பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2009

சென்னைக்கு வந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் !

2006 மே திங்கள் நான் பதிவுகள் எழுதத் தொடங்கிய அதே நேரத்தில் பதிவு எழுத வந்தவர் என்பதால் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனுடன் பின்னூட்டங்கள், உரையாடி மின் அஞ்சல் வழியாக நல்ல நட்பு ஏற்பட்டது. என்னுடன் சேர்ந்து 'பல்சுவை' பதிவர் மற்றும் 'வகுப்பறை' சுப்பையா அவர்களுக்கு 'வலையுலக வாத்தியார்' பட்டம் கொடுத்தவர். உரிமை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், 'உங்க வயசுக்கு ஏங்க என்னையெல்லம் வாங்கப் போங்கன்னு கூப்பிட்டுக் கிட்டு, வா..போன்னே சொல்லுங்க என்று கூறியவர் விஜய் ஆனந்த், அதை வழிமொழிந்தவர் ஆமத்தூர் ஜெகதீசன். அப்படியாக சில பதிவர்களை நான் ஒருமையில் அவர்களை அழைக்க வேண்டும் என்று அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர். டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ராஜ், குசும்பன், அதிஷா இன்னும் சிலரை நெருக்கம் காரணமாக நான் அவர்களை ஒருமையில் அழைப்பதை அவர்கள் கடிந்து கொண்டதும் கிடையாது. நெருக்கமாக பழகுபவர்களில் காரணங்களுக்கு அப்பாற்பட்டு மிகச் சிலரிடம் மட்டுமே பன்மையில் அழைப்பேன். என்னால் ஒருமையில் அழைக்கப்படுபவர்கள் பலரில் பெ.மகேந்திரனும் ஒருவன்.

என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை வந்து பார்த்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆத்திகம் என்ற பெயரில் பதிவெழுதும் பெரியவர் மருத்துவர் வீஎஸ்கே, இல்லச் சுற்றுலாவிற்காக வந்திருந்தாலும் என்னை சந்திக்க விருப்பம் கொண்டு, குறைவான கால அவகாசம் இருந்தும் என்னை சந்தித்துச் சென்றவர் நண்பர் டிபிசிடி. நானும் அவ்வாறே சீனா, தருமி, ஞானவெட்டியான், துளசி அம்மா (துளசி அம்மா சிங்கை வந்திருந்த போது இல்லத்தினருடன் சென்று சந்தித்தேன்) போன்ற பெரியவர்களையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று சந்தித்து இருக்கிறேன். ரத்னேஷ் மற்றும் இளைய பதிவர்கள் பலரை அவர்கள் ஊர்களுக்கே சென்று சந்தித்து வந்திருக்கிறேன்.

நேரடியாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதற்கான ஆவல், உந்துதல் அவர்கள் நம்மிடம் பழகும் முறையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். நீண்ட நாள் பழகுபவர்களை நிழல்படம் வழியாக அறிந்திருந்தாலும் அவர்களின் அருகாமை இன்னும் பல புரிந்துணர்வையும் நட்பின் மேன்மையையும் பன்படுத்தும் என்பது என் நம்பிக்கையைத் தாண்டிய செயல்பாடாகவே அமைந்திருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்கள் யார் என்பதை நாம் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற நம் உள் மன உந்துதல் முடிவு செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த வகையில் எழுத்தின் வழியாக நான் அடைந்த பயன் என்றால் அது எனக்கு கிடைத்த பதிவர்களின் நட்பு 'மா'வட்டம் தான்.

வளைகுடாவில் வேலை செய்யும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் ஆண்டுக்கு இருமுறை தமிழகம் வந்தாலும், அவன் செல்லும் அதே நேரத்தில் நான் தமிழகம் செல்லும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அண்மையில் தனிப்பட்ட அலுவல் (அலுவலக அலுவல் அல்ல, சொந்த வேலை) பொருட்டு (காரணமாக) சென்னை செல்ல வேண்டி இருந்தது, எக்ஸ்பிரஸ் மகேந்திரன் ஏற்கனவே கிழுமத்தூரிலிருந்து வளைகுடா புறப்பட ஆயத்தமாக இருப்பது தெரியும், அலைபேசியில் அழைத்து சென்னை வருகிற விவரம் சொன்னேன். நான் வளைகுடா செல்வதை இருவாரம் தள்ளிப் போட்டால் உங்களைச் சந்திக்க முடியும், தள்ளிப் போடுகிறேன், உங்களைப் பார்க்கச் சென்னை வருகிறேன் என்றான் மகேந்திரன். அதன் படி கடந்த சனி அன்று காலை 9.00 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இறங்கிய மகேந்திரனை எதிர் கொண்டேன். அன்றும், மறுநாள் மதியம் வரை என்னுடன் நான் செல்லும் இடங்களுக்கு குறிப்பாக கடந்த சனிக்கிழமை பதிவர் பைத்தியக்காரன் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு பதிப்பகம் மேல் மாடியில் உலக திரைப்படம் திரையிட்ட நிகழ்வில் என்னுடன் சேர்ந்து அங்கு வந்திருந்த பதிவர்களைச் சந்தித்தான். அன்று இரவு என்னுடன் தங்கி, மறுநாள் என் இல்ல விழா ஒன்றில் கலந்து கொண்டு விடைபெற்றான். அந்த இல்ல நிகழ்வு பற்றி பிறகு எழுதுகிறேன்.


நண்பர், பதிவர் பெ.மகேந்திரன் வாழும் பெரியார் என்று அழைக்கப்படும் பெரியாரின் நேரடித் தொண்டர், பெரியார் இயக்கத்தில் தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்ட திரு வெ.ஆனைமுத்து அவர்களின் பேரன் என்பது பலருக்கும் தெரியாது. அலுவல் சுமை, வேலைக்காக தங்கும் இடத்தில் இணைய வசதி இன்மை ஆகியவற்றின் பொருட்டு கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் ஆண்டுகள் 2008, 2009 மிகுதியாக எழுதுவதில்லை.

நான் பதிவர் நண்பர்கள் சிலரை முதன் முறை சந்திக்கும் போது, அவர்களிடம் அந்நியர் என்கிற உணர்வே ஏற்படாது. ஆண்டுகள் கணக்கில் நம்மோடு பழகிய நண்பர்களிடம் எப்படிப் பட்ட இயல்புகள், உணர்வுகள் இருக்குமோ அப்படியே இவர்களிடமும் இருக்கும். அப்படிப் பட்டவர்களிடம் தனிப்பட்ட பழக்கம் தாண்டி அவர்கள் இல்லங்களுக்குச் சென்று இல்லத்தின் அனைவரிடமும் இயல்பாக உரையாடுவதும் உண்டு. அப்படி அமையப் பெற்றவர்களில் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனும் ஒருவர்.

இணையம் வழி நட்பில் நாம விரும்புவர்களாக இருந்தாலும், நம்மை விரும்புவர்களாக இருந்தாலும் அதில் ஒருவர் மற்றவரை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற உந்துதல் இருந்தால் என்றாவது ஒரு நாள் அது நடந்துவிடும்.




கிழக்கு பதிப்பகம் வாசலில் 'போலி ......ன் அல்லக்கை மகேந்திரனும், அல்லக்கை லக்கிலுக்கும், அல்லக்கை கோவி.கண்ணனும் ஒண்ணாக வந்திருக்காங்கப்பா' ...அப்படின்னு ஒரு பதிவர் இந்த நிழல்படம் எடுக்கும் போது சொல்ல... இருவரும் சிரித்து வைத்தார்கள்

39 கருத்துகள்:

முகவை மைந்தன் சொன்னது…

:-)))

முகவை மைந்தன் சொன்னது…

நான் தான் மொதோ ஆளு! இனிமே நள்ளிரவிலேயே இடுகை போடுங்க :-))

ILA (a) இளா சொன்னது…

விளக்கெண்ணைய் ஊத்தினா எரியுமா? மண்ணெனைய் ஊத்தினா எரியுமா? பெட்ரோல் ஊத்தினா எரியுமா?

gulf-tamilan சொன்னது…

அடுத்த ரவுண்டு ஆரம்பமா?

குரங்கு சொன்னது…

என்ன கோவியானந்தா?

உங்களின் ஆன்மிகம் கலந்த பதிவு வருவதுல்லயா?

துபாய் ராஜா சொன்னது…

நண்பர் மகேந்திரன் பழகுவதற்கு இனிமையானவர்.காலசுழற்சியில் தொடர்பு விட்டுபோய்விட்டது. மீண்டும் தொடருவோம்.

சென்ஷி சொன்னது…

கிழுமாத்தூரார் போட்டோவுல சூப்பரா போஸ் கொடுக்கறார் :-)

//கிழக்கு பதிப்பகம் வாசலில் 'போலி ......ன் அல்லக்கை மகேந்திரனும், அல்லக்கை லக்கிலுக்கும், அல்லக்கை கோவி.கண்ணனும் ஒண்ணாக வந்திருக்காங்கப்பா' ...அப்படின்னு ஒரு பதிவர் இந்த நிழல்படம் எடுக்கும் போது சொல்ல... இருவரும் சிரித்து வைத்தார்கள்//

சூப்பர்!

சென்ஷி சொன்னது…

/ ILA said...

விளக்கெண்ணைய் ஊத்தினா எரியுமா? மண்ணெனைய் ஊத்தினா எரியுமா? பெட்ரோல் ஊத்தினா எரியுமா?//

எதெது எரியுதுன்னு பார்க்கறதுக்காக பின் தொடரும் பின்னூட்டத்துக்கு துண்டு போட்டு வச்சுக்கறேன் :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் , நீங்க என்னையையும் ஷேக் என்றே ஒருமையில் அழைக்கலாம் .

நானும் உங்களில் ஒருவன் அல்லவா

SP.VR. SUBBIAH சொன்னது…

எனக்கு வாத்தியார் பட்டத்தை உங்களுடன் சேர்ந்து வழங்கிய பெ.மகேந்திரன் அவர்களின் புகைப் படத்தைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கோவியாரே!
நன்றிக் கடனாக என்ன வேண்டும் சொல்லுங்கள்?
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நாகபட்டிணத்தில் நிற்க விருப்பமா - சொல்லுங்கள்? ராகுல் காந்தியிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்.

SP.VR. SUBBIAH சொன்னது…

எனக்கு வாத்தியார் பட்டத்தை உங்களுடன் சேர்ந்து வழங்கிய பெ.மகேந்திரன் அவர்களின் புகைப் படத்தைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கோவியாரே!
நன்றிக் கடனாக என்ன வேண்டும் சொல்லுங்கள்?
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நாகபட்டிணத்தில் நிற்க விருப்பமா - சொல்லுங்கள்? ராகுல் காந்தியிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்.

SP.VR. SUBBIAH சொன்னது…

வளைகுடாவில் இருந்தும் மெலிவாக இருக்கிறாரே? காளமேகம் பாராட்டிய நாகபட்டினம் நளபாகப் புத்தகம் ஒன்றைக் கொடுத்திருக்கலாமே நீங்கள்?
கொடுக்கவில்லை என்றால், ஒன்றை உடனே அவருக்கு அனுப்பிவையுங்கள்!
வாத்தியாரைப் பற்றிச் சொன்னீர்களா?

அப்பாவி முரு சொன்னது…

நல்லாப் போய்க்கிட்டு இருக்கும் போது, இந்த ஓரண்டை எதுக்கு?

//'போலி ......ன் அல்லக்கை மகேந்திரனும், அல்லக்கை லக்கிலுக்கும், அல்லக்கை கோவி.கண்ணனும் ஒண்ணாக வந்திருக்காங்கப்பா' ...அப்படின்னு ஒரு பதிவர் இந்த நிழல்படம் எடுக்கும் போது சொல்ல... ///

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
நான் தான் மொதோ ஆளு! இனிமே நள்ளிரவிலேயே இடுகை போடுங்க :-))
//

நீ ஆந்தையாக இரவெல்லாம் விழித்து இருப்பதற்கு நான் ஊறுகாயா ? அவ்வ்வ்வ்வ் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
விளக்கெண்ணைய் ஊத்தினா எரியுமா? மண்ணெனைய் ஊத்தினா எரியுமா? பெட்ரோல் ஊத்தினா எரியுமா?//

உங்களுக்கு எதாவது எரியனுமா ?

அவ்வ்வ் ! ஏன் கொலை வெறி !

கோவி.கண்ணன் சொன்னது…

//gulf-tamilan said...
அடுத்த ரவுண்டு ஆரம்பமா?
//
10 மணிக்கு மேல டாஸ்மாக் மூடிவிடுவாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//குரங்கு said...
என்ன கோவியானந்தா?

உங்களின் ஆன்மிகம் கலந்த பதிவு வருவதுல்லயா?
//

வரும் வரும் வரும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//துபாய் ராஜா said...
நண்பர் மகேந்திரன் பழகுவதற்கு இனிமையானவர்.காலசுழற்சியில் தொடர்பு விட்டுபோய்விட்டது. மீண்டும் தொடருவோம்.
//
ராஜா, மகேந்திரன் அலைபேசி எண் குசும்பனிடம் இருக்கும். பெற்றுக் கொண்டு தொடருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...

எதெது எரியுதுன்னு பார்க்கறதுக்காக பின் தொடரும் பின்னூட்டத்துக்கு துண்டு போட்டு வச்சுக்கறேன் :)
//

இங்கெல்லாம் எதுவும் எரியாது. இரண்டு க்ளாஸ் தண்ணீர் குடிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கண்ணன் , நீங்க என்னையையும் ஷேக் என்றே ஒருமையில் அழைக்கலாம் .

நானும் உங்களில் ஒருவன் அல்லவா
//

மிக்க நன்றி ! நாமும் சந்திக்கும் காலம் வரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
எனக்கு வாத்தியார் பட்டத்தை உங்களுடன் சேர்ந்து வழங்கிய பெ.மகேந்திரன் அவர்களின் புகைப் படத்தைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கோவியாரே!
நன்றிக் கடனாக என்ன வேண்டும் சொல்லுங்கள்?
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நாகபட்டிணத்தில் நிற்க விருப்பமா - சொல்லுங்கள்? .
//

:)

என்ன வேண்டுமா ? இலவசமாக சாதகம் கணிச்சு தரனும்.

//ராகுல் காந்தியிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்//

ராகுல் காந்தியை பார்க்கக் கூட 35 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு அனுமதி மறுப்பாமே, உங்களுக்காக அப்பாய்ண்மெண்ட் வாங்க முடியுமான்னு கோவை சஞ்சயிடம் கேட்கனும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
வளைகுடாவில் இருந்தும் மெலிவாக இருக்கிறாரே? காளமேகம் பாராட்டிய நாகபட்டினம் நளபாகப் புத்தகம் ஒன்றைக் கொடுத்திருக்கலாமே நீங்கள்?
கொடுக்கவில்லை என்றால், ஒன்றை உடனே அவருக்கு அனுப்பிவையுங்கள்!
வாத்தியாரைப் பற்றிச் சொன்னீர்களா?
//

வளைகுடா பெட்ரோல் குடித்தால் குண்டாகிவிடுவாங்களா ? வாத்தியாரைப் பற்றி பேசாமல் இருப்போமா ? உங்கள் அருமை பெருமையாக உங்கள் பாலோயர் எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
நல்லாப் போய்க்கிட்டு இருக்கும் போது, இந்த ஓரண்டை எதுக்கு?

//

ஒரண்டை எதுவும் இல்லை, லக்கிலுக் அல்லது மகேந்திரன், அந்த வரிகள் தங்களை அவமானப்படுத்துகிறது என்று ஆட்சேபம் தெரிவித்தால் நீக்கிவிடுவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் )


கண்ணன் , நீங்க என்னையையும் ஷேக் என்றே ஒருமையில் அழைக்கலாம் .
//

:)

பெயரைச் சொல்லி அழைப்பது ஒருமை விளிப்பு அல்ல. வா.....போ......இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வாடா போடான்னு உரிமையாக அழைப்பது தான் ஒருமை விளிப்பு.

Subbiah Veerappan சொன்னது…

////என்ன வேண்டுமா ? இலவசமாக சாதகம் கணிச்சு தரனும்.////

யாருக்கு? உங்களுக்கா? கிழுமத்தூருக்கா?
இரண்டு பேருக்குமே கணித்துத் தருகிறேன். பிறப்பு விவரங்களை மின்னஞ்சல் செய்யுங்கள்!
==========================================================

//ராகுல் காந்தியிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்//
ராகுல் காந்தியை பார்க்கக் கூட 35 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு அனுமதி மறுப்பாமே, உங்களுக்காக அப்பாய்ண்மெண்ட் வாங்க முடியுமான்னு கோவை சஞ்சயிடம் கேட்கனும் !//////

என் லெவல் தெரியாமல் பேசுகிறீர்கள்:-)))))

Subbiah Veerappan சொன்னது…

///////வாத்தியாரைப் பற்றி பேசாமல் இருப்போமா ? உங்கள் அருமை பெருமையாக உங்கள் பாலோயர் எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டேன்/////

பாலோயர் எண்ணிக்கையால் ஒர்க் லோட் மூன்று மடங்காகிவிட்டது தெரியுமா? தெரியாதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
யாருக்கு? உங்களுக்கா? கிழுமத்தூருக்கா?
இரண்டு பேருக்குமே கணித்துத் தருகிறேன். பிறப்பு விவரங்களை மின்னஞ்சல் செய்யுங்கள்!
//

மிக்க நன்றி !

எனக்கு திசா புத்தி கணிப்புகளுடன் ஏற்கனவே சாதகம் இருக்கு, அவருக்கு அல்லது அவரு பையனுக்கு தேவைப்படலாம், விவரம் கேட்டு மின் அஞ்சல் அனுப்பச் சொல்கிறேன்.
:)

//பாலோயர் எண்ணிக்கையால் ஒர்க் லோட் மூன்று மடங்காகிவிட்டது தெரியுமா? தெரியாதா?//

நீங்கள் இருக்கும் பிசியில் சாதகம் எழுதித் தரச் சொல்லி கஷ்டப்படுத்த மனம் வர இல்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

!அல்லக்கை என்றால் என்ன தலைவரே!?

கொஞ்சம் விளக்கலாமே!?

அல்லது

டிஃபைன் அல்லக்கை.

:)

யுவகிருஷ்ணா சொன்னது…

அல்லக்கை என்றால் அள்ள அள்ள குறையாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொருள் இருப்பதாக வடநாட்டு அகராதி ஒன்றில் சொல்லி இருக்கிறதாம் :)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ராஜ், குசும்பன், அதிஷா

//

என்னைய மறந்துட்டீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//
என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை வந்து பார்த்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆத்திகம் என்ற பெயரில் பதிவெழுதும் பெரியவர் மருத்துவர் வீஎஸ்கே, இல்லச் சுற்றுலாவிற்காக வந்திருந்தாலும் என்னை சந்திக்க விருப்பம் கொண்டு, குறைவான கால அவகாசம் இருந்தும் என்னை சந்தித்துச் சென்றவர் நண்பர் டிபிசிடி. நானும் அவ்வாறே சீனா, தருமி, ஞானவெட்டியான், துளசி அம்மா (துளசி அம்மா சிங்கை வந்திருந்த போது இல்லத்தினருடன் சென்று சந்தித்தேன்

//

அப்ப நான் வந்தது லண்டனா???
என்னைய இங்கயும் மறந்துட்டீங்களே :(((((

குசும்பன் சொன்னது…

சமீபத்தில் கலைஞர் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அதுக்கு போய் இருந்தீங்களா? அடிக்கடி சென்னை பக்கம் சென்று வருகிறீர்களே!

அப்பாலிக்கா

//டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ராஜ், குசும்பன், அதிஷா இன்னும் சிலரை நெருக்கம் காரணமாக நான் அவர்களை ஒருமையில் அழைப்பதை அவர்கள் கடிந்து கொண்டதும் கிடையாது.//

கண்கள் பனித்தன இதயம் இனித்தது:)) உங்களை நாங்க எப்படி கூப்பிடுவோம் என்று சொல்லி இருக்கலாமே:)) ஹி ஹி ஹி:)

குசும்பன் சொன்னது…

வாத்தியாரிடம் கேளுங்கள் கோவி சரியாக கணிச்சு சொல்வார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை வந்து பார்த்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆத்திகம் என்ற பெயரில் பதிவெழுதும் பெரியவர் மருத்துவர் வீஎஸ்கே, இல்லச் சுற்றுலாவிற்காக வந்திருந்தாலும் என்னை சந்திக்க விருப்பம் கொண்டு, குறைவான கால அவகாசம் இருந்தும் என்னை சந்தித்துச் சென்றவர் நண்பர் டிபிசிடி. நானும் அவ்வாறே சீனா, தருமி, ஞானவெட்டியான், துளசி அம்மா (துளசி அம்மா சிங்கை வந்திருந்த போது இல்லத்தினருடன் சென்று சந்தித்தேன்

//

அப்ப நான் வந்தது லண்டனா???
என்னைய இங்கயும் மறந்துட்டீங்களே :(((((//

அண்ணன் அப்துல்லாவை மறந்த கோவியாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!.

:)

வால்பையன் சொன்னது…

சுப்பையா சாருக்கு இவர் தான் வாத்தியார் பட்டம் கொடுத்தாரா?
பின் எப்படி அதற்கு முன்னரே அவரது வலைபூவுக்கு கிளாஸ் ரூம் என்ற ஐடி வந்தது!

ஒருவேளை அதன் பின் மாற்றிவிட்டாரோ!

Radhakrishnan சொன்னது…

//இணையம் வழி நட்பில் நாம விரும்புவர்களாக இருந்தாலும், நம்மை விரும்புவர்களாக இருந்தாலும் அதில் ஒருவர் மற்றவரை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற உந்துதல் இருந்தால் என்றாவது ஒரு நாள் அது நடந்துவிடும்.//

முயற்சி இருந்தால் நிச்சயம் நடந்துவிடும். பாராட்டுகள் கோவியாரே.

Subbiah Veerappan சொன்னது…

////வால்பையன்
சுப்பையா சாருக்கு இவர் தான் வாத்தியார் பட்டம் கொடுத்தாரா?
பின் எப்படி அதற்கு முன்னரே அவரது வலைபூவுக்கு கிளாஸ் ரூம் என்ற ஐடி வந்தது!
ஒருவேளை அதன் பின் மாற்றிவிட்டாரோ!/////

பல்சுவைப் பதிவில் கொடுத்தார். அவர் கொடுத்ததற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் வகுப்பறைப் பதிவு!

வால்பையன் சொன்னது…

//பல்சுவைப் பதிவில் கொடுத்தார். அவர் கொடுத்ததற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் வகுப்பறைப் பதிவு!//

அப்படியா!

உங்க புரோபைலில் வேறு தனிபதிவு இல்லாததால் டவுட்டில் கேட்டேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாத்தியாருடைய பதிவுகள் மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ இல்லையோ, என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற சிந்தனையில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் பதிவுகள், பெரும்பாலான வாசகர்களுக்கும் பகுத்தறிவை ஊட்டும் பதிவுகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

யுவகிருஷ்ணா said...
அல்லக்கை என்றால் அள்ள அள்ள குறையாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொருள் இருப்பதாக வடநாட்டு அகராதி ஒன்றில் சொல்லி இருக்கிறதாம் :)//

அப்படியா? அந்த அள்ளா?

எங்க கிராமத்துல(அத்திவெட்டியிலதான்) இப்படி சொல்லுவாங்க.

”அந்த கயித்துல ஒரு அல்லு போடு”

முடிச்சு என்ற பொருளில் சொல்வார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்