இதய கோளாறு காரணமாக மாற்று இதய சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு தற்காலிகமாக செயற்கை இதயம் பொருத்தப்பட்ட சிங்கை செந்தில் நாதனை கடந்த சனிக்கிழமை நான், ஜோசப் பால்ராஜ் மற்றும் முகவை இராம் குமார் சந்தித்தோம். உற்சாகமாகக் பேசினார். பதிவுலகினரின் நல்வாழ்த்தும் வேண்டுதல்களும் தன்னை விழிக்க வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி கூறச் சொன்னார்.
அவருடைய மன தைரியம் வியப்படைய வைத்தது, இதயத் துடிப்பெல்லாம் சீராக இருக்கிறதா ? கேட்டேன். "இப்ப எனக்கு உள்ளுகுள்ளே உள்ளதை (இதயம்) எடுத்துட்டாங்க, இந்த மெசின் வழியாக இரண்டு சிறிய குழாய்கள் உடலில் ஓட்டைப் போட்டு இதய இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு இருக்கிறது, அதன் மூலம் இரத்தம் பம்ப் ஆகுது, செயற்கை இதயம் துடிப்பதை அளவிடுவது கடினம், மணிக்கட்டைத் தொட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியாது" என்று விளக்கினார். நேர்மின்சாரத்தில் செயல்படும் செயற்கை இதயம் அவருக்கு அருகில் அவருடன் அருகில் இருக்கிறது. செயற்கை இதயத்துடன் (VAD)
வெளியில் சென்றுவரலாம் 4 மணி நேரம் வரை, செயற்கை இதயம் மின்கலத்தால் செயல்படும், நீட்டிக்க வேண்டுமானால் கூடுதலான மின்கலங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொன்னார். மாற்று இதயம் கிடைக்கும் வரை செயற்கை இதயத்துடன் இருப்பார். தற்போதைக்கு குளிக்க முடியாது, ஈரத்துணியால் உடலை அழுந்த துடைத்துக் கொள்வதுதான் ஒரே வழி.
ஐந்து ஆண்டுக்கு முன் வைரஸ் காய்சலால் இதயம் வீங்கியதைத் தொடர்ந்து பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நிலைக்குச் சென்றதாகவும், பேஸ்மேக்கர் 10 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியதென்றாலும் எதிர்பாராவிதமாக அடிக்கடி மயங்கி விழுந்துவிட மாற்று இதயம் தான் ஒரே வழி என்று மருத்துவர்களின் பரிந்துரையால் தற்போதைய நிலை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
மாற்று இதய சிகிச்சைக்கும் செயற்கை இதய சிகிச்சைக்கும் செலவுகள் கிட்டதட்ட ஒன்று தான். மாற்று இதயம் உடனடியாக கிடைக்காத சூழலில், ஒரிரு ஆண்டுகளில் மாற்று இதயம் பொருத்தியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் செயற்கை இதயம் பொருத்தப்படுவது தற்காலிக தீர்வு.
குரலில் இருக்கும் தெம்பும் உற்சாகமும் உடலில் இல்லை, வீரியமான மருந்துகள், இரத்த விரயம், அறுவை சிகிச்சை என உடல் மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. எழுந்து மிதமாக நடமாடுவதுடன், உடல் இயக்கத்தை சீர்படுத்த பிசியோ தெரபி என்னும் சிகிச்சை எடுத்துவருகிறார். மிகுதியாக கண்காணிக்கப்படும் படுக்கை அறையில் இருந்து, பொது படுக்கை அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.
விருப்பப்பட்டால் இன்னும் 15 - 20 நாட்களில் அறுவை சிகிச்சை காயங்கள் ஆறியதும், வீட்டுக்குச் செல்லமுடியுமாம். ஆனால் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தற்போதைக்கு மனைவி மற்றும் மகள், மருத்துவ தாதிகள் தவிர்த்து வேறொருவர் முகங்களைக் காணாமல் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்துவருகிறார். சிங்கை பதிவர் நண்பர்கள், வருகையாளர்களின் அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 6 - 8 மணி அளவில் நேரம் இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் நாதனுடன் (அவரை மிகுதியாக உரையாடவிடாமல்) உரையாடிவிட்டு வரலாம். ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை மருத்துவமனை பார்வையாளர்களாக அனுமதிக்கிறது.
இயன்றவரை பொருளதவி தந்தும், பிறரிடம் தகவல் சொல்லி பொருளதவி பெற்றுத் தந்த நல்லுள்ளங்கள், மற்றும் பிரார்தனை செய்தவர்கள், குணமடையவேண்டும் என்று மனதார எண்ணியவர்கள் அனைவரும் செந்தில் நாதன் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அனைவருக்கும் செந்தில் நாதன் பற்றி அறியத்தருவதற்காக இந்த தகவல்களை எழுதி இருக்கிறேன்.
செந்தில் நாதன் விரைவில் மாற்று இதயம் கிடைக்கப்பெற்று, உற்சாகமாக புதிய வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்று உங்களைப் போல் நானும் வாழ்த்துகிறேன்
அனைவருக்கும் மிக்க நன்றி !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
37 கருத்துகள்:
ரொம்ப நன்றி கோவியாரே.
தினசரிப் பிரார்த்தனைகளில் நம்ம செந்திலையும் சேர்த்து நெடுநாளாச்சு.
விரைவில் குணமாகி அவர் வீடு திரும்பணும்.
விவரங்களுக்கு நன்றி.
அன்பின் கோவி
தகவலுக்கு நன்றி கோவி
நண்பர் சிங்கை செந்தில் நாதன் விரைவினிலேயே இயல்பு நிலைக்கு வர பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
நல்ல பயனுள்ள தகவல் கோவியாரே! இது பற்றி தனியே பேசுகிறேன்.
தகவலுக்கு மிகுந்த நன்றி! பதிவுலகத்தின் அன்பும், உரிய நேரத்துல் உதவிய மனப்பாங்குமே சிங்கைநாதனை மீட்டெடுத்திருக்கிறது! நெகிழ்ச்சியாக உணர்கிறேன்!
மிக்க நன்றி அண்ணா!
அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பி மீண்டும் அதே உற்சாகத்துடன் செயல்பட நம் அனைவரது பிரார்த்தனையும் உதவி செய்யும்..!
Thanks for the update.Appreciate the time u took to clearly explain about his condition.May God bless you for your kindness.
Many thanks, He will recover very soon.
பதிவுலகத்தின் அன்பும், உரிய நேரத்துல் உதவிய மனப்பாங்குமே சிங்கைநாதனை மீட்டெடுத்திருக்கிறது! நெகிழ்ச்சியாக உணர்கிறேன்! முழுமையாக குணம் அடைந்து இயல்பு நிலைக்கு வர பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்களும்...!
நானும் பிரார்த்திக்கின்றேன். பூரண சுகமடைந்து இயல்பாண வாழ்விற்கு அவர் திரும்ப வேண்டும்.
நன்றி கோவி.
செந்தில்நாதனுக்கு அனைவரது அன்பும் எப்போதும் உண்டு. அவரது மன உறுதிக்கு எங்கள் வணக்கங்கள்.
very humbling to see what he is going through.
hope he and his family gets the courage to see this through.
செந்தில்நாதன் பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு நன்றி.
இனி நடப்பவையும் நல்லபடியே நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக....
மிக்க நன்றி அண்ணா
செந்திலுக்கான எமது பிரார்த்தனைகள் தொடரும் ...
விவரங்களுக்கு நன்றி கோவி. கண்ணன்.
பதிவர் சிங்கை நாதன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெறவேண்டும்
என்பதே அனைவரின் பிரார்த்தனை
விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்!
அவர் மிக விரைவிலேயே குணம் பெறுவார்.
செந்தில்நாதன் விரைவில் குணம் பெற்று வர வேண்டும். விவரங்களுக்கு நன்றி
செந்தில்நாதன் விரைவில் குணம் பெற்று வர வேண்டும். விவரங்களுக்கு நன்றி
Thanks for the post. Some small corrections.Sorry for english.
//இப்ப எனக்கு உள்ளுகுள்ளே உள்ளதை (இதயம்) எடுத்துட்டாங்க//
No my own heart still there.
//இந்த மெசின் வழியாக இரண்டு சிறிய குழாய்கள் உடலில் ஓட்டைப் போட்டு இதய இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு இருக்கிறது, அதன் மூலம் இரத்தம் பம்ப் ஆகுது,//
The photo shown here is the controller which controls and send power to the implanted VAD. VAD is inside me and connected to my own heart from Left Ventricle and Aorta and provide continuous blood flow.
//செயற்கை இதயம் துடிப்பதை அளவிடுவது கடினம், மணிக்கட்டைத் தொட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியாது" //
Not the VAD my own heart's.
//பேஸ்மேக்கர் 10 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியதென்றாலும் எதிர்பாராவிதமாக அடிக்கடி மயங்கி விழுந்துவிட//
To be precise it's called ICD ( implantable cardio defibrillator) which will give shock when heart rhythm goes wrong which is called VT ( Ventricular Tachycardia ). Its a miniature of the external one what u see in movies to give shock.
I also had CRT-D which try to sync the heart chambers.
//இயன்றவரை பொருளதவி தந்தும், பிறரிடம் தகவல் சொல்லி பொருளதவி பெற்றுத் தந்த நல்லுள்ளங்கள், மற்றும் பிரார்தனை செய்தவர்கள், குணமடையவேண்டும் என்று மனதார எண்ணியவர்கள்//
Yes my heartiest thanks for the above all.
அன்புடன்
சிங்கை நாதன்
Happy to see SingaiNathan comments here . ;)
நன்றி நண்பரே
சிங்கைநாதன் நலமுடன் வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
May the nature bless senthil..thanks for the blog
kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே.
நன்றி கோவி.க(அ)ண்ணன்
//நர்சிம் said...
kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே.
நன்றி கோவி.க(அ)ண்ணன்
//
நர்சிம்,
அந்தப் பாராட்டு உங்களுக்கும் உரித்தது, 33 லட்சத்தை 3 ஆயிரமாக பிரித்துகாட்டி அழுத்ததை எளிதாக குறைத்துக் காட்டினீர்கள்
நன்றி கோவி.
செந்தில்நாதனுக்கு நமது பிரார்த்தனைகள் தொடரும்....
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
செந்தில் நாதன் பின்னூட்டத்தை இங்கு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. விரைவில் மாற்று இருதயம் கிடைத்து நலமடைய பிரார்த்தனைகள் தொடரும்.
நன்றி கோவி அண்ணன்.
நன்றி கோவியாரே...செந்தில் அண்ணை பூரண குணமடைந்து திரும்புவார்..
நானும் செந்தில்நாதன் பற்றி நேற்றுகூட நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் பற்றிய தகவல் அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் மாற்று இதயம் கிடைக்கப் பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார். அந்த நாளை எண்ணிக் காத்திருக்கிறேன்.
//-L-L-D-a-s-u
Happy to see SingaiNathan comments here . ;)
//
கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்.
தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன்..
நண்பர் செந்தில் நாதன் விரைவிலேயே மாற்று இதயம் கிடைத்து நல்ல உடல் நலத்துடன் இயல்பு நிலைக்கு வர நல்வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..
செந்தில் அண்ணா இங்கு பின்னூட்டமிட்டது மிக மிக மன நிறைவை அளிக்கிறது.
//நர்சிம் said...
kvrராஜா,ஜோசப் பால்ராஜ்..ராயல் சல்யூட் நண்பர்களே. //
நர்சிம் அண்ணா,
இது KVR, ஜோசப் என எண்ணிக்கையில் அடங்கிவிடக்கூடிய ஒரு சிலரின் முயற்சி மட்டுமல்ல.
உலகளாவிய ஒட்டுமொத்த முயற்சி இது. எங்களிருவருக்கும் மட்டும் சல்யூட் அடித்து பிரிச்சிடாதிங்க. இது நாம் ஒவ்வொருவரும் நம்மையே நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய நிகழ்வு. உலகெங்கும் இருந்தும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் எடுத்த நல்ல முயற்சி.
இன்னமும் பல நாடுகள்ல இருந்தும் பலர் தொடர்பு கொண்டு விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னமும் பலர் பிரார்தனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இந்த அன்பும்,பிரார்தனைகளும் தான் நம்மோட மிகப் பெரிய பலம். அது தான் இந்தளவுக்கு செந்தில் அண்ணணை குணமாக்கியது. எனவே எல்லோருக்கும் என்னோட ராயல் சல்யூட் & மனமார்ந்த நன்றிகள்.
ரொம்ப நன்றிங்க
திரு. செந்தில்நாதன் நலமுடன் இருக்கிறார் என்றறிய மகிழ்ச்சி. தினமும் காலையில் செந்தில் நாதனுக்காகவும் வேண்டுகிறேன். ரொம்ப சந்தோஷம்.
:) வித்யா
தகவலுக்கு நன்றி.. என்றும் எங்கள் பிரார்த்தனைகள் உண்டு
செந்தில் நல்லபடியாக குணமடைந்து வருவார் எங்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
அன்பின் கோவி
தகவலுக்கு நன்றி. நண்பர் சிங்கை செந்தில் நாதன் விரைவினிலேயே இயல்பு நிலைக்கு வர பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
கருத்துரையிடுக