பின்பற்றுபவர்கள்

30 ஜூன், 2010

ஆத்திக நாத்திகருக்கான பொதுக்கடவுள் !

நம்பிக்கை என்பது தவிர்த்து எந்த ஒரு தரவும் இல்லாத ஒன்று கடவுள் நம்பிக்கை என்று சொன்னால் அதை மறுக்க எவரும் கிடையாது அல்லது நம்பிக்கை என்பது தவிர்த்து கடவுள் இருப்பிற்கான நிருபனம் எதுவுமே இல்லை என்பது பொதுவான ஆத்திக கூற்று. நம்பிக்கைகள் நிருபனம் ஆகாது அல்லது நம்பிக்கைகளுக்கு நிருபனம் தேவை இல்லை என்கிற முரணான கூற்றுகள் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நிருபனத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் கொண்டவர்கள் ஆத்திகர்கள் மட்டுமே என்பது தவறான கூற்று ஆகும், நாத்திகர்களுக்கும் நம்பிக்கைகள் உண்டு, ஆனால் அவை நம்பிக்கைகள் என்பதாக கருதப்படாததால் அதுபற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை.

குறிப்பாக காலம் அல்லது நேரம் இவை. காலம் அல்லது நேரம் இவை உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்த்தால், அப்படி எதுவும் அறுதி இட்டு சொல்ல முடியாது. நமது நேரம் மற்றும் கால கணக்கிடின் அடிப்படை முதலில் புவியின் இயக்கம் அதாவது பகல் இரவு, அதில் காலை, நண்பகல், மாலை, இரவு என்னும் பகுப்பாக அறியப்பட்டு, பின்னர் அந்தப் பகுப்பின் சுழற்சியை மணித்துளிகள், நொடித்துளிகள் என்பதாக மாற்றி நேரக்கணக்கிடுகளின் அடிப்படையும், திங்கள் வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதாக திங்கள் (மாதக்) கணக்கும், பிறகு பருவ காலங்களின் அடிப்படையில் ஆண்டு அடிப்படைகளும், பிறகு புவியின் சுழற்சியை துள்ளியமாக அறிந்த பிறகு லீப் ஆண்டு கணக்குகளும் ஏற்பட்டன. ஒட்டுமொத்த பரவெளி, பால்வெளி இயக்கத்தின் கணக்குகளும் தற்பொழுது புவி சுழற்சியின் அடிப்படையிலான மணித் துளிகள், ஆண்டுகள், (தொலைவுகள் ) ஒளி ஆண்டுகள் என்பதாக கணக்கிடப்படுகிறது.

நாம் இருப்பதாக நம்பும் கால நேரங்கள் உண்மையிலேயே எப்போதும் இருந்ததே இல்லை அல்லது எப்போதுமே இருக்கிறது. இவை பற்றிய பகுப்புகள் வரலாறுகள் அடிப்படையில் நம்மால் நம் வசதிக்கேற்ப முன்னோர்கள் அமைத்துக் கொண்ட ஒன்றே. சமூகம் என்பதை மனிதன் ஏற்படுத்திக் கொண்டது போலவே, தனக்கான கால நேரங்களை ஒரு ஒழுங்கு முறைக் கணக்குக்குள் மனிதன் அமைத்துக் கொண்டான். காலம் இருக்கிறது என்பது தற்போது ஆத்திகர் நாத்திகர் அல்லாது பொதுவாக மனித குல நம்பிக்கை ஆகிவிட்டிருக்கிறது. நாம் பகுத்து அறிந்து கொண்ட காலங்கள் எதுவும் பிற உயிரினங்களுக்கு தாவிர வகைக்களுக்கு நம்பிக்கை என்ற அளவில் கூட கிடையாது. நாம் தற்போது நடைமுறையில் வைத்திருக்கும் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்கள் என்பது கூட முன்பு இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 60 நாழிகைகள் என்பதாக கணக்குகளாக இருந்தன. 24 மணி நேரம், 365 நாட்கள் இப்படியாக நாம் அமைத்துக் கொண்டவற்றிலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையே. இந்த கற்பனைகள் இல்லாவிட்டாலும் கூட நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.

நம்பிக்கைகள் கடவுள் என்றால், நாத்திகரும் நம்பும் கடவுள் நேரம் (Time), ஆனால் அவை இருக்கிறது என்றும் இல்லை என்றும் நினைப்பது யாவும் நம் நம்பிக்கையே. பரவெளி இயக்கம் என்னும் பேரியக்கச் செயலை நம் அறிவின் நுகர்சியால் உணரக்கூடிய, மிக குறுகிய கால எல்லைக்குட்பட்ட,பகல் இரவு புவி இயக்கத்தின் ஊடாக அளக்க முயற்சிக்கிறோம். அதை முற்றிலும் அளக்க முடியாத சூழலில் பரவெளி இயங்குகிறது என்பதாக நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். பெருவெடிப்பு நிகழ்ந்தகாக பில்லியன், ட்ரில்லியன் (அதற்குமேல் எண்ணியலை மனிதனால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை) களில் ஆண்டுகணக்கைச் சொல்லுகிறார்கள். பெருங்கடலை அளவிட இன்னும் பீப்பாய்கள் தவிர்த்து பெரிய களன் அளவைகள் கிடையாது. வேண்டுமானால் பெருங்கடளின் கொள்ளளவு பல கடல்களை உள்ளடக்கியது என்று மட்டுமே தோராயமாகச் சொல்ல முடியும். குழப்ப(ம்) ஒன்றும் இல்லை :), நம்மால் கற்பனை செய்ய முடியாதவற்றின் அளவுகளை நம் கற்பனைக்குள் உள்ள அளவிடுகளை வைத்து அளக்க முயற்சிக்கிறோம் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

கற்பனைக்கு அப்பாற்பட்டவற்றை கற்பனைக் கட்டுக்குள் கொண்டுவர எளிதான வழி நம்பிக்கை. பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கால நம்பிக்கை. இரண்டிம் கற்பனைகளுக்கு ஒழுங்குவடிவம் கொடுத்திருந்தாலும், ஓரளவுக்கு ஒழுங்கான வடிவமாக இருப்பது காலம் தான். அதுவும் புவி தன் வட்டப்பாதையை மாற்றிக் கொள்ளாதவரை, சுழற்சியில் சோர்ந்து போகதவரை மட்டுமே.

பயன் கருதி அமைத்துக் கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளது காலம், பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. காலம் அல்லது நேரம் ஆத்திக நாத்திகருக்கான பொது நம்பிக்கை என்றாலும் காலத்தை அனைவருமே வணங்குவதில்லை. காலக் கற்பனையின் எல்லைக்குட்பட்ட உருவ(க)ம் மணியாரம்(கடிகாரம்).

நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)

21 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

present sir......

Kesavan சொன்னது…

//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :) //

அப்ப உங்க கடவுள் யாரு :)))) இப்ப தெரிஞ்சிடும் நீங்க ஆத்திகரா இல்லை நாதிகரான்னு :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :) //

அப்ப உங்க கடவுள் யாரு :)))) இப்ப தெரிஞ்சிடும் நீங்க ஆத்திகரா இல்லை நாதிகரான்னு :)))//

உள்ளாடைகளின் தெரிவில் நிற விருப்பம் தேவையற்றது. :)

TBR. JOSPEH சொன்னது…

பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. //

இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இல்லாதவர்கள் வேண்டுமானால் மூட நம்பிக்கைகளினால் ஏற்படுகிற பயம் காரணமாக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம்.

priyamudanprabu சொன்னது…

இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இல்லாதவர்கள் வேண்டுமானால் மூட நம்பிக்கைகளினால் ஏற்படுகிற பயம் காரணமாக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம்.
/////////////

அப்போ படிசவனுக்கு மூடநம்பிக்கை இல்லையா?


படிப்புன எது? பள்ளி கல்லுரி படிப்பா?

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு இல்லாதவர்கள் வேண்டுமானால் மூட நம்பிக்கைகளினால் ஏற்படுகிற பயம் காரணமாக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம்.//

படித்தவர்களால் தான் கடவுள் உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதாக சொல்லவே முடியாது.

படிப்பு அறிவை அறிவின் அளவுகோளாக்குவது அதுவும் நீங்கள் அப்படிச் சொல்வது வியப்பாக இருக்கிறது. படிப்பு அறிவுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பே இல்லை என்பது என் நிலைப்பாடு.

பொன் மாலை பொழுது சொன்னது…

// உள்ளாடைகளின் தெரிவில் நிற விருப்பம் தேவையற்றது. :) //

-----கோவி கண்ணன்

சரிதான், புரிகிறது. ஆனால் உள்ளாடை நமக்கு அவசியமாகிப்போனதே?
இல்லையேல் நாம் விலங்குகளை விட கீழான நிலையில் அல்லவா இருப்போம்!

உண்மையில் "கீழான நிலை ' என்பதே நாம் உணர்வதுதானே ?
உடையற்ற விலங்குகளுக்கு அப்படி இல்லையே!

மனிதம் தவிர்த்த பிற உயிகளுக்கு :
காலம் இல்லை,
உடை நெறிமுறைகள் இல்லை,
கடவுளும் இல்லை,
மதமும் இல்லை.

மனிதர்களுக்கு:
காலம் கட்டுபடுத்துகிறது.
உடைகள் அவசியமாகிறது
கடவுளும் தேவைபடுகிறது
மதமும் வேண்டியுள்ளது .

இவ்வாறு கொள்ளலாமா கண்ணன்? .....இதற்கு எல்லையே இல்லை என்பதுதான் உண்மை.

கடவுளும் மதமும் இருக்கட்டும் அல்லது இல்லாமல் இருக்கட்டும்
ஆனால் மனிதர்களை புத்தி ,அறிவு என்ற ஒரு பண்பு ஆட்படுத்துகிறதே! அதைக்கொண்டுதான் இல்லாத காலத்தை இருபதாக உணர்த்து ஓடிகொண்டிருக்கிறோம்.ஒரு வேலை கடவுளும் மதமும் இப்படித்தான் உண்டாகியிருக்குமோ ??

கோவி.கண்ணன் சொன்னது…

//
சரிதான், புரிகிறது. ஆனால் உள்ளாடை நமக்கு அவசியமாகிப்போனதே?
இல்லையேல் நாம் விலங்குகளை விட கீழான நிலையில் அல்லவா இருப்போம்!//

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
நான் கேசவனுக்கு சொன்னபதில் வேறு. ஆடை அணிவது அணியாமல் இருப்பது குறித்தது அல்ல, ஆனால் நான் அணிந்திருக்கும் ஆடையே உயர்வானது, ஆடை அணியாதவர்கள் ஆதிவாசிகள் போல பழக்கத்தின் காரணமாகக் கூட இருக்கலாம் தாழ்வானவர்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆடை உடுத்துவது நாகரிகம் என்பது நமது கோட்பாடாக இருந்தாலும் பட்டாடை உடுத்துவது தான் நாகரீகம் என்பவை விலக்கக் கூடிய ஒன்று. நான் ஆடைகள் என்று குறித்து இருப்பது கடவுள் நம்பிக்கையில் நாம் விதம் விதமாக அவரவர் அணிந்திருக்கும் கற்பனை ஆடைகளைத்தான்.

வால்பையன் சொன்னது…

//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)//


நான் வாட்சே கட்டுரதில்ல தல!
அங்கேயும் நான் முரண்படுகிறேன், காலத்துக்கு நான் வேலை செய்வதில்லை, எனக்கு பின் காலம் ஓடி வருகிறது, அப்படியானால் காலபைரவன் எனக்கு அடிமையா!?

ராவணன் சொன்னது…

ஆக சிங்கப்பூரிலும் வேலை நேரத்தில் பதிவு எழுதமுடிகின்றது..கொடுத்து வைத்தவர்...வாழ்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...

ஆக சிங்கப்பூரிலும் வேலை நேரத்தில் பதிவு எழுதமுடிகின்றது..கொடுத்து வைத்தவர்...வாழ்க!//

எல்லா நேரத்திலும் எழுத முடியும் விரலும் கணிணியும் இணையமும் நன்றாக இருந்தால். :)

உங்க பேருல வந்தப்படம் பப்படம் ஆனதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா ? :))

கல்வெட்டு சொன்னது…

கோவி,
நாத்திகம் என்பது ஆத்திகத்தின் எதிரணி.
கடவுள் நம்பிக்கை = ஆத்திகம்
கடவுள்மீது நம்பிக்கையின்மை = நாத்திகம்.

நாத்திகர் என்பவர் கடவுள் குறித்தான விசயத்தில் மட்டுமே ஆத்திகத்தில் இருந்து வேறுபடுகிறார்.

மற்றபடி நாத்திகரும் ஆத்திகரும் ஒரே குட்டையின் மட்டைகளே.

***

//நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.//

நேரம் என்பது நம்பிக்கையோ அல்லது பருப்பொருளோ கிடையாது. எனவே அது இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லுவதோ மிகவும் தவறு.

அட்சரேகை தீர்க்கரேகை போல நேரம் ஒரு அறிவியல் குறியீடு.

வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட பகுப்பு.

பூமி மட்டும் அல்ல, எல்லாக் கோள்களுக்கும் அவை தன்னைத்தானே சுற்றும் காலத்தை தின நேரம் என்ற பெயரில் வகைப்படுத்துகிறோம். அதை நீங்கள் பூனைக்குட்டி என்று வகைப்படுத்தினாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. :-))

நாளை வரும் சமுதாயம் அவர்கள் வசதிக்காக கோள்களுக்கும் அவை தன்னைத்தானே சுற்றும் காலத்தை 100 ஆக பகுத்து அளவிட்டாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை.

‍‍‍‍‍‍‍‍‍‍
நினைவில் கொள்க:
நான் அறிவியல் மாணவனே தவிர நாத்திகம் அல்லது ஆத்திகம் என்று இருக்கு/இல்லை என்று கடவுள் என்ற நம்பிக்கையைச் ஆதரித்தோ எதிர்த்தோ சுற்றி வருபவன் இல்லை

.

கார்மேகராஜா சொன்னது…

கல்வெட்டு சொன்னது அழகாக இருந்தது.

மேலும் காலத்தை நான்காவது பரிமாணமாக அறிவியல் நினைக்கிறது என படித்த நினைவு!

இந்த சுட்டியை பார்க்கவும் http://www.jimloy.com/physics/4d.htm

http://valaakam.blogspot.com/2010/03/blog-post_11.html

Karthick Chidambaram சொன்னது…

உண்மை - காலம் ஒரு கடவுள்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

//நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)//


நான் வாட்சே கட்டுரதில்ல தல!
அங்கேயும் நான் முரண்படுகிறேன், காலத்துக்கு நான் வேலை செய்வதில்லை, எனக்கு பின் காலம் ஓடி வருகிறது, அப்படியானால் காலபைரவன் எனக்கு அடிமையா!?//

வாட்ச் கட்டுவதில்லை......ஆனா நேரம் பார்ப்பிங்க இல்லையா ? :) நாம் செல்லுமிட பேருந்தை தவறவிட்டால் காலம் நம்மை விட்டுவிட்டு ஓடிவிடும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//
நேரம் என்பது நம்பிக்கையோ அல்லது பருப்பொருளோ கிடையாது. எனவே அது இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லுவதோ மிகவும் தவறு.

அட்சரேகை தீர்க்கரேகை போல நேரம் ஒரு அறிவியல் குறியீடு.//

Time Exists ! உண்மை இல்லையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// கார்மேகராஜா said...

கல்வெட்டு சொன்னது அழகாக இருந்தது.

மேலும் காலத்தை நான்காவது பரிமாணமாக அறிவியல் நினைக்கிறது என படித்த நினைவு!

இந்த சுட்டியை பார்க்கவும் http://www.jimloy.com/physics/4d.htm

http://valaakam.blogspot.com/2010/03/blog-post_11.html//

கார்மேகராஜா, சுட்டிகளுக்கு நன்றி. மேலும் தகவல்கள் அறிந்து கொண்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

/ Karthick Chidambaram said...

உண்மை - காலம் ஒரு கடவுள்தான்.//

கா.சி பின்னூட்டத்திற்கு நன்றி.

வால்பையன் சொன்னது…

//நாம் செல்லுமிட பேருந்தை தவறவிட்டால் காலம் நம்மை விட்டுவிட்டு ஓடிவிடும்//

காலம் தானே ஓடும், நான் அங்கேயே தானே இருக்கேன்! சும்மா ஓடிகிட்டே இருக்குற ஒன்னை எப்படி கடவுளாக ஏத்துக்க முடியும்!

ரெண்டாவது ஒரு வேவையை ஒரு குறிபிட்ட கால அளவில் இதுவரை மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்!, உதாரணமாக 100 மீட்டர் ஓட்ட பந்தயம் இத்தனை நொடிகளில் ரிக்கார்ட் செய்யபட்டிருக்கிறது, அதனை ஒருவன் முறியடித்தால் அவன் காலத்தை வென்ற கடவுளா!?

எல்லா பக்கமும் பார்த்தாலும், நமக்காக தான் காலமே தவிர, காலத்துக்காக நாம் இருப்பது போல் தோன்றுவதில்லையே!

கல்வெட்டு சொன்னது…

.

//கோவி....
Time Exists ! உண்மை இல்லையா ?//

உண்மை இல்லை கோவி

***

உங்களின் நேரடிக் கேள்விக்கான பதில் மேலே கொடுத்தாகிவிட்டது.
இது மேற்படி விளக்கம்....

Fact என்பது வேறு அந்த Fact ஐ அளவிடும் முறை என்பது வேறு.
ஒரே Fact ஐ வேறு முறைகளில் கூட அளவிடலாம்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுதான் Exists
அதுதான் உண்மை(Fact).

1. Time Exists ! என்றால் அட்சரேகை தீர்க்கரேகையும் Exists

2. அது போல கிலோகிராமும் பவுண்டும் லிட்டரும் Exists


நேரம் என்பது அதை நாம் பகுத்துக் கொள்ளும் குறியீடு.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வில்லை என்றால் அல்லது ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் உள்ள ஒரு கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவில்லை என்றால் "அங்கு அது சுத்தவில்லை என்பதுதான் உண்மை" நேரம் இல்லை என்பது உண்மை அல்ல‌.

ஏன் என்றால் அங்கே நேரத்தை வேறு வழியில் அது அதன் நட்சத்திரத்தை சுற்றிவரும் காலம் அல்லது அதன் அருகில் நடக்கும் மற்ற கோள்களின் இயக்கம் என்று ஏதாவது ஒரு பொறுத்திப் பார்த்தல் முறையில் நேரப்பகுப்பு செய்து கொள்ளலாம்.

.

ப.கந்தசாமி சொன்னது…

ஆஜர்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்