சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம், சப்ஜெக்ட்டுக்கு வருவோம். சீனர்களின் இந்த பேய் மாதத்தில் முன்னோர்களை நினைவு கொண்டு, அவர்களுக்கான பொருள்களை நெருப்பில் போட்டு எரிக்கிறார்கள். எரிப்பதில் முக்கியமானது போலிப் பணம், பார்பதற்கு பணம் போல் தாள்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும், கட்டுக்கட்டாக போட்டு எரிப்பார்கள். முன்னோர்கள் என்ன என்ன பொருள்கள் பயன்படுத்தினார்களோ அது போன்று தாளில் செய்து அதை எரிப்பார்கள், அதில் செருப்பு, ஷூ, கார், சட்டை, பியர் கேன் ஆகியவை கூட அடங்கும், அந்த மாததின் முதல் நாள் 15 ஆவது நாள் கடைசி நாள் ஆகியவற்றில் தாள் எரிப்பது வழக்கம்.
பேய்களுக்காக / முன்னோர்களுக்காக எரிக்கும் வழக்கம் அவரவர் இல்லத்திலும் தனித்தனியாகவும் அலுவலகத்தில் பிறருடன் சேர்ந்தும் செய்வார்கள். இன்று எங்கள் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்சியில் பொருள்களை வைத்து படைப்பது வழக்கம். பொருள்கள் உணவு வகைகளை வைத்துவிட்டு, முழுதாக பொரிக்கப்பட்ட பன்றி ஒன்றையும் வைத்து
பண்டிகைகளில் பொரிக்கப்படும் பன்றிகள் பொதுவாக இரண்டு மாதக் குட்டி பன்றிகளாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு பணவீக்கம், பொருளியல் மந்தம் என்பதால் பல நிறுவனங்கள் செலவை மட்டுப்படுத்த பன்றிக்கு பதிலாக பொரித்த வாத்துகளை வைத்திருந்ததாக அலுவலக சீன நண்பர் ஒருவர் சொன்னார்.
புத்த மதம் என்றாலும் முனியாண்டி போல பயமூட்டும் சீன சாமிகள் பலவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். எங்கள் அலுவலகம் நுழைவாயிலிலும் தொங்கும் தாடி, மீசையுடன் அப்படி ஒரு சாமி உண்டு. சீனர்களின் பழக்க வழக்கம் நம்பிக்கை, ஆகயவற்றில் இந்திய சமயங்களைப் போல் மூட நம்பிக்கைகளும் இருந்தாலும் அதனால் நலிவுற்றோர் யாருமே கிடையாது, மதம் அவர்களை பிரித்துப் போடவில்லை, சாதி படி நிலைகளை ஏற்படுத்தவில்லை என்பதால் சீனர்களிடம் மதச் சீர்திருத்தம், மூட நம்பிக்கை தகர்ப்பு என்கிற தேவையும் இல்லாதிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி என்றாலும் சீனாவில் மத நம்பிக்கைக்கு எதிராக பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சீனர்கள் ஒரே நிறத்தில், தோற்றத்தில் இருப்பதால் வெவ்வேறு மதம் என்றாலும் அவர்களுக்குள் பாகுபாடு வேற்றுமை வரும் வாய்ப்புகள் கூட குறைவே. குடும்பப் பெயர்கள் இருந்தாலும் அவை இந்தியாவின் வருணாசிரம்த்தை தாங்கிப் பிடிக்கும் சாதிப் பெயர்கள் போன்ற பரிணமிக்கவில்லை, சீனர்கள் தொழில் அடிப்படையிலும் உயர்வு தாழ்வு பார்க்கும் வழக்கம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன், அவர்களது மதப் பழக்கம், வழிபாடு ஆகியவற்றில் பலி இடுதல் மற்றும் பல அறிவுக்கு ஏற்பு இல்லாத வழக்கங்கள் இருந்தாலும், தீண்டாமை, பெண்களின் மாதவிலக்கைச் சொல்லி / பெண்களையே வழிபாடுகளில் இருந்து விலக்குதல் ஆகிவை கிடையாது. அவர்களுடைய வழிபாட்டு சமய நம்பிக்கைகள் அறிவுக்கு ஒவ்வாதவை என்றாலும் அதனால் தனிப்பட்ட பிறருக்கு எந்த ஒரு நட்டமும், நலிவும் ஏற்படுவதில்லை.
15 கருத்துகள்:
//ஆப்ரகாமிய மதங்களில் மதத்தை ஏற்றுக் கொள்வோர்களுக்கு அவர்கள் மத சொர்கத்தில் இடம் உண்டாம்//
:))
'அவர்கள் மத சொர்க்கம்' என்றால் மற்ற மதத்தினருக்கு தனி சொர்க்கம் உண்டு என அவர்கள் ஏற்றுக்கொள்ளுவதாக பொருள் ..அப்படி அவர்கள் நம்புவதாக தெரியவில்லை ..ஒவ்வொருவரும் தாங்கள் சொல்லும் கடவுள் தான் ஒரே கடவுள் ,தாங்கள் சொல்லும் சொர்க்கம் தான் ஒரே சொர்க்கம் என்பதாகத் தான் நம்புகிறார்கள் என்பது எனது புரிதல்.
இந்த நோட்டுகளில் 'hell bank note' என இருக்கிறது ? சொர்கத்துக்கு அனுப்பாமல் ஏன் நரகத்துக்கு அனுப்புகிறார்கள் :)
//ஜோ/Joe said...
இந்த நோட்டுகளில் 'hell bank note' என இருக்கிறது ? சொர்கத்துக்கு அனுப்பாமல் ஏன் நரகத்துக்கு அனுப்புகிறார்கள் :)
//
சின்ன லாஜிக் !
சொர்கம் என்றால் எல்லாம் கிடைக்கும், நரகத்தில் எதுவும் கிடைக்காது, ஜெயிலில் இருப்பவர்கள் காசு கொடுத்து கஞ்சா வாங்குவதில்லையா, அவர்களுக்கு உறவினர்கள் காசு கொடுப்பது இல்லையா ?
அது போல் நரகத்தில் இருப்பவர்கள், தீக்காயத்திற்கு இந்த பணத்தை வச்சு மருந்துவாங்கி தடவிக்குவாங்கப் போல :)
//அவர்கள் கோட்பாடு படி தீர்ப்பு நாளுக்கு பிறகு மகாத்மா காந்தி இந்து என்பதால் எதோ ஒரு நரக கூடாரத்தில் கொதிக்கும் எண்ணையில் முக்கி முக்கி எடுக்கப்படுவாரோ ! :)
//
ஹா...ஹா...ஹா....
புதுமையான தகவல்கள்.
கோவியாரே லெக் பீஸ் கெடச்சிச்சா?
ஜோதின்னு கேட்டீங்கன்னா லெக் பீஸூ கொடுப்பாங்க. பன்னி லெக் பீஸூதான்.
சீனர்கள் எல்லாரும் ஒரே தோற்றமா கோவி ?
ஆவ்...:-)
வெ.சாமிநாத சர்மா எழுதிய சீனாவின் வரலாறு தான் சிறுவயதில், முதன் முதலில் சீனாவைப் பற்றிப் படித்த புத்தகம், பிறகு வரிசையாக, ஏராளமான வரலாற்று ரீதியிலான, பொருளாதார, அரசியல் ரீதியிலான references பார்த்தாயிற்று.
எறும்புகள் தேனீக்களைப் போல ஒரே ஒரு தலைமைக்குக் கட்டுப்படும் இயல்பு ஓரியண்ட் அல்லது கிழக்கத்திய மக்களுக்கு இன்னமும் இருக்கிறது ஒரே ஒரு ராஜா அல்லது ராணித் தேனீ தான் மற்றவை அடிமைத் தேனீக்கள்! இந்த ஒரு அடிப்படைக் குணமே அவர்களுடைய பலமாகவும், பலவீனமாகவும் இருப்பதையும் நீங்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது!
போட்டோக்களே இடுகையின் சாராம்சத்தை உணர்த்தி விட்டது.
நல்ல தேர்வு
வாழ்த்துக்கள்
அவர்கள் கோட்பாடு படி தீர்ப்பு நாளுக்கு பிறகு மகாத்மா காந்தி இந்து என்பதால் எதோ ஒரு நரக கூடாரத்தில் கொதிக்கும் எண்ணையில் முக்கி முக்கி எடுக்கப்படுவாரோ ! :)
/\*/\
நம்மூர் ஜெயிகளில் இருப்பது போல் மகாத்மா காந்தி போன்ற மகான்களுக்கு முதல் வகுப்பு இருக்குமோ என்னவோ
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
/
நம்ம இந்திய சமயத்தினர் சொர்கம் செல்லும் போது சீனர்களை அங்கு பார்க்கலாம் அல்லது அவர்கள் சொர்கம் / நரகம் போகும் இந்தியர்களை சொர்கத்தில் பார்கலாம் போல
/
:))))))))
அடுத்தவர்கள் கலாசாரம் பற்றிய தகவல்...நன்றாக இருந்தது படிக்க. தகவலுக்கு நன்றி கோவியாரே.
///சீனர்கள் ஒரே நிறத்தில், தோற்றத்தில் இருப்பதால் வெவ்வேறு மதம் என்றாலும் அவர்களுக்குள் பாகுபாடு வேற்றுமை வரும் வாய்ப்புகள் கூட குறைவே. ///
சீனாவில் இப்ப ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் ஒரு பெரிய மத ரீதியான சண்டை நடந்து ..கிட்ட தட்ட 160 பேர் கொல்லப்பட்டார்கள். .
படிக்கிற தமிழர்களுக்கு , இது எல்லாம் தெரியாதுன்னு நினைச்சு எழுதுனீங்களா ?
சீன குடும்ப பெயர்கள் ...ஏற்ற தாழ்வு குறிக்கும் பெயர்கள் இல்லையா ? ..கண்டிப்பா அந்த மாதிரி இருக்கும் என்று நினைக்கிறன்.
கருத்துரையிடுக