற அடிப்படையிலேதான். அலைக்கற்று லைசென்ஸ் பெற்ற கம்பனிகள் தங்கள் முதலீடு, செயல்முறைகளை விளக்கி, அவர்கள் அரசு கொடுத்த லைசென்சை பயன்படுத்தி குறிப்பிட காலத்துக்குள் தங்கள் ப்ராஜெக்டை செயல் படுத்துவோம் என புள்ளி விவரங்களுடன், உறுதி கூறினால் அவர்கள் போட்ட முதல் மேல் இரண்டு அல்லது மூன்று அளவு (It is called Debt: Equity, say 2:1 or 3:1) கடன் தரும் .ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணம் என்றால் அந்த திட்ட அளவு எந்த அளவு (இயந்திரங்கள், கட்டுமானம், முதலிய) செலவுகள், திட்டம் செயல் பட தோராயமாக காலம், திருப்பி செலுத்தும் தவணை , (வட்டியுடன்) என தரும் விவரங்கள் சரியாக இருந்தால், வங்கி கடன் கொடுக்கும். (தொடரும்)

vignaani சொன்னது…

(தொடர்ச்சி )
ஒரு வங்கி 2500 கோடி கடன் கொடுத்ததை நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்; அவர்கள் கடன் கொடுக்கும் முறை சரியாக உள்வாங்காமல் கூறி இருக்கிறார்கள். (sorry, I do not want any contempt of Court issue). ஒரு சிமெண்டு ஆலை , ஒரு அனல் மின் நிலையம் அமைப்பது என்றால் எவ்வளவு முதலீடு ஆகும் சில ஆயிரம் கோடி ரூபாய்; புரிதலுக்காக, ஐயாயிரம் கோடி ரூபாய் என்றால், முதல் ஆயிரத்து ஐநூறு கோடி ;வங்கி கடன் மூவாயிரத்து ஐநூறு கொடியாக இருக்கும். இந்த கடன் நான்கு ஐந்து வங்கிகள் சேர்ந்து வழங்கும். அதாவது பெரிய வங்கி ஐந்நூறு கோடி வழங்கலாம்; அந்த ஆலையின் நிலம், இயந்திரங்கள், அசையும் சொத்துகள் கடன் கொடுத்த வங்கிகளுக்கு அடமானமாக இருக்கும்; கடன் திருப்பி செலுத்தியபின் அடமானம் நீங்கும். இந்த அலைக்கற்று கம்பனிகள் எந்த ராஜாவுக்கோ, மந்திரிக்கோ தெரிந்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திட்டம் லாபகரமானதாகவும், அரசு அனுமதிகள் சரியாக இருந்தால் கடன் கிட்டும். அந்த நபர் அனுமதி பெற்ற விதம் குறித்து பிரச்னை இல்லை என்றால் வங்கி கடன் வழங்குவதே நடைமுறை. இது ஒரு பிரச்சனி ஆகியது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தான்.
இந்த நீண்ட பின்னூட்டம் வங்கி கடன்கள் பற்றி கருத்துக்கள் சரியாக புரிதல் வேண்டும் என்ற எண்ணத்தில்.
பதித்தமைக்கு நன்றி.

crazyidiot சொன்னது…

இலவசங்களுக்கு மக்களை ஏங்க வைத்தாரே அதுதான் கலைஞரின் சாதனை..!!

http://scrazyidiot.blogspot.com/

மணிகண்டன் சொன்னது…

//குப்பன்,சுப்பன்//

என்னுடைய நினைவாற்றலை பயன்படுத்தி யோசித்து பார்த்ததில், நீங்கள் ஒருமுறை சுவாமி ஓம்கார் என்பவரின் இடுகையில் இச் சொற்றொடர் ஒருமுறை எதிர்ப்பை தெரிவித்து இருந்தீர்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...
தமிழக முதல்வர் எத்தனை அடிச்சாலும் தாங்குவாரு.

11:35 AM, December 09, 2010
//

பதவி என்னும் முள் கிரீடம் அதை விரும்பி அணிந்தவருக்கு ரத்தம் வருவது உவப்பா ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//NAGA said...
அம்பானிகளுக்கே,அல்வா கொடுக்கும் இந்த தமிழர்களை போய் திட்டுகிறீர்களே,
இந்தியா பூரா தமிழனை அவன் திறமையை (ஸ்பெக்ட்ரம்) வெளிப்படுத்திய தலைவனைப்போய் திட்டுகிறீகளே.
அரவரசன்.

5:08 PM, December 09, 2010//

உலகம் முழுவதும் அல்வா கொடுக்க முடியாது, பிட்சா :)

கோவி.கண்ணன் சொன்னது…

மதி.சுதா நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இது ஒரு பிரச்னை ஆகியது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தான்.//

இந்தியன் பேங்க் இராதாகிருஷ்ணன் கம்பி எண்ணியது இரண்டு ஆண்டுகளுக்கு பின் அல்ல :)

கோவி.கண்ணன் சொன்னது…

//crazyidiot said...
இலவசங்களுக்கு மக்களை ஏங்க வைத்தாரே அதுதான் கலைஞரின் சாதனை..!!

http://scrazyidiot.blogspot.com///

ஏழைகளுக்கு
இலவச அமைச்சர் பதவி
கொடுப்பாங்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ணிகண்டன் said...
//குப்பன்,சுப்பன்//

என்னுடைய நினைவாற்றலை பயன்படுத்தி யோசித்து பார்த்ததில், நீங்கள் ஒருமுறை சுவாமி ஓம்கார் என்பவரின் இடுகையில் இச் சொற்றொடர் ஒருமுறை எதிர்ப்பை தெரிவித்து இருந்தீர்கள் !

11:39 PM, December 13, 2010//

மணி நான் எந்த பொருளில் பயன்படுத்தினேன் என்பதை மேலே விளக்கியுள்ளேன்

priyamudanprabu சொன்னது…

ஏழைகளுக்கு
இலவச அமைச்சர் பதவி
கொடுப்பாங்களா ?
///

ha ha

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறப்பான அலசல் . கேள்விகள் ஒவ்வொன்றும் சிந்திக்க தூண்டும் உண்மைகள் . பகிர்வுக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

//. ஊழல் நடைபெற்றதை கண்டுபிடித்தால் ராசாவை கட்சியை விட்டே நீக்கி சமூக நீதி காட்கிறோம் என்கிறார் கருணாநிதி,//

இந்தமாதிரி பம்மாத்து வேலை பண்ணுவதில் இவருக்கு நோபல் பரிசே தரலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்