பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2010

மாநில மொழிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மைய அரசு !

"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை - என்ற தலைப்பில் தினமலர் வழக்கம் போல் தேசிய மற்றும் இந்தி ஆதரவு வாந்தியை எடுத்து இருக்கிறது. இந்த செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், இந்தியை புறக்கணித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறு செய்துவிட்டார்களோ என்று பொது புத்திவாசகர்களால் நினைக்கக் கூடும். மேற்கண்ட கட்டுரைக்கு வந்துள்ள 90 விழுக்காடு கருத்துகளும் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால் இதை நாம் வேறு கோணத்தில் பார்த்தால் அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவோம் என்று உறுதி கொடுத்து மொழிவாரி மாநிலங்களை இந்தியா என்ற பெயரில் இணைத்துக் கொண்ட மத்திய அரசில் அமர்ந்திருக்கும் இந்தி அபிமானிகளின் மோசடி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பல்வேறும் மொழி பேசும் மாநிலங்களில் இருந்து சென்று இராணுவத்தில் பணியாற்ற உடல் தகுதியும் கல்வித் தகுதியும் உள்ள ஒருவருக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக பதவிகள் மறுக்கப்படுகிறதாம். பெரும்பான்மையினர் மொழிகளே ஆளவேண்டும் என்கிற பாசிச எண்ணத்தின் வெளிப்படையாக இவ்வாற கருத்துகள் தேசப்பற்று என்ற பெயரில் பரப்பப்படுகின்றன.

உலகில் பெரும்பான்மையினர் பேசும் மொழிகளை அனைவரும் படிப்பது நல்லது என்ற கருத்து நிலவினால் அனைவரும் சீன மொழியான மாண்டரின் மொழியைத்தான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சீன மொழியைப் பேசுபவர் உலக மக்கள் தொகையில் 5 ல் ஒருவராக உள்ளனர்.

சீனப் பெரும்பான்மை உள்ள சிங்கப்பூரில் அனைவரும் சீனம் படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சில்லரை விற்பனை கடைகள் மற்றும் சீனர்களுடன் தொடர்புடைய விற்பனைகள் தவிர்த்து சீன மொழித் தகுதி ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பதை எந்த ஒரு நிருவனமும் இங்கு வழியுறுத்துவது இல்லை.

எத்தனையோ பழங்குடிகளும் அவர் தம் மொழியும் இருக்கும் நாட்டில் அவர்களுக்கெல்லாம் நாங்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது இன்றியமையாதது என்று ஒரு மைய அரசு அலுவலர் சொன்னால் அதில் இருப்பது நாட்டுப்பற்றா மொழிப்பற்றா ?

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று மும்பை வரை குரல்கள் ஒலித்தாலும் கேட்காத காதுகள் அவற்றை கண்டு கொள்ளாது என்பது அவ்வப்போது நிருபனம் செய்யப்படுகிறது.

இந்தி ஆட்சி மொழியில் இருக்கும் மாநிலங்களை விட பிற மாநிலங்களின் பொருளியலும் வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்தும் தொடர்ந்து இந்திப் பெருமை பேசி பரப்பும் மந்திகளுக்கு யாராலும் விளங்க வைக்க முடியாது. முடிந்த வரையில் அவ்வாறான பரப்புரையின் போது ஒரு சிலருக்காவது விழிப்புணர்வு ஊட்டலாம்.

இந்தி தெரிந்தால் தான் வேலை என்பதை ஒரு அரசு அலுவலரே, உயர் அலுவலரே தரவு அடிப்படையில் தெரிவிக்கும் போது அதனைக் கொண்டு பார்த்தால், மைய அரசின் இந்தி சார்புகள் பிற மாநில மொழிகளை (பிற மொழி பேசும் மக்களை புறக்கணிக்கும் சப்பைக் காரணம் !!!) புறக்கணிக்கும் இந்திய இறையாண்மைக்குக்கு எதிரான கயமைத் தனமாகும், இவைபற்றி மத்திய அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் அல்லது வேலை புறக்கணிக்கப்படும் தனி நபர்கள் ஏன் பொது நல வழக்கு தொடுக்கக் கூடாது ?

தொடர்புடைய பிற சுட்டிகள் :

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

3 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

எல்லாவிதங்களிலும் யோசித்துப் பார்த்து விட்டேன்.

ஹிந்தி என்பது இங்க திணிப்பாகத்தான் இருந்து வருகிறது.

குறிப்பாக வங்கி தபால் சேவையில் படிப்பறிவு இல்லாதவர்கள் அந்த விண்ணப்பங்களை வாங்கி எழுத முடியாதவர்கள் படும் அவஸ்த்தைகள் இதிலும் ஒரு புறம் ஹிந்தி மறுபுறம் ஆங்கிலம் சொல்லி மாளாது.

பணிபுரிபவர்கள் கூட தங்கள் பெயர்களை ஆங்கிலம் ஹிந்தியில் தான் எழுதி வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் சொன்னது போல் ஹிந்தி மாநில மக்கள் தான் இப்போது திருப்பூருக்கும் படை எடுத்து வருதல் அதிகமாகஇருக்கிறது.

பத்து வருடம் ஆனால் அதே ஹிந்தி
தமிழ் வெறுப்புணர்வு ரத்தத்தில் கலந்தது போல் அவர்களுடன் இருக்கிறது.

வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டுருக்கிறது.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இது பர்றி கலைஞர் விரைவில் பிரதமருக்கு கடிதம் எழுதுவார் .கவலை வேண்டாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது பர்றி கலைஞர் விரைவில் பிரதமருக்கு கடிதம் எழுதுவார் .கவலை வேண்டாம்//

கடிதம் கொண்டுபோக புறா இன்னும் சிக்கவில்லையா ?
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்