கேடயங்களாக இருக்கத்தான் இயலவில்லை,
காயங்களை ஆற்றவும் மனமுமில்லை,
காயங்கள் தானே ஆறுவதற்குள் பொறுமையுமில்லை,
ஊர்வலத்தின் முன்பே தெரியும்
ஊர் அவலக்காட்சிகள்
மறைக்க மனத்திரை ஒன்றை
மாநாட்டில் தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை...
இன்றைய இனியவை நாற்பதின்
மயிலாடும் முகத்தின் மறைவில்
நேற்றைய மறக்க முடியாத
காட்சிகளாக தொடர்காட்சிகளாக.........இன்னா நானுறு !

9 கருத்துகள்:
Good one
NO COMMENTS
????????????
யோசிக்க வைக்கும் உண்மை...
/ துளசி கோபால் said...
????????????//
குறிப்பிட்டப் படம் லிங்கி இருந்தது, ஆனால் அந்த இணைய தளம் படத்தை மாற்றிவிட்டதால் வேற படம் வந்திருந்திருக்கலாம். இப்ப படத்தையும் சேர்த்து போட்டு இருக்கிறேன்
இத்தகைய வாதங்கள் சரியா என்பது தெரியவில்லை. ஏதோ இலங்கையில் நடந்த அனைத்து அக்கிரமங்களுக்கு முக தான் காரணம் என்பதுபோல. ஜெயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். உங்களைப் போன்றவர்களும் இதையே சொன்னால் எப்படி? இப்படி சொல்வதற்கென்றே தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கின்றனரே!
//டி.பி.ஆர் said...
இத்தகைய வாதங்கள் சரியா என்பது தெரியவில்லை. ஏதோ இலங்கையில் நடந்த அனைத்து அக்கிரமங்களுக்கு முக தான் காரணம் என்பதுபோல. ஜெயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். உங்களைப் போன்றவர்களும் இதையே சொன்னால் எப்படி? இப்படி சொல்வதற்கென்றே தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கின்றனரே!//
தமிழ், தமிழினம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளரும் மு.க தான் ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. செயல்படக் கூடிய இடத்திலிருந்தும் கள்ள மவுனம் கடுப்படைய வைத்திருக்கிறது, முக 60 களில் போட்ட நாடகங்களை மூன்று மணி நேரக் காட்சியாக கடற்கரையில் உண்ணாவிரதம் என்பதாக வசனம் எதுவுமின்றி போட்ட போதே,இவருக்கும் ஜெவுக்கு பெரிய வேறுபாடு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எதிரிகளை விட துரோகிகளைத்தான் எந்த இனமும் மன்னிக்காது
//ஆட்சிக்கட்டிலில்...//
ஹஹ்ஹாஹஹ்ஹாஹா
தூங்கிட்டார்:-)))))))))
பழைய சோறு போட்டு வெங்காயம் குடுத்தாலே மூச்ச கட்டி கிட்டு பாராட்டு வானுங்க. குஸ்காலாம் போடுறாங்களாம் , ஓவ்வோருத்தன் காதுலயும் ரத்தம் தான்.
கருத்துரையிடுக