பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2009

மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?

தேர்தல் லாவனிகள் ஒருபக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இவ்வளவு கேவலமானவர்களா ? அரசியலுக்காக அம்மணமாகக் கூட நிற்கிறார்களே என்று நினைக்கவும் வேண்டி இருக்கிறது. அரசியலில் எந்த காலத்திலும் நாகரீகம் இருந்தது இல்லை. அத்திபூத்தார்போல் சில தழுவல்கள் கூட வரும்காலத்தில் நாங்களெல்லாம் நாகரீகமாக நடந்து கொண்டோம், இளைய அரசியல் வாதிகள் அவ்வாறு இல்லை என்று காட்டுவதற்கான நாடகமே அன்றி வேறொன்றும் இல்லை,

வைகோ திமுகவின் வருங்காலத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார், முயன்றார் என்பதை எதோ குற்றாச் சாட்டு போல் கவிதை வடித்து இருக்கிறார் கலைஞர்.

தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை

பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு அண்ணாவின் எழுத்தாற்றல், பேச்சு கண்டு பெரியார் மகிழ்ந்து பாராட்டி, இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த தட்டிக் கொடுத்தார். தலைமைப் பண்பின் அடையாளம் என்பது ஆற்றல் மிக்க தொண்டர்கள் வளர்வதைப் பாராட்டி மேலே கொண்டு விட தூண்டு கோலாக இருப்பது தான். பெரியாரிடமிருந்து பிரிந்தது அண்ணா பிரிந்தது வேறு கதை, அது கட்சி அபகரிப்புத் திட்டத்தில் வராது. அதே போன்று அண்ணாவினால் தொடங்கப்பட்ட திமுக கழகத்தில் மேடை நாடகம், திரையுலகம், இலக்கியம் போன்றவற்றிலும், அரசியலிலும் திரம்பட செயல்பட்டதால் அண்ணாவின் அன்பு தம்பி என்ற பாராட்டைப் பெற்ற கருணாநிதி அண்ணாவின் ஆட்சி அமைக்கிறேன் என்று அண்ணாவிற்கு பிறகு திமுகவை நடத்தி வருகிறார். அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? ஒரே நாளில் 'தலைவா....அண்ணாவுக்கு பிறகு நீ தான் தலைமை ஏற்கவேண்டும்' என்று கூறி முள் கிரிடத்தை தொண்டர்கள் கலைஞரின் தலையில் வைத்தார்களா ? கட்சிவிசுவாசிகள், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது, நாளை தனது உழைப்பு அங்கீகரிக்கப்படும் என்று நினைப்பது மனித இயல்பு, அதுவும் அரசியலில் நோக்கமின்றி உழைப்பவர்கள் எவருமே கிடையாது.வைகோ எதோ படுபாதகம் செய்யத் துணிந்தது போல் கவிதை தீட்டி இருக்கிறார் கலைஞர். அதோடு மட்டுமின்றி வைகோ அதை யாருடன் ஆலோசித்தார் என்பதை குறிப்பிடும் விதமாக

"ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!"


அந்த கவிதையை படித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்கள், இரும்பு பெட்டி ஆண்டுகள் பல ஆனதும் துரு ஏறி உடைந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆக வைகோ சொன்னதை என்னிடம் இவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்வதாகத் தான் அதனை புரிந்து கொள்ளமுடிகிறது. மூவரின் நம்பகத் தன்மைகளை கேலி செய்வதாக நினைத்து குடும்ப அரசியலை ஞாயப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.

வைகோவுக்கு கவிதை பாடியவர் அதே போன்று எம்ஜிஆருக்கு பாடி இருக்க முடியாது, ஏனெனில் எம்ஜிஆர் 'திமுகவை நீயே வைத்துக்கொள்' என்று உதறித்தள்ளி, வெளி ஏறி, திமுகவையும், கலைஞரையும் ஓரம் கட்டினார். வைகோவும் அதே போல் வளர்ந்திருந்தால் இந்த கவிதை திமுக கழகத்தினரையே கேலி செய்யும். எப்படியோ...கலைஞரின் பெரும்தன்மை இன்மையால் அண்ணாவின் திமுக. அதிமுக, மதிமுக என மூன்றாகியது.

****

விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட, பதிலடியாக நான் திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழா எடுத்தேன், தங்கப்பேனா கொடுத்தேன் என்கிறார் விஜயகாந்த். இவர்களெல்லாம், ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பை வைத்தே எதையும் செய்துவிட்டு மக்கள் மேடையில் இந்த கருமாந்திரங்களைப் பேசி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

நான் இங்கே வைகோ தூய்மையானவர், விஜயகாந்த் சொக்கத் தங்கம் என்று சொல்லவரவில்லை, 30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.

72 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இது நடந்து எத்துனை வருடம் இருக்கும்

(எச்சில் துப்பிக்கொள்வதை)

சி தயாளன் சொன்னது…

கழகங்கள் வந்த காலம் தொட்டு இருப்பதாகத் தான் கேள்வி ஜமால்...

கிரி சொன்னது…

கலைஞர் மல்லாந்து படுத்துட்டு சைடுல துப்பி இருப்பாரோ! :-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.//

முடிவு முத்தாய்ப்பு
40 வருஷ தலைமைப் பொறுப்பு.

லக்கிலுக் சொன்னது…

ஏதாவது ஒரு கருத்து சொல்ல வேண்டுமே என்பதற்காக பதிவு போடுவதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட கவிதையை ஒருமுறை நீங்கள் வாசித்திருக்கலாம். எப்படி ஆனாலும் உங்களை யாரும் இனிமேல் புதிதாக நடுநிலைவாதி என்று கொண்டாடப் போவதில்லை :-)

//நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல-ராஜாஜி போல-தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?''//

அண்ணாவைப் பற்றி அக்கால கலைஞர் இதுபோல நினைத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா கோவி?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? //


நாவலர் நெடுஞ்செழியனுக்கு கலைஞர் செய்த துரோகத்துக்கு நாவலர் ஏதும் கவிதை எழுதவில்லை போலும்.

லக்கிலுக் சொன்னது…

//நாவலர் நெடுஞ்செழியனுக்கு கலைஞர் செய்த துரோகத்துக்கு நாவலர் ஏதும் கவிதை எழுதவில்லை போலும்.//

அப்படியென்ன துரோகமென்று நீங்கள் பக்கத்தில் நின்று பார்த்ததை கொஞ்சம் எடுத்து விடுங்கள் ஜோதிபாரதி...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட,//

தாலி எடுத்துக் கொடுத்தால் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட வேண்டுமோ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

லக்கிலுக் said...
//
//நாவலர் நெடுஞ்செழியனுக்கு கலைஞர் செய்த துரோகத்துக்கு நாவலர் ஏதும் கவிதை எழுதவில்லை போலும்.//

அப்படியென்ன துரோகமென்று நீங்கள் பக்கத்தில் நின்று பார்த்ததை கொஞ்சம் எடுத்து விடுங்கள் ஜோதிபாரதி...//

அண்ணா உயிருடன் இருந்த போதே நாவலர் நெடுஞ்செழியனை தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அழைத்ததை அனைவரும அறிவர்.
அண்ணா இறந்த பிறகு முறைப்படி அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காமல் செய்தது யார்?
அல்லது கலைஞரை, எனக்கு பிறகு நீங்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று அண்ணா கேட்டுக் கொண்டாரா?
கலைஞருக்கு முன்னால் எத்தனை மூத்த தலைவர்கள் இருந்தனர்? ஏன் அவர்களுக்கு கலைஞர் வழிவிடவில்லை? நீங்கள் கொஞ்சம் விளக்குங்கள் லக்கி!
வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

லக்கிலுக் சொன்னது…

//தாலி எடுத்துக் கொடுத்தால் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட வேண்டுமோ?//

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்களிடம் போய் கேளுங்கள். எழுதிக் கொடுத்தவர்கள் யாரென்று தெரியாவிட்டால் வைகோவின் உதவியை நாடவும். அவரும் எழுதிக் கொடுத்திருக்காராம்.

அப்பாவி முரு சொன்னது…

ஆமாண்ணே.,

இந்த படத்துலக்கூட துரைமுருகன் சிரிச்சுக்கிட்டு இருக்காரு., ஆற்காட்டார் உர்ருன்னு இருக்காரு.

அப்பாவி முரு சொன்னது…

தலைமைகிட்ட ஓப்பனா இல்லாத அந்த இரும்பு பெட்டி,

நல்ல பெட்டியா?

இல்லை கெட்ட துருபிடிச்ச பெட்டியா?

லக்கிலுக் சொன்னது…

//அண்ணா இறந்த பிறகு முறைப்படி அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காமல் செய்தது யார்?//

தான் இறந்தபிறகு இல்லை. உயிரோடு இருக்கும்போதே ‘தம்பி வா. தலைமையேற்க வா’ என்று நாவலரை அறிஞர் அண்ணா அழைத்தது உண்மை தான். ஆனால் அது முதலமைச்சர் பதவிக்கு அல்ல. கட்சிக்குப் பதவிக்கு.

வரலாற்றை நீங்கள் தப்பும், தவறுமாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக கூடித்தான் கலைஞரை தேர்ந்தெடுத்தார்கள். அதன்பிறகே பேராசிரியரும் கலைஞரை ஏற்றுக் கொண்டார் என்பது வரலாறு.

நாவலர் கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தால் கழகம் பொன்விழா கண்டிருக்குமென்று நம்புகிறீர்களா? நால்வர் அணி கதி ஆகிவிட்டிருக்காது.

தலைமைப்பண்பு என்பது வல்லவர்களுக்கே உரியது. கலைஞர் வல்லவர். நல்லவரா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது :-)

ராஜ நடராஜன் சொன்னது…

கலைஞர்,நெடுஞ்செழியன் தலைவர் போட்டி மங்கலா தெரியுது.

அப்பாவி முரு சொன்னது…

//தலைமைப்பண்பு என்பது வல்லவர்களுக்கே உரியது. கலைஞர் வல்லவர். நல்லவரா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது :-)//

யாருமே சொல்ல முடியாது :-)

ஆனால் நாட்டை ஆள நல்லவன் வேண்டுமா., இல்லை வல்லவன் வேண்டுமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அண்ணா இறந்த பிறகு முறைப்படி அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காமல் செய்தது யார்?//

தான் இறந்தபிறகு இல்லை. உயிரோடு இருக்கும்போதே ‘தம்பி வா. தலைமையேற்க வா’ என்று நாவலரை அறிஞர் அண்ணா அழைத்தது உண்மை தான். ஆனால் அது முதலமைச்சர் பதவிக்கு அல்ல. கட்சிக்குப் பதவிக்கு.

வரலாற்றை நீங்கள் தப்பும், தவறுமாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.//

ஆகா! எனக்கு நல்லா புரியுது லக்கிலுக்!
என்னுடைய கருத்தை திரும்ப தந்திருக்கிறேன்
இன்னொருமுறை படியுங்கள்!


அண்ணா உயிருடன் இருந்த போதே நாவலர் நெடுஞ்செழியனை தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அழைத்ததை அனைவரும அறிவர்.
அண்ணா இறந்த பிறகு முறைப்படி அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காமல் செய்தது யார்?
அல்லது கலைஞரை, எனக்கு பிறகு நீங்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று அண்ணா கேட்டுக் கொண்டாரா?
கலைஞருக்கு முன்னால் எத்தனை மூத்த தலைவர்கள் இருந்தனர்? ஏன் அவர்களுக்கு கலைஞர் வழிவிடவில்லை? நீங்கள் கொஞ்சம் விளக்குங்கள் லக்கி!
வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

மணிகண்டன் சொன்னது…

***
திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக கூடித்தான் கலைஞரை தேர்ந்தெடுத்தார்கள்.
***

ஆமாம். ரெண்டு நாள் முன்னாடி கூட ராமதாஸ் இது மாதிரி தான்
ஜனநாயகரீதியா கூட்டணிய தேர்ந்தெடுத்தார். அதையும் அநியாயமா விமர்சனம் பண்ணினாங்க நம்ப மக்கள் ! என்ன கொடுமை சரவணா இது !

மணிகண்டன் சொன்னது…

ஜோதிபாரதி,

கட்சி தலைமைங்கறது என்ன seniority படி தரணுமா ?

மணிகண்டன் சொன்னது…

***
தலைமைப்பண்பு என்பது வல்லவர்களுக்கே உரியது.
***

நூத்துல ஒரு வார்த்தை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//மணிகண்டன் said...

ஜோதிபாரதி,

கட்சி தலைமைங்கறது என்ன seniority படி தரணுமா ?//


வைகோவைப் பற்றிய கவிதை
அதனால் வந்த விவாதம்.
அதையும் குறிப்பிட வேண்டி இருந்தது.
மற்றபடி அவசியம் இல்லை.
பல்வேறு வகைகளில் வரமுடியும்
அதில் குறிப்பிடத் தக்கது
பணநாயகம்
ஜனநாயகம்
அறிவிக்கப் பட்டவாரிசு
முடிசூட்டுதல்
பேரம்
பேரன்

:P

மணிகண்டன் சொன்னது…

***
மற்றபடி அவசியம் இல்லை.
பல்வேறு வகைகளில் வரமுடியும்
அதில் குறிப்பிடத் தக்கது
பணநாயகம்
ஜனநாயகம்
அறிவிக்கப் பட்டவாரிசு
முடிசூட்டுதல்
பேரம்
பேரன்
****

:)-

கோவி.கண்ணன் சொன்னது…

///நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல-ராஜாஜி போல-தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?''//

அண்ணாவைப் பற்றி அக்கால கலைஞர் இதுபோல நினைத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா கோவி?//

எம்ஜிஆரிடம் தான் கேட்கனும், ஏனெனில் சக உடன்பிறப்புகளுடன் தனிப்பட்ட முறையில் பேசிய ஒரு தகவலை அரசியல் ஆக்குவது சீப் பாலிடிக்ஸ், வைகோ அதை பேட்டியாகாவோ, போட்டியாகவோ, அறிக்கையாகவோ கொடுக்கவில்லை. மூவரிடம் இருக்கும் நன்பகத்தன்மையில் அப்படி தனிப்பட்ட முறையில் பேசுவது இயல்புதான். பெரியாரைப் பற்றி அண்ணாவும், கலைஞரும் எதுவும் பேசாமல் திமுக கழகம் கண்டார்களா ?

லக்கிலுக் சொன்னது…

//வைகோவைப் பற்றிய கவிதை
அதனால் வந்த விவாதம்.
அதையும் குறிப்பிட வேண்டி இருந்தது.
மற்றபடி அவசியம் இல்லை.
பல்வேறு வகைகளில் வரமுடியும்
அதில் குறிப்பிடத் தக்கது
பணநாயகம்
ஜனநாயகம்
அறிவிக்கப் பட்டவாரிசு
முடிசூட்டுதல்
பேரம்
பேரன் //

தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசை கலைஞர் அறிவித்துவிட்டாரா என்ன? திமுக காரனாகிய எனக்கே தெரியாத தகவல் இது.

அப்படி ஸ்டாலின் திணிக்கப்பட்டாலும் கூட அவரால் கட்சியை திறம்பட நடத்த முடியாவிட்டால் அவரையும் தூக்கியெறியும் வல்லமை கொண்ட ஆட்கள் தான் செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் இருக்கிறார்கள்.

லக்கிலுக் சொன்னது…

//ஆனால் நாட்டை ஆள நல்லவன் வேண்டுமா., இல்லை வல்லவன் வேண்டுமா?//

மொரார்ஜி தேசாய் நல்லவர்.

இந்திராகாந்தி வல்லவர்.

- இதற்கு மேல் என்னத்தை பதில் சொல்லுவது? :-)

லக்கிலுக் சொன்னது…

//ஆமாம். ரெண்டு நாள் முன்னாடி கூட ராமதாஸ் இது மாதிரி தான்
ஜனநாயகரீதியா கூட்டணிய தேர்ந்தெடுத்தார். அதையும் அநியாயமா விமர்சனம் பண்ணினாங்க நம்ப மக்கள் ! என்ன கொடுமை சரவணா இது !//

மற்றவர்கள் விமர்சனத்தைப் பற்றி கவலை இல்லை.

அதுபோல பொதுக்குழுக்கு கூட்டணி பற்றி ராமதாஸ் வாக்கெடுப்பு நடத்தியது நல்ல முன்னுதாரணம் என்றே நான் நினைக்கிறேன்.

லக்கிலுக் சொன்னது…

//எம்ஜிஆரிடம் தான் கேட்கனும், ஏனெனில் சக உடன்பிறப்புகளுடன் தனிப்பட்ட முறையில் பேசிய ஒரு தகவலை அரசியல் ஆக்குவது சீப் பாலிடிக்ஸ், வைகோ அதை பேட்டியாகாவோ, போட்டியாகவோ, அறிக்கையாகவோ கொடுக்கவில்லை. மூவரிடம் இருக்கும் நன்பகத்தன்மையில் அப்படி தனிப்பட்ட முறையில் பேசுவது இயல்புதான். பெரியாரைப் பற்றி அண்ணாவும், கலைஞரும் எதுவும் பேசாமல் திமுக கழகம் கண்டார்களா ?//

வனவாசம் புத்தகத்தில் கூட நீங்கள் சிந்திப்பதைப் போன்ற விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

பெரியாரைப் பற்றி அண்ணாவும், கலைஞரும் அவ்வாறாக நினைத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதே கஷ்டமாக இருக்கிறது. :-(

திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்காக விட்டு வைத்திருந்தவர் பேரறிஞர் அண்ணா.

அப்பாவி முரு சொன்னது…

//அப்படி ஸ்டாலின் திணிக்கப்பட்டாலும் கூட அவரால் கட்சியை திறம்பட நடத்த முடியாவிட்டால் அவரையும் தூக்கியெறியும் வல்லமை கொண்ட ஆட்கள் தான் செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் இருக்கிறார்கள்.//

எனக்கு தெரியும்., எனக்கு தெரியும்., அது யாருன்னு எனக்கு தெரியும் அந்தள்வுக்கு துணிவுள்ளவர் நம்ம் அஞ்சா நெஞ்சன் மட்டும் தான்.

மணிகண்டன் சொன்னது…

***
அப்படி ஸ்டாலின் திணிக்கப்பட்டாலும் கூட அவரால் கட்சியை திறம்பட நடத்த முடியாவிட்டால் அவரையும் தூக்கியெறியும் வல்லமை கொண்ட ஆட்கள் தான் செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் இருக்கிறார்கள்
***

நிச்சயமா.

அழகிரி, கயல்விழி, கனிமொழி, தயாநிதி மாறன்.

கனிமொழி பையன் பேரு ஆதித்யாவா ?

ஆனா யாரும் ஸ்டாலின திணிக்க வேண்டாம். அவர அடுத்த தலைவர்ன்னு தமிழ்நாட்டு மக்கள் ஒத்துக்கிட்டு ரொம்ப வருடம் ஆச்சு.

அப்பாவி முரு சொன்னது…

// லக்கிலுக் said...
//ஆனால் நாட்டை ஆள நல்லவன் வேண்டுமா., இல்லை வல்லவன் வேண்டுமா?//

மொரார்ஜி தேசாய் நல்லவர்.

இந்திராகாந்தி வல்லவர்.

- இதற்கு மேல் என்னத்தை பதில் சொல்லுவது? :-)//


ஆமாமா இதுக்குமேல என்னத்தை சொல்லுறது!!!!!!!111

மணிகண்டன் சொன்னது…

***
அதுபோல பொதுக்குழுக்கு கூட்டணி பற்றி ராமதாஸ் வாக்கெடுப்பு நடத்தியது நல்ல முன்னுதாரணம் என்றே நான் நினைக்கிறேன்.
***

நானும் அதே தான் நினைக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அப்படி ஸ்டாலின் திணிக்கப்பட்டாலும் கூட அவரால் கட்சியை திறம்பட நடத்த முடியாவிட்டால் அவரையும் தூக்கியெறியும் வல்லமை கொண்ட ஆட்கள் தான் செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் இருக்கிறார்கள்.//

தாங்கள் இன்னும் ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பது புலப்படுகிறது.

ஆரோக்கியமானதுதான்!

பொதுக்குழு, செயற்குழுக்களில் கதைத்தபின் இறுதியில் முடிவெடுக்க தலைவருக்கு முழு அதிகாரம் கொடுப்பது வழமையாக மாறி வருவது கண்கூடு. அதுவும் ஒரு வகையான ஜனநாயகம் போலும்!

அப்பாவி முரு சொன்னது…

//வனவாசம் புத்தகத்தில் கூட நீங்கள் சிந்திப்பதைப் போன்ற விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

பெரியாரைபற்றி அண்ணாவும், கலைஞரும் அவ்வாறாக நினைத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதே கஷ்டமாக இருக்கிறது. :-(//

தம்பியைப் போல அவரும் பெரிய இரும்பு பெட்டியா இருக்குமோ?????

உள்ள என்னன்ன இருக்கும்...

கோவி.கண்ணன் சொன்னது…

//வனவாசம் புத்தகத்தில் கூட நீங்கள் சிந்திப்பதைப் போன்ற விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

பெரியாரைப் பற்றி அண்ணாவும், கலைஞரும் அவ்வாறாக நினைத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதே கஷ்டமாக இருக்கிறது. :-(//

நல்ல வேளை பரதனாக இருந்தார் இருந்தார் என்று சொல்லாதவரை சரி. திகவை அரசியல் இயக்கமாக்கும் ஆர்வத்துக்கு (அரசியல் ஆசைக்கு) எதிர்ப்பு தெரிவித்ததால் தானே மணியம்மை திருமணத்தை சாக்கிட்டு வெளியே வந்தார்கள். பின்பு தாம் அவ்வாறு செய்தது அவதூறு என்று அவர்களே ஒப்புக் கொண்ட ஒன்று.

//திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்காக விட்டு வைத்திருந்தவர் பேரறிஞர் அண்ணா.//

அது அண்ணா, நான் சொல்வது கலைஞரைப் பற்றி. எல்லோருமே கலைஞர் செய்வது சரி என்று ஜால்ரா தட்டினால் பிற்பாடு கலைஞர் என்பவர் திமுக தலைவர், சில முறை தமிழக முதல்வராக இருந்தார் என்றே வரலாறு பதியப்படும். திருந்துவதற்கு தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்

அப்பாவி முரு சொன்னது…

//‘தம்பி வா. தலைமையேற்க வா’ என்று நாவலரை அறிஞர் அண்ணா அழைத்தது உண்மை தான். ஆனால் அது முதலமைச்சர் பதவிக்கு அல்ல. கட்சிக்குப் பதவிக்கு.//

அடடே...

தி.மு.க., ஆரம்பித்த காலத்திலிருந்து கட்சி தலைமையும்., முதலமைச்சர் பதவியும் ஒருத்தர் தானே.

அப்போ., அண்ணா கட்சிக்கு தலைமை ஏற்க்க அழைக்கப்பட்ட நாவலர் தானே முதலமைச்சராகியிருக்க வேண்டும்.

மணிகண்டன் சொன்னது…

***
பெரியாரைப் பற்றி அண்ணாவும், கலைஞரும் அவ்வாறாக நினைத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதே கஷ்டமாக இருக்கிறது. :-(
***

ஒத்துவரலைன்னா கூழாங்கல்லு, பிடிச்சா வைரக்கல்லுன்னு சொல்ற பழக்கம் இப்ப தான் வந்ததா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசை கலைஞர் அறிவித்துவிட்டாரா என்ன? திமுக காரனாகிய எனக்கே தெரியாத தகவல் இது.//

நகைச்சுவைக்காக சொன்னதாக எடுத்துக் கொள்கிறேன்.

அப்பாவி முரு சொன்னது…

//திருந்துவதற்கு தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்//

செஞ்ச தப்புகள், சொன்ன வார்த்தைகளை திருத்த, திருந்த நூறு வருசமாகுமே., பரவாயில்லையா??

அப்பாவி முரு சொன்னது…

//தேடக் கிடைக்காத திரவியமாய்த்
திராவிடர்க்குக் கிடைத்த தி.மு.க கத்தின் வளர்ச்சி,
வலிமை, வற்றாத பாச உணர்வு-இவை பற்றியும்-அதன்
வருங்காலம் பற்றியும் வானம் வெளுக்கும் வரையில்
உரையாடினார்களாம்.//- கவிதையின் வரிகள்

பாச உணர்வைப்பற்றி பேசி முடித்த உடனேவா சண்டை போட்டுக்கிட்டாங்களாம்.

என்ன கொடுமை சார் இது?/

மணிகண்டன் சொன்னது…

***
எல்லோருமே கலைஞர் செய்வது சரி என்று ஜால்ரா தட்டினால் பிற்பாடு கலைஞர் என்பவர் திமுக தலைவர், சில முறை தமிழக முதல்வராக இருந்தார் என்றே வரலாறு பதியப்படும். திருந்துவதற்கு தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
***

எல்லாத்தையும் தவறுன்னு சொன்னா என்ன பண்ணமுடியும் ? லக்கி தான் "கருணாநிதி ஒழிக" ன்னு ஒரு பதிவு எழுதினாரே. அவருக்கு ஒருவேளை இது தவறாக தெரிந்து இருக்காது.

நீங்க நடுநிலைவாதின்னு சொல்லிக்க தான் இது மாதிரி சுட்டிக்காட்டிக் கிட்டே இருக்கீங்க. இது தான் அவரோட வாதம். அதுக்கு உங்க பதில் ?

நான் moderator. (அதுக்கு விளக்கம் வேணும்னா டைனோசர்ன்னு lucky கடிதத்த சாரு நிவேதிதா ஒரு பதிவு போட்டு இருக்காரு. படிங்க.)

தத்துபித்து சொன்னது…

லக்கிலுக் said...
//வைகோவைப் பற்றிய கவிதை
அதனால் வந்த விவாதம்.
அதையும் குறிப்பிட வேண்டி இருந்தது.
மற்றபடி அவசியம் இல்லை.
பல்வேறு வகைகளில் வரமுடியும்
அதில் குறிப்பிடத் தக்கது
பணநாயகம்
ஜனநாயகம்
அறிவிக்கப் பட்டவாரிசு
முடிசூட்டுதல்
பேரம்
பேரன் //

தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசை கலைஞர் அறிவித்துவிட்டாரா என்ன? திமுக காரனாகிய எனக்கே தெரியாத தகவல் இது.


ஆமா.. ஆமா அது கலைஞருக்கே தெரியாது.(ஸ்டாலினா.. அழகிரியா என்று).

அப்பாவி முரு சொன்னது…

//இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே;
அந்த நினைவுக்கு ஒரு நன்றி!.//
- கவிதையில் ஒரு வரி.,

ஆமா, தேர்தல் தேதி வந்துவிட்டால் இதெல்லாம் எப்பிடி சரியா நினைவுக்கு வருது.

மணிகண்டன் சொன்னது…

அப்பாவி முரு சார், மெண்ட் எல்லாம் சூப்பர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்தக் கவிதையின் மூலம் ஆற்காட்டார் மற்றும் துரைமுருகன் ஆகியோரின் மீதான நம்பகத்தன்மையை, இரகசியம் காக்கும் தன்மையை குலைத்தாயிற்று.
இனி யாரும் அவர்களை நம்பி அவகளிடம் எதுவும் பேசமாட்டார்கள்.
பேராசிரியருக்கு வயதாகி விட்டது.
அடுத்த சீனியாரிட்டி ஆற்காட்டார் பெயரையும் கெடுத்தாயிற்று.
சீனியாரிட்டியில் அடுத்து வருபவர் ஸ்டாலின் தான்!
அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் என்பது நிதர்சன உண்மை மட்டும் அல்ல...!

அப்பாவி முரு சொன்னது…

// ஜோதிபாரதி said...
அடுத்து வருபவர் ஸ்டாலின் தான்!
அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் என்பது நிதர்சன உண்மை மட்டும் அல்ல...!//

என்ன இழுவை...

அப்பாவி முரு சொன்னது…

// ஜோதிபாரதி said...
இந்தக் கவிதையின் மூலம் ஆற்காட்டார் மற்றும் துரைமுருகன் ஆகியோரின் மீதான நம்பகத்தன்மையை, இரகசியம் காக்கும் தன்மையை குலைத்தாயிற்று.
இனி யாரும் அவர்களை நம்பி அவகளிடம் எதுவும் பேசமாட்டார்கள்//

கண்ணாடி பேழைமேல் யாரோ கல்விட்டதால் தான் உடைஞ்சிடுச்சு...
இரும்பு பெட்டி அப்பிடியே தான் இருக்கு...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அப்பாவி முரு said...

// ஜோதிபாரதி said...
அடுத்து வருபவர் ஸ்டாலின் தான்!
அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் என்பது நிதர்சன உண்மை மட்டும் அல்ல...!//

என்ன இழுவை...//

இழுவைக்கு ஆயிரம் அர்த்தங்களை எழுதிக் கொள்ளலாம்!
ஆயிரம் சந்தேகங்களைக் கிளப்பிக் கொள்ளலாம்!

அப்பாவி முரு சொன்னது…

// ஜோதிபாரதி said...
//அப்பாவி முரு said...

// ஜோதிபாரதி said...
அடுத்து வருபவர் ஸ்டாலின் தான்!
அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் என்பது நிதர்சன உண்மை மட்டும் அல்ல...!//

என்ன இழுவை...//

இழுவைக்கு ஆயிரம் அர்த்தங்களை எழுதிக் கொள்ளலாம்!
ஆயிரம் சந்தேகங்களைக் கிளப்பிக் கொள்ளலாம்!//

ஆயிரம் சந்தேகமா.,

ஒரு சந்தேகத்துக்கு வை.கோவை வெளியேற்றியாயிற்று.,

மிச்சம் 999 பேருக்கு எங்கே போவது? நம்மட்ட அவ்ளோ ஆளுக இல்லையே...

ஜோ/Joe சொன்னது…

////திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்காக விட்டு வைத்திருந்தவர் பேரறிஞர் அண்ணா.//

அது அண்ணா, நான் சொல்வது கலைஞரைப் பற்றி//

பெரியாருக்கு இறுதி அரசு மரியாதை செய்வதால் ஆட்சி போனாலும் கவலை இல்லை என சொன்னவர் கலைஞர்.

ஜோ/Joe சொன்னது…

//எப்படி ஆனாலும் உங்களை யாரும் இனிமேல் புதிதாக நடுநிலைவாதி என்று கொண்டாடப் போவதில்லை :-)//

:))))

அப்பாவி முரு சொன்னது…

// ஜோ / Joe said...
//எப்படி ஆனாலும் உங்களை யாரும் இனிமேல் புதிதாக நடுநிலைவாதி என்று கொண்டாடப் போவதில்லை :-)//

:))))//

அதான் கவலையாக் இருக்கு.,

இவ்வ்ளோ அனியாத்தை கண்டும் எப்பிடி நடுநிலையா இருக்கிறார்????

ராவணன் சொன்னது…

//"மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?"//

எந்தக் கலைஞரும் மல்லாந்து எச்சில் துப்புவது சரியல்ல.

அது சரி இது எந்தக் கலைஞரு?

இது யாரு புதுசா?

ஜோ/Joe சொன்னது…

////"மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?"//

எந்தக் கலைஞரும் மல்லாந்து எச்சில் துப்புவது சரியல்ல.//

:)))))))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் 8:48 PM, March 31, 2009நீங்க நடுநிலைவாதின்னு சொல்லிக்க தான் இது மாதிரி சுட்டிக்காட்டிக் கிட்டே இருக்கீங்க. இது தான் அவரோட வாதம். அதுக்கு உங்க பதில் ?//

ஹிஹி, நடுநிலைவாதி பட்டம் கொடுப்பவர்கள் யார்னு சொல்லுங்க, அவங்க நடுநிலையானவர்களான்னு தெரிந்து கொள்கிறேன். :)

மணிகண்டன் சொன்னது…

***
ஹிஹி, நடுநிலைவாதி பட்டம் கொடுப்பவர்கள் யார்னு சொல்லுங்க, அவங்க நடுநிலையானவர்களான்னு தெரிந்து கொள்கிறேன். :)
***

moderator கிட்ட கேள்வி எல்லாம் கேக்க கூடாது !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
////திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்காக விட்டு வைத்திருந்தவர் பேரறிஞர் அண்ணா.//

அது அண்ணா, நான் சொல்வது கலைஞரைப் பற்றி//

பெரியாருக்கு இறுதி அரசு மரியாதை செய்வதால் ஆட்சி போனாலும் கவலை இல்லை என சொன்னவர் கலைஞர்.
//

ஜோ, கலைஞரின் அனைத்து செயல்களையும் உள்னோக்கம் கொண்டது என்று சொல்லவில்லை. அரசியல் நோக்கத்தின் காரணமாக அல்லது என்றோ ஒரு நாள் தலைவன் என்கிற விசுவாசம் காரணமாக இவரிடம் சொன்னதை பொதுவில் சொல்வது நாகரீகம் கிடையாது. இதனால் மூவருக்கும், இவருக்கும் அசிங்கம் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
//"மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?"//

எந்தக் கலைஞரும் மல்லாந்து எச்சில் துப்புவது சரியல்ல.

அது சரி இது எந்தக் கலைஞரு?

இது யாரு புதுசா?
//

:) தமிழின தலைவர் என்று முன்பு போல் சொன்னால் டின்னு கட்டிவிடுவார்கள், அதனால் கலைஞர் என்று குறிப்பிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

அடித்து ஆடிய ஜோதி.பாரதி, அப்பாவி முரு நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தத்துபித்து said...
லக்கிலுக் said...
//வைகோவைப் பற்றிய கவிதை
அதனால் வந்த விவாதம்.
அதையும் குறிப்பிட வேண்டி இருந்தது.
மற்றபடி அவசியம் இல்லை.
பல்வேறு வகைகளில் வரமுடியும்
அதில் குறிப்பிடத் தக்கது
பணநாயகம்
ஜனநாயகம்
அறிவிக்கப் பட்டவாரிசு
முடிசூட்டுதல்
பேரம்
பேரன் //

தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசை கலைஞர் அறிவித்துவிட்டாரா என்ன? திமுக காரனாகிய எனக்கே தெரியாத தகவல் இது.


ஆமா.. ஆமா அது கலைஞருக்கே தெரியாது.(ஸ்டாலினா.. அழகிரியா என்று).
//

என்னது நீங்கள் திமுக காரரா ? அப்படி என்றால் கலைஞர் பற்றி எதுவும் சொல்லக் கூடாது :) திராவிட உணர்வாளர்களும் அவ்வாறு சொல்லக் கூடாது, அது தான் திராவிட விசுவாசம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...
***
ஹிஹி, நடுநிலைவாதி பட்டம் கொடுப்பவர்கள் யார்னு சொல்லுங்க, அவங்க நடுநிலையானவர்களான்னு தெரிந்து கொள்கிறேன். :)
***

moderator கிட்ட கேள்வி எல்லாம் கேக்க கூடாது !
//

நடுநிலைவாதியிடம் கேள்வி, கலைஞர் வைகோ பற்றி எழுதிய கவிதை அவருடைய பெரும்தன்மையை வெளிச்சமிடுகிறதா ? சொல்லுங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கலைஞர் மல்லாந்து படுத்துட்டு சைடுல துப்பி இருப்பாரோ! :-))))
//

சைடுல துப்பினாலும் பிரண்டு படுத்தால் மேலே ஒட்டத்தான் செய்யும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
இது நடந்து எத்துனை வருடம் இருக்கும்

(எச்சில் துப்பிக்கொள்வதை)
//

எது எத்தனை வருடமோ, காய்ந்த எருவில் மழைபெய்தால் நாற்றம் மீண்டும் கிளம்பிடும் ! :)

அப்பாவி முரு சொன்னது…

//இன்றைய சிந்தனைக்கு...
நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்//

ஐய்யோ...

இது இங்க ரொம்ப நாளாக இருப்பதை நானும் பார்க்கவில்லை, கலைஞரும் பார்க்க வில்லை.

Selva சொன்னது…

கலைஞருக்கு எதிரி அவருடைய குடும்பம் தான்.
தனக்கு எதிரியாக வரக்கூடிய MGR,வைகோ எல்லாரையும் விலக்கீட்டார். ஆனால் நாளை உந்தாள் கைகால் இழுத்திட்டு கிடக்கேக்க பிள்ளையள் அடிபட்டே திமுக வை ரோட்டுக்கு கொண்டு வருவாங்கள். உந்தாளின் நல்லமனதுக்கு(தொண்டர்களின் பாசையில் "அரசியல் சாணக்கியம்") உதுதான் நாளை நடக்கும்.

அஹோரி சொன்னது…

KARUNANITHI PONDRA NALANTHARA ARASIYAL VATHIYAI HERO VAGA AAKKAVENDAM.

Sanjai Gandhi சொன்னது…

யுத்த பூமின்னு நினைச்சி வந்தா ரத்த பூமியா இல்ல இருக்கு.

Nagaraj சொன்னது…

ஒரு மாபெரும் இயக்கத்திற்கு, உயிருள்ளவரை ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் ஒத்துக்கொண்டு விவாதம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் புதிய தலைமை வருவதில் என்ன தவறு? எந்த ஒரு நிர்வாகமும் புதிய தலைமையில் புத்துணர்ச்சி பெறுவது இயல்புதானே?

அது பொதுக்குழு கூடி ஜன நாயக முறையில் அமைந்தால் நாம் எல்லோரும் வரவேற்போம்.. தலைமை பதவிற்காக தலைவர் இறக்க வேண்டும் என்ற சிந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது!

Unknown சொன்னது…

பாம்பின் கால் பாம்பறியும், அதனால் விளைத்த பயம் தான் !

Unknown சொன்னது…

மா மரகன்றை வளர்க்கும் போது அதை யாருமே கவனிப்பதுஇல்லை,மரமாகி கனிகொடுக்கும் போதுதான் அனைவரதுகவனமும் அதன் மீதி விழுகிறது. அதை வளர்ப்பதற்கு பட்ட கஷ்டக்களை யாருமே நினைப்பதில்லை.கனிகளை சுவைப்பதோடு அவர்களின் பங்கு முடிந்து போகிறது.வளர்பவன் அதன்மீது பற்றும் பாசமும் இல்லாமல் இருந்தால் வளர்ப்பது கடினம்.

RATHNESH சொன்னது…

நாவலரை "தம்பி வா; தலைமை ஏற்க வா" என்று அண்ணா அழைத்தது முதலமைச்சர் பொறுப்புக்கும் இல்லை; கட்சித் தலைமைப் பொறுப்புக்கும் இல்லை. கட்சியின் மாநாட்டுத் தலைமைப் பொறுப்புக்குத் தான்.

தனிமையில் பேசியதைப் பொதுவில் அம்பலப் படுத்துவது; குடும்ப / நாகரீக அந்தரங்கங்களை தமிழ் அணிகலனுடன் வளைய வர விடுவது; கவனம் ஈர்க்கவும் கைதட்டல் பெறவும் எதை வேண்டுமானாலும் பேசுவது என்கிற ஃபார்முலாக்களுடன் தான் பெரியாரை விட்டு வெளிவந்த திராவிட இயக்கம் வளரத் தொடங்கியது. அதனுடைய வளர்ச்சியில் தடுமாற்றம் ஏற்படும் போதெல்லாம் இந்த மாதிரி ஏதாவது கிளப்பி விட்டுக் கொள்வது சகஜம் தான்.

RATHNESH சொன்னது…

//முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.//

இந்த வாக்கியத்தில் இருக்கும் "இனி" என்கிற வார்த்தையே காமெடி தான் - என்னவோ இதுவரை அப்படி இல்லாத மாதிரி!

கோவி.கண்ணன் சொன்னது…

// RATHNESH said...
//முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.//

இந்த வாக்கியத்தில் இருக்கும் "இனி" என்கிற வார்த்தையே காமெடி தான் - என்னவோ இதுவரை அப்படி இல்லாத மாதிரி!
//

நான் அவர் (இதுவரை) முதிர்சியுடன் பேசுகிறார் என்று சொல்லவில்லை, பிறர் அவ்வாறு பேசுவதில்லை, அரசியல் நாகரீகம், அந்த காலத்தில் நாங்களெல்லாம் என்று முன்பு அடிக்கடி சொல்லுவார், அதைத்தான் குறிப்பிட்டேன். பிறரைக் குறித்து இனி அவ்வாறு சொன்னால் அது காமடிதான் என்றேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// RATHNESH said...
நாவலரை "தம்பி வா; தலைமை ஏற்க வா" என்று அண்ணா அழைத்தது முதலமைச்சர் பொறுப்புக்கும் இல்லை; கட்சித் தலைமைப் பொறுப்புக்கும் இல்லை. கட்சியின் மாநாட்டுத் தலைமைப் பொறுப்புக்குத் தான்.

தனிமையில் பேசியதைப் பொதுவில் அம்பலப் படுத்துவது; குடும்ப / நாகரீக அந்தரங்கங்களை தமிழ் அணிகலனுடன் வளைய வர விடுவது; கவனம் ஈர்க்கவும் கைதட்டல் பெறவும் எதை வேண்டுமானாலும் பேசுவது என்கிற ஃபார்முலாக்களுடன் தான் பெரியாரை விட்டு வெளிவந்த திராவிட இயக்கம் வளரத் தொடங்கியது. அதனுடைய வளர்ச்சியில் தடுமாற்றம் ஏற்படும் போதெல்லாம் இந்த மாதிரி ஏதாவது கிளப்பி விட்டுக் கொள்வது சகஜம் தான்.
//

:) அரசியல் ரீதியாக தவறு சொல்லத் தடுமாறும் போது இவ்வாறு தனிமனித தாக்குதல், பாஜக சோனியாவை மிசனெறிகளின் கைக்கூலி என்று சொல்லுவதும் இந்த வகையில் தான். திராவிடக் கட்சி மட்டுமில்லை அரசியல் கட்சிகள் அனைத்துமே அப்படித்தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்