அன்பின் டிவி இராதாகிருஷ்ணன் ஐயா என்கிற சித்தப்பாவிற்கு,
பதிவில் சண்டை எப்பவும் நடப்பது தான், தனிமனித தாக்குதலில் அடிபட்டு மிதிபட்டு (சொம்பு) நசுங்கி விழிபிதுங்கிய என்னையும் சேர்த்து பலர் தொடர்ந்து எழுதிவருகிறோம். காரணம் எழுத்து அரிப்பு (மட்டுமே) இல்லை. சமூகம் மற்றும் அரசியல்களின் அவலங்களை மனதில் போட்டு அடக்கி வைத்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் அதை விமர்சனம் செய்து, கருத்தாக பகிர்கிறோம், இது தவிர்த்து சமூகம் சார்ந்த நல்ல எண்ணங்களை எழுதி பகிர்ந்து வருகிறோம். இதற்கு கூடுதல் பலனாக உங்களைப் போன்றோர்களின் நல்ல நட்பு கிடைக்கிறது.
எதோ இருவர் (தனிப்பட்டு அவர்கள் தம் ஈகோவால்) பிரச்சனைகள் செய்து கொண்டதை வைத்தும், பதிவில் சாதி, மத, தனிமனித மோதல்கள் போன்ற விரும்பத்தக்காத விமர்சனங்கள் வருவதால் எழுதுவதை நிறுத்துவதாக தங்கள் அறிவித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. எதோ ஒன்று அல்லது பல அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாம ஓட்டு போடுவதை நிறுத்துவது நம்முடைய ஓட்டு உரிமையை இழப்பது என்பதாகும், இதே போன்று தான் உங்கள் கருத்து குரல்வளைகளை எவர் பொருட்டும் அறுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை தொடர்ந்து வந்து படிக்கும் 200க்கும் மேற்பட்ட பதிவர்களும் உங்கள் முடிவில் ஒப்புதல் கொண்டிருக்கமாட்டார்கள்.
உங்கள் பதிவு உலகு விலகல் அறிவிப்புக்கு வந்த பின்னூட்டங்களைக் கருத்தில் கொண்டு எழுதுவதை துவங்குங்கள். நீங்கள் எழுத வந்ததால் தான் உங்களின் நட்பு அறிமுகம் ஆனது இல்லை என்றால் உங்கள் நட்பு கிடைத்திருக்காது. உங்களின் நட்பு மேலும் பலருக்கு அறிமுகம் ஆகவேண்டும். இவை பதிவில் தொடர்ந்து எழுதி இயங்கினால் தான் ஏற்படும்.
பின்பற்றுபவர்கள்
7 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
14 கருத்துகள்:
பெரியவர் நிம்மதியா நாடகம் நடத்தட்டும், ஏன் அவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுவார் என்று நினைக்கிறேன்!!
அன்பின் டிவிஆர் - அருமை நண்பர் கோவியின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்க - நலமே விளையும் - நட்புடன் சீனா
டி.வி.ஆர் ஐயா மதிப்பிற்குரிய பதிவர்!
அவர் பதிவுலகில் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது எனது விருப்பமும்!
சமூகம் மற்றும் அரசியல்களின் அவலங்களை மனதில் போட்டு அடக்கி வைத்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் அதை விமர்சனம் செய்து, கருத்தாக பகிர்கிறோம்..........
இது தான் முற்றிலும் உண்மை.
வயதிலும் , அனுபவத்திலும் மூத்த டீ.வி.ஆர் அய்யா போன்றவர்கள் இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளால் எமக்கு வழிகாட்டுவதை நிறுத்திவிட்டது வருத்தமே....அவரைப் போன்றவர்கள் மீண்டும் எழுதவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்..
வழிமொழிகிறேன் ...
வழிமொழிகிறேன்......
கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன் ... வரிக்குவரி (நல்லா எழுதியிருக்கீங்க தெளிவா)..
டீவிஆர் சார்... எழுதுங்க :)
உங்களோடு இணைந்து நானும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாருங்கள் டி.வி.ஆர் அவர்களே..
//நீங்கள் எழுத வந்ததால் தான் உங்களின் நட்பு அறிமுகம் ஆனது இல்லை என்றால் உங்கள் நட்பு கிடைத்திருக்காது. உங்களின் நட்பு மேலும் பலருக்கு அறிமுகம் ஆகவேண்டும்.//
உண்மை. சீக்கிரம் வாங்க சார்.
உங்கள் கருத்து குரல்வளைகளை எவர்
பொருட்டும் அறுத்துக் கொள்ளாதீர்கள்.\\\\\
தடைப்பட்ட மூச்சு தடம் புரளக் கூடாது
சுவாசம் தொடரட்டும்....
திறந்த மனதின் ...
சிறந்த அழைப்பு
நன்று,நன்றி கோவி
அரசியல் தெரியவில்லை ஆனாலும் நானும் வழிமொழிகின்றேன்
நாட்டுல யாரும் நிம்மதியா இருந்தா உமக்கு பொருக்காதே.....
:))
கொஞ்சநாள் கழிச்சு அவரே வந்துடுவாரு...ஆடின காலும்..பாடின வாயும் போல...
கருத்துரையிடுக