பின்பற்றுபவர்கள்

30 செப்டம்பர், 2009

நாய்களின் எல்லைக் கோடுகள் !

தன் இனத்தைச் சேர்ந்தவர்களை வெறுப்புடன் பார்க்கும் குணம் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் தான் இருக்கின்றன. தெரு நாய்களை நன்கு கவனித்தால் அது மற்றொரு தெருநாயை அல்லது அடுத்தத் தெரு நாயை தன்னுடைய தெருவிற்குள் நுழைய அனுமதிக்காது.

பக்தி என்றப் பெயரில் பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இத்தகையது தான். வழிபாட்டுத் தளங்கள் பக்தியை வளர்க்கின்றன. அது ஒரு நம்பிக்கை என்பதைத் தாண்டி மதவெறியர்களின் எல்லைக் கோடுகள் ஆகிப் போனதைத் தான் இன்றைய காலத்தில் பார்க்கிறோம். பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இருக்கும் போது பிற மதத்தினர் அந்த வழியாக தங்கள் மத ஊர்வலங்களை நடத்தும் போது அந்த இடங்கள் கலவர பூமியாகிறது. 100 பேர் வரை காயமடையவும் சிலரின் இறப்புகளுக்கு காரணமாகவும் எதாவது ஒரு பொது இட வழிப்பாட்டுத் தளங்கள் ஆண்டு தோறும் ஒரு கெட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துவிடுகிறது. குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் இதை பார்க்கலாம்.

பொது இடங்களின் வழிபாட்டுத் தளங்களின் விழாக்களின் போது பல்வேறு தரப்பினர் தொல்லைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஒலி அளவு மிகுந்த ஒலிப் பெருக்கிகளை வைப்பதால் அங்கு படிக்கும் மாணவர்கள் முதல் பிறந்த குழந்தைகளின் தூக்கம் கெடுகிறது. அதிகாலை வழிபாடு/தொழுகை என்ற பெயரில் ஓலமிடும் ஒலிப்பெருக்கிகள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இன்றைக்கு பலரும் இரவு வேலை பார்த்துவிட்டு அதிகாலைத் திரும்புவர்களாகவும், விடியற்காலை தூங்கச் செல்பவர்களாகவும் கூட இருக்கிறார்கள். அவர்களின் தூக்கத்தை இத்தகைய வழிபாடுகள் கெடுக்கிறது என்பது உண்மை. மேலும் மதவழி வழிபாட்டு நம்பிக்கையை அந்தந்த மதத்தினர் மட்டுமே சகித்துக் கொள்வர் என்பது கண்கூடு.

புதிதாக சாலை விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள் அமைந்துவிடுகின்றன. அதை அகற்றி திட்டம் நிறைவேறுவதற்குள் பல்வேறு எதிர்புகளையும் நீதிமன்றங்களின் தடை ஆணையையும் சந்திக்க நேரிட்டு மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளின் காலம் தாழ்கிறது.

வீட்டிற்குள் வழிபாடுகளை யாரும் தடை செய்யப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும் லட்சக்கணக்கான வழிபாடுத்தளங்களில் 50 விழுக்காடு வரை பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது, புதிதாகக் கட்டுவதற்கான தேவை என்றால் புதியதொரு குடி இருப்புப் பகுதி ஏற்பட்டு அது வழிபாடுத்தளங்களுக்கு தொலைவில் அமைந்திருந்தால் தான் அங்கு தேவைப்படும். மற்றபடி ஏற்கனவே அமைந்த குடி இருப்புப் பகுதிகளில் புதிய வழிபாட்டுத் தளங்களை அதுவும் பலமதத்தினருக்கும் பொதுவான ஒரு இடத்தில் அமைப்பதால் சமூக அமைதி கெடுகிறது என்பதுடன் மேற்கண்ட பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இவை முற்றிலும் தவிர்க்கப் படவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் வழிபாடுத்தளங்களை அகற்ற அந்தந்த மத நலவிரும்பிகள் முன்வருவதே மத நல்லிணக்கத்திற்கு நல்லது.

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் - என்கிற தீர்ப்பையும் வழிகாட்டுதல்களையும் வரவேற்கிறேன்.

"உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்" - இரண்டையும் நன்கு உணர்ந்து கொண்டால் புறவழிபாட்டுத் தளங்கள் அதுவும் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் வழிபாட்டுத் தளங்கள் தேவைப் படாது.


அப்படியும் பொது வழிபாட்டுத் தளம் வேண்டும் என்போர் பூசலார் முறையைப் பின்பற்றிக் கட்டலாம், அது அனைத்து மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத் தலங்களை விருப்பம் போல் அமைத்துக் கொள்ள ஏற்றதொரு நல்வழிதான்

25 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

புதிதாக சாலை விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள் அமைந்துவிடுகின்றன. அதை அகற்றி திட்டம் நிறைவேறுவதற்குள் பல்வேறு எதிர்புகளையும் நீதிமன்றங்களின் தடை ஆணையையும் சந்திக்க நேரிட்டு மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளின் காலம் தாழ்கிறது.//


குயின் மேரீஸ் கல்லூரியே இந்தியாவின் புராதன சின்னம்!

கோவியில் இல்லாமலா?

இடிச்சா சும்மா விடுவமா?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//"உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்" - இரண்டையும் நன்கு உணர்ந்து கொண்டால் புறவழிபாட்டுத் தளங்கள் அதுவும் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் வழிபாட்டுத் தளங்கள் தேவைப் படாது.

அப்படியும் பொது வழிபாட்டுத் தளம் வேண்டும் என்போர் பூசலார் முறையைப் பின்பற்றிக் கட்டலாம், அது அனைத்து மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத் தளங்களை விருப்பம் போல் அமைத்துக் கொள்ள ஏற்றதொரு நல்வழிதான்//

நாயன்மார்களின் குலகுழுந்து...
சிங்கை சைவ மாமணி கோவியார் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.:)

பூசலார் மனதில் கட்டிய கோவில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறதே அது ஏன் :) ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாயன்மார்களின் குலகுழுந்து...
சிங்கை சைவ மாமணி கோவியார் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.:)

பூசலார் மனதில் கட்டிய கோவில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறதே அது ஏன் :) ?
//

சேக்கிழாரையும், திருத்தொண்டர் புராணங்களையும் விமர்சனம் செய்து இருக்கிறேன். அறிவுக்கு ஒவ்வாதவை என்றுமே ஏற்புடையவை அல்ல. ஆகவே சைவ மாமணிப் பட்டத்தை நிராகரிக்கிறேன் :)

அதே சமயத்தில் எந்த ஒரு தகவல்களிலும் நல்ல கருத்துக்கள் கூறப்பட்டு இருந்தால் அதை மட்டும் உள்வாங்கிக் கொள்வது வழக்கம், அது சைவமாக இருந்தால் என்ன அசைவாமாக இருந்தால் என்ன வைணவமாக இருந்தால் என்ன பிற மதக் கருத்துகளாக இருந்தால் என்ன?

:)

துளசி கோபால் சொன்னது…

முதலில் எல்லா இடங்களையும் சுத்தமா வச்சுக்கிட்டு அப்புறம் கோவிலோ மற்ற மத சம்பந்தமான வழிபாட்டு இடங்களோ கட்டட்டும்.

எனக்கென்னவோ......... 'சாதியை ஒழிச்சது' மாதிரி இதுவும் சுலபமுன்னே தோணுது:-)))))))))))))))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

துளசி கோபால் said...
முதலில் எல்லா இடங்களையும் சுத்தமா வச்சுக்கிட்டு அப்புறம் கோவிலோ மற்ற மத சம்பந்தமான வழிபாட்டு இடங்களோ கட்டட்டும்.

எனக்கென்னவோ......... 'சாதியை ஒழிச்சது' மாதிரி இதுவும் சுலபமுன்னே தோணுது:-)))))))))))))))))))))//


ஓ!

சாதியை ஒழிச்சாச்சா?

சாதியை ஒளிச்சாச்சா?

எழுத்துப்பிழை இல்லையே!?


:))))))

துளசி கோபால் சொன்னது…

கவிஞரே,

உமக்குத் தெரியாதா? :-))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

துளசி கோபால் said...
கவிஞரே,

உமக்குத் தெரியாதா? :-))))))//

துளசியம்மா!

கண்ணுக்குத் தெரிச்சதப் படிச்சு வைக்கிறவனுங்க.

வேற ஒன்னும் சொல்லிக்கொள்ளும்படி இல்லைங்களே!

அவ்வ்வ்வ்!

வால்பையன் சொன்னது…

நாய் கூட சீசனில் தான் சண்டை போடும், நிறையா விலங்குகள் எப்பவுமே வேறு ஆணை அண்டவிடாது!

கோவில் என்ற ஒன்று ஆதிகாலத்தில் இல்லயேயில்லை, பலிபீடம் தான் இருந்தது! அந்த பலிபீடமும் தேவையில்லை என்றானபோது, சிலர் சோம்பேறிகளின் தேவைக்காக வந்ததே கோவில்!

சாமியாரா போவோர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் எதையோ புதுசா கண்டுபிடிச்சா மாதிரி எல்லோரையும் உட்கார வைச்சு கத வுடுறாங்களே அதான் முடியல!

பித்தன் சொன்னது…

// மற்றொரு தெருநாயை அல்லது அடுத்தத் தெரு நாயை தன்னுடைய தெருவிற்குள் நுழைய அனுமதிக்காது. //

என்ன அண்ணே எப்ப இருந்து இப்படி மாறுனிங்க? இந்த பதிவுல எனக்கு ஒரு உள்குத்து இருக்கற மாதிரி தோனுது. விநாயகர் ஊர்வலத்தை அனுமதிக்காத தெரு ஆளுக்களுக்கு சொல்லறிங்களா? இல்ல அவங்க தெருவுல போய் களவானித்தனமா கத்துற இந்துத்துவா பத்தி சொல்லறிங்களா? இல்ல கண்ட தேவி தேரொட்டம் பத்தி சொல்லறிங்களா? இல்ல இப்ப தேவர் பூஜை பத்தி சொல்லறிங்களானு தெரியல்லை.இப்படி எல்லாரையும் பத்தி சொல்லக்கூடாது.உதை விழும். பார்த்து இருங்க.
உங்களுக்கு நாத்திகமும், பகுத்தறிவு பத்தி சரியா தெரியல்லை. அவங்க தலைவர்கள் யாரது இது பத்தி பேசியிருக்கங்களா? நீங்க மட்டும் ஏன்? உங்கள் இயக்கத்தின் வழக்கம் போல பார்ப்பானையும், பார்ப்பனீயத்தையும் மட்டும் திட்டுங்க அதான் ரொம்ப ஸேப்பிடி.

// புதிதாக சாலை விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள் அமைந்துவிடுகின்றன. //
இதை விமர்சனம் பண்ணினால் அது கேர்ட் விமர்சனம் மாதிரி ஆகிவிடும். நான் உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆனையை மனப்பூர்வமாக ஏற்க்கின்றேன். அதே சமயம் இதுகூட சேர்த்து , தலைவர்கள் என்ற பெயரில் கண்ட கண்ட இடத்தில் கண்ட நாய்களுக்கும் சிலை வைப்பது பற்றி சொல்லியிருந்தால் நல்லா இருக்கும். நாய்களும் மிருகங்களும் சிலை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் நம் தலைவர்கள் சிலை வைப்பதை தொழிலாக கொள்கிறார்கள்.
(அப்பாட ஒரு பதிவர் உள்னாட்டு கலகம் வர சான்ஸ் இருக்கு. பத்தவச்சுட்டியே பரட்டை!!!!!)

துளசி கோபால் சொன்னது…

பித்தரே,

//இந்த ஆனையை மனப்பூர்வமாக ஏற்க்கின்றேன்.//

ஆஹா..... ஆனைச் சிலைக்கு விவிலக்கு உண்டுதானே?

ஆனை= ஆனை

ஏற்க்கின்றேன் =ஏற்கின்றேன்

பித்தன் சொன்னது…

// பூசலார் மனதில் கட்டிய கோவில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறதே அது ஏன் :) ? //
சுவாமிஜின் ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். காஞ்சிபுரத்தில் உள்ளது(கைலாச நாதர் ஆலயம்) மன்னன் பல்லவன் கட்டிய கோவில். பூசலாரின் மனதில் உள்ளது போல அதே மன்னன் கட்டிய கோவில் மருந்தீஸ்வரர் ஆலயம் திருவான்மியுரில் உள்ளது.

பித்தன் சொன்னது…

// கோவில் என்ற ஒன்று ஆதிகாலத்தில் இல்லயேயில்லை, பலிபீடம் தான் இருந்தது! அந்த பலிபீடமும் தேவையில்லை என்றானபோது, //

இதுல வால் பையன வச்சு வெட்டலாம் இருந்தன், அதுக்குள்ள அம்மா தடை சட்டம் கொண்டு வந்துட்டாங்க. இல்லைனா வெட்டியிருக்கலாம். அப்ப கபாட புரத்தில் இருந்தாக சொன்ன கொற்றவை கோவில் பலிபீடம் தான? உறையூரில் இருந்த சோழர்கள் கோவில் எல்லாம் பலிபீடம் தானா? ஆரியர்கள் வரும் முன்பே சங்கம் வளர்த்த தமிழர்கள் இந்த பலிபீடங்களைத் தான் வணங்ககினார்களா.
தமிழ் பதிவர்கள் உன்மையை விளக்கினால் நன்றாக இருக்கும்.

வால்பையன் சொன்னது…

//// கோவில் என்ற ஒன்று ஆதிகாலத்தில் இல்லயேயில்லை, பலிபீடம் தான் இருந்தது! அந்த பலிபீடமும் தேவையில்லை என்றானபோது, //

இதுல வால் பையன வச்சு வெட்டலாம் இருந்தன், //


ஆதி புத்தி உங்களை மட்டும் விட்டு போகல போல!
மனிதன் முதலில் பயந்தது இயற்கைக்கு தான்! அதற்கு அவன் பலி தான் கொடுத்தான்!
மனித நாகரிகத்தின் முன்னோடிகளான மாயன் மற்றும் ஆஷ்டெக் நாகரிகத்தில் பலிபீடங்கள் தான் உள்ளன!,

கிரேக்க நாகரீகம் கூட பெரிது பெரிதாக சமாதிகள் தான் கட்டின!
அதாவது தலைவனே கடவுள், இப்ப புரியுதா! எப்படி கடவுள் உருவாச்சுன்னு!

பித்தன் சொன்னது…

// ஆஹா..... ஆனைச் சிலைக்கு விவிலக்கு உண்டுதானே? //

ஆனைதான் டாப்புங்க டீச்சர், இந்த வெத்துவேட்டு எல்லாம் டூப்புங்க!. சும்மா ஒரு ஆர்டர்போடுவாங்க. நாலு தெரு கோவில இடிப்பாங்க.
அப்புறம் குருவி,அந்தை,கிளி,புலி எல்லாம் கட்டுரை எளுதும். அப்புறம் அதை பார்த்து நம்ம பதிவர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொறிஞ்சுக்குவாங்க. அப்புறமா எல்லாரும் சமர்த்த நல்ல பிள்ளையா இதை மறந்துட்டு போய்டுவாங்க. நம்ம பசங்க ஸே சுவீட்.

பித்தன் சொன்னது…

// கிரேக்க நாகரீகம் கூட பெரிது பெரிதாக சமாதிகள் தான் கட்டின!
அதாவது தலைவனே கடவுள், இப்ப புரியுதா! எப்படி கடவுள் உருவாச்சுன்னு! //
இதை நான் எனது இந்திய வரலாறு பற்றிய கட்டுரையில் எளுதியிருக்கேன். இதுல கூட நம்ம நாகரீங்களை ஏன் மேற்கோள் காட்ட மறுக்கிறீர்கள். பாசிச சிந்தனையா? இந்தியாவிலும் இப்படி தலைவர்கள் தான் கடவுள் ஆனார்கள், கடவுள் தான் தலைவராக அவதாரம் ஆனார். கொஞ்சம் ஒரு நூறு வருசம் கழித்து வந்தீங்கனா கண்டிப்பா எம் ஜி யாருக்கு கோவிலும் மூன்று கால பூஜையும் இருக்கும்,.

பித்தன் சொன்னது…

// எனக்கென்னவோ......... 'சாதியை ஒழிச்சது' மாதிரி இதுவும் சுலபமுன்னே தோணுது:-)))))))))))))))))))))// //

எங்க ஒளிச்சு வச்சு இருக்கிங்க!!!! சொல்லவே இல்லை,, ஆமா எந்த சாதிக்காரங்க வீட்டுல வச்சு இருக்கிங்க??????

வால்பையன் சொன்னது…

//இதை நான் எனது இந்திய வரலாறு பற்றிய கட்டுரையில் எளுதியிருக்கேன். இதுல கூட நம்ம நாகரீங்களை ஏன் மேற்கோள் காட்ட மறுக்கிறீர்கள். பாசிச சிந்தனையா? இந்தியாவிலும் இப்படி தலைவர்கள் தான் கடவுள் ஆனார்கள், கடவுள் தான் தலைவராக அவதாரம் ஆனார். கொஞ்சம் ஒரு நூறு வருசம் கழித்து வந்தீங்கனா கண்டிப்பா எம் ஜி யாருக்கு கோவிலும் மூன்று கால பூஜையும் இருக்கும்,.//


நான் ஆரம்பகால நாகரிகத்தை தான் சொல்லியிருக்கிறேன்! அங்கேயிருந்து ஆரம்பித்து வந்த பழக்கம் தான், தலைவர்களை கும்பிடுவது, உங்களது கட்டைரில் பசுபதிநாதர் என்று உளரி வைத்ததையெல்லாம் நம்பினால் தானே அதை நான் குறிப்பிடுவதற்கு!

பெரியாருக்கே மாலை போட்டு பொட்டு வைக்கும் போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட மாட்டார்களான என்ன?
பின்ன ஏன் அரசாங்கம் பொது இடத்தில் கோவில் கட்டாதேன்னு சட்டம் போடாது!

வடுவூர் குமார் சொன்னது…

நான் கூட ஏதோ சிங்கப்பூர் தெரு நாயை பற்றி தான் சொல்லவருகிறீர்களோ என்று நினைத்தேன்.
இப்போதெல்லாம் வழியை மறித்துக்கொண்டு நிற்கும் வழிபாட்டு தலங்களை பார்த்தால் கோபமாக வருகிறது.
மனசே கோவிலாக...எவ்வளவு வருடமாக யார் யாரோ சொன்னாலும் பலருக்கு அவை வாய்பதில்லை என்பது தான் நிஜம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குயின் மேரீஸ் கல்லூரியே இந்தியாவின் புராதன சின்னம்!

கோவியில் இல்லாமலா?

இடிச்சா சும்மா விடுவமா?//

நான் இந்(து)த அரசியலுக்கு வரல :)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
முதலில் எல்லா இடங்களையும் சுத்தமா வச்சுக்கிட்டு அப்புறம் கோவிலோ மற்ற மத சம்பந்தமான வழிபாட்டு இடங்களோ கட்டட்டும்.

எனக்கென்னவோ......... 'சாதியை ஒழிச்சது' மாதிரி இதுவும் சுலபமுன்னே தோணுது:-)))))))))))))))))))))

10:47 AM, September 30, 2009//

துளசி அம்மா,

எனக்கும் ஜோதிபாரதி சொன்னது போல் தான் தோன்றுகிறது. ஜாதி ஒழிந்ததா ஒளிந்ததான்னு பார்த்தால் ஒளிந்தது என்று தான் சென்னையில் சாதிப் பேரணிகள் உணர்த்துகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
சாமியாரா போவோர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் எதையோ புதுசா கண்டுபிடிச்சா மாதிரி எல்லோரையும் உட்கார வைச்சு கத வுடுறாங்களே அதான் முடியல!

12:31 PM, September 30, 2009
//

யாம் பெற்ற இன்பம் என்று நினைக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் இயக்கத்தின் வழக்கம் போல பார்ப்பானையும், பார்ப்பனீயத்தையும் மட்டும் திட்டுங்க அதான் ரொம்ப ஸேப்பிடி.
//

பித்தன் அண்ணாத்தே,

எப்ப பார்த்தாலும் பாப்பான் பாப்பான் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களே ? உண்டக்கட்டி வாங்க வரிசையில் நின்ற போது கைவிரித்துவிட்டார்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தன் said...
// பூசலார் மனதில் கட்டிய கோவில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறதே அது ஏன் :) ? //
சுவாமிஜின் ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். காஞ்சிபுரத்தில் உள்ளது(கைலாச நாதர் ஆலயம்) மன்னன் பல்லவன் கட்டிய கோவில். பூசலாரின் மனதில் உள்ளது போல அதே மன்னன் கட்டிய கோவில் மருந்தீஸ்வரர் ஆலயம் திருவான்மியுரில் உள்ளது.
//

திருவான்மியூரா திருவெற்றியூரா ? சரியாச் சொல்லுங்க பாஸ். மருந்தீஷ்வரனும் வைத்தீஸ்வரனும் ஒண்ணு இல்லையா ?

மருந்தீஷ்வரன் கோவில் நிறைய ஊர்களில் உண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தன் said...
கொஞ்சம் ஒரு நூறு வருசம் கழித்து வந்தீங்கனா கண்டிப்பா எம் ஜி யாருக்கு கோவிலும் மூன்று கால பூஜையும் இருக்கும்,.
//

பக்கத்தில் உடனுறையும் அம்மன்கள் பற்றியும் சொல்லி இருக்கலாம்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வூர் குமார் said...
நான் கூட ஏதோ சிங்கப்பூர் தெரு நாயை பற்றி தான் சொல்லவருகிறீர்களோ என்று நினைத்தேன்.
இப்போதெல்லாம் வழியை மறித்துக்கொண்டு நிற்கும் வழிபாட்டு தலங்களை பார்த்தால் கோபமாக வருகிறது.
மனசே கோவிலாக...எவ்வளவு வருடமாக யார் யாரோ சொன்னாலும் பலருக்கு அவை வாய்பதில்லை என்பது தான் நிஜம்.

2:34 PM, September 30, 2009
//

வளைகுடாவில் இந்துக்களுக்கு மனக் கோவில் தானே !
:)

நன்றி அண்ணே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்