பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2009

கலவை 17 Sep 2009 !

அறிஞர் அண்ணா நூற்றாண்டு முடிந்துவிட்டு இருக்கிறது. பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி தமிழகத்தின் பண்ணையார் முறை மத்திய அரசின் கைப்பாவை காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட இயக்க ஆட்சியைத் தொடங்கி வைத்தவர். அண்ணா இல்லாதிருந்தால் காங்கிரசே இன்றும் தமிழகத்தை பீடித்து வந்திருக்கும். திரைப்படம், இலக்கியம், அரசியல் என்று மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் கருணாநிதி திறமையாக சவாரி செய்கிறார் என்றால் அவருக்கு முன் அதை செய்து காட்டியவர் என்ற பெருமை மிக்கவர் அறிஞர் அண்ணா. பெரியாரின் பகுத்தறிவு கொள்கைக்களுக்கு தேவையான உரமாக பழைய புராணக் குப்பைகளை கிளறி எடுத்துக் கொடுத்தவர் அண்ணா. அண்ணா ஆழ்ந்து படிக்காத புராணா இதிகாசங்கள் தமிழில் எதுவுமே கிடையாது. சைவ சமய பெரிய புராணங்களின் புனிதத் தன்மைகளையும் அவதார மகிமைகளையும் கேள்விக்கு உட்படுத்தி சமய வாதிகளிடம் பீதியை ஏற்படுத்தினார். பெரிய புராணத் தகவல்களை இலக்கியங்களாகப் படித்ததைவிட அண்ணாவின் நூல்கள் வழியாக நான் அறிந்ததே மிகுதி. அறிஞர் அண்ணா என்றொரு நல்ல தொண்டர் இருந்ததால் பெரியாரின் கொள்கைகள் மிக எளிதாக படித்தவர்களிடமும் பாமரர்களிடமும் சென்று சேர்ந்தது. அண்ணா எழுதியவற்றில் ஆரிய மாயை மற்றும் மாஜிக் கடவுள்கள் எல்லோரும் படித்து அறிய வேண்டிய நூல்.

***

தென்கச்சி கோ சுவாமி நாதன், 'இன்று ஒரு தகவல் மூலம்' இவர் குரலை மட்டும் கேட்டு வந்திருந்த போது அவரது குரலுக்கு பொருத்தமான உருவமாக நடிகர் தங்கவேலு அவர்களைப் போல் இருப்பாரோ என்று நினைத்ததுண்டு. குழந்தைகளுக்கு கதை சொல்வது போல் அன்றாடம் வானொலியிலும், தொலைகாட்சியிலும் பேசும் அவரது குரலைக் கேட்டிராத தமிழர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். வானொலியில் பேசும் போது எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆனால் ஆண்டு 2003 வாக்கில் சிங்கையில் சிகரங்கள் என்கிற நிகழ்ச்சியில் பேசுவதற்கு அவர் வந்த போது முதன் முறையாக நேரில் அவரது நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'வானொலியில் நான் மட்டும் தான் பேசிக் கொண்டு இருபேன், என்னைச் சுற்றி யாரும் இருக்கமாட்டார்கள், இங்கேயும் நான் மட்டும் தான் பேசிக் கொண்டு இருப்பேன், என்ன ஒருவேறுபாடு சுற்றிலும் நீங்கள் இருக்கிங்க' என்று நகைச்சுவையாக தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவரிடம் இருக்கும் சிறப்பே, முழுக்க முழுக்க எதையும் நகைச்சுவையாகச் சொல்வது தான். அதிலும் என்ன சிறப்பு என்றால் அவர் பேசும் போது அவர் மெலிதாகக் கூட புன்னகைக்க மாட்டார். அவர் பேசுவதைக் கேட்பவர்கள் வெடித்து சிரித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியிலும் முத்தாய்பாக ஒரு நகைச்சுவை துணுக்கைச் சொல்லி முடிப்பார். அது அவரது நல்ல உத்தி, முடிவில் ஒரு நகைச்சுவை உண்டு என்கிற ஒரு எதிர்பார்ப்பை எப்போதும் அவர் தருவதால், கேட்பவர்கள் உரையைக் கடைசி வரைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். பிறரிடம் யோசனைக் கேட்பது பற்றிய ஒரு தகவல் முடிவில் அவர் சொன்னது 'என்கிட்ட தோட்ட பராமரிப்பு பற்றி ஒருவர் யோசனை கேட்டார், செடி வாடாமல் இருக்க வேர் காயமல் இருக்கனும்னு சொன்னேன், அப்பறம் ஒரு மாதம் சென்று அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தால் செடி எல்லாம் வதங்கி இருக்கு, என்னங்க இப்படி இருக்கேன்னு கேட்டேன், நீங்க தானே வேரு காயமல் இருக்கான்னு பார்துக்கச் சொன்னிங்க...அதான் தினமும் பிடிங்கிப் பார்க்கிறேன்' ன்னு சொன்னாரு.

சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''

இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சுவாமிநாதன் நேற்று இறுதித் தகவல் ஆகிப் போனார். அண்ணாரின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகுக்கு இழப்பு தான்.

***

இது போன்று நடப்புத் தகவல்களைப் பற்றிப் பெரிதாக எழுதினால் தனித்தனிப் பதிவாக மாறிவிடும், படிக்கிறவர்களுக்கும் சலிப்பு ஏற்படுத்திவிடும், தெரிந்த அறிந்தவற்றை எழுத இரண்டு மூன்று நாள்கள் ஆகிவிடும், அதற்குள் நடப்பு பழயதாகிவிடும், ஒரே பதிவில் பல தகவல்களை, செய்திகள் எழுதிவிட்டால் எளிதாக முடிந்துவிடும், நண்பர் பால பாரதி தொடங்கி வைத்த 'விடுபட்டவை' பாணியிலான இந்த வகைக் கலவைத் தகவல் துணுக்குப் பதிவுகளைப் பலரும் பல தலைப்புகளில் எழுதுகிறார்கள்.


ஒரு ஜோக் :

விமானப் பயணங்களில் உயர்வகுப்புக்கில் செல்வதைத் தவிர்க்குமாறு சிக்கன நடவடிக்கையை அமைச்சர்களுக்கு வழியுறுத்திய மத்திய அரசு ஒரு அமைச்சர் ரயிலில் போனதற்கு ரொம்ப வருத்தம் கொள்கிறது

என்னவாம் ?

நம்ம அமைச்சர் ரயிலிலேயேப் போகிறேன் என்று சொல்லி வட்டம் பரிவாரம் எல்லாத்துக்க்கும் சேர்த்து முழு ரயிலையே ஆகிரமிப்பு பண்ணிட்டாராம்

8 கருத்துகள்:

இரும்புத்திரை அரவிந்த் சொன்னது…

//நம்ம அமைச்சர் ரயிலிலேயேப் போகிறேன் என்று சொல்லி வட்டம் பரிவாரம் எல்லாத்துக்க்கும் சேர்த்து முழு ரயிலையே ஆகிரமிப்பு பண்ணிட்டாராம்//

நல்லவேளை நடந்து போகல அடுத்தவனுக்கு தொல்லை குடுக்காம சாகவே மாட்டாங்களா?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

உங்கள் பகுத்தறிவு கருத்துக்களின் மூலம் கூறியதற்கு நன்று :)

ஒன்றே குலம் ; ஒருவனே தேவன் :)

தென்கச்சி கோ சுவாமிநாதன் என்றும் மக்கள் மனதில் ஒரு தகவலாகவே இருப்பார்.

(உபரி தகவல் :

//அவரது குரலுக்கு பொருத்தமான உருவமாக நடிகர் தங்கவேலு அவர்களைப் போல் இருப்பாரோ //

நடிகர் தங்கவேலு அவர்கள் மறைந்த பிறகு அவரின் திரைப்படத்திற்கு பின்னனிகுரல் கொடுத்தது தென்கச்சி அவர்கள் தான்.)

கலவை வைகல லகவை..கலக்கல்.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

நல்ல தகவல்கள். நிறைவான பதிவு

அன்புடன்
ஆரூரன்

T.V.Radhakrishnan சொன்னது…

நிறைவான பதிவு

அப்பாவி முரு சொன்னது…

நல்லவங்க எல்லாம் ஸீக்கிரமெ செத்துடுராங்க..

:(((

பித்தன் சொன்னது…

எனது அன்பு நண்பர் அவர்களே , தங்களின் அண்ணா கட்டுரை படித்ததென். இதுக்கு முந்திய கட்டுரையில் கூறியபடி பண்ணையார் ஆட்சி அகற்றுதால் மற்றும் புராணங்கள் கிண்டல் செய்ய ஆபாசபுத்தகம் எளுதுவது என்பதுதான் எளுதியுள்ளீர்கள். நான் வால்பையன், ஓவியா அவர்களிடம் கேட்டு பதில் கிடைக்காதால் உங்களிடமும் கேக்கின்றேன். அண்ணா அவர்கள் தமிழ் நாட்டுக்கு செய்த நன்மைகள் என்ன? எத்தனை டேம்கள் கட்டினார்,எத்தனை பள்ளிகள் நிறுவினார், எத்தனை நிறுவனங்கள்(பொதுத்துறை), ஆலைகள் கொண்டுவந்தார், இன்னமும் நல்ல திட்டங்கள்(இலவசம்,மற்றும் பொதுச்செத்தை தானம் செய்வது அல்ல) மகளிர் குழந்தைகள் நலன்,மாணவர் மேம்பாடு போன்றவை என்ன செய்தார். என விளக்கி பதிவு போட்டால் என் மாதிரி ஆளுங்க எல்லாரும் தெரிந்துகொள்வேம்.
டிஸ்கி: அப்பிடி நீங்க பதிவுபோட்டால் அது நீங்கள் எளுதிய பண்ணையார்கள் மற்றும் பிராமனர்கள் ஆட்சியில் செய்ததைவீட கால்தூசுக்கு வராது என்பதை உணரலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

தென்கச்சிக்காரர் என் கட்சிக்காரர், குழந்தை மனமும்,குணமும் படைத்தவர்!

SanjaiGandhi சொன்னது…

தென்கச்சியார் மரணம் பேரிழப்பு. :(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்