பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் புலிகள் ஆதரவும் !

நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு பரவலான எதிர்ப்பும், எதிர்ப்பு ஏன் என்பது பலரும் அறிந்ததே. இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றைச் சொல்கிறேன்.

* தமிழ் என்பது நிலம் சார்ந்த மொழி என்பதை கடந்து.. கடந்த நூற்றாண்டுகள் பல ஆகிவிட்டது, எனவே தமிழ் மொழி சார்ந்த பொதுவானவற்றைப் பற்றிய நிகழ்வுகள் பல்வேறு நிலங்களில் வசிக்கும் தமிழர்களிடம் பரிந்துரை மற்றும் அளவளவல்கள் கேட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு அரசு நடத்தும் செம்மொழி மாநாடு என்று இருந்திருக்க வேண்டும், உலக செம்மொழி என்று சொல்லும் வண்ணம் பல்வேறு தமிழர் தரப்புகளிடம் கலந்து பேசவில்லை

* முதன்மையாக இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்கள் முற்றிலும் அவர்களது இடத்தில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில், எந்த ஒரு தமிழ் சார்ந்த அமைப்பும் தற்போதைய சூழலில் மகிழ்ச்சியாக இல்லை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அல்லது ஆண்டுகளாக தொடரும் நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்திவருகிறார்கள், இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த உலக தமிழர்களின் அடையாளமான மொழிக் குறித்தான மாநாட்டை நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல

* தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தமிழ் முன்னிலைப்படுத்தப்பட வில்லை (தமிழை வழக்கின் மொழியாகச் சொல்லி நடத்தும் போராட்டம் குறிப்பிடத் தக்கது)

இது பற்றி துளி கூடக் கவலைப்படாமல் தமிழக அரசால் தன்விருப்ப உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதை மொழி மற்றும் தமிழர் நலன் சார்ந்தவர்கள், பற்றாளர்கள் புறக்கணிக்கிறார்கள்.

********

விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவில் தொடர்ந்துவருவது அனைவரும் அறிந்ததே, தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவே ஒப்புதல் அளிப்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று அண்மையில் கூட நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. நேரிடையாக ஆதரவு தெரிவிப்பவர் மீதான சட்டம் பாயும் என்பது கூட புரிந்து கொள்ளக் கூடியது தான், ஆனால் மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் பாயும் என்று சொல்லுவது மிகவும் ஆபத்தானது, இதன் மூலம் ஐயத்தின் பலனை ஒருவருக்கு அளித்து இவர் விடுதலைப் புலிகளுக்கு உதவ முயன்றார் என்ற குற்றச்சாட்டில் உள்ளே வைக்க முடியும், இதற்கெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் தானே அல்லது தன்னார்வளர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தான் ஒருவர் தம்மை குற்றவாளி இல்லை என்று கூறிவிட்டு வெளியே வரமுடியும், வெறொரு குண்டுவெடிப்பு வழக்கில் குனங்குடி மஸ்தான் 15 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு குற்றமற்றவர் என்பதாக வெளியே வந்திருக்கிறார் என்பதை நோக்குக. இடையில் குற்றம் சாட்டப்பட்டவர் இழப்பது எவ்வளவோ. சொல்ல வந்த தகவல் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது ஆதரவு கொடுப்பது பற்றியது அல்ல.

செம்மொழி மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் ஆதரவு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள், மகிழ்ச்சி அளிக்கிறது என்பதாக மாநாட்டை நடத்தும் முதல்வர் அறிவிப்பது, மாநாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருக்கும் எதிர்பை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாகும். இல்லை என்றால் ஒரு முதல்வரால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கடிதம் மாநாட்டை வாழ்த்துகிறது என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்ள முடியுமா ? மாநாட்டை விடுதலைப் புலிகள் தான் எதிர்க்கிறார் என்கிற தோற்றம் இருந்தது போலவும் தற்பொழுது அவர்களே கடிதம் அனுப்பி ஆசிர்வதித்து இருக்கிறார்கள் என்பது போலக் கூறுவது எதிர்ப்புகளை மறைக்கும் ஒரு உத்தி மட்டுமே. இது தவிர்த்து விடுதலைப் புலிகள் கடிதம் என்றால் காங்கிரஸ் முகம் சுளிக்கும் என்று தெரிந்தே... அல்லது கவலைப்படாமல் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கடிதத்தை முதல்வர் குறிப்பிடக் காரணம் வேறு என்னவாக இருக்கும். தூக்கு தண்டனை அல்லது மரண தண்டனைக் கூடாது என்று மனித உரிமை போராளிகள் கூறும் போது காசாப்பை தூக்கிலிடச் சொல்லி காஷ்மீர் தீவிரவாதிகள் இந்திய அரசுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்று மன்மோகன் சிங் அறிவித்தார் என்று சொன்னால் மனித உரிமை போராட்டக்காரர்கள் அதைச் சரி என்று சொல்லிவிடுவார்களா ?

மாநாட்டுக்கு பலமான எதிர்ப்புகள் இருக்கிறது என்பது உண்மை ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது என்பதாக 10,000 காவலர்கள் பாதுகாப்பு வளையம்.......அமைத்து மாநாடு நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளே ஆதரவு அளித்துவிட்டார்களே, பிறகு வேறு யாரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடப் போகிறது ? மாநாட்டை எதிர்பவர்கள் அனைவரும் தமிழ் தீவிரவாதிகளா ? இல்லை ஆயுதம் ஏந்தி போராடுபவர்களா ? 10,000 காவலர்கள் வந்தால் தான் மாநாடு நடத்த முடியும் என்கிற அளவில் எதிர்ப்பு இருக்கிறது என்பதாக இம்மாநாட்டை முதல்வர் வரலாற்றில் பதிய வைக்கிறாரா ? அப்படி என்றாலும் கூட இவ்வளவு எதிர்ப்பையும், எதிர்பாளர்களின் உணர்வுகளையும் முதல்வர் புறக்கணித்து, கண்டு கொள்ளாது தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார் என்பதை வரலாறு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுமா ? அல்லது உறுதியான முதல்வர் சொன்னபடி நடத்தி முடித்தார் என்று வரலாறு பதிவை தம் முதுகில் ஏற்றிக் கொள்ளுமா ?



செம்மொழி மாநாடு காணும் மங்கள நாயகன், மஞ்சள் நாயகன், முதல்வர் கருணாநிதி வாழ்க, அவர் தம் அழியா புகழ் வாழ்க !

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

துயரத்தை மற‌க்கச் செய்ய இது போன்ற விழாக்கள் தேவை தான்! வன்முறையை மட்டும் நம்பிக் கெட்டவர்கள், புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கும்போது,மற்றவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்! ஏன் இதை, ஒற்றுமை திருவிழாவாக எடுத்துக் கொள்ளக்கூடாது?

கோவி.கண்ணன் சொன்னது…

// ரம்மி said...

துயரத்தை மற‌க்கச் செய்ய இது போன்ற விழாக்கள் தேவை தான்! வன்முறையை மட்டும் நம்பிக் கெட்டவர்கள், புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கும்போது,மற்றவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்! ஏன் இதை, ஒற்றுமை திருவிழாவாக எடுத்துக் கொள்ளக்கூடாது?//

ம், இராஜபக்சேவை கொண்டு வந்து குத்துவிளக்கு ஏற்றச் சொல்லுவோம்.

கூடவே மும்பை குண்டு வெடிப்பு திருவிழா ஒன்று நடத்தி பாகிஸ்தான் இந்தியா ஒற்றுமை பேன தாவூத் இப்ராகிமை அழைப்போம்.

Unknown சொன்னது…

World tamil conference nearing a great success.it is better to join the winning camp as the LTTE did.
This is the nineth world tamil conference and could you please clarify during which conference lankan tamils enjoyed full rights in the island

கோவி.கண்ணன் சொன்னது…

// NandaKumar said...

World tamil conference nearing a great success.it is better to join the winning camp as the LTTE did.
This is the nineth world tamil conference and could you please clarify during which conference lankan tamils enjoyed full rights in the island//

கடிதத்தைக் காட்டி எல்டிடியி இருக்காங்கேன்னு சொல்லிடாதிய, காங்கிரசுகாரனுங்களுக்கு தூக்கம் போய்விடும்

Unknown சொன்னது…

//கடிதத்தைக் காட்டி எல்டிடியி இருக்காங்கேன்னு சொல்லிடாதிய, காங்கிரசுகாரனுங்களுக்கு தூக்கம் போய்விடும்//
There is no such letter officially received by the CM.It is a audio release in the eelanationnews.com
Click the link below and carefully listen to the conclusion.
http://kuma.lunarservers.com/~pulik3/2010/06.2010/19.06/Arikkai%20Thalamai%20seiyalakam.mp3

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

துளசி கோபால் சொன்னது…

இது உலகத்தமிழ் மாநாடு இல்லையாம்.

முதலாம் தமிழ்ச் செம்மொழி மாநாடு!!!!

subra சொன்னது…

kolaikarargal medai endru sollungal ,odrumai
medaiyam????? ,vengaayam,soranaiyulla tamilargal
innum irukkirom.yaruda vanmurayai nambi keddavargal ,kolaikarangale niingalthanadaa .mugilan.

அப்பாவி முரு சொன்னது…

ஜெ உச்சத்தில் இருந்தபோது, துணி, சுவர்சீலை, தரைச்சீலை, பூ, பழம் என எல்லாம் பச்சையாக இருந்த்து.

க உச்சத்தில் இருக்கும் போது சால்வை, பூ எல்லாம் மஞ்சள் ஆகிக்கிட்டு வருது.

வாழக பச்சை!!., வாழக மஞ்சள்!!!.


எனக்குன்னு ஒரு நிறத்தை சீக்கிரம் கண்டுபிடிக்கணும்!

priyamudanprabu சொன்னது…

no comments

Sanjai Gandhi சொன்னது…

10000 போலிஸ்காரர்கள் பாதுக்காப்புக்கு மட்டுமே என்ற உங்க கண்டுபிடிப்பை தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுல செதுக்கி வச்சி அங்கனயே உட்கார்ந்துக்கோங்க.. பல சந்ததிகள் அதை படிச்சி பயனடைவாங்க..

செம்மொழி மாநாட்டை நானும் கூட எதிர்க்கிறேன்.. இதனால் ஏராளமான பாதிப்புகள் எங்களுக்கு.. ஆனால் இப்போது கோவையின் திருவிழாக் கோலம் ஒரு வித ஆர்வத்தை உண்டாக்குவதை தவிர்க்க முடியவில்லை.. சமீப காலமாக கோவையின் போக்குவரத்து என்பது பெரும் இம்சையாகிவிட்டது.. இப்போது ஒவ்வொரு சிக்னலிலும் 10 போலிசார் போக்குவரத்தை சரி செய்கிறார்கள். மக்கள் மிக ஒழுங்காக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கிறார்கள். இதற்கு மட்டுமே நகரில் பல ஆயிரம் காவலர்கள் பணியில் இருக்கிறார்கள்.. பாதுகாப்புக்கு சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.. டாஸ்மாக் மூடிவிட்டால் அதுவும் கூட தேவை இல்லை..

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

10000 போலிஸ்காரர்கள் பாதுக்காப்புக்கு மட்டுமே என்ற உங்க கண்டுபிடிப்பை தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுல செதுக்கி வச்சி அங்கனயே உட்கார்ந்துக்கோங்க.. பல சந்ததிகள் அதை படிச்சி பயனடைவாங்க..//

அதை முதல்வர் சார்ப்பு தொலைக்காட்சி ஊடகங்களுக்கு சொல்லுங்GO. அவிங்க தான் கோவை 10,000 காவலர்களால் கோவை மாநகரமே போலிஸ் வலையத்தில் இருக்குன்னு சொன்னாங்கே.

Kesavan சொன்னது…

//தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தமிழ் முன்னிலைப்படுத்தப்பட வில்லை (தமிழை வழக்கின் மொழியாகச் சொல்லி நடத்தும் போராட்டம் குறிப்பிடத் தக்கது)//

செம்மொழி அந்தஸ்தே வாங்கியாச்சு . அப்பறம் இதெல்லாம் என்ன ஜுஜுபி :)
தமிழ் மாநாடு நடத்தினால் ஆட்சி கவிழ்ந்து விடுமாம் . அதனால் செம்மொழி மாநாடு . ச்சே எல்லாருக்கும் லீவு கொடுக்கறாங்க . எங்களுக்கு கிடையாதா .

Kesavan சொன்னது…

//தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தமிழ் முன்னிலைப்படுத்தப்பட வில்லை (தமிழை வழக்கின் மொழியாகச் சொல்லி நடத்தும் போராட்டம் குறிப்பிடத் தக்கது)//

செம்மொழி அந்தஸ்தே வாங்கியாச்சு . அப்பறம் இதெல்லாம் என்ன ஜுஜுபி :)
தமிழ் மாநாடு நடத்தினால் ஆட்சி கவிழ்ந்து விடுமாம் . அதனால் செம்மொழி மாநாடு . ச்சே எல்லாருக்கும் லீவு கொடுக்கறாங்க . எங்களுக்கு கிடையாதா .

ராஜ நடராஜன் சொன்னது…

மாநாடும்,புலிகள் ஆதரவு அறிக்கையும் இரு வேறுபட்ட நிலைகளிலிருந்து ஒரே திசை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே!இருந்தாலும் பின்புல அரசியல் காய்நகர்த்தல்கள் பற்றி களத்தில் இருப்பவர்களுக்கே வெளிச்சம்.

அஹோரி சொன்னது…

"குஸ்காவுக்கு ஆள் புடிக்கிற அல்லகைகள் மாநாடு" இந்த தலைப்பு எப்படி இருக்கு ? கரி சோறு கிடைக்கும்னே ஒரு கூட்டம் கிளம்பி போயிருக்கு.வெட்கம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்