பின்பற்றுபவர்கள்

12 மார்ச், 2009

பதிவு எழுதுவதால் வரும் பதினோரு சங்கடங்கள் !

1. கண்டிப்பாக பதிவு எழுதுவதில் நமது நேரம் விரையமாகாது என்ற மூட நம்பிக்கையுடனோ, நேரம் விரையமாகும் என்ற நம்பிக்கையுடனோ தான் பதிவு எழுத வருகிறோம், ஆனால் எப்படி நினைத்து எழுதினாலும் நேரம் வெட்டியாக போய்விடும்

2. பதிவு எழுதிய ஒரே நாளில் மீண்டும் இன்னொரு பதிவு எழுத கை அரிக்க ஆரம்பித்துவிடுகிறது

3. எழுதி முடித்ததுமே, இனி எழுதுவதை இன்னும் இரண்டொரு நாளில் நிறுத்திவிடனும் என்று நினைப்போம் - இது பதிவு எழுதும் எல்லோரும் சொல்லும் வரிகள். ஆனால் திரட்டிகளின் முகப்பில் பதிவுகளைப் பார்த்ததுமே இன்னிக்கு, நாளைக்கு, வாரத்தில், மாதத்தில், ஆண்டில், யுகத்தில் என்று எழுதுவதை நிறுத்துவது பற்றிய முடிவு நீண்டு கொண்டே போகிறது

4. எழுதுபவர் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்று வைத்துக் கொண்டால் எழுதத்தொடங்கிய ஓரிருவாரங்களுக்குத்தான் மிஸ்டர் எக்ஸ்சாக இருக்கிறார், அதன் பிறகு அவர் மொக்கை பதிவு போடுவதில் முன்னனியில் இருக்கிறார் என்றும், கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் என்றும், இவரு வேலை வெட்டி இல்லாதவர் என்கிற பிம்பம் பலர் மனதில் படிகிறது


5. நாம எடுத்து எழுதிய அதே தகவலை இன்னொருவரும் கிட்டதட்ட அது போலவே எழுதி இருந்தால், இன்னொருவர் ஏற்கனவே எழுதியதை எழுதிவிட்டதாக குழப்பம் அடைகிறோம். அல்லது நாம எழுதியதையேத் தான் அவரும் எழுதி இருக்கிறார் என்கிற பழிச்சொல்லுக்கு அவரை ஆளாக்குகிறோம்.

6. எழுதிய பதிவில் சுதந்திரமாக அனானிகள் பின்னூட்டம் இட்டால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் எடுத்துவிடுகிறோம், இப்படியெல்லாம் கமெண்டு போடுறாங்களே, அல்லது பின்னூட்டமே வரவில்லையே என்கிற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்

7. உண்மையிலேயே பதிவை படித்தவர் பின்னூட்டம் போடவில்லை என்பதால், அவர் படித்தேன் பின்னூட்டம் போட நேரமில்லை என்று சொன்னால் அவரைப் பற்றி நாம் தவறாக நினைத்துக் கொள்ள முடிகிறது, உண்மையிலேயே அவர் படிக்கமலேயே அப்படி சொல்வதென்றால் ... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8. பின்னூட்டமே வரவில்லை என்கிற சோகத்தில் நாம் இருக்கும் போது வேறொரு நண்பர் உரையாடியில் வந்து அவர் பதிவில் இணைப்பைக் கொடுக்க பின்னூட்டமே வராத கடுப்பில் நாம் அவரது பதிவிற்கு பின்னூட்டம் இடாமல் வர, அவர் நம்மை தவறாக புரிந்து கொள்ள ஏதுவாகிறது

9. பதிவை தீவிரமாக எழுதுவதால் உழைப்பு, நேரம் இரண்டையுமே இழக்க நேரிடுகிறது என்று பட்டறிவு பதிவர்கள் சொன்னது போல அலுவலக நேரத்தில் பதிவு எழுதினால், வேலை, நேரம், ஊதியம் இம்மூன்றையுமே இழக்க நேரிடுகிறது

10. பின்னூட்டம் வரவில்லை என்றால் உடனே அடுத்த பதிவு எழுதவேண்டும் என்ற ஆவல் வராது. அதுவே பின்னூட்டம் குவிந்தால் உடனே எழுதவேண்டும், நம்மை பலர் படிக்கிறார்கள் (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11. நல்ல பதிவுகளை படிக்கிறோம், அதில் சில நல்ல பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை என்றால் எழுதியவருக்கு கிடைக்கும் வெளிப்படையான பாராட்டுகளுக்கு தடையாக இருக்கிறோம்

நன்றி : பரிசல்காரன்

23 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நேரம் விரையமாகாது என்ற நல்ல மூட நம்பிக்கையுடனோ\

மிகச்சரி

எழுதி முடித்ததுமே, இனி எழுதுவதை இன்னும் இரண்டொரு நாளில் நிறுத்திவிடனும் என்று நினைப்போம்

கவிதா | Kavitha சொன்னது…

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..11 ஐ...

SP.VR. SUBBIAH சொன்னது…

ஏதாவது ஒரு காரணத்தால் தொடர்ந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் பதிவு எழுதாமல் இருந்தால், நம்மைப் பற்றிய
'காணவில்லை' அறிவுப்பு வேறு ஒரு பதிவுலக நண்பரால் எழுதப்பெற்று மீண்டும் நம்மைப் பதிவு எழுத வைக்கிறது.

மொத்தத்தில் பதிவு என்பது போதைக்கு அடிமையாகிவிடுவதைப் போன்றது. நாமும் தப்பிக்க முடியாது. தப்பிக்கவும் விடமாட்டார்கள்!

வடுவூர் குமார் சொன்னது…

me the first என்று போட்டால் பதிவை படிச்சிட்டேன் என்று அர்த்தமா பார்த்திட்டேன் என்று அர்த்தமா? இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!
இப்படியெலாம் யோசித்து அதற்கு ஒரு பதிவு போடும் நுண்ணரசியலை தெரிந்துகொண்டேன். :-)

மதிபாலா சொன்னது…

சூப்பரான பதினோரு சங்கடங்கள்...

பத்து முடிஞ்சி பதினொண்ணா....

நடக்கட்டும் நடக்கட்டும் ,

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என் பதிவை படித்தீர்களா?

வால்பையன் சொன்னது…

மொத்தமாக வித்தியாசமாக இருக்கிறது

அப்பாவி முரு சொன்னது…

//நல்ல பதிவுகளை படிக்கிறோம், அதில் சில நல்ல பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை என்றால் எழுதியவருக்கு கிடைக்கும் வெளிப்படையான பாராட்டுகளுக்கு தடையாக இருக்கிறோம்//

ரிபீட்டேய்..
அதனால், பாராட்டிவிடுகிறேன். நல்ல பதிவு.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

அடாடா. இந்த வாரம் முழுக்க 11 தானா...

பரிசலைச் சொல்லணும் :) :)

FunScribbler சொன்னது…

ஆஹா... எவ்வளவு!

பரிசல்காரன் சொன்னது…

ஆஹா... அருமை.. அருமை!

(நான் பதிவர் சந்திப்பு போடுவதால் வரும் 11 சங்கடங்கள் தான் நீங்க எழுதுவீங்கன்னு நெனைச்சேன்!)

முரளிகண்ணன் சொன்னது…

அச்த்தல் கோவிஜி

புருனோ Bruno சொன்னது…

ஹி ஹி ஹி
:) :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:) நோ கமெண்ட்ஸ்

சி தயாளன் சொன்னது…

கிளம்பிட்டாங்கையா....:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

உங்களைப் பின் தொடர்பவர்கள் 111 பேர் அதனால் ஏற்பட்ட சிந்தனையா இந்த 11?

Mahesh சொன்னது…

நீங்களுமா ? :))))))))))))

ஆனா சூப்பரா இருக்கு !!

நையாண்டி நைனா சொன்னது…

மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

எல்லாரையும் '11' ஜுரம் பிடிச்சி ஆட்டுது....
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் 12:05 PM, March 12, 2009
நேரம் விரையமாகாது என்ற நல்ல மூட நம்பிக்கையுடனோ\

மிகச்சரி

எழுதி முடித்ததுமே, இனி எழுதுவதை இன்னும் இரண்டொரு நாளில் நிறுத்திவிடனும் என்று நினைப்போம்//

வருகைக்கு நன்றி ஜமால் !

//கவிதா | Kavitha 1:07 PM, March 12, 2009
ஆரம்பிச்சிட்டாங்கய்யா..11 ஐ...//

கவிதா,
பின்னே, இன்னிக்கு என்ன எழுதுவது என்று மண்டையை சொறியும் போது இது போன்ற பதிவுகள் தான் கைகொடுக்குது !

//SP.VR. SUBBIAH 1:16 PM, March 12, 2009
ஏதாவது ஒரு காரணத்தால் தொடர்ந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் பதிவு எழுதாமல் இருந்தால், நம்மைப் பற்றிய
'காணவில்லை' அறிவுப்பு வேறு ஒரு பதிவுலக நண்பரால் எழுதப்பெற்று மீண்டும் நம்மைப் பதிவு எழுத வைக்கிறது.

மொத்தத்தில் பதிவு என்பது போதைக்கு அடிமையாகிவிடுவதைப் போன்றது. நாமும் தப்பிக்க முடியாது. தப்பிக்கவும் விடமாட்டார்கள்!//

உங்க நொந்த அனுபவம், சூப்பரு. அன்புத்தொல்லை !

//வடுவூர் குமார் 1:23 PM, March 12, 2009
me the first என்று போட்டால் பதிவை படிச்சிட்டேன் என்று அர்த்தமா பார்த்திட்டேன் என்று அர்த்தமா? இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!
இப்படியெலாம் யோசித்து அதற்கு ஒரு பதிவு போடும் நுண்ணரசியலை தெரிந்துகொண்டேன். :-)//

மீ த பர்ஸ்ட் போட்டால், வேறு யாரும் இன்னும் பதிவை படிக்கவில்லை என்று பொருள் ! :)

//மதிபாலா 1:43 PM, March 12, 2009
சூப்பரான பதினோரு சங்கடங்கள்...

பத்து முடிஞ்சி பதினொண்ணா....

நடக்கட்டும் நடக்கட்டும் ,//

மதுபாலா நன்றி !


//T.V.Radhakrishnan 1:51 PM, March 12, 2009
என் பதிவை படித்தீர்களா?
//

ம் பார்த்தேன், நிங்க(ள்) ரொம்ப சுருக்கமாக எழுதிட்டிங்க !

//வால்பையன் 2:00 PM, March 12, 2009
மொத்தமாக வித்தியாசமாக இருக்கிறது//

VP நன்றி !

//muru 2:21 PM, March 12, 2009
//நல்ல பதிவுகளை படிக்கிறோம், அதில் சில நல்ல பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை என்றால் எழுதியவருக்கு கிடைக்கும் வெளிப்படையான பாராட்டுகளுக்கு தடையாக இருக்கிறோம்//

ரிபீட்டேய்..
அதனால், பாராட்டிவிடுகிறேன். நல்ல பதிவு.//

முரு, நன்றி !

//ஜ்யோவ்ராம் சுந்தர் 2:59 PM, March 12, 2009
அடாடா. இந்த வாரம் முழுக்க 11 தானா...

பரிசலைச் சொல்லணும் :) :)//

சுந்தர், பாவம் அவரு எப்படி போட்டாலும் சுத்தி சுத்தி (காபி) அடிக்கிறாங்க

//Thamizhmaangani 3:19 PM, March 12, 2009
ஆஹா... எவ்வளவு!//

தெரியலை, மொத்தம் 11 பதிவாவது வந்தால் தான் ஒரு கவுரதையாக இருக்கும்னு பரிசல் கார்க்கியிடம் சொன்னாராம். :)

//பரிசல்காரன் 4:08 PM, March 12, 2009
ஆஹா... அருமை.. அருமை!

(நான் பதிவர் சந்திப்பு போடுவதால் வரும் 11 சங்கடங்கள் தான் நீங்க எழுதுவீங்கன்னு நெனைச்சேன்!)//

பரிசல், பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதினால், அண்ணன் நொந்துக் கொள்கிறார், நாம சந்திப்புக்கு எஸ் ஆகிடுவொம் என்று நினைப்பார்கள், அப்பறம் எடுத்துப் போற பலகாரமெல்லாம் நாமலே திங்கனும், அது கொடுமை ! :)

//முரளிகண்ணன் 5:22 PM, March 12, 2009
அச்த்தல் கோவிஜி//

நன்றி முரளி !

//புருனோ Bruno 5:42 PM, March 12, 2009
ஹி ஹி ஹி
:) :)
//

ஹாஹ் ஹா

//VIKNESHWARAN 7:30 PM, March 12, 2009
:) நோ கமெண்ட்ஸ்
//
நோ கமெண்ட்ஸ் ஈஸ் அல்சோ ஒன் கமெண்டு சார் :)

//’டொன்’ லீ 7:59 PM, March 12, 2009
கிளம்பிட்டாங்கையா....:-)//

கிளம்பிட்டாங்கே ... எங்கே எங்கே சந்திப்பு ? :)

//ஜோதிபாரதி 8:07 PM, March 12, 2009
உங்களைப் பின் தொடர்பவர்கள் 111 பேர் அதனால் ஏற்பட்ட சிந்தனையா இந்த 11?//

நீங்க ரொம்ப ஆராயிறிங்க !

//Mahesh 8:16 PM, March 12, 2009
நீங்களுமா ? :))))))))))))


ஆனா சூப்பரா இருக்கு !!//


நாமளும் தான் !

//நையாண்டி நைனா 10:02 PM, March 12, 2009
மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

எல்லாரையும் '11' ஜுரம் பிடிச்சி ஆட்டுது....
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
//

நைனா நன்றி !

ராம்.CM சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க!

நசரேயன் சொன்னது…

//பதிவை தீவிரமாக எழுதுவதால் உழைப்பு, நேரம் இரண்டையுமே இழக்க நேரிடுகிறது என்று பட்டறிவு பதிவர்கள் சொன்னது போல அலுவலக நேரத்தில் பதிவு எழுதினால், வேலை, நேரம், ஊதியம் இம்மூன்றையுமே இழக்க நேரிடுகிறது//
உண்மை

priyamudanprabu சொன்னது…

///
கண்டிப்பாக பதிவு எழுதுவதில் நமது நேரம் விரையமாகாது என்ற மூட நம்பிக்கையுடனோ, நேரம் விரையமாகும் என்ற நம்பிக்கையுடனோ தான் பதிவு எழுத வருகிறோம், ஆனால் எப்படி நினைத்து எழுதினாலும் நேரம் வெட்டியாக போய்விடும்
////


ஆரம்பமே.................

மெனக்கெட்டு சொன்னது…

//2. பதிவு எழுதிய ஒரே நாளில் மீண்டும் இன்னொரு பதிவு எழுத கை அரிக்க ஆரம்பித்துவிடுகிறது//

ரொம்ப சரி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்