பின்பற்றுபவர்கள்

27 செப்டம்பர், 2009

அந்தக் குருக்கள் - இந்து சமயத்தின் அழுக்கு ?

காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் குருக்கள் ஒருவர் கருவறையில் சிவனை சாட்சியாக வைத்துக் கொண்டு கசமுசா செய்த விவரம் ஜூவியில் படத்துடன் வெளி ஆகி இருக்கிறது.

கோவில், பக்தி, நம்பிக்கையுடன் பக்தர்கள் வரும் இடம், புனிதம், நாத்திகர்கள் விரும்பிவராவிட்டாலும் மரியாதைக்கு உரிய இடமாக கருதும் ஒரு தலம், தெய்வீகப் பணியில் இடம் பெரும் ஒருவர் இத்தகைய தகாத செயலைச் செய்யலாமா ? - என்கிற பொதுப் புத்திக் கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால் இது வெறும் சாதாரண நிகழ்வு, கட்டற்ற காம வயப்படும் ஒருவன், அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத ஒரு காமுகன் பொது இடம் என்றும் பார்க்காமல் நடந்து கொண்ட ஒரு நிகழ்வு. இது போன்ற வக்ரம் பிடித்த மனிதர்கள் சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களில் ஒருவராகக் கூட இருப்பர், உயிரைக் காப்பாற்றும் தொழில் இருக்கும் மருத்துவர்களில் ஒருவராகக் கூட இருப்பர்.

இது போன்ற மனிதர்களை ஒரு குழுவுக்குள் அடக்கி குழுவை நோக்கிய கேள்விகளாக, அந்தக் குழுவின் ஒழுக்கம் குறித்தக் கேலியாக இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பொது புத்தி சார்ந்த ஒரு அறிவீன சிந்தனைத் தாக்கமாகத்தான் தெரிகிறது.

அந்த நிகழ்வைக் குறித்தக் ஜூவிக் கட்டுரையில் நான் படித்த அபத்த பொதுப் புத்திச் கருத்துகள்

* இந்து மதத்தில் நடந்த ஒன்றை வெளிச்சம் போட்டுக்காட்டுவதைப் போல் பிற மதத்தினரின் ஒழுங்கீனங்களையும் ஜூவி வெளி இடுமா ? - நடராஜா.

- இது எவ்வளவு அபத்தமான கேள்வி பாருங்கள், யாருமே யோக்கியமில்லை என்று சொல்வதுடன், அதை ஞாயப்படுத்துவதும் போலவும், ஒரு தனிமனிதனின் தவறுகளை தன் மதத்து தவறு போன்ற ஒப்புதல் வாக்குமூலமும் அந்தக் கேள்வியில் அடங்கி இருக்கிறது

******

மக்களிடம் நேரடியாக சேவை அல்லது பணி ஆற்றக் கூடியவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது வரையறைச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் வழியுறுத்தல்கள் கிடையாது, அப்படிப் பட்ட தொழில்களில் சேவைகளில் ஒழுக்கம் கெட்டவர்கள் இருக்கும் போது அந்த சேவையில் தற்காலிகத் தடை ஏற்படுவதுடன், அதே தொழிலைப் பணியைச் செய்பவர்களையும் சந்தேகத்துடன் பார்க்கக் கூடிய சூழலை பொதுச் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது.

என்னைக் கேட்டால் அந்தக் குருக்களில் செயல் ஒரு தனிமனித அபிலாசை, அதைப் பொது இடத்தில் செயல்படுத்து படம் பிடித்துக் கொண்டது தனிமனித வக்ரம். இதை இந்து மதத்துடனோ, புனிதத் தன்மையுடனோ பார்பதிலோ, பார்பன சமூகத்துச் செயலாகவோ கட்டமைக்கச் செய்யும் முயற்சியில் ஏற்புடையவன் அல்ல. கோவிலில் பணி புரியும் பார்பனர்களில் 95 விழுக்காட்டிற்கும் மேலானோர், கோவில் தங்களுக்கு வாழ்வியல் ஆதாரம் என்பதால் அதை நேர்த்தியுடனும், மரியாதையுடனும் தான் செய்துவருகிறார்கள். ஒரு சில தனிமனிதர்களின் கீழான நடவடிக்கையை அந்த சமூகத்தின் பொதுக் குற்றம் போல் கட்டமைக்கப்படுவது பார்பன சமூகத்திற்கு எதிரான பொதுபுத்தியின் வன் செயலாகப் பார்க்கிறேன்.

ஒரு ஆசிரியர் தனது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால் அது ஆசிரியர்களின் மீதான ஒட்டுமொத்த குற்றம் ஆகாது. ஒரே ஒரு மருத்துவர் பிரகாஷ் பெண்களை வைத்து நீலப்படம் எடுத்தால் மருத்துவர்கள் அனைவருமே அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று பார்பது எப்படி சரியோ, அது போல் தவறு இழைத்த ஒரு குருக்களின் செயலை பார்பன சமூகத்துச் செயல் போல் எழுதப்பட்டால் அதுவும் கண்டிக்கத் தக்கதே.

அந்த குருக்களின் செயல் குற்றமா இல்லையா என்பதைவிட அந்தச் செயல் புனிதத் தன்மை என்கிற கட்டமைப்பின் மீது விழும் எச்சிலாக அந்தப் புனிதத் தன்மை மீது சிறுதும் நம்பிக்கையற்ற ஒருவன் தான் விரும்பியே மீறி அதன் மீது துப்பும் எச்சிலாகத்தான் நான் பார்க்கிறேன்.

*****

திருப்புகழ் எழுதிய அருணகிரி நாதர் பல விலைமகளிருடன் சல்லாபித்ததை திருப்புகழில் எழுதி இருக்கிறார், அருணகிரிநாதரின் திருப்புகழ் சைவத் தமிழ்பாடல்களில் சிறந்ததில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஆனால் அவையாவும் அவர் இறை நம்பிக்கைக் கொள்ளும் முன் நடந்தவை என்பதை அவைப் பாடல்களில் வருவதைப் பக்திப் பெருக்குடன் முருக பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

எல்லையற்ற காமம் யாருக்கும் துன்பம் தரவில்லை என்றால் அதை அடையும் முறை கூட தவறல்ல என்பதை சமூகம் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறது, ஆனால் அதே சமூகம் தங்களால் கட்டமைப்பட்டுள்ள புனிதத் தன்மைமீது எச்சில் விழும் போது தான் கோபம் கொள்கிறது. இந்தக் கோபம் ஞாயமானதா ? என்னைப் பொருத்து அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.

இந்தக் குருக்களை இந்துமதத்தின் அவமான சின்னமாக கருதி இந்து சமயம் இப்படித்தான் என்பது போன்ற மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதையும், அந்த ஒருவனின் செயலை பார்பனச் செயலாகப் பார்ப்பதெல்லாம் பொதுப் புத்திச் சார்ந்த அரைகுறை சமூகப் புரிதலாகப் பார்க்கிறேன்.

24 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

காரணம் என்னவா இருக்கலாம், தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கட்டமைப்பு(பிம்பம்), அதனையொட்டிய மக்களின் எதிர்பார்ப்பு ...????

வலசு - வேலணை சொன்னது…

//
அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.
//
மாபெரும் குற்றமாகக் கருதவில்லை

TBCD சொன்னது…

நட்ட நடுநிலைவியாதியா நீங்க..!!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மனித மனம் சஞ்சலப்படக்கூடியது ; என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும் மனம் மாறிருச்சின்னா ஒன்னும் பண்ணமுடியாது . அதனால் பின்னால் வரக்கூடியதையும் ( பின் விளைவுகள் ) ஏத்துதான் ஆகவேண்டும் . எவ்வளவு அவமானம் பாருங்க ; சே சே ... ஆண்டவன் தான் காப்பாத்தணும் ...

முகவை மைந்தன் சொன்னது…

நடு இரவுப் பதிவுக்குனே உங்களுக்கு செய்தி மாட்டுது பாருங்க :-)

Unknown சொன்னது…

<<<
மருத்துவர்கள் அனைவருமே அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று பார்பது எப்படி சரியோ, அது போல் தவறு இழைத்த ஒரு குருக்களின் செயலை பார்பன சமூகத்துச் செயல் போல் எழுதப்பட்டால் அதுவும் கண்டிக்கத் தக்கதே.
>>>

நல்ல சொல்லிருக்கீங்க கோவி.

எந்த ஒரு விசயத்தையும் அதை சார்ந்த சமுதாயத்துடன் தொடர்பு படித்தி பார்ப்பதுதான் கொடிது.

Sanjai Gandhi சொன்னது…

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ --- நாடோடிகள் படப் பாட்டுப் பாடினேன்.. :)

ரங்குடு சொன்னது…

அந்தக் குருக்கள் -

இன்றைய உலகம் எந்த ஒரு மனிதனையும் ஒழுக்கமாக இருக்க விடுவதில்லை என்பதே சரி.

சினிமா போஸ்டர்களாகட்டும், பத்திரிக்கைகளாகட்டும், செல் போன்களாகட்டும், இண்டர்நெட்
ஆகட்டும் - நமது அனுமதி இல்லாமலே நம்மை ஒழுக்கம் இழக்க வைத்து விடுகின்றன.

தனி மனித ஒழுக்கம் என்பது தற்போது யாரிடமும் இல்லாத ஒன்று. அன்னியன் போன்ற
திரைப் படங்களில் மட்டுமே காணக் கிடைப்பது.

சினிமா நாடக நடிகர் / நடிகைகளை தரக்குறைவானவர்களாகப் பார்த்த காலம் போய்,
அவர்களையே அம்மனாகவும், தெய்வமாகவும் அங்கீகரித்தோம்.

பிறகு அவர்களுக்கே கோவில் கட்டியும், முதலமைச்சர் பதவியில் அமர்த்தி அழகும் பார்த்தோம்.

இன்று, மத்திய தர வகுப்பினர் எங்கே தம் மகள், மகன் நடிக்க மாட்டானா என்று அவர்களுக்கு
பாட்டு, நடனம், நடிப்பு என்று எல்லாம் கற்றுத்தருவதையும் பார்க்கிறோம். இதற்கு ஜாதி ஒரு
தடை கிடையாது. கற்பு என்பது பிரச்சனையும் கிடையாது. பணம் மட்டும் தான் குறிக்கோள்.

எத்தனை பிராமணப் பெண்கள் இன்று சின்னத்திரையில் நடிப்பதைப் பார்க்கிறோம். இது ஒரு
வகையில் காலத்தின் கட்டாயம்.

இத்தனைப் பேருக்கு இல்லாத ஒழுக்கத்தை ஒரு குருக்களிடம் எதிர்பார்ப்பது?

சினிமா கதாநாயகர்கள், நாயகிகளை மேலெ விழுந்து நக்குவதைப் பார்க்கும் எவனுக்குத்தான் ஆசை
வராது? அவர்கள் செய்வதை அங்கீகரிக்கும் உலகம் குருக்களை என்ன செய்து விடும்?

குருக்களைப் பற்றிய படம் எடுத்து கிட்டத்தட்ட ஒரு வருஷமாகியும், இப்போது வெளி
வருவது மனதை உறுத்துகிறது. முதல் தவறு செய்த போதே இதைச் சுட்டிக் காட்டியிருந்தால்
மேற்கொண்டு தவறுகள் நடக்காமல் இருந்திருக்கலாம், அல்லது கோவிலில் தவறுகள் நடப்பதாவது
தவிர்க்கப் பட்டிருக்கலாம். இப்போது எனக்கு முளைக்கும் சந்தேகம் என்னவென்றால்
வீடியோ எடுத்த நபர் அளவுக்கதிகமாக குருக்களை 'ப்ளாக்மெயில்' செய்து, கடைசியில்
குருக்களே வாழ்க்கை வெறுத்து என்ன வேணுமானாலும் பண்ணிக்கோ என்று சொல்லியிருக்கலாம்.

காவல் துறை இதை பல வழியிலும் விசாரித்து முழு உண்மையைக் கொணரும் என நம்புவோம்.

சுமார் 20, 25 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்து பட்டர்களில் ஒருவர் விலைமாது வீட்டிற்கு
அடிக்கடி சென்று வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அந்த நாளைய சமுதாயம்
கண்டித்தாலும், மீடியாக்களின் வீச்சு இன்றைய அளவு இல்லாததால் இந்த அளவு பாதிப்பு
ஏற்படவில்லை.

ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடிகள் அரங்கன் சேவையைத் துறந்து தேவ தேவி
என்னும் நடன மாதுவின் வீட்டில் வாழ்ந்தாரென்பது வரலாறு. அப்போதைய சமூக நிலைப்படி
அது மிகவும் தவறானதானாலும், அவரையும் சமுதாயம் ஏற்றுக் கொண்டது.

ஐந்து கணவர்களை அடைந்த திரௌபதி கூட கர்ணன் மீது தனியாக ஆசை கொண்டிருந்ததாக
மகா பாரதம் கூறுகிறது.

என்னைக் கேட்டால், உலகம் இரண்டே வகை.
'மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள், மற்றவர்கள் குற்றம் செய்தும்
மாட்டிக்கொள்ளாதவர்கள்'.

மணிகண்டன் சொன்னது…

*****
சுமார் 20, 25 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்து பட்டர்களில் ஒருவர் விலைமாது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அந்த நாளைய சமுதாயம்
கண்டித்தாலும், மீடியாக்களின் வீச்சு இன்றைய அளவு இல்லாததால் இந்த அளவு பாதிப்பு ஏற்படவில்லை.
*****

ஸ்ரீரங்கத்தை பற்றி கூறியதால் - பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பு அங்கு பாடசாலை நடத்தி வந்த ஒரு ப்ரோகிதர் / ஆசிரியர் தன்னிடம் வேதம் பயின்ற சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த வேலைக்காரம்மா போலீசிடம் கூறி அதனால் கைதானதும் ஞாபகம் வருகிறது.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சமயம் - காமம் - அழுக்கு....

சரியான காம்பினேஷனை தேர்வு செய்யவும் :)

ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்ல

அவ்வ்வ்வ்....

கோவி.கண்ணன் சொன்னது…

//வலசு - வேலணை said...
//
அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.
//
மாபெரும் குற்றமாகக் கருதவில்லை//

:)

பலரும் வணங்கும் பொது இடத்தில் சல்லாபித்தது குற்றம் தான், ஆனால் அந்த மனிதனின் பலருடன் காமம் போல் வேறு பலரும் திரைமறைவில் நடந்து கொள்வது காமன் தான். அதனனல் தான் பெரும்குற்றமல்ல என்று சொன்னேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//kattan|தெகா said...
காரணம் என்னவா இருக்கலாம், தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கட்டமைப்பு(பிம்பம்), அதனையொட்டிய மக்களின் எதிர்பார்ப்பு ...????
//

காரணம் என்னவாகக் கூட இருக்கட்டம், ஆனால் இவை வெளியில் தெரிந்தால் ஏற்படப்போகும் அவமானம் என்பதைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு சிந்திக்கவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
மனித மனம் சஞ்சலப்படக்கூடியது ; என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும் மனம் மாறிருச்சின்னா ஒன்னும் பண்ணமுடியாது . அதனால் பின்னால் வரக்கூடியதையும் ( பின் விளைவுகள் ) ஏத்துதான் ஆகவேண்டும் . எவ்வளவு அவமானம் பாருங்க ; சே சே ... ஆண்டவன் தான் காப்பாத்தணும் ...
//

பெரிய பெரிய சாமியாருங்க தவறிழைக்கும் போதும் ஆண்டவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள். ஐ மீன் அரசியல்வாதிகள் காப்பாற்றுகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
நட்ட நடுநிலைவியாதியா நீங்க..!!
//

இருக்கட்டும். தனிப்பட்டவர்களின் குணநலன்களைப் பொதுப்படுத்த முடியாது தம்பி.

கோவி.கண்ணன் சொன்னது…

// முகவை மைந்தன் said...
நடு இரவுப் பதிவுக்குனே உங்களுக்கு செய்தி மாட்டுது பாருங்க//

நன்றி. காலையில் எழுதினாலும் இதையே தான் எழுதி இருப்பேன்

பித்தனின் வாக்கு சொன்னது…

இந்த குருக்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் அதில் சந்தொகம் இல்லை. விசயம் காவல்துறையிடம் போயுள்ளது. எனவே அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
நம்ம ஆளுக்களுக்கு இது மாதிரி கிளுகிளுக்கும் காமக்கதைகள்னா போதும் மீடியாக்கள் கொட்டியா புடிச்சுகுவாங்க. அதும் சாமியார் மேட்டர்னா போதும், பத்திரிக்கை பகுத்தறிவுவாதிகள் அத்தனை பேரும் பரவசம் ஆகிடுவாங்க. மொதல பக்கம்,பக்கமா எழுதி ஒரு சுய இன்பம் அடைவாங்க, இந்த மேட்டர்ல ஒரு பார்ப்பான் வேறய கேக்கவேனாம் என்ன அல்லவா கிடைச்ச மாதிரி பதிவர்கள் எல்லாம் இவனுக யோக்கியனுக மாதிரியும் சமுகம் மட்டும் தாழ்ந்த மாதிரியும் எழுதுவானுக, இப்ப பாரு எல்ல கூடி கும்மியடிப்பானுக, இவனுக எழுதுர வக்கிறம் அந்த அனுபவிச்ச ஆள் கூட பார்த்திருக்கமாட்டான். என்ன சொல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தன் said...
இந்த குருக்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் அதில் சந்தொகம் இல்லை. விசயம் காவல்துறையிடம் போயுள்ளது. எனவே அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
நம்ம ஆளுக்களுக்கு இது மாதிரி கிளுகிளுக்கும் காமக்கதைகள்னா போதும் மீடியாக்கள் கொட்டியா புடிச்சுகுவாங்க. அதும் சாமியார் மேட்டர்னா போதும், பத்திரிக்கை பகுத்தறிவுவாதிகள் அத்தனை பேரும் பரவசம் ஆகிடுவாங்க. மொதல பக்கம்,பக்கமா எழுதி ஒரு சுய இன்பம் அடைவாங்க, இந்த மேட்டர்ல ஒரு பார்ப்பான் வேறய கேக்கவேனாம் என்ன அல்லவா கிடைச்ச மாதிரி பதிவர்கள் எல்லாம் இவனுக யோக்கியனுக மாதிரியும் சமுகம் மட்டும் தாழ்ந்த மாதிரியும் எழுதுவானுக, இப்ப பாரு எல்ல கூடி கும்மியடிப்பானுக, இவனுக எழுதுர வக்கிறம் அந்த அனுபவிச்ச ஆள் கூட பார்த்திருக்கமாட்டான். என்ன சொல்ல
//
பித்தன் அண்ணே,

நோ டென்சன். பதிவர்கள் அப்படி எதுவும் எழுதல. ஏன் காண்டு ஆகிறிங்க, ஜூவி கட்டுரை வெளி ஆகி உள்ள ஜூவியின் பக்கத்தில் தான் நீங்கள் சொல்வது போன்று வாசகர் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன, அதைப் பதிவர்கள் எழுதியது போல் தெரியவில்லை

ஷாகுல் சொன்னது…

செருப்புக் காலுடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகாவுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் போரட்டம்.சினேகாவின் உருவபொம்மை எரிப்பு.

யுவகிருஷ்ணா சொன்னது…

’அந்த’ சிடி ஒரு காப்பி கிடைக்குமா? அதிஷாவுக்கு வேணுமாம்!

அறிவிலி சொன்னது…

நடு நிலைமையான கருத்து. பாராட்டுகள்.

வால்பையன் சொன்னது…

பெரும்பான்மையான கோவில் நகரங்கலில் தான் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது!

உதாரணம்:பழனி, திருத்தணி!

Unknown சொன்னது…

மனுஷன்னா அலுவலகத்தில் தப்பு பண்ணுவது சகஜம். இதுக்கு போய் அலட்ட்க்கலாமா

Unknown சொன்னது…

கோவில் கூடாததென்பதற்காக அல்ல.. கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாததென்பதற்காக (நன்றி கலைஞர் கருணாநிதி).

"முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்" , "மதராசாக்கள் அனைத்தும் தீவிரவாதத்தை பயிற்றுவிக்கின்றன" -என்று கூறும் நல்லுலகமே... "பிராமணர்கள் அனைவரும் காம கேடிகள் அல்ல.. ஆனால் காம கேடிகள் அனைவரும் பிராமணர்கள்" என்று தங்களின் திருவாய் மலர்வீர்களா? "பிராமணர்கள் பூசாரிகளாக உள்ள கோவில்கள் அனைத்தும் காம களியாட்டங்களை ஊக்குவிக்கின்றன" என்று பறை சாற்றுவீர்களா?

அருண்சங்கர் சொன்னது…

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் கோவி. கண்ணன். தனி மனிதன் ஒருவன் செய்யும் குற்றங்களுக்கு பின் மதத்தினை சாதகமாக பயன் படுத்திக்கொள்ளகூடாது என்று நன்றாக கூறியுள்ளீர்கள். நானும் இந்த சம்பவம் பற்றி ஜூ.வி யில் படித்தேன். தவறு செய்யும் பட்சத்தில் அவன் அதன் பலனை அடைந்தே தீர வேண்டும். மேலும் ஆசிரியர், மருத்துவர், மத குருக்கள் போன்றோர் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்