பின்பற்றுபவர்கள்

20 ஜூன், 2010

இராவ(ண)ன் !

ரீமேக் எனப்படும் மாற்று மொழியில் மறு உற்பத்தி செய்யப்பட்ட படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவரும். இராவணன் மூலக் கதையும் காட்சிகளும் மாறாமல் ஐஸ்வர்யா மற்றும் பிரியாமணி பாத்திரங்கள் மாறாமல் நடிகர்களை மாற்றி தமிழ் ஹிந்தி தெலுங்கு மொழிகளில் ஒன்று போல் வெளிவந்திருக்கிறது. தமிழக நடிகர்களை அணைத்துக் கொள்ளாத இந்தி(ய) திரைப்பட உலகம் இசை அமைப்பாளர்களையும் மணி ரத்னம் மற்றும் ஏஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்களையும் ஏற்றுக் கொள்வது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இல்லை, அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மட்டுமே. ஏஆர் ரஹ்மானை கொண்டாடுவதும் கூட இந்தவகையில் தான். மற்றபடி தென்னிந்திய ஆண்களின் முகங்களை திரையில் பார்ப்பதற்கு இந்தி பட உலகம் முயற்சித்ததோ வரவேற்றதோ இல்லை. கமல், ரஜினி போன்றவர்கள் இந்தியில் நடித்திருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு வட இந்திய மக்கள் இந்திப் படங்களில் பார்த்திருக்கும் வாய்ப்புகளை இந்திப் பட உலகம் தென்னிந்தியர்களுக்கு வழங்கியதில்லை. மற்றபடி நடிகைகளை வட இந்திய தென்னிந்திய திரைத் துறைகள் ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தக் குறையுமில்லை என்பதை நடிகை ஸ்ரீதேவி, ஜெயபிரதா, ரேகா மற்றும் ஐஸ்வர்யா போன்றவர்களே காட்சி

*****

தென்னிந்திய இயக்குனர்களும், இசை அமைப்பாளர்களும் வட இந்திய திரைகளில் ஆளுமை துவங்கி இருப்பது வரவேற்கத்தக்கது, அந்த வகையில் மணிரத்னம் போன்றவர்கள் பாராட்டத்தக்கவர்கள், இவர்களைப் போன்றவர்களால் தான் தென்னிந்திய திரை உலகினரின் திறமைகள் மற்றும் தென்னிந்திய வாழ்க்கை முறைகளை ஓரளவுக்கு அங்கே காட்சி படுத்துகிறார்கள். தமிழக நடிகர் விக்ரமை இந்தியில் அறிமுகப்படுத்தி விழிகளை விரிய வைத்திருக்கிறார் மணி. பொதுவாக வில்லன் வேடத்திற்கு மாறுபட்ட முகம் என்பதாக தென்னிந்திய திரையுலகம் நடிகர்களை வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துவருகின்றன. ஏ ஆர் முருகதாஸ் ரியாஸ்கானுக்கு இந்தி கஜினியிலும் மணி விக்ரமுக்கு இராவன் படத்திலும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் படம் என்கிற எதிர்பார்ப்புகளை மணி ஓரளவு நிறைவு செய்திருக்கிறார். மிகப் பெரிய பணக்காரர், உலக அழகி என்ற பெயருக்கு உரிமையாளரான நடிகை ஐஸ்வர்யாவையும் கடுமையாக வேலை வாங்கி இருக்கிறார். சோகம், கோபம், ஆற்றாமை போன்ற முக உணர்சிகளையும் அடர்காடு போன்ற சூழலில் அந்த நடிகையை கயிறுகளைப் பிடித்து தொங்கி ஏறும் மலை ஏற்றம் என பிழிந்து எடுத்திருப்பது அவரது இயக்குனர் ஆளுமையைக் காட்டுகிறது. விக்ரம் வழக்கம் போல கலக்கல், சிவாஜி, கமல் வரிசையில் காட்சிக்கு மெனக்கட்டு நடிக்கும் மற்றொரு நடிகராக இயக்குனர்களின் தேர்வாக இருக்கிறார் என்றால் மிகை அல்ல என்றே அவரது காட்சிகள் நினைக்க வைக்கிறது. பாய்ஸ் பட வீழ்ச்சியில் இருந்து மீள ஷங்கரும் நாடியது விக்ரம் தானே. ஏஆர் ரஹ்மானின் இசையும் பின்னனியும் படத்திற்கு வலுவைக் கூட்டி இருக்கிறது. எழுந்தாட வைக்கும் இசை, இதயத் துடிப்பை எகிறச் செய்யும் மிரட்டல் இசை குறிப்பாக பாலத்தின் மீதான சண்டைக் காட்சிகள் என படம் முழுவது ரஹ்மான் கலக்கல்.

கார்திக், பிரபு குறைவான காட்சிகளே என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். பிரியாமணி ஏற்கனவே வன்புணர்வு காட்சிகளில் விருது பெற்றவர் என்பதால் ஒரே ஒரு காவலர் மேலாடையிலும் கண்கள் உதடுதளின் துடிப்பு என்பதில் காட்டி மிரட்டி இருக்கிறார். ஒளிப்பதிவு...படப்பிடிப்பு காட்சிகளை கண்ணெதெரே நிறுத்தி இருக்கிறார்கள் என்றாலும் வெளிச்சம் குறைவும் மழைகள், சொதசொதப்பு என படம் முழுவதும் மணி ரத்னம் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்க வைத்துவிடுகிறது.

பிரியாமணியின் திருமணக் காட்சியின் பின்னனியை தென்னிந்திய சூழலில் மாற்றி இருக்கலாம், அதே காட்சியை இந்தியில் பார்க்கும் போது அபத்தமாக இல்லை.

*********

போலிசாக வரும் விக்ரம் ஏற்கனவே சாமியில் பார்த்ததினால் நமக்கு தோற்றம் மாறுபட்டு தெரியவில்லை, இந்தியில் அவருக்கு கொடுத்திருக்கும் நடிப்பு வாய்ப்புகள் குறைவு, பிரிதிவிராஜ் அளவுக்குத்தான் செய்திருக்கிறார். ஒருவேளை புதிய போலிஸ் இந்திக்காரர்களுக்கு பிடித்து இருக்கலாம். விக்ரம் இடத்தில் அபிஷேக் பச்சன் அவ்வளவாக ஈர்க்கவில்லை, விக்ரமின் உடல் மொழி, முக அசைவு, நடிப்பு பச்சனிடம் அவ்வளவாக இல்லை. இந்திப்பாடல்கள் தமிழ்பாடல்களை விட தாளம் போட வைக்கும் அளவுக்கு காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. வீரையனை பீரா.....என்று மாற்றி இருக்கிறார்கள் இந்தியில். ஹீரோ ஏன் இராவணன் ஆகிறான் என்பதற்கு அவன் மாற்றான் மனைவியை கடத்தினான் என்பது தவிர்த்தும், தங்கையின் சாவு தவிர்த்து பலமான பின்னனிகள் எதுவுமே இல்லாதது படத்தின் அழுத்ததைத் குறைத்திருக்கிறது. படம் உணர்த்தும் பாடம் என்பது போன்ற மேசேஜுகள் எதுவும் கிடையாது, ஹிரோ நல்லவன் என்பதை சொல்லும் மற்றொரு படம், நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லை என்பதை மீண்டும் இராவணன் மூலம் மூன்று மொழி பேச வைத்திருக்கிறார் மணி.

ரிப்பீட் ஆடியன்ஸ் எனப்படும் மறுவருகையாளர்களை ஈர்க்க படத்தில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. மணி ரத்னம், விக்ரம், ஐஸ், அபிசேக் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

மேட்டுகுடிப் பிரச்சனைகள் எதுவுமே அழுத்தமாக பதிவு செய்யாதப் படம் ஒரு சில வசனங்களைப் பேசுவது வெறும் மார்கெட்டிங்க் மட்டுமே, மேட்டுக்குடி ஆளுமை பற்றி படம் எடுத்தால் அதை ரிலையன்ஸ் வெளி இட்டுவிடுமா ? தேசிய பிரச்சனைகள் என்பதாக படம் எடுக்கும் மணி இதில் ஷங்கர் அளவுக்கு கூட லோக்கல் பிரச்சனைகளை தொடவில்லை. பொதுமக்களின் திரைப்படப் பொழுது போக்குக்கான குறிப்பிட்ட அளவிலான பணத்தை ரிலையன்ஸ் கொடுத்து இருக்கிறார் என்கிற ஆதங்கம் ஏற்பட்டது, ஏற்கனவே நடுத்தர வர்கம் நுகரும் சில்லரை விற்பனையாளர்களின் வாயில் மண்ணைப் போட்டு நடுத்தரவர்கத்திற்காக கடை திறந்தவர்கள் ரிலையன்ஸ். இவர்களின் விற்பனையில் படத்தில் எதாவது மெசேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. எல்லாம் விற்பனைக்கானது தான். பொழுது போக்குக்காக செல்லலாம், அதன் பிறகு குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை :)

தமிழ் மற்றும் இந்தி இராவ(ண)ன் படங்களில் காட்சிகளும், படப்பிடிப்பு கோணங்களும் 99.99 விழுக்காடு அதே தான். ஐஸ்வர்யா தனித்து தோன்றும் காட்சிகள் 100 விழுக்காடு அதே காட்சி. இந்திப் படத்துக்கான காட்சி அமைப்புகளில் தமிழ் நடிகர்களின் பின்புலத்தில் படம் எடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து இரண்டு படங்களும் எந்த ஒரு மாறுதலும் இல்லை.

37 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா

Jackiesekar சொன்னது…

ரொம்ப நல்லா சொல்லி இருக்கிங்க.. கோவி...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:(((
ம்ம்ம்ம்!
போட்டாச்சா!?

நல்லா எழுதியிருக்கிறிய கோவியாரே!

இருப்பினும் இந்தப் படத்தின் தமிழ்,இந்தி,தெலுங்கு உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் பார்க்கத் துடிக்கும் உங்களுக்கு எனது கண்டனங்கள்!

ஜெகதீசன் சொன்னது…

:)

Jawahar சொன்னது…

//மற்றபடி நடிகைகளை வட இந்திய தென்னிந்திய திரைத் துறைகள் ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தக் குறையுமில்லை என்பதை நடிகை ஸ்ரீதேவி, ஜெயபிரதா, ரேகா மற்றும் ஐஸ்வர்யா போன்றவர்களே காட்சி//

Boss, ஊறுகாயா தொட்டுக்கிறதா? சிலரை தயிர்சாதமா பிசைஞ்..... மன்னிக்கணும். வெகுவாப் பயன்படுத்திக்கல்லையா?

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//Boss, ஊறுகாயா தொட்டுக்கிறதா? சிலரை தயிர்சாதமா பிசைஞ்..... மன்னிக்கணும். வெகுவாப் பயன்படுத்திக்கல்லையா?

http://kgjawarlal.wordpress.com//

நீங்க சுறா அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Present Govi

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Govi//

பிரசண்ட் வாக்குகள் ஆகாது !
:)

ஷர்புதீன் சொன்னது…

சிவாஜி, கமல் வரிசையில் காட்சிக்கு மெனக்கட்டு நடிக்கும்.....

( sivaji acting is good and he can manage only with his body language,he is not hard worker physically like kamal&vikram ( situations may be one of the reason., but kamal&vikram work hard physically too)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷர்புதீன் said...

சிவாஜி, கமல் வரிசையில் காட்சிக்கு மெனக்கட்டு நடிக்கும்.....

( sivaji acting is good and he can manage only with his body language,he is not hard worker physically like kamal&vikram ( situations may be one of the reason., but kamal&vikram work hard physically too)//

நீங்கள் சிவாஜி பற்றிக் குறிப்பிடுவது தவறு. பாசமலர் படத்தில் இறந்து போகும் காட்சியில் முகத்தில் சவக்களை தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு இரவு முழுவது கண் விழித்து இருந்து, மூன்று வேளை சாப்பிடாமல் இருந்து அந்த காட்சி அமைய இயக்குனருக்கு தெரியாமலேயே உதவினார் என்று படித்திருக்கிறேன். முதல் மரியாதையில் ஒரு காட்சியில் இயக்குனரின் திருப்திக்காக 70 மாறுபட்ட நடையை நடந்து காட்டினாராம். சிவாஜி ரசிகர்கள் உங்களை பிய்த்துப்போடப் போகிறார்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

நிஜமா நல்லவன், உங்களுடன் விஜய் ஆனந்துடன் இந்தி படம் பார்த்தது மகிழ்சி!

கோவி.கண்ணன் சொன்னது…

பிரபு,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜாக்கி சேகர் said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கிங்க.. கோவி...//

ஜாக்கி, ஐஸ் மலை சறுக்கில் வேரைப் பிடித்து மேலே ஏறும் போது உங்கள் நினைவு தான் வந்தது. இதுக்கே இப்படி கவலைப்பட்டீர்கள் என்றால் வருங்காலத்தில் அவர் இன்னும் பிரசவ வலியெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கும் அதுக்காக அபிசேக் பச்சானுக்கு சாபம் விடமாட்டிங்க என்று நினைக்கிறேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:(((
ம்ம்ம்ம்!
போட்டாச்சா!?

நல்லா எழுதியிருக்கிறிய கோவியாரே!

இருப்பினும் இந்தப் படத்தின் தமிழ்,இந்தி,தெலுங்கு உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் பார்க்கத் துடிக்கும் உங்களுக்கு எனது கண்டனங்கள்!//

தெலுங்கு படம் சிங்கையில் வரலை :)
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger ஜெகதீசன் said...

:)/

நன்றி !

அறிவிலி சொன்னது…

தெலுங்குல பாக்கலையா?

Thekkikattan|தெகா சொன்னது…

//இவர்களின் விற்பனையில் படத்தில் எதாவது மெசேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. எல்லாம் விற்பனைக்கானது தான். பொழுது போக்குக்காக செல்லலாம், அதன் பிறகு குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை :)//


ஏன், பொழுது போக்கிற்னு போயி அவன் பாக்கெட்ல மீண்டும் உங்க காச கொட்டணும், சாய்ஸ் உங்க கையில இருக்கே - இப்போதான் low budget படங்கள் வந்து நிறைய விசயங்களை பேச வைச்சிருக்கே, அதை ஆதரிப்போம் :)) என்ன சொல்லுறீங்க.

பரிசல்காரன் சொன்னது…

விளக்கமான விமர்சனம் ஜி. எனக்குத் தெரிந்து இரு மொழியிலும் பார்த்து ஒப்பிட்டு எழுதியதை (இதுவரை) உங்கள் பதிவில் மட்டும்தான் பார்க்கிறேன். நன்றி!

பனித்துளி சங்கர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

வவ்வால் சொன்னது…

Mandapathila yaro ezhuthina pola irukke?

அது சரி(18185106603874041862) சொன்னது…

முதல் பத்தியில் மட்டும் மாற்று கருத்து...ரஜினி கமலை அவங்க ஏத்துக்கலை...அதே மாதிரி அமிதாப், கோவிந்தா, ஷாருக் இவங்களை எல்லாம் தமிழ்லயும் ஏத்துக்கலை..இவங்க நேரடி தமிழ்ப்படம் நடிச்சா ஓடும்னு நினைக்கறீங்க??

அதே மாதிரி, தமிழ்லயும் வட இந்திய நடிகைகளை யூஸ் பண்ணிக்கிட்டு தானே இருக்காங்க??

இதுல அடிப்படை பிரச்சினை, படம்கிறது ஹீரோ வச்சி தான்...அந்த ஹீரோ லோக்கல் மக்கள் அடையாளப்படுத்திக்கிற ஆளா இருந்தா தான் கதை வொர்க்கவுட் ஆகும்... (அதே சமயம், வட இந்திய ஊடகங்கள் தென்னிந்திய நடிகர்களை பெரும்பாலும் இருட்டடிப்பு செய்வதும் உண்மை..)

கோவி.கண்ணன் சொன்னது…

//அது சரி said...

முதல் பத்தியில் மட்டும் மாற்று கருத்து...ரஜினி கமலை அவங்க ஏத்துக்கலை...அதே மாதிரி அமிதாப், கோவிந்தா, ஷாருக் இவங்களை எல்லாம் தமிழ்லயும் ஏத்துக்கலை..இவங்க நேரடி தமிழ்ப்படம் நடிச்சா ஓடும்னு நினைக்கறீங்க??//

வட இந்திய நடிகர்கள் சாயாஜி சிண்டே மற்றும் பல (வில்லன்) நடிகர்களுக்கு நாம வரவேற்புகள் கொடுத்து இருக்கிறோம். அமிதாப், கோவிந்தா, சாருக் இவர்களெல்லாம் ஒரு குறுப்பிட்ட வட்டத்திற்கான மொழிகளில் நடிக்க விரும்புவார்களான்னு தெரியல. சாருக் கமலுடன் இணைந்து ஒரே ஒரு படம் தான் செய்திருக்கிறார், அதுவும் இந்தியிலும் வெளியானது.

தென்னிந்திய பாடகர், பாடகிகள் இந்தியில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவருகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// வவ்வால் said...

Mandapathila yaro ezhuthina pola irukke?//

தவறு. நான் நானே தான் எழுதினேன் மன்னா.

கோவி.கண்ணன் சொன்னது…

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...

விளக்கமான விமர்சனம் ஜி. எனக்குத் தெரிந்து இரு மொழியிலும் பார்த்து ஒப்பிட்டு எழுதியதை (இதுவரை) உங்கள் பதிவில் மட்டும்தான் பார்க்கிறேன். நன்றி!//

பரிசல்,
உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு இடுகையில் கடைசியில் மற்றொரு பத்தி சேர்த்திருக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன், பொழுது போக்கிற்னு போயி அவன் பாக்கெட்ல மீண்டும் உங்க காச கொட்டணும், சாய்ஸ் உங்க கையில இருக்கே - இப்போதான் low budget படங்கள் வந்து நிறைய விசயங்களை பேச வைச்சிருக்கே, அதை ஆதரிப்போம் :)) என்ன சொல்லுறீங்க.

12:13 AM, June 21, 2010//

படம் பொழுது போக்கிற்கு என்றாலும் குப்பை படங்கள் மக்களை அடைவதில் இருந்து தடுப்பதற்காக பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதும் தமிழ் கூறும் நல்லுலகிற்கான சேவை தானே. :)

Karthick Chidambaram சொன்னது…

இரண்டு மொழியிலும் பார்த்து விமர்சனம் செய்து உள்ளீர்கள். மணி அவர்கள் முழு சுதந்திரதூடு படம் எடுத்தாரா என்று தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவிலி said...

தெலுங்குல பாக்கலையா?//

அண்ணே தெலுங்கு படம் சிங்கையில் வெளியாகலையே, டிவிடி கிடைக்குமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Karthick Chidambaram said...

இரண்டு மொழியிலும் பார்த்து விமர்சனம் செய்து உள்ளீர்கள். மணி அவர்கள் முழு சுதந்திரதூடு படம் எடுத்தாரா என்று தெரியவில்லை.//

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இந்த படம் முடிவதற்கும் மணி ஏகப்பட்ட டென்சனுக்கு ஆளானார் என்று அவ்வப்போது செய்தி இதழ்களில் குறிப்பிட்டு இருந்தார்கள்

வவ்வால் சொன்னது…

Kovi,
mandabam ezhuthu sonnathai thavaraka eduthu kollamaiku nanri!

Eppothum konjam difèrenta,microscopic viewla paarthu alasi solvinga athu missing enpathal appadi sonnen!

Unga ezhuthu neenga perpodama vittalum enankku theriyume!

கோவி.கண்ணன் சொன்னது…

// வவ்வால் said...

Kovi,
mandabam ezhuthu sonnathai thavaraka eduthu kollamaiku nanri!

Eppothum konjam difèrenta,microscopic viewla paarthu alasi solvinga athu missing enpathal appadi sonnen!

Unga ezhuthu neenga perpodama vittalum enankku theriyume!//

அக்கினிபார்வை, சுரேஷ் மற்றும் பலர் மாறுபட்ட கோணத்தில் ஏற்கனவே தேவைக்கும் அதிகாமாக அளவு அலசி விட்டதால் வெண் திரையே கிழிந்துவிட்டது, நானும் சில பாத்திரங்களை விமர்சனத்தில் குறிப்பிடல :)

ப.கந்தசாமி சொன்னது…

ஆஜர். ஏன் எல்லோரும் சினிமான்னா கொலை வெறியோட எழுதறாங்கன்னு தெரியலீங்களே? உங்களுது கொஞ்சம் மனிதாபிமானத்தோட இருக்கு.

Ravichandran Somu சொன்னது…

கோவி,

ஹிந்தியும் பார்த்தாச்சா!!

கோவி.கண்ணன் சொன்னது…

//ரவிச்சந்திரன் said...

கோவி,

ஹிந்தியும் பார்த்தாச்சா!!//

:) அதெல்லாம் பெரியக் கதை இல்லை, நேரம் கிடைக்கும் போது சுறுக்கமாகச் சொல்கிறேன்

SurveySan சொன்னது…

rendum paatha mana dhairiyaththai paaraattugiren :)

கோவி.கண்ணன் சொன்னது…

// SurveySan said...

rendum paatha mana dhairiyaththai paaraattugiren :)//

ஏற்கனவே சுறா, குருவின்னு பார்த்து மனதை திடப்படுத்தி வைத்திருந்ததெல்லாம் பயன்பட்டது.
:)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல விமர்சனம் கோவிஜி. அதிகம் எதிர்பார்த்த இப்படித்தான் போல...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்