பின்பற்றுபவர்கள்

10 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !

தமிழ்மொழி மாநாடுகள் நெடிய வரலாறுகள் கொண்டது, அதன் துவக்கம் சங்காலத்திற்கு முன்பே துவங்கினாலும் சங்காலங்கள் வரலாற்றில் பதியப்பட்டவை. முதல் சங்க காலம் என்பவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவை.

இதோ இன்று இவரால் தான் தமிழ் பெருமைப் படப் போகிறது என்பது போன்ற தடபுடலான ஆடம்பரங்களுடன், வரலாறுகளை எழுதிக்கொள்ளும் நிகழ்வாக கோவையில் செம்மொழி மாநாடு துவங்குகிறதாம். தமிழ்மொழி என்பது நிலம் சார்ந்த மொழி என்பது தாண்டி நாடுகளைக் கடந்து அம்மொழி பேசும் மக்கள் வாழும் நிலையில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளை நிலப்பரப்புக்குள் அடக்கிவிடும் நிகழ்வுகள் என்னாளும் தமிழ் வளர்ச்சிக்கு பயன் தராது.

தமிழ் புத்தாண்டு துவக்கம் தை 1 ஆக மாற்றியதில் என் போன்ற பலருக்கு உடன்பாடு என்றாலும் கூட பிற நாடுகளில் வசிக்கும் தமிழர் அமைப்புகளிடம் இதுபற்றிய அளவளாவல்களைப் பெற்றபிறகாவது அறிவித்திருக்கலாம். பெரியண்ணன் வழிகாட்டி என்பது போல் ஓர் இரவில் இதுபற்றிய முடிவை அறிவித்து தமிழ் புத்தாண்டு நாளை மாற்றியது தமிழக அரசு, அதன் தொடர்ச்சியாக இவை இராண்டுகளுக்கு மேலாக பல்வேறு தரப்பினராலும் வெளிநாடு வாழும், புலம் பெயர்ந்த தமிழர்களாலும், பிற நாட்டுத் தமிழர்களாலும் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சிங்கையில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு என்பதாகத் தான் கொண்டாடிவருகிறார்கள், ஒருவேளை சிங்கைத் தமிழ் அமைப்புகளிடம் இதுபற்றிய பரிந்துரைகள் கேட்டு இருந்தால் தமிழ் புத்தாண்டு தேதிமாற்றம் முழுதாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலையோ அல்லது புரிந்து கொள்ளக் கூடிய நிலையோ ஏற்பட்டிருக்கும்.

தமிழுக்கு செம்மொழி தகுதி என்னவோ ஒரே இரவில் காசு கொடுத்து வாங்கியதைப் போன்று அண்டைமாநில மொழிகள் எந்த வித போராட்டங்களும் நடத்தாமல் தமிழுக்கு கொடுத்தீர்களே என்பது போல் கேட்டுப் பெற்றுக் கொண்ட சூழலில் செம்மொழியின் சிறப்புகள் என்பது தமிழுக்கான தனிச்சிறப்புகள் மட்டுமே இல்லை என்பது போன்ற தவறான புரிதல்களை ஏற்படுத்திவிட்டார்கள். தமிழுக்கான செம்மொழி தகுதி பெரும் கோரிக்கைகள் 100 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது, இவ்வகையான போராட்டங்கள் எதையும் செய்யாமலேயே அண்மையில் கன்னட மொழியும் அதைத் தொடர்ந்து தெலுங்கும் செம்மொழி தகுதியை பெற்றுக் கொண்டன. அவையும் திராவிட மொழிக் குடும்பம் என்றாலும் கூட அவர்கள் மொழிகளுக்கு செம்மொழி தகுதி இருந்தாலும் கூட அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள அடிப்படைக்காரணமே தமிழர்கள் தமிழுக்காக அந்தத் தகுதியைப் பெற்றுக்கொண்டது தான். அவ்வகையில் அம்மொழிபேசுபவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கடமை பட்டவர்கள், ஆனால் நடைமுறையில் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏச்சுகளே மிஞ்சுகிறது என்பது கசப்பான உண்மை. இவை வேறு அரசியல்.

இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கும் செம்மொழி மாநாடுகள் என் பார்வையில் ஒரு பெரிய இல்லத்தின் பெற்ற குழந்தைகளில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு, குற்றுயுரும் குலை உயிருமாக இருக்க பெற்றோர் அறுபதாம் திருமணத்தை ஊர் கூட்டி கோலாகலமாக நடத்துவது போன்றிருக்கிறது.

இலங்கையின் இன அழிப்புப் போர் கிட்டதட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்னும் ஒரு லட்சத்திற்கு மிகுதியான தமிழர்கள் வதை முகாம்களில் தங்கி இருப்பது தொடர்ந்து வரும் வேளையில் இவர்களையும் சேர்த்து இவர்களுக்கும் தலைமை அதாவது தமிழ் இன தலைமை என்று சொல்லிக் கொள்ளும் முதாட்டி ஒருத்தி தண்டட்டிப் போட்டு மினுக்கிக் கொண்டு என்னைப் பார் என் அழகைப் பார் அல்லது பல்லுபோன முதியவர் ஊன்று கோலுக்கு தங்கக் கைப்பிடிப் போட்டிருக்கிறேன் பாருங்கள், என்னோடு சேர்ந்து பெருமைபடுங்கள், கொண்டாடுங்கள் என்றால் நிலைமை தெரிந்தவர்கள் வேதனை படமாட்டார்களா ?

உலகத்திலேயே 'உன் நாட்டில் உன்னால் மனித அவலம், மக்களை காப்பாற்ற முயற்சி செய்' என்று இன்னொரு நாட்டில் இருந்து வேண்டுகோள் வைக்கும் போது அதை சிரித்துக் கொண்டே செய்துவருவதாகவும், செய்யப் போவதாகவும் சொல்லும் ஒரே அதிபர் இராஜபக்சே தான். அந்த அளவுக்கு தன்னாட்டு மக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர் என்பதை அண்மையில் சிங்கப்பூர் முன்னால் பிரதமர் வரை விமர்சனம் செய்துள்ளார்கள், ஹிட்லரை ஒத்த அந்த அதிபருக்கு இரத்த(ன) கம்பள வரவேற்பு வழங்குபவர்களைத் தான் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பு செய்யுமாறு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

தமிழரின் ஒட்டுமொத்த அடையாளம் தாங்கள் தான் என்பதாக காட்டும் இந்த மாநாட்டு முயற்சியில் தமிழ் எழுத்துகளை மாற்றப் போகும் கூத்துகள் கூட நடைபெறப் போவதாக தமிழார்வளர்கள் பம்மியபடியும், விம்மியபடியும் முனுகிக் கொண்டி இருக்கிறார்கள்.

இந்த வேளையில் செம்மொழி மாநாடு (இவ்வளவு ஆடம்பரமாக!!!) நடந்தால், தமிழர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள், தமிழர்கள் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பதாக உலகினரால் புரிந்து கொள்ளப்படும் வகையில், செம்மொழி மாநாடு என்ற பெயரில் தமிழர்களின் மீதான படுகொலையை முற்றிலும் வெளி உலகுக்கு மறைக்கும் ஒரு செயலை, தமிழ் தாயின் தொடர் அழுகுரலை நிறுத்த அல்லது மறக்கக் கொடுக்கப்படும் மதுவாக இம்மாநாடு நடைபெறுவாதாக எண்ணும் நான் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்.

33 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எத்தனையோ கடன், குடும்ப பிரச்சனை இருந்தாலும் எல்லாரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவதில்லையா? அதுபோலதான்..

இங்கே அனைத்து வேலைகளும் அரைகுறையாக நடந்து முடியப்போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புறக்கணிப்பதால் மாநாட்டு வேலைகள் சற்று பாதிக்கும் என்பதில் வருத்தம் உண்டு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

எத்தனையோ கடன், குடும்ப பிரச்சனை இருந்தாலும் எல்லாரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவதில்லையா? அதுபோலதான்..

இங்கே அனைத்து வேலைகளும் அரைகுறையாக நடந்து முடியப்போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புறக்கணிப்பதால் மாநாட்டு வேலைகள் சற்று பாதிக்கும் என்பதில் வருத்தம் உண்டு :)//

எனக்கு தெரிந்து இந்துக்கள் இழவு வீடாக இருந்தால் தீபாவளி பண்டிகை கொண்டாடமாட்டார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த நேரத்தில் நீங்கள் புறக்கணிப்பதால் மாநாட்டு வேலைகள் சற்று பாதிக்கும் என்பதில் வருத்தம் உண்டு :)//

நான் எனது எதிர்ப்பை பதிய வைக்கிறேன். அது ஈடு குறைகள் ஏற்படுத்துமா என்று நான் காண்பது இல்லை

ttpian சொன்னது…

மொய் இல்லாமல் போகவேண்டாம்!
யெல்லோ துண்டு கோபம் .....

ஜோ/Joe சொன்னது…

////இந்த நேரத்தில் நீங்கள் புறக்கணிப்பதால் மாநாட்டு வேலைகள் சற்று பாதிக்கும் என்பதில் வருத்தம் உண்டு :)//
:))))))))

RAVI சொன்னது…

திரு கோவி. கண்ணன் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.
தயவுசெய்து என்னுடைய சுனாமி வீடியோவைப் பார்க்க ஐந்து நிமிடம் செலவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உலக விஞ்ஞானிகளுக்கு ஆப்பு !
www.avasaramda.blogspot.com

மிக்க நன்றிகள்
என்றும் உங்கள் ரவி

கோவி.கண்ணன் சொன்னது…

//RAVI has left a new comment on your post "செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !":

திரு கோவி. கண்ணன் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.
தயவுசெய்து என்னுடைய சுனாமி வீடியோவைப் பார்க்க ஐந்து நிமிடம் செலவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உலக விஞ்ஞானிகளுக்கு ஆப்பு !
www.avasaramda.blogspot.com

மிக்க நன்றிகள்
என்றும் உங்கள் ரவி

//

அலுவலகத்தில் விடியோ பார்க்கும் வசதி இருந்தாலும் பார்ப்பது இல்லை.

Dr.P.Kandaswamy சொன்னது…

ஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டான்னு கேட்டிருக்கீங்க இல்ல, அதுதான் இது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவிட்ட கோவியாருக்கு நன்றி!

என்னுடைய புறக்கணிப்பை பதிவு செய்கிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்த நேரத்தில் நீங்கள் புறக்கணிப்பதால் மாநாட்டு வேலைகள் சற்று பாதிக்கும் என்பதில் வருத்தம் உண்டு :)//

ஓம் கார் ஐயா,ஜோ,
நீங்கள் நகைச்சுவைக்காக சொல்கிறீர்கள்!நடக்குது, நடக்காம போவுது, இல்ல சுனக்கம் காட்டுது அது அவசியமில்லை. அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று விருபுகிறோம். அவ்வளவுதான்! யாரையும் மல்லுக்கட்டும் நோக்கம் இல்லை!

போகிறவர்கள் போகட்டும், ஆதரிக்கிறவர்கள் ஆதரிக்கட்டும்...!

ஜோ/Joe சொன்னது…

//போகிறவர்கள் போகட்டும், ஆதரிக்கிறவர்கள் ஆதரிக்கட்டும்...!//
போகிறவர்கள் எல்லாம் ஆதரிக்கிரவர்களும் அல்ல ..ஆதரிக்கிறவர்கள் எல்லாம் போகப் போவது இல்ல...

நாங்களும் கொளப்புவோம்ல ..

ஜோ/Joe சொன்னது…

//ஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டான்னு கேட்டிருக்கீங்க இல்ல, அதுதான் இது.//

ஏதோ ஆதாயத்துக்காகத் தான் நீங்க புறக்கணிக்குறதா பெரியவர் சொல்லுறாரே ..என்னது ?:)

butterfly Surya சொன்னது…

செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு தமிழின் வளர்ச்சி 173 செண்டிமீட்டராக இருக்கும் என ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.. {டுவிட்டரில் படித்தது}

அக்பர் சொன்னது…

அண்ணே அவர் அவசரம் அவருக்கு.

அடுத்த தேர்தல் வேறு வரப்போகுது.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி !

Kala சொன்னது…

செம்மொழி மாநாடுகள் என் பார்வையில்
ஒரு பெரிய இல்லத்தின் பெற்ற
குழந்தைகளில் சிலர் மருத்துவமனையில்
உயிருக்கு போராடிக் கொண்டு, குற்றுயுரும்
குலை உயிருமாக இருக்க பெற்றோர்
அறுபதாம் திருமணத்தை ஊர் கூட்டி
கோலாகலமாக நடத்துவது
போன்றிருக்கிறது.\\\\\\\\\

பிரபாகர் சொன்னது…

//ஜோ/Joe
////இந்த நேரத்தில் நீங்கள் புறக்கணிப்பதால் மாநாட்டு வேலைகள் சற்று பாதிக்கும் என்பதில் வருத்தம் உண்டு :)//
:))))))))//

:))))))))))))))))))

Mahesh சொன்னது…

சே... இந்த மாநாடு மட்டும் நடத்தலைன்னா "டமில் சத்துப் போயிரும்"னு "பென்சின்கம்" சூட்டிங்க்ல நமீடா ஜொள்ளினாங்களாம் !!!

ராவணன் சொன்னது…

அய்யோ பாவம் கருணாநிதி...!

பிரியமுடன் பிரபு சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்

SanjaiGandhi™ சொன்னது…

கோவையே எழவு ஊடு மாதிரி தான் இருக்கு.. அந்த 5 நாட்கள் எல்லாத்துக்கும் லீவு உடனுமாம்.. காலை 8 முதல் மாலை 5 வரை வெளியூர் பஸ்கள் நகருக்குள் அனுமதிக்கப் படாதாம்... சில முக்கிய வழித்தடங்கள் ஒரு வழியாக மாற்றப் படுகிறதாம்.. தினம் ஒரு பகீர் உத்தரவு வந்துட்டே இருக்காம்.. இதெல்லாம் வதந்தியா இருக்கனும்னு நாங்க எல்லாம் கூட்டுப் ப்ரார்த்தனை பண்ணிட்டு இருக்கோம்..

மாநாட்டுக்காக பல அவசர வேலைகள் நடந்துட்டு இருக்கு.. அதுக்குள்ள முழுமையாகாத வேலைகள் எல்லாம் அப்டியா விட்ருவாங்கன்னு பயமா இருக்கு.. இப்போவே நகரை சின்னாபின்னமாக்கி வச்சிருக்காங்க.. இன்னும் எனென்ன கூத்தெல்லாம் நடக்குமோ? :((

ராம்ஜி_யாஹூ சொன்னது…

same with the Fetna organised in America.

ரோஸ்விக் சொன்னது…

என்னுடைய புறக்கணிப்பை பதிவு செய்கிறேன்!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

ஈழத்தில் தமிழர்கள் அவதியுறு நிலையில் இருக்கும் பொழுது நடை பெறும் Fetna நிகழ்வினை நான் புறக்கணிக்கிறேன், எனது வருத்தங்களை கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம்ஜி_யாஹூ said...

ஈழத்தில் தமிழர்கள் அவதியுறு நிலையில் இருக்கும் பொழுது நடை பெறும் Fetna நிகழ்வினை நான் புறக்கணிக்கிறேன், எனது வருத்தங்களை கண்டனங்களை பதிவு செய்கிறேன்.//

அந்த விழா சென்ற ஆண்டும் நடந்தது, எனவே புதிதாக புறக்கணிக்க ஒன்றும் இல்லை :)

ஜோதிஜி சொன்னது…

உங்கள் நோக்கம் சொல்ல வந்த கருத்து ஒரு நகைச்சுவை பின்னூட்டத்தினால் மொத்தமும் திசை திருப்பி விடப்படப்பட்டுள்ளது?

ராம்ஜி_யாஹூ சொன்னது…

கோவியார், கட்சி பாகுபாடு இன்றி ஒரு பொது பார்வையாளனாக சொல்லுங்க.

Fetna ஆண்டு தோறும் நடை பெறும் விழா என்றால், தமிழ் மாநாடும் இதற்க்கு முன்னரே நடை பெற்றனவே.

மதுரை, தஞ்சையில் தமிழ் மாநாடு நடை பெற்ற போதும் ஈழத்தில் தமிழர்கள் இன்னல் பட்டு கொண்டு தான் இருந்தார்கள். தஞ்சை, மதுரை மாநாடு போதும் தமிழ் ஈழம் மலர்ந்து மக்கள் மகிழ்ச்சியில் திளைக்க வில்லை.

ஈழத்தில் தமிழர்கள் வருத்தப் படுகிறார்கள், நானும் உங்களோடு அந்த வருத்தத்தில் சோகத்தில் பங்கு கொள்கிறேன், எனவே தமிழின் பெயரில் ஆடம்பர அலங்கார விழாக்கள் வேண்டாம் நானும் உடன் படுகிறேன் உங்களுடன்.

எனவே தான் சொல்கிறேன், லச்சுமிறாய், சாதன சர்கம், த்ரிஷா, கார்த்திக் அய்யர் போன்ற தமிழ் தொண்டர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளும் Fetna விழாவை புறக்கணிக்கிறேன், எனது கண்டனகளை பதிவு செய்கிறேன்.

நான் துபாய் சிங்கப்பூர் அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட ஆடல் பாடல் நிகழ்சிகள் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வில்லை. எனவே பித்னா விழாவையும் ஆடல் பாடல், நட்சதிர கலை விழா என்று சொல்லி நடத்துங்கள், நானும் அந்த குத்து ஆட்டத்தை ரசிக்கிறேன். அதை விடுத்து தமிழ் விழா என்று சொல்லி தமிழை அசிங்க படுத்த வேண்டாம் என்பதே வேண்டுகோள்.

தமிழ் பிரியன் சொன்னது…

ஓம்காருடன் ஒத்துப் போகின்றேன். செம்மொழி மாநாட்டை ஆதரிக்கின்றோம்.

கல்வெட்டு சொன்னது…

//நக்கீரன் பார்பனப் புலவர்களில் ஒருவர் என்று தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். சங்கறுக்கும் குலம் எங்கள் குலம் என நக்கீரன் வசனம் பேசுவதாக என்று ஏபிநாகராஜன் எதை வைத்து எழுதினார் என்று தெரியவில்லை. :) //

உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா கோ.வி :-))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜரத்தினம் has left a new comment on your post "செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !":

//தமிழ் புத்தாண்டு துவக்கம் தை 1 ஆக மாற்றியதில் என் போன்ற பலருக்கு உடன்பாடு//

உன் போன்ற ஒரு சிலரே இதை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக வுக்கு ஓட்டு போட்டவன் கூட இதை பின்பற்றவில்லை என்று உனக்கு யார் புரியவைப்பது.
//

பூணூல் போட்ட வெண்ணை, புரிய வைக்க முடியவில்லை என்றால் பெருமாள் கோவில் சுவற்றில் போய் முட்டிக் கொள்ளேன். உமக்கு எவண்டா என்னை ஒருமையில் விளிக்கச் சொல்லி அனுமதி கொடுத்தான் வெண்ணை ?

உன்னையெல்லாம் நான் இங்க வந்து கருத்து சொல்லக் கூப்பிட்டேனா ? அதான் பதிவு வெளியாகும் போதே யார் எழுதியது என்று வருகிறதே. தவிர்க்க வேண்டியது தானே ?

நீர் மட்டுமில்லை பூணூல் போட்டவனில் பெரும்பாண்மையினர் தமிழ் சார்ந்தவற்றில் ஆர்வம் காட்டுவதைவிட எதிர்ப்பு காட்டுவார்களே மிகுதி என்பது தெரிந்தது தான் வெண்ணையே.

துளசி கோபால் சொன்னது…

//சே... இந்த மாநாடு மட்டும் நடத்தலைன்னா "டமில் சத்துப் போயிரும்"னு "பென்சின்கம்" சூட்டிங்க்ல நமீடா ஜொள்ளினாங்களாம் !!!//


இது:-))))))))))))))

நானும் புறக்கணிச்சுட்டேன். போகப்போறதில்லை.

மேடேஸ்வரன் சொன்னது…

http://dhinamalar.info/Political_detail.asp?news_id=17991
மேற்கண்ட சுட்டியில் காணப்படும் செய்தியின் படி,செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 'சங்கத்தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி என்றும் ,கவிதை சமர்ப்பிக்க இறுதி நாள் மே 20 மற்றும் பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அது குறித்த தற்போதைய நிலையை மாநாடு சம்பந்தப்பட்ட எவரும் சொல்வதாகத் தெரியவில்லையே..

மேடேஸ்வரன் சொன்னது…

http://dhinamalar.info/Political_detail.asp?news_id=17991
மேற்கண்ட சுட்டியில் காணப்படும் செய்தியின் படி,செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 'சங்கத்தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி என்றும் ,கவிதை சமர்ப்பிக்க இறுதி நாள் மே 20 மற்றும் பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அது குறித்த தற்போதைய நிலையை மாநாடு சம்பந்தப்பட்ட எவரும் சொல்வதாகத் தெரியவில்லையே..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்