பழமொழி, வட்டார வழக்கு பற்றி நம்ம பழமைபேசி புதுமையாக எழுதுவார். பிடிக்கும், அவர் எழுதுவதை விரும்பி படிப்பேன். அவருமாறி நம்மாலும் எழுதமுடியுமா ? எதாவது பழமொழியை எடுத்து எழுதனும். என்ன எழுதுவது ? பேந்த பேந்த முழுத்தேன், பேந்த பேந்த - பேந்த என்ன மொழிச் சொல் ? தேடினேன். தமிழில் இப்படி ஒரு சொல்லே கிடையாதென்றது தமிழ் அகரமுதலி. பேந்த பேந்த எப்போது முழிப்பாங்க ? 'சொல்லுடா......எடுத்த பணத்தை எங்கே வைத்தே ?' காவலர் எட்டி உதைக்கும் முன் குற்றமற்றவர் என்ன பதில் சொல்லி தப்பிப்பது ? பேந்த பேந்த முழிப்பார், அந்த முழிப்பில் ஒரு பயம் இருக்கும், எதாவது, எப்படி சொல்லி புரிய வைப்பது என்பது தெரியாது, அடிவிழும் முன் சொல்லியாகவேண்டுமே என்ற அச்சத்துடன் கூடிய சிந்தனை இருக்கும், அதைத்தான் பேந்த பேந்த முழிப்பதாகச் சொல்லுவார்கள்.
"டேய்......நேற்றே இந்த பாடத்தை படித்துவரச் சொன்னேன்...இப்ப முழுக்கிறியே ?' ஆசிரியர் கேட்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன், நம்ம குசும்பன் என்று வைத்துக் கொள்ளுங்கள், நேற்று இரவுபகல் ஆட்டமான ஒருநாள் மட்டை ஆட்டம் பார்த்துட்டு, பாடத்தை படிக்காமல் வந்திருந்தால் குசும்பன் என்ன செய்திருப்பான், ஆசிரியர் பிரம்புக்கு பயந்து பேந்த பேந்த முழித்திருப்பான்.
பேந்த என்பது பயந்த என்பதன் மருவல், 'நான் பேந்துட்டேன்' மழலைகள் பெரும்பாலும் சொல்லும் பயத்தின் மருவலே பேந்த,
உங்களிடம் யாராவது பேந்த பேந்த முழிந்தால், அல்லது நீங்கள் பேந்த பேந்த முழித்தால் பதில் தெரியாது பயத்துடன் காரணத்தை தேடி விழிக்கிறீர்கள் என்பதே அந்த பார்வையின் பொருள். பொதுவாக சொல் திரியும் பொழுது அதற்கான பொருளுக்காக அச்சொல் கூறப்படுவது போலவே, பொருளின் அழுத்தம் குறைந்த இடத்திலும் அது பயன்படுததப்படும், அச்சப்பட்டு விழிப்பதே பேந்த விழிப்பதாக சொல்லிவந்தது, பின்னர் அச்சமின்றி பதில் தெரியாது விழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பேந்த பேந்த விழிப்பது என்பது வெறும் பதிலற்ற விழிப்பிற்கும் கூடவே பயன்படுத்தபடுகிறது. எது எப்படியோ, பேந்த பேந்த விழிப்பு என்பது வியப்பு, பயந்த என்பதன் குறியீட்டு, திரிபு, வியப்புச் சொல், அச்ச(த்துடன்) விழிப்பு என்று சொல்வதே சரியான சொல்.
அச்சம் என்பது தனித் தமிழ் சொல், பயம் ? வடசொல், வடமொழியில் பய (Baya) என்றே சொல்வார்கள், பயத்தை தொலைவில் விட்டுவிட்டு அச்சமின்றி 'அச்சம்' பயன்படுத்தலாம்.
அகராதி, அகரமுதலி எது சரி ? பேந்த பேந்த விழிக்கலாமா ?
அகரம் + ஆதி > அகராதி, இதில் ஆதி என்பது வடசொல், ஆதி என்றால் முதல் என்றே பொருள். மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அகராதியை அகரமுதலி என்றே எழுதுவார்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
36 கருத்துகள்:
//அகராதி, அகரமுதலி எது சரி ? பேந்த பேந்த விழிக்கலாமா ?//
ஏன் ஏன் ஏன்?
//ஆசிரியர் கேட்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன், நம்ம குசும்பன் என்று வைத்துக் கொள்ளுங்கள்//
எட்டாவது வரைதான் படிச்சு இருக்கேன் என்ற உண்மை சிங்கபூர் வரை தெரிஞ்சு போச்சா?
சிங்கப்பூர்ல சம்மர் ஆரம்பிச்சுடுச்சு போல..? :))
இதுக்கு பழமைபேசி ஒரு பதிவு போட...பேந்த..பேந்த முழிக்கப்போறீங்க..பாருங்க...
ஹாஹாஹா
ஐ... உள்ளூர் பழமைபேசியா?
சபாசு.... அழகா பின்னிப் படல் எடுத்துட்டீங்க... சுவையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கு... மிக்க மகிழ்வும் நன்றியும்!!
//T.V.Radhakrishnan said...
இதுக்கு பழமைபேசி ஒரு பதிவு போட...பேந்த..பேந்த முழிக்கப்போறீங்க..பாருங்க...
//
ஐயா, நன்றிங்க.... இன்னைக்கு கடையில விவகாரமான ஒன்னை யாவாரத்துல விடலாம்ன்னு இருந்தேன்... உங்க யூகத்துக்கு மதிப்பு குடுத்தே ஆவணும்...இஃகிஃகி!!
http://maniyinpakkam.blogspot.com/2009/03/blog-post.html
பயனுள்ள தகவலுக்கு நன்றி
கோவி,
அகரமுதலியே பயன்படுத்தலாம் - அகராதி என்பது அகராதி பிடித்தவர்கள் பயன்படுத்தலாம்.
இரண்டும் தேவை இல்லாதவர்கள் பேந்தப் பேந்த முழிக்கலாம். அங்கே பழமை பேசி என்னவோ சொல்றாரு. அங்கே போறேன்
ஓம்கார் ஸ்வாமி சரியாச் சொல்றாரு போல
குசும்பன் எட்டாவது பாஸா பெயிலா ? எட்டாவது வரைன்னா என்ன பொருள் -
// cheena (சீனா) said...
கோவி,
அகரமுதலியே பயன்படுத்தலாம் - அகராதி என்பது அகராதி பிடித்தவர்கள் பயன்படுத்தலாம்.
இரண்டும் தேவை இல்லாதவர்கள் பேந்தப் பேந்த முழிக்கலாம். அங்கே பழமை பேசி என்னவோ சொல்றாரு. அங்கே போறேன்//
உங்களிடம் பின்னூட்டம் வருவது குறிஞ்சி பூப்போல, எப்போதாவது கிடைக்கிறது, இன்று மூன்று பின்னூட்டம் ஒரே இடுகைக்கு. கோவிக்கு இன்னிக்கு நல்ல நாள் போலும் !
:)
// cheena (சீனா) said...
ஓம்கார் ஸ்வாமி சரியாச் சொல்றாரு போல
7:58 AM, March 02, 2009
//
சோதிடம் பார்த்து தட்பவெப்பம் சொல்லி இருப்பார்.
// cheena (சீனா) said...
குசும்பன் எட்டாவது பாஸா பெயிலா ? எட்டாவது வரைன்னா என்ன பொருள் -
//
ஏழாவது பாஸ் என்று பொருள் !
:)
நல்ல விளக்கம், அப்படியே தொடர்ந்து கொடுங்க
அகரம் + ஆதி > அகராதி, இதில் ஆதி என்பது வடசொல், ஆதி என்றால் முதல் என்றே பொருள். மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அகராதியை அகரமுதலி என்றே எழுதுவார்.
////
இப்படி ஒன்னு இருக்கா??!?!?
சொல்லுங்க சாமி , இதுமாதிரி நிறைய சொல்லுங்க
இதை படிச்சுட்டு நான்
மலங்க மலங்க முழிக்கிறேன்.
என்ன சொல்றதுன்னு தெரியாம பேக்கு மாறி நிக்கிறேன்.
//நைனா said...
இதை படிச்சுட்டு நான்
மலங்க மலங்க முழிக்கிறேன்.
//
ம் :)
அப்ப்படியே பழமைபேசி பதிவுக்கு போங்க, ஏன் அப்படி முழிக்கிறிங்கன்னு சொல்லுறார்
ஆதி என்பது வட மொழிச் சொல் என்கிறார்கள்... ஆனால் ஐயன் திருவள்ளுவர், முதற்ப்பாவலர், தனது முதல் குறளிலேயே, ஆதி என்ற சொல்லைக் கையாண்டு இருக்கிறாரே??!
சற்று குழப்பமாக இருக்கிறது?!! விடை தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறன்!!
பதிவு அருமை...
//தமிழர் நேசன் said...
ஆதி என்பது வட மொழிச் சொல் என்கிறார்கள்... ஆனால் ஐயன் திருவள்ளுவர், முதற்ப்பாவலர், தனது முதல் குறளிலேயே, ஆதி என்ற சொல்லைக் கையாண்டு இருக்கிறாரே??!
சற்று குழப்பமாக இருக்கிறது?!! விடை தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறன்!!
பதிவு அருமை...
//
திருவள்ளுவர் காலத்தில் வடசொற்கள் தமிழில் புழங்குவது குறைவாக இருந்தது, காரணம் புழங்கவிட்டால் தமிழ் காணாமல் போகும் என்ற விழிப்புணர்வு அப்போது இல்லை, வட எழுத்துக்களில்லா (ஜ்,ஷ்,ஸ்,ஹ்) சொற்களை தமிழில் எழுதும் போது இலக்கணக் குறைபாடு இல்லை என்றால் அப்படியேவும் சற்று மாற்றியும் பயன்படுத்திவந்தார்கள். கம்பராமாயணத்திலும் லக்ஷ்மண் என்பதை இலக்குவன் என்று எழுதினார். முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக அப்படியே பயன்படுத்துவதும் அறிவுடைய மக்களுக்கு அழகன்று, அன்றைய சூழலில் மொழிக்கலப்பு மொழியை அழித்துவிடாத வண்ணம் தான் இருந்தன, இடையில் மணிப்ரளவ நடை தோன்றிய பிறகு மிகுதியான வடசொற்கள் புழக்கத்திற்கு வந்து தமிழின் தன்மையை கெடுத்தது. அதை சரிசெய்யும் போது திருவள்ளுவர் காலத்து கலப்பையும் களைவது தவறல்ல என்றே தமிழ்செம்மல்களான, பரிதிமார் கலைஞர், மொழி ஞாயிறு, மறைமலை அடிகளார் போன்றோர் கருதினார்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் - நன்னூள் இலக்கணக் குறிப்பு, மொழிக்கும் பொருந்தும்.
//இப்படி ஒன்னு இருக்கா??!?!?
சொல்லுங்க சாமி , இதுமாதிரி நிறைய சொல்லுங்க//
பிரபு, அடிக்கடி சொல்லிக் கொண்டு தான் வருகிறோம்
//நசரேயன் said...
நல்ல விளக்கம், அப்படியே தொடர்ந்து கொடுங்க
//
பாராட்டுக்கு நன்றி !
//cheena (சீனா) said...
கோவி,
அகரமுதலியே பயன்படுத்தலாம் - அகராதி என்பது அகராதி பிடித்தவர்கள் பயன்படுத்தலாம்.
இரண்டும் தேவை இல்லாதவர்கள் பேந்தப் பேந்த முழிக்கலாம். அங்கே பழமை பேசி என்னவோ சொல்றாரு. அங்கே போறேன்
//
அகராதி படித்தவர்கள், அதாவது நாலும் தெரிந்தவர் என்பதே அகராதி பிடித்தவர் என்று திரிந்ததாகச் சொல்கிறார்கள்.
//எட்வின் said...
பயனுள்ள தகவலுக்கு நன்றி
//
நன்றி !
//பழமைபேசி said...
சபாசு.... அழகா பின்னிப் படல் எடுத்துட்டீங்க... சுவையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கு... மிக்க மகிழ்வும் நன்றியும்!!
//
நன்றி ! கொஞ்சம் நகைச்சுவையாக எழுதி இருக்கலாம்மோன்னு தோணுது !
’டொன்’ லீ said...
ஹாஹாஹா
7:57 PM, March 01, 2009
// Mahesh said...
ஐ... உள்ளூர் பழமைபேசியா?
//
அவரு சிங்கப்பூரில் இருந்தான் போனாராமே ! அவரோட தடம் எங்காவது இருந்திருக்கும் அதுல காலை வச்சிருப்பேன்
//T.V.Radhakrishnan said...
இதுக்கு பழமைபேசி ஒரு பதிவு போட...பேந்த..பேந்த முழிக்கப்போறீங்க..பாருங்க...
//
நீங்கள் சொல்லிட்டிங்க, அவரும் போட்டுட்டார், உங்களால் 2 பதிவு கிடைச்சாச்சு ! நன்றி
//ஸ்வாமி ஓம்கார் said...
சிங்கப்பூர்ல சம்மர் ஆரம்பிச்சுடுச்சு போல..? :))
//
ஸ்வாமி டெல்லியில் இருக்கியள், அங்கு தான் வெப்பம் அதிகமுண்டு எண்டு கேள்விபட்டேன்
//குசும்பன் said...
//ஆசிரியர் கேட்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன், நம்ம குசும்பன் என்று வைத்துக் கொள்ளுங்கள்//
எட்டாவது வரைதான் படிச்சு இருக்கேன் என்ற உண்மை சிங்கபூர் வரை தெரிஞ்சு போச்சா?
//
எட்டாவது வரைக்கும் படிச்சதை சீனா பாஸா பெயிலான்னு கேட்கிறார், பாஸாகி இருந்தால் ஒன்பதாவது வரை படிச்சிருக்கேன் என்று சொல்லுவே என்று அவருக்கு தெரியாது
திருவள்ளுவரும் வடமொழி கலந்து தான் எழுதி இருக்காரா???
"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் கிளவியா?
பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் என்றும் பொருள் தராவிட்டால் இரட்டைக் கிளவி என்றும் படித்ததாக ஞாபகம்.
யாராவது சற்று விளக்குங்களேன்.
//Sriram said...
"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் கிளவியா?
பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் என்றும் பொருள் தராவிட்டால் இரட்டைக் கிளவி என்றும் படித்ததாக ஞாபகம்.
யாராவது சற்று விளக்குங்களேன்.
//
அடுக்கு தொடர்தான் பயந்து பயந்து விழித்தல், திரு திரு விழித்தல் இரட்டை கிளவி என்று நினைக்கிறேன்
//நிஜமா நல்லவன் said...
திருவள்ளுவரும் வடமொழி கலந்து தான் எழுதி இருக்காரா???
//
அவை தமிழ்படுத்தப்பட்ட வடசொற்கள், வடமொழி சொற்களை அப்படியே கையாளவில்லை
வணக்கம் கோவி அண்ணா
ஏதோ தேடலில், "காலத்தில்" விழுந்தேன்;
//அகரம் + ஆதி > அகராதி, இதில் ஆதி என்பது வடசொல்//
ஆதி என்பது நல்ல தமிழ்ச் சொல்லு;
"ஆதி பகவன் முதற்றே உலகு!"
அதை நாமளே தூக்கி, ஸ்பஷ்டமா அவிங்க கிட்ட குடுக்கலாமா?:(
ஆதல்->ஆதி
அதாச்சும்.. ஆவுதல், ஆக்குதல், ஆதல்! ஆயிருச்சா? -ன்னு கேக்கறோம்-ல்ல?
அ-கரம் என்கிற முதல் எழுத்து, எழுத்தும் மொழியுமா விரிந்து ஆதல் = அகர ஆதி = அகராதி!
ஆதன் x ஆதி
செல்வக் கடுங்கோ வாழி ஆதன் -ன்னு சேர மன்னன்!
ஆதன் -ன்னு சேர குல மன்னர்கள் பலருக்கும் பேரு இருக்கும்! (செழியன்=பாண்டியர்)
ஆதனின் பெண்பால் = ஆதி!
ஆதன் x ஆதி = முதன் முதலில் ஆன தொல் குடி மக்கள்!
அதான் இறைவனையும் = "ஆதி"-ன்னு குறிக்கிறார் ஐயன்!
ஆவுதல் செய்தவன் = ஆக்கியோன் = ஆதி
----
பகவன் = என்பதும் நல்ல தமிழ்ச் சொல்லே! (பகவான் -ன்னு மாறிப் போனது)
முக்கோல் பகவர்கள், சங்க இலக்கியத்திலேயே உண்டு! பகுத்தல் எனும் வேர்ச்சொல் = பகவன்!
உயிர்களை...
ஆதியாய் ஆக்கி, பின்பு வகையாய்ப் பகுத்தலால்
ஆதி-பகவன்; முதற்றே உலகு!
//மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அகராதியை அகரமுதலி என்றே எழுதுவார்//
உண்மையே!
ஆனால் ஆதி என்பது தமிழ்ச் சொல்லே என்பதையும் அவரே தான் குறித்துள்ளார்;
(பார்க்க: பாவாணர் வேர்ச்சொல் கட்டுரைகள்!)
பல நூற்றாண்டுக் கலப்புகளால், தமிழில் ஏறியேறிக் கலந்த வடசொற்கள்;
எது இருந்தது? எது வந்தது? -ன்னே கண்டு புடிக்க முடியாது பாருங்க!
http://dosa365.wordpress.com/2012/11/22/106/
அதனால் நல்ல தமிழ்ச் சொற்களும், சில சமயங்களில் வடசொல் போல் காட்சி அளித்து விடும், நோய் தீரும் கண்ணில் உள்ள கடைசி மஞ்சள் போல்...
அதைக் கொஞ்சம் சிக்கு அவிழ்த்துத் தான், காக்க முடியும்!
எளியோர்களுக்கும் பொறுமையா எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கும் முயற்சிகள் உதவும்!
அதுக்குத் தான் இந்த முயற்சி
= http://pulveli.com
எழுத்தாளர் சத்யராஜ் குமாரும், நானும் முன்பு ட்விட்டரில் தொடங்கினோம்!
* கிரந்தம் உள்ள சொற்களுக்கு = தமிழில் நல்ல/ எளிமையான மாற்றுச் சொற்கள்
* கிரந்தம் இல்லாப், பிற வடசொற்களுக்கும் மாற்றுச் சொல்லு..
சொல்லச் சொல்லத் தான் சொல்லு வளரும்! தமிழும் வளரும்!
கருத்துரையிடுக