பின்பற்றுபவர்கள்

13 செப்டம்பர், 2009

35 வயதுக்கு மேற்பட்டவர் இளைஞர் இல்லையா ?

அண்மையில் காங்கிரசு கட்சியின் வருங்கால பிரதமர் திரு ராகுல் காந்தி தமிழகம் வந்த போது அவரை 35 வயதுக்கும் மேற்பட்ட (காங்கிர(சில்)சைச் சேர்ந்த) ஆண்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லையாம். மனமுடைந்து எந்தனை காங்கிரசு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இத தொடர்சியாக் கட்சியில் இணைந்து கொழுத்த பதிவி பெற நினைத்த நடிகர் இளைய தளபதி, டாக்டர் விஜய் (என்ன கொடுமை சாரே) அவர்களுக்கு தமிழக காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் பதிவி கொடுக்கப் படமாட்டாது என்று திரு ராகுல் வெளிப்படையாக தெரிவித்துவிட்டதால் டாக்டர் விஜய் தரப்பு படு அப்சட் என்று தினமலரில் எழுதி இருக்கிறார்கள்.

விஜய் திமுகவில் சேருவது நல்லது திமுகவில் தான் 60 வயது ஆனாலும் திரு ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராக நீடிக்கிறார். திரு ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதால், திமுக இளைஞர் அணிக்கு சரியான தலைவர் ஸ்மார்டான இளைஞராக 35 வயதைக் கடந்த டாக்டர் விஜய் பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இளைஞர் என்றால் 35 வயதுக்குள் இருப்பவர்கள் என்று திரு ராகுல் சொல்லிவிட்டதால், 35 வயதுக்கும் மேற்பட்ட பலர் இளைஞர் 'யங்க்ஸ்டர்' கெட்டப்பை விட்டுவிடலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன், எனக்கும் 35 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது.

இந்தியா இளைஞர்கள் கையில், இளைஞர்கள் இராகுலின் கையில், வாழ்க ஜென நாயகம் ! ராகுல் வயதைக் காரணம் காட்டி டாக்டர் விஜயை ஓரம் கட்டியதற்காக, புறக்கணிததற்காக விஜய் ரசிகர்கள் சத்திய மூர்த்தி பவனில் உண்ணாவிரம் இருப்பார்களா ?

'62 வயது இளைஞனான டோண்டு இராகவன் சொல்கிறான்' என்று சமீபத்தில் 1946ல் பிறந்த திரு டோண்டு அவர்கள் பதிவில் எழுதினால் அதற்கு கோவைப் பதிவர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு சஞ்செய் காந்தி கண்டனம் தெரிவிபாரா ? திரு சஞ்செய், காந்தி திரு இராகுலைச் சென்று சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததா ? என்பதே இப்போது எனது கேள்விகளாக இருக்கிறது.

31 கருத்துகள்:

குடுகுடுப்பை சொன்னது…

சஞ்சய் வலைஞர் காங்கிரஸ் சங்கத்தலைவர்.

TBCD சொன்னது…

சும்மா கூப்பிட்டால் கூட காங்கிரசில் சேர மாட்டாங்க..இதிலே வயது வரம்பு வேறையா..!

ஃஃஃஃஃஃ

ராகுல் கந்தியின் வயது 39 என்பது உபரித் தகவல்

ttpian சொன்னது…

சோனியாவுக்கு வயது 16 அல்லது 17 இருக்குமா?

மங்களூர் சிவா சொன்னது…

50 வயதுக்கு மேற்பட்டவர்களை யூத் காங்கிரஸில் சேர்க்கலாம் பதிவுலகில் ஏகப்பட்ட 'யூத்து'ங்க இருக்காங்க. உங்களுக்கும் உறுப்பினர் பதவி கிடைக்கும். சஞ்சய்க்கும் கிடைக்கும்

:))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அண்மையில் காங்கிரசு கட்சியின் வருங்கால பிரதமர் திரு ராகுல் காந்தி
//

இப்பல்லாம் கட்சிக்கே பிரதமர் போட ஆரம்பிச்சுட்டாங்களா!?

இது கண்டிக்கப் பட வேண்டிய விடயம்!

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திரு ராகுல் காந்தி தமிழகம் வந்த போது அவரை 35 வயதுக்கும் மேற்பட்ட (காங்கிர(சில்)சைச் சேர்ந்த) ஆண்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லையாம். மனமுடைந்து எந்தனை காங்கிரசு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.//

யாரும் இல்லை!

யான் சொல்லுங்க!

அதுக்கும் பதில்

யாரும் இல்லை! :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இத தொடர்சியாக் கட்சியில் இணைந்து கொழுத்த பதிவி பெற நினைத்த நடிகர் இளைய தளபதி, டாக்டர் விஜய் (என்ன கொடுமை சாரே) அவர்களுக்கு தமிழக காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் பதிவி கொடுக்கப் படமாட்டாது என்று திரு ராகுல் வெளிப்படையாக தெரிவித்துவிட்டதால் டாக்டர் விஜய் தரப்பு படு அப்சட் என்று தினமலரில் எழுதி இருக்கிறார்கள்.//

நம்ம விசை யாச்சும் மருத்துவர்(டாக்டர்) பட்டம் வாங்கி இருக்காரு. இந்த ராகுல் என்ன வாங்கி இருக்காரு. வாங்குன பட்டமே போலின்னு சுப்பிரமணிய சாமி சொல்றாரு! அதுக்கான எவிடென்சும் இருக்குன்னு கண்டிசனா சொல்றாரு. அவர் தொழிலே அதானே! எப்படியாவது பிழைக்கட்டும் நமக்கேன் வம்பு!?

T.V.Radhakrishnan சொன்னது…

//TBCD


சும்மா கூப்பிட்டால் கூட காங்கிரசில் சேர மாட்டாங்க..இதிலே வயது வரம்பு வேறையா..!//

repeateyyyy

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

விஜய் திமுகவில் சேருவது நல்லது திமுகவில் தான் 60 வயது ஆனாலும் திரு ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராக நீடிக்கிறார். திரு ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதால், திமுக இளைஞர் அணிக்கு சரியான தலைவர் ஸ்மார்டான இளைஞராக 35 வயதைக் கடந்த டாக்டர் விஜய் பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.//

அலோ...!

இதுக்கு உங்க ரெக்கமண்டேசன் வேறயா?

நாலு மசலாப் படத்துல நல்லா காசு பாத்தவரப் போயி கார்பரேட் கம்பெனியில நாள் சம் பலத்துக்கு சேருங்கன்னுக்கு சொல்றது அனியாயம்யா!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இளைஞர் என்றால் 35 வயதுக்குள் இருப்பவர்கள் என்று திரு ராகுல் சொல்லிவிட்டதால்,


ஆமா இவர் சொல்லிட்டா நாமல்லாம் கேட்டுறனும்...!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இளைஞர் என்றால் 35 வயதுக்குள் இருப்பவர்கள் என்று திரு ராகுல் சொல்லிவிட்டதால், 35 வயதுக்கும் மேற்பட்ட பலர் இளைஞர் 'யங்க்ஸ்டர்' கெட்டப்பை விட்டுவிடலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன், எனக்கும் 35 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது.//


ஆமா ஆமா!

உங்களுக்கு 35 வயசு 1 மாதம் 3 நாள் தான் ஆவுதுன்னு தெரியும்.

இன்னொரு முறை உரத்து சொல்லிட்டாப் போச்சு!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்தியா இளைஞர்கள் கையில், இளைஞர்கள் இராகுலின் கையில், வாழ்க ஜென நாயகம் ! ராகுல் வயதைக் காரணம் காட்டி டாக்டர் விஜயை ஓரம் கட்டியதற்காக, புறக்கணிததற்காக விஜய் ரசிகர்கள் சத்திய மூர்த்தி பவனில் உண்ணாவிரம் இருப்பார்களா ? //

காந்திக்கு அப்புறம் உண்ணா நிலையை மதிக்கும் காங்கிரஸ்காரர் இருந்தான் என் கண்ணுல காட்டுங்க சாமியோவ்!

இவங்க மதிக்க மாட்டாங்கன்ணுதான் அவரு அப்பவே போய் சேந்துட்டாரு போலும்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கடைசி பத்தி நமக்குத் தேவை இல்லாதது. அதனால் விட்டு விட்டு அமைகிறேன்!

நன்றிங்க சாமியோவ்!

Jawarlal சொன்னது…

கண்ணன்ஜி, நீங்க விளையாட்டா சொன்னீங்களோ நிஜமா சொன்னீங்களோ. இளமை வயசில் இல்லை என்பதைத் தீவிரமாக நம்புகிறவன் நான்.

வயது ஆக ஆக நாம் எடுக்கும் முடிவுகளில் நம் அனுபவம் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பிக்கிறது. நம் வெற்றிகளை விட தோல்விகள்தான் முடிவுகளை நிறைய பாதிக்கின்றன. என்னைக் கேட்டால் அனுபவங்களை சுத்தமாக மறந்து விட்டு இன்றுதான் புதிதாய்ப் பிறந்த மாதிரி செயல்படும் போது வெற்றி கிடைக்கிறது என்பேன்.

Plunge in to present என்று விவேகானந்தர் சொன்னதும், keep the mind as an empty cup என்று ஜெ.கே. சொன்னதும் இதைத்தான் என்று நம்புகிறேன்.

35 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பார்த்து ராகுல் அஞ்சுவது இந்த difficiency யால் கூட இருக்கலாம்!

http://kgjawarlal.wordpress.com

துளசி கோபால் சொன்னது…

ராகுலுக்கே அந்தத் தகுதி இல்லையே.... அவருக்கு வயசு 35 தாண்டியாச்சு.

என்ன செய்யப்போறார் என்பதைக் 'காலம்'தான் சொல்லணும்!

நட்புடன் ஜமால் சொன்னது…

டாக்டர் வாழ்க ...

பீர் | Peer சொன்னது…

மீ த பிலோ 35 ;)

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

மன அமைதி தன்னம்பிக்கை விடாமுயற்சி உழைப்பு இதுக்கெல்லாம் வயது என்பது ஒரு தடையே இல்லை எனலாம் . இந்த நான்கும் இருந்தாலே என்றும் இளமை தான்...

Mãstän சொன்னது…

30 வயசுக்கு மேலயே இளைஞர் இல்லைதானே? இதில் எப்படி வந்துச்சு 35? அரசியல விடுங்க, நிஜத்தில் இளைஞர் என்றாலே 30 வயசுக்கு கீழ் பட்டவர்கள்தான்.

so, 35 வயசில் அதற்கு மேல் உள்ளவர்கள் அங்கிள் ஆகப்படுவார்கள். ஹிஹி. :)

ILA சொன்னது…

//35 வயதுக்கு மேற்பட்டவர் இளைஞர் இல்லையா ?//
இல்லை

SanjaiGandhi சொன்னது…

பெரிசு, அடங்க மாட்டிங்களா? 35 வயசுக்கு மேல இருக்கிறவங்க எல்லாம் இளைஞர்கள் இல்லைன்னு ராகுல் சொல்லவே இல்லை. அதனால் கோவியார் தற்கொலை முயற்சியை கைவிடவும். இந்த வயது வரம்பு சில காரணங்களுக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்கு ஆலோசனை தந்தவர்கள் முன்னாள் தேர்தல் ஆணையர்கள். இளைஞர் காங்கிரஸ் தேர்தலே அவர்கள் கட்டுபாட்டில் தான் நடைபெறுகிறது.

கவலை வேண்டாம் கோவிஜி.. நான் ராகுலை சந்தித்துவிட்டு தான் வந்திருக்கிறேன். :)

SanjaiGandhi சொன்னது…

// TBCD said...

சும்மா கூப்பிட்டால் கூட காங்கிரசில் சேர மாட்டாங்க..இதிலே வயது வரம்பு வேறையா..!//

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு அர்விந்த் அண்ணா.. :)) 24ஆம் தேதிக்குள் ஒரே ஒரு நாள் என் கூட வாங்க. அப்புறம் தெரியும். :)

ஃஃஃஃஃஃ

// ராகுல் கந்தியின் வயது 39 என்பது உபரித் தகவல்//
இதை எதற்கு இங்கே சொல்லி இருக்கிங்கன்னு சரியா தெரியலை. ஆனாலும் ஒன்னு சொல்லிடறேன். ராகுல்காந்தி இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் கூட இல்லை. அவர் அகில இந்திய காங்கிரசின் பொது செயலாளர். இளைஞர் மற்றும் மாணவரணிக்கு பொறுப்பாளராக இருக்கிறார்.

SanjaiGandhi சொன்னது…

//நம்ம விசை யாச்சும் மருத்துவர்(டாக்டர்) பட்டம் வாங்கி இருக்காரு. இந்த ராகுல் என்ன வாங்கி இருக்காரு. வாங்குன பட்டமே போலின்னு சுப்பிரமணிய சாமி சொல்றாரு! அதுக்கான எவிடென்சும் இருக்குன்னு கண்டிசனா சொல்றாரு.//

உங்களுக்கு தேவைனா சு.சாமி, சோ, இந்து ராம் எல்லாம் யோக்கியர்கள் ஆய்டறாங்க இல்ல? :)) அந்த சு.சாமி இன்னும் என்னத்துக்கு எல்லாம் ஆதாரம் இருக்குன்னு சொல்றார்னு பட்டியல் போடவா ஜோதி சார்? . :))

SanjaiGandhi சொன்னது…

//குடுகுடுப்பை said...

சஞ்சய் வலைஞர் காங்கிரஸ் சங்கத்தலைவர்.//

ஜ மு க வை எப்போ இதுல இணைக்கறிங்க? :)))

SanjaiGandhi சொன்னது…

//காந்திக்கு அப்புறம் உண்ணா நிலையை மதிக்கும் காங்கிரஸ்காரர் இருந்தான் என் கண்ணுல காட்டுங்க சாமியோவ்!//

காலைல மூக்கு முட்ட திண்ணுட்டு வந்து 12 மணி வரைக்கும் நீங்க உண்ணா வெரதம் இருப்பிங்க. அதை வேற நாங்க மதிக்கனுமா?

TBCD சொன்னது…

///
SanjaiGandhi said...

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு அர்விந்த் அண்ணா.. :)) 24ஆம் தேதிக்குள் ஒரே ஒரு நாள் என் கூட வாங்க. அப்புறம் தெரியும். :)

///

ஐயோ பாவம் ! இப்படி பதிவு பதிவா காவடி எடுக்கின்ற உன்னைப் பார்த்தால் எனக்கும் தான் பாவமாக இருக்கின்றது.

உங்களுக்கு இருக்கின்ற காங்கிரசு மீதான அபிமானம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. அதன் காரணமென்ன என்று தான் புதசெவி !


வந்தால் என்ன நடக்கும் என்பதை இங்கே சொல்லலாமா...சொல்லலாம் என்று சொல்லுங்க.
ஃஃஃஃஃஃ

//ராகுல்காந்தி இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் கூட இல்லை. அவர் அகில இந்திய காங்கிரசின் பொது செயலாளர். இளைஞர் மற்றும் மாணவரணிக்கு பொறுப்பாளராக இருக்கிறார்.//


எந்த தகுதியின் அடிப்படையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. அயராது நாட்டிற்காக காங்கிரசு மூலம் உழைத்தாரா. அதற்காக வழங்கப்பட்டதா..??

SanjaiGandhi சொன்னது…

//துளசி கோபால் said...

ராகுலுக்கே அந்தத் தகுதி இல்லையே.... அவருக்கு வயசு 35 தாண்டியாச்சு.

என்ன செய்யப்போறார் என்பதைக் 'காலம்'தான் சொல்லணும்!//

ராகுல், இளைஞர் காங்கிரசின் உறுப்பினராகக் கூட இல்லை. வரலாறு முக்கியம் டீச்சரே.. :))
’காலம்’ சொல்லாது.. கொல்லைப் புறம் தினமலர் படிச்சிட்டு ரம்பம் போட்டுக் கொல்லும். :)

SanjaiGandhi சொன்னது…

//ஐயோ பாவம் ! இப்படி பதிவு பதிவா காவடி எடுக்கின்ற உன்னைப் பார்த்தால் எனக்கும் தான் பாவமாக இருக்கின்றது. //

நான் சார்ந்திருக்கும் இயக்கத்தைப் பற்றி தவறாக எழுதும் இடத்தில் பதில் சொல்வது என் விருப்பம். அதற்கு பெயர் காவடி தூக்குவது என்றால் , இதே போன்ற செயலுக்கு நீங்கள் பல முறை காவடி எடுத்திருக்கிங்க அண்ணாத்த. அந்த அனுபவத்துல தான் உடனே இதற்கு காவடி தூக்கறதுன்னு பேர் வச்ச்சிட்டிங்க போல. நல்லா இருங்க.:)

ஃஃஃஃஃஃ

//எந்த தகுதியின் அடிப்படையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. அயராது நாட்டிற்காக காங்கிரசு மூலம் உழைத்தாரா. அதற்காக வழங்கப்பட்டதா..??//

இது எங்கள் கட்சியின் விவகாரம். நாளையே அவரை தலைவர் பதவியிலும் அமர்த்துவோம். இதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொடுத்த பதவியை வைத்து உபியில் சாதித்தும் காட்டி இருக்கிறார். நீங்கள் விரும்பாவிட்டாலும் இனியும் சாதிப்பார். வேறு வழி இல்லை. :)

TBCD சொன்னது…

///
SanjaiGandhi said...

நான் சார்ந்திருக்கும் இயக்கத்தைப் பற்றி தவறாக எழுதும் இடத்தில் பதில் சொல்வது என் விருப்பம்.

///

மறுப்பதற்கில்லை.

///
அதற்கு பெயர் காவடி தூக்குவது என்றால் , இதே போன்ற செயலுக்கு நீங்கள் பல முறை காவடி எடுத்திருக்கிங்க அண்ணாத்த.
///

நான் எந்த இயக்க சார்புமற்றவன். எந்த இயக்கத்திற்காக எந்த இடத்தில் காவடி எடுத்துள்ளேன் என்று எடுத்தியம்பினால், திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

///
அந்த அனுபவத்துல தான் உடனே இதற்கு காவடி தூக்கறதுன்னு பேர் வச்ச்சிட்டிங்க போல. நல்லா இருங்க.:)
///

இதெல்லாம் சொலவடை தம்பி.

ஃஃஃஃஃஃஃ

//

இது எங்கள் கட்சியின் விவகாரம். நாளையே அவரை தலைவர் பதவியிலும் அமர்த்துவோம். இதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொடுத்த பதவியை வைத்து உபியில் சாதித்தும் காட்டி இருக்கிறார். நீங்கள் விரும்பாவிட்டாலும் இனியும் சாதிப்பார். வேறு வழி இல்லை. :)
//

இது உங்கள் கட்சி விவகாரம் என்றால் ராகுல் காந்தி வந்தா உங்க கட்சி காரவங்களை மட்டும் சந்திச்சிட்டுப் போக வேண்டும். செய்வாரா..

அதையே நீட்டித்தால், பதிவு எழுதியது கோவியாரின் உரிமை. அதில் வந்து விளக்கம் கேட்க/சொல்ல உரிமை உங்களுக்கு எப்படி வந்தது.


அரசியல் இயக்கங்கள் மக்கள்
சேவைக்காக வந்துள்ளன என்றால், அதை கேள்வி கேட்பதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.

பொதுவில் வந்துவிட்டால், ராகுல் காந்தியின் ஊர்தியின் பெட்ரோல் செலவு யார் பையிலிருந்து செல்கிறது என்றும் கேட்க உரிமை உண்டு.

தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும், இளைஞர் காங்கிரசில் சேருங்கள் என்று சொல்பவர் எந்த தகுதியில் அந்த இடத்தை அடைந்தார் என்று கேட்டால், உட்கட்சி விவகாரம் என்று மூடி மறைப்பதிலேயே பல்லிளிகின்றது அவரின் நேர்மை.

//அதன் காரணமென்ன என்று தான் புதசெவி !


வந்தால் என்ன நடக்கும் என்பதை இங்கே சொல்லலாமா...சொல்லலாம் என்று சொல்லுங்க.//

இதுக்கு பதில் சொல்லவில்லையே அன்பு தம்பிரி :)

SanjaiGandhi சொன்னது…

//அதையே நீட்டித்தால், பதிவு எழுதியது கோவியாரின் உரிமை. அதில் வந்து விளக்கம் கேட்க/சொல்ல உரிமை உங்களுக்கு எப்படி வந்தது//

எந்த தகுதியில் இந்தப் பதிவை எழுதி இருக்கிறீர்கள் என நான் கோவியாரைக் கேட்டிருந்தால் நீங்கள் கேட்பது நியாயமே. ஆனால் நான் அபப்டி கேட்கவில்லையே. மேலும் ஒரு இயக்கம் பொது சேவை செய்யவே இயங்கினாலும் கூட அதன் பதவிகள் தொடர்பான நடவடிக்கைகளை அதற்கு தொடர்பில்லாதவர் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அது அந்த இயக்கத்தில் உள்ள பெரும்பான்மையோர் விருப்பம்.

//இது உங்கள் கட்சி விவகாரம் என்றால் ராகுல் காந்தி வந்தா உங்க கட்சி காரவங்களை மட்டும் சந்திச்சிட்டுப் போக வேண்டும். செய்வாரா..
//
யாரையாவது மிரட்டி சந்தித்தாரா? விருப்பம் இருப்பவர்கள் அவரை சந்திக்கிறார்கள்.

//பொதுவில் வந்துவிட்டால், ராகுல் காந்தியின் ஊர்தியின் பெட்ரோல் செலவு யார் பையிலிருந்து செல்கிறது என்றும் கேட்க உரிமை உண்டு.//

இல்லை என்று யார் சொன்னது? சம்பந்தப் பட்டவர்களை உடனே கேளுங்கள். அது காங்கிரஸ் கட்சியின் பணம் தான். அவர் கட்சிப் பணிக்காகத் தான் வந்தார். அரசாங்கப் பயணமாக அல்ல.

//தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும், இளைஞர் காங்கிரசில் சேருங்கள் என்று சொல்பவர் எந்த தகுதியில் அந்த இடத்தை அடைந்தார் என்று கேட்டால், உட்கட்சி விவகாரம் என்று மூடி மறைப்பதிலேயே பல்லிளிகின்றது அவரின் நேர்மை.//

அவர் சொன்னது, உறுப்பினர்கள் ஆதரவு என்ற தகுதியை. அதே போன்ற ஆதரவால் தான் அந்தப் பதவியை அடைந்திருக்கிறார். அவர் கேட்டுப் பெறவில்லை. கட்சியினரின் வற்புறுத்தலால் தான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பின் அதற்கேற்றார் போல் செயல்பட்டு தன்னை நிரூபித்தும் காட்டினார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கூட அவரை எதிர்க்கவில்லை. முழுமையாக ஆதரிக்கிறோம்.

//இதுக்கு பதில் சொல்லவில்லையே அன்பு தம்பிரி :)//
இதுக்கு பதில் சொல்லாததுக்குக் காரணம், யாருக்கும் அனுமதி வழங்கும் நிலையில் நான் இல்லை என்பதால் மட்டுமே. உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அது உங்கள் விருப்பம். ஒரு வேளை உங்கள் கருத்துக்கள் எதிர்மைறையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு தீர்வையும் சொல்லுங்கள். நாட்டை ஆளும் தகுதி உள்ளவராக நீங்கள் கருதும் நபரையும் அடையாளம் காட்டுங்க.

TBCD சொன்னது…

///
இது எங்கள் கட்சியின் விவகாரம். நாளையே அவரை தலைவர் பதவியிலும் அமர்த்துவோம். இதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
///
உங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆனப்பின், இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்மா. கிடைக்காது. எனவே, உங்கள் உட்கட்சி சனநாயகம் கேலிக்கூத்து என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எனவே, இது உட்கட்சி விவகாரம் என்று சொல்வதின் மூலம், தப்பிக்க முடியாது.

கட்சியிலேயே சனநாயகத்தை பேன முடியாத கட்சி தான் நாட்டில் சனநாயகத்தை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

//கொடுத்த பதவியை வைத்து உபியில் சாதித்தும் காட்டி இருக்கிறார். நீங்கள் விரும்பாவிட்டாலும் இனியும் சாதிப்பார். வேறு வழி இல்லை. :)
//

அவர் என்ன சாதித்தார் என்பதுக் குறித்து எனக்கு கவலையில்லை. சாதிக்க வாய்ப்பு எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது. அதில் எத்தனை பேர் இவர் கூறிய சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, சாதிக்க முயன்று தோற்றார்கள் என்பது தான் இங்குள்ள கேள்வி.


/// மேலும் ஒரு இயக்கம் பொது சேவை செய்யவே இயங்கினாலும் கூட அதன் பதவிகள் தொடர்பான நடவடிக்கைகளை அதற்கு தொடர்பில்லாதவர் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அது அந்த இயக்கத்தில் உள்ள பெரும்பான்மையோர் விருப்பம்.
///

பெரும்பான்மையோர் விருப்பமாக காட்டப்பட்டது.

என்னுடைய அடிப்படையாக கேள்வி, காங்கிரசின் மேலான அபிமானத்தின் அடிப்படை என்ன என்பது. அதற்கு இன்னும் பதில் வரவில்லை.


/// யாரையாவது மிரட்டி சந்தித்தாரா? விருப்பம் இருப்பவர்கள் அவரை சந்திக்கிறார்கள்.
///

அவர் தொகுதியில் நுழையும் அனைத்து இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று தான் நுழைந்தார் என்று நிருபிப்பீரா..??

///அது காங்கிரஸ் கட்சியின் பணம் தான். அவர் கட்சிப் பணிக்காகத் தான் வந்தார். அரசாங்கப் பயணமாக அல்ல.
///

காங்கிரசு கட்சிக்கு ஏது பணம். ராகுல் காந்தி தென்னகம் வந்து போனதன் செலவு 1 கோடி ரூ என்று சொல்லப்படுகிறது. இதுப் போன்ற செலவழிக்க காங்கிரசு கட்சிக்கு எங்கியிருந்து பணம் வருகின்றது. நாடெங்கும் உள்ள பல் வேறு நிறுவனங்களிடமிருந்து நிதி. இந்த நிதி வழங்குபவர்கள் எந்த வித நிபந்தனையின்றி, எந்த எதிர்ப்பார்புமின்றி வழங்கப்பட்டது என்று சொல்ல முடியும்மா உங்களால்.


///
அவர் சொன்னது, உறுப்பினர்கள் ஆதரவு என்ற தகுதியை. அதே போன்ற ஆதரவால் தான் அந்தப் பதவியை அடைந்திருக்கிறார். அவர் கேட்டுப் பெறவில்லை. கட்சியினரின் வற்புறுத்தலால் தான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
///
அவர் ஒழிப்பதாக சொல்லப்படும் பேவரிட்டிசம் மூலமாகவே அவர் மேலே வந்திருக்கின்றார். காங்கிரசில் ராகுலை விட அந்த பதவிக்கு ஆளில்லை என்று நீங்கள் சொன்னால், சிரிக்கத் தான் முடியும்.


///
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கூட அவரை எதிர்க்கவில்லை. முழுமையாக ஆதரிக்கிறோம்.
///

அப்படியா, எத்தனை பேர் முரண்டு பிடித்தார்கள், எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், தெரிவிக்காமல் இருக்க என்ன என்ன நடந்தது என்று எழுதினால் பக்கங்கள் நீண்டுவிடும். இது ஒரு அண்டப்புழுகு என்பது நான் , நீங்கள் மட்டுமல்ல, அனைவரும் அறிவோம்.


/// இதுக்கு பதில் சொல்லாததுக்குக் காரணம், யாருக்கும் அனுமதி வழங்கும் நிலையில் நான் இல்லை என்பதால் மட்டுமே. ////

கூப்பிட்டது நீங்க. நானல்ல. வந்தால் என்ன நடக்குமென்று தான் கேட்டேன். தெரியாமல் அழைத்துவிட்டேன். என்று சொன்னால் விட்டுடலாம். :P

////
ஒரு வேளை உங்கள் கருத்துக்கள் எதிர்மைறையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு தீர்வையும் சொல்லுங்கள். நாட்டை ஆளும் தகுதி உள்ளவராக நீங்கள் கருதும் நபரையும் அடையாளம் காட்டுங்க.
///

நாம் இங்கு பேசுவது ராகுலை குறித்து. அதிலே பேசி முடிச்சிட்டு இதுக்கு நாம போகலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்