பின்பற்றுபவர்கள்

26 ஜூன், 2010

சந்துல "சிந்து" !

ஒரு இனத்தை அழிப்பெதென்பது இனத்தின் தொண்மைகளை அழித்துவிட முயற்சிப்பது, பிறகு அந்த இனத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டால் அந்த இனத்தையே அழித்துவிடலாம், அமெரிக்காவில் வேட்டையாடி கொல்லப்பட்ட செவ்விந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளை வெள்ளை இன ஐரோப்பியர்கள் அழித்துவிட்டு அவ்விடங்களை தங்கள் ஆளுமைக்குக் கொண்டு வந்தார்கள். இருந்தாலும் வரலாறுகள் மண்ணில் மறைத்துவிட்டால் மறையாது துளிர்த்தெழும் விதைகளைக் கொண்டிருக்கிறது என்பதை இன ஒழிப்பாளர்கள் மறந்துவிடலாகாது என்பது போல் இன ஒழிப்பின் கதைகள் நூற்றாண்டுகள் கடந்து விழிப்படைகிறது. வரலாறுகளை திரிப்பதும் மாற்றி எழுதுவதும் தற்காலிகமேயன்றி அவை உறுதியான ஒன்று அல்ல. கட்டுமானங்கள் அனைத்துமே விரிசல் ஏற்பட்டு என்றோ ஒரு நாள் உதிரும் என்பது விதி.

பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்களையும், அரிய நூல்களைக் கொண்ட மாபெரும் களஞ்சியமாக திகழ்ந்திருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை தமிழர்கள் குறிப்பாக இலங்கை வாழ்தமிழர்கள் மறக்க் கூடியதே அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் நூலகம் இலங்கையில் தமிழர்களின் ஆயிரம் ஆண்டு வேர்களை தாங்கி நின்று கொண்டிருந்தது, அதை அழிப்பதன் முலம் இலங்கையில் தமிழர்கள் நூற்றாண்டுக்கு முன்பு பிழைப்புக்காக வந்த மலையகத் தமிழர்களாக வரலாறுகளில் காட்டிவிடலாம் என்று முனைந்தே அந்த யாழ்நூலகத்தை எரித்து மகிழ்ந்தனர் சிங்களர்கள். தற்போது எரிப்பு குறித்த மன்னிப்புகளை இலங்கை அமைச்சர் ஒருவர் கேட்டு இருக்கிறார். மன்னிப்புகள் மனக்காயங்களை அகற்றிவிடாது என்பது தெரிந்தவை தான் என்றாலும் குற்றங்களை ஒப்புக்கொள்வதை வரலாறுகள் பதிந்து கொள்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழர்களின் தொண்மைகளை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதை கடல்கோள்களுக்கே புரிய வைத்து வாழ்கிறது தமிழ். செம்மொழிகள் என்று அடையாளம் கூறப்பட்டவை எதுவுமே வாழும் மொழியாக இல்லாத காலகட்டத்தில் வாழும் மொழியாக குன்றா இளமையுடன் திகழும் தமிழை ஒரே யாழ் நூலகம் மட்டும் தாங்கி இருந்ததாக நினைத்த சிங்களர்களின் சிறுமதியை எள்ளி நகையாடும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.

செம்மொழி மாநாடும், அதை நடத்துபவர்களின் தன்னலமும் கேள்விக்கும் கேலிக்கும் உரியது என்பதாக எதிர்ப்புகளை பல்வேறு தரப்பினரும் பதிய வைத்திருக்கின்றனர். செம்மொழி மாநாடு இச்சூழலில் தேவையற்றது என்பதை மறுப்பதற்கே இல்லை. இருந்த போதினும் செம்மொழி மாநாட்டு சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் மற்றும் அதன் பின்னனி சின்னங்களில் மிக அழகாக தமிழர் தொண்மங்கள் பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. கடல்கோள்களால் கொள்ளப்பட்ட தமிழகத்தை உணர்த்தும் வண்ணம் கடற்கோள் அலைகளின் பின்னனியில் எழுச்சி சின்னமாக திருவள்ளுவர் சிலை, காலம் கடந்து தமிழ் வாழ்ந்து வருவதை உணர்த்துவதாகவும், சிந்து சமவெளி சின்னங்கள் சுற்றிலும் அமைத்து தமிழ் மொழி உலக நாகரிங்களுக்கு முற்பட்டவை அல்லது நாகரிகங்களின் துவக்கம் என்பதாக சிந்து சமவெளி எழுத்துகள் மற்றும் சின்னங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதே ஆகும்.

சிந்து சமவெளிக்கு தமிழர்கள் உரிமை கொண்டாடலாமா ? என்னும் கேள்வியை புறந்தள்ளும் வண்ணம் அண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தமிழர் தொண்மங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை ஒட்டியது மட்டுமின்றி சிந்துவெளியில் கிடைத்த அதே எழுத்துருக்கள் கிடைத்தது அனைவரையும் வியப்ப அடைய வைத்ததுடன் சிந்துசமவெளி நாகரிகம் முன்னாள் திராவிடநாகரீகம் என்பதை தெளிவுபடுத்தாவிட்டாலும் இரண்டிற்குமிடையேயான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டு தமிழர் நிலம் தமிழ்நாடு சிந்துவெளி காலத்தை ஒட்டிய வரலாற்று சிறப்பு மிக்கது என்பதுடன் சிந்துவெளி வரை பரவியிருந்தது என்பதை ஏற்கும் வண்ணம் அமைந்தது.

சிந்துசமவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவரின் மிகவும் அறியப்பட்டவர்கள் இருவர், அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் இருவருமே கிட்டதட்ட சிந்து சமவெளி நாகரிகம் திராவிடச் சார்புடைய நாகரிகம் அல்லது திராவிட நாகரீகம் என்பதை நம்புவர்கள், சிந்துசமவெளியை அழித்தது ஆரிய படையெடுப்பா என்பதில் தான் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள். ஆதிச்ச நல்லூர் தொல்பொருள்களுக்கு பிறகு சிந்துவெளி நாகரீகம் என்பது திராவிட நாகரீகமே என்பதில் உறுதியாக நிற்கின்றனர். இவர்கள் இருவரையும் உயர்வுபடுத்தும் வண்ணம் இருவருக்கும் செம்மொழி மாநாட்டில் விருதுகள் வழங்கப்பட்டது. சிந்துசமவெளி ஆராய்ச்சியில் வாழ்நாளை அற்பணித்த இருவரும் செம்மொழி மாநாட்டுச் சின்னத்தில் சிந்துவெளி சின்னம் இருப்பதைப் பற்றி எந்த ஒரு எதிர்கருத்தும் கூறவில்லை. மாறாக அவர்களின் ஒப்புதலில் தான் சின்னமே உருவாகப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழின் தொண்மை என்பவை தொல்காப்பியத்தை ஒட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை தாண்டி, சிந்துவெளி ஆராய்ச்சிகளின் முடிவில் ஐந்தாயிரம் ஆண்டுகளைக் கடந்து எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதை மாநாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இவ்விரு ஆராய்சியாளர்களும் மிக முதன்மையான பங்காற்றி இருக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் தமிழர்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்.

******

இவையெல்லாம் அறிந்தே தாமும் தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், சிந்துவெளி சின்னம் மாநாட்டின் சின்னத்தில் செதுக்கி இருப்பதை மறைமுகமாக கண்டனம் செய்வதுடன், அவ்விரு ஆராய்ச்சியாளர்கள் மீதும் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள், அதற்குகாரணமாக அவர்கள் கூறும் சப்பைக்காரணம் தமிழின் தொண்மையும் தொடர்ச்சியும் ஆரிய நாகரிகம் எனப்படும் வேத நாகரிகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவையாம் அதற்கு ஆதாரமாக குறுந்தொகைப் பாடலைக் கூறி இமயமும் தென்குமரியும் பற்றி பாடல்களில் வருகிறது அதையெல்லாம் மாநாட்டில் புறக்கணித்துள்ளார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்

சிந்துவெளி தற்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது, அதுவரை சென்றுவிட்ட அடையாளத்தை இமயம் வரை மட்டுமே குறுக்கி இருந்திருந்தால் போதும் என்பதாகவும் அவை மறைகப்பட்டதாகவும் ஓலம் இடுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் ஒரு பார்பனர், நேர்மையாளர், சிந்துசமவெளி நாகரிகம் ஆரியத்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்ட காளை சின்னத்தை குதிரையாக காட்டச் சொன்ன வட ஆரியர்களின் கோரிக்கைகளை புறம் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் சிந்துவெளியில் குதிரைகள் கிடையாது. ஆரியர்களின் படையெடுப்புகளுக்கு பிறகே குதிரைகள் இந்தியாவிற்குள் வந்தன.

தமிழ் இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வட ஆரியர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி இருப்பதுடன் தமிழின் தொண்மை போற்றும் சிந்துசமவெளி நாகரிகம் பற்றி தவறான தகவல்களை தொடர்ந்து எழுதிவருவதுடன், இன்று மாநாட்டில் அச்சின்னத்தை அமைத்திருப்பதையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழுக்கு எதிரிகள் தரணியில் இல்லை, அவன் தமிழருள் ஒருவனாகவே இருக்கிறான்.

26 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பலவும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

கும்மி சொன்னது…

ரீடிப் (Rediff) தளத்திலும் நடைபெற்றுள்ள இதே போன்ற வரலாற்றுத் திரிபை, பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் இந்தப் பதிவிலும் பார்க்கலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல பதிவு கோவியாரே!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரியா சொல்லியிருக்கீங்க கோவி சார், கிட்டத்தட்ட இதே மாதிரி கருத்துடன் நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். சுட்டிக்காட்டிய கும்மி அவர்களுக்கு நன்றி!

Jey சொன்னது…

அண்ணே, கட்டுரையை மிக நுட்பமாக எழுதி இருக்கிறீர்கள்.

வரலாற்றுப் பதிவுகள் என்பது, எதிர்கால சமுதாயத்திற்கு நாம் விட்டுச் செல்லும், உண்மையான அழிவில்லாத சொத்து, இதில் தன் நலத்துக்காகவோ, தன்னை சார்ந்த சமூகத்தின் நலத்துக்காகவோ உண்மயை திரித்து பதிவு செய்ய நினபவன்(ர்கள்), இந்த(எதிர்கால) சமுதாயத்தின் துரோகிகள்.

Jey சொன்னது…

நம்ம பன்னிகுட்டி கூட அவர் பதிவில் குமிறியிருக்கிறார்.

Jey சொன்னது…

0 comments இருந்தது, சரி இன்னிக்காவது ஒரு உருப்படியான பதிவில், மெ த 1 நு சொல்லிக்கலாம்னு நினைச்சா, நான் தடவி தடவி டைப் கிலிக் பன்னிட்டு பர்த்தா அதுக்குள்ள 4 கமெண்ட்ஸ் போட்ருக்காங்க, அடச்சே போங்கப்பா, கோவமா போறேன்.

பிரியமுடன் பிரபு சொன்னது…

ம்ம் கொஞ்சம் புரியுது
இன்னும் விளக்கமா போடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//தமிழுக்கு எதிரிகள் தரணியில் இல்லை, அவன் தமிழருள் ஒருவனாகவே இருக்கிறான்.//

நூற்றுக்கு நூறு உண்மை!

கதியால் சொன்னது…

ம்ம்ம் நன்றாக உள்ளது...நிறைய அறிந்தேன், கடைசில செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு போல நீங்களும் ”சந்தில சிந்து” பாடிவிட்டியளே....!!(லொள்ளு)

Thekkikattan|தெகா சொன்னது…

அவசியமான பதிவு! இன்னும் விரிவாக எழுதலாமே... இன்னும் அகழ்வாராய்ச்சிக்கென நிதி ஒதுக்கப்பட்டு அரசியல் கலக்காமல் இந்திய நாகரீகங்கள் அறியப்பட்டு கொள்வது அந்தத் துறை சிறக்க மிகவும் பயனுள்ளதாக அமையும் - செய்வோமா? அரசியல் விலக்கி...

DrPKandaswamyPhD சொன்னது…

ஒரு குறிப்பு: இந்த மாநாட்டில் ஒரு பார்ப்பனரையும் பார்க்க முடியவில்லை.

Karthick Chidambaram சொன்னது…

இது மிகவும் அருமையான பதிவு. நிறைய இது தொடர்பாக எழுதுங்கள். தமிழர்கள்தான் அமெரிக்காவின் பூர்விக மனிதர்கள் என்று கூட ஆய்வுகள் வந்து உள்ளன.
அனகோண்ட தமிழ் சொல் என்று எந்த தமிழனுக்கும் தெரிவதில்லை.
மாயன் என்பவர்கள் ஒரு காலத்தில் தொழில் சிறந்த விழங்கிய ஈழதமிழர்கள் என்றும் நம்பபடுகிறது.
மலையூர் என்பதின் பெயரே மலேசியா என்று ஆனது என்று சொல்லபடுகிறது.
ஆஸ்திரேலியா குமரி கண்டத்தின் எச்சங்களில் ஒன்று சிலர் நம்புகின்றனர். தமிழன் நிறைய வரலாறு தெரியாதவன்.
நானும் இது தொடர்பாக பதிவு எழுதவுள்ளேன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு

ராஜ நடராஜன் சொன்னது…

ஆழ் கருத்துக்களை அழகாக சொல்லும் போது எது என்ன சந்து,பொந்து கோவியாரே:)

கீழே பின்னூட்டத்துக்கு வந்தா ஒருவர் சந்துல சிந்துக்கு பொழிப்புரை தருவதால் தலைப்பு பொருந்துகிறதோ:)

கோவை அரன் சொன்னது…

கை விடப்பட்ட ஆதிச்சநல்லூர் - ஜெ

http://www.jeyamohan.in/?p=2143

http://www.jeyamohan.in/?p=2184

தமிழ் வெங்கட் சொன்னது…

அருமையான நுட்பமான பதிவு..2.3, முறை படித்தேன்..அப்போதுதான் பல கருத்துகள் விரிவாக புரிந்தன....

வலசு - வேலணை சொன்னது…

மிகப் பயனுள்ள தகவல்கள். பகிர்தலுக்கு நன்றி

-L-L-D-a-s-u சொன்னது…

See here
Japanese is influenced by Tamil

http://search.japantimes.co.jp/cgi-bin/fl20080706rp.html

Some Kadhu puhaichal here
http://news.rediff.com/interview/2010/jun/24/interview-no-proof-of-tamil-script-in-indus-civilization.htm

நல்லதந்தி சொன்னது…

அண்ணா, நீங்க ஒயரிங் பண்றமாதிரி எல்லாத்தையும் இழுத்துட்டு வந்து கனெக்ட் பண்றதா தோணுது.அந்த பதிவைப் படிக்கிறப்போ எனக்கு இந்த மாதிரி தோணலை!.

கோவி.கண்ணன் சொன்னது…

// நல்லதந்தி said...

அண்ணா, நீங்க ஒயரிங் பண்றமாதிரி எல்லாத்தையும் இழுத்துட்டு வந்து கனெக்ட் பண்றதா தோணுது.அந்த பதிவைப் படிக்கிறப்போ எனக்கு இந்த மாதிரி தோணலை!.//

உங்களக்கு தோணாதது வியப்பில்லை. இந்தியா இந்துநாடு, இந்துக்களுக்கே சொந்தம் என்று அவர்கள் எழுதினால் கூட சரியாகத் தானே சொல்கிறார்கள் என்று நினைக்கும் பெரும்தன்மைக்குச் சொந்தக்காரர் தாங்கள். உங்களுக்கு தோணாதது மீண்டும் வியப்பில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...

பலவும் புரிந்துக்கொள்ள முடிந்தது.//

நன்றி !

//கும்மி said...

ரீடிப் (Rediff) தளத்திலும் நடைபெற்றுள்ள இதே போன்ற வரலாற்றுத் திரிபை, பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் இந்தப் பதிவிலும் பார்க்கலாம்.
//

படித்துப்பார்த்தேன் எதிராளிகள் தமிழ் மீது கொல வெறியோட, வெறுப்போடு இருக்காங்கே. பின்னூட்டத்திற்கு நன்றி

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு கோவியாரே!
//

நன்றி வெளிச்சப் பதிவரே.

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியா சொல்லியிருக்கீங்க கோவி சார், கிட்டத்தட்ட இதே மாதிரி கருத்துடன் நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். சுட்டிக்காட்டிய கும்மி அவர்களுக்கு நன்றி!//

உங்கள் பதிவை படித்தேன், சிறப்பாக எழுதி இருந்தீர்கள், பாராட்டுகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Jey said...

அண்ணே, கட்டுரையை மிக நுட்பமாக எழுதி இருக்கிறீர்கள்.

வரலாற்றுப் பதிவுகள் என்பது, எதிர்கால சமுதாயத்திற்கு நாம் விட்டுச் செல்லும், உண்மையான அழிவில்லாத சொத்து, இதில் தன் நலத்துக்காகவோ, தன்னை சார்ந்த சமூகத்தின் நலத்துக்காகவோ உண்மயை திரித்து பதிவு செய்ய நினபவன்(ர்கள்), இந்த(எதிர்கால) சமுதாயத்தின் துரோகிகள்.
//

சரியான கருத்து. இன துரோகிகள் எருதின் முதுகின் மீது விழுந்த எச்சம் போல் சிலகாலம் கூடவே இருக்கத்தான் செய்கிறார்கள்.

//Jey said...

நம்ம பன்னிகுட்டி கூட அவர் பதிவில் குமிறியிருக்கிறார்.//

அவரும் கலக்கி இருக்கார்.

//Jey said...

0 comments இருந்தது, சரி இன்னிக்காவது ஒரு உருப்படியான பதிவில், மெ த 1 நு சொல்லிக்கலாம்னு நினைச்சா, நான் தடவி தடவி டைப் கிலிக் பன்னிட்டு பர்த்தா அதுக்குள்ள 4 கமெண்ட்ஸ் போட்ருக்காங்க, அடச்சே போங்கப்பா, கோவமா போறேன்.//

:)

பதிவில் மட்டுறுத்தல் இருப்பதால் பின்னூட்டங்கள் உடனே வெளி இட இயலவில்லை. மட்டுறுத்தல் இல்லை என்றால் நீங்கள் மீ த பர்ஸ்ட் போட்டிருக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரியமுடன் பிரபு said...

ம்ம் கொஞ்சம் புரியுது
இன்னும் விளக்கமா போடுங்க//

வாசிங்க் பவுடர் ஸ்பான்சர் செய்யுங்க. நல்லா விளக்குவோம் :)

ஜோக்கு

நன்றி பிரபு.

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//தமிழுக்கு எதிரிகள் தரணியில் இல்லை, அவன் தமிழருள் ஒருவனாகவே இருக்கிறான்.//

நூற்றுக்கு நூறு உண்மை!//

மீண்டும் பின்னூட்டியதற்கு நன்றி


//கதியால் said...

ம்ம்ம் நன்றாக உள்ளது...நிறைய அறிந்தேன், கடைசில செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு போல நீங்களும் ”சந்தில சிந்து” பாடிவிட்டியளே....!!(லொள்ளு)//

நோ நோ இந்த இடுகை மாநாட்டு சின்னம் பற்றி மட்டும் தான் பேசுகிறது. மாநாட்டைப் பற்றி அல்ல. ஏற்கனவே டிஸ்கி போட்டே பதிவை எழுதி இருக்கோம்ல.


//Thekkikattan|தெகா said...

அவசியமான பதிவு! இன்னும் விரிவாக எழுதலாமே... இன்னும் அகழ்வாராய்ச்சிக்கென நிதி ஒதுக்கப்பட்டு அரசியல் கலக்காமல் இந்திய நாகரீகங்கள் அறியப்பட்டு கொள்வது அந்தத் துறை சிறக்க மிகவும் பயனுள்ளதாக அமையும் - செய்வோமா? அரசியல் விலக்கி...//

நன்றி தெக. தமிழன் நாகரீகம் என்றால் பிரித்தாளுவதாம், அதுவே ஆரிய நாகரீகம் என்றால் இந்தியர்கள் என்று பெருமைபடனுமாம், இவர்களின் தேசியவியாதி பக்கவாதமாக இருக்கிறது நமக்கு வியப்பு இல்லையே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//DrPKandaswamyPhD said...

ஒரு குறிப்பு: இந்த மாநாட்டில் ஒரு பார்ப்பனரையும் பார்க்க முடியவில்லை.//

என்ன அப்படி சொல்லிட்டிங்க, அறிவாலயம், சாமி, மாமிகள் என்றெல்லாம் மாநாட்டில் கருணாநிதிக்கு லாலி பாடிய வாலி பார்பனர் இல்லையா ?
:)//Karthick Chidambaram said...

இது மிகவும் அருமையான பதிவு. நிறைய இது தொடர்பாக எழுதுங்கள். தமிழர்கள்தான் அமெரிக்காவின் பூர்விக மனிதர்கள் என்று கூட ஆய்வுகள் வந்து உள்ளன.
அனகோண்ட தமிழ் சொல் என்று எந்த தமிழனுக்கும் தெரிவதில்லை.
மாயன் என்பவர்கள் ஒரு காலத்தில் தொழில் சிறந்த விழங்கிய ஈழதமிழர்கள் என்றும் நம்பபடுகிறது.
மலையூர் என்பதின் பெயரே மலேசியா என்று ஆனது என்று சொல்லபடுகிறது.
ஆஸ்திரேலியா குமரி கண்டத்தின் எச்சங்களில் ஒன்று சிலர் நம்புகின்றனர். தமிழன் நிறைய வரலாறு தெரியாதவன்.
நானும் இது தொடர்பாக பதிவு எழுதவுள்ளேன்.//

தமிழ்சார்ந்த கட்டுரைகள் எழுதப்போவதாகச் சொல்வதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தரவுகள் அடிப்படையில் எழுதினால் தமிழ் விக்கிப்பீடியாவிலும் இணைத்துக் கொள்ளலாம்

//T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு//

நன்றிங்க ஐயா.


//ராஜ நடராஜன் said...

ஆழ் கருத்துக்களை அழகாக சொல்லும் போது எது என்ன சந்து,பொந்து கோவியாரே:)
//

எதுகை மோனைக்கு சொல்லவில்லை என்றாலும் சிந்துவெளிபற்றிய குறிச் சொல்லாக அதைப் பயன்படுத்தினேன் :)

நன்றிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை அரன் said...

கை விடப்பட்ட ஆதிச்சநல்லூர் - ஜெ

http://www.jeyamohan.in/?p=2143

http://www.jeyamohan.in/?p=2184
//

ஜெமோ கட்டுரையை இன்னும் படிக்கவில்லை, இணைப்புக்கு நன்றி.

//தமிழ் வெங்கட் said...

அருமையான நுட்பமான பதிவு..2.3, முறை படித்தேன்..அப்போதுதான் பல கருத்துகள் விரிவாக புரிந்தன....//

தெளிவாக இல்லையா ? தமிழ் தொடர்பான ஆயிரம் ஆண்டுகள் தரவுகளை எதிரிகள் அழித்தால் தமிழ் ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிற தகவல் கிடைக்கிறது, இது எதிரிகளுக்கு புரியவில்லை என்பது தான் பதிவின் சாரம்.

பாராட்டுக்கு நன்றி.

// வலசு - வேலணை said...

மிகப் பயனுள்ள தகவல்கள். பகிர்தலுக்கு நன்றி
//

நன்றி வலசு

// -L-L-D-a-s-u said...

See here
Japanese is influenced by Tamil

http://search.japantimes.co.jp/cgi-bin/fl20080706rp.html//

சில ஆண்டுகளுக்கு முன்பு அதைப் படித்து இருக்கிறேன். இலக்கண அமைப்பு சொற்கள் ஆகியவற்றில் சில ஒற்றுமைகள் உண்டு என்பதாக படித்த நினைவு

// Some Kadhu puhaichal here
http://news.rediff.com/interview/2010/jun/24/interview-no-proof-of-tamil-script-in-indus-civilization.htm///

தேசியவியாதிகளின் பக்கவாதம் அது நாம என்ன செய்ய முடியும். :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்