பின்பற்றுபவர்கள்

9 ஜூன், 2010

கொஞ்சம் தமிழக அரசியல் !

கடந்த மே 2009, மைய அரசின் தேர்தலின் போது நடந்த இலங்கையின் இன அழிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக வாக்காளர்களின் முடிவெடுக்கும் நிலை மாறலாம் என்கிற நப்பாசை என் போன்ற பதிவர்களைப் போலவே மருத்துவர் இராமதாசுக்கும் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு அணி மாறினார். வழக்கம் போலவே ஆளும் தரப்புகளும் அவர்களுக்கு ஆதரவான செய்திகளும் இலங்கைத் துயரச் செய்திகள் எதுவும் மக்கள் காதில் விழா வண்ணம் செய்து தேர்தலிலும் வெற்றி கண்டன. ஒரு நாள் முதல்வர்களைப் போலவே ஈழத்தாயாக ஒருமாதம் மாறி இருந்த ஜெ, பிறகு இலங்கை நிலவரங்களை முற்றிலும் மறந்து நெடும் ஓய்வெடுக்கச் சென்றார். ஆப்பசைத்த குரங்காக தேர்தலில் படு அடி வாங்கிய மருத்துவர் இராமதாசும் பாமகவும் பிறகு எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் இருந்தாலும் ஜெவுடன் ஆன கூட்டணி நீண்ட காலப் பலன் தராது என்பதாக கோபாலபுரத்தில் அடைக்கலம் ஆனார்கள்.

எம்ஜிஆருக்கு பிறகான தமிழக அரசியலில் எந்த ஒரு திராவிடக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை என்பது கிடையாது, ஆனால் அப்படி இருப்பதாகத்தான் கட்சிகள் வெளியே சொல்லிக் கொள்கின்றன. இராஜிவ் மரணம் நிகழ்ந்திருக்காவிட்டால் தமிழக அரசியலில் கூட்டணி அரசுகள் மட்டுமே அமைந்திருக்கக் கூடிய அளவில் தான் கட்சிகள் கொள்கை அடிப்படையிலும் பலவீனமாக இருந்தன. அவையெல்லாம் நடந்த கதைகள் என்றாலும், அதன் தொடர்ச்சியாக பிற கட்சிகள் ஆதரவினால், தயவினால் ஆட்சி பெற்றவர் என்ற பெருமையும் பல்வேறு பெருமைகளின் கூடுதலாக கருணாநிதிக்கே சேருகிறது என்பதை கடந்த சட்டமன்ற தேர்தல்கள் உணர்த்துகிறது.

அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை திமுக உட்பட எந்த கட்சியும் இல்லை. திமுகவின் இலவசங்கள் ? இவையெல்லாம் இனி யார் வந்தாலும் எப்போதும் இன்னும் கூடுதலாகவே ஓட்டுக்காக செய்வார்கள் என்பது தான் மக்களின் நிலையும். மக்கள் மன நிலையைப் பொருத்த அளவில் அரசியல்வாதிகளைப் பற்றிய பெரியதொரு எண்ணம் எதுவும் கிடையாது. அரசியலுக்கு முற்றிலும் புதியதொரு பிரபலம் (ரஜினியை மனதில் வைத்து சொல்கிறேன்) என்பது தவிர்த்து அலைகள், தேர்தல் சுனாமி என்று எந்த ஒரு நிகழ்வையும் தமிழக மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது சூழலில் சட்டமன்ற தேர்தல் துவங்குகிறது.

கனிசமான ஓட்டுவங்கியை அல்லது வெற்றி தோல்வியை மயிரைழையில் முடிவு செய்யும் வாக்களர்கள் வங்கியை தேமுதிக வளர்த்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. சென்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் தலைகள் வெறும் 400 ஓட்டு வேறுபாட்டில் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் கட்சி ஓரளவு கனிசமான இடங்களைப் பிடிக்கும் என்கிற நிலை இருப்பதால், அதிமுக தேமுதிக கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக ஜூவி உள்ளிட்ட புலனாய்வு இதழ்களில் குறிப்பிடுகின்றனர்.

மருத்துவர் இராமதாசின் பாமக ? பாமகவின் தேர்தல்காலத் தன்மானங்கள் வெளிப்படையானதுதான் என்பதால் தேமுதிக இருக்கும் கட்சியில் சேருமா என்பதை நாம் விவாதத்திற்கே எடுத்துக் கொள்ள முடியாது. இவை திமுகவிற்கும் தெரியாத ஒன்று அல்ல, எனவே இந்த முறையும் பாமக சென்ற முறையைப் போல் 20க்கும் மேற்பட்ட இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். தேமுதிகவிற்கு 35 இடங்கள் வரை அதிமுகவில் ஒதுக்குவதாக செய்திகளில் படித்தேன். அதே அளவுக்கு மருத்துவரும் கேட்பார், அதனைத் தர திமுகவும், அதிமுகவும் தயங்காத நிலை இருக்கிறது. காரணம் பொன்னாகரத் தேர்த்தலில் இரண்டாவது இடம் கிடைத்ததை தன் தேர்தல் பலமாக.....பலமாக பாமக தரப்புகள் சொல்லிவருகின்றன.

ஒருவேளை பாமக அதிமுக-தேமுதிக கூட்டணி பக்கம் சாய்ந்தால் அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு வெற்றிவாய்புகள் அதிகம் ஆகும், இல்லை என்றால் அதிமுக ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கடினம், அந்த நிலையில் தேர்த்தல் முடிவுகள் கடந்த தேர்தல் முடிவைப் போலவே தொடரும் என்றேநினைக்கிறேன். பாமகவை அதிமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று தான் சோ இராமசாமி ஜெவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறாராம்.

13 கருத்துகள்:

ttpian சொன்னது…

உதிர்ந்த ரோமம்

வால்பையன் சொன்னது…

தே.மு.தி.க கூட்டணி வச்சுக்கும்னு எதிர்பார்க்குறிங்களா!?

இந்த தடவையும் நாட்டில் பணநாயக ஆட்சி தான் தலைவா!?

சந்தர்பவாத கட்சிகளை விட தி.மு.க எவ்வளவோ பரவாயில்லை என்பேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

தே.மு.தி.க கூட்டணி வச்சுக்கும்னு எதிர்பார்க்குறிங்களா!?

இந்த தடவையும் நாட்டில் பணநாயக ஆட்சி தான் தலைவா!?

சந்தர்பவாத கட்சிகளை விட தி.மு.க எவ்வளவோ பரவாயில்லை என்பேன்!//

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லதுன்னு நான் தீர்ப்பு சொல்லவில்லை.
:)

நிலவரம் சொன்னேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ttpian said...

உதிர்ந்த ரோமம்//

சவுரி(யமான) முடி !
:)

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

அண்ணா,
//பாமகவின் தேர்தல்காலத் தன்மானங்கள் //

புதுமையான பிரயோகம்.. Congrats!

டி.பி.ஆர் சொன்னது…

தமிழக அரசியலைப் பொருத்தவரை ஆளுங்கட்சியை மக்கள் ஆதரித்து தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று மக்கள் உள்ளனர் என்றால் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் இந்த சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். குறிப்பாக சென்னைக்கு வெளியில் நீண்டகாலமாக மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் மின் தடை அல்லது மின் பற்றாக்குறை தேர்தல் முடிவுகளை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறலாம். மற்றபடி பாமக திமுகவில் இணைவதால் திமுகவுக்கு பாதிப்பும் இல்லை லாபமும் இல்லை. தேமுதிக அஇஅதிமுகவுடன் இணைந்தால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது. ஈகோவின் உச்சியில் அமர்ந்திருக்கும் இரு தலைவர்களும் தேர்தலில் வெற்றிபெறும் சூழலில் எப்படியெல்லாம் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்பதை ஒருகணம் நினைத்துப்பாருங்கள்!

மணிகண்டன் சொன்னது…

மணற்கேணி சம்பந்தமா பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஒன்னுமே வரல உங்க பதிவுல.

சாமுவேல் | Samuel சொன்னது…

அழகிரி vs ஸ்டாலின் ..தி.மு.க வின் அடுத்த முதல் அமைச்சர் நியமனம்....இதெல்லாம் தேர்தல் முன்னதாகவே கட்சியை பலவீன படுத்தலாம்......ஏன் கட்சி உடையும் நிலை கூட வரலாம்....

அரசியல் வாரிசுகள்..ராஜ் தாக்கேரே, உதவ தாகேரே....மாதிரி தான் அழகிரி, ஸ்டாலின் ..என்னுடைய கணிப்பு.

SanjaiGandhi™ சொன்னது…

//தன் தேர்தல் பலமாக.....பலமாக பாமக தரப்புகள் சொல்லிவருகின்றன.//

அடடே.. சிலேடையில் கோவியார் பின்னி பெடலெடுக்கிறாரே..

2011ல் பாமக அல்லது தேமுதிக ஆட்சி கிடையாதா? :(

ஜோதிஜி சொன்னது…

விஜயகாந்த்தை அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் தொடக்கம் முதல் தனிப்பட்ட முறையில், ஊருக்கு வந்த போது நெருங்கிய முறையில் பார்த்துக்கொண்டு வருகின்றேன். எத்தனையோ குறைகள் என்றாலும் மற்றவர்களை விட இன்று வரையிலும் பாராட்ட நிறைய விசயங்கள் இருக்கிறது. அந்த நம்பிக்கை இன்று வரைக்கும் இருக்கிறது.


அய்யாவின், மகனின் கொளுகைகள் இப்போது ஊரு முழுக்க நாறிப்போனதால் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் டர்ன்னு மிரட்டல் அஸ்திரம் எடுபடாமல் போய்விட்டது. உள்ளதும் பேச்சே நொள்ளக்கண்ணா?

செம்மொழி தலைமகன் இப்போது மற்றொரு வேலை செய்து கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். திமுக வுக்கு எதிராக உருவாக்கும் வாக்குகளை உடைக்க பாரி வேந்தர் (பச்சைமுத்து) போன்றவர்களை மறைமுகமாக இப்போது வளர்த்துக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள். நம்ப முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. திருச்சியில் கூடிய கூட்டம் திகைக்க வைத்தது. பேச்சும் கண்ணியமாக இருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் வரைக்கும் பெண்மணி எடுக்கும் கண்மணி முடிவுகள் எதிர்காலம்?????? இல்லாவிட்டால் இருண்ட காலம்?????

நிரந்தரமாய்.......

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...

தமிழக அரசியலைப் பொருத்தவரை ஆளுங்கட்சியை மக்கள் ஆதரித்து தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று மக்கள் உள்ளனர் என்றால் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் இந்த சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். குறிப்பாக சென்னைக்கு வெளியில் நீண்டகாலமாக மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் மின் தடை அல்லது மின் பற்றாக்குறை தேர்தல் முடிவுகளை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறலாம். மற்றபடி பாமக திமுகவில் இணைவதால் திமுகவுக்கு பாதிப்பும் இல்லை லாபமும் இல்லை. தேமுதிக அஇஅதிமுகவுடன் இணைந்தால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது. ஈகோவின் உச்சியில் அமர்ந்திருக்கும் இரு தலைவர்களும் தேர்தலில் வெற்றிபெறும் சூழலில் எப்படியெல்லாம் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்பதை ஒருகணம் நினைத்துப்பாருங்கள்!//

:)

திமுக அனுதாபிகள், கருணாநிதியை ஆதரிக்கவில்லை என்றால் அந்த அம்மா வந்திடும் என்பது போல் அலறுகிறார்கள் அல்லது புரிந்து வைத்திருக்கிறார்கள். கொள்ளையென்று ஆனபிறகு கருணாநிதி அடித்தால் என்ன ஜெ அடித்தால் என்ன ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...

மணற்கேணி சம்பந்தமா பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஒன்னுமே வரல உங்க பதிவுல.//

வெற்றியாளர்கள் சிறப்பாக எழுதி வருகின்றனர். தருமி ஐயா பதிவையும், மருத்துவர் தேவன் மாயம் பதிவையும் பார்க்கவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்லா எழுதி இருக்கிய கோவியாரே!
நடு நிலமையோட...!

:)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்