பின்பற்றுபவர்கள்

7 மார்ச், 2009

ஜெ - எந்த பிரதம வேட்பாளருக்கு வாக்கு கேட்பார் ?

நாடளுமன்ற தலைவர் (பிரதமர்) வேட்பாளர் யார் என்று மக்களிடம் சொல்லாமல், நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு கேட்டு நாடளுமன்ற தேர்த்தலை எதிர்நோக்குவது ஒரு கட்சிக்கு பின்னடைவா ? பெரும் பின்னடைவு என்றே சென்ற முறை பிஜேபியினர் நினைத்துக் கொண்டிருந்தனர். காரணம் பிரதமர் யார் என்று அறிவிக்காமலேயே காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது, ஏனெனில் 'இத்தாலிக்காரி இந்திய பிரதமர் ஆகக் கூடாது' என்று அத்வானி முதல் அனைத்து பிஜேபியினரும் சோனியா கிறித்தவர் என்பதால் எதிர்த்தனர். பதில் சொல்லாமல் தேர்த்தலை சந்தித்து காங்கிரஸ், சிலர் எதிர்பார்தது, பலரெதிர்பாரத நிலையில் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தது காங்கிரஸ்.

தற்போதைய சூழலில் ஜெ யாரை பிரதம வேட்பாளராக அறிவிப்பார் என்கிற கேள்வியை ககங்கிரஸ் (பெரும்) புள்ளிகள் எழுப்பி வருகின்றனர்.
காங்கிரஸ்காரர்கள் அரசியலிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது, இருந்திருந்தால் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து பாராளுமன்றத்தில் கூட்டணி வண்டியில் ராட்டையை சுழற்றிக் கொண்டிருப்பார்களா ? இந்திய அளவில் காங்கிரசே பிரதமர் வேட்பாளர் பெயரைச் சொல்லாமல் கணிசமான வாக்குகளைப் பெற்று கூட்டணி அமைத்திருக்கும் போது, தமிழக அளவில் இருக்கும் ஜெ அதையெல்லாம் யோசித்திருக்கவே மாட்டாரா ? (நான் ஜெ வை ஆதரிக்கவில்லை, சூழலை மட்டுமே சொல்கிறேன்) தற்போதையெ ஜெ வின் திட்டம், நாடாளுமன்ற தேர்த்தல் முடிவில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கு இழுபறி வந்தால், பிஜேபியுடன் ஒப்பந்த அடிப்படையில் ஆதரித்து மைய அரசின் பதவிகளைப் பெறலாம். ஜெவுடன் கூட்டணியில் இணையப் போகும் பாமவின் மக்கள் நல அமைச்சர் பதவி தொடரும் (அவர்கள் ஏற்கனவே பிஜேபி அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் தான்) , ஜெ முடிந்தவரையில் தனக்கு துணை பிரதமர் பதவிகேட்டு பிஜேபியிடம் ஆதரவு தெரிவிக்க நெருக்கடி கொடுப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சரி இதெல்லாம் அரசியல், பொதுமக்களும், பாமரர்களும், ஏன் படித்தவர்களும் யார் பிரதம வேட்பாளர் என்று பார்த்து தான் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு அளிக்கிறார்களா ? 98 விழுக்காடு கட்சி ஆதரவு வாக்குகள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழுகிறதே அன்றி, பிரதமர் யார் என்று பார்த்து எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிப்பது இல்லை. ஏனெனில் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுப்பது இந்திய தேர்தல் முறையில் கிடையாது. பிஜேபியை விடுவோம், அந்த கட்சியிடம் கேட்டால் அத்வானி பிரதமர் ஆக விருப்பம் என்பர், ஆனால் காங்கிரஸ்காரர்களிடம் மன்மோகன் மீண்டும் வரவேண்டும் என்று வாக்களிக்கிறீர்களா ? என்று கேட்டால் இல்லை, நாங்கள் காங்கிரசுகாக வாக்களிக்கிறோம் என்றே சொல்லுவார்கள்.

பிரதம வேட்பாளராக யார் வரவேண்டும் என்று கட்சிக்காரர்கள் தான் விரும்புவார்களேயன்றி ஓட்டுப் போடும் பொதுமக்கள் இல்லை, பொதுமக்கள் அந்த மாநிலத்தில் இருக்கும் அரசியல் சூழலை வைத்துத்தான் வாக்களிக்கிறார்கள். ஜெ அரசியல் தெரியாதவரா என்ன ?

ஈழத்தமிழர்கள் நல்வாழ்க்கை குறித்து சிந்தனையில், தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை (ஜெ கூட்டணிக்கு அதரவு) எதிரிக்கு இருகண்னும் போகனும் (காங்கிரஸ் - திமுகவுக்கு எதிர்ப்பு) என்கிற மன நிலையில் இருக்கும் தமிழக வாக்களர்கள் பிரதமராக யார் வரவேண்டும் என்றெல்லாம் நினைப்பார்களா என்ன ?

9 கருத்துகள்:

அத்திரி சொன்னது…

நல்ல அலசல் கோவியாரே

ராம்.CM சொன்னது…

அழகான அலசல்...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//(நான் ஜெ வை ஆதரிக்கவில்லை, சூழலை மட்டுமே சொல்கிறேன்) //

ஆட்டோ மாடியில ஏறாது. இருந்தாலும் சாக்கிரதை! இதே மாதிரி அப்பப்ப நடுநிலையா இருந்துகிட்டா நல்லதுதான்!
:P

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஈழத்தமிழர்கள் நல்வாழ்க்கை குறித்து சிந்தனையில், தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை (ஜெ கூட்டணிக்கு அதரவு) எதிரிக்கு இருகண்னும் போகனும் (காங்கிரஸ் - திமுகவுக்கு எதிர்ப்பு) என்கிற மன நிலையில் இருக்கும் தமிழக வாக்களர்கள் பிரதமராக யார் வரவேண்டும் என்றெல்லாம் நினைப்பார்களா என்ன ?//


தமிழ் நாட்டுக்கு ஏது பிரதமர் சாமியோவ்!?
நமக்குத் தெரிஞ்சதெல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா மட்டும்தான்!
ஐயா! சோனியா காந்தி இந்திரா காந்தி மருமொவ தெரியும். ஆமா! இந்த அத்துவானி, மன்மோகன் சிங்கு இதெல்லாம் யாருங்கோ! எங்கெளுக்கெல்லாம் தெரியாதுங்கோ!
வெளிநாட்டுக் காரங்களா இருப்பாங்க போலருக்கு!
எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா மட்டும்தான்!

சி தயாளன் சொன்னது…

பிரதமரா....அதுசரி அத பற்றி யார் தான் கவலைபடபோகினம்

சி தயாளன் சொன்னது…

மேல election countdown எல்லாம் போட்டிருக்கிறீர்கள்...ம்..அப்ப பதிவுகளின் எண்ணிக்கையும் கூடும் போல் :-)

priyamudanprabu சொன்னது…

\\\
பிஜேபியை விடுவோம், அந்த கட்சியிடம் கேட்டால் அத்வானி பிரதமர் ஆக விருப்பம் என்பர், ஆனால் காங்கிரஸ்காரர்களிடம் மன்மோகன் மீண்டும் வரவேண்டும் என்று வாக்களிக்கிறீர்களா ? என்று கேட்டால் இல்லை, நாங்கள் காங்கிரசுகாக வாக்களிக்கிறோம் என்றே சொல்லுவார்கள்.
///

தமிழகத்துல இன்னும் பல பேர் எம்.ஜி ஆர்-க்குத்த்ஹானுங்க ஓட்டுபோட்டுகிட்டு இருக்காங்க

மணிகண்டன் சொன்னது…

****
ஏனெனில் 'இத்தாலிக்காரி இந்திய பிரதமர் ஆகக் கூடாது' என்று அத்வானி முதல் அனைத்து பிஜேபியினரும் சோனியா கிறித்தவர் என்பதால் எதிர்த்தனர்.
****

:)-

கோவி.கண்ணன் சொன்னது…

//senthilkumar said...
Dear Sir,

This is senthilkumar currently i am staying in SINGAPORE with Q1 EP PASS under contract of Aavula Infotech Pte Ltd.

I have totally 2 years and 10 month's of experience in Networking domain.

I have working knowledge in trobleshotting domain in Layer2 and Layer3 switches and routers.

I have completed certification of CCNA.

As per our discussion i have attached my latest updated profile with this mail,Kindly check and arrange for interview

I am Having EP PASS under Aavula Infotech Pte Ltd.

Thanks for Advance

Regards,
Senthilkumar B,
singapore.

//

ஹலோ, என்ன கொடுமை இது ? பின்னூட்டம் வழியாக ரெஸ்யூம் அட்டாச் பண்ணி இருக்கிங்களா ? அதெல்லாம் முடியுமா ?

நீங்கள் யார் என்றே தெரியாது, நானும் வேலை வாங்கிக் கொடுக்கும் சேவை செய்துவருவதும் இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்