நாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக பிஜேபி துணையுடன் வெகு சிறப்பாக திருவள்ளுவர் சிலையைத் திறந்தாச்சு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காங் - திமுக உறவில் அரிப்பு ஏற்பட்டு இருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொறிந்துவிட்டுக் கொண்டு இரத்தமாகி விரிசல் ஆகிவிடும் சூழலுக்கு வளர்ந்து கொண்டு செல்லும் என்பதாக ஆருடம் அமைகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சின்னு கனவு கண்டுப்பாத்தாங்க, அது கூறு அற்றது என்பதால் ஆட்சியில் பங்கு என்று சொல்லிப் பார்த்தார்கள், மயிலே மயிலே என்றால் இறகு போடாமல் திமுக விட்டையை மட்டும் போடுவதால் தமிழக காங்கிரசாருக்கு ஏகக் கடுப்பு ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. அது தவிர்த்து மத்தியில் திமுக ஆதரவு இல்லாமலேயே இனி ஆட்சியை தொடர முடியும் என்ற நிலையில் திமுகவிற்கு மத்திய அமைச்சர்கள் பதவி கொடுத்தது கூட தேவையற்ற சுமையாகவே கருதுகிறார்கள், இராஜிவ் காந்தி மகன் திருவாளர் ராகுல் வட இந்தியாவில் நல்லா செயல்படுகிறாராம், அவரது பார்வை இப்ப தமிழகம் பக்கம் பட்டு இருக்கிறதாம். (இப்ப தான் அவங்க குடும்பம் இலங்கையிலிருந்து தமிழகம் பக்கம் பார்வையை திருப்புது) கேப்டனை கூட்டு சேர்த்துக் கொண்டு காங்கிரசு தலைமை கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலை தனித்து சந்திக்கும் முடிவில் காங் இருக்கிறதாம். மயிரைக் கட்டி மலையை இழுப்போம்....வந்தால் மலை போனால் மயிர் என்பதாக தமிழக காங்கிரசார் தெம்புடன் வலம் வருகிறார்களாம். இந்த ஆருடங்கள் கிட்டதட்ட பலிக்கும் உறுதி என்ற நிலையில் தான் திமுக - பிஜேபி நெருங்கி வருவதாக மற்றொரு ஆருடம் சொல்கிறது. காங் - கை திட்டுவதற்காகவே திமுகவினர் திடீர் ஈழ ஆதரவாளர் ஆகும் நாடக வைபவம் இனி(தே) தொடங்கும்.
*****
முடித்திருத்தும் இலவச சேவை : பதிவர், நண்பர், மதுரைவாழ் பெரியவர் திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா அளித்த தகவல் ஒன்று அதை அப்படியே தருகிறேன்.
மாண்புமிகு மருத்துவச் சமூகத்தைப் பத்திக் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கும் பதிவு:
இன்று காலை ஜெயா செய்திகளில் ஒரு நெகிழ்ச்சியுற வைத்த செய்தித் தொகுப்பு.
சேலத்தில் ஐயனார் என்ற ஒரு முதிய முடிதிருத்தும் தொழிலாளி. இவர் மாதம் ஒருமுறை சேலத்திலுள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் மற்றும் ஷவரம் செய்யும் சேவையை செய்து வருகிறார். மேலும் அவரிடம் முடிதிருத்த வரும் ஏழை மக்களிடமும் பணம் வாங்குவதில்லையாம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது., "எனக்கு பார்வை நல்லா தெரியற வரைக்கும் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு வருவேன் சார். எனக்கு ஏழைகளுக்கு உதவணுங்கற எண்ணம் உண்டு ஆனா எனக்கு வசதி இல்ல அதனால என் தொழில் மூலமா மாசம் ஒரு முறை இத பண்ணிகிட்டு வரேன். எனக்கு கண்பார்வை நல்லா இருக்கற வரை இத செய்வேன்" என்று மிகவும் அடக்கமாகக் கூறினார்.
கொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக!!
- எதிராஜன்
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post.html
(இதே தகவல் இட்லி வடையிலும் பரிமாறப்பட்டு இருக்கிறது)
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ! - ஐயன் திருவள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாக சிலர் இன்னும் இருக்கிறார்கள்.
*****
வம்பு தும்பு :
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு!
விஜய் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகுவது உறுதி என்பதாக செய்திகள் கசியும் இன்னேரத்தில் கார்திக் சிதம்பரம், ரஜினி ரசிகர்களை பற்றி சர்சைக்குரிய விதத்தில் பேசி இருக்கிறார். பூனை இளைச்சு இருந்தால் எலி பின்னால (சவாரி) ஏறிக் கொள்ளட்டுமான்னு கேட்குமாம். தமிழகத்தில் காங்கிரசு செயல்படுகிறது என்று காட்ட ரஜினி ரசிகர்களை சின்ன சிதம்பரம் சீண்டுகிறாரான்னு தெரியல. நானும் ரவுடிதான்னு அவர் அல்லது அவரே சொல்ல உரிமை இருக்கிறதே !
*****
பருப்பு வகைகள், பால், பேருந்து கட்டணமெல்லாம் சட்டென்று உயருதாம், இவை எல்லாம் மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சட்டென்று குறைக்கப்பட்டு நீதிமன்றத்தால் குட்டுபட்டு தமிழக அரசு விலை குறைவை மீட்டுக் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது, அதாவது ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்றால் தேர்தலை முன்னிட்டு 15 ஆக குறைத்து....திரும்ப 20 ஆக்கி, தற்போது 25 ரூபாய். அடுதத சட்டமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் விலை குறையலாம் :) இதெல்லாம் எழுதினால் நம்ம உடன்பிறப்புகளுக்கு நகைச்சுவையாக தெரியுமான்னு தெரியல :)
*****
சுவிஸ்வங்கியில் பதுக்கி இருக்கும் கருப்பு பணத்தை இந்திய மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தால் தலா ஒரு லட்சம் கொடுக்கலாமாம். அந்த தொகைக்கு கிடைக்கும் வட்டியே ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கே வரவு செலவு கணக்குக்கு சரியாக இருக்குமாம். வரி செலுத்தி சம்பாதித்த பணம் என்றால் அங்கே பதுக்க வேண்டி இருந்திருக்காது, மக்களை கொள்ளையடித்தப் பணம் தன் பதுங்கி இருக்கிறது. யாராவது சர்வாதிகாரி இந்திய அரசை கைப்பற்றினால் தான் அவற்றை மீட்க முடியும்.
*****
வேந்தன் has left a new comment on your post "குருவி தலை(மை)யில் பனங்காய் !":
நான் உங்களின் 200 ஆவது Follower.
இரட்டைச்சதம் அடித்ததிற்கு வாழ்த்துக்கள்.:
- சுப்பையா வாத்தியாரின் 700++ பின்தொடர்பவர்களை ஒப்பிடும் போது, பரிசல், கார்கி, நர்சிம் ஆகியோரின் பின்தொடர்பவர்களை ஒப்பிடும் போது என்னுடைய பதிவுக்கு 200 மிகக் குறைவுதான். 200 ஆவது பின் தொடர்பவராக வேந்தன் இணைந்து பாராட்டி இருக்கும், வேந்தனுக்கும், தற்போது பின்தொடர்பவர்களாக இருக்கும் 201 பேருக்கும் நன்றி !
பின்பற்றுபவர்கள்
1 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
63 கருத்துகள்:
hi kannan
I am 202 :)
பாலோயரில் இரட்டை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!
மக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்!
\\வால்பையன்
பாலோயரில் இரட்டை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!
மக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்!\\
வாழ்த்துக்கள் 200 ஃபாலோயர் வந்தமைக்கு,
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.
//வால்பையன் said
மக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்!//
வழிமொழிகின்றேன்.
தொடர்ந்து கலக்குங்க... :)
//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ! //
உண்மைதான்.இன்னும் இப்படி சிலபேர் இருப்பதால் தான் நாட்டில் மழையே பெய்கிறது.
நல்ல பதிவு
பால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா? விவரங்கள் தர முடியுமா?
பால் விலை லிட்டருக்கு 25 ரூபாயா? தமிழ்நாட்டிலா சிங்கையிலா என்றும் தெளிவாக குறிப்பிடவும். :-)
நீங்கள் தட்ஸ்தமிழை படித்துவிட்டு நாட்டு நடப்பை தப்பும் தவறுமாக விமர்சிப்பதே பர்மணெண்டு நகைச்சுவைதான்!
200 க்கு வாழ்த்துகள்
சட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா?
//அறிவிலி
சட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா?
//
good question!
/திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா அளித்த தகவல் ஒன்று அதை அப்படியே தருகிறேன்./
இந்தத் தகவல் இட்லிவடையில் பரிமாறினதைத் தான் சுட்டி கொடுத்து சொல்லியிருந்தேன்.
நல்லவர்கள் கொஞ்சமாக இருந்தாலும் கூட, இன்னமும் இவர்களுக்காகத் தான் மழை பொழிகிறது என்ற உங்கள் கருத்தை முந்தைய பதிவில் நெகிழ்வுடன் படித்தேன்.
கலவை கலக்கல்
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா? விவரங்கள் தர முடியுமா?
//
சுந்தர், பால் விலை உயர்வு தினமலர் செய்தி, பருப்பு விலை பற்றி தட்ஸ் தமிழில் எழுதி இருந்தது.
http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=4805
/யாசவி said...
hi kannan
I am 202 :)
//
நன்றி யாசவி !
//வால்பையன் said...
பாலோயரில் இரட்டை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!//
நன்றி !
//மக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்!
//
நமக்கு டாஸ்மாக் பக்கம் பழக்கம் இல்லை, அதனால் நம்ம பக்கத்தில் காரம் புளிப்புள்ள ஊறுகாய் மிஸ்ஸிங்
//வாழ்த்துக்கள் 200 ஃபாலோயர் வந்தமைக்கு,
4:55 PM, September 01, 2009
//
நன்றி சிவா !
//வேந்தன் said...
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.
//வால்பையன் said
மக்கள் பல்சுவை விரும்பிகள், அவர்களுக்கு சூடான விவாதமும் வேண்டும், ஜில்லென்று மொக்கையும் வேணும்!//
வழிமொழிகின்றேன்.
தொடர்ந்து கலக்குங்க... :)
//
வேந்தன் வாழ்த்துக்கு நன்றி !
//துபாய் ராஜா said...
//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ! //
உண்மைதான்.இன்னும் இப்படி சிலபேர் இருப்பதால் தான் நாட்டில் மழையே பெய்கிறது.
//
நன்றி ராஜா !
// Information said...
நல்ல பதிவு
//
நன்றி !
// யுவகிருஷ்ணா said...
பால் விலை லிட்டருக்கு 25 ரூபாயா? தமிழ்நாட்டிலா சிங்கையிலா என்றும் தெளிவாக குறிப்பிடவும். :-)
நீங்கள் தட்ஸ்தமிழை படித்துவிட்டு நாட்டு நடப்பை தப்பும் தவறுமாக விமர்சிப்பதே பர்மணெண்டு நகைச்சுவைதான்!
//
சிங்கப்பூரில் லிட்டர் பால் 60 - 100ரூ, ஆஸ்திரேலியா பால் 2 லிட்டர் 5.50 வெள்ளி. நம்ம ஊர் ஆவின் / அமுல் கூட கிடைக்கும் லிட்டர் 2 வெள்ளி.
தட்ஸ் தமிழ் சோர்ஸ் நண்பர்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டேனே !
:)
// அறிவிலி said...
200 க்கு வாழ்த்துகள்//
நன்றி !
//8:01 PM, September 01, 2009
அறிவிலி said...
சட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா?
//
அதெல்லாம் ஸ்டெண்ட் அண்ணாச்சி அப்பழுக்கற்ற கட்சின்னு காட்டிக் கொள்ள களையெடுப்பது போல் எதாவது நாடகம் நடத்துவாங்க, அப்பறம் இணைந்து கொள்வார்கள், ஊடகத்துல படிச்சுட்டு நாம தான் குழம்புவோம் :)
//ஜெகதீசன் said...
//அறிவிலி
சட்டமன்ற தேர்தல் வரைக்கும் பி.ஜே.பி இருக்குமா?
//
good question!
//
I have given best answer !
:)
//கிருஷ்ணமூர்த்தி said...
/திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா அளித்த தகவல் ஒன்று அதை அப்படியே தருகிறேன்./
இந்தத் தகவல் இட்லிவடையில் பரிமாறினதைத் தான் சுட்டி கொடுத்து சொல்லியிருந்தேன். //
நன்றி ஐயா !
//நல்லவர்கள் கொஞ்சமாக இருந்தாலும் கூட, இன்னமும் இவர்களுக்காகத் தான் மழை பொழிகிறது என்ற உங்கள் கருத்தை முந்தைய பதிவில் நெகிழ்வுடன் படித்தேன்.
//
மீண்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு நன்றி !
/ஆ.ஞானசேகரன் said...
கலவை கலக்கல்
//
நன்றி !
பால் விலை ஏறினது தெரியும். ஆனால் நீங்கள் தேர்தலுக்காக மே மாதத்தில் குறைத்து வைக்கப்பட்டிருந்து என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குத்தான் ஆதாரம் கேட்டேன் :)
அப்புறம் பருப்பு விலையும் இந்தியா முழுவதும்தான் உயர்ந்திருக்கிறது. அதுவும் மே மாதம் தேர்தலுக்காகக் குறையவில்லை :)
/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பால் விலை ஏறினது தெரியும். ஆனால் நீங்கள் தேர்தலுக்காக மே மாதத்தில் குறைத்து வைக்கப்பட்டிருந்து என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குத்தான் ஆதாரம் கேட்டேன் :)
அப்புறம் பருப்பு விலையும் இந்தியா முழுவதும்தான் உயர்ந்திருக்கிறது. அதுவும் மே மாதம் தேர்தலுக்காகக் குறையவில்லை :)
//
50 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கொடுத்தது விலைக் குறைவில் வராதா ? :) பேருந்து கட்டணம் குறைந்தது மருத்துவர் இராமதாஸ் முறையிட நீதிமன்றம் தேர்தல் முடியும் வரை விலைக்குறைப்புக்கு தடை போட்டதே. தேர்தல் நேரத்தில் பால் இலவசமாகக் கூட கொடுத்து இருப்பார்கள் :)
50 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் கொடுத்தது மே மாதத்திலா :)
//50 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கொடுத்தது விலைக் குறைவில் வராதா ? :) //
இன்னமும் அதே 50 ரூபாய்க்கு தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு விலை ஏற்றியதாக தட்ஸ்தமிழில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்ன? :-)
// யுவகிருஷ்ணா said...
//50 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கொடுத்தது விலைக் குறைவில் வராதா ? :) //
இன்னமும் அதே 50 ரூபாய்க்கு தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு விலை ஏற்றியதாக தட்ஸ்தமிழில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்ன? :-)
//
இதெல்லாம் கவனமாக பாலோ பண்ணிடுவிங்களே :) ஊருக்கு போகும் போது வெல ஏறிவிட்டதா என்று கேட்டுச் சொல்கிறேன்.
ரேசன் வாங்குறவங்களுக்கு பரவாயில்லை மற்றவர்களுக்கு இப்போ ஏற்றி இருப்பது சுமைதானே. இதைக் காரணமாக வைத்து ஓட்டல் உணவுகள் விலை ஏறும். தேர்தல் சமயத்தில் ஏன் விலை ஏற்றமே இல்லை ? அப்போது சர்வதேச மார்கெட்டில் பெட்ரோல் விலை உயர்ந்திருந்ததே !
//இதெல்லாம் கவனமாக பாலோ பண்ணிடுவிங்களே :) ஊருக்கு போகும் போது வெல ஏறிவிட்டதா என்று கேட்டுச் சொல்கிறேன்.
//
பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள்!
அம்மாவின் புகழ்பாடியே தீரவேண்டும் என்று அரிப்பு இருந்தால் நேரடியாக பாடிவிட்டுப் போகலாம் :-)
திமுகவை நொட்டை சொல்வதற்கு புதிது புதிதாக காரணங்கள் கற்பித்துக் கொண்டிருக்க தேவையே இல்லை!
//யுவகிருஷ்ணா said...
//பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள்!//
இதை கோட் பண்ணி வைத்துக் கொள்கிறேன். உங்கள் திமுக புகழ் பாடும் பதிவுகளில் குறிப்பிட்டு கேட்க பயன்படும் :)
//அம்மாவின் புகழ்பாடியே தீரவேண்டும் என்று அரிப்பு இருந்தால் நேரடியாக பாடிவிட்டுப் போகலாம் :-)
திமுகவை நொட்டை சொல்வதற்கு புதிது புதிதாக காரணங்கள் கற்பித்துக் கொண்டிருக்க தேவையே இல்லை!
//
இதுல (பதிவில்) அம்மாவும் இல்லை ஆட்டுக் குட்டியும் இல்லை, நேற்று பழைய எம்ஜிஆர் படம் பார்த்துட்டு உங்களுக்கு ஒருவேளை ஞாபகம் வந்திருக்கலாம்.
//இதை கோட் பண்ணி வைத்துக் கொள்கிறேன். உங்கள் திமுக புகழ் பாடும் பதிவுகளில் குறிப்பிட்டு கேட்க பயன்படும் :)//
நான் திமுக சார்புடையவன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே எழுதுகிறேன். நீங்களும் அதுபோல உங்களை அதிமுக அடிவருடியாக அறிவித்துவிட்டு எழுதினால், நாங்கள் வந்து ஏன் லாஜிக்கலாக கேள்விகள் கேட்கப்போகிறோம் :-)
//இதுல (பதிவில்) அம்மாவும் இல்லை ஆட்டுக் குட்டியும் இல்லை, நேற்று பழைய எம்ஜிஆர் படம் பார்த்துட்டு உங்களுக்கு ஒருவேளை ஞாபகம் வந்திருக்கலாம்.//
எம்.ஜி.ஆர் படங்களை தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வேடந்தாங்கல் சீசனுக்கு வந்துபோகும் பறவைகள் மாதிரி நாங்கள் பார்ப்பதில்லை. வருடந்தோறும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம்.
தேர்தலுக்கு முன்பாக ஈழத்தாய்க்கு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்த உங்களைப் போன்றோர், ஈழத்தை மறந்து கொடநாட்டில் கும்மியடித்துக் கொண்டிருக்கும் அம்மாவை நோக்கி ஒரு கேள்வி கூட இன்னமும் எழுப்பவில்லை என்றால் நீங்கள் அம்மாவின் தொண்டர் என்றுதானே புரிந்துகொள்ள முடியும்.
//நான் திமுக சார்புடையவன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே எழுதுகிறேன். நீங்களும் அதுபோல உங்களை அதிமுக அடிவருடியாக அறிவித்துவிட்டு எழுதினால், நாங்கள் வந்து ஏன் லாஜிக்கலாக கேள்விகள் கேட்கப்போகிறோம் :-)
//
நீங்க திமுகவுக்கு அடிவருடுவது போல் வெறுப்பால் மாற்றுக் கட்சியை நாடுங்கள் என்று சொல்பவர்கள் மாற்றுக் கட்சியை அடிவருடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அடியார்கள் தான் அடிவருடுவார்கள். நான் அதிமுக அடியார் கிடையாது.
//தேர்தலுக்கு முன்பாக ஈழத்தாய்க்கு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்த உங்களைப் போன்றோர், ஈழத்தை மறந்து கொடநாட்டில் கும்மியடித்துக் கொண்டிருக்கும் அம்மாவை நோக்கி ஒரு கேள்வி கூட இன்னமும் எழுப்பவில்லை என்றால் நீங்கள் அம்மாவின் தொண்டர் என்றுதானே புரிந்துகொள்ள முடியும்.//
நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.
//நான் அதிமுக அடியார் கிடையாது.
//
ஒருவேளை அடியாருக்கு அடியாரோ :-)
//நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.
//
ஈழத்தமிழர்கள் ஜெ.வை ஆதரிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள் என்று சொல்லிவிட்டுப் போங்களேன். எதற்கு பொதுமைப்படுத்தி சொல்கிறீர்கள்.
நைசாக டாபிக்கை மாற்றவேண்டாம்.
ஈழத்தாய் தேர்தலுக்குப் பிறகு ஈழம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே? கருத்து கந்தசாமியாக மாறி பால் விலை உயர்வு, ஜூஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் கருத்துப்புயலாக பதிவுகள் போடும் நீங்கள், இதைப்பற்றி ஒரு பதிவு கூட போடவில்லையே? இதைவிட ’ஜெ.வுக்கு நீங்கள் அடிவருடி’ என்பதற்கு தக்க உதாரணம் வேறென்ன இருக்க முடியும்? :-)
//ஒருவேளை அடியாருக்கு அடியாரோ :-)
//
நைசா பகடி பண்ண வேண்டாம் ! எந்த தடியாருக்கும் அடியார் இல்லை !
//ஈழத்தமிழர்கள் ஜெ.வை ஆதரிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள் என்று சொல்லிவிட்டுப் போங்களேன். எதற்கு பொதுமைப்படுத்தி சொல்கிறீர்கள்.
நைசாக டாபிக்கை மாற்றவேண்டாம்.
ஈழத்தாய் தேர்தலுக்குப் பிறகு ஈழம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே? கருத்து கந்தசாமியாக மாறி பால் விலை உயர்வு, ஜூஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் கருத்துப்புயலாக பதிவுகள் போடும் நீங்கள், இதைப்பற்றி ஒரு பதிவு கூட போடவில்லையே? இதைவிட ’ஜெ.வுக்கு நீங்கள் அடிவருடி’ என்பதற்கு தக்க உதாரணம் வேறென்ன இருக்க முடியும்? :-)//
வெறும் கையால் முழம் போட முடியாது, எப்படியும்
பண பலத்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகது என்று அந்த அம்மா
இடைத்தேர்தலையே புறக்கணித்தது. பாராளு மன்றதேர்தலில்
அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு
கேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.
அதெல்லாம் விடுங்க. வழக்கமாக திமுகவைப் பற்றி வலையில் புகழ்பாடும் நீங்களும் உங்கள் தோழர்களும் இடைத்தேர்தல் ஒன்று நடந்ததையும், அதில் திமுக .மா'பெரும் வெற்றி பெற்றதையும் மூச்சுகூட விடக் காணுமே :)
//பாராளு மன்றதேர்தலில்
அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு
கேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.//
ஈழத்தாய் மாதிரி நீங்களும் ஜகா வாங்குகிறீர்களே? நீங்கள் தடியாருக்கு அடியார்தான்!! :-)
உங்களைப் போன்றவர்கள் வியர்வை சிந்தி பூச்சியமாக இருந்த அதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்தியிருக்கிறீர்கள். இந்த ஒன்பது பேரும் என்னத்தை பாராளுமன்றத்தில் கிழித்தார்கள்.
அந்த அம்மா என்னவோ கொடநாட்டில் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பற்றி பேசுகிறீர்கள். வத்தலக்குண்டு மூன்றாவது வார்டில் கொசுமருந்து அடிக்கவில்லை என்றால் கூட கோட்டைக்கு முன்பாக அதிமுக ஆர்ப்பாட்டம் என்று தினத்துக்கு பத்து அறிக்கை விடுகிறார் இல்லையா?
ஈழம் பற்றி ஒரு அறிக்கை கூட விடமுடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறாரோ?
அதற்கும் நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே? வெட்கக்கேடு!!!
நீங்கள் வலையுலகின் சுப்பிரமணியசாமி என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் கோவிஜி. :) ஈழநாயகியின் தேர்தலுக்கு முந்தைய வெத்து கோஷம் எண்ணாச்சி? கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா? அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க? கிகிகி..
கார்த்தி சிதம்பரம் பேசியதை வைத்து ரஜினி ரசிகர்களை உசுப்பேத்த முயற்ச்சிக்கிறிங்களாக்கும். இன்னும் அதுக்கு பலன் இல்லை போல. சத்தியநராயணா இன்னும் படிச்சிருக்க மாட்டாரோ? :))
அந்த சேலத்துப் பெரியவருக்கு வாழ்த்துகள்.
//யாராவது சர்வாதிகாரி இந்திய அரசை கைப்பற்றினால் தான் அவற்றை மீட்க முடியும்.//
ஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சிட்டேள்.. பேஷ் பேஷ்.. :))
//ஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சிட்டேள்.. பேஷ் பேஷ்.. :))//
வாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த குத்தகையில் வைத்திருக்கும்னு எனக்கு தெரியாதே !
:)
/SanjaiGandhi said...
நீங்கள் வலையுலகின் சுப்பிரமணியசாமி என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் கோவிஜி. :) ஈழநாயகியின் தேர்தலுக்கு முந்தைய வெத்து கோஷம் எண்ணாச்சி? கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா? அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க? கிகிகி..
//
எனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா துதிப் பாடும் நிலை காங்கிரசுகாரர்களுக்குத்தான் ஏற்படும், இன்னிக்கு ஈழ நாயகின்னு சொல்லுவிங்க, நாளைக்கு தமிழ் அன்னை கூட உங்காளுங்க புகழுவாங்க.
//வாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த குத்தகையில் வைத்திருக்கும்னு எனக்கு தெரியாதே !
:)//
அட சாமி.. இதுக்கும் காங்கிரஸ் தானா? :))
என் கேள்விக்கும் உங்க பதிலுக்கும் ஒரே ஒரு தொடர்பை கண்டு பிடிப்பவர்களுக்கு கோவியின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் சிங்கை டாலர் அனுப்பி வைக்கப் படும். :)
//அதாவது ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்றால் தேர்தலை முன்னிட்டு 15 ஆக குறைத்து....திரும்ப 20 ஆக்கி, தற்போது 25 ரூபாய். //
என்னாது தேர்தலுக்கு முன்னாடி 15 ரூபாயா குறைச்சாங்களா? கொய்யால என்னை ஏமாத்திட்டான் எங்கத் தெருக் கடைக்காரன். ரொம்ப நாளா அரை லிட்டர் ஆவின் பால் 10 ரூபாய்க்கு தான் தரான். :(
என்னாது இப்போ 25 ரூபாயா? ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ? :)))
//எனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா துதிப் பாடும் நிலை காங்கிரசுகாரர்களுக்குத்தான் ஏற்படும், இன்னிக்கு ஈழ நாயகின்னு சொல்லுவிங்க, நாளைக்கு தமிழ் அன்னை கூட உங்காளுங்க புகழுவாங்க.//
இத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதான்னு நிரூபிக்க எம்புட்டு ஆதாரம் வேணும்? :)) உங்க பதிவுகள் எதுவும் அழித்திருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். :)
//இத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதான்னு நிரூபிக்க எம்புட்டு ஆதாரம் வேணும்? :)) உங்க பதிவுகள் எதுவும் அழித்திருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். :)//
ஹலோ.......அந்த அமமா உயிரோடு இருக்கும் போதே திதிங்கிறிங்களே அம்புட்டு வெறுப்பா ? என் பதிவில் எதையுமே அழிப்பது இல்லை. (காலம்)
//என்னாது இப்போ 25 ரூபாயா? ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ? :)))//
தம்பி சஞ்செய்,
'அதாவதுன்னு' நான் விலையை உதாரணத்துக்குத்தான் போட்டு இருக்கிறேன், தங்கமோ, பெட்ரோலாக இருந்தால் அனைத்துலக விலைன்னு ஒண்ணு இருக்கும், தமிழகத்து பால் விலை உயர்வுன்னு தான் செய்தி படித்தேன், அது எவ்வளவு உயர்வு என்றெல்லாம் ஊன்றிப்படிக்கவில்லை.
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா? விவரங்கள் தர முடியுமா?//
இந்தப் பதிவை சீரியசாக நினைத்து கேள்வி கேட்டு கோவியாரை அவமானப் படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. :)
//சுந்தர், பால் விலை உயர்வு தினமலர் செய்தி,//
ஒரு பக்கம் தினமலரை புறக்கணிப்போம்னு பரப்புரை. இன்னொரு பக்கம் தினமலரோட கள்ள உறவு. ஹ்ம்ம்ம்.. இப்டி தான் இருக்கனும். :))
// SanjaiGandhi said...
ஒரு பக்கம் தினமலரை புறக்கணிப்போம்னு பரப்புரை. இன்னொரு பக்கம் தினமலரோட கள்ள உறவு. ஹ்ம்ம்ம்.. இப்டி தான் இருக்கனும். :))
//
காங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா ? தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் எந்த பிற கட்சியோடு உறவு வைத்திருக்கிறார் என்பது தான் மீடியாக்களின் டாக்காக இருக்கும்.
பிஜேபி கூட மன்மோகன் சிங் கள்ள உறவு வைத்திருந்தாரா ? பிறகு ஏன் எதிர்கட்சி நிலைத் தன்மையோடு இருக்கனும், பிஜேபியின் உட்கட்சி பூசல் விரைவில் தீறும் என்று நம்புகிறேன் என்று ஸ்டேட் மெண்ட் விடனும். உங்களைப் (சஞ்சையை) பொறுத்த அளவில் பிடிக்காதவங்க என்றால் அப்படியே ஒதுக்கிடுவிங்களா ?
//நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.//
எப்போவுமே பிச்சைப் போடாத மகராசி இப்போ போடறா.. எப்போவும் போடற தே.... இப்போ போடலைனு பிச்சைக் காரன் சொன்னானாம்.
( இது உதாரணத்திற்கு மட்டுமே. தனிப் பட்டு யாரையும் குறிக்க அல்ல.. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.)
//காங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா ? தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் எந்த பிற கட்சியோடு உறவு வைத்திருக்கிறார் என்பது தான் மீடியாக்களின் டாக்காக இருக்கும்.
//
லக்கி சொன்ன அதே பட்டுக் கோட்டை கொட்டைப் பாக்கை படிக்கவும். :))
//வெறும் கையால் முழம் போட முடியாது, எப்படியும்
பண பலத்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகது என்று அந்த அம்மா
இடைத்தேர்தலையே புறக்கணித்தது.//
பாவம்.. ஏழைகள் கட்சி. :(
// பாராளு மன்றதேர்தலில்
அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு
கேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.//
ஸ்ஸபாஆஆஆ... பாராளுமன்றத் தேர்தல் சமயத்துல திமுக ஆட்சில இல்லையா? அப்போ திமுக கூட்டணியில யார் கிட்டயும் பணம் இல்லையா? எப்டி உங்கம்மா 9 தொகுதிகள் ஜெயிச்சாங்க?
திமுக சாமர்த்தியத்துல ஏதோ பால் விலை பருப்பு விலை கொறைஞ்சுட்டுதா யுவ கிருஷ்ணா? இன்னிக்கு வரை ஒரு லிட்டர் பால் இருபத்திரண்டு ரூபாய், இன்னமும் ஏறப்போகிறதுன்னு ஆவிந்லயும் அறிக்கை வந்தாச்சு! தட்ஸ்தமிழ் நியூஸ் வேணாம், போய்க் கடையில காசு கொடுத்து வாங்கிப்பாத்தாலே போதுமே! அதுக்கு ஏன் இந்தப் பாய்ச்சல்?
செப்டம்பர் பதிமூணாம் தேதி சிறுகதைப் பட்டறைக்கு நானூறு ரூபாய் அதிகம்னு ஒருத்தர் சொன்னதுக்கு உடனேயே பாஞ்சு வந்து, துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாய் விற்கிரதுன்னு பதில் சொன்னதும் மறந்து போச்சா?
அப்புறம் காங்கிரஸ் சஞ்சய், பணவீக்கம் நெகடிவாப் போய்க்கிட்டிருக்கும்போது விலைவாசிப் புள்ளி மட்டும் பதினோரு சதவீதம் அதிகரிச்சதா, நீங்க தாங்கிப் பிடிக்கிற அரசுப் புள்ளி விவரம் தான் சொல்லுது! இது என்ன மோசடின்னு நீங்க எனக்குச் சொல்ல வேணாம், உங்களுக்குப் புரியறதுக்காகவாவது என்னன்னு விசாரியுங்களேன்!
நல்லாக் கூட்டுச் சேந்து கூத்தடிக்கிறாங்கப்பா:-))
கிருஷ்ணமூர்த்தி, இந்த மாதிரி கூட்டு சேர்ந்து கேள்வி கேட்கும் போதும், அதற்கு கோவி பதில் சொல்லும் போதும், நம்மை போன்றவர்கள் படித்து ரசிக்க வேண்டும். அதற்கு தார்மீக கோபமோ கொள்ளுதலோ, எதிர் கேள்வி கேட்பதோ கூடாது ! flow கெட்டுவிடும் !
திமுக அனுதாபியும், காங்கிரஸ்காரரும் வந்து ஈழத்திற்கு ஜெயலலிதா ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். ஜெயலலிதாவை ஆதரித்த கோவி அதைப் பற்றி கேள்வி ஏன் கேட்கவில்லை என்றும் கேட்பார்கள். இவற்றை ரசிப்பதை தவிர நமக்கு வேறு என்ன வேலை ! ரசியுங்கள். அனுபவியுங்கள். கேள்வி கேட்காதீர்கள். flow கெட்டுவிடும் !
பணவீக்கம் கால்குலேட் செய்யும் பொழுது, பருப்பு மற்றும் தானிய வகைகள் கருத்தில் கொள்ளப் படுகின்றன. ஆனால் அவை மட்டுமே எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஆதலால் தான் இந்த discreprency. இதே போன்ற பணவீக்கம் இன்னும் ஒரு வருடமோ, இரு வருடமோ நீடித்தால் விலைவாசி குறைவது நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
அதே போன்று இன்றைய நிலையில் விலைவாசி உயர்வு அரசாங்கத்தால் முழு அளவில் கட்டுப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். ஏழை மக்களுக்கு ரேஷனில் subsidised விலையில் அத்தியாவசிய தானியங்களை கொடுக்கலாம். அவ்வளவே. அதைத் திமுக அரசாங்கம் மிகச் சரியாகவே செய்து வருகிறது.
சரி கோவி. உங்களுக்கு ௨௦௦ பேரு followers வந்து இருக்காங்க. அதை விட்டுட்டு கோவை சரளா மாதிரி இவுக இவ்வளவு வச்சிருக்காக, அவுக இவ்வளவு வச்சி இருக்காங்கன்னு பாட்டு பாடறீங்க ! 202 பேருக்கும் வாழ்த்துக்கள் பிளஸ் உங்களுக்கும்.
விளக்கத்துக்கு நன்றி திரு மணிகண்டன்! Consumer Price Index முதல் பல்வேறு புள்ளிவிவரங்கள் திரட்டப்படும் முறை குறித்து எனக்கு கொஞ்சம் அதிக விவரங்கள் தெரியும் என்றே எண்ணுகிறேன். பணவீக்கம் நெகடிவாகப் போய்க் கொண்டிருப்பது, இந்தியா ஒளிர்கிறது என்று தட்டி கட்டி விளம்பரப்படுத்தின மாதிரியே,இன்னொரு கேவலமான, அபத்தமான செட் அப். அவ்வளவுதான் என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் லட்சணத்தில் தான் இருக்கிறது.
இந்திய அரசியலில், புள்ளிவிவரம் படும் பாடு இருக்கிறதே, [லேட்டஸ்டாக விசயகாந்து படங்களில்] அதைவிடக் கொடுமை வேறு ஒன்று இருக்க முடியாது. அதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்பது இந்திய மக்கள் தலையில் எழுதப்பட்ட விதி, ஒன்றும் செய்ய முடியாது.
விசயகாந்து மாதிரியே,அவருக்கும் முன்னால், வேறொருத்தர் தேர்தலில் தோற்றால் புள்ளிவிவரத்தைக் காட்டி, எங்களுக்கு வாக்கு வங்கி ஒன்றும் குறைந்து விடவில்லை, உளுத்தம்பருப்பே நீ பார், தாழ்ந்த தமிழகமே,தமிழனுக்கு சுரணை போய் விட்டது என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசினதையும், ஜெயித்தால் அதையே வேறுமாதிரி பேசினதையும் கேட்டுக் கேட்டு, ஒரு விதமான பக்குவ நிலைக்கு வந்து வெகு நாளாயிற்று!
தமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே இருக்க வேண்டும், அதை மற்றவர்கள் கூடிநின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது! எனக்கு வேண்டவும் வேண்டாம்!
****
தமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே இருக்க வேண்டும், அதை மற்றவர்கள் கூடிநின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது! எனக்கு வேண்டவும் வேண்டாம்!
****
ஹா ஹா. இது ஏதோ இதுவரை நடக்காத ஒன்றிற்கு ஐடியா கொடுக்கும் மாதிரி இருக்கே !
ஹா ஹா ஹூ ஹூ எல்லாம் சரி மணிகண்டன்,
/அதைத் திமுக அரசாங்கம் மிகச் சரியாகவே செய்து வருகிறது. /
அம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து கிராம் இருபத்து கிராம் அளவில் கொடுப்பதைச் சரியாகச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறீர்கள் போல!
பூனை கண்ணை மூடிச்சாம், உலகமே கருப்பாத்தான் இருக்குன்னு சொன்ன மாதிரி, உங்களுக்கு அம்பது ரூபாய் ரேஷன்பொட்டலத்துல,கருப்பு-சிவப்பு கலரோட ஏழையின் சிரிப்பு இறைவனின் சிரிப்பாகத் தெரிகிறது!
சிரிப்புத்தான் வருது!
***
அம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து கிராம் இருபத்து கிராம் அளவில் கொடுப்பதைச் சரியாகச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறீர்கள் போல!
***
நான் இதை மட்டும் சொல்லல. இந்த scheme வெறும் marketing ஆக தான் பார்க்கிறேன். ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீச் இருக்கறதை பார்த்தேன்.
/ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீச் இருக்கறதை பார்த்தேன்./
எங்க பாத்தீங்க?
திமுக ஆட்சி வரும்போதெல்லாம், ரேஷன் அரிசி தனியார் கைகளுக்கு மாறி, பாலிஷ் போடப்பட்டுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆசாமிகளுக்கு இருக்கற ரீச்சை விடவா? தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் பட்டுக் கோழித் தீவனமாக ரீச் ஆகுதே அதை விடவா?
இன்னும் நிறைய சொல்லலாம்.
கண்ணைத் தொறந்து பாருங்க, உங்களுக்கே யார் யாருக்கு என்னென்ன ரீச் ஆகியிருக்குன்னு புரியும்.
இலவசங்களை அள்ளிவிட்டு இன்னும் எத்தனை நாள் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
/தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் பட்டுக் கோழித் தீவனமாக ரீச் ஆகுதே அதை விடவா?/
அதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் கடத்தணும் :) அதுவும் கோழித் தீவனமா யூஸ் பண்ண யாராவது கடத்துவாங்களா என்ன :)
நல்லகாலம் நான் சீனாவில பிறக்கேல...
தேவயில்லாத சாமான் எண்டு எரிச்சுடுவாங்க...
// இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காங் - திமுக உறவில் அரிப்பு ஏற்பட்டு இருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொறிந்துவிட்டுக் கொண்டு இரத்தமாகி விரிசல் ஆகிவிடும் சூழலுக்கு வளர்ந்து கொண்டு செல்லும்////
அன்னாவின் 101 வது பிறந்த நாள் கொண்டாட விழாக்கு யாரை கூப்பிட்டு இருந்தாங்கனு படிக்களை போல இருக்கு.
காங்கிரஸ் மேல எரிச்சல் இருக்கு என்ற ஒரே காரணத்துக்காக ......இல.கணேசன் அவரலாம் தமிழக அரசியலில் ஒரு பெரிய ஆளா நினைக்க ஆரம்பிச்சுடீங்க
/அதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் கடத்தணும் :) அதுவும் கோழித் தீவனமா யூஸ் பண்ண யாராவது கடத்துவாங்களா என்ன :)/
கடத்தித் திங்கற குருவிகள் கிட்டேயும், கொத்தித் திங்கற 'கோழிகள்' கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க:-))
கருத்துரையிடுக