பின்பற்றுபவர்கள்

6 ஜூன், 2010

தொடர்ந்து 'டூ' விட்டுக்கொள்ளனுமா !

நர்சிம், முல்லை பிரச்சனையில் என்னால ஒன்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிரச்சனை என்றாலே அது என்றும் முடியவே கூடாது என்பது போல் தான் பலர் இதில் தீவிரமாக களம் இறங்கி கருத்து சொன்னார்கள், நாட்டாமைத்தனம் செய்தார்கள்.

நாம சில சமயங்களின் மிருகமாக மாறினாலும் பல சமயங்களில் மனிதர்கள், தவறு செய்கிறவர் எவேறேனும் அதே நொடியில் திருத்திக் கொள்ளும் தீர்வையும் கையில் வைத்து கொண்டு தவறு செய்பவர்கள் கிடையாது. ஆத்திரம் கோபம் இவை நொடிகளில் சில தவறான முடிவு எடுக்க வைத்துவிடும் என்பது நம் வாழ்க்கையில் எதோ ஒரு சூழலில் நடந்தவையாகவே இருக்கும். சூழலில் தவறு செய்பவர்கள் எவருமே அதைத் தொடர்ந்து நியாப்படுத்தினால் அவர்கள் அந்த தவறை விரும்பியே செய்திருக்கிறார்கள், எல்லது அந்த சூழலுக்காக காத்திருந்தார்கள் என்பது தான் பொருள். அவர்கள் ஒருகாலமும் திருத்திக் கொள்ளமாட்டார்கள், வரட்டு பிடிவாதக்காரர்கள் இப்படித்தான் தாம் செய்வதே சரி என்பர். செய்தவறுக்கு வரும் எதிர்வினைக்கு மனது வருந்தாவிட்டாலும் நாம் சிலரை காயப்படுத்தி இருக்கிறோம் என்கிற உணர்வு வரும் போது மன்னிப்பைக் கோரும் நிலைக்கு வருவதே மனித பண்பு.

ஒரு பெண்ணை கையைப் பிடிச்சு இழுத்தா சும்மா இருப்பாங்களா ? இழுத்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகப் போய்விடுமா என்பது போன்ற மடக்கு கேள்விகளுக்கு நான் வரவில்லை, எழுத்து ஆபாசத்தையும் வன்புணர்ச்சியும் ஒன்று என்று என்னால் வினவு/ பைத்தியக்காரன் போல் வகைப்படுத்தவும் முடியாது. இந்த தாக்குதலின் வேர், இவை எந்த உரிமையில் தொடர்ந்தது என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது.

நர்சிம் எழுதியது முல்லையைக் குறித்து எல்லோரும் ஒப்புக் கொள்ளும் போது, அதற்கு முன்பு மயில் விஜி எழுதிய பகடி நர்சிம்மை குறித்து தான் என்பது முல்லைக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கமுடியவில்லை. இருவருக்கும் இடையே கசப்புணர்வு இருந்தது என்பதும் இருவரும் தெரிந்தது தான். ஏற்கனவே இருவருக்கும் வாய்க்கால் தகறாரு இருக்கும் போது இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் தாக்குவது ஆபாத்தானது என்று உணர்ந்திருக்க வேண்டும். டோண்டு இராகவன் குறிப்பிட்டது போல் எந்த உரிமையில் இப்படியான பகடி தொடர்ந்தது என்பது புரியவில்லை. இவை எல்லை மீறியதால் போது இதன் தொடர்ச்சியின மற்றொமொரு உரிமை மீறல் தான் அந்த ஆபாச புனைவு.

எல்லோரும் கண்டனம் செய்தார்கள், அவரும் கண்டனத்தை மதித்து மற்றும் குற்ற உணர்வில் பதிவை உடனே அழித்து பிறகு இருநாட்களில் வந்த எதிர்வி(னவு)னைகளைப் பார்த்து மன்னிப்பு கேட்டார். தவறு செய்தவர் திருந்த கால அவகாசம் முக்கியம்.

மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகிப் போய்விடுமா ? முற்றிலும் முகம் தெரியாதவர் என்று சொல்லிவிடவும் முடியாது. செய்ததை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டாகிவிட்டது, இதற்கு மேலும் வளர்த்த விரும்புவர்கள் பிரச்சனைகளை விரும்புகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலி தொடர்பான பிரச்சனைகளில் செந்தழல் ரவி, கவிதா இருவருக்கும் மனக்கசப்பு, செந்தழல் ரவியின் மிரட்டல்களால் கவிதா வலைப்பதிவை விட்டுச் செல்வதாக அறிவித்துச் சென்றார். பிறகு செந்தழல்ரவி தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கவிதாவிடம் மன்னிப்பு கேட்டார். கவிதாவும் நிகழ்வுகளை பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் எழுதவந்தார். இதையே பாதிக்கப்படும் பெண்களும் பின்பற்றனும் என்று சொல்லவரவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் என்றைக்கும் எதிரியாக இருக்க வேண்டும் என்று எவருமே விரும்பவில்லை. இதைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பிரச்சனைக்குரியவர்கள் பிரச்சனைகளை மறந்தாலும் அதைத் தூண்டிவிட்டுக் காயப்படுத்தியவர்களை இருவருமே நினைவு வைத்திருபார்கள். இதுவும் பலரும் அறிந்த உண்மை தான்.

இதே பிரச்சனை நர்சிம் தவிர்த்து வேறொரு ஆண் பதிவர் செய்திருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் நாட்டாமை செய்திருக்குமா என்பதும் ஐயமே. நர்சிம் எழுத்தில் சாதித்திக் கொண்டு தான் இருந்திருக்கிறார் அவரை கும்முவதற்கு பலர் காத்திருந்திருக்கிறார்கள், அவரின் போதாத காலம் இவ்வாறு நடந்நுவிட்டது. செந்தில் நாதன் சிகிச்சைக்காக பணம் திரட்டும் பொழுது மிக அருமையாக ஆயிரம் பேர் 3000 ரூபாய் 33 லட்சம் திரட்டிவிடலாமே என்று உற்சாகப்படுத்தி சென்னையில் பணம் திரட்ட பொறுப்பும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்தார்.

யாவரும் கேளிர்!!...: சிங்கை நாதா ...
13 Aug 2009 ... 33 லட்சத்தை 1000 பேரால் வெறும் 3000 ரூபாயாக கொடுக்க முடியுமா முடியாதா? ...
www.narsim.in/2009/08/blog-post_13.html?showComment..(deleted)

தவறு செய்ததற்காக மன்னிப்பு கேட்டப் பிறகும் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்வர்களுக்கு இவையெல்லாம் நினைவு வர வாய்ப்பு இல்லை. அவர்களின் நோக்கம் நர்சிம் மன்னிப்பு கேட்டதால் ஒருவேளை பிரச்சனைகள் முடிந்துவிடுமே என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

நர்சிம் செய்தது மிகப் பெரிய தவறு, ஆணாத்திக்கத் திமிர் என்றெல்லாம் என்னால் நினைக்க முடிந்தாலும் அதற்காக அவர் வெறுக்ககூடியவர், ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்வதை என்னால் ஏற்கமுடியாது.

ஒரே ஊரில் இருக்கும் நர்சிம் மற்றும் முல்லை, எதோ ஒரு பதிவரின் திருமணத்தில், இல்லவிழாவில் சந்திக்க நேர்ந்தால் தற்போதைய நடப்புகளை மறந்து நட்புகளை வளர்த்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பது தான் பிரச்சனைகளுக்கு எண்ணை ஊற்றுபவர்களின் எண்ணமா ?

29 கருத்துகள்:

விஜய் ஆனந்த் சொன்னது…

(a+b)^2 = a^2+b^2+2ab

ஜோ/Joe சொன்னது…

//(a+b)^2 = a^2+b^2+2ab//

வழிமொழிகிறேன்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

எனது கருத்தும் இதே.
சின்னப்பசங்க சண்ட போட்டுக்கிடதுக்காக ரெண்டு வீட்டு பெரியவங்க சண்ட போட்டு அது அப்டியே ஊர் சண்டையாகி இப்ப உலகப் போர் அளவுக்கு வந்தது மாதிரி இருக்கு.

செந்தில் நாதன் அண்ணண் குறித்து எழுதியுள்ளதால் இதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரு பக்கம் நர்சிம் அருமையான யோசனையை வெளியிட்டி பணம் திரட்ட உதவினார். அதே போல் சந்தன முல்லை அவர்களும் பல பதிவுகள் இட்டும், கேவிஆரின் வசூல் அப்டேட்களை வெளியிட்டும் உதவினார். ஒரு நல்ல காரியத்தில் ஒன்றாய் இருந்த நண்பர்கள் இன்று இப்படி அடித்துக்கொண்டு நிற்பது வருத்தமா இருக்கு.

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

சொன்னதெல்லாம் சரிதான்!

வம்பு வழக்கோ, சமாதானமோ எதுவானாலும் இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டு சேர்ந்தால் தான் முடியும்.

இங்கே அந்தமாதிரியாகிவிடக் கூடாது என்பதில் பலருக்கும் அதீதமான அக்கறை இருப்பது நன்றாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாளைக் காலை பொழுது விடிந்தால், இன்னும் என்னென்ன வருமோ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஒரு நல்ல விசயத்திற்கு(சிங்கை நாதன்) நர்சிம் அவர்களும், சந்தனமுல்லை அவர்களும் முன்னின்று சிறப்பாக பங்காற்றியதை பதிவுலகில் யாரும் மறக்க மாட்டோம்.

மற்றபடி நடந்த விரும்பதகாத இந்த விசயத்தில் முடிவு எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களே...!

மின்னுது மின்னல் சொன்னது…

அவ்வ்வ்வ்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

எனக்கு அயர்ச்சியாகவும் அலுப்பாகவும் உள்ளது.

தா பாண்டியனும் சசிகலாவும் சேரலாம். நல்ல கண்ணுவும் சேகர்பாபுவும் சேரலாம்.
எஸ் வீ சேகரும் சுப வீரபாண்டியனும் சேரலாம்.

ஆனால் பதிவர்கள் சேர கூடாது போல.

பிரியமுடன் பிரபு சொன்னது…

உள்ளேன் அய்யா
மணி 1 ஆவுது துங்காம பதிவா?

பிரியமுடன் பிரபு சொன்னது…

விஜய் ஆனந்த் said...

(a+b)^2 = a^2+b^2+2ab
///////

பாருங்க எதோ தூக்கதுல வந்து என்னமோ சொல்லுறாரு

வவ்வால் சொன்னது…

Kovi,
ungal karuthudan pathi udan padukiren.remaining thisai thiruppalaga ullathu.(sorry to say this but i should..)

Pagadi pathivu poda maaman,machan uravu murai avasiyama? Kalaignar pathi nakkala neenga pathivu pottu irukkinga uravu murai urimailaa pottinga?

Vijay padam announce panna nal muthal padam vara varai nakkal panranga eppadi?

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

சொம்பு எங்க வாங்குனேல்,,, நேக்கும் ஒரு சொம்பு வேணும்.

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

இதில் சம்பந்தபட்ட யாரையும் எனக்குத் தெரியாது. நீங்கள் சொன்ன விஜியின் நையான்டியைப் படித்தேன். சந்தனமுல்லையின் பின்னூட்டங்களையும் படித்தேன். நர்சிமின் இடுகையையும் படித்தேன். விஜியின் நையான்டி (It is a satire); ஆனால் நரசிம்மிண் எழுத்து அப்படிப்பட்டது அல்ல.

Cho எழுதாத நையான்டி எழுத்தா? அதற்கு யாரும் இது மாதிர் ஆபாசமாக அவரையும் அவரது குடும்பத்தையும் எழுதவில்லை. ஒரு நையான்டியை sportive-ஆக எடுத்துக்கமுடியாதவர்கள் பதிவு எழுதவே தகுதி இல்லை. இதில் எனக்குப் புலப்பட்டது ஜாதித் திமிர் மற்றும் அகங்காரம் மட்டுமே. பெண்கள் வாயை அடைக்க ஆண்கள் உபயோப்படுத்தும் வார்த்தைகள்.

Analyze the root cause -என்று சொல்பவர்களுக்கு இங்கு root-உம் இல்லை cause-உம் இல்லை இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

பெயரில்லா சொன்னது…

பரவாயில்லை, முதலில் படித்தது எங்கள் தலைவர் பத்திய ஒரு ஆக்கத்தையே. அந்த கடுப்பில் தட்டிப்பார்த்தால் கொஞ்சமல்ல மிகவும் நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள். அப்படியே நீங்களும் மற்றய பதிவில் "மன்ப்பூர்வமாக" மன்னிப்பு கேளுங்கள்.

அது சரி சொன்னது…

+Positive.

கவிதா | Kavitha சொன்னது…

//செந்தழல் ரவி, கவிதா இருவருக்கும் மனக்கசப்பு, செந்தழல் ரவியின் மிரட்டல்களால் கவிதா வலைப்பதிவை விட்டுச் செல்வதாக அறிவித்துச் சென்றார். பிறகு செந்தழல்ரவி தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கவிதாவிடம் மன்னிப்பு கேட்டார். கவிதாவும் நிகழ்வுகளை பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் எழுதவந்தார்.//

எப்போது எழுதினாலும் என் பெயரை எழுதலன்னா உங்களுக்கு தூக்கம் வரமாட்டேங்குது. :)

பதிவை விட்டு ரவியால் சென்றது உண்மை என்றாலும் எந்த அறிவுப்பும் இன்றி சென்றேன் என்பதே உண்மை. இந்த பிரச்சனையில் என் குடும்பத்தில் எனக்கும் என் கணவருக்கும் நடந்த விவாதங்களை நான் இதுவரையில் வெளியில் சொல்லவில்லை. அது எங்களுக்குள்ளானவை என்று விட்டுட்டேன்.

பதிவெழுதாமல் போனவுடன், நான் பயத்தில் சென்றுவிட்டேன் என்று பலரும் நினைத்திருந்தார்கள் என்றாலும் நான் சென்றதற்கான காரணத்தை இங்கே பதியவைக்கிறேன்.


கோவி - இதை இங்கே பதிய வைக்க காரணம் என்னுடைய + ரவி யின் பெயரை மீண்டும் மீண்டும் நீங்கள் பயன்படுத்துவதில் எனக்கு சற்றும் விருப்பமில்லை. நாங்கள் இருவரும் ஒற்றுமையாக, பழைய விஷயங்களை மறந்து நட்புடன் இருக்கிறோம். பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கவிதா | Kavitha சொன்னது…

பழைய கதை பொதுவில் வேண்டாமென்பது என் எண்ணம், ரவி, செல்லா, மற்றும் குழலி க்கும் நீங்கள் எப்போதும் என் பெயரை பயன்படுத்துவதால் உங்களுக்கும் தெரிந்திருந்தால் போதுமென்று நினைக்கிறேன். உங்களுக்கு விபரமாக தனிமடல் இட்டு இருக்கிறேன்.

வருண் சொன்னது…

***கிருஷ்ணமூர்த்தி said...
சொன்னதெல்லாம் சரிதான்!

வம்பு வழக்கோ, சமாதானமோ எதுவானாலும் இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டு சேர்ந்தால் தான் முடியும்.***

நான் திமிரா பேசுறேன்னு நெனச்சுக்காதீங்க. இப்போ ஒருவர் நான் மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்னு அடம் பிடிச்சு நின்னா நம்ம என்ன பண்ணமுடியும்?

மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்னு சொல்லிக்கொண்டே இருந்தாலும் கடைசிவரை அவங்க ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர் மன்னிக்கவில்லைனாலும், யாரையும் வன்மையாக தண்டிக்காமல் விடுறதுதான் சரி.

Whatever happened is happened and the post which caused all has been removed and apology has been asked. That is all any accused can do.

I cant forget and I cant forgive nu சொல்லிக்கிட்டே இருந்தால்? என்ன பண்ணுறது?

If they think and imply "I want him "dead" from the "thirattikaL" and from the tamil blog world" and that is the only solution??

Then thirattikaL should ignore such a request.I dont think such a big punishment can be justified.

Here after, ரெண்டுபேரும் ஒருவர் தளத்தை இன்னொருவர் கால் அடி வைக்காமல் ஒதுங்கிப்போக வேண்டியதுதான். If you cant forgive just ignore that blogger completely and live your life and let him live too!

நிஜமா நல்லவன் சொன்னது…

+1

நட்புடன் ஜமால் சொன்னது…

+

அக்பர் சொன்னது…

நல்லது நடந்தா சரிதான். என்னோட +1

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி - இதை இங்கே பதிய வைக்க காரணம் என்னுடைய + ரவி யின் பெயரை மீண்டும் மீண்டும் நீங்கள் பயன்படுத்துவதில் எனக்கு சற்றும் விருப்பமில்லை. நாங்கள் இருவரும் ஒற்றுமையாக, பழைய விஷயங்களை மறந்து நட்புடன் இருக்கிறோம். பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.//

மன்னிக்கவும் கவிதா மேடம்,

நான் திரும்ப அது பற்றி நினைவு படுத்தியது. பிரச்சனைகள் தொடருவது நல்ல சூழலை உருவாக்கிவிடாது என்பதைச் சுட்டுவதற்குத்தான், யாரையும் சுடுவதற்கு அல்ல.

:)

மிக்க நன்றி !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// (a+b)^2 = a^2+b^2+2ab//

repeattu

பாச மலர் / Paasa Malar சொன்னது…

ப்ர்ச்னைகள் சீக்கிரம் சரியாகி விடட்டும்...

பாண்டித்துரை சொன்னது…

?

கோவி.கண்ணன் சொன்னது…

/ பாண்டித்துரை said...

?//

நீங்கள் பத்து நாளாக பதிவுலகம் பக்கம் தலை வைக்கவில்லை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// அனாமிகா துவாரகன் said...

பரவாயில்லை, முதலில் படித்தது எங்கள் தலைவர் பத்திய ஒரு ஆக்கத்தையே. அந்த கடுப்பில் தட்டிப்பார்த்தால் கொஞ்சமல்ல மிகவும் நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள். அப்படியே நீங்களும் மற்றய பதிவில் "மன்ப்பூர்வமாக" மன்னிப்பு கேளுங்கள்.//

ஒருவர் தனக்கு ஒவ்வாத மாற்றுக்கருத்துகளை எழுதிவிட்டால் அவரை மரியாதை குறைத்து விளிக்கும் உங்களுக்கெல்லாம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் திறனும், அக்கரையும் குறையாமல் இருப்பதைப் பார்த்து பாராட்டுகிறேன்.

ர‌கு சொன்னது…

//நர்சிம் எழுத்தில் சாதித்திக் கொண்டு தான் இருந்திருக்கிறார் அவரை கும்முவதற்கு பலர் காத்திருந்திருக்கிறார்கள்//

100% உண்மை

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

திரு வருண் சொன்னது:

/நான் திமிரா பேசுறேன்னு நெனச்சுக்காதீங்க. இப்போ ஒருவர் நான் மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்னு அடம் பிடிச்சு நின்னா நம்ம என்ன பண்ணமுடியும்?

மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்னு சொல்லிக்கொண்டே இருந்தாலும் கடைசிவரை அவங்க ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர் மன்னிக்கவில்லைனாலும், யாரையும் வன்மையாக தண்டிக்காமல் விடுறதுதான் சரி. /

நாம ஒண்ணும் பண்ணாமல் இருந்தாலே, அதுவே பெரிய ஆறுதல் திரு வருண்! பிரச்சினை என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, முடிந்தால் அதைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கலாம்! அது முடியாவிட்டால் பின்னூட்டங்களில், பிரச்சினையை இன்னமும் ஊதி ஊதிப் பெரிதாக்காமல் இருந்தால் அதுவே மிகப் பெரிய உதவி!

இங்கே நர்சிம் எழுதிய புனைவு மிகக் கேவலமாக இருந்தது என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. அதை விட, அவரது புனைவுப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் ஆதரவு, எதிர்ப்புப் பின்னூட்டங்கள்,ஆதரவுப் பதிவுகள் மிகக் குரூரமாக இருந்தது, முழுப் பழியையும் நர்சிமே சுமக்க வேண்டி வந்தது என்பது ஒரு பக்கம்.

அப்புறம் நர்சிம் மீது தனிப்பட்ட வன்மத்தை வைத்துக் கொண்டு, சில பேர் சாதியை இழுத்து, ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்குவது என்று ஒரு கதை சொல்வார்களே, அந்த மாதிரி இதை ஒரு சர்வதேசப் பிரச்சினை அளவுக்கு ஊதினார்கள் பாருங்கள்! அது இன்னொரு பக்கம்!

இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்து போய்விடக் கூடாது என்பதில் சிலருடைய அக்கறை மிக வெளிப்படையாகவே தெரிந்தது பாருங்கள் அது இன்னொரு பக்கம்!

ஆகப் பிரச்சினை எந்த திசையில் எல்லாம் மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! அது கூட அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் போதிக்க அல்ல! நாம் என்ன செய்ய வேண்டும், செய்வது அவர்களுக்கோ பிறருக்கோ தீங்கில்லாமல் இருக்குமா என்பதைப் பார்ப்பதற்காக மட்டுமே.

திருமதி முல்லை ஒரு முடிவை எடுத்திருக்கிறார்! சரியா தவறா என்பது அவரைப் பொறுத்த, அவரை மட்டுமே பாதிக்கப் போகிற விஷயம்!

இதில் நீங்களோ நானோ சொல்ல என்ன இருக்கிறது?

முகிலன் சொன்னது…

என் கருத்தும் இதே. வழிமொழிகிறேன்.

சந்தன முல்லை நர்சிம்மின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பொழுது நர்சிம் எழுத்துத் துறவறம் புரிய வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு பேரும் சமாதானமானால் தால் அது சமாதானம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்