பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2009

சரஸ்வதி, லக்ஷ்மி கடாச்சம் !

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அரங்க.சுப்பையா என்கிற தமிழ் வாத்தியார் பாடம் எடுப்பார். அவர் ஒரு நாத்திகர், மாணவர்களின் அடுக்கப்பட்ட கட்டுரை குறிப்பேடுகளின் (கட்டுரை நோட்) மீது தான் அவ்வப்போது உட்காருவார், நானெல்லாம் நாள் தோறும் பட்டை போட்டுச் செல்வதால் வாத்தியாரின் செயல் அருவெருப்பாக எண்ணி, சரஸ்வதியை அவமானப் படுத்துவதாகவும் மனம் புழுங்குவேன். இறைமறுப்பாக பேசாமல் அடிக்கடி எதாவது கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பார், 'விளையாட்டுக்கும் திருவிளையாட்டுக்கும் என்ன வேறுபாடு தெரியுமான்னு கேட்டுவிட்டு, நாம விளையாண்டால் விளையாட்டு அதுவே கடவுள் விளையாண்டால் திருவிளையாடலாம்...நாம் வெளையாண்டால் வாலிபால்....அதுவே கடவுள் விளையாண்டால் திருவாலிபால்' என்பார். நான் எண்ணி இருந்ததற்கு மாற்றான கடவுள் பற்றிய எதிர்மறை கருத்துகள் ஆதலால் அவை அப்போது மனதில் பதிந்தது, அவரை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும். மற்றபடி அவர் எப்போதும் நல்ல ஆசிரியர், ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி மற்றும் பொருள் உதவி செய்தவர், அதன் பிறகு அவரை பார்த்தே இல்லை, தற்காலம் தஞ்சை பல்கலை கழகத்தில் பணி புரிந்துவருவதாக கேள்வி, இந்நேரம் ஓய்வு பெற்றிருந்தாலும் வியப்பு இல்லை.


பேராசிரியர் அரங்க சுப்பையா (முனைவர் மு இளங்கோவன் பதிவில் இருந்து)


பாட புத்தகங்கள் மற்றும் எழுதும் குறிப்பேடுகளில் தப்பித்தவறி கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுவது இறை நம்பிக்கையுடய தமிழர்கள் வழக்கம். மேலேயே ஏறி உட்கார்ந்திருப்பது நினைத்துப் பார்க்காத செயல், ஏனென்றால் நமக்கு பெற்றோர்கள் வழி ஊட்டப்படும் பழக்கங்களில் பாடம் தொடர்புடையவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதில் குறிப்பேடுகளில் கால் படக் கூடாதது என்பதும் ஒன்றே. ஆனால் வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது,
இப்போதெல்லாம் சரஸ்வதியும், லஷ்மியும் ஒன்றாக இருக்கும் படிதான் நாட்டின் செல்வ செழிப்பு இருக்கிறது. அதாவது முன்பெல்லாம் தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களே இருந்தன, தற்பொழுது உயர் ரக தாள், அதில் மதிப்பு அச்சிடப்பட்டு பணம் என்று அழைக்கப்படுகிறது, தாள் சரஸ்வதி அதன் மதிப்பு லக்ஷ்மி, இருவரும் சேர்ந்தே தான் டாஸ்மாக் முதல் விலைமகளிர் இல்லம் வரையில் நுழைகிறார்கள், இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.

இன்னும் வேறுமாதிரி சொல்லவேண்டுமென்றால் உடல் உறுப்புகள் அனைத்தும் தனித்தனியாக முதன்மைத்துவம் வாய்த்தவை, விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, இதில் வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை. ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ? தலைக்கு தலையணையும் உட்கார மென்மையான இருக்கைகளை தேடுகிறோம், கால்களுக்கு முட்டுக் கொடுத்து, அல்லது கால்களுக்கு அணையாக எதோ ஒன்றை பயன்படுத்துவதால் என்ன தவறு ? அண்மையில் கம்பவாருதியின் சொற்பொழிவை கேட்ட போது இறைவணக்கம் எப்போதும் இறைவனின் கால்களுக்கு செலுத்தப்படுகிறது, 'இறைவனடி' சேர்ந்தார் என்று காலை பெருமை படுத்தித்தான் சொல்கிறார்கள், போற்றிப்பாடல்கள் காலில் தொடங்கி தலையில் முடியும், மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார். (அம்மாவின் கால்களில் விழுபவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள், சுயமரியாதை செம்மல்கள் தான் கால்களை இழிவாக நினைத்து கால்களில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு என நினைக்கிறார்களோ :))

தாள்களில் வெறும் பாடம் தொடர்புடையது மட்டுமா அச்சடிக்கப்படுகிறது ? சரோஜா தேவி வகை ஆபாச கதைகள், ஆபாச படங்கள், மற்றும் திரை உலக கிசுகிசுக்கள் எல்லாம் அச்சடிக்க பயன்படும் தாளை சரஸ்வதி ரேஞ்சுக்கு உயர்த்துவது உச்சகட்ட பக்தியின் அச்சம் தான், இதையும் மீறி படங்கள் வரைந்து பாகங்களை குறித்து வைத்திருப்பார்கள் பல குறும்புக்கார மாணக்கர்கள். துள்ளும் இளமை வயது.....:) புது தொலைக்காட்சி பெட்டிக்கு தீப ஆராதணை செய்து பயன்படுத்தியவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன் :) அதில் அடுத்தவாரம் பையன் யாருக்கும் தெரியாமல் நண்பர்களுடன் நீலப்படம் பார்த்து கொண்டிருப்பான். கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.

ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.

தாள்களுக்கு தனியான மரியாதை தேவை இல்லை, அவற்றை மறுபயனீடாகவும், அளவுடன் பயன்படுத்தினால் அவற்றின் தேவைக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறையும், இதைத் தவிர்த்து தாள்களுக்கு வேறொரு மரியாதை சிறப்பாக செய்துவிட முடியுமா ?

குறிப்பு : இந்த பதிவு ஸ்வாமி ஓம்கார் பதிவுக்கு பின்னூட்டமிட்டதின் நீட்சி.

28 கருத்துகள்:

Rajaraman சொன்னது…

\\ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//

கருத்துக்கு மிக்க நன்றி. பாராட்டுதல்கள் உரித்தாகுக.

S.A. நவாஸுதீன் சொன்னது…

அருமையான பதிவு, பகுத்தறிவு பேசுபவரையும், இறை நம்பிக்கை உடையவர்களையும் பதமாக கையாண்ட விதம் அருமை.

பணத்தை தாள் என்று குறிப்பிட்ட உடன் ஒரு பழைய ஹைக்கூ நினைவில் வருகிறது.

பணம் - ஆம் நான் காகிதம் தான், ஆனால் இன்னும் குப்பைக்கூடையை காணதவன்.

ttpian சொன்னது…

நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!

Rajaraman சொன்னது…

\\நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!//

தமிழன் தமிழனாகத்தான் இருக்கமுடியும். தெலுங்கனாகவா மாறமுடியும். ஏன்யா இந்த மாதிரி லூசுத்தனமாக கமென்ட் போடுகிறீர்கள்.

Unknown சொன்னது…

//வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்றுஇ சமூக ஒற்றுமைக்கு எதிரானதுஇ அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//
இது சரிதான். ஆனால்
உங்கள் பணமும் டாய்லெட் பேப்பர் போலத்தான் அல்லது டாய்லெட் பேப்பராக பயன்படத்தான் லாயக்கு என்பது போல் படம் போடுறீங்களே. இது சரியா? :)

சி தயாளன் சொன்னது…

:-)...

வழமை போல் இருபக்கமும் பிடி பிடித்திருக்கிறீர்கள்...:-))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரை பள்ளிப் பருவத்து பால் வடியும் முகத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி!
இறுதியாக சொன்ன மரம் சம்மந்தப் பட்ட விடயம் நன்று!
மரத்தை அழிப்பது எளிது! உருவாக்குவது எவ்வளவு கடினமானது?
ஒரு மரத்துல மிஞ்சி மிஞ்சி போனா எத்தனை கிலோ காகிதம் செய்ய முடியும்?

ராம்.CM சொன்னது…

அருமையான பதிவு....

கோவி.கண்ணன் சொன்னது…

//கருத்துக்கு மிக்க நன்றி. பாராட்டுதல்கள் உரித்தாகுக.//

இராஜா இராமன் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// Syed Ahamed Navasudeen said...
அருமையான பதிவு, பகுத்தறிவு பேசுபவரையும், இறை நம்பிக்கை உடையவர்களையும் பதமாக கையாண்ட விதம் அருமை. //

பாராட்டுக்கு நன்றி !

//பணத்தை தாள் என்று குறிப்பிட்ட உடன் ஒரு பழைய ஹைக்கூ நினைவில் வருகிறது.

பணம் - ஆம் நான் காகிதம் தான், ஆனால் இன்னும் குப்பைக்கூடையை காணதவன்.
//

பணம் தாள் தானே, கிழிந்து போனால் தாள் தானே !

நீங்கள் சுட்டிய ஹைக்கூ அருமை, அதுவும் அந்த பொருளைத் தான் குறிக்கிறது என நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ttpian said...
நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!
//

இன்னும் பிறரின் பல பதிவுகளில் கூட இதே பின்னூட்டம் பார்த்தேன். எனவே பதிவுக்கு தொடர்பற்றதாக எடுத்துக் கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் பணமும் டாய்லெட் பேப்பர் போலத்தான் அல்லது டாய்லெட் பேப்பராக பயன்படத்தான் லாயக்கு என்பது போல் படம் போடுறீங்களே. இது சரியா? :)//

இப்போதெல்லாம் டாலரின் 'மதிப்பு' என்கிறார்களே, மதிப்பு இழுந்தால் டாய்லெட் பேப்பராகக் கூட, டாய்லெட் பேப்பரை வாங்கக் கூட பயன்படுத்த முடியாது

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
:-)...

வழமை போல் இருபக்கமும் பிடி பிடித்திருக்கிறீர்கள்...:-))
//

இரண்டு கண்ணு இருக்கே...சமமாக பார்ப்போம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
:-))))
//

எக்கோ சிரிப்பா......சிங்கையில் கேட்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரை பள்ளிப் பருவத்து பால் வடியும் முகத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி!//

கவலையற்ற வயதில் அப்படித் தான் எல்லோரும் இருந்திருப்போம். :)

//இறுதியாக சொன்ன மரம் சம்மந்தப் பட்ட விடயம் நன்று!
மரத்தை அழிப்பது எளிது! உருவாக்குவது எவ்வளவு கடினமானது?
ஒரு மரத்துல மிஞ்சி மிஞ்சி போனா எத்தனை கிலோ காகிதம் செய்ய முடியும்?
//
:) காகிதம் கிலோ கணக்கு இல்லை, குயர் அல்லது ரீம் என்று சொல்வார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம்.CM said...
அருமையான பதிவு....
//

நன்றி சார்.

Subankan சொன்னது…

கத்தி முனையில் நடப்ப‍து போலக் கவனமாக எழுதியிருக்கிறீர்கள். அருமை!

மணிகண்டன் சொன்னது…

கோவி,

டெய்லி இது மாதிரி ஒன்னு எப்படி எழுத முடியுது சார் ? எனக்கு technique சொல்லி கொடுங்க.

பட், நல்லா எழுதி இருக்கீங்க. வேற யார் எத சொன்னாலும் கேக்காத. உனக்கா புரிஞ்சா / சரின்னு தோனுவது மட்டுமே சரி. மத்த எல்லாம் மூட நம்பிக்கையே. இது தான் உங்களோட அத்தனை பதிவுகளோட சாராம்சமும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
கோவி,

டெய்லி இது மாதிரி ஒன்னு எப்படி எழுத முடியுது சார் ? எனக்கு technique சொல்லி கொடுங்க. //

எழுதவேண்டும் என்பதற்காக எண்ணுவதில்லை, எண்ணும் போது எழுதுகிறேன் :)


//பட், நல்லா எழுதி இருக்கீங்க. வேற யார் எத சொன்னாலும் கேக்காத. உனக்கா புரிஞ்சா / சரின்னு தோனுவது மட்டுமே சரி. மத்த எல்லாம் மூட நம்பிக்கையே. இது தான் உங்களோட அத்தனை பதிவுகளோட சாராம்சமும்.
//

அப்படியும் சொல்லலாம். செயல்களுக்கு பொருள்/பயன்/நல்லறிவு இப்படி எதுவும் இருக்கிறதா என்று பார்க்கனும், இல்லாவிடில் அவையெல்லாம் மூட நம்பிக்கைத்தான்.

தமிழர் நேசன் சொன்னது…

நல்ல கட்டுரை கோவிகண்ணன் அவர்களே!
எனது வாகை பதிவு செய்துவிட்டேன், தமிழிஸில் நீண்ட நேரம் தங்க வாழ்த்துக்கள்.

மணிகண்டன் சொன்னது…

உங்க பதிவ ரசிக்கற மாதிரி நக்கல் பண்ணி இருக்காரு !

http://arivhedeivam.blogspot.com/2009/03/blog-post_25.html

அதுவும் இது டாப்.

****
//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.
****

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
உங்க பதிவ ரசிக்கற மாதிரி நக்கல் பண்ணி இருக்காரு !

http://arivhedeivam.blogspot.com/2009/03/blog-post_25.html

அதுவும் இது டாப்.

****
//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.
//

மணிகண்டன் அதைப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் டிக்ஸனிரி போட்டு எழுதினால் பதிவு நீண்டுவிடும், வாசிப்பவர்களை நான் குறைவாக நினைப்பதில்லை. விளக்கம் வேறு தத்துவம் வேறு என்று விளக்கிச் சொல்லத் தேவை இல்லை. ஒவ்வொன்றிற்கும் அதற்கென சிறப்புகள் உண்டு என்பதைச் சொல்வதற்காக எழுதியது அவைகள், தத்துவம் எதையும் சொல்லவில்லை.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\விளக்கம் வேறு தத்துவம் வேறு என்று விளக்கிச் சொல்லத் தேவை இல்லை.\\

தத்துவம் வேறு, விளக்கம் வேறு என
நான் நினைக்கவில்லை.
வாய்ப்பு அமையும் போது விளக்கமாக
பதிவாக போடவும்.

நட்புடன்...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நடந்து போகும்போது காக்கா எச்சம் போட்டுட்டா ஏதோ ஒரு தாளை வச்சுச்தான் தொடைக்குறோம். இந்த வலது, இடது கை மேட்டர் ரொம்ப சூப்பர். நான் கூட நண்பர்களிடம் ஆர்க்யூ பண்ணியிருக்கேன் இதபத்தி. இடது கையால அப்பளத்தை எடுத்துக் கடிச்சா கூட, ஏண்டா இடது கையால் எடுக்குறனு கேட்டா, நான் இடதி கையை நல்லா கழுவி சுத்தமாதான் வச்சிருக்கேன்.. நீ கைய கழுவவே மாட்டீயானு கேட்பேன்.. மொத்தத்துல அருமையான பதிவுங்க.

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பார்த்து வந்ததின் விளைவு,
நிறைய ஆட்கள், நான் ரொம்ப spritual but not ritual , அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் இந்த பூஜை, மூட நம்பிக்கை ல்லாம் கிடையாது ..( .. அப்படின்னா எது ritual, ....இரவில் படுப்பது , காலையில் எழுவது, யாரையாவது பார்த்து hello சொல்வது , கை குலுக்குவது , ...இப்படி சொல்லி கொண்டே போகலாம், .... ( சற்று யோசித்து பாருங்கள் கை குலுக்குவதற்கு பதில் காலால் குலுக்கினால் என்ன கதி ) .... ஆகவே, நாம் கல்வி கற்கின்ற எந்த புஸ்தகம், பேப்பர் போன்றவை காலில் படாமல் இருப்பது, நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமே.
Sundar - Dubai

கோவி.கண்ணன் சொன்னது…

//Sundar 5:03 PM, March 30, 2009
நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பார்த்து வந்ததின் விளைவு,
நிறைய ஆட்கள், நான் ரொம்ப spritual but not ritual , அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் இந்த பூஜை, மூட நம்பிக்கை ல்லாம் கிடையாது ..( .. அப்படின்னா எது ritual, ....இரவில் படுப்பது , காலையில் எழுவது, யாரையாவது பார்த்து hello சொல்வது , கை குலுக்குவது , ...இப்படி சொல்லி கொண்டே போகலாம், .... ( சற்று யோசித்து பாருங்கள் கை குலுக்குவதற்கு பதில் காலால் குலுக்கினால் என்ன கதி ) .... ஆகவே, நாம் கல்வி கற்கின்ற எந்த புஸ்தகம், பேப்பர் போன்றவை காலில் படாமல் இருப்பது, நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமே.
Sundar - Dubai
//

மறுபடியும் புரிதலில் குழப்பம், நான் எல்லாவற்றிற்கும் காலை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தவில்லை. நான் சொல்லுவது கால் புனிதமற்றது என்பது போல் கட்டமைக்கப்படுவது தவறு என்பதே. தெரியமல் கால்பட்டுவிட்டால் அதற்கு ரகளை கட்டி அடிக்க வேண்டியது அல்ல, என்றே கூறினேன். பேருந்தில் பயணம் செய்யும் போது தெரியாமல் ஒருவர் நம் காலை மிதித்துவிட்டால் அவரை அறையச் செல்வது நாகரீகமின்மை. கையே இல்லாதவங்களுக்கு கால் தான் கை, காலால் தேர்வு எழுதியவர்களும், ஓவியம் தீட்டியவர்களும் கை இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

நான் சொன்ன சிறிய உதாரணத்திற்கு, நீங்கள் bus, train மேற்கோள் காட்டி உள்ளீர்கள். வணக்கம் சொல்வது மரபு, அது போல் ,கால் எங்குங்கோ போய் வந்த பிறகு, சாதரணமாக சற்று சுத்தமில்லாமல் இருக்கலாம், அதனால் வந்த பழக்கமாக இருக்கலாம் ( மரபாக இருக்கலாம் ) ... நீங்கள் சொன்ன மற்ற , அதாவது, ஓவியம் காலால் வரைந்தது, தேர்வு எழுதியது எல்லாம் exception, .... சாதரணமாக நாம் வணக்கத்தை தான் முதலில் சொல்வோம் சில பேர் நட்பின் கரணம், அல்லது பகையின் காரணம் வேறு ஏதாவது சொற்கள் பயன் படுத்தலாம் ....( as exception)
Sundar - Dubai

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்